Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அது சரிதான். நான் மாறித்தான் வாசித்து விட்டேன். Jonathan Trott மிகச் சிறந்த வீரர். ஆனால் அவரால் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் செய்ய முடியவில்லை. வெளிநாடுகளுக்கு செல்லும் போது, குடும்பத்தை பிரிந்து அவரால் மனரீதியாக விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆஷஸ் தொடர் ஒன்றில் இருந்து இடையிலேயே திரும்பி சென்றுவிட்டார். அன்றிலிருந்து அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தென்னாபிரிக்கா பயிற்சியாளர் Rob Walter (வெள்ளைப் பந்துக்கு மட்டும்). அவர் தொழில்ரீதியாக கிரிக்கெட் விளையாடவில்லை. அவர் ஒரு களத்தடுப்புப் பயிற்சியாளராகத்தான் தனது பயணத்தைத் தொடங்கினவர்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மூன்று பேர் விடாப்பிடியா கீழேயே நிற்கப் போகின்றார்கள். கை குடுத்துத் தூக்கி விடவேணும். உபிசியாக🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அந்த மத்தியானம் படுக்கப் போகிறேன் என்று சொன்னதுதான் தாங்கமுடியாம இருக்கு.🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்த விளையாட்டின் அழகே அதுதானே. எப்படி தங்கள் ஆட்டத்தை அவர்கள் கட்டமைக்கிறார்கள். எப்படி ஆடுகளம் அவர்களுக்கு கை கொடுக்கிறது. எப்படி தங்கள் ஆட்டத்தை அவர்கள், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்கிறார்கள். அதுதானே அழகு. அதைத்தானே நாங்கள் பார்க்கப் பிரயாசைப் படுகின்றோம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மைதான். ஆனா, மத்தியானம் படுக்கப் போறதெல்லாம் வரந்தானே.😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நல்லா போடுறீங்கள் முடிச்சு. உண்மையிலேயே அவர் நல்லா நிதானமாத்தான் விளையாடினார். சிறப்பான ஆட்டம். அதிரடியா விளையாட இது T20 அல்ல. அவருக்கு ஒரு கூடாத அனுபவம் ஒன்று இருக்கிறது. 2023 ஆசியக்கிண்ணப் போட்டியில், இதே அணிக்கெதிராக இந்தியா தோற்றுவிடும். கில் நூறடிச்சு, 50/60 ஓட்டங்கள் பெற வேண்டிய நேரத்தில், தேவையில்லாமல் தூக்கியடிச்சு, ஆட்டமிழப்பார். கடைசியில் 6 ஓட்டங்களினால் இந்தியா தோல்வியுறும். போட்டியின் பின், கில் தனது தவறை ஒத்துக்கொள்வார். தான் நிதானமா நின்று ஆடி இருக்கவேணும் என்று சொல்வியிருப்பார். இன்றும் அது போலவேதான் ஆட்டம் சென்றுகொண்டிருந்தது. மறு முனையில ஒவ்வொருவராக ஆட்டமிழந்து வெளியேற, இவரின் தலையில்தான் பொறுப்பு விழுந்தது. அவரின் பழைய அந்த அனுபவம் இன்று நன்றாக வேலைசெய்தது. இன்றைய அவரின் பேட்டியில், அவர் அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லக்கூடும். கேட்டுப்பாருங்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இங்கேதான் இருக்கின்றேன். களமாட, எல்லா நாளும் திருநாளாக அமையுமா. எப்பிடித்தான் எல்லா நாளும் களமாடுகின்றீர்களோ. மத்தியானம் தூங்கிறதெல்லாம் வரம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஐயகோ...யார் அவர். என்னைய வச்சு காமடி கீமடி பண்ணேலத்தானே. இப்ப ஒரு கிழமைதான் இங்க வந்து. பயப்பிடுத்தாதேங்கோ.😭
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்பிடி ஒருவரை விடமுடியாது. அது ஒரு பதினாறு தலை ராவணன். அது சேர்ந்து அந்த எட்டுக்கால் பூச்சிய நசிக்கிய தருணம் இது. போடுறா வெடிய. 😉
