Everything posted by செம்பாட்டான்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மழை தன் வேலையைக் காட்டிவிட்டது. போட்டி முடிவில்லாமல் முடிந்துவிட்டது.
-
சிறுகதை: வேம்பின் நிழல்போல... - ஶ்ரீரஞ்சனி
Adolescence என்று ஒரு தொடர் Netflix ல இருக்கிறது. உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட தொடர். நன்றாக எடுக்கப்பட்ட தொடர். பல விருதுகளையும் வென்றிருக்கிறது. இந்தக் கதையும் அதே சம்பவத்தைத்தான் கதைக்கிறது. எம்சமூகத்தைச் சேர்த்து இந்தக் கதை பேசுவது சிறப்பு.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
31 பந்து பரிமாற்றங்களுடன் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது. இங்கிலாந்து ஆடி முடித்துவிட்டார்கள். 9 விக்கட் இழப்பிற்கு 133 ஓட்டங்களைப் பெற்றார்கள். ஆனால், பாக்கிஸ்தான் 113 ஓட்டங்களை மட்டும் பெற்றால் வெற்றி. டக்வத் லூயிஸ் முறையில், மறுபரிசீலனை செய்யப்பட்ட ஓட்டங்கள். அதிக விக்கட் இழப்பினால், ஓட்ட எண்ணிக்கை குறைந்தது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கணக்க நாம போடுவோம். பாசா பெயிலா என்று மழை சொல்லும். 🤣
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இலங்கைக்கு இன்னும் 3 போட்டி இருக்கு. இலங்கை அந்த 3யும் வென்று, தென்னாபிரிக்கா, மீதமிருக்கும் தங்கள் 3 போட்டியையும் தோத்தால், இலங்கை அரை இறுதிக்குப் போகும். எப்பிடி நம்ம கணக்கு. எவ்வளவு கணக்குப் போடுறம். அடுத்த போட்டி இலங்கைக்கு யாருடன் என்று பார்த்தீர்களானால், அங்கே ஆரம்பமாகுது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மழையும் விளையாட்டும் பிரிக்க முடியாதவை. எத்தினை மழையைப் பார்த்திட்டோம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நாடீன் இருக்க பயமேன். முடிச்சு வைப்பா.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அதேதான். இனி எல்லாப் போட்டிகளும் முக்கியத்துவம் பெறும். சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இப்போதுதான் பார்த்தேன். பெண்களின் ஒரு நாள் போட்டிகளில் மிகக் கூடுதலான ஓட்டம் இன்று துரத்தப்பட்டது. அதுவும் இரண்டு பலமான அணிகளுக்கு இடையிலான போட்டியாக இது அமைந்தது. இந்த இரு அணிகளும் மீண்டும் இறுதிப்போட்டியில் சந்தித்தால் அது ஒரு சரவெடியாகத் தான் அமையப் போகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
முடிச்சு விட்டாங்கள். இந்தியாவுக்கு இரண்டாவது பாரிய இழப்பு. இந்த உலக கிண்ணம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. இனி ஓட்ட விகிதம் முக்கியமாக போகின்றது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இயன் ஹீலியின் மருமகள், மிச்சல் ஸ்டாக்கின் மனைவி, இன்று போட்டு அடி அடி என்று அடிச்சுவிட்டிருக்கிறா. ஆஸ்லி ஹீலிதான் இன்றைய நாயகி.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நீங்களும் என்னமோ கனக்க எதிர்பார்க்கிறீர்கள் போல. கிடைத்ததா. 😁
