Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கறுப்பி

  1. நமது உடலின் முக்கிய பாகங்களில் ஒன்றான கிட்னி. அறிந்ததும் அறியாததும்: 20 கேள்விகளும் பதிலும் "ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துக் கண்காணிப்பு செய்து வந்தவர். சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான். சிறுநீரகத்தைப் பற்றிய 20 கேள்விகளுக்கு அவருடைய 20 பதில்கள்: யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்? சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது. பாதிப்பு உண்டாக்கும் காரணங்கள் வேறென்ன? வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும். சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா? முடியும். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும். அதை எப்படி கண்டுபிடிப்பது..? வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும். பிரச்னை இருந்தால், இதில் தெரிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச் சோதனை (Detailed Kidney Function Test) செய்துகொள்வது நல்லது. அறிகுறிகள் இருக்குமா..? இருக்கும். கைகால்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால்தான் வீக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டு அறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறிக்க முடியும். எதனால் கைகால் வீக்கம் ஏற்படுகிறது..? தண்ணீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் தவிக்கிறது என்பதற்கான அறிகுறிதான் கைகால் வீக்கம். தற்காப்பு நடவடிக்கைகள் என்ன? அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், சிறுநீரை அடக்கிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். உணவு முறைகள் என்ன? எதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாஷியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாஷியம் சேர்த்துக்கொள்ளலாம். எந்தெந்த உணவுகளில் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது..? வாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றிலெல்லாம் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லாருமே பொட்டாஷியம் சாப்பிடக்கூடாதா..? அப்படியில்லை. டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலை வரைக்கும் போனவர்கள் பொட்டாஷியத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும். வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்கிறார்களே... வாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீரகப் பெருக்கிகள். அவற்றை உட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தில் அடைத்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா? முடியும். தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசைவ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் டி உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும். சிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்... நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப் போடலாம். இல்லாவிட்டால்... நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செய்துகொள்வதென்றால், தினமும் மூன்று முறையாவது டயாலிஸிஸ் செய்வது நல்லது. அப்புறம்... இளைய வயதினராக இருந்து நிரந்த சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்துகொண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீர் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது. அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும். இளைஞர்கள் மட்டும்தான் செய்துகொள்ள முடியுமா..? இளைஞர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலை பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், வயதானவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. அதனால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம். கிட்னி மாற்று சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும். கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதால் என்ன பயன்..? என்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்தவர்களின் ஆயுள் கூடியிருக்கிறது. டிரான்ஸ்பரன்ஷன் செய்யாதவர்களைவிட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழ்ந்து இருக்கிறார்கள். நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியுமா? முடியாது. தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. காரணம், பொருத்தமான சிறுநீரகம் பலருக்குக் கிடைப்பதில்லை. அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கும். இந்தத் துறையில் நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அளிக்கலாம். இது அவருடைய நெருங்கிய உறவினரின் சம்மதத்தோடு மட்டுமே செய்யமுடியும். அதுவும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும். சிறுநீரகம் மாற்று அறுவைசிகிச்சை (கோப்பு படம்) நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொள்ள முடியுமா..? முடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தியம் இல்லை. ஆனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். நிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள். அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும். சா.இலாகுபாரதி நம் தோழி, ஜூன் 2011 http://www.seithy.com
  2. உங்களது சிறப்பு ஒளிப்படத் தொகுப்புகளை விரைவாக ஓன்லைன் மூலம் அனுப்பலாம்: [Tuesday, 2011-08-02 22:05:17] வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம். சில நேரங்களில் நாம் என்ன தான் மின்னஞ்சல் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய செய்தியை வெப் கமெரா மூலம் பேசி வீடியோ மின்னஞ்சலாக உடனடியாக அனுப்பலாம். இத்தளத்திற்கு சென்று Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கமெரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம். அடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் நம் மின்னஞ்சல் முகவரி, பெயர், வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம். அதில் Notify me when this message read என்ற செக்பொக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு மின்னஞ்சல் வரும். பெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மிச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மின்னஞ்சலாக அனுப்பலாம். http://mailvu.com/ http://www.seithy.com/breifNews.php?newsID=47627&category=CommonNews&language=tamil
  3. உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கும் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்வதற்குமான தளம். [Friday, 2011-07-29 11:54:59] உங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஓர் அழகான வீடியோ தொகுப்பாக மாற்றி கொள்ளவும் அத்துடன் நீங்கள் அழகாக்கி கொண்ட வீடியோ தொகுப்புக்கு பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை கொடுக்கவும் முடியும். இத்தகைய வசதிகளை நீங்கள் எந்தவொரு மென்பொருளும் இன்றி ஓன்லைன் மூலம் செய்ய முடியும். இந்த தளத்தில் சென்று நீங்கள் வடிவமைக்க விரும்பும் மாதிரியினை தெரிவு செய்து கொண்டு MAKE A VIDEO என்பதை கிளிக் செய்யவும். இப்போது இப்போது தோன்றும் புதிய பக்கத்தில் ADD IMAGES AND VIDEO என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை அல்லது வீடியோ கட்சிகளை UPLOAD செய்யவும். மேலும் படங்களை UPLOAD செய்ய ADD MORE என்பதை கிளிக் செய்து படங்களை சேர்க்க முடியும். இதே போன்று ADD SOUND TRACK என்பதை கிளிக் செய்வதன் மூலம் பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை சேர்கலாம். பின்னர் SAVE AND PREVIEW என்பதை கிளிக் செய்து நீங்கள் தயாரித்த வீடியோக்களை பார்க்க முடியும். இப்போது EXPORT என்பதை கிளிக் செய்து பின்னர் தோன்றும் பக்கத்தில் FREE VIDEO என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோக்களை YOUTUBE, FACEBOOK , TWITTER போன்ற தளங்களிலும் பகிர முடிவதுடன் மின்னஞ்சல் மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம். http://www.stupeflix.com/ http://www.seithy.com/breifNews.php?newsID=47384&category=CommonNews&language=tamil Source: உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கும் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்வதற்குமான தளம்.
