Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கந்தப்பு

  1. ஜூ. விகடன் கணிப்பு : அதிமுக கூட்டணி 141 ! திமுக கூட்டணி 92 ! ஜூனியர் விகடன் தேர்தல் முடிவுகள்! அதிமுக கூட்டணி 141 இடங்களிலும் திமுக கூட்டணி 92 இடங்களிலும் முன்னணியில் இருப்பதாக ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது. இந்த இதழ கருத்து கணிப்பு என்று ஏதும் நடத்தவில்லை. ஆனால், தனது நிருபர் குழுவின் கணிப்பை வைத்து இந்த முடிவை வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டணி 141: இதன்படி அதிமுக கூட்டணியில் அதிமுக 105 இடங்களிலும், தேமுதிக 17 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 இடங்களிலும், மனித நேய மக்கள் கட்சி 3 இடங்களிலும், கொங்கு இளைஞர் பேரவை 1 இடத்திலும் என மொத்தம் 141 இடங்களில் முன்னணியில் உள்ளதாகவும், இந்தக் கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், பார்வர்ட் பிளாக் ஆகியவை போட்டியிடும் 7 இடங்களிலும் தோல்வி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 92: திமுக கூட்டணியில் திமுக 67 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களி்லும், பாமக 7 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களிலும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 1 இடத்திலும் என மொத்தம் 92 இடங்களில் முன்னணியி்ல் உள்ளதாகவும், இந்தக் கூட்டணியில் உள்ள இந்திய தேசிய முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னணிக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடும் 5 இடங்களிலும் தோற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை இரு கூட்டணிகளும் பிடிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், (141+92=233) இன்னும் ஒரு தொகுதி குறித்து அதில் விவரம் இல்லை. -தட்ஸ் தமிழ் !
  2. தேர்தல் - 2011 - இறுதி அலசல், யாருக்கு வெற்றி... இந்தத் தேர்தல் நிச்சயமாக நமக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை தந்திருக்கிறது. காலம் காலமாக காது கிழிய வைக்கும் பிரசாரங்களும், சுவர்களை சுண்ணாம்பால் நாறடிக்கும் விளம்பரங்களும் பார்த்த நமக்கு இந்த தேர்தல் நாம் ஒரு நேர்மையான தேர்தல் ஆணையத்தை கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது. இணையத்தில், களத்தில் தமிழ் உணர்வாளர்கள் காங்கிரஸ் எதிர்ப்பை மிகத்தீவிரமாக கையாண்டபோது காங்கிரசாரே அதனை எதிர்க்காத நிலையில் சில தி.மு.க உடன்பிறப்புகள் மட்டமாக நடந்துகொண்டனர். தலைவர்தான் சோனியாவின் காலில் விழுந்து கிடக்கிறார் என்றால் தொண்டர்களுமா? என வருத்தமாக இருக்கிறது. அண்ணாவால் துவங்கப்பட்ட இந்த இயக்கம் உணர்ச்சி மிக்க தொண்டர்களால் கட்டமைக்கப்பட்டது. ஆனால் கருணாநிதியின் சுயநலத்தால் எம்.ஜி.ஆர், வைகோ பிரிவு ௦௦முதல் தா.கி கொலை வரை போய் இப்போது ஒட்டுமொத்த கழகமும் ஒரு குடும்பத்தின் கரங்களில். இதனை கண் மூடித்தனமாக ஆதரிப்பவர்களின் அறிவாற்றலை எண்ணி வருத்தப்படத்தான் வேண்டியிருக்கிறது. ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு குறைவானவர் இல்லை. கடந்த ஐந்தாண்டில் மக்கள் நலனுக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாதவர். மேலும் மொத்த கழகமும் சசிகலாவின் கையில். அங்கு மேல்மட்ட தலைவர்கள் வரைக்குமே மரியாதை கிடையாது. இப்படிப்பட்டவர்தான் தி.மு.