Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழரசு

  1. தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
  2. 11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் எழில்வேந்தன், லெப்.கேணல் வேங்கை, லெப்.கேணல் திருவருள் உட்பட்ட கடற்புலிகள் மற்றும்லெப்.கேணல் தமிழ்மாறன்(கஜேந்திரன்) ஆகியோரினதும் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். http://www.tamilthai.com/?p=26450
  3. தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
  4. Saturday, September 10, 2011, 1:30 தமிழீழம், மாவீரர்கள் 10.09.1997 அன்று புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில்வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பாவரசன்(பைப்) அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள். 10.09.2000 அன்று யாழ். கொழும்புத்துறைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சிவம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் 10.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் செண்பகச்செல்வன், லெப்.கேணல் எரிமலை, லெப்.கேணல் முல்லைமாறன், லெப்.கேணல் சிறிகாந்த், லெப்.கேணல் வீமன்(ஜது) உட்பட்ட கடற்புலிகளினதும், லெப்.கேணல் கலையழகன்(லுஜின்) ஆகியோரதும் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 10.09.1995 அன்று காங்கேசன்துறைத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதியின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். லெப். கேணல், கலையழகன் (லூயின்) சாள்ஸ்அன்டனிசிறப்புபடையணி தமிழ் எல்லை தாண்ட எத்தனித்த எமனை முகமாலை முன்னரங்கில் நீதனே!! செங்களம் ஆடியவன் சிங்களத்தைச் சிதறடித்தாய்…… நில் எனத் தடைபோட்டாய் நிறுத்தி வேலியிட்ட - எங்கள் கட்டளைத் தளபதியே – கலையழகன் !! வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,, வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,, வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,, ஈனப் படைகொண்ட கயவர் கூட்டத்தை – எல்லையில் உடல் கிழித்துப் போர்க்களத்தில் புறமுதுகிட ச் செய்தாய் தலைவன் தத்தெடுத்த தாக்குதல் தளபதியே……………….. வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,, வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,, வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,, http://youtu.be/JS05jYgZ2sI > http://www.tamilthai.com/?p=26371
  5. Posted by: on Sep 8, 2011 மாதம் ஒரு முறை நடக்கும் துளசிராம் இலக்கிய வட்டத்திற்குச் சென்ற போது நிலவனைச் சந்தித்திருக்கிறேன். அவனை நான் பெரிது படுத்தியதில்லை. சக போராளி என்ற மதிப்பை மாத்திரம் கொடுத்தேன். அதற்கு மேல் என்னத்தைச் செய்ய முடியும். அவனுடைய வரலாறு சில வருடங்களுக்குப் பிறகு கிடைக்கப் பெற்றேன். அதை முழுமையானது என்று சொல்ல முடியாது. துண்டுகளாகச் சில செய்திகள் வாய்வழியாக கிடைத்தன. அவற்றைப் பொருத்தி எழுதுகிறேன். வரலாறு என்று தலைப்பிட்டாலும் துணுக்குகள் என்றால் மிகப் பொருத்தம். துளசிராம் மட்டக்களப்புப் போராளி. இலட்சியத்திற்காக உயிரீகம் செய்த மாவீரன். எழுத்தில் வல்லவனான இந்த மாவீரன் நினைவாக இந்த இலக்கிய வட்டம் உருவாக்கப்பட்டது. அனேகமான சந்திப்புக்கள் உழவனூர் நவம் அறிவு கூடத்தில் நடக்கும் விழுப்புண் அடைந்த மாற்றுத் திறனாளிகளாக மாற்றப்பட்ட போராளிகளுக்கான நவம் அறிவு கூடம் தெரிவு செய்யப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது. நாங்கள் நடத்திய இலக்கிய அலசல்கள் அவர்களுக்கு தேவைப் பட்டது. எங்களிலும் கூடிய ஆர்வத்தை அவர்கள் காட்டினார்கள். நிலவன் கவிதைகள் புனைவான், எழுச்சிப் பாடல்களைப் பாடுவான் புத்தகங்கள் பற்றிப் பிறர் பேசுவதைக் கேட்டபின் விமர்சனக் கேள்விகளைக் கேட்பான். அவனிடம் சிறந்த அறிவு மண்டலம் இருந்தது. அவன் ஏன் மேற் படிப்பை நிறுத்திவிட்டு போராட்ட வாழ்வுக்கு வந்தான் என்று தெரியவில்லை. ஆனையிறவுப் போரில் வீரச்சாவு அடைந்த பிறகு தான் அவன் கரும்புலி அணியைச் சேர்ந்தவன் என்பது வெளிச்சமாகியது. எங்கள் பார்வையில் மிகச் சாதாரணமானவன் மிக உயர்ந்த இடத்திற்குப் போய்விட்டான். கரும்புலிகள் இறந்த பிறகு தான் வெளிப்படுவார்கள். அதற்கு முன்பு அவர்களை இனங் காண முடியாது. நிலவன் வேவுப் புலியாகவும் திறமையைக் காட்டியவன். மாங்குளம் இராணுவ கட்டுப்பாட்டுக் காட்டில் வேவு பார்க்கும் போது ஒரு சிங்களப் படையாளைச் சந்தித்தான். காட்டின் ஊடாக பத்து கிலோமீற்றர் தூரம் ஓடிச் சென்று திரும்பும்படி