Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழரசு

  1. சோழியனுக்கும் புத்தனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  2. இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 101 வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
  3. செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் ராஜீ, ஜான்சன், யுவராஜ், மணிகண்டன், கிராந்தி ஆகியோர் கல்லூரி முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது, கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களை காக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்று 5வது நாளாக நீடிக்கிறது. இதனால் மாணவர்கள் சோர்வடைந்து படுத்து கிடக்கின்றனர்.இந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும். இதுபற்றி உடனடியாக அறிவிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களின் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார். உண்ணாவிரதம் இருக் கும் மாணவர்களை தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அனகை முருகேசனும் சந்தித்து போராட்டம் வெற்றியடைய வாழ்த்தினார். http://www.seithy.com/breifNews.php?newsID=94965&category=IndianNews&language=tamil
  4. யாழ் அன்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
  5. தமிழின படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது, இலங்கையை அந்த மாநாட்டில் இருந்து வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும், அதையும் மீறி நடந்தால் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவினர் கும்பகோணம் ரயில் நிலையத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.இதையறிந்த போலீசார் 23 மாணவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். இதை கண்டித்தும், சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் தியாகுவிற்கு ஆதரவு தெரிவித்தும் பல்வேறு கல்லூரி மாணவர்களை சேர்ந்த பிரபாகரன், ராஜ்குமார், கவியரசன், பிரசாத், சைமன், மதியழகன், கிருஷ்ணகுமார் ஆகியோர் நேற்று நள்ளிரவு கும்பகோணம் காந்தி பூங்கா அருகே திடீரென சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=94833&category=IndianNews&language=tamil
  6. ஒஸ்கார்..ஒஸ்கார்..என்ற சங்கேத அழைப்பிற்குரிய அந்த பெருவீரன் தாயக மண்ணில் விதையாகி 27ஆண்டுகள் கடந்து போய்விட்டன. விக்டர், இவன் அச்சம் கொஞ்சமும் இல்லாத பெருவீரன் ,பழகும்போது குழந்தையை போல பழகும் மனதுள்ளவன் களங்களில் நெருப்புகனரும் விழிகளுடன் உத்தரவிடும் ஆளுமைமிக்க தளபதி…. 1981ன் இறுதிப் பகுதியில் விக்டரின் விடுதலைப்புலிகளுடனான தொடர்பு ஆரம்பிக்கிறது. ஆரம்பப் பொழுதுகளில் அமைப்புக்குள் உள்வாங்குவதற்கான அனைத்து கவனிப்புகளிலும் விக்டரின் உறுதி தலைமையால் கவனிக்கப்பட்டு பயிற்சிக்காக முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருந்த முகாம் ஒன்றுக்கு அனுப்பப்படுகின்றான். அங்கே லிங்கம், பொட்டு, பசீர், ரஞ்சன், கணேஸ், விக்டர், ஆனந்த் ஆகியோரும் இன்னும் சிலருக்கும் தலைவர் நேரடியாகவே பயிற்சிகளை ஆரம்பிக்கிறார். பயிற்சி முகாமின் உணவுப்பிரிவில் மூத்த உறுப்பினர்களான கிட்டுவும், ரஞ்சன்லாலாவும் இருக்கின்றனர். உடற்பயிற்சியாளராக செல்லக்கிளி அம்மான் இருக்கிறார். இந்த பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த அதிகமானவர்கள் உறுதியிலும், விடுதலைப் போராட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் பற்றிய தெளிவிலும் தமது இறுதிக்கணம் வரைக்கும் மலையை