Everything posted by கறுப்பி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்கு சாருக்கு பிரத்தியேகமான வாழ்த்துக்கள். கருத்துக்களுடன் மேலும் மொட்டி மோத நீண்ட நாட்கள் வாழனும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி யின் ஆசி தொடர நாமும் வாழத்துறம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இராவணனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இலக்கணம் - முதனிலை
இலக்கணம் - முதனிலை 30. மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்கள் எவை? பன்னிரண்டுயிரெழுத்துக்களும், உயிரேறிய க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ என்னும் ஒன்பது மெய்யெழுத்துக்களும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்களாம். உ-ம். அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை. கரி, சரி, நன்மை, பந்து, மணி, வயல், யமன், ஞமலி. 31. இவ்வொன்பது மெய்களுள், எத்தனை மெய்கள் பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகிவரும்? இவைகளுள்ளே, க, ச, த, ந, ப, ம, என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும். உ-ம். 1. களி, காளி, கிளி, கீரை, குளிர், கூடு, கெண்டை, கேழல், கைதை, கோண்டை, கோடை, கௌவை. 2. சட்டி, சாநந்து, சினம், சீர், சுக்கு, சூரல், செக்கு, சேவல், சையம், சொன்றி, சோறு, சௌரியம். 3. தகை, தார், திதலை, தீமை, துளை, தூசு, தெளிவு, தேழ், தையல், தொண்டு, தோடு, தௌவை. 4. நஞ்சு, நாரி, நிலம், நீறு, நுகம், நூல், நெல், நேர்மை, நைதல், நொய்து, நோய், நௌளி. 5. பந்து, பால், பிட்டு, பீடு, புள், பூண்டு, பெருமை, பேடு, பையல், பொன், போது, பௌவம். 6. மனை, மாடு, மின்னல், மீன், முள், மூரி, மெய்ம்மை, மேதி, மையல், மொட்டு, மோகம், மௌவல். 32. வகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்? வகரமெய், அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும். உ-ம். வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம், வெளவால். 33. யகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்? யகரமெய், அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள னெ;னும் ஆறயிரோடு, மொழிக்கு முதலாகிவரும். உ-ம். யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம். 34. ஞகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?ஞகரமெய், அ, ஆ, எ, ஒ, என்னும் நான்குயிரோடு மொழிக்கு முதலாகி வரும். உ-ம். ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல். இறுதி நிலை 35. எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினொரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துக்களும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துக்களாம். உ-ம். விள, பலா, கிளி, தீ, கடு, பூ, சே, கை, நொ, போ, வெள, உரிஞ், மண், வெரிந், மரம், பொன், காய், வேர், வேல், தெவ், யாழ், வாள். தேர்வு வினா - 31. மொழிக்கு இறுதியில் நிற்கும் எழுத்துக்கள் எவை? எழுத்துக்களின் சாரியை 36. உயிர்நெட்டெழுத்துக்கள் காராச்சாரியை பெற்றும், அவைகளுள், ஐ ஒள, இரண்டுங் காராச்சாரியை யேயன்றிக் கான்சாரியையும் பெறும். உ-ம். ஆகாரம், ஈகாரம், ஊகாரம், ஏகாரம், ஐகாரம், ஒகாரம், ஒளகாரம், ஐகான், ஒளகான். ஊயிர்க்குற்றெழுத்துக்களும், உயிர்மெய்க்குற்றெழுத்துக்களும், கரம், காரம், கான், என்னும் மூன்று