  4. சுமங்களாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  5. முதலில் தங்களை அன்புடன் வரவேற்றுக்கொள்கிறோம். தாராளமாக எழுதலாமே. யாழ் அரிச்சுவடி பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
  6. அர்ஜுனுக்கும், நாட்டாண்மைக்கும், என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
  7. சாந்திக்கு இனிதான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
  8. சிற்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. வல்வை லிங்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. பெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி 5/23/2011 1:01:28 PM மின்னஞ்சல் சேவையானது எமது நாளாந்த தொடர்பாடலில் மறுக்கமுடியாத ஓர் அம்சம். மேலும் மின்னஞ்சல் மூலமாக நாம் கோப்புகளை(files) அனுப்புவது வழக்கம் எனினும் அவை ஊடாக 20 முதல் 25 எம்.பி அளவான கோப்புகள் மட்டுமே அனுப்ப முடியும். இதற்கு மேற்பட்ட கோப்புகளை எம்மால் அனுப்ப முடிவதில்லை. இவ்வாறு பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன. எனினும் சுமார் 2 ஜி.பி வரையான அளவுகொண்ட கோப்புகளை மிக இலகுவாக அனுப்புவதற்கான இரு இணையத்தளங்களே இவை. www.wetransfer.com www.fileflyer.com இத்தளங்களின் ஊடாக இலவசமாக எவ்வித பதிவுகளையும் மேற்கொள்ளாமல் பைல்களை அனுப்பமுடிவது இதன் சிறப்பம்சமாகும். வீரகேசரி இணையம் Source: பெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி
  11. இன்று பிறந்தநாள் காணும் பரணி மற்றும் வானவில் ஆகியோருக்கு எனது உள்ளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  12. தூயவனிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
  13. பிறந்தநாள் காணும் புரட்சிக்கு ஒரு பாடல் பரிசாக...
  14. அழகான பாடல்கள் தரும் புரட்சிகர தமிழ்த்தேசியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  15. இன்று பிறந்த நாள் காணும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  16. மகிந்த - விஜய் நம்பியார் ஒரு கற்பனை உரையாடல்! [saturday, 2011-04-23 02:58:08] நம்பியார்: ஹலோ! மகிந்த இருக்கிறாரா? நான் ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஆலோசகர் நம்பியார் கதைக்கிறன்.. ராஜபக்ச: ஹலோ! நான்தான் மகிந்த.. எப்படியிருக்கிறியள்.. நம்பியார்: நல்லாயிருக்கிறம்.. உங்களுக்கு எனது புதுவருட வாழ்த்துக்கள்! ராஜபக்ச: என்னுடைய புதுவருடக் கொண்டாட்டத்தைத்தான் கெடுத்துப் போட்டியளே? நம்பியார்: என்ன நிபுணர் குழு அறிக்கையை வாசித்திட்டியள்போல.. ராஜபக்ச: பேப்பரிலை பார்த்தனான். நம்பியார்: என்ன! உங்களுக்கு அனுப்பினதை நீங்கள் பேப்பருக்குக் கொடுத்திட்டு, அதிலை வந்ததைதான் வாசித்தீர்களோ? ராஜபக்ச: ஆமாம். வங்கியில் கொள்ளையடிப்பவர்கள். காசை எண்ணிப் பார்ப்பதில்லை. அடுத்தாள் பேப்பரிலை எவ்வளவு கொள்ளை போனதென்று செய்தி வந்ததும்தான் - அவர்களுக்கு தாம் கொள்ளையடித்தது தெரியவரும். அதுபோலத்தான்.. நம்பியார்: அதுக்காக நாங்கள் அனுப்பிய அறிக்கையை வாசிக்காமல் விடுகிறதே? ராஜபக்ச: அப்படியில்லை. 196 பக்கத்தையும் யார் மினக்கெட்டு வாசிக்கிறது. பேப்பருக்குக் கொடுத்தால் அவை வாசித்து, முக்கியமானதை மட்டும் பிரசுரிப்பினம், அதை வாசிக்கலாம் என்டுதான்.. நம்பியார்: பேப்பரை பார்த்தியளோ? ராஜபக்ச: ஓ! என்ன என்னைப் பற்றி எக்கச்சக்கமாய் கண்டித்திருக்கு! இனிமேல் வெளிநாடுகளுக்குப் போகவே எலாதுபோல.. நம்பியார்: இனிமேல்த்தான் நீங்கள் எந்த நாட்டுக்கும் பயமின்றிப் போகலாம். யாரும் உங்களைக் கைதுசெய்ய முடியாது. ஐ.நா சபையின் முன் உங்கள் பிரச்சினை எடுக்கப்பட்டுள்ளது. எனவே எந்த நாடும் உங்கள் மீது தனிப்பட்ட நடவடிக்கைகளை இப்போது எடுக்க முடியாது. ஐ.நா சபையே இனிமேல் உங்கள் பிரச்சினையைப் பார்த்துக்கொள்ளும். ராஜபக்ச: ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு பிரச்சினை போகும் போல்லலே கிடக்கு? நம்பியார்: அதுக்குத்தான் ரசியா உடனமே அறிக்கை விட்டுட்டுதே. அவையிற்றை வீற்றோ பவர் இருக்கைகேக்கை நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். ராஜபக்ச: ஆனால் வேறு யாராவது புதிய ஐ.நா செயலாளர் வந்தால் என்பாடு என்னாவது? நம்பியார்: பயப்படாதீர்கள். மீண்டும் ஐ.