Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அட இது நல்லாருக்கே. கொஞ்ச நேரம் அங்கால போட்டுவர, இப்பிடி ஒரு மாற்றமா. ஞான் இரண்டாம் இடமா. மிக்க மகிழ்ச்சி. பங்குபற்றிய முதலாவது போட்டியிலேயே. இது இப்போ ஆறு தலை ராவணன். உங்களைப் போல்தான். எனக்கும் IPLல் ஒரு ஒவ்வாமை உண்டு. கொஞ்சம் அதிகமாகவே பணம் வெளியில தெரியுது. விளையாட்டின் மூலமே அடிபட்டமாதிரி ஒரு உணர்வு. அதனால்தான், நானும் அதிகமாகப் பார்ப்பதில்லை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதன் முதலாகப் பங்கு பற்றி, முதல் ஜவரில் ஒருவராக வந்ததில் பகிழ்ச்சி. வெற்றியாளர்கள் @புலவர் மற்றும்@நீர்வேலியான் க்கும் வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் அவர்களுக்கும் நன்றிகள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எங்கோ இருந்த நீர்வேலியான் அடிச்சுப் பிடிச்சு மேலே வந்துவிட்டார்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியாயம் ஏற்புரை ஆற்றுவாரா. ஓரிரு வார்த்தைகள் கேட்க அவா.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதே சிங்தான் பெரிதாக மாறாது என்று நினைக்கின்றேன். ஏழுபேர் இரண்டாமிடத்தில்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
80களிலும் 90களிலும் இங்கிலாந்தும் அவுஸ்ரேலியாவும்தான் ஆதிக்கம் செலுத்தினவை. அதை உடைத்ததில் இந்தியாவுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. இப்போ பணமழை இந்தியாவில்தான். அதுவும் IPLலினால். அவர்களை இனி அசைக்கமுடியாது என்று நினைக்கிறேன்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
செம. உண்மையிலேயே இது கடினமான கேள்வி. சரியாகத் தெரிவு செய்தது சிறப்பு. எனக்கும் அதேதான். நான் தெரிவு செய்தவர் ஒரு போட்டிகூட விளையாடவில்லை. இதை எங்கே போய் முட்டிக்க. IPLல பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினவை. அந்த மும்பை தாக்குதலோடதான் எல்லாம் தலைகீழாக மாறியது. அந்தத் தாக்குதல் நடந்திருக்காட்டி, இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி மாறி சுற்றுப்பயணம் போயிருப்பினம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இது பாக்கிஸ்தான் நடாத்துகின்ற போட்டி. ஆனால் இறுதிப் போட்டியில், பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திலிருந்து ஒருவரையும் காணவில்லை. அரசியலும் விளையாட்டும் ஏன் கலக்கக் கூடாது என்பதற்கு இன்னொரு சான்று. ஆனால் என்ன செய்ய, அப்பிடியான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
களப்போட்டியாளர்களின் நிலையைக் காணேல.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இப்போது நியாயம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியா இந்தியா இந்தியா. வாணவேடிக்கைள் தொடங்கட்டும். ஒரு போட்டியிலும் தோற்காமல் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது. ஹென்றி இல்லாதது நியுசிலாந்துக்கு பெரும் பின்னடைவாகப் போய்விட்டது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டி நினைத்தது போல் இந்தியாவுக்கு இலகுவாக இல்லை. இன்னும் 62 ஓட்டங்கள் 60 பந்துகளில் தேவை. கடைசி நிமிட திக் திக்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எல்லாரும் அதையேதான் சொல்லினம். புள்ளி கிடைக்கும் என்றால்...... தோக்கவேணும் என்றால், எப்பிடி புள்ளி கிடைக்கும். புள்ளி வேணும் என்றால், வெல்லவேணும் என்றெல்லோ சொல்லவேணும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்னும் ஒன்பது பேர் இந்தியாவைத் தெரிவு செய்திருக்கினம். ஆனா இந்தியா தோற்கவேணும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கினம். அப்பிடி என்றால் ஏன் இந்தியாவைத் தெரிவு செய்வான். தோற்கவேணும் என்றால் எப்பிடி புள்ளி கிடைக்கும். ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யவேண்டாமா. எப்பிடி இரண்டும் உண்மையாகும். இல்ல புரியல.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குல்தீப் நெருப்பாய். கேனும் தூக்கிக்குடுத்தாரு. தானே பிடித்தாரு குல்தீப். மீண்டும் கூக்லி பந்து. கேன் முன்னங்காலில் வந்து தடுக்க முயன்றார். மட்டையில் பட்டு டக்கென்டு பந்து எழும்பியது. அவர் பின்னங்காலில் அந்தப் பந்தை ஆடி இருக்கணும். 250ஏ கஷ்டம் என்று நினைக்கிறேன்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குல்தீப் வந்தாரு. உடைத்தெறிந்தாரு. ரச்சின் போனாரு அறைக்கு பந்து விழுந்து மெதுவானது. ரச்சின் கணிக்கத்தவற, மட்டைக்குள்ளால காலுக்கு மேலே போய் விக்கட்டைத் தகர்த்தது. அருமையான பந்து.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓ அப்ப இந்தியா 301 😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதலாவது வீரர் ஆட்டமிழந்தார். கேன் வந்திருக்கார். இவர்கள் இருவரும்தான் தென்னாபிரிக்காவுக்கு அடி அடி என்டு அடித்தவை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியூசிலாந்து துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருக்கின்றது. எத்தனை ஓட்டங்கள் அடிப்பார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மழையையும் நாம எதிர்வுகூற வேணுமா. கடவுளே. எதிர்வு கூறலாம். ஆனா, அதுக்கு வசி எப்பிடி விளக்கம் எழுதுவார் என்று பாரக்க ஆவல்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியாயம் முன்னாடி போக, ஞான் பின்னாடி பகிர்ந்து கொள்ளப்போகும் தருணம். இன்னும் சிலர் இரண்டாவது நிலையில் வரும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. யாழ் களமே ஆயத்தமாகுங்கள். உங்கட ஆசைக்கு ஒரு அளவேயில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். IPLல் பெரிய நாட்டமில்லை. பெரிதாக தொடர்வதுமில்லை. இந்தமுறை பார்ப்போம். கிருபனின் போட்டியினால், ஒருமுறையும் இல்லாதவாறு அதிகமாகத் தொடர்வேன் என்று நினைக்கிறேன். சாரே 90 கேள்விகள் சாரே. எப்பிடி முடிக்கப் போறேனோ.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்த ஆடுகளம் மிகவும் மெதுவானது. பந்து விழுந்து நின்று மெதுவாகத்தான் மட்டையை நோக்கி வரும். முன்னங்காலில் ஆடினாலோ அல்லது மட்டையினால் கூட்டினாலோ, ஆட்டமிழப்பதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம். மிகவும் நிதானமாக, பின்னங்காலில் ஆடவேண்டும் அல்லது ரோகித் மாதிரி விரைவாக அடித்து ஆடவேணும். வில்லியம்சன் ஒருவர்தான் இக்களத்தில் நின்று பின்னங்காலில் இலாவகமாக ஆடக்கூடியவர். மற்றவர் எல்லோருக்கும் அது சரியாக வராது. பார்ப்போம் எப்படி இந்திய சுழலர்களை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று. ரோகித் ஒரு பெரிய ஆட்டம் இதுவரை ஆடவில்லை. இறுதிப் போட்டியில் அதற்கு மிக அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தக் களத்தில் அவரால் மிக இலகுவாக ஆடமுடியும். ஒரு 30 ஓட்டங்கள் எடுத்துவிட்டார் என்டால், அவரிடமிருந்து ஒரு பெரிய ஆட்டம் ஒன்றை எதிர்பார்க்கலாம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்ன வசி, நீங்கள் நியூசிலாந்துக்கு ஆதரவாக மிகவும் திறமையாக துடுப்பெடுத்தாடுகிறீர்கள். நீங்கள் சுழட்டுற சுழட்டில் நியூசிலாந்து வென்றாலும் வென்றுவிடும் போல கிடக்கிறது. உங்கள் அலசல் நன்றாக இருக்கின்றது. ஆனால் என்ன, மற்றப் பக்கம் இந்திய அணி விளையாடுகிறது என்பதை மறந்து விட்டீர்கள் போலிருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாசிப்பதற்கு நாங்கள் இருக்கின்றோம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நல்லதொரு இறுதிப்போட்டியாக இருக்கப் போகிறது. ஒரு பக்கச் சார்பாக இல்லாம இருந்தால், நமக்குக் கொண்டாட்டம்தான்.