நிகர்த்த உருக்கு உறுதியுடன் நின்றதற்கு காரணம் தலைவரின் நேரடி பயிற்சி, பயிற்சியின் பின்னான மாலைப் பொழுதுகளில் அமைப்பின் மூத்த உறுப்பினர்களான செல்லக்கிளி அண்ணா, சீலன், கிட்டு, ரஞ்சன், புலேந்திரன் ஆகியோர் உட்பட மற்றும் சிலரும் இணைந்த அனுபவ பங்கீடுகள். இவைகளேதான் விக்டரையும் ஒரு உன்னதமான போராளியாக, மிகப்பெரும் வீரனாக வரித்தெடுத்த காரணிகளாகும். சக போராளிகள் அனைவர் மீதும் அளவற்ற அன்பும், பாசமும் காட்டும் ஒரு பெரிய குழந்தையாக அவன் இருந்தான். அதிலும் பயிற்சிக்கு முன்னரும் பயிற்சிக்கு பின்னரும் அவன் இருந்த இளவாலைப் பகுதியில் அமைந்திருந்த வீட்டில் அவனுடன் இருந்தோர் இன்றும்கூட அவனின் நினைவுகளையும் செயல்களையும் ஒருவகையான பெருமிதத்துடனும் ஈர்ப்புடனும் கண்களில் ஒளிபொங்க நினைவு கூருவதை பார்க்கலாம். விக்டரின் அஞ்சாமையையும், சீறிப்பாயும் துப்பாக்கி சன்னங்களுக்கு மத்தியிலும் நிதானமாக நகரும் அவனின் வேகத்தையும் அந்த நேரம் இருந்த போராளிகளுக்கு அடையாளம் காட்டியது திருநெல்வேலி தபாற்பெட்டி சந்தியில் 1983யூலை 23ல் சிங்கள இராணுவத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும். மிகவும் செறிவான வாகனப் போக்குவரத்தும், சிங்கள காவல்துறை,சிங்கள இராணுவ நடமாட்டம் என்பன அடிக்கடி நிகழும் திருநெல்வேலி வீதியில் இரவில் வீதியை குழிதோண்டி அதில் சக்கையை வைத்து எக்ஸ்புளோடருக்கு தொடர்பு கொடுக்கும் வேலையை செல்லிக்கிளி அம்மான், அப்பையா அண்ணை ஆகியோருடன் இணைந்து செய்து முடித்தவன் விக்டர். விக்டர் அமைப்பில் இணைந்த பிறகு மன்னார் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல்களில் அநேகமாக அனைத்திலும் விக்டரின் நேரடி பங்களிப்பும் விக்டரின் எம்16 கிறனைற் செலுத்தியின் வெடிப்பும் இருந்தே இருக்கும். மன்னார் பொலிஸ்நிலையம் மீதான தாக்குதலில் விக்டருடன் குமரப்பா போன்றோர் இணைந்திருந்தாலும்கூட அந்த தாக்குதலுக்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு என அனைத்தையும் அற்புதமாக கையாண்டவன் விக்டர். வெறும் தாக்குதல்களை மட்டும் நடாத்திக் கொண்டிருக்காமல் சிங்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட மன்னார் பிரதேசத்தின் பகுதிகளில் மக்கள் அமைப்புகளை உருவாக்குவதிலும், மக்கள் மத்தியில் விடுதலைப் போராட்டம் பற்றி தெளிவையும், அரசியல் அறிவையும் ஊட்டுவதிலும் விக்டரின் செயற்பாடுகள் மிகவும் ஆழமாக அமைந்திருந்தன. அவன் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்டதற்கு பின்னால் மக்களுடனான அவனின் ஆத்மார்த்தமான தொடர்பே காரணமாகும். விடுவிக்கப்பட்ட மன்னார் நிலப்பகுதியில் விக்டர் பயிற்சி முகாம்களையும் உருவாக்கி ஏராளமான புதிய போராளிகளை தாய்மண்ணிலேயே உருவாக்குவதிலும் முனைப்புடன் செயற்பட்டவன். விக்டர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காட்டிய உறுதியும், தலைமைப் பண்பும், வீரமும் மிகவிரைவாகவே அவனை விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் என்ற அதியுச்ச நிர்வாக மையத்துக்குள் உள்வாங்கி கொண்டது. சிங்கள தேசத்தின் இராணுவத்தினரை தமிழீழ மண்ணில் இருந்து துரத்தும் நடவடிக்கை தினமும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக் கிடப்பதும்,சிலவேளைகளில் முகாம்களை விட்டு சிறிய தொகையாக வெளிவரும் இராணுவத்தினரை உடனடியாக அந்த பகுதிக்கு விரையும் விடுதலைப்புலிப் போராளிகள் விரட்டியடிப்பதும் அன்றாட நிகழ்வுகள் அப்போது. அப்படியான ஒருபொழுதில் 12.10.1986 அன்று அதிகாலையில் அடம்பன்நகருக்குள் ராணுவம் நுழைந்துவிட்டதாக கிடைத்த தகவலை அடுத்து கருக்காய்க்குளத்தினூடாகவும், ஆண்டான்குளப் பகுதியாலும்,நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளத்தினூடாகவும் அடம்பனுக்குள் விக்டரின் தலைமையில் நுழைந்து விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குலில் சிங்கள இராணுவத்துக்கு துணையாக கெலிகொப்படரும் வந்து தாக்குதலை ஆகாயத்தில் இருந்து நடாத்தியபோதும் வீரமுடன் போரிட்ட அந்த தளபதி அந்த தாக்குதலில் துப்பாக்கி சன்னம் ஒன்று நெஞ்சுக்குள்ளாக புகுந்து சென்று விட வீரமரணமடைகிறான். ஒருமாமலையின் சரிவாக விக்டரின் மரணம் அமைப்பை உலுக்கியது அந்த பொழுதில். தலைமை கொடுக்கும் பணியை செயற்படுத்தும் திறனும், அதனை செயற்படுத்தியே தீரவேண்டும் என்ற இலட்சிய உணர்வும் உடைய ஒரு பெருவீரன் அவன். விக்டர் மரணித்த அந்த சண்டையில்தான் முதன்முதலாக பெண்கள் அணி தாக்குதலில் நேரடியாக இறக்கப்பட்டனர். நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளம் கடந்து அடம்பனுக்குள் நுழைந்த சாஜகானின் அணியில் விக்டரின் வழிகாட்டலில்தான் முதலில் பெண்புலிகள் எதிரிக்கு எதிரான சண்டையில் நின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்த சண்டையில்தான் முதன்முதலாக சிங்கள இராணுவத்தை செர்ந்த இரண்டு வீரர்கள் உயிருடன் பிடிக்கப்படுகிறார்கள். 2வது லெப்.அஜித் சந்திரசிறீ, கோப்ரல் கே.டபிள்யூ பண்டார ஆகியோரே பிடிக்கப்பட்ட சிங்கள இராணுவத்தினர். விக்டர் தாயக மண்ணில் வீழ்ந்துவிட்ட தாக்குதலில்கூட அவன் இன்னொரு அங்கீகாரத்தையும், விடுதலைப் போராட்டத்துக்கு பாரிய எழுச்சியையும் இந்த இராணுவ வீரர்களின் கைதுகள் மூலம் உருவாக்கிச் சென்றிருந்தான். சிங்கள தேசத்துடன் தமிழர் தேசம் ஒரு உத்தியோகபூர்வமான கைதிகள் பரிமாற்றத்தைச் செய்வதற்கு விக்டரின் அடம்பன் சண்டையில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் காரணமாக இருந்தனர். இப்போது இருபத்தேழு வருடங்களாகி விட்டது. விக்டர் என்ற அற்புதமான மாவீரனின் நினைவுகளும், மாசுமறுவற்ற அவனின் உன்னதமான இலட்சிய பற்றும் என்றென்றும் எமது மக்களால் இதயத்தின் ஆழத்திலிருந்து நினைவு கொள்ளப்படும். http://www.ttnnews.com/othernews/3230-2013-10-12-03-01-16
  7. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து.... உலக வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும், அதிசயமான அர்ப்பணிப்புகளும் இங்கு, எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. சாவுக்கும் அஞ்சாத வீரத்திற்கும், ஈகத்திற்கும் இலட்சியப் பற்றிற்கும் எமது மாவீரருக்கு நிகர் எவருமேயில்லை என நான் பெருமிதத்துடன் கூறுவேன். இப்படியானதொரு மகிமையும், மேன்மையும் வாய்ந்த ஒரு மகத்தான வீரகாவியத்தை எமது மாவீரர்கள் படைத்துச் சென்றிருக்கிறார்கள். எமது போராட்டம் ஒரு உந்துசக்தியாக, ஒரு முன்னுதாரணமாக, ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது. முழு விபரம் இணைப்பை சொடுக்கவும் : http://veeravengaika...ninaivuvanakkam தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  8. 10.10 - கிடைக்கப்பெற்ற 35 மாவீரர்களின் விபரங்கள். துணைப்படை வீரவேங்கை வனிதன் நாகராசா வனிதராசா திருகோணமலை வீரச்சாவு: 10.10.2000 மேஜர் இளம்பருதி அருட்சோதி உதயராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.10.2000 கப்டன் ஊக்கவீரன் சிவமணி ஜெகன்மோகன் திருகோணமலை வீரச்சாவு: 10.10.2000 லெப்டினன்ட் அமலன் சிறிரங்கநாதன் சதீஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.10.2000 லெப்டினன்ட் தணிகைமணி சோலைமலை இராஜேஸ்வரன் மன்னார் வீரச்சாவு: 10.10.2000 