Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கந்தப்பு

  1. 4 குழுவிலும் முதல் இடம் பிடித்த 4 அணிகள் சூப்பர் 8 இல் ஒரே குழுவில் விளையாடப் போகினம் .
  2. சிம்பாவேயும் நன்றாக விளையாய்டுகிறது . 101-2 ( 12 ஓவர் முடிவில்)
  3. இந்தியா மைதானங்களும் இலங்கை மைதானங்களும் வித்தியாசமானவை. இங்கிலாந்து இலங்கையில் சிறப்பாக விளையாடலாம் என நினைக்கிறேன் பிரேமதாசா மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானவை. இங்கு இலங்கை நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இங்கு மிச்சல் சாண்டருடன் இஷ் ஸோதியும் விளையாடுவார் என நினைக்கிறேன் அவுஸ்திரேலியாவை வென்றதைவைத்து இலங்கை இனிமேலும் சிறப்பாக விளையாடும் என்றும் சொல்லமுடியாது. நான் பாகிஸ்தான், இங்கிலாந்தினை அடுத்த சுற்றுக்கு செல்லும் அணிகள் என்று விடை எழுதியிருக்கிறேன் நிசாங்க , ரத்நாயக்க, கமிண்டு மெண்டிஸ் , குசால் மெண்டிஸ் போன்றவர்கள் கவனமாக விளையாடினால் இலங்கைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மற்றைய அணிகளும் பலமானவை.
  4. மூன்று முட்டைகள் எடுத்தும் ஐசிசி தரவரிசையில் முதலாம் இடத்தில் தற்போது இருப்பவர் அபிஷேக் சர்மா.
  5. அவுஸ்திரேலியா போட்டி pallekelle மைதானத்தில் நடந்தது. பந்து வீச்சாளர்களுக்கு பெரிதாக உதவவில்லை. இலங்கை சிம்பாவே போட்டி பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. பந்து வீச்சாளர்களுக்கு உதவலாம். இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகி இருக்கிறது. இதனால் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு இந்தியா( வாஷிங்டன் சுந்தர்) , தென்னாப்பிரிக்கா போன்று வாய்ப்பு சிலவேளை வழங்கலாம்.
  6. அபிஷேக் சர்மா இன்று 3 வது முட்டைகளை எடுத்தார்
  7. பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவானால் பாகிஸ்தான் விளையாடும் போட்டி கொழும்பில் நடைபெறும் , பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவாகமால் இருந்தால் போட்டி கொல்கத்தா மைதானத்தில் போட்டி நடைபெறும். இந்தியா அரை இறுதிக்கு தெரிவானால் இந்தியா விளையாடும் போட்டி மும்பாய் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்து இருக்கிறது. சூழல் பந்து விச்சுக்கு சாதகமான மும்பை மைதானத்தில் விளையாட இந்தியாவுக்கு சார்பாக ஐசிசி முடிவு எடுத்து இருக்கிறது. சென்ற மகளிர் உலக கிண்ண போட்டியும் இந்தியாவுக்கு சாதகமாக அரை இறுதி போட்டி மும்பையில் நடைபெற்றது. ஓமானுக்கு இன்னுமொரு போட்டி இருக்கிறது.
  8. தென்னாப்பிரிக்கா போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு இருக்கிறது. இன்றைய போட்டியில் 4 வீரர்கள் ஓய்வு எடுக்கிறார்கள். இதனால் Nortje இன்று விளையாடுகிறார். UAE 38- 1 ( 4.4 ஓவரில்) பாகிஸ்தான் போட்டியிலும் இடையில் மழை குறுக்கிட வாய்ப்பு இருக்கிறதாக சொல்கிறார்கள்
  9. நீங்க வேற அரை இறுதிக்கு இந்தியாவுடன் தென்னாபிரிக்கா செல்லும் என்று விடை எழுத முதலில் நினைத்து போட்டு கடைசி நிமிடத்தில் அவுஸ்திரேலியா செல்லும் என்று பிழையாக எழுதிவிட்டேன் 😪 இறுதி போட்டிக்கும் இந்தியாவுடன் அவுஸ்திரேலியா செல்லும் என்று எழுதிவிட்டேன் 😀
  10. அடுத்த சுற்றில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெரும் என்று விடை அளித்த போட்டிகளை மழை குழப்பவேண்டும் என்று கும்பிடுங்கோ 😄
  11. நீங்கள்தான் முழித்திருந்து ஜக்கம்மாவை கும்பிட்டுகொண்டு பார்க்க வேண்டும். நீங்கள் பாகிஸ்தானை இறுதி வரை தெரிவு செய்து இருக்கிறீர்கள். நமீபியாவிடம் பாகிஸ்தான் தோற்று விட்டால் சூப்பர் 8 க்கு பாகிஸ்தானுக்கு பதிலாக அமெரிக்கா தெரிவாகிவிடும். பல புள்ளிகளை இழக்க வாய்ப்பு இருக்கிறது.
