Everything posted by மகம்
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழ்ச்செல்வன் அணையாத் தீயாய் தொடரும் மாணவர் போராட்டம் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் பேரெழுச்சியை நோக்கி.. ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு விட்டது. மாணவர்களின் எழுச்சியைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டிருந்த காலவரையற்ற விடுமுறை முடிவுக்கு வந்து கல்லூரிகள் தொடங்கி விட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் ஈழத் தமிழருக்கு விளையப் போகும் நன்மை என்ன? மாணவர் போராட்டம் எப்படித் தொடரப் போகின்றது? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. முள்ளிவாய்க்காலோடு முடிந்துவிடாத போராட்டம்: 2008 – 2009 ஆம் ஆண்டுகளில் இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையைத் தமிழ்ச் சமூகம் சந்தித்தது. ஈழத் தமிழர் மீதான இன அழிப்புப் போர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது. ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதோடு தமிழீழ விடுதலைக்கான 60 ஆண்டுகாலப் போராட்டத்தைச் சிதைத்தது இலங்கை அரசு. அப்போரை உலக நாடுகள் ஆதரித்து உதவியும் வேடிக்கைப் பார்த்தும் நின்றன. போரை நிறுத்தக் கோரி தமிழகம் மேற்கொண்ட போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே இலங்கை அரசுக்கு அனைத்து வகையான உதவிகளையும் இந்திய அரசு செய்தது. போர் முடித்த பிறகு இனக்கொலைச் செய்த சிங்கள அரசு ஈழத்தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை எல்லாம் சிங்களமயமாக்கி வருகின்றது. வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்திய ஈழத் தமிழர்கள் இன்று மூச்சுவிடக் கூட வழியின்றி சிங்கள இராணுவப் பிடியில் சிக்கியுள்ளனர். வடக்கு பகுதியில் மட்டும் 2 இலட்சம் சிங்கள இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தமிழர் தாயக பகுதிகளான இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றிக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு. தமிழர் அடையாளங்களை அழித்து, தமிழர் நிலத்தை பறித்து, இன அழிப்பை முடிக்க வேகமாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு. ஈழத்தில் கட்டமைப்புரீதியான இனப்படுகொலை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இன்னொருபுறம் தமிழ்நாட்டுத் தமிழர்களும் புலம் பெயர் வாழ் தமிழர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பொறுப்புணர்வோடு களம் இறங்கி இருக்கின்றனர். இது சிங்கள அரசின் கொக்கரிப்புக்கு சவாலாகி இருக்கின்றது. புலம்பெயர் வாழ் தமிழர்கள் சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் அளப்பெரும் பணியாற்றி வருகின்றனர். போர்க்குற்ற ஆவணங்களையே போர்க் கருவியாகக் கொண்டு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தமிழரின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். இது சர்வதேச நாடுகளைத் தன் பக்கம் வைத்துக் கொள்ள பெருமளவில் பணத்தையும் உழைப்பையும் செலுத்த வேண்டிய நிலைக்கு இலங்கை அரசைத் தள்ளியுள்ளது. இனப்படுகொலையைத் தடுக்க முடியாத குற்றவுணர்ச்சியுடன் தமிழகம் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு துணை நிற்கும் தன்னுடைய வரலாற்றுக் கடமையை முன்னெப்போதும் இல்லாத அளவில் செய்து கொண்டிருக்கின்றது. இனப்படுகொலைக்கு துணை நின்றதோடு இன்று வரை இலங்கை அரசைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு தமிழகம் போராடிக் கொண்டிருக்கின்றது. சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக எழுந்து நிற்பதற்கானத் தருணத்தை எதிர்பார்த்து ஈழத் தமிழர்கள் காத்திருக்கின்றனர். இன அழிப்புப் போரின் அவலத்தில் இருந்தும் இழப்புகளிலிருந்தும் மெல்ல மீண்டு வந்து இன அழிப்புக்கு எதிராகப் போராடுவதற்கு புலம்பெயர்வாழ் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்களின் போராட்டம் துணை செய்து கொண்டிருக்கின்றது. 