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பிரேமதாச மைதானத்தில் ஈரலிப்பு எப்போதும் ஒரு உபாதைதான். முன்னர் எல்லாம், அனேகமாக, இரண்டாவதாகத் துடுப்பாடத்தான் விரும்புவார்கள். இப்போ மாறிவிட்டது போல் உள்ளது. இன்றைய காலநிலையையும் ஆடுகளத் தன்மையையும் வைத்து முடிவு எடுத்திருக்கலாம். கணக்கு எங்கேயோ தவறிவிட்டது. அதோட, தங்கள் துடுப்பாட்டத்தில் நம்பிக்கையின்மையும் இருக்கலாம். சுழல் பந்தாளர்களை வைத்து, குறைந்த ஓட்டங்களுக்கு அமத்தவும் யோசிச்சிருக்கலாம். அப்படியானால், துரத்துவது இலகு. முதல் ஆடினால், தங்களில் நம்பிக்கை இல்லாவிடில், எவ்வளவு அடிப்பது என்பதும் கடினம்தானே.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
உண்மைதான். அந்த அவுஸ்ரேலிய அணி மாதிரி ஒரு அணி இனி அமைய வாய்ப்பே இல்லை. இது ஒரு தொடர்ச்சிதான். 80களில மேற்கிந்திய அணியின் ஆளுமையைச் சமாளிக்க ஒருவராலும் முடியவில்லை. அவுஸ்ரேலியா பல தொடர்களின் வாங்கின அடியுடன், மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கினார்கள். உள்ளகக் கட்டமைப்பை மாற்றினார்கள். உள்ளூர் மைதானங்களை மாற்றினார்கள். பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். சிறந்த வீர்ரகளை இனங்காண குழுவை அமைத்தார்கள். அது எல்லாம் சேர்ந்து, 90களுக்குப் பிறகு அவர்களை ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாற்றியது. அதே நேரம் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் ஓய்வு, அவர்களின் பணம் மற்றும் நிர்வாகப் பிரச்சினை காரணமாக, அவர்கள் மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டார்கள். லாரா மட்டும் இல்லையென்டால், காணாமலே போயிருப்பார்கள். 90களில் இந்திய அணி அதே விதியை எதிர்கொண்டது. பலமான அவுஸ்ரேலியா. இலங்கையின் எழுச்சி. தென்னாபிரிக்காவின் வருகை. இந்தியாவை நிமிரவே விடவில்லை. போன இடமெல்லாம் அடி. சச்சின் மட்டும் முயற்சி செய்துகொண்டே இருந்தார். சச்சின் ஆட்டமிழந்தால், தொலைக்காட்சியை அணைத்து விட்டுப் போவது சர்வசாதாரணம். அந்த இடத்தில்தான், இந்தியாவும் எல்லா மாற்ற்ங்களையும் ஏற்படுத்தத் தொடங்கியது. 80களின் இறுதியில் அவுஸ்திரேலியா என்ன செய்ததோ, அதையே இந்தியா 90களின் இறுதியில் செய்யத் தொடங்கியது. IPLன் எழுச்சி, எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. இப்போ நாம் பார்க்கும் இந்தியா, அன்று விதைத்த விதை. இப்போ பணம்தான் எல்லாம். இந்தியவை இனி உடைக்க முடியுமோ என்று தெரியவில்லை. அவர்களின் ஆதிக்கம் மிக நீ....ண்.....ட.... காலம் நீடிக்கும் என்று நினைக்கிறேன். மற்ற அணிகள் சும்மா போய் தட்டிவிட்டு வரவேண்டியதுதான்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அவர் எல்லோரையும் அண்ணா அய்யா என்றழைப்பதிலேயே தெரிகிறது அவர் எவ்வளவு இளசு என்று. மகளிர் அணிகள் எல்லாம் இன்னும் நீண்டதூரம் போகவேண்டியுள்ளது. கடந்த பத்து வருடத்தில் அவர்களின் வளர்ச்சி அளப்பெரியது. அடுத்த பத்து வருடத்தில் இன்னும் அமர்க்களமாய் இருக்கும். பணம் ஒரு தடையாக இல்லாவிட்டால் சரி.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இலங்கை ஒன்றிரண்டு போட்டிகள் வெல்லும் என்றுதான் நானும் நினைத்து, இன்று வெல்லக்கூடும் என்று நினைத்தேன். முக்கியமாக அவர்கள் சொந்த மைதானத்தில் விளையாடினார்கள். அதோட, சாமரி ஒரு 100 அடித்தால்தான் ஏதாவது வாய்ப்பு.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நன்றாக இரசிக்கிறீர்கள். 😆