சாரியை பெறும். உ-ம். அகரம், அகாரம், அஃகான், ககரம், ககாரம், கஃகான். மேய்யெழுத்துக்கள், அ என்னுஞ் சாரியை அதனோடு கரம், காரம், கான் என்னும் சாரியை பெறும். உ-ம். க, ங, ககரம், ககாரம், கஃகான், ஙகரம், ஙகாரம். ஙஃகான். உயிர்மெய் நெட்டெழுத்துக்கள், சாரியை பெறும் மெய்கள் சாரியை பெறாதும் இயங்காவாம். தேர்வு வினாக்கள் -- 32. உயிர்நெட்டெழுத்துக்கள் எச்சாரியை பெறும்? ஐ, ஒள, இரண்டும் காரச்சாரியை யன்றி வேறு சாரியை பெறுமா? உயிர்க்குற்றெழுத்துக்களும், உயிர்மெய்க்குற்றெழுத்துக்களும் எச்சாரியை பெறும்? மெய்யெழுத்துக்கள் எச்சாரியை பெறும்? எவ்வெழுத்துக்கள் சாரியை பெற்று வருவதில்லை? போலியெழுத்துக்கள் 37. அகரத்தோடு யகரமெய் சேர்ந்து ஐகாரம் போன்றும். அகரத்தோடு வகரமெய் சேர்ந்து ஒளகாரம், போன்றும் ஒலிக்கும். உ-ம். ஐயன் ஸ்ரீ அய்யன்; ஒளவை ஸ்ரீ அவ்வை தேர்வு வினாக்கள் -33. இரண்டெழுத்துக்கள், சேர்ந்து ஒரெழுத்தைப்போல் ஒலிப்பதுண்டோ. ஏழுத்தியல் முற்றிற்று. http://www.noolaham.net/library/books/01/68/68.htm என்ற பதிவிலிருந்து எனது தேவைக்காக மட்டும் கேள்வி பதிலாக பதிய பட்டிருக்கின்றது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கரன்
-
இலக்கணம் - எழுத்தியல்
எழுத்தியல் 1. இலக்கண நூலாவதியாது? உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்கும் கருவியாகிய நூலாகும் 2. அந்நூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும் எலுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்று அதிகாரங்களாக வகுக்கப்படும். 3. எழுத்தாவது யாது? எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம் 4. அவ்வெழுத்து எத்தனை வகைப்படும்? உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும். 5.உயிரெழுத்துக்கள் எவை? அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள 6. உயிரெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும் 7.குற்றெழுத்துக்கள் எவை? அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும். 8. நெட்டெழுத்துக்கள் எவை? ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும். 9. மெய்யெழுத்துக்கள் எவை? க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும். இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும். 10. மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும். இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும். 11. வல்லெழுத்துக்கள் எவை? க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம். இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும். 12.மெல்லெழுத்துக்கள் எவை? ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம். இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும். 13. இடையெழுத்துக்கள் எவை? ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம். இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும். 