2013 இல் மாணவர் எழுச்சி: முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் 13 வயது மகன் பாலசந்திரன் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியானது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை தொடர்பான தீர்மானம் வரப்போவதாக செய்தி வந்தது. தமிழ்நாட்டு மக்களின் கொந்தளிப்பின் வெளிப்பாடாக தமிழக மாணவர்கள் போராட்டக் களத்தில் இறங்கினர். தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களின் போராட்டம் பெருந்தீயாகப் பற்றி எரிந்தது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தவில்லை. இலங்கை அரசே கொண்டு வந்த கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின் பரிந்துரைகளை (LLRC) முன் வைத்தது. அந்த தீர்மானத்தை மேலும் சீர்குலைப்பதில் இந்திய அரசின் பேருதவியுடன் சிங்கள அரசு வெற்றிப் பெற்றது. இறுதியாக சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தாத மற்றும் இலங்கை அரசு நடத்தி வரும் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையை நடத்தி முடிப்பதற்கான கால அவகாசத்தைக் கொடுக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாணவர் போராட்டம் தமிழகத்தின் பல்வேறு தரப்பு மக்களை போராட்டக் களத்திற்கு இழுத்து வந்தது. பன்னாட்டு இனப்படுகொலை விசாரணை, தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்புக் கோரிக்கை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் செல்லப்பட்டது. இதன் வெற்றியாக, ’தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’ என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்து காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க., காங்கிரசு தலைமையிலான மத்திய அரசின் சிங்கள ஆதரவு நிலைப்பாட்டை எதிர்த்து கூட்டணியில் இருந்து வெளியேறியது. ஆனால், இந்திய அரசு தன் நிலைப்பாட்டில் இருந்து கொஞ்சமும் மாறியதாக தெரியவில்லை. ஈழ விடுதலைக்கு தடையாய் இந்தியாவென்னும் பெருஞ்சுவர்: தமிழினப்படுகொலை செய்து வரும் சிங்கள அரசுக்கு ஆதரவை அளித்து வருகின்றது இந்திய அரசு. ஈழத்தில் உள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த அடையாளமும் அழிந்து போய் விடும் அபாயம் நிலவுகின்றது. தெற்காசியாவில் உள்ள மிகப் பெரும் நாடாகவும், 7 கோடி தமிழர்களைக் கொண்ட நாடாகவும் இந்தியா விளங்கிக் கொண்டிருப்பதால் இந்தியாவின் இசைவின்றி ஈழத் தமிழர் தொடர்பான எந்த ஒரு சர்வதேச நகர்வும் நடப்பது இல்லை. சர்வ தேச நாடுகளின் ஆதரவை திரட்டும் புலம்பெயர் தமிழர்களின் முயற்சியும் இந்தியா என்னும் முட்டுச் சந்தில் வந்து நிற்கின்றது. ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தடையாக இந்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கை விளங்குகின்றது. இந்திய அரசின் சிங்கள ஆதரவு நிலைப்பாட்டை மாற்றி தமிழீழ விடுதலைக்கானத் தடைகளை உடைப்பதே ஈழ விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கிய புவிசார் அரசியலாக இருக்கின்றது. இந்த பணியைச் செய்து முடிக்கும் கடமை தமிழ்நாட்டு மக்களிடம் தான் இருக்கின்றது. அந்த கடமையை நிறைவேற்றுவதற்கான முதன்மை பொறுப்பை வரலாறு தமிழ்நாட்டு மாணவர்களிடம் கையளித்து இருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம். தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு: மார்ச் மாதத்தில் தமிழகத்தைச் சூழ்ந்த போராட்ட மேகம் இலயோலா கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்த பட்டினிப் போராட்டத்தில் இருந்து மின்னலுடன் இடிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மார்ச் 