-
Posts
21 -
Joined
-
Last visited
-
Days Won
1
ம.தி.சுதா's Achievements
-
10 டொலர் அல்லது 1000 ரூபாவால் ஒன்றால் எமக்கான சினிமா ஒன்றை கண்டடையலாம்...
அன்பு உறவுகளுக்கு வணக்கம்..
எம் வலிகளையும் கதைகளையும் வாழ்வியலையும் சொல்வதற்கு எமக்கென்றொரு சினிமா வேண்டும் எனப் போராடிக் கொண்டிருப்பவரில் நானும் ஒருவன்.
இதுவரை எம் கதைகளைச் சொல்லும் 15 குறும்படங்களைச் செய்துள்ளதுடன் அதற்காக பல சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறேன். அண்மையில் வல்வைப் படுகொலையை ஆவணப்படமாகச் செய்திருந்தேன்.
தங்கள் பார்வையில் வேண்டி நிற்பது. எமக்கென்று இங்கு தயாரிப்பாளர்கள் இல்லை இருப்பவர்களும் இன்னொரு தளத்தில் உள்ள சினிமாவை வளர்க்கத் தான் பணம் இறைக்கும் நிலையில் எமக்கென்றான சினிமாவை Crowedfunding முறையில் தான் உருவாக்கலாம். இதற்காக கடந்த ஒரு ஆண்டாக சேகரிப்பில் ஈடுபட்டு 129 பேரின் பங்களிப்புடன் 15 இலட்ச ரூபாய்களை சேர்த்திருக்கிறேன்.
படத்தலைப்பு - சொர்க்கத்தின் இருள் நாட்கள் (Dark days of heaven)
கதைச் சுருக்கம் - இறுதி யுத்த காலத்தில் ஒரு காணிக்குள் மாட்டுப்பட்டுள்ள ஒரு கூட்டுக்குடும்பத்துக்குள் நடக்கும் உணர்வுப் போராட்டம்
படத்துக்குரிய செலவு - 28 இலட்சத்து 50 ஆயிரமாகும்.
ஒரு பங்கின் பெறுமதி 1000 இலங்கை ரூபாயாகும். (மிக மிக குறைந்த பட்ஜெட் படம் என்பதால் பணம் மீளளிப்பிற்கான உத்தரவாதம் உறுதிப்படுத்தப்படுகிறது) இம்முயற்சிக்கு தற்போது உங்களால் இணைய முடியாவிட்டாலும் உங்கள் நண்பர்களுக்காவது இத்தகவலை அறிமுகப்படுத்தி விடும்படி அன்போடு வேண்டி நிற்கிறேன்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
ஒப்பந்த விபரம் இத் தொடுப்பில் உள்ளது
https://drive.google.com/open?id=1G2SxnfvJ_cqzus2Dc8idI1sw7x3liku1
இதுவரை நான் செய்த குறும்படங்கள் சில....
1) பாதுகை
2) தாத்தா