Everything posted by இசைக்கலைஞன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அதிகாலையில் படம்: கல்யாண காலம் (1982) பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசை: சங்கர்-கணேஷ் தற்செயலாக ஒரு தேடலின்போது இந்தப்பபடல் அகப்பட்டது. பலநாட்களுக்கு முன்னர் ஈழத்தில் கேட்ட பாடல். பழைய நினைவுகளைத் தூண்டியது.
-
நகைச்சுவைக் காட்சிகள்
நல்ல நகைச்சுவை நுணா.. எனக்குப் பிடித்த விவேக்கின் நகைச்சுவைகளில் இதுவும் ஒன்று. கையைப் பிடிச்சு இழுத்தியாடா..!
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: மாலை மலர் படம்: அக்கா (1976) இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்கள்: திரு. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் அவர்கள் பாலசுப்ரமணியம் அவர்களின் பழைய பாடல்களில் எனக்கு பிடித்த ஒன்று. ஆரம்பத்தில் வரும் அவரின் ஆலாபனை மிக அற்புதம்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நீ என்னென்ன படம்: நேற்று இன்று நாளை பாடியவர்கள்: T.M. சௌந்தரராஜன் மற்றும் P.சுசீலா சின்னஞ் சிறுமலர் பனியினில் நனைந்து என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து முத்துச் சரமென குறுநகை புரிந்து... ஆஹா... கவி என்றால் இது கவி..! எம்.எஸ்.வீ யின் இசையில் T.M.S. அவர்களின் கணீர் குரலிலும், உச்சரிப்பிலும் கேட்கும்போது.. அடடா.. நன்றி.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஆகாயம் பூமி படம்: சாமந்திப்பூ (1980) பாடியவர்: மலேசியா வாசுதேவன் இசை: மலேசியா வாசுதேவன் தற்செயலாக இந்தப்பாடலைப் பிடித்தேன்.. மலேசியா வாசுதேவன் அவர்களின் இசையில் குறைந்த அளவே படங்கள் வந்திருந்தாலும் அவருடைய பெரும்பாலான பாடல்கள் மிக இனிமையானவை. பலருக்கு மலேசியா வாசுதேவன் அவர்கள் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பதே தெரிவதில்லை. ஒரு நல்ல இசைக் கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அங்கீகாரம் இவருக்குக் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்தப்பாடலைக் கேட்டுப் பாருங்கள். இதில் இல்லாத இனிமையா..! உருக்கமா..!
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நுணாவிலான், மேலேயுள்ள பாடல் கீழே வேறு வடிவமாக..!
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: புத்தம் புது ஓலை வரும் படம்: வேதம் புதிது இசை: தேவேந்திரன் பாடியவர்: சின்னக்குயில் சித்ரா இனிய பாடல்.
-
நகைச்சுவைக் காட்சிகள்
சூனா பானா.. வடிவேலு..
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலு - விவேக் கூட்டணி.. (2)
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலு - விவேக் கூட்டணி..
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
கதை?!! சரி, மிக் திரும்பி வந்துவிட்டதற்கான ஆதாரம் என்னவோ? பெர்னாண்டோபுள்ளே மேலே ஏறி நிக்கிறமாதிரி ஒரு போட்டோவையாவது அரசு பிரசுரித்திருக்கலாமே.
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
நெடுக்ஸ் ஒரு சாதாரண தமிழனின் உதாரண விம்பம். மற்றவர்கள் தன்னையோ அல்லது தன் இனத்தையோ கேவலமாகப் பேசும் முன்னமே தானாகவே முன்வந்து பேசி விடுவது இவர்கள் வழக்கம். இதன்மூலம் மற்றவர்கள் இழிவாகப் பேசுவதைக் குறைக்க முற்படுகின்றனர். மற்ற இனத்தவருக்கு கூழைக்கும்பிடு போட்டுவிடுவதும் இவர்களின் ஒரு சிறப்பு அம்சம். புலிகளின் முதல் வான்தாக்குதல் சரிவரவில்லையென்று அவுஸ்திரேலியாவில் பல தமிழர்களும் பேசியதாக யாரோ ஒரு உறுப்பினர் எழுதியிருந்தார். அதுவும் இவ்வகையைச் சேர்ந்ததே. இதே சிங்களவன் புளுகு மூட்டை அரசாங்கம் சொல்வதை நம்புறானோ இல்லையோ, புலி சொல்வதை நம்பமாட்டான். ஆனால் நாங்கள் அப்பிடியா..? தமிழனெண்டால் என்ன சும்மாவா..!
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
இப்ப அங்கே விடிஞ்சிருக்கும்தானே! செய்தி ஒன்றையும் காணேல்லையே?