13 ஆம் தேதி இந்திய அரசின் தமிழர் விரோத போக்கை கண்டிக்கும் விதமாக சென்னையில் உள்ள மத்திய அரசின் வருமான வரி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இம்முற்றுகையில் சென்னை மற்றும் செங்கல்பட்டில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர். அதிலிருந்து போராட்டக் களத்தில் இறங்கிய பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களோடு இணைந்து போராட்டத்தைத் தொடர்ந்து முன் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு மார்ச் 14 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. அன்றளவில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவப் பிரதிநிதிகள் மாணவர் போராட்டக் குழுவில் இருந்தனர். இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரனையை வலியுறுத்தியும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தும் தீர்மானத்தைக் கொண்டு வரக் கோரியும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரியும் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவின் சார்பாக மார்ச் 18 ஆம் தேதி முதல் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டமும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு அனைத்துக் கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறையை அறிவித்தது. கல்லூரிகள் மூடப்பட்ட நிலையிலும் மார்ச் 18 ஆம் தேதி அன்று பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர் போராட்டம் தீவிரமடைந்தது. சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டது. தொடர்ச்சியாக மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, மாணவர் பேரணி என்று நாள்தோறும் போராட்டம் வளர்ந்தது. இந்த வரிசையில் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் இராணுவ தலைமையகம் மற்றும் அகில இந்திய வானொலி நிலையத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர். இந்த போராட்டங்களின் துணையோடு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை ஒருங்கிணைத்து உள்ளோம். நீண்ட காலப் போராட்டத்திற்கு தயாராகும் தேவை: சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்ற கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கானப் போராட்டத்தை தொடர வேண்டும். இப்போது வந்துள்ள மாணவர் பேரெழுச்சி மழை போல் மண்ணில் சரிந்து விழாமல் ஓயாத அலைகளாய் மீண்டும் மீண்டும் எழ வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியமே தமிழீழ விடுதலைக்கு துணை செய்யும். அதற்கு தன்னெழுச்சியான மாணவர் போராட்டத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட நீடித்த போராட்டமாக வளர்தெடுக்க மாணவர்கள் தம்மை அமைப்பாய் உருத்திரட்டிக் கொள்ள வேண்டும் என்று கருதுகின்றோம். 60 ஆண்டு காலமாக நீளும் ஈழப் போராட்டத்தின் ஆழ அகலத்தைப் கற்றுக் கொண்டு நீண்ட காலப் போராட்டத்திற்கு எம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடக்கம் முதல் இன்று வரை ஆதரித்தும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்தும் வருகின்ற தமிழகத்தின் அறம் சார்ந்த அரசியல் தொடர்ச்சியாக எங்கள் போராட்டத்தை வார்த்தெடுக்க உறுதி கொள்கிறோம். தமிழ்நாட்டு மீனவர் மீதான தாக்குதல்: இந்திய அரசின் சிங்கள ஆதரவு வெளியுறவுக் கொள்கை இலங்கை தீவோடு நின்றுவிடவில்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் நடுக்கடலில் வைத்துச் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் சிறைப்படுத்தப்படுவதும் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றது. இது வரை 600 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 75 மீனவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய அரசு இலங்கையை நட்பு