Jump to content

இசைக்கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  22123
 • Joined

 • Last visited

 • Days Won

  63

Everything posted by இசைக்கலைஞன்

 1. இந்த ஆளை வைத்து மேற்கு நாடுகளில் கடன் வாங்க திட்டமிடப்படுது.
 2. திராவிடம் எனும் பெயரை etymology படி ஆராய்ந்து போனால், தென்னகத்து பிராமணரை குறிக்கும் வட மொழிச் சொல் என்பதில் போய் முடியும். அதை ஏன் அரசியலில் கொண்டு வந்து ஆரிய எதிர்ப்பாக கட்டி எழுப்பினார்கள் என்று பார்த்தால். அதுவும் ஆதிக்க மனப்பான்மை என்பதில் வந்து முடியும். - தமிழரை பீரங்கி கொண்டு அடிமைப் படுத்தியது வெள்ளை இன ஆதிக்கம். - இந்தியம் என அடிமைப்படுத்தியது ஆரிய ஆதிக்கம். - திராவிடம் என அடிமைப்படுத்தியது வடுக ஆதிக்கம். That’s all your honour !
 3. நன்றி விசுகு அண்ணா. நலமறிய ஆவல். 😃 நல்ல அரசியலுக்கான களம் ஐந்து வருடங்கள் பிற்போடப் பட்டுள்ளன என கருதுகிறேன். இந்தக் காணொளியில் 14:00 நிமிடத்தில் இருந்து பார்த்தால் தெரியும் தமிழ்நாட்டின் நிலை. முத்துக்குமார் இறந்தபோது விடுமுறை கிடைத்துவிட்டது என எண்ணும் நிலையில்தான் தமிழக இளைஞர்களில் பலர் இருந்துள்ளார்கள் (கார்த்திக் உட்பட). இன்றும் பலர் அவ்வாறே.
 4. எழுவர் விடுதலையை பற்றி சீமான் பேச ஆரம்பித்தது இவரை சிறையில் போடவும், அவர்களுடன் இவர் சிறையில் உரையாட ஆரம்பித்த பிறகும்தான். இது கடந்த பத்தாண்டுகளுக்குள் நடந்ததுதான். ஆதற்கு முன் இருபது ஆண்டுகளாக அவர்கள் சிறையில்தான் உள்ளார்கள். இயக்கங்கள் உள்ளரங்குக்குள் பேசானார்கள். மக்கள் வாழாவிருந்தார்கள். எதுவும் நடக்கவில்லை. எழுவர் விடுதலை குறித்து பேசினால் தமிழகத்தில் வாக்கு விழாது என்பதுதான் எதார்த்தமான நிலை. 2008 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். திருச்சியில் நான் தங்கியிருந்த வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர், ராஜீவ் மரணம் மட்டும் நடக்கவில்லை என்றால் தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவு அமோகமாக இருக்கும் என்றார். ஆனால் 1986 இல் இருந்து திருச்சியில் பார்த்து வருகிறேன். புலிகளின் காணொளயை vcr இல் போடுவதாக இருந்தாலும் ரகசியமாகத்தான் செய்ய வேண்டும். அப்போது எம்ஜியார் ஆட்சி. இப்படியாகத்தான் கள நிலைமை இருந்துள்ளது. இது இவ்வாறு இருக்க, சீமான் தலையிடவில்லை என்றால், அந்த எழுவரும் விடுதலையாகி வாழ்க்கை நடத்துவார்கள் என்பது உண்மையல்ல. அவர்கள் இறக்கும் வரையில் சிறையில் போட்டு வதைப்பார்கள் என்பதுதான் எனது அனுமானம். காரணம், வெளியே வந்தால் அவர்களை கட்டுப்படுத்தி வைக்க முடியாது. ஆனால் இந்த முனைப்புகளுக்கு எதிரான முனைப்பு என்பதுதானே அரசியல்.