14. சுட்டெழுத்துக்கள் எவை? அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம் 15. வினாவெழுத்துக்கள் எவை? எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம். உ-ம். எவன், எக்கொற்றன் கொற்றான, கொற்றனோ ஏவன், கொற்றனே யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம் 16. எந்தெந்த வெழுத்துக்கு எந்தெந்தவெழுத்து இனவெழுத்தாகும்? அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும். ஓரினமாகும்; அவை இவ்விரண்டோரினமாகாவாம் 17. உயிர்மெய்யெழுத்துக்கள் எவை? புன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம். அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம். உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணுாறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு. உயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு. 18. உயிர்மெய் குற்றெழுத்து எத்தனை? ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும். உ-ம். எஃகு, கஃசு, அஃது, பஃறி 19. ஆகத் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கும் எழுத்துக்கள் எத்தனை? மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க. http://www.noolaham.net/library/books/01/68/68.htm என்ற பதிவிலிருந்து எனது தேவைக்காக மட்டும் கேள்வி பதிலாக பதிய பட்டிருக்கின்றது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் சகானா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மாப்பிள்ளைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்- கார்த்திகைப் பூ - Flame lilly
நன்றி பிச்சுமணி சார் உங்கள் பதிவுக்குக்கும் பார்வையிடலுக்கும்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யோவ் சின்னப்பு சார் இதென்ன எனக்கு பிறந்தநாள் எண்டு ஏண் புரளியை கிளப்பிவிட்டிங்க. நல்லாத்தான் போட்டு விட்டு புலம்புறிங்க- தேசியப் பறவையாக செண்பகம்
தேசியப் பறவையாக செண்பகம் செண்பகம்- Centropus sinensis தமிழீழத் தேசியப் பறவை செம்பகம்.பறவைகளைப் பொறுத்தவரை அதிக பறப்புத்திறன் கொண்ட பறவைகளுக்கு பெரும்பாலும் ஒரு மண்ணுக்குரிய தனித்துவ பூர்வீர்கத் தன்மை கிடையாது. சில பறவைகள் நீண்டகாலத்துக்கு ஒரு தடவை புலம்பெயரும். பறப்புத்திறன் குறைந்த பறவைகள் இந்த புலப் பெயர்ச்சிக்குப்படுவதில்லை. இதனால் பறப்புத்திறன் குறைந்த பறவைகளே ஒரு மண்ணுக்குரிய மரபுரிமைச் சொத்துக்களாகின்றன. உலகின் அதிகமான நாடுகளின் தேசியப் பறவைகளாக பறப்புத் திறன் குறைந்த பறவைகளே இருக்கின்றன. நமது தாயகத்தில் காடை, கௌதாரி, செண்பகம், புளினி, காட்டுக்கோழி, மயில் என்பன உலகின் பலபகுதிகளிலும் உள்ளன. இனக்கூற்று அடிப்படையில் இவற்றில் நமது தாயகத்திற்குரிய தனித்துவ அம்சங்கள் குறைவாகவே உள்ளன. இந்த வகையில் தமிழர் தாயகத்தில் பறப்புத்திறன் குறைந்த மரபுரிமைச் சொத்துதாக உள்ள பறவைகளில் தனித்துவ அம்சங்கள் நிறைந்த செண்பகம் தேசியப் பறவையாகப் பிரகடனப்படுத்தப்படுள்ளது. செண்பகம் பொதுவாக ஆங்கிலத்தில் கிறேற்றர் கூகல் அல்லது குறோ பீசன்ற் என அழைக்கப்படுகின்றன. நமது தாயகத்திலும், இந்தியா, சீனா, ஆகிய நாடுகளிலும் இதன் இனங்கள் வாழ்கின்றன. கறுப்பு உடலையும் காவிநிற செட்டைகளையும் கொண்ட செண்பகம் காகத்தை விட சற்றுப் பெரியது. நமது சூழலில் இவை தத்தித் தத்தி திரிவதை நாம் காணலாம். இது உலர்வலயப் பகுதிகளில் தான் அதிகம் உள்ளது. மெதுவாக நடையும், தத்தித் தத்தித் பாய்தலும் இதன் தினத்துவ செயற்பாடுகள். பற்றைகள், சிறுமரங்களின், கீழ்ப்பகுதிகள் இதன் வாழிடங்கள். நத்தைகள், பூச்சிகள், அட்டைகள், தவளைகள், பாம்புகள், ஓணான்கள் செம்பகத்தின் உணவுகள் ஆகும். பிற பறவைகளின் கூடுகளில் இடப்பட்ட