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஒரே அடியா போட்டு அடிக்கப்படாது. அடுத்த போட்டிக்கும் கொஞ்சம் வைக்கவேணும்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஹா ஹா.....தானே கதவைத் திறந்து தானே ஏறி உற்காந்து...... கிருபனின் வாழ்க்கையும் எவ்வளவு கஷ்டம். கிருபனா வாழ்ந்தாழ்த்தான் அது புரியும். உண்மையில அது மாறி. இரவில் ஈரலிப்பு கூட. பந்து மென்மையாகும். வழுக்கிக் கொண்டு வரும். பெரிதாக எழும்பாது. அதனாலதான் பாகிஸ்தான் துரத்த முடிவு எடுத்தவை. ஒரு வீரர் நிலைத்து நின்றுவிட்டால், வானவேடிக்கை காட்டலாம். அதனாலதான் நான் நினைத்தேன் இன்று பாபர் விசேட பிரியாணி பரிமாறுவார் என்று. ஆனா நடந்தது தலைகீழ்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாவம் கிருபன். புள்ளி போடும்போது, யாருடை பேரை கடைசியாப் போடுறது என்டு குழம்பப்போறார்😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சரி சரி. இனி என்ன. முட்டையை அவிப்பம். அந்த 8 பேரும் வரிசையில வாங்கோ.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அட அட. நம்ம ராசி அப்படி. நாம ஒன்டுநினைச்சா பாபர் ஒன்டு நினப்பாரோ. பாகிஸ்தானுக்கு போட்ட அந்த 8 பேருக்கும் ஏதாவது ஆறுதல் சொல்லலாம் என்று பார்த்தன்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இப்போது நிற்கின்ற இருவரும் அருமையாக ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். வான வேடிக்கைகளுக்கு தயாராகுங்கள். கிரிக்கெட்டில் ஒரு கையளவு சொல்வார்கள். 35வது பந்துப் பரிமாற்றத்தில், ஒரு உறுதியான இணைப்பாட்டம் ஒன்றுடன், அரைவாசி ஓட்டங்களுக்கு மேல் குவித்துவிட்டால், வெல்வதற்கான சாத்தியம் மிக அதிகம். அது இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. பாகிஸ்தானுக்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கின்றது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போகிற போக்கை பார்த்தால் இன்றைக்கு பாபர் விசேட பிரியாணி இருக்கும் போல. பாபரும் துரத்தி அடிப்பதில் வல்லவர். இன்று பிடிகளை தவறவிட்ட பாகிஸ்தான் வீரர்கள், கிளென் பிலிப்சிடம் பாடம் படிக்க போகலாம். ரிஷ்வான் விலக்கி அடித்த அந்தப் பந்தை காற்றில் பறந்து பிடித்தாரே ஒரு பிடி. இந்தச் சுற்றுப்போட்டியின் சிறந்த பிடியாக அது அமையப் போகிறது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டிகள் ஆரம்பமாகவிருக்கும் இவ்வேளையில், திரும்பிப் பார்த்தால் 1998ம் ஆண்டு முதலாவது Champions Trophy போட்டி நடைபெற்றது. தென்னாபிரிக்கா வென்ற ஒரே ஒரு ICC போட்டி. பின்னர் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டு 2000, 2002, 2004, 2006ம் ஆண்டுகளில் போட்டிகள் நடைபெற்றன. அதன்பின் இழுபறிபட்டு 2009, 2013, 2017 ம் ஆண்டுகளில்தான் போட்டிகள் நடைபெற்றன. T20 பிரபலமானதால் இந்தப் போட்டிக்குரிய விருப்பு குறையத் தொடங்கியது. அதன் பின்னர் 2025ல்தான் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. நடப்பு வெற்றியாளர் - பாகிஸ்தான். இந்தியாவை இறுதிப்போட்டியில் வீழ்த்தி வெற்றிவாகை சூடியது. மற்றைய வெற்றியாளர்கள் 2013 - இந்தியா 2009 -அவுஸ்ரேலியா 2006 - அவுஸ்ரேலியா 2004 - மேற்கிந்தியத் தீவுகள் 2002 - இந்தியாவும் இலங்கையும் பகிர்ந்து கொண்டன (மழை காரணமாக) 2000 - நியூசிலாந்து
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மைதான். எப்போதும் மிகத்திறமையான வீரர்களைக் கொண்டிருக்கும் அணி. உலகக்கிண்ணப் போட்டிகளில் மழையும் ஓட்ட விகிதாசாரமும் அவர்களைப் பாடாய்ப் படுத்தியிருக்கின்றன. பார்ப்போம் இம்முறை.