க வுக்கு மாற்றாக நம் கண்முன் இருக்கிறாரர். இவர் வந்து என்ன செய்துவிடப்போகிறார் என்பதே நடுநிலையாளர்களின் கேள்வி. ஆனால் ஆட்சியை மாற்றி கொடுத்தால்தான் ஆள்வோருக்கு கேரளா மாதிரி ஓரளவுக்காவது பயம் இருக்கும். இந்தமுறை ஜெயலலிதாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. அதனை அவர் எப்படி பயன்படுத்தப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. விஜயகாந்த் என்கிற ஒரு ஹீரோ இந்த தேர்தலில் காமெடியனாகிப்போனார். காமெடியன் வடிவேலு ஹீரோவாகிப்போனார். உண்மையில் வடிவேலுக்கு கூடிய கூட்டம் மக்களிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கினை காட்டியது. கொஞ்சம் அருவருப்பாக பேசினாலும் அரசியலுக்கு வந்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வடிவேலு சலிக்காமல் பிரச்சாரம் செய்தது அவர் இந்த அளவுக்கு வளர எடுத்துக்கொண்ட உழைப்பை பார்க்க முடிந்தது. ஒரு எளிய மனிதராக சினிமாவுக்குள் நுழைந்து தமிழ்நாட்டு அரசியல்வரை முன்னேறியிருக்கும் வடிவேலுக்கு எனது பாராட்டும்,வாழ்த்தும்.. விஜயகாந்த்துக்கு இனி அரசியல் எதிர்காலம் இருக்காது. தேர்தல் ஆணையம் கைப்பற்றிய பணம் பெரும்பான்மையானவை பொது மக்களின் பணம். ஆனால் எல்லா ஊர்களிலும் தி.மு.க கூட்டணியினர் நூறு ரூபாயில் இருந்து ஐநூறு ரூபாய் வரைக்கும் தங்கள் கட்சிக்காரர்களின் ஒட்டு மாறிவிடக்கூடாது என கொடுத்து உள்ளார்கள். திருவாரூரில்(கலைஞர் தொகுதி) ஐநூறு ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் தீவிர கெடுபிடி கருணாநிதியை கோபப்பட வைத்திருக்கிறது. அவருக்குதான் நேர்மையாய் இருப்பது பிடிக்காதே. முக்கியமாக ஊடகங்கள் அரசியல் கட்சிகளின் பிடியில் இருப்பதால் வெறுத்துப்போகும் அளவுக்கு தேர்தல் பிரசாரங்களை செய்தாலும். நாம் அனைவருக்கும் நன்றாக பொழுது போனது. அனைத்து அரசியல்வாதிகளுமே எவ்வளவு கேவலமான உத்திகளையும், வார்த்தைகளையும் பயன்படுத்துகிறார்கள் . எனப்பார்க்கும்போது மிக வேதனையாக இருந்தாலும் இனி இவர்களின் பருப்பு வேகாது என்பது மக்களின் பேச்சில் இருந்து தெரிகிறது. மாற்றி மாற்றி இரண்டு கழகங்களும் இலவசங்களை வாரி வழங்குவதாக அறிவித்து இருப்பதும், கடைசி மூன்று நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை விட்டு காங்கிரஸ் தன் இருப்பை காட்டிக்கொண்டதும். சோனியா ஈழ மக்களை காப்பாற்றுவேன் எனப்பேசியதும். தி.மு.க காங்கிரசுக்கு 63 கொடுத்துவிட்டு, கோ.மு.ச வுக்கு ஏழு கொடுத்துவிட்டு தன் ஐந்தாண்டு சாதனைகளை பெருமையாக சொல்லி ஒட்டுகேட்பதும் மிகப்பெரிய நகைச்சுவை. இந்த தேர்தலில் நடந்த காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரத்திற்கு சீமானுக்காக கூடிய கூட்டம். தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக அவர் மாறுவார் என்பதை காட்டுகிறது. வைகோ, விஜயகாந்த் தவற விட்ட மாற்று சக்தியாக அவர் இருப்பார். இருக்க வேண்டும். இந்த ஐந்தாண்டில் சீமான் தன் கட்சியை பலப்படுத்தினால் அடுத்த தேர்தலில் அவர் நிச்சயம் வெல்வார். வெல்லட்டும்... இறுதியாக எனது கணிப்பு: அ.தி.மு.க கூட்டணி:136 தி.மு.க கூட்டணி: 87 அ.தி.மு.க - 105 தி.மு.க - 60 தே.மு.தி.க - 17 காங்கிரஸ் - 12 இந்திய கம்யூனிஸ்ட்- 7 பா.ம.க - 12 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 5 வி.சி.க - 2 ம.ம.க - 2 கொ.மு.ச - 1 இழுபறி : 11 இந்த இழுபறி காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தனி மனித செல்வாக்குள்ள காங்கிரஸ் வேட்பாளர்களால் அவர்களுக்கு இருக்கும் வெற்றி வாய்ப்பை பொறுத்தது. எதுவாக இருந்தாலும் மே 13 ஆம் தேதி காலை பதினோரு மணிக்கு தெரிந்துவிடும். தொடர்ந்து தேர்தல் பற்றிய பதிவுகளை போட்டதால் ஆயாசமாக இருக்கிறது. இனி வழக்கமான பதிவுகளை எழுதுவேன். http://krpsenthil.blogspot.com/2011/04/2011.html