கப்டன் சகாயம் முனியாண்டி தவராசா மன்னார் வீரச்சாவு: 10.10.2000 மேஜர் கலைவாணன் கதிரவேலு தர்மசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.10.2000 சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை சுந்தரராஜன் வேலு சுந்தரராஜன் கிளிநொச்சி வீரச்சாவு: 10.10.2000 வீரவேங்கை ஆடலமுதன் (மான்பாலன்) இராஜரட்ணம் இராஜேந்திரகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 10.10.1998 வீரவேங்கை தென்றல் வேல்சாமி ராதா முல்லைத்தீவு வீரச்சாவு: 10.10.1998 லெப்டினன்ட் அருள் பொன்னையா பாலசுப்பிரமணியம் மாத்தளை, சிறிலங்கா வீரச்சாவு: 10.10.1997 லெப்டினன்ட் தமிழவன் பிலுப்பையா அலெக்ஸ்கிறேசியன் கிளிநொச்சி வீரச்சாவு: 10.10.1997 கப்டன் செங்கதிர் டொனாற்றஸ் சத்தியசீலன் திருகோணமலை வீரச்சாவு: 10.10.1997 வீரவேங்கை வாணவன் துரைராஜா யோகேந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 10.10.1993 துணைப்படை 2ம் லெப்டினன்ட் சிவகுமார் இராசதுரை சிவகுமார் வவுனியா வீரச்சாவு: 10.10.1993 வீரவேங்கை இந்திரன் கனகரத்தினம் இந்திரவேல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.10.1990 வீரவேங்கை தயாளன் துரைசிங்கம் ஜீவன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.10.1990 2ம் லெப்டினன்ட் சிவா எட்வேட் யோசப் விவேகானந்த நகர், கிளிநொச்சி. வீரச்சாவு: 10.10.1988 வீரவேங்கை ரவிகாந் (ரவிக்குமார்) அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் பாப்பாமோட்டை, மாந்தை, மன்னார். வீரச்சாவு: 10.10.1988 2ம் லெப்டினன்ட் கருணா சவரி யோகரட்ணம் கன்னாட்டி, அடம்பன், மன்னார். வீரச்சாவு: 10.10.1988 2ம் லெப்டினன்ட் றியாஸ் சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன் நானாட்டான், மன்னார் வீரச்சாவு: 10.10.1988 2ம் லெப்டினன்ட் ராஜேந்தர் மாரியப்பன் சிறீதரன் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு. வீரச்சாவு: 10.10.1988 2ம் லெப்டினன்ட் ஜெயந்தன் பிலிப்பு பிரான்சிஸ் நாவற்குளம், மன்னார். வீரச்சாவு: 10.10.1988 2ம் லெப்டினன்ட் இராசதுரை (எம்.ஜி.ஆர்) மனுவல் அந்தோனிதாஸ் பரப்புக்கடந்தான், மன்னார். வீரச்சாவு: 10.10.1988 லெப்டினன்ட் பார்த்தசாரதி நடராசா யோகநாதன் முள்ளியவளை, முல்லைத்தீவு. வீரச்சாவு: 10.10.1988 லெப்டினன்ட் ஆனந் இ.ரகு குருமன்காடு, வவுனியா. வீரச்சாவு: 10.10.1988 லெப்டினன்ட் பீற்றர் மனுவேல் யோகராசா பரப்புக்கடந்தான், மன்னார். வீரச்சாவு: 10.10.1988 கப்டன் சைமன் (ராசா) தொம்பை அந்தோனி அடம்பன்தாழ்வு, வட்டக்கண்டல், மன்னார் வீரச்சாவு: 10.10.1988 மேஜர் தாடிபாலா சண்முகம் இராசரத்தினம் ஆனந்தர்புளியங்குளம், வவுனியா. வீரச்சாவு: 10.10.1988 2ம் லெப்டினன்ட் கஸ்தூரி வதனீஸ்வரி கோபாலப்பிள்ளை வட்டக்கச்சி, கிளிநொச்சி வீரச்சாவு: 10.10.1987 வீரவேங்கை ரஞ்சி யோகம்மா கதிரேசு அலைக்கல்லுபோட்டகுளம், ஓமந்தை, வவுனியா. வீரச்சாவு: 10.10.1987 வீரவேங்கை தயா செபஸ்ரியான் சலேற்றம்மா பெரிய நாவற்குளம், மாந்தை, மன்னார். வீரச்சாவு: 10.10.1987 2ம் லெப்டினன்ட் மாலதி சகாயசீலி பேதுறு ஆட்காட்டிவெளி, அடம்பன், மன்னார் வீரச்சாவு: 10.10.1987 வீரவேங்கை நிமல் பொன்னையா பூபாலசிங்கம் கெற்பெலி, மிருசுவில், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 10.10.1987 வீரவேங்கை அன்ரன் இரத்தினம் பரமேஸ்வரன் வீமன்காமம், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 10.10.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இம் 35 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.