அந்தப் படையாளுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவன் செய்த ஏதோ குற்றத்திற்காக இந்த தண்டனையை அவன் ஓடி நிறைவேற்றினான். நிலவனும் அவனுக்குப் பேச்சுக் கொடுத்தபடி சேர்ந்து ஒடினான். எனக்கும் உன்னைப் போல் தண்டனை என்று சொல்லி நிலவன் அந்தப் படையாளுக்குச் சிரிப்பூட்டினான். அவனோடு சேர்ந்து ஒடிக்கொண்டு மாங்குளம் படை முகாமுக்குள் நுளைந்தான். முகாமுக்கு வழங்கல்களுடன் வந்த உலங்கு வானூர்தியைக் கண்ட நிலவன் அதைச் சுட்டு வீழ்த்தி விட்டுக் காட்டுக்குள் தப்பிச் சென்று மறைந்தான். ஆனையிறவுப் படை முகாம் வெற்றித் தாக்குதலுக்குத் தேவையான தரவுதிரட்டும் பணியை நிலவன் மேற்கொண்டான். முகாமுக்குள் நுளைந்து படையாட்களுடைய படுக்கையில் படுத்துறங்கி, அவர்களுடைய உணவைத் தின்று பிடிபடாமல் தரவுகளைத் திரட்டினான். இப்படிப் பல தீரமிகு பணிகளில் அவன் ஈடுபட்டதாக அரசல் புரசலாகக் கதைகள் பேசப்படுகின்றன. அவன் யார், எந்த ஊரவன், உறவினர்கள் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை. அவன் அவற்றைப் பற்றிப் பேசுவதில்லை. கேட்டால் மழுப்பல் பதில் கிடைத்ததாகவும் சொன்னார்கள். இரு வருடங்களுக்கு முன்பு கிழக்குப் பல்கலைக் கழகப் பெண் விரிவுரையாளர் ஒருவருடன் பேசும் போது போராளிகளின் கவித்திறம் பற்றி அலசினோம். அப்போது துளசிராம் வட்டம் பற்றியும் நிலவன் பற்றியும் குறிப்பிட்டேன். ”தம்பி” என்று பெருங்குரலில் அழுதபடி அவர் மயக்கம் அடைந்தார். விதுரன் http://www.tamilkathir.com/news/5310/58//d,view.aspx
  6. பதிந்தவர்: தம்பியன் வியாழன், 25 ஆகஸ்ட், 2011 கேணல் ராயு [குயிலன்] (அம்பலவாணர் நேமிநாதன்) ஏழாலை, யாழ். வீரப்பிறப்பு: 30.05.1961 வீரமரணம்: 25.08.2002 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தவர் கேணல் ராயு. முதலாவது சிறப்புக் கொமாண்டோ படையணியை உருவாக்கியவர். விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். விடுதலைப் போரின் முதலாவது கனரக ஆட்லறிப் பீரங்கிப் படையணியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மாவீரன் கேணல் ராயு. அன்று சுகயீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்டார். கேணல் ராயுவின் இறுதி வணக்க நிகழ்வு. தமிழீழத் தேசியத் தலைவரும், தளபதிகளும், போராளிகளும் பெரும்தொகையான மக்களும் அஞ்சலி செலுத்திய கேணல் ராயுவின் வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. மாவீரர் மகுடம்: கேணல் ராயு http://youtu.be/zcul20OB-l0 http://www.vannionline.com/2011/08/8-25082002.html
  7. நன்றாகவுள்ளது ஆனாலும் பலர் சிரமப்படுவது போல் உள்ளது கருத்துகளத்தில் பலர் எழுவது இல்லை காரணம் புரியவில்லை மோகன்.
  8. கலைஞர் டிவி எப்படி செயல்படுகிறது என்று எனக்குத் தெரியாது: கனிமொழி பதிந்தவர்: தம்பியன் வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், இரண்டு வாரங்களாக, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. டில்லி வழக்கறிஞர்கள், நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணை தடைபட்டது. வழக்கறிஞர்கள் யாரும் நேற்று, வாதாட மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு, நீதிபதி ஓ.பி.சைனி, அனுமதியளித்தார். இதையடுத்து, ஒவ்வொருவராக, தங்கள் கருத்துக்களை, சுருக்கமாக, அதிகாரபூர்வமற்ற வகையில், எடுத்து வைத்தனர். தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ‘’கலைஞர் டிவி' செயல்பாட்டிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள், எப்படி செயல்படுகின்றனர் என்பதும், அங்கு என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதும் எனக்குத் தெரியாது'என்றார். கலைஞர் டிவி' மேலாண் இயக்குனர் சரத் குமார் கூறுகையில், ’’கடந்த சில மாதங்களாக, சிறையில் நாங்கள் அவதிப்படுகிறோம். குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் மீது, இன்னும் குற்றப்பத்திரிகை கூட, தாக்கல் செய்யவில்லை'என்றார்.
  9. பொதுவாக செய்திகளை தகவல்களையோ இணைக்கும் போது NEW TOPIC என்னும் பகுதியை கிளிக் செய்துதான் இணைப்பேன் ஆனால் இப்போது அந்தப்பகுதியில் தனியே REPLY TO THIS TOPIC என மட்டும்தான் வருகின்றது மோகன்.
  10. ஏன் என்னால் செய்திகளை வெட்டி ஒட்ட முடியவில்லை ? ஏதாவது காரணங்களுக்காக எனக்கு தடை செய்யப்பட்டுள்ளேனா??
  11. இன்று பிறந்த நாள் காணும் அர்ஜுனுக்கும் என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ......
  12. ரதி என் பெயரை மாத்த கேட்ட ?
  13. நான் புதிய உறுப்பினர் அனைவருக்கும் எனது வணக்கம். தலைவனின் வழியில் தமிழ் ஈழம் அடைவது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.