Jump to content

போல்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    6134
  • Joined

  • Last visited

  • Days Won

    47

Everything posted by போல்

  1. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-41/
  2. மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ்! மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 08 பேரும் பண்டாரநாயக்க மாவத்தை கொழும்பு 12 ஐ சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) மட்டும் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளில் இதுவரை 97 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மேலும்-08-பேருக்கு-கொரோனா-வ/
  3. கொட்டாஞ்சேனையில் அடையாளம் காணப்பட்ட 2ஆவது நபரால் பார்மசி ஒன்றுக்கு சீல் : எரிக்கப்பட்ட முகக்கவசங்கள் கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் பெண் ஒருவரும் அவரது மகனும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவர்கள் குறித்து பல விடயங்கள் வெளிவந்துள்ளன. குறித்த பெண்ணுக்கு எவ்வாறு இந்த நோய் தொற்றியது தொடர்பிலும், குறித்த பெண்ணின் மகனால் பார்மசி ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டமை தொடர்பிலும் தகவல்கள் வெளிவந்துள்ள. இது தொடர்பான விரிவான தகவல்கள்.. கொட்டாஞ்சேனை - பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் முத்த மகனுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. எனினும் 2 ஆம் மகனுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ள நிலையில் விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன குறிப்பாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என ஆராய்ந்துவரும் சுகாதாரத் துறை அவருக்கு இந்தியா யாத்திரை செல்லும் போது விமானத்தில் வைத்து கொரோனா தொற்றியிருக்கலாம் என சுகாதாரத் துறையினர் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக யாத்திரை செல்லும் போது விமானத்தில் அவருக்கு அருகே இருந்த ஆசனத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் இருந்ததாகவும், அவர் அடிக்கடி இருமிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கொரோனா தாக்கம் இருந்து அதனூடாக இந்த பெண்ணுக்கு தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அப்பெண்ணுக்கு கடந்த மார்ச் 27 ஆம் திகதியே இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் காட்டியுள்ள போதும் அவர், தனக்கு ஆஸ்துமா இருப்பதால் அதனை அவ்வளவு பாரதூரமாக எடுத்துக்கொள்ளவில்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான பின்னணியில் நேற்று அப்பெண்ணின் 2 ஆம் மகனுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இந்த நிலையில், அவரால் கொஹுவலை - சரணங்கர வீதியில் உள்ள மருந்தகம் ஒன்றுக்கு விற்பனைக்காக கையளிக்கப்பட்ட ஒரு தொகை முகக் கவசங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றை பொலிஸார் நேற்று தீயிட்டு அழித்துள்ளதுடன், அந்த பாமசிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆம் திகதி குறித்த நபரால் 550 முகக் கவசங்கள் விற்பனைக்காக அந்த பாமசிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எதுவும் இன்று வரை விற்பனை செய்யப்பட்டிருக்கவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளன. இந் நிலையில் அந்த பாமசியின் உரிமையாளரும் இரு உதவியாளர்களும் நேற்று முதல் வெள்ளவத்தை மற்றும் களுபோவில பகுதிகளில் உள்ள அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/141435?ref=imp-news மேலும் நால்வருக்கு கொரோனா, 09 பேர் குணமடைந்தனர்..! இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று (சனிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்று அடையாளம் காணப்பட்ட நான்கு பேரில் மூன்று பேர் ஒலுவில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்கள் என்பதுடன், மற்றைய நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை மேலும் 09 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/மேலும்-நால்வருக்கு-கொரோ-2/
  4. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரிப்பு நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 137 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-16/
