நாம் ஏன் அங்கு போய் வாழ ஆசைப்படுகிறோம் எனில் எங்கள் எல்லோரினதும் சைல்ட் ஹூட் மெமரி அங்கேயே தங்கி உள்ளது, நாம் மீண்டும் அந்த பருவத்திற்கு சென்று வர ஆசை படுகிறோம்.ஆனால் தாயகம் அதேமாதிரி எங்களின் காலத்துடன் நின்று விட்டதா எனில் இல்லை . தாயகம் எங்களால் விரும்பப்படாத பல மாற்றங்களை உள்வாங்கி அவற்றினூடே எங்களை வரவேற்கிறது.
அப்பா அம்மா அல்லது எங்களின் சகோதர சகோதரிகள் போன்ற உறவுகள் இருக்கும் வரையிலும் எங்களால் அங்கு போய் தங்கி இருக்க இயலுமானதாக இருக்க கூடும் . அவர்களின் பின்னான கால பகுதியில் தனிமை எங்களை அலைகளிக்க கூடும். பாதுகாப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த பிரச்சினைகள் கிராம பகுதிகளில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளில் முதன்மையானதாக இருக்க கூடும்