நா செயலாளராக வருவதற்காகத் தான் பான் கீ மூன் இப்படியொரு குழுவை அமைத்ததும், அந்தக்குழு பான்கி மூனைப் பற்றியே கண்டனம் வெளியிட்டதும். ராஜபக்ச: எனக்கு ஒன்றும் புரியவில்லை. நம்பியார்: இதுவரையும் பான் கீ மூனுக்கு இருந்த ஒரேஒரு கெட்டபெயர் இலங்கைப் பிரச்சினைதான். அதற்கு இப்போது ஒரு தீர்வு காணப்படுவதுபோல் ஒரு பாவனை காட்டப்பட்டுவிட்டது. இனிமேல் யாரும் அவரைப் பற்றி இலங்கை விடயத்தில் குறைசொல்ல முடியாது. ராஜபக்ச: ஆனால் தமிழர்கள் சும்மா இருப்பார்களா? நம்பியார்: வடக்கு கிழக்கிலைதான் யாரும் வாய் திறக்கேலாதே? ராஜபக்ச: நான் அவையைச் சொல்லேலை.. நம்பியார்: யாரை � புலம்பெயர் தமிழரைச் சொல்லுறியளோ! அவைக்கை இப்ப பல பிரிவு. அவை தங்கடை குடுமிச் சண்டையை பிடிக்கவே நேரமில்லை. அவையாவது ஒற்றுமைப்படுறதாவது - போராடுறதாவது.. இம்மானுவல் சுவாமி எதாவது செய்தால் சரி. அதையும் சமாளிக்கலாம்.. ராஜபக்ச: ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இருக்கிறதே? நம்பியார்: பயப்படாதையுங்கோ அவையலை இந்தியா பார்த்துக்கொள்ளும். ராஜபக்ச: ஆனால் இப்ப அவையள் இரகசியமாய் கதைப்பதற்காக சிங்கப்ப+ர் போயிருக்கினமே. அதுதான் எனக்குச் சந்தேகமாயிருக்கு. நம்பியார்: பயப்படாதையுங்கோ அவை இரகசியமாய் எதையும் செய்யேலாது. இந்தவாரம் இணையத்தளங்களில் சில கேள்விகள் அவையிட்டை தமிழர் சிலர் கேட்டிருக்கினம் பார்த்தனீங்களே? ராஜபக்ச: இப்ப கொஞ்ச நாளாய் எனக்கு பேப்பரென்றாலே அலர்ஜி. அதாலை பார்க்கேலை. சிங்கப்ப+ர் போன கூட்டமைப்பிடம் தமிழர்கள் - அப்ப என்னதான் கேட்டிருக்கினம்? நம்பியார்: சிங்கப்பூர் கருத்தரங்கை நடத்துவதற்கும் உங்கள் உறுப்பினர்களின் பிரயாணம் மற்றும் அவசியச் செலவுகளுக்கு தேவையான நிதியை வழங்கிய நிறுவனம் அல்லது நாடு எது? இதை உங்களால் நமது மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க முடியுமா? இந்த சிங்கப்பூர் கருத்தரங்கை நடத்துவதில் இந்தியாவிற்கு ஏதாவது பங்கு உண்டா அல்லது ஏதாவது நெருக்குவாரங்கள் அந்த நாட்டின் உயர் பீடத்திலிருந்து உங்களுக்கு கொடுக்கப்பட்டதா? இந்த சிங்க்ப்பூர் கருத்தரங்கில் பங்கு கொண்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? இவ்வாறான மூன்று கேள்விகளை உலகத் தமிழர்கள் சார்பாகவும் தாயகத்து தமிழர்கள் சார்பாகவும் கேட்கின்றோம் என இந்தவார பத்திரிகைகள் சிலதிலையும் இணையத்தளத்திலும் கேள்விக்கணைகளை சிலர் விடுத்துள்ளனரே? ராஜபக்ச: அதாவது அரசியல் சதுரங்கம் ஆடும் தமது தலைவர்கள் - எப்படி காய்களை எங்கே எதற்காக நகர்த்துகிறார்கள் என்று பகிரங்கமாகச் சொல்லிவிட்டு நகர்த்துமாறு தமிழர்கள் கேட்கிறார்கள் அப்படித்தானே இருந்தாலும் எல்லாத் தமிழரையும் ஒரே மாதிரி நினைக்க முடியுமே? நம்பியார்: பயப்படாதையுங்கோ. நிபுணர் குழுவின் அறிக்கை அவர்களுக்குச் சார்பாக இருப்பதால், அதை நினைத்தே அவர்கள் பெருமைப்படுவார்கள், மகிழ்ச்சியடைவார்கள். எதையும் செய்யாது தமக்குத் தாமே முதுகில் தட்டிக்கொள்வார்கள். எல்லாத்தையும் ஐ.நா சபை பார்த்துக்கொள்ளும் என்று நம்பி பேசாதிருப்பார்கள். ராஜபக்ச: மீறிப் போராடினால்? நம்பியார்: இந்த நிபுணர் குழுவின் அறிக்கையை பரிசீலிக்க இன்னொரு குழுவை நியமிக்க வேண்டியதுதான். ராஜபக்ச: அந்தக் குழு என்ன செய்யும்? நம்பியார்: அதுவும் ஒரு அறிக்கையை தயாரிக்கும். ராஜபக்ச: இன்னொரு அறிக்கையோ? மகே புத்தா! நம்பியார்: அதுக்கடையிலை நீங்கள் ஐக்கிய தேசிய கட்சி பிரதி தவிசாளர் லக்ஸ்மன் கிரியெல்ல செவ்வாய்க்கிழமை சொன்ன விடயத்தைச் செய்யவேண்டும். ராஜபக்ச: என்ன சரத் பொன்சேகாவை விடுதலை செய்யிறதோ? நம்பியார்: அதுவும் நல்லதுதான். ஆனால் கிரியெல்ல இன்னொரு விடயத்தையும் சொல்லியிருக்கிறார். ராஜபக்ச: என்ன என்குக் சார்பாகவே? நம்பியார்: ஓம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் சிபாரிசுகள் சிலவற்றை அமுல்படுத்துவதன் மூலம் அவ்வறிக்கையை இலங்கைக்கு சாதகமானதாக மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறர்! ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரான யுத்தத்தின் பின்னர் இஸ்ரேல் மீது போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது இஸ்ரேல் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையிலுள்ள சில சிபாரிசுகளை இவ்வாறு அமுல்படுத்தியது. அதன்பின் நிபுணர் குழுவுக்குத் தலைமை தாங்கிய தென்னாபிரிக்க நீதிபதி, இஸ்ரேலின் நிலை முன்னேறியுள்ளது என மற்றொரு அறிக்கையை வெளியிட நேரிட்டது. இதைத்தான் லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. சுட்டிக்காட்டியிருக்கிறார். அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை தளர்த்த வேண்டும். யுத்தத்தின்போது காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்க வேண்டும். இவையே நிபுணர் குழுவின் பிரதான சிபாரிசுகளாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறாறெல்லே? ராஜபக்ச: இவற்றைச் செய்தால் காணுமே? ஐ.