நாடு என்று வெட்கமின்றி சொல்வதோடு மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தான் இது நேர்கின்றது என்று சிங்களக் கடற்படையின் இனவெறித் தாக்குதலை நியாயப்படுத்திப் பேசி கொண்டிருக்கின்றது. ஈழத் தமிழ் அகதிகளின் நிலை: இது மட்டுமல்ல, இந்திய அரசின் சிங்கள ஆதரவுக் கொள்கை இனப்படுகொலை அரசின் பிடியில் இருந்து தப்பித் தாய்த்தமிழகம் வந்த ஈழத் தமிழர்களையும் விட்டுவைக்கவில்லை. மத்திய,மாநில அரசுகள் தமிழீழ அகதிகளை ’அகதிகள் முகாம்’ என்ற பெயரிலே திறந்தவெளி சிறைக்கூடத்தில் அடைத்து வைத்திருக்கின்றன. மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று அறியப்படும் இந்திய அரசு அகதிகளுக்கான சர்வதேச விதிமுறைகளிலே இதுவரை கையெழுத்திடவில்லை. அதுமட்டுமல்ல சட்டவிரோத முறையில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலே செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவரைக்கூட காவல் துறையின் கண்கானிப்பின் கீழ் அடைத்து வைத்திருக்கிறது தமிழக அரசு. முகாம்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தினாலும், வாழ்வதற்கு வழி இல்லாமலும் தமிழகத்தை விட்டும் தமிழீழ மக்கள் வெளிநாடுகளுக்கு வெளியேறுகின்றனர். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையால் வஞ்சிக்கப்பட்டு வரும் மீனவர்களோடும் தமிழகத்தில் அகதிகளாக வாடும் ஈழத் தமிழர்களோடும் கரம் கோர்த்து நமது போராட்டத்தை வலுப்படுத்த இருக்கின்றோம். உணர்வெழுச்சியால் பொங்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர்களையும் நோக்கிச் செல்வோம். • இனவெறி இலங்கை அரசை ஆதரித்து நிற்கும் இந்திய அரசின் கொள்கையை மாற்றி அமைக்க உறுதி ஏற்போம்! • சிங்களப் பேரினவாத இலங்கை அரசைப் அரசியல், பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் புறக்கணிப்போம்! • தமிழக அளவில் மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தைத் தொடர்வோம்! • மீனவர்கள், ஈழத் தமிழ் அகதிகள், தொழிலாளர்களோடு இணைந்து நின்று தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுசேர்ப்போம்! கோரிக்கைகள்: இந்திய அரசே! 1. இலங்கையில் நடந்தது தமிழினப்படுகொலை என்று அங்கீகரி! 2. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்தி இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிடு! 3. இனப்படுகொலை செய்த சிங்கள அரசு மீது பொருளாதார தடை விதித்திடு! 4. தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கிடு! தமிழக அரசே! 1. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வழி நின்று தமிழகத்திற்குள் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதித்திடு! இலங்கை தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அகற்றிடு! 2. இலங்கை அரசுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடு! 3. பூந்தமல்லியிலும் செங்கல்பட்டிலும் உள்ள சட்டவிரோத வதை முகாம்களை உடனடியாக களைத்திடு! முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு நினைவு நாள் – மே 19 இல் தமிழகம் தழுவிய அளவில் பேரணி, பொதுக்கூட்டம் வாரம் பிரச்சார இயக்கம் ஏப்ரல் 15 – ஏப்ரல் 21 வரை ’இலங்கையைப் புறக்கணிப்போம்’ என்ற முழக்கத்தின் கீழ் இலங்கை தூதரகம் வெளியேற்றுதல், ஐபிஎல் போட்டிகள், காமன் வெல்த் மாநாடு புறக்கணித்தல் உள்ளிட்டவற்றைக் கோரி பரப்புரை. ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 28 வரை சிறப்பு முகாம்களைக் களைக்கக் கோரியும், இரட்டை குடியுரிமை வழங்கக் கோரியும் தமிழீழ அகதி முகாம்களை நோக்கிய மாணவர் பரப்புரை ஏப்ரல் 29 முதல் மே 5 வரை மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களை நோக்கியப் பரப்புரை மே 6 முதல் மே 18 வரை இந்திய அரசின் தமிழின விரோத கொள்கையைக் கண்டித்தும் நமது கோரிக்கைகளை வலியுறுத்தியும் பரப்புரை மே 19 மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் பேரணி, பொதுக் கூட்டங்கள் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு தொடர்புக்கு: திவ்யா:9551629055, இளையராஜா:9500044452 பெருமாள்:8807322832 ------------------------------------------------------- முகநூல் --------------------------------------------
