Everything posted by செம்பாட்டான்
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஆள விடுங்க. ஒவ்வொரு வார்த்தையையுமா விளக்க முடியும். என்னால் இதுக்கு மேல எழுத முடியாது. இத்தோட முடிச்சுக்கிறேன். நன்றி.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஒன்றுமே இல்லை. உங்களுக்கு எதிராகக் கதைப்பது போன்று தோன்றுகிறதோ. நீங்கள் ஆரம்பித்த திரி என்பதால் அப்படித் தோன்றுகிறது போல் உள்ளது. நடந்த விடயங்களை வைத்து இதைப் புரிந்து கொள்ளப் பார்க்கிறேன். அவ்வளவே. நீங்கள் என்ன என்றால், ஏதோ உங்களுடனே தொடர்பு படுத்தி நான் கதைக்கிறேன் என்று சொல்கிறீர்கள். நான் சொல்லாத ஒன்றை, கற்பனையில் நினைக்கிறீர்கள்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
அதே தனிநபர் அறமில்லாத தன்மை மட்டுமே காரணமில்லை என்பதைத்தான் சொல்கிறேன். அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப் படவேண்டியவர்களே. நான் இந்த வங்குரோத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளப் பார்க்கிறேன். ஆனால், அதை எப்படிச் சொன்னாலும், மீண்டும் மீண்டும் சஞ்சீவும் மனைவியுமே காரணம் என்று இங்கு ஓடிக் கொண்டிருக்கு.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இல்லைங்க. தனி நபர் மட்டுமே தங்கள் தவணையைக் கட்டாமல் விட்டிருந்தால் 2008 இவ்வளவு மோசமாக ஆகியிருக்காது. இவ்வளவு இலகுவாக அதை யோசிக்க முடியாது. இதையும் கொண்டு போய் சஞ்சீவோட தொடுத்து விட்டியலே. எப்பிடீங்க. எல்லாமே சமாந்தரமாக முடியாதே. எல்லா வர்த்தக பித்தலாட்டங்களும் ஒன்று அல்லவே. எல்லாத்தையும், பெட்டிக்கடை கணக்கு வழக்காக, இலகுவாகப் புரிந்து கொள்ள முடியாது (நான் முன்னரே சொன்னது). எமக்கு அறிவு இருக்கு, இது கூடப் புரியவில்லை என்று இதை அணுக முடியாது என்றே நினைக்கிறேன். இப்போது பார்க்கும் போது, புரிவது போல்தான் இருக்கும். சஞ்சீவ் விவகாரம், அவ்வளவு இலகுவானதாகத் தெரியவில்லை. களவு நடந்திருக்கிறது என்பது ஒன்றுதான் நமக்குத் தெரியும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வாத்தியாரின் குசும்பு
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
வீடு வாங்கியோர் ஒரு பொறிதான். அவர்களின் பங்களிப்பு 10% என்றால், மிகுதி 90% காரணமானவர்கள் வர்த்தக நிறுவனங்களே. அவர்களின் அதீத பேராசைதான் எல்லாத்துக்கும் மூலகாரணம். அத்தோடு, அரசின் கட்டுப்பாடுகள். இப்போது இருப்பது போன்ற கட்டுப்பாடுகள் அப்போது இருந்திருந்தால், இவ்வளவு மோசமாக ஆகியிருக்காது. என்ன இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் வந்ததே 2008 பொருளாதார வீழ்ச்சியினால் தான். அரசுகள் எப்போதும், ஒன்று நடந்தாப் பிறகுதானே சட்டம் போடுறவை. உண்மையில், யார் நிறைய வீடுகளை வாங்கியது என்று நினைக்கிறீர்கள். அதே வர்த்தக நிறுவனங்களே. நீங்களோ நானோ அல்ல. இப்படி சாதாரணமாக, நம் போன்றவர்களைக் கை காட்டி விட முடியாது. Big Short என்ற படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
போன கிழமை எங்கேயோ T20 விளையாடிக் கொண்டு இருந்தவா. இப்போ உலகக் கிண்ண வெற்றியாளர். அதிரடிக்குப் பெயர் போன ஆள். ஆனால் என்ன, தொடர்ச்சியான பெறுபெறு இல்லை. இனியாவது அணியில் ஒரு நிரந்தர இடம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நேரம் இருந்தால், இந்த கலந்துரையாடலைக் கேட்டுப் பாருங்கள். பந்து வீச்சாளர்களைப் பற்றி அருமையாகக் கதைச்சிருக்கினம். எப்படி எல்லா பந்து வீச்சாளர்களும் தங்களின் பங்களிப்பைக் கொடுத்தார்கள். விக்கட் எடுத்தால்தான் பங்களிப்பதில்லை. https://www.youtube.com/watch?v=gPT8O1duVUc
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பார்த்தது காணாது போல 😁. அவ மட்டும்தான் எப்போதும் பொட்டுடன். பொட்டு வைத்த எங்கள் தங்கம். நேற்றுப் போட்டு உருட்டிவிட்டாவே