  5. இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஏனையவர்கள் குறித்த 80 பேருடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி இவ்வாறு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 19ம் திகதி வரையில் நாட்டில் மக்கள் நடமாட்டம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், 30 நாட்களில் நோய் அறிகுறிகளை கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ம் திகதி வரையில் அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/140909?ref=imp-news
  6. இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று! இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இன்று (திங்கட்கிழமை) மாலை மேலும் இருவர் இலக்கானமை அடையாளம் காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று குணமடைந்து வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து 34 பேர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் 139 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா நோய்க்கான அறிகுறிகளுடன் 257 பேர் சிகிச்சைபெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கையில்-மேலும்-இருவரு/
  7. கொழும்பில் வங்கியொன்றை மூடவைத்தது கொரோனா கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த வங்கியிலுள்ள ஊழியர் ஒருவரது வீட்டிலிருந்தவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 நாட்களுக்கு வங்கி மூடப்பட்டிருக்கும் என அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/140279
  8. அம்பாறையில் நகரங்களில் திரண்ட மக்கள்! ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று திரண்டு தமக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டனர். அம்பாறை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் தமக்கான பொருட்களைக் கொள்வனவு செய்ய மிகவும் துரிதமாக செயற்பட்டனர். கல்முனை பொது சந்தை மூடப்பட்ட போதிலும் பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது. மேலும் சில வியாபார நிலையங்கள் சுப்பர் மார்க்கெட்டுகள், பாமசிகள், வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கப்பட்டு வியாபாரம் இடம்பெற்றது. அத்துடன், அம்பாறை பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நின்று பொருட்களைக் கொள்வனவு செய்தனர். இதேவேளை, தொடர்ந்தும் கல்முனை பிராந்திய சுகாதார சுகாதார சேவைகள் பணிமனையினால் பொது மக்களுக்கு கோரானா தொற்று தொடர்பாக அடிக்கடி விழிப்புணர்வு அறிவிறுத்தல் மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/அம்பாறையில்-நகரங்களில்-த/
  9. கண்காணிப்பு நிலையங்களில் இருந்து இரண்டாவது குழுவினரும் வௌியேற்றம்! வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தி, கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டாவது குழுவினரும் இன்று (புதன்கிழமை) அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் மட்டக்களப்பு – புனானை மற்றும் கந்தக்காடு நிலையத்தில் இருந்த 201 பேரே இவ்வாறு கண்காணிப்பின் பின்னர் அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்று மட்டக்களப்பு – புனானை கண்காணிப்பு நிலையத்திலிருந்து 203 பேரும், கந்தக்காடு நிலையத்திலிருந்து 108 பேரும் என 311 பேர் கண்காணிப்பின் பின்னர் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கண்காணிப்பு-நிலையங்களில/
  10. இலங்கையில் வைத்தியருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு! அதே வைத்தியசாலையில் அனுமதி IDH வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட வைத்தியர் IDH வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியருக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதயைடுத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/139631?ref=imp-news
  11. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 77ஆக அதிகரிப்பு! கொரோனா வைரஸால் மற்றுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர், மேலும் நால்வருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மொத்தமாக ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-2/
  12. பிரதேசம் தொற்று சுகமடைந்தவர் மரணம் பொலநறுவை 17 0 0 கொழும்பு 16 3 0 கம்பஹா 12 0 0 புத்தளம் 06 0 0 மட்டக்களப்பு 03 0 0 களுத்துறை 03 0 0 இரத்தினபுரி 03 0 0 காலி 02 0 0 பதுளை 01 0 0 கண்டி 01 0 0 கேகாலை 01 0 0 குருநாகல் 01 0 0 வவுனியா 01 0 0 ஏனைய 05 0 0 மொத்தம் 72 3 0