நா சபை ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டுமென்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதே? நம்பியார்: நீங்கள் வடிவாய் வாசிக்கேல்லை. அந்த விசாரணைக் குழுவை நீங்கள் தான் நியமிக்கப் போகிறீர்கள் என்றுமெல்லே பரிந்துரை செய்யப்பட்டிருக்கு. எங்காவது கொலையாளியிடமே நீதிபதியைத் தெரிவுசெய்யுமாறு கேட்பதுண்டா? ராஜபக்ச: ஆனால் ஐ.நா சபை ஒரு குழுவை உருவாக்கி � எனது விசாரணையைக் கண்காணிக்கப் போவதாக ஐ.நா பேச்சாளர் தெரிவித்துள்ளாரே? நம்பியார்: அதேசமயம் அந்தக் குழுவில் எனது பெயரும் இடம்பெறலாம் என்று அவர் சொல்லியிருக்கிறாரே? ராஜபக்ச: அதெப்படி உங்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதே. சர்வதேச நீதிமன்றில் உங்கள் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதே? நம்பியார்: இதைத்தான் இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளரும் ஐ.நா பேச்சாளரிடம் கேட்டார். ராஜபக்ச: அதற்கு அவர் என்ன சொன்னார்? நம்பியார்: �அது சட்ட ரீதியானதாக சரியானது போன்று தோன்றும் தவறான கேள்வி. அவர் ஒரு இலக்கு என்ற வகையில் என்னுடைய (நம்பியாரின்) பெயர் குறிப்பிடப்படவில்லை. எனவே எனது (நம்பியாரின்) பெயரும் குழுவில் சொல்லப்படலாம் என்று ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியிருக்கிறாரே? ராஜபக்ச: அப்ப நீரும் அந்தக் குழுவில் இருப்பீரோ? நம்பியார்: நான் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ராஜபக்ச: என்ன ரஜனி மாதிரி பேசுறியள் நம்பியார்: நான் அல்லது எனது ஆட்கள் இருப்பார்கள்! ராஜபக்ச: எனக்கு ஒன்றுமே புரியேலை? நம்பியார்: ஒரு விடயத்தை தெளிவாய் தெரிந்துகொள்ளுங்கோ. ஐ.நா சபையின் மீதும், பான்கீ மூனின் மீது உலகத்திற்கு நம்பிக்கை வரவேண்டுமென்பதற்காகத் தான் - பக்கச்சார்பற்ற நீதியான ஒரு நிபுணர் குழுவை நியமித்தனாங்கள். ராஜபக்ச: அது எனக்கெல்லே ஆபத்தாய் போவிடும்போல கிடக்கு? நம்பியார்: ஒருநாளுமில்லை. இப்ப எல்லாருக்கும் ஐ.நா சபை மீதும், பான் கீ மூன் மீதும் நம்பிக்கை வந்திட்டுது. இன்pமேல் அவர் எதுசெய்தாலும் இலங்கை விடயத்தில் சரியாத் தான் இருக்கும் என்று நம்புவினம். இதனாலை ஒரே கல்லிலை இரண்டு மாங்காய். ராஜபக்ச: அதெப்படி ஒரே கல்லிலை இரண்டு மாங்காய்? நம்பியார்: இலங்கை விடயத்தில் எதுசெய்தாலும் அது சரியாத் தான் இருக்கும் என்று உலகம் நம்பும். மேலும் தொடர்ந்து விசாரணைகள் நடத்துவதற்காகவும், பான் கீ மூன் தேவையென்று நினைப்பினம். பான் கீ மூனுக்கிருந்த கெட்ட பெயரும் மறைந்ததால் அவர் அடுத்த தடவையும் செயலாளராக தெரிவுசெய்யப்படுவதற்கு தடையில்லை. நானும் அவரின் ஆலோசகராக இருப்பதற்குத் தடையில்லை. நீங்களும் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்வதற்குத் தடையில்லை? ராஜபக்ச: அதெப்படி? நம்பியார்: இந்த நிபுணர் குழு அற்pக்கையால் - உங்கள் நாட்டில் இருந்த எல்லாப் பிரிவினைகளும் மறைந்துபோய் எல்லாரும் ஒற்றுமையாய், அறிக்கையை எதிர்த்தே கதைக்கத் தொடங்கிவிட்டினம். அதாவது எல்லாரும் உங்களுக்குச் சார்பாகக் கதைக்கத் தொடங்கிவிட்டினம். உங்களுக்குச் சார்பாக எல்லாரையும் இந்த அறிக்கை சேர்த்திருக்கு. நாட்டையும், படையினரையும் காப்பாற்றுவதற்காக மீண்டும் உங்களையே ஜனாதிபதியாக அவர்கள் தெரிவுசெய்ய வேண்டும். ராஜபக்ச: அதாவது போர்க்குற்றவாளியான என்னைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் ஒன்றுபட்டு உழைக்கப் போகிறார்கள் என்று சொல்லுறியள். நம்பியார்: சரியாச் சொன்னீர்கள். இந்த அறிக்கையாலை � நான் , பான்கீமூன், நீங்கள் - எங்கள் மூன்றுபேருடைய பதவிகளும் இன்னும் சில வருடங்களுக்கு மாறாதென்று நிச்சயிக்கப்பட்டுவிட்டது. ராஜபக்ச: அப்ப தமிழ் மக்கள்? நம்பியார்: அவையும்தான். அவையின்றை துன்பங்கள், துயரங்கள், கவலைகள், கஸ்டங்களும் இன்னும் சில வருடங்களுக்கு மாறாது என்று நிச்சயிக்கப்பட்டுவிட்டது. வாசகன் ரட்ணதுரை - கனடா (சுதந்திரன்) seithy.com Source: மகிந்த - விஜய் நம்பியார் ஒரு கற்பனை உரையாடல்!