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அத்தோடு, யாழ் களப் போட்டிகளில் முதல் ஜந்துக்குள் மூன்றுதரம் வந்துள்ளேன். ICC சாம்பியன் கிண்ணம் - இந்தியா - இரண்டாம் இடம். முதல் ஜவரும் ஒரே புள்ளிகள் IPL - RCB - நான்காம் இடம் ICC டெஸ்ட் உலக வெற்றிக் கிண்ணம் - தென்னாபிரிக்கா - ஒன்பதாம் இடம் ICC மகளிர் உலகக் கிண்ணம் - இந்தியா - மூன்றாம் இடம்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தீப்தி எப்போதும் பொட்டு வைச்சுக்கொண்டுதான் விளையாடுவா. உண்மையிலேயே பார்க்க நல்லாயிருக்கும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பங்குபற்றிய நான்கு யாழ் களப் போட்டிகளிலும் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணித்துள்ளேன். ICC சாம்பியன் கிண்ணம் - இந்தியா IPL - RCB ICC டெஸ்ட் உலக வெற்றிக் கிண்ணம் - தென்னாபிரிக்கா ICC மகளிர் உலகக் கிண்ணம் - இந்தியா
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
முதல் மூன்றில் வந்ததில் மகிழ்ச்சி. அதுவும் மழையுடன் விளையாட்டு. தொடர் நன்றாகவே போனது. போட்டியை நடாத்திய கந்தப்புவுக்கு நன்றி.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இன்னும் இரண்டு கேள்விகள். இரண்டுக்கும் சரியாகப் பதில் அளித்துள்ளேன். ஆதலினால்......❤️🔥
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மகிழ்ச்சி.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எப்போதும் நடக்கிறதுதானே. நாம் ஒன்று நினைக்க மாறி நடப்பதுதானே அதிகம். அதுக்கும் ஏதேன் கோட்பாடுகள் இருக்கோ தெரியாது. அதுவும் விளையாட்டில் மிக அதிகம். விளையாட்டில் எதுவும் நடக்கலாம் என்று வடிவாகத் தெரியும். ஆனாலும் நாம் விரும்பிய அணி எப்போதும் வெல்லவேணும் என்றுதானே நினைப்போம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அந்த உத்வேகம்தானே விளையாட்டு தரும் போதை. இப்பிடி எத்தினை போட்டியைப் பார்த்திருக்கிறம். அலாரம் வைச்சு எழும்பி, வீட்டில திட்டுவாங்கி, ஒரு வேலை சொன்னா செய்யேலாது, விளையாட்டு பாக்கமட்டும் எழும்பிறது என்று எல்லாம் சொல்லக் கேட்டு கேட்டு......
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இவ்வளவு காலமாக, அவுஸ்ரேலிய மகளிரின் ஆதிக்கத்தைப் பார்த்து பார்த்து, ஒரு பொறாமையே வரும். எப்படி இந்தப் பெண்கள் இப்பிடி விளையாடுகிறார்கள். நம் பெண்கள் அந்த நிலைக்கு வருவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் யோசித்திருக்கிறேன். அதுவும் எங்கள் நாடுகள் போன்று பெண்களை சமமாக நடத்தாத இடங்களில், அவர்களுக்குத் தகுந்த வசதிகளை குடுக்காத இடத்தில் இருந்து எல்லாவற்றையும் தகர்த்து, இந்தியப் பெண்கள் சாதித்தது ஒரு பெரும் பாய்ச்சல். அவர்களும் நன்றாக விளையாடத்தொடங்கி கன காலம் ஆகிவிட்டது. ஆனாலும் அவுஸ்ரேலியாவை முந்த முடியவில்லு. 2025ம் ஆண்டு எல்லாவற்றையும் மாற்றி விட்டது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியாவின் இந்த வெற்றி மகளிர் கிரிக்கட்டை எங்கேயோ கொண்டு போகப்போகுது. முதலாவது T20 உலகக் கோப்பையில் ஆண்கள் அணி பெற்ற வெற்றியுடன்தான் IPL பிறந்தது. அதன் பின், எப்படி கிரிக்கட் மாறியது என்று கண்கூடாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். மகளிர் போட்டிகள் அடுத்த தரத்துக்கு, கட்டத்துக்கு காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கனபேர் போட்டியைப் பார்த்திருக்கிறீர்கள். மகளிர் கிரிக்கட்டுக்கு இவ்வளவு ஆர்வம் உள்ளது. மகிழ்ச்சி.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எங்கள் பொட்டு வைச்ச தங்கம் தீப்தி
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஈழப்பிரியனுக்காக லோரா தனியாளாக இரண்டில்லை, ஆறு விக்கட் எடுக்கனும்😁
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நல்ல தொடக்கம் இந்தியாவுக்கு. நேர் கோட்டில பந்து வருது. கொஞ்சம் வேகமாப் போட்டால், பந்து அப்பிடியே உள்ள திரும்பும். 4 பரிமாற்றங்களில் 12 ஓட்டங்கள். இப்போ ஒரு விக்கட் லிழுந்தா நல்லாயிருக்குமே.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
298 உடன் முடித்துக் கொண்டார்கள். தென்னாபிரிக்கா துரத்த முடிவெடுத்தவை. என்ன செய்யப் போகிறார்கள். லோராவும் நாடீனும் போட்டியை மாற்றக் கூடியவர்கள். இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர்கள் தங்கள் வேலையைக் காட்டவேண்டியதுதான்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எங்கள் பொட்டு வைச்ச தங்கம் தீப்தி சர்மா அரைச்சதம்.