  13. யாழ் -கொழும்பு குளிரூட்டப்பட்ட புகையிரதசேவை நிறுத்தப்பட்டது யாழ்.காங்கேசன்துறை- கொழும்பு இடையில் சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை நாளை தொடக்கம் மறு அறிவித்தல்வரை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் கல்கிசையில் இருந்து அதிகாலையில் 5.10 க்கும், மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து 1.45 க்கும் சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/139369
  14. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 22 ஆவது நபரும் அடையாளம் காணப்பட்டார்! கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 22 வது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த 73 வயது ஆண் தற்போது கராபிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 22 ஆக அதிகரித்துள்ளது. http://athavannews.com/கொரோனாவினால்-பாதிக்கப்-4/
  15. “கழிப்பறை உபயோகிப்பதைப் பற்றி மத்திய அரசு, இப்போதுதான் விளம்பரம் செய்கிறது. ஆனால், நம் முன்னோர்கள் 2,500 வருடங்களுக்கு முன்பே கழிப்பறை வசதியுடன், நவீன கட்டுமானங்களுடன் நாகரிகமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைக் கீழடியில் காண முடிகிறது” என்று இன்று கீழடிக்கு வருகை தந்த சீமான் மீடியாக்களிடம் பெருமிதமாகப் பேசினார். கீழடியில், கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களைப் பாதுகாக்க மைசூரில் இருக்கும் மத்திய தொல்லியல் துறை அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்வதாக தொல்பொருள் துறையினர் அறிவித்ததால், கீழடி அகழ்வுப்பணி மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர் தமிழக அரசியல்வாதிகள். இதனால் கொதித்து எழுந்துள்ள தமிழக தலைவர்கள், எழுத்தாளர்கள் இதைக் கண்டித்து பேசி வருகிறார்கள். மைசூருக்குப் பொருட்களைக் கொண்டு செல்லத் தடைவிதிக்க கனிமொழி என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது. இந்த நிலையில்தான் ராமநாதபுரம் வந்த சீமான், திரும்பும் வழியில் கீழடிக்கு வந்தார். நடந்துகொண்டிருந்த அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டு அங்கிருந்த ஆய்வாளர்களிடம் விவரங்கள் கேட்டார். அதன்பின் நம்மிடம் பேசியவர், ‘‘சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற தமிழரின் நாகரிக வாழ்வியலின் சாட்சியான தொல்பொருட்களைப் பார்க்கும்போது பிரமிப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இந்த வட்டாரம் முழுவதும் ஆய்வு செய்தால் தமிழர்களின் பண்டைய நாகரிக வாழ்வியலைப் பற்றிய தடயங்களைச் சேகரிக்கலாம். இரண்டு வருடங்களாக இங்கு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்திப் பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ‘தமிழரின் பெருமையைப் பாதுகாக்க வேண்டும்’ என்று மக்கள் கேட்கும் நிலையில்தான் அரசாங்கத்தின் நிலை உள்ளது. தற்போது நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை தொடர வேண்டும். இந்த தனியார் இடத்தை விலை கொடுத்து வாங்கி தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். இங்கேயே அருங்காட்சியகம் அமைத்து, பராமரித்து தமிழக மக்களிடமும், மாணவர்களிடமும் இதன் பெருமைகளை எடுத்துச்சொல்ல அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதானிக்கு ஐயாயிரம் ஏக்கர் இடம் வேண்டுமென்றால், உடனே வாங்கிக்கொடுக்கும் அரசு, தமிழரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள சில ஏக்கர்களை வாங்கிக்கொடுக்க முடியாதா? கழிப்பறை உபயோகிப்பதைப் பற்றி மத்திய அரசு இபோதுதான் விளம்பரம் செய்கிறது. ஆனால், நம் முன்னோர்கள் 2,500 வருடங்களுக்கு முன்பே கழிப்பறை வசதியுடன் நாகரிகமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை கீழடியில் காண முடிகிறது. தமிழரின் பண்டைய வீரமும், பெருமையும், வரலாறும், ஆவணங்களும் அழிக்கப்பட்டு வரும் சூழலில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்லக் கூடாது. மீறிக் கொண்டு செல்ல முயன்றால் நாம் தமிழர் கட்சி போராடும்’’ என்றார். http://www.vikatan.com/news/tamilnadu/69033-seeman-opposes-for-moving-keezhadis-ancient-artefacts.art?artfrm=related_article
  16. புதிய உறுப்பினர்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.