  17. நிலாமதி , ithayanila இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலவர் .
  19. வாதவூரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  20. சுஜிக்கு எனது அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
  21. இலங்கையில் தமிழன் அழிவதைக் கண்டு கவலைப்பட்ட உண்மைத் தமிழன் நான்: கருணாநிதி சென்னை, ஏப்.8,2011 இலங்கை தமிழர்களுக்காக என்றைக்கும் போராட கூடியவர்கள் தி.மு.க.வினர் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். மேலும், "உண்மையான தமிழன், தமிழன் அழிகிறானே என்று கவலைப்பட்ட தமிழன் கருணாநிதி," என்றார் அவர். தென்சென்னை மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் நேற்றிரவு நடந்தது. இந்தக் கூட்டத்தில் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி கலந்துகொண்டு பேசுகையில், "இது வெறும் பிரசார பொதுக்கூட்டம் அல்ல. இன எழுச்சிக்கான போர் முரசு கொட்டுகின்ற கூட்டம். இனம் என்று சொன்னால் ஏழை எளியவர்களின் இனம். தமிழகத்திலே தி.மு.கழகம் சார்பில் எல்லா இடங்களிலும் நம்முடைய கூட்டணியினுடைய குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இரண்டு நாளைக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னை தீவுத்திடலிலே வந்து உரையாற்றினார். அவரிடம் சட்டமன்ற தேர்தலை பற்றி பேசவில்லை - சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமையவிருக்கின்ற அரசு, அது தி.மு.கழக அரசாக இருந்தால் என்னென்ன கோரிக்கைகளை அம்மையாரே உங்களிடத்தில் வைக்கும் அந்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரவேண்டும் என்ற என் நலனுக்காக அல்ல - யாருடைய நலனுக்காகவும் அல்ல - இந்த மாநிலத்தினுடைய நலனுக்காக தமிழனுடைய நலனுக்காக - தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்கான தேவைகளை எல்லாம் எடுத்து வைத்தேன். அப்பொழுது அங்கு நான் சொன்னேன், இலங்கையிலே வாழ்கின்ற எங்கள் தமிழர்கள் குடியமர்த்தப்படுவதிலே, பராமரிக்கப்படுவதிலே கால தாமதம் ஏற்படுகிறது. இலங்கை அரசு அவர்களுடைய தேவைகளை இன்னமும் முழுமையாக நிறைவு செய்யவில்லை. அங்கே சிங்களவர்களும், தமிழர்களும் சம நிலையிலே வாழ்வதற்கு சட்ட திருத்தத்தை கொண்டு வருவதாக இலங்கை அதிபர் சொல்லிய அந்த திருத்தத்தை கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். நான் என்னமோ இப்பொழுதுதான் இலங்கைத் தமிழர்களுக்காக கவலைப்படுவதைப் போல சில பத்திரிகைகளில் எழுதியிருக்கின்றார்கள். கேலி செய்திருக்கின்றார்கள், யார் யார் இலங்கை தமிழர்களுக்காக பாடுபடுகிறார்கள், இலங்கையிலே தமிழர்கள் கொல்லப்பட்ட போது ஒதுங்கி இருந்தவர்கள் யார்? தமிழர்கள் கொல்லப்பட்ட போது அது சரி, சரி என்று சொன்னவர்கள் யார்? இலங்கை தமிழர்கள் அங்கு வேதனைப்பட்டபோது "ஸ்கேல்'' வைத்து அளந்து பார்த்து இந்த பிரச்சினையை அணுகிய கம்யூனிஸ்ட் நண்பர்களானாலும் அதைப்பற்றி நான் கவலைப்படவே மாட்டேன் என்று சொன்ன அ.தி.மு.க. நண்பர்களானாலும் யோசித்து பார்க்க வேண்டும். தி.மு.கழகம் இலங்கை பிரச்னையில் எடுத்த நிலை என்ன? தமிழன் அங்கே வாழ வைக்கப்பட வேண்டும். தமிழன் அவர்களுடைய ஊர்களிலேயிருந்து விரட்டப்பட்ட தமிழன், அங்கே நடைபெற்ற போராட்டத்தினால் ஊரை விட்டு ஓடிய தமிழன் மீண்டும் அந்த ஊருக்கு வரவேண்டும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற பொறுப்பை இலங்கையிலே இன்றைக்கு இருக்கின்ற அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம் என்றால் கடந்த காலத்திலே, இன்றைக்கு எங்களை கேலி செய்கிறவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதா? சென்னை சட்டசபையில் ஒரு தீர்மானமே வந்தது, ஜெயலலிதா ஆட்சியில். ஆனால் நான் சொல்ல விரும்புகிறேன், அன்றைக்கு சென்னை சட்டமன்றத்தில், தமிழக சட்ட மன்றத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் என்ன? அந்த தீர்மானத்தை தி.மு.கழகம் ஆதரிக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை, அதை ஆதரித்து பேசவும் இல்லை. நடுநிலை வகித்தோம். அந்தத் தீர்மானம் இலங்கையிலே இருக்கின்ற பிரபாகரனை கைது செய்து கொண்டு வந்து, சென்னையிலே விசாரணை நடத்த வேண்டும்-தீர்மானம் போட்டது யார்? தி.மு.