முட்டைகளையும் செண்பகம் உண்ணும். செம்பகத்தின் வேட்கைக்காலம் பெப்ரவரியில் இருந்து செப்டம்பர் வரையாகும். இது தொடர்ந்து 3 முதல் 4 வரையான முட்டைகளை இட்டு அடைகாக்கும். இதன் உயிரியல் பெயர் சென்ரோபஸ் சினென்சிஸ் (Centropus sinensis)- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் கொன்டாடிய யாழ்பாடி மற்றும் ஈழவன் ஆகியோருக்கு எனது வாழத்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் கொண்டாடும் யமுனாவுக்கு வாழ்த்துக்கள்- தேசிய மரரமாக வாகை மரம்
வாகைமரம். தமிழீழத்தின் தேசிய மரம். தமிழர் தாயகத்தின் மரபுரிமைச்சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத்தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது. சங்க கால மரபின் மூலம் வாகை எந்தளவுக்கு தமிழருடன் இணைந்து வந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். வாகையில் பல வகைகள் உள்ளன. தமிழர் தாயகத்தில் பூர்விகத்தன்மையாக உள்ளது இயவாகை என்பதாகும். இதன் வேறு இனங்கள் பல நாடுகளிலும் உள்ளன. வாகை ஆங்கிலத்தில் சிரிஸ்ஸா என்று அழைக்கப்படுகிறது. லத்தினில் வாகை "மமோசா பிளெக்சூஸா" (Mimosa Flexuosa). என்று அழைக்ப்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர் albizza odaritissma. வாகையின் பகுதிகள் சித்த மருத்துவத்திலும் பயன்படுகின்றது. தாவரவியல் ரீதியாக வாகை மரத்தின் பதிவைத் தருகின்றோம். Leguminosae (Mimisoideae) தாவரவியல்க் குடும்பத்தைச் சேர்ந்தது வாகை. இது ஆகக் கூடியது 25 மீற்றர்கள் உயரத்துக்கு வளரும். கிளைகள் அகலப்பரந்து ஒரு குடைபோல ஆகும். தென்ஆசியப்பிராந்தியம் தான்வாகையின் பூர்வீகம். இது உலர்வலயத்துக்குரிய தாவரம் என்பதால் இந்தியாவில் தமிழகமும் இலங்கையில் தமிழீழமும் அதன் மரபுரிமை வாழிடமாகிவிட்டது. ஆண்டுச்சராசரியாக இதற்கு 800 முதல் 1000 மில்லிமீற்றர் வரையான மழை தேவையானது. வாகை வாழ்வதற்குரிய மண்ணுக்கு 6க்குக் கூடிய பி.எச் (pH) பெறுமான அமிலத்தன்மை தேவை. இது விதை மூலமும், தண்டுகள் மூலமும் பெருக்கம் செய்யப்படும். விதைகள் விரைவாக முளைக்கச் செய்ய 24 மணி நேரம் அவற்றை சுடுநீரில் போட்டுவைக்க வேண்டும். இதன் பிரதான எதிரி மயிர்கொட்டிழுப்புக்கள். அவை இதன் இலைகளை அரித்து உண்டு பாதிப்பை ஏற்படுத்தும். வாகை விறகுக்காக பண்ணையாக வளர்க்கப்படும் தாவரமாகவும் இருக்கிறது.- சிறுத்தை
தேசிய விலங்காக சிறுத்தை சிங்கள தேசத்தில் அம்பாந்தோட்டையின் யால, அநுராதபுரத்தின் வில்பத்து வனவிலங்குச் சரணாலயங்களில் தான் சிறுத்தைகள் உள்ளன. கனடியச் சிறுத்தை ஆய்வுக்குழு ஒன்று இலங்கைக்கு வந்து இலங்கையில் உள்ள சிறுத்தைகள் உலகின் சிறுத்தை இனங்களில் தனித்துவமானவை. இதுவே இலங்கையின் தேசிய விலங்காக இருக்க வேண்டும் எனக்கூறிச் சென்றார். தமிழர் தாயகப் பகுதியிலேயே சிறுத்தை அதிகம் உண்டு. இந்த சிறுத்தை மஞ்சள் உடலில் கறுப்புப் புள்ளிகளைக் கொண்டது. பூனை இன பெரிய விலங்குளான சிங்கம், புலி போல அல்லாமல் சிறுத்தை தங்க என்று குறித்த இடமும் தேவையில்லை. பாறை, குன்று அல்லது ஒரு திட்டோ, பள்ளமோ, பற்றையோ, மரமோ எங்கும் ஒரு சிறு இடம் சிறுத்தைக்குப் போதும். தமிழர் தாயகக் காட்டுச் சிறுத்தை சிறயமான், குரங்கு மயில், காட்டுக்கோழி, முள்ளம், பன்றி, முயல் என்பனவற்றை வேட்டையாடிச் சாப்பிடும். இந்தச் சிறுத்தை மூக்குநுனி தொடக்கம் வால் நுனி வரையான நீளம் ஐந்தரை அடி. ஆகக்கூடியதாக 8 அடி நீளமான