 5. எடப்பாடி, ஜெயா எல்லோருமேதான் பார்வை அனுமதி கொடுத்தார்கள். அரசியல்வாதிகள் தமக்கு சாதகம் என்றால் அனுமதி தருவார்கள். ஆனால், அதை பயன்படுத்திக்கொண்டு ஏழுபேர் விடுதலையை முன்னுக்கு கொண்டுவருவது நல்லதுதானே? அரசியல் என்பது “யார் எதை எப்போது எவ்வாறு பெறுகிறார்கள்” என்பதே. அதற்கேற்ப நடவடிக்கை மற்றும் எதிர் நடவடிக்கை செய்வதுதான் அரசியலின் இயங்குதளம். சீமானின் கையசைவுகள் பிரபலம் ஆகும் காரணம் என்பது, எதிராளிகளின் கடுமையான ஊடக பலம் மட்டுமே. உதாரணத்துக்கு கமல் நல்ல அசத்தலாக இருப்பார். ஆனால் சிந்தனையும் தனிப்பட்ட செயல்களும் அசிங்கமாக இருக்கும். ஸ்டாலின் அந்தக் காலத்தில் பெண்களை கடத்தியவராக இருந்தாலும், ஊடக பலத்தினால் இன்று “சிறந்த முதல்வர்”. இறக்கும்வரையில் ஜெயாவும் அவ்வாறே. சீமானுக்கு எதிராக கட்டமைக்கப்படும் விம்பங்கள் உடைந்துபோக காலம் செல்லலாம். பொறுத்திருந்து காண்போம்.
 6. ஸ்டாலின் தமிழக முதல்வர். நரேந்திர மோடி இந்திய பிரதமர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (கோல்மால் நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதுதான் உண்மை. இவர்களை இந்திய குடிமக்கள் சந்திப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. சீமான் தமிழக முதல்வரை சந்தித்தாரே தவிர, திமுக தலைவரை அல்ல. 😃
 7. தமிழக அரசியலில் வளர்ச்சி கண்டுள்ள நாம் தமிழருக்கு வாழ்த்துகள்..! 👏
 8. நீங்கள் ஜெர்மனி போனதுக்கு பதிலாக மாத்தறையிலயே இருந்திருக்கலாம் 🚶🏻‍♂️🚶🏻‍♂️ தொழில் முனைவோருக்கும் (entrepreneurs), சட்டம் இயற்றுவோருக்கும் (lawmakers) வேறுபாடுகள் உண்டு.
 9. வணக்கம் கிருபன். வந்தேறி முதலாளிகள் என நான் எதுவும் சொல்லவில்லையே?! தமிழ் தேசிய முதலாளிகள் என்பவர்கள் தமிழ் தேசியத்தை நேசிப்பவர்கள் எனும் பொருளில் காண வேண்டும். நாசகார திட்டங்களுக்கு அவர்கள் துணை போக மாட்டார்கள். எனது தமிழக கல்லூரி நண்பர் மாற்று மொழி பேசுபவர். கணினித்துறையில் டாட்டா TCS இல் நல்ல பொறுப்பில் உள்ளார். அவர் இன்று பகுதி நேர தொழிலாக இயற்கை ஆட்டுப்பண்ணை வைத்து நன்றாக சம்பாதிக்கின்றார். இப்போது காலம் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனது பழைய கல்லூரி மாணவர்களை சந்தித்தபோது, யாரும் என் மீது வெறுப்பை உமிழவில்லை. நான் ஒரு தமிழ் தேசிய ஆதரவாளன் என்பது பலருக்கும் தெரியும். இணையத்திலும், கட்சி வட்டாரங்களிலும் மட்டுமே வெறுப்பை கக்குகின்றார்கள். காரணம் அரசியல் எனும் தொழில் பாதிக்கப்படுகிறது எனும் காரணம்தான்.
 10. /ஆங்கிலம், தமிழ், வரலாறு, அறிவியல், கணிதம் போன்ற அடிப்படை பாடங்கள் எவையும் கட்டாயமாக கற்பிக்க தேவையில்லை, இவற்றில் தேர்வு எழுதவும் அவசியம் இல்லை என்கிறார்./ திருட்டு சாவிக்கு இணைய தளம் காழ்ப்புணர்ச்சியில் இருந்து வெளியே வரவேண்டும்! 😁 யாராவது கணித பாடத்தை வேண்டாம் என்பார்களா?! நாம் தமிழர் சொல்வது, தனித்திறன் கல்வியை. எனக்கு உயிரியல் துறையில் ஆர்வம் என்றால், அது குறித்த கல்விதான் முதன்மைப் பாடங்கள். கணிதம், வரலாறு, புவியியல் எல்லாம் துணைப்பாடங்கள். இதைத்தான் நாம் தமிழர் வலியுறுத்துகிறது. இதை தற்போதைய மிழக கல்வித் திட்டத்தில் இருந்து நோக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் ஒரு பிரிவு உண்டு. அதில் உயிரியலும், கணிதவியலும் முதன்மைப் பாடங்கள். தேர்ச்சி பெறும் மாணவர்கள் பொறியியலுக்கும் விண்ணப்பிப்பார்கள்; மருத்துவத்துக்கும் விண்ணப்பிப்பார்கள். மருத்துவம் கிடைத்தால் பொறியியலை கைவிடுவார்கள். இதுபோன்ற அபத்தமான கல்வித் திட்டம் அங்கே உள்ளது. அதன் பொருட்டுதான் கல்விச் சீழ்திருத்தத்தை முன்மொழிகிறார்கள். இது கனடா போன்ற நாடுகளில் உள்ள திட்டம்தான்.