கழக அரசா? நெஞ்சிலே கை வைத்து சொல்லுங்கள், நெஞ்சு இருந்தால் கை வைத்து சொல்லுங்கள். நாங்களா அந்த தீர்மானம் போட்டோம், இல்லையே. இலங்கையிலே ராஜபக்சேயினுடைய ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, நான் கண்ணீர் விட்டு கவிதை எழுதினேன், கட்டுரை தீட்டியிருக்கிறேன், மேடையிலே தீர்மானம் போட்டோம். அப்போது அம்மையார் ஜெயலலிதா என்ன சொன்னார்? இந்த போராட்டத்திலே சாகிறவர்கள் எல்லாம் விடுதலை வீரர்கள் அல்ல, விடுதலைப்புலிகள் அல்ல என்று சொன்னார். சொல்லிவிட்டு அப்படியே புலிகளாக இருந்தாலும் இலங்கையிலே இருக்கிற தமிழர்களாக இருந்தாலும் இதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் போர் என்றால் ஜனங்கள் செத்து மடிவது சகஜம்- யார் சொன்னது, இலங்கை தமிழர்களை பார்த்து. ஜனங்கள் என்று சொல்லி , அவர்கள் செத்து மடிவது சகஜம் என்று சொன்ன ஜெயலலிதா, இன்றைக்கு இலங்கை தமிழர்களுக்கு நெருக்கமான உறவாக இருந்தால் அதைவிட அதிகமாக இலங்கை தமிழர்களுக்காக இங்கே பேசிய இன்னமும் பேசிக்கொண்டிருக்கிற சில நெடுமரங்களுக்கு அவர் வழிகாட்டியாக ஆகிவிட்டார். தி.மு.கழகத்தை பொறுத்தவரையில் அதுவும் அந்த கட்சியினுடைய தலைவராக இருக்கிற என்னை பொறுத்தவரையில் இன்று நேற்றல்ல-அறிஞர் அண்ணாவுடன் இணைந்து 1956 ஆம் ஆண்டு இலங்கையிலே ஈழத்தமிழர்களுக்காக போர்க்கொடி ஏந்திய தந்தை செல்வா அவர்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியவர்கள் நாங்கள். அதைப்போலவே விடுதலைப்புலிகள் ஜெகன், குட்டிமணி, தங்கதுரை இவர்களெல்லாம் என்னோடு நெருக்கமாக இருந்து அங்கே நடைபெறுகின்ற, அந்த விடுதலைப்போராட்டத்திற்கான ஆதரவை தமிழக மக்கள் மூலமாக கோரி பெற்றார்கள். சகோதர யுத்தத்தால் அந்த போராட்டம் தோல்வியிலே முடிந்தது. இப்படி முடிந்துவிட்டதே என்ற ஏக்கம் எனக்கு இன்றைக்கும் உண்டு. அதனால்தான், அந்த ஏக்கத்தைப் போக்கிக்கொள்ள - இங்கே பிரதமர் வரும் போதெல்லாம், பிரதமரை காணும் போதெல்லாம் நம்முடைய அன்புக்குரிய சோனியா காந்தி அம்மையார் இங்கு வரும் போதெல்லாம் அவரிடத்திலே நான் பகிரங்கமாகவும், தனியாகவும் எடுத்துச் சொல்வது - இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களை காப்பாற்றுங்கள். அவர்கள் ஏதோ சில கலவரங்களால், பாதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணாமல், சுதந்திரப் போராட்டத்தில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் - அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க முன்வாருங்கள் என்று கேட்கிற அந்த விளக்கம்தான் இந்த கருணாநிதிக்கு இன்றைக்கும் உண்டு. இதைச்சொல்வதற்கு காரணம், திராவிட முன்னேற்ற கழகம் இன்று நேற்றல்ல - உலகத்திலே எந்த ஒரு மாநிலத்திலும், எந்த ஒரு நாட்டிலும் அன்னியப்பட்டு கிடக்கிற அடித்தளத்து மக்களை சாதாரண - சாமான்ய மக்களை, விடுதலை முழக்கமிடுகின்ற மக்களை ஆதரிக்கின்ற இயல்பு கொண்டது என்பதும், வரலாறு கொண்டது என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்ட வரலாற்றுக்குரிய தி.மு.க. அதன் தலைவர் என்ற முறையில், நான் இந்த போராட்டத்திலே எத்தகைய முடிவு எடுக்க வேண்டியிருந்தது என்பதையும், எத்தகைய குழப்பங்களையெல்லாம் அப்போதிருந்த அ.தி.மு.க. ஆட்சி விளைவித்தது என்பதையும், தயவு செய்து எண்ணிப்பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். உண்மையான தமிழன், தமிழன் அழிகிறானே என்று கவலைப்பட்ட தமிழன் கருணாநிதி. தி.மு.க.வில் உள்ள தமிழர்கள் - இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களுக்காக என்றைக்கும் கண்ணீர் விடுபவர்கள் - என்றைக்கும் பரிந்து பேசக்கூடியவர்கள் - என்றைக்கும் போராடக் கூடியவர்கள் என்பதை உணர்ந்து அப்படிப்பட்ட தமிழர்களால் நடத்தப்படுகின்ற இந்தப் பேரியக்கத்தின் பிள்ளைகளாக உள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியினுடைய வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்தால் நான் சொன்ன இந்த வார்த்தைகளுக்கு மதிப்பு," என்றார் முதல்வர் கருணாநிதி. vikatan
  22. இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க. என்றைக்கும் போராடும்:கருணாநிதி First Published : 08 Apr 2011 03:24:31 AM IST சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் (இடமிருந்து) வேட்பாளர்கள் மகேஷ் (சைதாப்பேட்டை), ஜின்னா (ஆயிரம் விளக்கு), தங்கபாலு (மயிலாப்பூ சென்னை, ஏப்.7: இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க.வினர் என்றைக்கும் போராடுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். தென்சென்னை மாவட்ட பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது: "அடுத்த ஆட்சி எந்த ஆட்சி? வேற ஆட்சி வரப்போகிறதா அல்லது தி.மு.க. ஆட்சியே தொடரப்போகிறதா என்ற கேள்விக்கு விடைகாண நீங்கள் எழுச்சியோடு வந்திருக்கிறீர்கள். இந்த எழுச்சியை நான் நேற்று (புதன்கிழமை) மதுரையில் கூட பார்க்கவில்லை. மதுரையில் உள்ள கூட்டத்தை வெல்லக்கூடிய அளவுக்கு நீங்கள் குழுமியுள்ள காட்சியைப் பார்க்கும்போது நான் மனதாரச் சொல்லிக்கொள்கிறேன், வெற்றி நிச்சயம். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தீவுத்திடலில் வந்து உரையாற்றினார். தொகுதி நிலவரங்கள், தேர்தல் நிலவரங்கள், யார், யாரை நிறுத்தியிருக்கிறோம் என்ற விவரங்கள் இவைகளையெல்லாம் பற்றிப் பேசவில்லை. தமிழர்களின் நலனுக்காக, தமிழ்நாட்டின் நலனுக்காக வேண்டிய தேவைகளையெல்லாம் எடுத்துரைத்தேன். இலங்கையில் வாழும் தமிழர்களைப் பராமரிப்பதில் இன்னமும் காலதாமதம் ஆகிறது. இலங்கை அரசு அவர்களின் தேவையை முழுமையாக இன்னமும் நிறைவு செய்யவில்லை. அங்கே சிங்களர்களும், தமிழர்களும் சமமாக வாழ்வதற்கு சட்ட திருத்தத்தைக் கொண்டுவருவதாக இலங்கை அதிபர் ராஜபட்ச சொல்லியிருந்தார். அந்தத் திருத்தத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரினேன். இலங்கைப் பிரச்னையைப் பற்றி நான் இப்போதுதான் கவலைப்படுவதாக சிலர் கிண்டல் செய்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்காக கவலைப்படுகிறவர்கள் யார், ஒதுங்கியிருந்தவர்கள் யார், அவர்கள் கொல்லப்பட்டபோது சரி, சரி என்று சொன்னவர்கள் யார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழர்கள் அங்கே வாழவைக்கப்பட வேண்டும். அவர்களின் ஊர்களில் இருந்து விரட்டப்படும் தமிழர், அங்கு நடைபெறும் போரால் விரட்டப்படும் தமிழர் அந்த ஊருக்கு வர வேண்டும். அதற்குப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை இலங்கை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரினோம். பேரவையில் தீர்மானம்: தமிழகப் பேரவையில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் என்ன? இலங்கையில் இருந்த பிரபாகரனை கைதுசெய்து, இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும். சென்னையிலே விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை; நடுநிலை வகித்தோம். இலங்கை ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டபோது நான் கண்ணீர்விட்டு கவிதைகள் எழுதினேன். போர் என்றால் ஜனங்கள் செத்துமடிவது சகஜம் என்றார் ஜெயலலிதா. இலங்கைத் தமிழர்களுக்காக இங்கே பேசிய, பேசிக்கொண்டிருக்கிற சில நெடுமரங்களுக்கு இப்போது அவர் வழிகாட்டியாக ஆகிவிட்டார். விடுதலைப் புலிகளைப் பொருத்தவரை ஜெகன், குட்டிமணி, தங்கதுரை போன்றவர்கள் என்னைச் சந்தித்து அங்கு நடைபெறும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு கோரினர். ஏக்கம் உள்ளது: சகோதர யுத்தத்தால் ஒரு லட்சியப் போராட்டம், பெரும் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இப்படி முடிந்துவிட்டதே என்ற ஏக்கம் எனக்கு இன்றைக்கும் உள்ளது. அந்த ஏக்கத்தைப் போக்கிக்கொள்ள பிரதமரைக் காணும்போதெல்லாம், சோனியா வரும்போதெல்லாம் அவர்களிடம் நான் பகிரங்கமாகவும், தனியாகவும் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று எடுத்துச் சொல்வேன். அவர்கள் கலவரங்களில் ஈடுபட்டவர்கள் என்று கருதாமல், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க முன்வாருங்கள் என்று இன்றைக்கும் கோரிக்கை வைக்கிறேன். தி.மு.க. தலைவர் என்ற முறையில் நான் இந்தப் போராட்டத்திலே எத்தகைய முடிவு எடுக்க வேண்டியிருந்தது என்பதையும், எத்தகைய குழப்பங்களையெல்லாம் அப்போதைய அதிமுக ஆட்சி விளைவித்தது என்பதையும் தயவுசெய்து எண்ணிப்பார்க்க வேண்டும். உண்மையான தமிழன் - தமிழன் அழிகிறானே என்று கவலைப்பட்ட தமிழன் - கருணாநிதி, அழிந்தாலும் அதைவைத்து அரசியல் லாபம் சம்பாதிக்கலாம் என்று எண்ணியவர்கள் சிலர் இன்று எழுதுகிறார்கள். அந்தத் தமிழனுக்கும், இந்தத் தமிழனுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து, தி.மு.க.வில் உள்ள தமிழர்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக என்றைக்கும் பரிந்துப்பேசக்கூடியவர்கள்; போராடுவார்கள் என்பதை உணர்ந்து, தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் கருணாநிதி. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், வடசென்னை மக்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளரும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. வேட்பாளருமான ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். dinamani.com
  23. ஈழத்தமிழர்களுக்குப் பிரச்சினை; கலைஞர் கவலை; சோனியா அக்கறை! - சென்னையில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-06 07:56:37| யாழ்ப்பாணம்] இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும் முதல்வர் கருணாநிதி தனது கவலையை தெரிவித்தார். பதிலுக்கு சோனியா காந்தி, அண்டை நாடுகள் பிரச்சினைகளிலேயே இலங்கைத் தமிழர் பிரச்சினை யில்தான் மத்திய அரசு அதிக அக்கறை காட்டிவருவதாகவும் இடம்பெயர்ந்த தமிழர் மீள்குடியேற்றத்துக்காக அதிகளவில் நிதியுதவி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். சென்னை தீவுத்திடலில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இருவரும் இவ்வாறு தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீன வர்கள் சிலர் கொல்லப்பட்டது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அப்பாவி மீனவர்கள் உயிர் பறிபோய் விட்டது. இதற்கு மேல் தமிழக மீனவர்கள் சுடப் படமாட்டார்கள் என நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். இவ்வாறு சென்னைத்தீவுத்திட லில் நேற்றுமாலை நடைபெற்ற தி.