-
யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
எம்மதமும் சம்மதம் என இருப்பவருகளுக்கு பிரச்சனையில்லை, திருமணம் செய்ய நீ என் மதத்திற்கு மாறவேண்டும் என நினைப்பதாலயே இப்பிரச்சனை.
-
யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
தமிழருக்கும் சிங்களவருக்குமான கலப்பு பலகாலமாகவே இருந்துள்ளது, மரபணு ஆய்வறிக்கைகளும் அதையே கூறுகின்றன. இருவரும் பிறரது பின்புலத்தை மதித்து, விரும்பி செய்தால், இது நல்ல விடயமே.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
தவறான தகவல், பாஜக தனித்து போட்டியிட்டே தன் முதன் சட்டமன்ற தொகுதியை வென்றது, அதிமுக கூட்டணியில் முதன் பாராளுமன்ற தொகுதியை வென்றது. பின்னர் தான் திமுகவுடன் கூட்டணி. அதற்கு பிறகு கூட, திமுக, அதிமுக அல்லாது பிற கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து பாராளுமன்ற தொகுதியை வென்றுயிருக்கிறது
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
இது மிகவும் தவறான அபாயகரமான கருத்து, ஆணோ பெண்ணோ திருமண ஒப்பந்தத்தை மீறும் போது உரிய சட்ட நடவடிக்கையோ அல்ல விவாகாரத்தையோ பெற்று அவரவர் வாழ்க்கையை வாழ முயல வேண்டும். இதில் சிலருக்கு மனக்காயங்கள், பொருளாதார சங்கடங்கள் ஏற்படும் ஆனால் அதற்கு ஒருவரது உயிரை பறிப்பது பெரும் குற்றம் மற்றும் யாருக்கும் எவ்வித பயனும் ஏற்படப்போவதும் இல்லை. அப்பெண்ணின் பக்க உண்மைகளோ, நியாயமோ இனி தெரியப்போவதில்லை, உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கும் இம்மாதிரியான குற்றநடவடிக்கைகளுக்கு என்றும் ஆதவளிக்ககூடாது மாறாக கண்டிக்கப்படவேண்டும்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அர்த்தமேயில்லாமல் அல்ல, பொய் என்றால் சைமன், சைமன் என்றால் பொய்!!!
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
எந்த நாட்டவராயினும், இனத்தவராயினும், மதத்தவராயினும் மதவாதிகளின் எண்ணமும் குணமும் ஒன்றாகவே இருக்கிறது. தங்களுக்கு மட்டுமே மனமுண்டு, அது எதை பற்றி வேண்டுமானாலும் புண்படலாம், அதை புண்படாமல் பாத்துகொள்ள வேண்டியது மற்ற அனைவரது கடமையாகும். நாளை அந்த முருகனே நேரில் வந்து(அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும்போது வராதவர் இதற்கெல்லாம் வரமாட்டார், ஒருவேளை வந்து) நானே முல்லை நிலத்தில் குடிகொண்டவன், மாமிசமே எனது உணவு எண்டு சொன்னாலும், முருகன் என்னை புண்படுத்திட்டார் என ஒதுக்கிவிடுவார்கள்
-
யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துவ பீடக்கற்கை நெறியின் தமிழ் மொழி மூல கற்பித்தலை மாற்றம் செய்யக் கூடாது - ஆறு.திருமுருகன் வேண்டுகோள்
தமிழ் மூலம் கற்பித்தலை நிறுத்தக்கூடாது, ஆங்கிலத்திலும் கற்பித்தால் பிறமொழி மாணவர்களை சென்றடையும்
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
இது பெரும் அரசியல் வெற்றிப்போல் தான் தெரிகிறது, ஆனால் ஆளுனர் மீது எதுவம் எதிர் நடவடிக்கை இருக்காது, பாஜகவை அதீதமாக எதிர்த்தால் இவர்களுக்கு பாதகமாக அமையலாம்.
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
அண்ணன் பிழைக்க தெரிந்தவர் மோடி கையெழுத்தே அப்படி தான் இருக்கு😄
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
தேடிபார்த்தா ஸ்டாலினோட கையெழுத்து கோழி கிறுக்கல் மாதிரியிருக்கு, அது என்ன மொழின்னு எப்படி கண்டுபிடிச்சார்?
-
கிழவனை கண்டா வரச்சொல்லுங்க
நல்ல பாடல், எனக்கு இவரைப்பற்றி படிக்கையில் மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. மிகவும் எதார்த்தவாதியாக இருந்திருக்கிறார். இயக்கமாய் செயல்பட்டது பெரும்பலம், வாக்கரசியலில் ஈடுபட்டிருந்தால் ஒரு வேளை நீர்த்துப்போயிருக்கலாம். காலம் கடந்து வாழும் தலைவர்களில் மிகவும் தனித்துவமானரவாக இருக்கிறார்.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
பாராளுமன்றத்தில் மறைமுகமால்லாம் ஆதரவு தெரிவிக்கமுடியாது, வெளிப்படையாகத் தான் பண்ணனும். இன்னைக்கு நடந்த கூட்டத்துக்கு பாஜக அடிவருடிகள் மட்டும் தான் போகல, மத்தபடி நேரெதிர் அரசியல் செய்கிறவர்கள் கூட அவர்கள் மாநில நலன் கருதி ஒன்றுகூடியிருக்கிறார்கள்.
-
என்னை விட்டுடுங்க! இனிமேல்.. சீமான் வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பின் நடிகை பரபரப்பு வீடியோ
இதில் எந்த பங்கும் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாவது இவர் தான். தன் தாயின் வாழ்வையும் பாத்திருப்பார் அப்போதும் சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும், இனியாவது இவ்விடயத்தில் மனநிம்மதி ஏற்படட்டும். சில வாழ்வின் நிகழ்வுகள் விசித்திரமானவை தான். இவ்விடயம் இத்தோடு பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிடும், நீதிமன்றமும் இழப்பீடு கொடுக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளது, பெரிய அண்ணிக்கும் உரிய ஆதரவு இல்லை, அவர் சீமான் உறவினரிடம் பேசிய ஒலிப்பதிவில் சமாதானம் பேச தயார் நிலையில் இருப்பது போலயே பேசினார். சீமான் இவ்விடயத்தில் வீண் பேச்சு பேசாமலிருந்தாலே இது அடங்கிவிடும்.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
ஐயா வழக்கே என்னை நம்பி உறவு வைத்து ஏமாற்றிவிட்டார் என்பது தான். ஆனால் அண்ணன் முதலில் தெரியாது என்றார், பின்னர் 50 ஆயிரம் கொடுத்தேன் என்றார், பின்னர் விலைமாது என்றார், நீதிமன்றத்தில் சமரசமாய் போகிறோம் என்றார், வெளியில் சமரசத்துக்கே பேச்சில்லை என்கிறார். என்றாவது உண்மை பேசுவார் என்று நம்புவோம்.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
ஹாஹா, அண்ணன் தன் அன்பு மனைவியிடம் "மாமா கெட்டவன் இல்லடி கேடுகெட்டவன்" என கொஞ்சி குலாவி அவரே காணொளி பொது வெளியில் வெளியிடும் போது தனியா வேற போய் உங்களுக்கு பாக்கணுமா..
செவ்வியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited