Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அஜந்த மென்டிஷ் ஒரு தொடரில், இலங்கையில் வைத்து இந்தியாவ உருட்டு உருட்டென்று உருட்டினார். அடுத்த தொடரில் இந்தியாவில் வைத்து, இந்தியா வெளுத்துத் தள்ளிவிட்டுது. அதிலிருந்து அவரால் பெரிதாக ஷோபிக்க முடியவில்லை. எல்லோருக்கும் இந்தியா காட்டிக்குடுத்து விட்டுது. வருணுக்கும் அதேதான் நடக்கும். இப்போ சிறிய மாற்றங்களுடன் வந்திருக்கிறார். நீங்கள் சொன்னமாதிரி, வேகமாகவும் வீசுகிறார். ஆனால் டிராவிஷ் ஹெட்டுக்கும், மாக்ஸ்வெலுக்கும் எப்பிடிப் போடப்போகிறார் என்பத்தில்தான் எல்லாம் இருக்கிறது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியாவுக்கு பெரிய தலைவலி தலைதான், டிராவிஷ் ஹெட். கொஞ்சநாளா, அவனும் இந்தியா என்டா சூரசம்காரம் ஆடுறான். அதுக்கு ஏதாவது ஒழுங்கோட வந்தால், இந்தியாவுக்கு இலகுவான வெற்றியாய் அமையும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மைதான். மழை அவரையும் பாதித்துவிட்டது. பார்ப்போம் அரை இறுதிச் சுற்றில் என்ன மாயம் செய்கிறார் என்று. பரவாயில்லை. வசியா கிருபனா. பொறுத்திருந்து பார்ப்போம். வாத்தியாரும் உதவக்கூடும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
புலவர் எல்லோரையும் ஏப்பம்விட்டு, வந்துட்டாரையா முதல்வராக. மொத்தமாக 48 புள்ளிகளில் 39 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அவர் மட்டும்தான், இரு குழுக்களிலும் முதலாவது இரண்டாவது அணிகளைச் சரியாகக் கணித்தவர். இங்கிலாந்து இறுதியாக வரும் என்று கணித்தவர், பாகிஸ்தானுடன் கோட்டைவிட்டுவிட்டார் (அந்த ஒரு புள்ளிதான் அவருக்குக் கிடைக்கவில்லை). தரமான சம்பவம் புலவர். 🖖
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அரை இறுதிப் போட்டிகள் ஆரம்பமாக இருக்கும் இந்த வேளையில், யாழ் கள நிலவரம் எப்படி இருக்கின்றது. எல்லாப் புள்ளிகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் யார் முதல்வர்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எனது அரையிறுதித் தெரிவுகளில் ஒரு அணி மாறிவிட்டத. இங்கிலாந்தைத் தெரிவு செய்தேன். ஆனால் அவுஸ்ரேலியா அவர்களை அடித்துத் துவைத்து விட்டது. அரையிறுதி: இந்தியா எதிர் அவுஸ்ரேலியா தென்னாபிரிக்கா எதிர் நியுசிலாந்து
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வருணின் தலைமையில் சுழல்பந்து வீச்சாளர்கள் சுழட்டிய சுழட்டில், நியுசிலாந்து ஆட்டங்கண்டது. இந்தியாவுக்கு இலகுவான வெற்றியாக முடிந்தது. இக்களத்தின் விருப்பமும் நிறைவேறவில்லை. புள்ளிகளாவது கிடைத்ததே.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதிசயம் இல்லை. அவர்கள் சுழலில் மாட்டிக்கொண்டார்கள். 7வது வீரர் ஆட்டமிழந்து வெளியேறினார்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இது நல்லாருக்கே. தோற்றால், வேணும் என்று தோற்றது என்று சொல்லலாம். வென்றால், இது தேவையில்லாத வெற்றி என்று சொல்லலாம். எப்பிடி என்டாலும் இந்தியா தோற்றால் சரி. அப்பிடித்தானே. 😀
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்ரேலியாவிடம் அவ்வளவு பயமா. அது ஒரு பல்லுப் போன பாம்பு. இம்முறை கடியாது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிருபனும் சழைக்காம ஒரே கேள்வியைத்தானே கேற்கிறார். யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முன்னாடி இரண்டு பேரையும் பிடிக்கமுடியுமா. இல்ல இது முடிந்த முடிவா.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்ரேலியாவ அரை இறுதியில அடிக்கிறதுதான் நல்லது. இறுதிப்போட்டிக்கு விட்டா, அவங்கள் வேற மாதிரி வருவாங்கள். இறுதிப்போட்டி, இந்தியா எதிர் தென்னாபிரிக்காதான் எனது தெரிவு
-
உண்மை தெரிந்தாகனும்
அது ரஜனி படமாச்சே. அம்பிகாவும் ராதாவும் இணைந்து நடிச்சிருப்பினம். உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இவ்வளவு இலகுவான போட்டியாக அமையும் ஏன்று நினைக்கவில்லை. தென்னாபிரிக்கா அந்தக் குழுவில் முதலாவதாக வந்ததில் மகிழ்ச்சி. இன்னும் ஒரே ஒரு போட்டி மீதம் உள்ளது. நாளை வெல்லும் அணி ஆஸ்திரேலியாவுடன் அரை இறுதியில் விளையாடும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மைதான். அந்த மழையை எதிர்பார்க்கவில்லை. கோசானும் நிறைய விருப்பப்பட்டார். இப்போது இருக்கும் நிலைமைகளின் படி, கோசான் மேலே வருவதற்கான சந்தர்ப்பங்கள் அருகிக் கொண்டே வருகின்றன. வாழ வைத்த நாடு வென்றால் அவரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக அமையப் போகின்றது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தலை மேல் கத்திதான் எப்போதுமே. பாவப்பட்ட ஜென்மங்கள். இப்போது இருக்கும் நடைமுறையில் காசு குடுத்து முடிச்சு வைக்கிறதெல்லாம் மிகக் கடினம். ஆனாலும் இந்தக்கேள்வி எப்போதுமே தொக்கிநிற்கும். அந்தநாட்டில் ஒரு கிரிக்கெட் கட்டுமானமே இல்லை. அதுதான் பெரும் பிரச்சினையே. அங்கே நல்லதொரு வீரரை உருவாக்குதல் மிகக் கடினம். நமக்குத் தெரிந்த, அநேகமான பாக்கிஸ்தான் வீரர்கள் எல்லாம் பிறவி வீரர்கள். அவர்கள் உருவாக்கப் படவில்லை. அண்மையில் வந்தவன் பாபர் ஆஸாம். துரதிஷ்டவசமாக, வேறு ஒருவரும் வரவில்லை. தனி ஒருவனாக அவன் எவ்வளவுதான் தாங்கமுடியும். பின் அவங்களின் அரசியல். நாம் நம்நாடுகளில் பாக்கின்ற அதே அல்லது அதுக்கும் மேலான மோசமான அரசியல். எவ்வளவு காலத்துக்குத்தான் இப்பிடியே வண்டிய ஓட்டிறது. அவர்கள் போகவேண்டிய தூரம் வெகு தூரம். அட, வசியும் ஞானும் இம்முறை ஒரே கோட்டில். யாயும் ஞாயும் யாராகியரோ. 🤣😉
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மையாவேயா. இப்பிடிக் கதைச்சிருப்பாங்கள் என்று நம்ப முடியவில்லை. மந்திர தந்திரமெல்லாம் அங்கேயுமா.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கடைசியில் மழை தான் வென்றது. ஏய் மழையே, இது கொஞ்சம் கூட நல்லால்ல. இனி என்றாலும் பார்த்துச் செய்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நம்பி வாங்க. ஆனா நம்பாதீங்க.😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாமழும் பின்னாலதான் நிக்கிறம். எங்களையும் கூட்டிக்கொண்டு போறது. தனிய போக நினைக்கப்படாது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மழை வந்து போட்டி தடைப்பட்டுள்ளது. மீண்டும் ஆரம்பிக்கும் போல. அனேகமா குறுகிய போட்டியா இருக்கும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இதுவரை மழை இல்லையாம். அப்புறமென்ன ஆப்கானிஸ்த்தானா அவுஸ்திரேலியாவா எப்போதும் தமிழனா கோசானா காத்திருங்கள். முடிவு விரைவில்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எப்போதும் தமிழன்தானே இப்போ முன்னுக்கு. அவரே முன்னாடி போகட்டும். ஆப்கான் அடிக்கிறான். அவுஸ்ஸ வீட்டுக்கு அனுப்பிறான்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இப்போது ஆப்கானின் வெற்றியை அதிர்ச்சி என்று கூறமுடியது. அவர்கள் உண்மையிலேயே நன்றாக விளையாடுகிறார்கள்.