  3. 63 தொகுதிகளில் சீறும் சீமான்! – ஜூனியர் விகடன் காங்கிரஸுக்கு இது போதாத காலம். ஏறக்குறைய, அந்தக் கட்சி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, அதிருப்தி வேட்பாளர்கள் கோதாவில் குதித்துள்ளனர். இன்னொரு பக்கம், சீமானின் ‘நாம் தமிழர்’ கட்சி, ‘காங்கிரஸை வேரறுப்போம்!’ என்ற கோஷத்துடன் களம் இறங்கி இருப்பதால், வெலவெலத்து நிற்கிறார்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள். ஈழ மக்களின் நலனுக்கு எதிராக மத்தியில் ஆளும் காங்கிரஸ் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டும் தமிழ் அமைப்புகள், காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதி​களிலும் எதிர்ப் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன. அதையடுத்து, ‘நாம் தமிழர்’ கட்சி, பல்வேறு தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்துக் கச்சை கட்டி நிற்கிறது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிய சீமானின் பேச்சில் ரௌத்ரம் தாண்டவமாடியது! ”இந்தத் தேர்தல், தமிழ்த் தேசிய இனத்தின் துரோகியான காங்கிரஸுக்கும் ‘நாம் தமிழர்’ இயக்கத்துக்கும் இடையே நடக்கும் அரசியல் யுத்தம். ‘இதில் நாங்கள் வெற்றி பெற வேண்டும்’ என்று உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் அனைத்துத் தொப்புள்கொடி உறவுகளும் வாழ்த்துகின்றன. அதனால்தான், ‘வெள்ளையனே வெளியேறு’ என்று வீர முழக்கமிட்டு, இந்தியச் சுதந்திரத்துக்கு முதல் குரல் கொடுத்த நெல்லை மண்ணில் இருந்து… பூலித்தேவன் மண்ணில் இருந்து காங்கிரஸை வேரறுக்கும் இந்த அரசியல் யுத்தத்தைத் தொடங்கி இருக்கிறோம். திசையன்விளையில் தொடங்கப்பட்டு இருக்கும் இந்தத் ‘தொடக்கம்’… காங்கிரஸுக்கு ‘அடக்கம்’! சொந்தக் கட்சிக்காரர்களே காங்கிரஸை வீழ்த்தத் துடிக்கிறார்கள். ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்​கோவன், ப.சிதம்பரம், அவர் செல்ல மகன் கார்த்தி என்று பல கோஷ்டிகளாகப் பிரிந்து, ஒருவருக்கு ஒருவர் குழி பறிக்கிறார்கள். அதனால், இந்த முறை எங்களுக்கு அதிக வேலை இல்லை. நாங்கள் சுற்றுலா செல்வதுபோல சும்மா அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று வந்தாலே போதும்… மீதியை அவர்களாகவே முடித்துக்கொள்வார்கள். காங்கிர​ஸின் தோல்விதான் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் வெற்றி! இப்போது இருக்கும் காங்கிரஸுக்கும், காமராஜருக்கும் ஒரு சொட்டுகூட தொடர்பு இல்லை. காமராஜர் இறந்ததுமே காங்கிரஸும் செத்துவிட்டது. மக்களுக்காக காங்கிரஸ் கட்சி என்றைக்காவது வீதிக்கு வந்து போராடி இருக்கிறதா? இப்போது இருக்கும் காங்கிரஸ், பிழைப்புவாதிகளின் கூடாரம்! தமிழக மீனவர்கள் 539 பேர் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டார்களே… அதனைக் கண்டித்து அந்தக் கட்சி ஓர் அறிக்கைவிட்டதா? பி.ஜே.பி-யின் சுஷ்மா சுவராஜ்கூட ஓடி வந்து பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் சொன்னாரே! காங்கிரஸ் சார்பில் சோனியா, ராகுல்கூட வர வேண்டாம்… ஆனால், இங்கே இருக்கும் எந்த காங்கிரஸ் தலைவராவது அந்த மீனவக் குடும்பத்தினரை சந்தித்து எட்டணா தந்திருக்கிறீர்களா?! காவிரியில் எங்களுக்கு உள்ள உரிமைக்காக வாதாடி இருக்கிறீர்களா? கேரள அரசாங்கம் முல்லை பெரியாறில் எங்களுக்கு உரிய பங்கைத் தராமல் இருப்பதைக் கேள்வி கேட்டு இருக்கிறீர்களா? எங்களது உரிமையைக் கேட்டு வாங்கித் தர முன்வராத உங்களுக்கு, எங்களுடைய ஓட்டு மட்டும் வேண்டுமா? என் வாழ்க்கை முக்கியம் இல்லை… ஆனால், என் வாக்கு மட்டும் உங்களுக்குத் தேவை என்பது என்ன நியாயம்? அட்டைப் பூச்சியாக எங்களுடைய ரத்தத்தையும் வேர்வையையும் உறிஞ்சி வாழும் காங்கிரஸை விரட்டி அடிப்பதுதான் நமது முதல் வேலை. தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்துத் தமிழர்களை மானம் இல்லாத கேவலமான சமூகமாக்கிவிட்டார்கள்! நாட்டில் எங்கும் ஊழல்… விலைவாசி விண்ணை முட்டுகிறது. மின்சாரமே இல்லை… ஆனால் கிரைண்டர், மிக்ஸி, டி.வி., லேப்டாப் தருகிறார்களாம்! ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டது. ஈழ மண்ணில் நடந்த யுத்தத்துக்குப் பழிக்குப் பழி தீர்க்கும் அரிய வாய்ப்பு, உன்னத சந்தர்ப்பம் இது! நாம் பட்ட வலிக்குப் பழிதீர்க்கும் வகையில், ‘கை’ சின்னத்தைப் பார்த்தால் காறித் துப்பித் தோற்கடியுங்கள். தமிழர் ரத்தத்தில் மூழ்கியுள்ள அந்தக் கட்சியைக் கொன்று ஒழிக்காமல், தமிழர் விடுதலையை வென்று எடுக்க முடியாது!” - ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்
