About Me
As a former citizen (non-combatant) of the de-facto Tamil Eelam (
) and a victim of the Tamil Genocide, I write here to document the history of the Tamil Eelam and its people who have faced genocide at the hands of the Sinhala-dominated Sri Lankan government.
I am not against the sovereignty of the land I reside in or any other states.
எக்காலத்திற்கும் பொருந்தும் குட்டிக்கண்ணனின் பாடல் வரிகள்...
இதையே நுவல்கிறேன்!
தர்மம் ஒருநாள் தலையை நிமிர்த்தி தலைவன் கதை கேட்கும்!
அதர்மம் புரிந்த அரசின் கொடுமை அறிந்து தலைசாயும்!
உலகம் உணர்த்திய பாடம் - இதை
உணரும்வரை கேடாகும்!
ஆயிரம் காலங்கள் தொடரும் கொடுமையும் நொடியினில் முடிவாகும்!
இது வரையறையின்றியே வடித்த கருக்களின் உயிரின் கதையாகும்!
நீதி சரிந்துவிடாது...
அநீதியும் தொடர்ந்திருக்காது...
வீதி தெருவிலும் வீடுகள் வெளியிலும் ஓடி அலைந்திருந்தோம்!
நாதியற்றவர் கேடு புரியவும் வாடி வருந்தி நின்றோம்!
கொடிய நெருப்பிலும் நடந்தோம் - நாம்
கொண்ட கொள்கையில் கிடந்தோம்!
எரியும் நெஞ்சினில் நீரை ஊற்றிய தலைவன் வழிநடந்தோம்!
எதையும் தாங்கிடும் இதயம் உடையவர் தமிழர் அதை மறவோம்!
அமைதி தர வரும் நாடு…
தமிழீழம் எமது உயிர்க்கூடு...
"நாளை விடியும் போதும் சிலபேர் வெளியே தெரியார்கள்!"