சிறுத்தைகளும் உள்ளன. நிறை 100 கிலோ வரைக்கும் இருக்கும். சிறுத்தைக்குரிய உயிரியல் பெயர் பாந்ரா பார்டஸ் கொட்டியா (pathera pardus kotiya). புலிக்குரிய சிங்களப் பெயர் தான் கொட்டியா. இலங்கை சிறுத்தைக்குரிய உயிரியல் பெயரிடலில் சிங்கள அறிஞர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததலால் கொட்டியா என்பது இறுதியில் வந்துவிட்டது. புலி, சிங்கம் பதுங்கிப் பாய்ந்துதான் பிராணிகளை வேட்டையாடும். ஆனால் சிறுத்தை என்ன செய்யும் என்றால், அது பிராணிகளை வேகமாகத் துரத்திச் சென்று வேட்டையாடும். வேட்டைத்தந்திரம் சிறுத்தைக்குத் தான் கூட இருக்கின்றது என்றும் சிறுத்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சிறுத்தை 25, 30 கிலோ கொண்ட பிராணிகளை வேட்டையாடி அதை இழுத்துத் தூக்கிக் கொண்டு 8 அடி உயர பாறையிலும் ஏறும் வல்லமை கொண்டது. சிறுத்தைக்கு ஒடுங்கிய அல்லது மெல்லிய நீண்ட உடல் இருப்பாதால் வேகமாகச் சுழுன்று திரும்புதல், பாய்தல், ஓடி வேட்டையாடதுல் என்பன அதன் திறனாகும். தமிழர் தாயகக் காட்டுகதாநயாகன் தான் சிறுத்தை. இதற்குத் துல்லியமான கேட்டல் திறமை, கூர்மையான பார்வைப்புலன் உண்டு. சிறுத்தையின் வண்ணம் காரணமாக இங்குள்ள வரண்ட காடுகள் அதற்கு நல்ல உருமறைப்பு. அதனால் சிறுத்தையைக் காடுகளில் இலேசாகத் தனித்துப் பார்க்கமுடியாது. அதோடு சிறுத்தை அதிகம் கர்ச்சிக்காது. மிக அரிதாக அடித்தொண்டையால் உறுமும், அவ்வளவும் தான். இங்கு வன்னியில் "சருகுபுலி" என்று சிறய காட்டுப்பூனையைக் காட்டுவார்கள். ஆனால் சருகுப்புலி என்று சிறுத்தைத்தான் குறிப்பிடப்படுகின்றது. தமிழர் தாயகத்திலோ சிங்களத் தேசத்திலோ காட்டுப்புலி இல்லை. அது இந்தியாவில் தான் இருக்கிறது. புலி இந்தியாவின் தேசிய விலங்கு. சிறுத்தை பெலிடே என்ற விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தது. இங்கு இருக்கின்ற தேசியத்தன்னைம வாய்ந்த தனித்துவ விலங்கு சிறுத்தை தான். சிறுத்தையை ஆங்கிலத்தில் பெலிபேட் என்று அழைப்பார்கள். சிறுத்தையின் வேறு இனங்கள் உலகத்தின் வேறு நாடுகளில் வாழ்கின்றன. பாந்தர், சீற்றா என்ற இனங்களில் எல்லாம் உலகத்தில் சிறுத்தைகள் இருக்கின்றன. அவற்றைவிட இங்குள்ள காட்டுச்சிறுத்தைகள் தனித்துவமானவை. உலகத்தில் மிக அருகி வரும் விலங்கு சிறுத்தை. தமிழர்தாயகத்தேசிய விலங்காக இருக்கின்ற பாந்ரா பாடஸ் கொட்டியா இன சிறுத்தையும் உலகின் முழுதாக அழியும் தறுவாயில் இருக்கின்ற மிக அரிதான விலங்கு. இதனை வேட்டையாடாமல் அழிக்காமல் பாதுகாக்கவேண்டும். வேட்டைக்காரர்கள் பல்லுக்காகவும் தோலுக்காகவும் சிறுத்தையை வேட்டையாடுவார்கள். உணவுச்சங்கிலியில் மோசமான பாதிப்பு வரும். இந்த சிறுத்தை தமிழரின் தொன்மை சங்க இலக்கியங்களிலும் வருகின்றது. அதுவே தமிழீழத்தின் தேசிய விலங்ககாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அட நம்ம தூயவன் அறிஞர் அருளிய தத்துவங்கள் எல்லாமே மப்பில் கொட்டியதா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்து சொல்லும் சந்தோசத்தில் கதிரையில் இருந்து தல சார் தலை குப்புற விழப்போரிங்களே- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இதை இரண்டு விதமாக விளங்கிக் கொள்ளலாம் மதன் சார் செந்திலை விட நல்லா கறுப்பாயுரூக்கனும் அல்லது செந்திலை விட வெள்ளையாயிருக்கனும்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மதன் சாரை விட்டுக் கொடுக்காமல் கதைக்கிறீங்கள் அது சரி நீங்க ஜெயம் ரவி போல்தான் இருக்கிறிங்களா தூயவன் சார் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதன்.- கார்த்திகைப் பூ - Flame lilly