 11. பணம் எங்கிருந்து வரும் என கேட்டார் கிருபன். நிலையான உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர் பெறச்செய்ய கூட்டிணைவு நிறுவனங்களை உருவாக்கி தமிழ் தேசிய முதலாளிகளை உருவாக்கும் திட்டத்தை கொடுத்துள்ளார்கள். இதை போன்றதொரு நடவடிக்கை கனேடிய நடுவண் அரசினாலும் மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக Cameco Corporation யுரேனிய அகழ்வில் ஈடுபட்டுள்ளது. மேலும் உலக வங்கி போன்றவற்றின் கடன்களும் பெற்றுக் கொள்ளப்படும்.
 12. மிகவும் நல்லதொரு செய்தி. உழைத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்..!
 13. இதே ரவீந்திரன் துரைசாமி 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னம் கோடுத்த பேட்டியை கீழே இணைக்கிறேன். இதில் நாம் தமிழரை இவர் கணக்கில் கொள்ளவே இல்லை. இதுபோலவே, நம்மவர்களும் (சிலர்) வேலிக்கு வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பதும், கேலி செய்வதுமாக உள்ளனர். விடுதலை அரசியலில் காலத்தை சரியாக கணிக்கத் தெரிய வேண்டும்! குதிரை லாயத்தை விட்டு ஓடிவிட்ட பின்னால் கதவைப் பூட்டுவதில் பயனில்லை!
 14. 1) சமஸ்கிருதம்: தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்தான் கோயில்கள் உள்ளன. அங்கே ஒரு ஐயர் சமஸ்கிருத்த்தில் ஓதினால், தலைதெறிக்க வெளியே ஓடுதல் முறையல்ல. 😁 2) பெரியார் வழிகாட்டி. ஏனெனில் தமிழக உரிமைகள் சிலவற்றுக்கு குரல் கொடுத்துள்ளார். ஆனால் அதே சமயம் அவர் ஒரு வந்து ஏறிய பரம்பரையில் வந்தவர்தான். நாளடைவில், நாவற்குழியில் வந்து ஏறிய சிங்களவர் கூட வந்தேறிகள் எனவே அழைக்கப்படுவார்கள். குடிவரவாளர்களுக்கும், வந்தேறிகளுக்கும் வேறுபாடு உண்டு! 3) ச சிகலா அம்மையார் சிறைத்தண்டனை முடித்து வந்துவிட்டார். ஆகையால் அவர் சாதாரணமான ஒரு மனிதரே! அவரை சென்று சந்திப்பதில் தவறில்லை. தவறென நீங்கள் வாதாடும் பட்சத்தில், அது ஒருவகை நவீன தீண்டாமை என கருத இடமுண்டு. 4) திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதைப் பேசுவதே அருவருப்பானது. 5) தமிழ்நாட்டில் பாதி பேர் தமிழர் இல்லை என்பது எந்தக் கணக்கெடுப்பில் வந்துள்ளது?
 15. சீமான் அண்ணன் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடவில்லையே 😁 என்பது பலருக்கும் பிரச்சினையாக உள்ளது 😳 அவர் தான் அங்கு போட்டியடுவதாக சொல்லவில்லை. ஊடகங்களின் கேள்விக்கு மட்டுமே பதில் சொன்னார். ஒரு தமிழராக எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு.
 16. உங்கள் எல்லோரையும் காண்கிறேன். மகிழ்ச்சி கொள்கிறேன். ☺️ சமூக வலைத்தளங்களின் தாக்கத்தினால் நேரம் கிடைப்பதும் அரிதாக உள்ளது. இதைவிட பல நாட்கள் 16-18 மணிநேரங்கள் வேலையில் போய்விடுகிறது. எல்லாம் நன்மைக்கே!