மு.க. தலைமையிலான ஜனநா யக முற்போக்கு கூட்டணி வேட்பா ளர்கள் அறிமுகக் கூட்டத்தில் சோனியா காந்தி உரை நிகழ்த்தியுள்ளார். இதில் காங்கிரஸ் கட்சியின் தலை வர் சோனியா காந்தி, தி.மு.க. தலை வர் கலைஞர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். சோனியா பேசுவதற்கு முன்னர் பேசிய தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி, மீன வர்களின் உரிமைக்கும், வாழ்விற் கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிரச் சினையாக கச்சதீவு உள்ளது என் றும் கச்சதீவில் தமிழக மீனவர்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அது குறித்து சோனியா எதுவும் கூறவில்லை. சோனியாகாந்தி தனது உரையில் மேலும் கூறியதாவது, இலங்கைத் தமிழர்களின் உரி மைப்பிரச்சினை மிக முக்கியமானது இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக நாங்கள் கொடுத்த உறுதிமொழிகளை எல்லாம் ஒன்றொன்றாக செய்து கொண்டு வருகிறோம். பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு இந்தியா சார்பாக பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வரு கிறது. அவைமேலும் தொடரும் என்று உறுதி கூறுகிறேன். அவர்களுக்கு சம உரிமை கிடைத்திட, சட்டத்திருத்தங்களை செய்யுமாறு இலங்கை அரசை வலி யுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார். இலங்கைத் தமிழர்களின் நிலை யில் கடந்த ஓராண்டு காலத்தில் குறிப் பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள் ளது எனவும், அவர்களின் மறுவாழ் விற் காக ஏராளமான நிதியுத வியை மத்திய அரசு செய்துள்ளது எனவும் அவர்கள் வாழ்வு மேம்பட மேலும் உதவிகள் செய் யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இப்பொழுது புனர்வாழ்விற்காக ஏராளமான பணத்தை அவர்களுக்கு கொடுத்திருக்கிறோம். அதுபோலவே 50ஆயிரம் வீடுகள் புதிதாக கட்டு வது மட்டுமன்றி இலங்கையின் அரசியல் அமைப்பு விதிகளை மாற்றி தமிழர்கள் எல்லா உரிமைகளையும் பெற்று தம்மானத்தோடும் பெருமை யோடும் பெருமிதத்தோடும் வாழ்வ தற்குரிய மாற்றத்தை செய்யவேண் டும் என்பதை நாங்கள் வலியுறுத் திக் கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்தார். valampurii.com
  24. சோனியா: தமிழர் பிரச்சினைக்கு முன்னுரிமை அகில இந்திய காங்கிரசின் தலைவர் சோனியா காந்தியும் தமிழக முதல்வர் கருணாநிதியும் இணைந்து சென்னையில் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். சோனியா காந்தி தமிழகத்தை முற்போக்கு மாநிலம் என்று வர்ணித்து, கருணாநிதியின் தலைமைக்கு புகழாரம் சூட்டி, அவர் தலைமையில் மாநிலம் முன்னேறி வருவதாலேயே திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியைத் தொடர்கிறது என்றார். தேர்தல் பிரச்சாரம் என்றாலும் முதல்வர் கருணாநிதி தென்னக நதிநீர் இணைப்பு, முல்லைப் பெரியார் பிரச்சினையில் தமிழகத்திற்கு நீதி, தலித் கிறித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தார். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும் முதல்வர் கருணாநிதி தனது கவலையைத் தெரிவித்தார். பதிலுக்கு சோனியா காந்தி, அண்டை நாடுகள் பிரச்சினைகளிலேயே இலங்கைத் தமிழர் பிரச்சினையில்தான் மத்திய அரசு அதிக அக்கறை காட்டி வருவதாகவும், இடம்பெயர்ந்த தமிழர் மீள்குடியேற்றத்திற்காக அதிக அளவில் நிதி உதவி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும் தமிழர்கள் அனைத்து உரிமைகளுடன் கண்ணியமாக தலைநிமிர்ந்து வாழும் வகையில் தேவையான மாற்றங்களை அரசியல் சட்டத்தில் செய்யவேண்டுமென்று மத்திய அரசு இலங்கையை வற்புறுத்தி வருவதாகவும், இப்பிரச்சினையில் தன்னால் இயன்ற அனைத்தையும் இந்தியா செய்யும் என்றும் சோனியா காந்தி உறுதியளித்தார். கருணாநிதி கச்சத்தீவு பிரச்சினை பற்றியும் குறிப்பிட்டார். பதிலுக்கு சோனியா காந்தி தமிழக மீனவர்கள் சுடப்படமாட்டார்கள் என்று இலங்கை வாக்களித்திருப்பதாகவும், அவ்வாக்குறுதி மீறப்படாமல் இருக்க இந்தியா ஆவன செய்யும் என்றும் தெரிவித்தார். முன்னதாக பாண்டிச்சேரியிலும் அவர் தேர்த்ல் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டத்திற்குப் பிறகு கேரளா சென்றார் சோனிய காந்தி. http://www.bbc.co.uk/tamil/news/story/2011/04/110405_soniainmadras.shtml

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.