நன்றி குமாரசாமி சார் வந்து பார்த்ததுக்கு- கார்த்திகைப் பூ - Flame lilly
கார்த்திகைப் பூ - Flame lilly தமிழீழத்தின் தேசியப்பூ. இது கார்த்திகை மாதத்தில் பூப்பதன் காரணத்தால் இந்த பெயர் பயன் பாட்டில் உள்ளது. சங்க இலக்கியங்களில் இது காந்தள் எனக்குறிப்பிடப்படுகின்றுது. ஆங்கிலத்தில் இது Flame lilly என அழைக்கப்படுகின்றது. இதன் பூர்விகம் ஆசியா, ஆபிரிக்க கண்டங்களின் உலர் பிரதேசம். தாவரவியலில் நமது கார்த்திகைப்பூ குளோரியேஸா சுப்பேபா (gloriosa superba) எனப்படுகின்றது. கார்த்திகைப்பூவில் gloriosa superba, carsonii, simplex verschuuriஆகிய 4 வகைகள் உள்ளன. எம் தேசியப்பூ gloriosa superbaஎன்ற இனமாகும். கார்த்திகைப்பூ கொடியில் பூக்கும் மலர். ஆங்கிலத்தில் இதன் பெயர் gloriosa என வருவதற்கு gloriosu, என்ற சொல் அடிப்படையாகும். இதன் பொருள் மிக அழகானது என்பதாகும். Superba என்பது மிகவும் அழகான என்ற மேன்மையைக் குறிக்கவாக வைக்கப்பட்டது. கிழங்கில் இருந்து குறித்த காலத்தில் மட்டும் முளைத்துப் பூத்து பின் மடிந்து நிலத்தின் கீழ் கிழங்கில் மட்டும் உயிர்வாழும் செடியும் பூவும்தான் கார்த்திகைப்பூ. அதன் உயிர்வாழ்வு விழவிழ எழுதல் என்ற பொருளையும் கொள்கிறதல்லவா. இதன் வாழ்வுக்காலம் நவம்பர் முதல் மார்ச் வரையாகும் செப்டம்பரில் நிலத்தின் கீழ் உள்ள கிழங்கு முளைக்கத் தொடங்கும். நவம்பர் பூக்கும். நேரடியாக சூரியனை எதிர்கொண்டதாக இல்லாமல் பற்றைகளின் நிழலில் படரும் கொடி இது. இதற்கு சதுப்பு நிலம் தேவை. தமிழர் தாயகம் உள்ளிட்ட இலங்கைத்தீவு, இந்தியா, ஆபிரிக்க நாடுகளான Cape coast, Natal, Swaziland, Northern Province, Botswana, Nambia and Zimbabweஆகிய வற்றில் இந்த வகை கார்த்திகைப்பூச்செடி வாழ்கின்றது. உலகளவில் கார்த்திகைப்பூச் செடி மருத்துவ இரசாயனத் தேவைகளுக்காக பண்ணையாக வளர்க்கப்படுகின்றது. பழங்குடிகள் பாரம்பரிய மருத்துவத்தில் தோல் வியாதி, புளுவியாதி போன்றவற்றுக்கு கார்த்திகைச்செடியைப் பயன்படுத்துகின்றனர். இரசாயனப்பகுப்பில் கார்த்திகைச்செடியின் சகல பகுதிகளிலும் நச்சுத்தன்மை இருக்கின்றது. கார்த்திகைச்செடி உடலுக்குள் சென்றால் மயக்கம் ஏற்படும். உயிராபத்தும் ஏற்படும். ஆனால் மருத்துவத்தில் இது பயன்படுகின்றது. கார்த்திகைச்செடி 1.8 மீற்றர் தொடக்கம் 2.4 மீற்றர் வரை வளரும். இதன் வாழ்வுக்கு 15 பாகை செல்சியஸ் முதல் 30 பாகை செல்சியஸ் வரை சூழல் வெப்பம் இருக்க வேண்டும். பூக்கள் செழுமையாக இருக்க வளிமண்டல ஈரப்பதன் அதிகமாக இருக்க வேண்டும். சராசரி அமிலத்தன்மையுடைய ஈரமான மண் இதன் வாழ்வுக்குத் தேவை. செடி இறந்ததும் இதன் கிழங்கு மண்ணின் கீழ் வாழ்வதற்கு 20-25 பாகை செல்சியஸ் வெப்பம் தேவை. இதிலிருக்கும் நச்சுப்பொருள் alkaloid colchicineஆகும். gloriosine என்ற நச்சுப்பொருளும் இதில் உள்ளது .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்.தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்ததின வாழ்த்துக்கள் ரமா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
போதுமய்யா உம்மட இம்சை - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.