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
லண்டனில் நடைபெற்ற "சிலுவையில் அறையப்பட்ட முள்ளிவாய்க்கால்" கவனயீர்ப்பு லண்டனில் நடைபெற்ற "சிலுவையில் அறையப்பட்ட முள்ள்ளிவாய்க்கால்" கவனய [updated 47 minutes ago] லண்டனில் நடைபெற்ற "சிலுவையில் அறையப்பட்ட முள்ளிவாய்க்கால்" கவனயீர்ப்பு போராட்டம். தமிழ்மக்களின் கல்வாரி எனப்படும் முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்டு மரித்த மக்களின் குரலாக நீதிகேட்டும்,தமிழ்நாடு மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மகாராணி மாளிகையிலிருந்து பாராளுமன்ற வளாகம்வரை தமிழ் இளையோர்களின் ஏற்பாட்டில் வெளிநாட்டவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடரும் தமிழ் இனத்தின் துன்பச் சுமைகளின் வெளிப்பாடாக சிலுவைகளைச்சுமந்து கிறிஸ்துவின் உயிர்த்தஞாயிறு நாளான இன்று எமது மக்களின் உயிரிழப்புக்களுக்கும்,பாடு களுக்கும் இதுவரை மீட்புக் கிடைக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் முகமாக வெள்ளை ஆடைகள் அணிந்தும்,சிங்கள இனவெறியின் கோரமுகத்தை வெளிக்கொணரும் பதாகைகள் தாங்கியும்,துண்டுப்பிரசுரங ்கள் விநியோகித்தும் இக்கவனயீர்ப்பு நடைபெற்றது. ------------------------------ முகநூல் -------------------------------------------------------------------------------------- https://www.facebook.com/media/set/?set=a.600620523283310.1073741893.591654024179960&type=1
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
Loyolahungerstrike 13 hours ago மாணவர்கள் போராட்டம் என்பது, அனைத்து மாணவர்களும் இணைந்து செய்வது , இதில் ஒரு தலைமையோ , அல்லது ஒரு தலைவரோ என்று யாரும் அறிமுகபடுத்தபடவில்லை , அவ்வப்பொழுது பத்திரிக்கையாளர்களை மாணவர்கள் பிரதிநிதிகள் சந்திப்பது என்றால் அது அனைத்து மாணவர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னர் ஏற்படும் ஒருமித்த கருத்தை தெரிவிக்கும் மாணவர் ஒருங்கிணைப்பு செய்தியாளர் கூட்டமே , இதில் பிரதானம்., தமிழகம் முழுதும் ஈழ விடுதலை செய்திகளை மாணவர் போராட்டம் மூலம் கொண்டு செல்லும் செயலே .,அல்லாமல் ஒரு சில மாணவர்களை போராட்ட பிரதானமாக காட்டும் நோக்கம் அல்ல. இன்னும் கடந்து செல்ல வேண்டிய தூரம் பலவுள்ளது. செய்ய வேண்டிய பணிகள் பல வுள்ளது. அனைத்தையும் திட்டமிடுவோம் இது கூட்டு உழைப்பே . போராடும் ஒவ்வொரு மாணவனும் , உள்ளூர் சூழல் கருதி போராட்ட திட்டமிடும் அனைவரும் தலைமை பண்பு கொண்டவர்களே . ஏற்கனவே நாம் சொன்னது போல நமக்கு தேவை அடையாளம் அல்ல விடை . முதல் கட்ட போராட்டம் நமது அனைத்து கல்லூரிகள் திறக்கும் வரை என்று காலவரிசைபடுத்தி சொல்லலாம் . முதல் கட்ட போராட்டம் , ஈழ விடுதலை செய்திகளையும் , ஈழமே தமிழர்களிற்கு அவர்களின் வாழ்விற்கு நிரந்தர தீர்வு என்ற செய்தியை தமிழகம் எங்கும் பரப்பி உள்ளது. வரும் பல கட்ட போராட்டங்கள் , ஈழ விடுதலைக்கான நகர்வுகள் ஒவ்வொன்றையும் செய்யும் , அதற்க்கு தேவை கூட்டு உழைப்பு . இன்னும் இரண்டு அல்லது ஐந்து நாளில் நெல்லையில் பதினான்கு கல்லூரி , பல் தொழில் கல்லூரி மாணவர்கள் அமைதியான சாலையோர கைகோர்ப்பு போராட்ட நிகழ்வை ஒருங்கிணைப்பதாக கூறி உள்ளார்கள். இது போலவே கோவையிலும் ஈரோட்டிலும் தர்மபுரியிலும் .., நம் ஒற்றுமை பணி தொடரும் ..மேலும் செய்தியோடு வருகிறோம் ..