  12. சூப்பர் 8 க்கு சிம்பாவே தெரிவாகி உள்ளதால் 2028 இல் அவுஸ்திரேலியா நியூசிலாந்தில் நடைபெறவுள்ள t20 உலகக் கிண்ண போட்டியில் நேரடியாக தெரிவு செய்யப்படும் 12 நாடுகளில் ஒன்றாக சிம்பாவே தெரிவு செய்யப்பட்டு இருக்கிறது.
  13. போட்டி கைவிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவும் அயர்லாந்தும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்கள். சிம்பாவே சூப்பர் 8 க்கு தெரிவாகியுள்ளது.
  14. யுவராஜ் சம்ரா 103 ஓட்டங்களுடன் ஆடிக்கொண்டு இருக்கிறார்
  15. இன்று நடைபெறும் போட்டிகளில் நான் சிம்பாவே, நேபாளம் அணியை தெரிவு செய்திருந்தேன். ஆனால் தற்போதைய நிலையில் இது சரியான பதில்களா என்று ஒரு கேள்வி ஏற்படுகிறது. சிம்பாவேயின் இரண்டு வெற்றிகளுக்கும் முக்கிய காரணங்கள் சிம்பாவேயின் வேகப்பந்து விச்சாளர்கள் மூவர் . முசாரபாணி, இவான்ஸ் தலா 7, 6 விக்கெட்டுகளை இரு போட்டிகளில் பெற்று இருக்கிறார்கள். ஓமானுக்கு எதிராக 3 விக்கெட் எடுத்த Ngarava காயம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடவில்லை. சிம்பாவே விளையாடிய 2 போட்டிகளும் SSC, பிரேமதாசா மைதானங்களில் நடைபெற்றது. இன்று போட்டி நடைபெறும் pallekele மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்குமா?
  16. சிமித் பிக்பாஸ் தொடரில் 6 போடிகளில் ஒரு 100 ஓட்டமும் 2 அரை சதமும் அடித்தார். இந்த 6 போட்டிகளிலும் ஆரம்ப துடுப்பாட்டகாராவே விளையாடினார்.ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இல்லாமல் முன்பு விளையாடிய போட்டிகளில் ஸ்மித் பெரியதாக சாதிக்கவில்லை. சிமித் சிறந்த டெஸ்ட் போட்டியாளர் என்பதில் மாற்று கருத்தில்லை. 50 ஓவர் உலக கிண்ணப் போட்டிகளில் சிமித் விளையாடி இருக்கிறார். ஆனால் t 20 போட்டிகளில் இவர் அவுஸ்திரேலியா அணியில் பெரிதாக விளையாடியதில்லை. ஐபி எல் உட்பட வெளிநாட்டு போட்டிகளில் அண்மை காலங்களில் இவரை ஏலத்திலும் எடுப்பதில்லை. ஆனால் பாகிஸ்தானின் PSL இல் இவர் இம்முறை விளையாடுகிறார். அவுஸ்திரேலியா அணியில் மிச்சல் மார்ஸ், ஹெட் ஆகிய சிறந்த ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள் இருக்கிறார்கள். மிச்சல் மார்ஷல் வேகப்பந்துவீச்சாளர் அத்துடன் சென்ற ஐபிஎல்லில் லக்னோ அணியில் அதிரடியாக விளையாடி அதிக ஓட்டங்கள் பெற்றவர். இம்முறை பிக்பாஸ் தொடரில் சிமித் 3 போட்டிகளில் திறப்பட விளையாடியதால் அவுஸ்திரேலியா ஊடகங்களும், ஒரு சில முன்னாள் வீரர்களும் சிமித் இந்த உலக கோப்பையையில் விளையாட வேண்டும் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இம்முறை பிக்பாஸில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் நியூசிலாந்தின் Finn Alan. அதற்கு அடுத்து அதிக ஓட்டம் பெற்றவர் டேவிட் warner
  17. 6 ஓவர் முடிவில் 70 -0. போகிற போக்கை பார்த்தால் 200 க்கு மேல் அடிப்பார்கள் போல.
  18. அவுஸ்திரேலியா முதலில் ஆடுகிறது. மார்ஷ் அணித் தலைவராக விளையாடுகிறார்.
  19. அவுஸ்திரேலியா அணியில் ஸ்டீபன் சிமித், காயப்பட்ட ஹேசில்வுட்டுக்கு பதிலாக இணைகிறார்.
  20. ஆப்கானிஸ்தான் 97/4 . 40 பந்துகளில் 64 அடிக்கவேண்டும். மற்றுமொரு விறுவிருப்பான போட்டி?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.