  4. 2016, 2021, 2026ல் நடக்கும் தேர்தலிலும் ஆள் தமிழர் பிரச்சனைக்கு முன்னுரிமை என்று தான் சொல்லுவார். சூடு சுறணையற்ற தமிழர்கள் இவருக்கு வாக்களிப்பார்கள்.
  5. தமிழகம் கருத்துக் கணிப்புகளில் முடிவு: அதிமுக கூட்டணி அமோக வெற்றி புதுதில்லி,மார்ச் 31: தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக - தேமுதிக - கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி பெருவாரியான மக்களின் ஆதரவுடன் அமோக வெற்றி பெறும் என்று இந்தியா டுடே - ஹெட்லைன்ஸ் டுடே - மெயில் டுடே - ஓஆர்ஜி ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பும் அவுட் லுக் வார இதழும் எம்டிஆர்ஏ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பும் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஆட்சியைப் பிடிக்கும், அசாமில் எந்தக் கட்சிக்கும் அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலைமை ஏற்படும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகளை அடிப்படையாக வைத்தும், இப்போதைய பிரச்னைகள் தொடர்பாக சில கேள்விகளுக்கு வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட பதில்களின் அடிப்படையிலும் இந்தக் கணிப்பு நடைபெற்றுள்ளது.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல், விலைவாசி உயர்வு, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, அமைச்சர்கள் - அதிகாரிகள் நிலையில் காணப்படும் ஊழல் போன்ற காரணங்களால் திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்ப்பதாக கருத்துக்கணிப்பில் பங்கு கொண்டவர்களில் பெருவாரியானவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் 51% பேர் ஊழலை முக்கிய பிரச்னையாகக் கருதுகின்றனர். 34% பேர் அது பெரிய பிரச்னை இல்லை என்கின்றனர்.முதல்வர் பதவிக்கு ஏற்றவர் ஜெயலலிதாவே என்று 37% பேரும் கருணாநிதியே என்று 34% பேரும் கருதுகின்றனர்.கருணாநிதியின் அரசுதான் ஊழல் மிகுந்தது என்று 39% பேரும் ஜெயலலிதாவின் அரசுதான் ஊழல் அரசு என்று 21% பேரும் கூறினர்.அலைக்கற்றை ஊழல் குறித்து தெரியும் என்று 51% பேரும், தெரியாது என்று 17% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். அலைக்கற்றை ஊழலில் கருணாநிதி குடும்பத்தாருக்குத் தொடர்பு உள்ளது என்று 38% பேரும் இல்லையென்று 26% பேரும் நினைக்கின்றனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அந்த விவகாரத்தை சரியாகக் கையாள கருணாநிதி அரசு தவறிவிட்டது என்று 41% பேரும் சரியாகத்தான் கையாண்டது என்று 25% பேரும் கருதுகின்றனர். விலைவாசி உயர்வு தங்களை பாதிக்கும் பிரச்னை என்று 59% பேரும், இது முக்கிய பிரச்னையே இல்லை என்று 29% பேரும் கருத்து தெரிவித்தனர். 2009 மக்களவை பொதுத் தேர்தலில் நடந்த வாக்குப்பதிவு அடிப்படையில் ஹெட்லைன்ஸ் டுடே ஓஆர்ஜியின் கருத்துக் கணிப்பு முடிவு வருமாறு:2009 மக்களவை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 37% வாக்குகள்தான் கிடைத்தன, திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 43% வாக்குகள் கிடைத்தன.இப்போது நடைபெறவுள்ள சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 50% வாக்குகளும் 164 தொகுதிகளும் கிடைக்கும்.திமுக கூட்டணிக்கு 45% வாக்குகளும் 68 தொகுதிகளும் கிடைக்கும்.