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஜெயசூரியா அடிக்காத அடியா. சார்ஜாவில நடந்த இறுதிப்போட்டியில 189 அடிச்சார். ரசல் ஆர்னல்டும் அவரும் சேர்ந்து வெளுத்த வெளு இப்பவும் கண்ணுக்க நிக்குது. அதுவும் வெங்கடேஸ் பிரசாத் என்டா, சனத்துக்கு அல்வா சாப்பிடுறமாதிரி. இந்தியா அடிச்சது வெறும் 54. இதுதான் அந்தப் போட்டி https://www.espncricinfo.com/series/coca-cola-champions-trophy-2000-01-61074/india-vs-sri-lanka-final-65900/full-scorecard
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பெண்கள் அணிகளைப் பற்றி பெரிதாக இங்கு ஒருவருக்கும் தெரிவதில்லை தானே. அதனால் நமக்குத் தெரிந்ததை, சிலவற்றை அங்கு இங்கு பொறுக்கி, சொல்லுவோம் என்று ஒரு முனைப்பு தான். இலங்கை ஆண்கள் அணி உண்மைதான், கடந்த ஒரு பத்து வருடமாக இலங்கை அணி அவ்வளவு வலிதானதாக இல்லை. அத்தோடு இந்திய அணி இன்னும் வலுப் பெற்றுக் கொண்டே இருக்கின்றது. 90களிலும் 2000 ஆண்டுகளிலும், இலங்கை அணி ஒரு நெருப்பு. ஒரு நாள் போட்டிகளில் வெளுத்து வாங்குவார்கள். பல ஒரு நாள் தொடர்கள், முக்கோணத் தொடர்கள், மற்றும் பலவாறான தொடர்கள் எல்லாவற்றிலும் இலங்கை அணி ஜொலித்திருக்கிறது. முக்கியமாக பல இறுதி போட்டிகளில் இலங்கை அணி இந்தியாவை ஓட விட்டிருக்கிறது. சரியாக ஞாபகமில்லை, நான் நினைக்கிறேன், ஒரு 15-16 இறுதிப் போட்டிகளில், இலங்கை அணி இந்தியாவை அடித்துத் துவைத்திருக்கிறது. இப்போ எல்லாம் மாறி நடக்கின்றது. இந்திய அணி எப்படி இவ்வளவு வலிவானதாக இருக்கிறதோ, அதேபோல் இலங்கை அணியும் அப்போ இருந்தது. அது ஒரு பொற்காலம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நாளை இங்கிலாந்தும் இலங்கையும் மோதுகின்றன. இரு அணிகளும் 18 தடவைகள் மோதியிருக்கிறார்கள். ஆனால், இலங்கை ஒரே ஒரு போட்டியிலேயே வென்றுள்ளது. ஆனால் அந்த வெற்றி இலங்கை மகளிர் அணியின் போக்கையே மாற்றிவிட்டது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணத்தில் இலங்கை பெற்ற அந்த வெற்றியின் மூலம், நாங்களும் இருக்கின்றோம் என்று உலகுக்குப் பறைசாற்றி, இவ்வளவு தூரம் வந்துள்ளார்கள். அந்தப் போட்டியில் விளையாடிய சாமரி அத்தப்பத்து, இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கின்றார். நாளை நம் மகளிர் சரித்திரம் படைப்பார்களா.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
என்னே ஒரு கரிசனை என்று பார்த்தேன். முன்னாடி வருபவர்கள், களநிலைமையைக் கணித்து, பின்னாடி வருபவர்களுக்குச் சொல்லுவினம் போல. அதைச் சொல்லுவதற்காகவே, சீக்கிரமாக ஆட்டமிழந்து வேறு செல்கினம் போல.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
விசாரித்ததாகச் சொல்லுங்கள். நலமோடு திரும்பி வரவேண்டும். உங்கள் உண்மைப் பெயரும் நமக்குத் தெரிந்துவிட்டது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எனது தெரிவு பாகிஸ்தான். இன்னும் நம்பிக்கை இருக்கு 😁
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வங்கதேசம் 69 ஓட்டங்களைத் தாண்டிவார்களா என்ற பதை பதைப்பில்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இது இந்தியாவுக்கு ஒரு பின்னடைவுதான். இதிலிருந்து மீண்டு வரவேணும். வருவார்களா.