 17. ரஜினி அரசியல் வருகையை திமுக எதிர்க்கவில்லை; அதிமுக தலைமை எதிர்க்கவில்லை. பாமக எதிர்க்கவில்லை; தேமுதிக எதிர்க்கவில்லை. ஆனால் ஆரம்பத்தில் இருந்து சமரசமின்றி எதிர்த்த ஒரே இயக்கம் நாம் தமிழர் கட்சி. ரஜினி ரசிகர்கள், அபிமானிகளின் வாக்குகளை இழப்பது குறித்து அவர்கள் கவலை கொள்ளவில்லை. இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர் ஒருவரின் கேள்வி. ரஜினி அரசியல் கட்சி தொடங்காமல் போன காரணம் நாம் தமிழர் கட்சியின் எதிர்ப்புதானாமே என கேட்கிறார்கள். அதை சீமான் அவர்கள் நயமாக மறுத்துள்ளார்கள். நக்கீரன் இணையத் தளத்தில் சென்று பார்த்தேன் சீமானின் பேட்டியின் பின்பும் ரசிகர்களின் கொந்தளிப்பு அதிகமாகவே உள்ளது. அவர்களுக்கு தெரிந்துள்ளது, சில காரணிகளுள் நாம் தமிழர் ஒரு முதன்மை காரணி என. அடுத்து வரிசையில் உள்ளவர் கமலன் 😁
 18. அது தெரிந்த விடயம்தான். இடையில் எம்பி பதவிக்கும், சட்டசபைக்கும் போட்டியிடாமல் தவிர்த்து வந்தார். காரணம் தமிழகத்தில் அவருக்கென ஒரு செல்வாக்கு இருந்தது. என்று தமிழ்தேசியம் ஆபத்தானது என பேச ஆரம்பித்தாரோ அப்போது அவரது வீழ்ச்சி நடந்து கொண்டுள்ளது என்பது உறுதி ஆயிற்று. இன்று ஒரு பதவியை பெற்றுக்கொண்டு டெல்லி சென்றுவிட்டார். காரணம் அவர் பூர்வீகமாக தமிழரல்ல என்பது இளைய தலைமுறைக்கு தெரிந்துபோனது. திமுகவின் பதவி, பணம், ஊடக பலம் இவை மட்டுமே இனி தடைக்கற்கள். காலப்போக்கில் இவை உதிர்ந்து விழப்போவது உறுதி!
 19. தமிழ்நாட்டு அரசியல் மாறி விட்டது. இதனை அறிந்துதான் வைகோ எம்பி பதவிக்கு போட்டியிட்டு டெல்லி போய்விட்டார். இன்னமும் இதில நிண்டு மினக்கட வேண்டாம். 😃
 20. கோசன்.. நீங்கள் தமிழகத்தில் யாரை அவர்களும் தமிழர்கள்தான் என்கிறீர்களோ, அவர்கள் தங்கள் வீடுகளில் தெலுங்கில்தான் கதைக்கினம். யாழில் யாரை இப்போது தெலுங்கர்கள் 😁 என்கிறீர்களோ, அவர்கள். தமிழில்தான் கதைக்கினம். ஏன் இந்த குழப்பம். 🤩 நீங்கள் காலம் பிந்தி இந்த கட்டுரையை எழுதிப் போட்டீங்கள். என்னையும் தமிழனாக ஏற்றுக்கொள் எனும் வாதம் இப்போது தமிழகத்தில் முடிந்தே போய்விட்டது. அவர்கள் தங்களை இப்போது தமிழ் பேசும் தெலுங்கர்கள் என குறிப்பிட ஆரம்பித்து விட்டார்கள். பலர் திராவிட கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு போக ஆரம்பித்துள்ளார்கள். அதிகாரம் அங்கே கிடைக்கும் எனும் நம்பிக்கையில்.
 21. நான் இந்தக் காணொளியை பார்த்தவரையில் விளங்கிக்கொண்டது.. காட்சி 1: ஒரு மேல் நடுத்தர வர்க்க மனிதர் வலுக்கட்டாயமாக விமானத்துக்கான பேருந்தில் ஏற முனைகிறார். அதை ஒரு சாதாரண ஊழியர் தடுக்கிறார். தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியாகிறது. கண்டனங்கள் எழுகின்றன. விமான நிறுவனம் வருத்தம் தெரிவிக்கிறது. காட்சி 2: ஒரு ஏழை உழவரால் உழவு இயந்திரத்திற்கான கடனை அடைக்க முடியாமல் போகிறது. வங்கி ஒன்று அடியாளை அனுப்புவதுபோல காவல்துறையை அனுப்பி அடித்து இழுத்து வருகிறது. வாழ்க்கை இயல்பு நிலையில் நகர்கிறது. நீதி என்பது யார் செய்தார்கள் என்பதிலேயே பெரிதும் தங்கியுள்ளது. என்ன செய்தார் என்பதில் அல்ல.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.