மற்றவர்களுக்கு 5% வாக்குகளும் 2 தொகுதிகளும்தான் கிடைக்கும். மேற்கு வங்கம்: மேற்குவங்க மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணிக்கு 44% வாக்குகளும் 182 சட்டப் பேரவைத் தொகுதிகளும் கிடைக்கும். மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணிக்கு 43% வாக்குகளும் 101 தொகுதிகளும் கிடைக்கும். மற்றவர்களுக்கு 12% வாக்குகளும் 11 தொகுதிகளும் கிடைக்கும்.கேரளம்: கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 48% வாக்குகளும் 96 தொகுதிகளும் கிடைக்கும்.மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு 40% வாக்குகளும் 41 தொகுதிகளும்தான் கிடைக்கும். மற்றவர்களுக்கு 12% வாக்குகளும் 3 தொகுதிகளும்தான் கிடைக்கும். அசாம்: அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 32% வாக்குகளும் 46 தொகுதிகளும்தான் கிடைக்கும். அசாம் கண பரிஷத் கட்சிக்கு 25% வாக்குகளும் 38 தொகுதிகளும்தான் கிடைக்கும்.பாஜகவுக்கு 12% வாக்குகளும் 15 தொகுதிகளும்தான் கிடைக்கும். அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 14% வாக்குகளும் 15 தொகுதிகளும்தான் கிடைக்கும். மற்றவர்களுக்கு 16% வாக்குகளும் 12 தொகுதிகளும் கிடைக்கும். எனவே அசாமில் இழுபறி நிலைமை ஏற்படும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. அவுட்லுக் - எம்டிஆர்ஏ கணிப்பு: 2011 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் - பாமக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 37.4% பேரும் அதிமுக -தேமுதிக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 54% பேரும் மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வரும் என்று 8.6% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். -தினமணி .
  6. யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
  7. நிழலி, யாழ்கவி,வாதவூரன் ,கறுப்பி, இணையவனுக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள். 102வது அகவையில் காலடி வைத்திருக்கும் இன்னிசை பாட்டிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். கால் சதம் அடித்த கிசானுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
  8. நன்றிகள் வல்வை மைந்தன். பிரியசகி பாட்டிக்கும் இலக்கியன் தாத்தாவுக்கும் சபேசுப்பூட்டனுக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.
  9. வாழ்த்துகள் சொன்ன சஜிவன், அனிதா, நுணாவிலான் , ATOZ ஆகியோருக்கும் நன்றிகள்.
  10. நன்றிகள் பொன்னி, சுப்பண்ணா, மல்லிகை வாசம்
  11. வாழ்த்துச் சொன்ன கறுப்பி, நெடுக்காலபோவான், தமிழ்சிறி ஆகியோருக்கு நன்றிகள்.
  12. நன்றி புத்தன். அதுசரி 16 என்றால் என்ன?
  13. வாழ்த்துச்சொன்ன யமுனா, யாழ்கவி, குமாரசாமி, தூயா ஆகியோருக்கு நன்றிகள். கு.சாவின் கவிதை நல்லாய் இருக்கிறது.
  14. சுவிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
  15. குமாரசாமிக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துகள். ஒமோம்.
  16. ஆதியனுக்கும், புத்தனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.
  17. 73 ம் அகவையில் காலடி வைத்திருக்கும் பொன்னிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.
  18. சிவராமனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்
  19. வல்வை மைந்தன், சுண்டல் ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.
  20. 1990ம் ஆண்டில் பிறந்தால் 18,17 வயது. 1980ம் ஆண்டில் பிறந்தால் 28,27 வயது. 1970ம் ஆண்டில் பிறந்தால் 38,37 வயது. 1960ம் ஆண்டில் பிறந்தால் 48,47 வயது.
  21. 90ம் ஆண்டில் பிறந்தால் 18 வயது. 80ம் ஆண்டில் பிறந்தால் 28 வயது. 70ம் ஆண்டில் பிறந்தால் 38 வயது. 60ம் ஆண்டில் பிறந்தால் 48 வயது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.