-
காற்றாடி
ஓம் ஓம். வாசிக்கும் போதே புரிந்தது. அங்கு நின்ற அனுபவமில்லாமல் கற்பனையில் எழுத முடியாது. அதுவும் பாடல் காட்சிகளில் எவ்வளவு வெட்டி ஒட்டினாலும் ஒருத்தரும் ஒன்றும் சொல்லமாட்டினம் என்பது அனுபவத்தில்தான் வரும். நாங்களும் வீட்டில் படம் பார்க்கும்போது பாட்டுகளை ஓட விட்டுத்தானே பார்க்கிறது.
-
உண்மை தெரிந்தாகனும்
பழகத்தானே வந்திருக்கிறேன். துன்பியல் இல்லாத வாழ்க்கை ஏது. பாத்துக்கலாம். "வாடா நண்பா போட்டுப் பார்க்கலாம் எதிர்நீச்சல்" பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நன்றாகச் சொன்னீர்கள் போங்கள். இந்த இரண்டு அணியும்தான் இறுதிப்போட்டியில் என்று நான் தெரிவுசெய்துள்ளேன். தென்ஆபிரிக்கா சமீபகாலமாக தரமான ஆட்டம் ஆடிக்கொண்டு வருகினம். நல்லதொரு இளைய தலைமுறை உருவாகிக்கொண்டு வருகிறது. நல்லதொரு அணிக்கட்டமைப்புடன் உள்ளார்கள். பந்துவீச்சாகட்டும் துடுப்பாட்டமாகட்டும் சமநிலையில் உள்ளார்கள். வேகப்பந்து வேணுமா சுழல்ப் பந்து வேணுமா வெளியால உள்ளால பந்து போகவேணுமா அதிரடியா துடுப்பாட வேணுமா. நின்று நிதானித்து ஆடவேணுமா. எல்லாவற்றிற்கும் அவரிகளிடம் பதில் இருக்கு. அத்தோடு, அவர்கள்தான் World Test Championship இறுதிப்போட்டியிலும். ரபடா வாறாரு. தெறிக்க விடப் போறாரு.
-
காற்றாடி
எம் சமுகத்தில் படிப்பு எவ்வளவு முக்கியம் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. எங்கிருந்தாழும் அது மாறாது என்றே தோன்றுகிறது. வெயில் படத்திலும் இந்த தியேட்டர் சம்பந்தமான விடயம் விரிவாகக் காட்டப்படிருக்கும். நீங்கள் விவரிக்கும்போது எனக்கு அப்படக்காட்சிகள்தான் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ரபாடா வாறாரு. தெறிக்கவிடப் போறாரு. இறுதிப் போட்டியில் தெரியும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முத்தரப்பு போட்டி ஒன்று பாகிஸ்தானில் இன்று முடிவடைந்தது. இறுதிப்போட்டியில் நியுசிலாந்து அணி பாகிஸ்தானை மிக இலகுவாக வீழ்த்தி வெற்றியைப் பெற்றது. நியுசிலாந்து வழமைபோலவே ஓர் கறுப்புக்குதிரைதான். இத்தொடரில் விளையாடிய மூன்றாவது அணியான தென் ஆபிரிக்காவும் மிகவும் வலுவான நிலையில் உள்ளது. அவர்களின் பந்துவீச்சு அணி முழுவதுமாக இத்தொடரில் இறங்கவில்லை.