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
Rajkumar Palaniswamy தமிழகத்தின் மூன்று விசக் கிருமிகள் ! கடந்த ஐம்பது ஆண்டுகளாக தங்கள் அறிவு வலிமையை பயன்படுத்தி தமிழினத்திற்கு எதிராகவே கருத்துக்களை பரப்பி வருபவர்கள் இவர்கள் மூவர் . இவர்களுடைய கருத்துக்களால் மூளைச் சலவை செய்யப்பட்ட தமிழர்களும் நிறைய உண்டு . தமிழீழம் அமையக் கூடாது என்பதில் ஒத்தக் கருத்தை கொண்டவர்கள் இவர்கள் . இவர்களுக்குள் இருக்கும் முக்கியமான ஒற்றுமை இவர்கள் அனைவரும் பார்பனர்கள் என்பதே ஆகும் . இவர்களுக்கு என்றும் பிடிக்காதது தமிழர் ஒற்றுமை . தமிழகத்தில் எழுந்துள்ள எழுச்சியால் நிலை குழைந்து போன இவர்கள் தற்போது பித்து பிடித்தது போல் தங்கள் கருத்துகளை அள்ளி வீசி வருகின்றனர் . தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்தப் படவேண்டிய மூவர் இவர்கள் . --------- முகநூலில் இருந்து ---------------------------------
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பு - அறிக்கை சென்னை, 25-03-2013 ... அன்புடைய ஊடக நண்பர்களுக்கு, 2009ல் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழீழத்தில் நடத்திய இனப்படுகொலையின் கோரக்காட்சிகளைக் கண்டு உலக மக்கள் அனைவரும் மௌனம் காக்க தாய்த் தமிழகத்தில் இருக்குக்கூடிய மாணவர்களாகிய நாங்கள் தமிழினத்திற்கு கிடைக்க வேண்டிய நீதியைத் தேடி இந்திய அரசின் கவனத்தை ஈர்க்க எங்களை நா...ங்களே வருத்திக்கொண்டு அறவழியில் உண்ணாநிலை போராட்டத்தை துவங்கினோம். குறிப்பாக நாங்கள் வைத்த கோரிக்கைகள் 8. அதில் முக்கியமானதும் முதன்மையானதுமான அமெரிக்கா கொண்டு வரும் அயோக்கியத் தீர்மானத்தை புறக்கணித்து இந்தியாவே தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க அங்கு பொது வாக்கெடுப்பு என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் போராட்டத்தை துவக்கினோம். ஆனால் ஐந்தாவது நாள் முதல் சில கல்லூரி மாணவர்கள் இதே பெயரை பயன்படுத்தி ஆனால் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியது வருந்தத்தக்க செயல். நாங்கள் யாரொருவரின் தலைமையில் இயங்காமல் இந்த 8 கோரிக்கைகளையே மையமாக வைத்து போராட்டத்தை துவங்கினோம். கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேல் மாணாவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். பொதுவில் பகிர்ந்துகொள்ளமுடியாத சில காரணங்களால் எங்கள் போராட்டம் 4வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இருப்பினும் தமிழகத்தில் உள்ள மற்ற மாணவர்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தி தமிழகம் முழுக்க விழிப்புணர்வும், தமிழர்களுக்கு உணர்வையும் ஊட்டியுள்ளனர். சென்னையில் எங்கள் உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக்கொண்டு மாணவர்களாகிய நாங்கள் தமிழகம் முழுக்க பயனித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை சந்தித்து போராட்ட களத்தில் உடனிருந்து அவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டோம். இதுவரையில் 21 மாவட்டங்களில் உள்ள போராட்ட குழுவை சந்தித்துள்ளோம். எங்களில் சிலர் இன்னும் பல்வேறு மாவட்டங்களுக்கு பயனித்து கல்லூரி ஒருங்கினைப்பளர்களை சந்தித்து வருகின்றனர். சென்னையில் போராட்டங்கள் சிறப்பாக நடந்தேரியது. அதைவிட திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை, திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக நடந்த போராட்டங்கள் நெகிழ்ச்சியாக இருந்தது. இந்த மாணவர் போராட்டம் ஏதோ லயோலா கல்லூரி மாணவர்கள் துவங்கியதால் அவர்களுக்கே சொந்தமானது அல்ல. மாறாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணாவர்களும் இந்த போராட்டத்தை வழிநடத்தி செல்ல உரிமை உண்டு. ஆனால் தயவு செய்து தனிப்பட்ட கட்சியின் கொள்கைகளுள் நாட்டம் உடையவர்கள் இந்த மாணவர்களின் போராட்டத்தை விட்டுவிடுங்கள். மாணவர்கள் போராட்டத்தை இவர்களைப் போன்றவர்கள் வழிநடத்தினால் அவர்களின் சொந்த கட்சியின் சித்தாந்தத்தை மற்ற மாணவர்களிடம் மறைமுகமாக திணிக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? போர் துவங்கி கடந்த ஐந்து வருடங்களாக எந்த அரசியல் கட்சியாலும் அவலங்களை தடுக்க முடியாத சூழல். நீதி பெற்று தரமுடியாத நிலை. இதை மாற்ற நினைத்து மாணவர்கள் தன்னெழுச்சியாக இந்த போராட்டத்தை துவக்கியுள்ளளோம். இங்கும் வந்து தங்களுடைய சுயைலாபத்திற்காக மாணவர்களை அரசியல் கட்சிகள் ரீதியாக பிரித்து மீண்டும் களத்தை பழைய நிலைக்கு கொண்டு சென்றுவிட வேண்டாம். தொலைவில் இருந்து மாணவர்கள் கவனித்தால்தான் எல்லா கட்சிகளின் கருத்துகளையும் உள்வாங்கி ஒரு முடிவுக்கு வர இயலும். மாணவர்கள் இணைந்து எல்லா பொதுப் பிரச்சனைகளுக்கும் பொது மேடை அமைத்து தருகிறோம். அதில் வந்து உங்களுடைய வாதங்களையும் எதிர் வாதங்களை முன்வையுங்கள். அதில் எங்களுக்கு எது சிறந்ததென்று படுகிறதோ அதை நாங்கள் பொதுமக்களிடம் கொண்டு சேர்கிறோம். மாணவர்களை மாணவர்களாகவே இயங்க விடுங்கள்.. அய்நாவில் இந்த முறை தமிழர்களுக்கு பயனளிக்காத, எதிர்மறையான தீர்மானத்தை கொண்டுவந்த நாடு அமெரிக்கா என்ற வகையில்தான் அமெரிக்காவை எதிர்த்தோம். எங்களது அடுத்தக்கட்ட போராட்டம் என்பது மனிதநேயம் உள்ள தமிழர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் இணைத்து ஈழத்தில் பொது வாக்கெடுப்பு வேண்டி இந்தியாவை நிர்பந்திக்கும் வகையில் அமையும். அதற்கான ஆதரவை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கட்சிகளையும் அனைத்து மாநிலங்களில் உள்ள மாணவர்களையும் அனுகி நம் தரப்பு நியாயங்களை எடுத்துரைப்போம். தமிழர்களாகிய நம் நியாயமான கோரிக்கைகளை இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடத்தி அதில் நிறைவேற்ற வேண்டிய வகையில் போராட்டம் அமையும். போராட்டக்களத்தில் எங்களுக்கு ஆதரவாக இருந்த சில அரசியல் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் மற்றும் தமிழ் உணர்வாளர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். உறுதியான முறையில் அறவழியில் தொடர்ந்த இந்த மாணவர் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த காவல் துறையை இவ்வேளையில் நினைத்து பார்க்கின்றோம். எங்களுடைய மாணாவர் போராட்டம் பெரும் எழுச்சி பெற உறுதுணையாக இருந்த ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இனி வரும் நாட்களிலும் இது தொடரும் என்று நம்பிக்கை கொள்கிறோம். சமூக அவசியத்துக்காக துவங்கப்பட்டுள்ள இந்த மாணவர்களின் இயக்கத்துக்கு கல்லூரிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பணிவண்புடன் கேட்டுக்கொள்கிறோம். பின்வரக்கூடிய நாட்களில் எங்களுடைய மாணவர்கள் போராட்டம் படிப்பிற்கும் பொது அமைதிக்கும் பங்கம் விலைவிக்காத வகையில் அதே சமயம் உறுதியான நம்பிக்கையுடன் அனைத்து மனிதநேயம் உள்ளவர்களையும் திரும்பிப்பார்க்கவைக்கும் வகையில் அறவழியில் தொடர்வோம். இதற்காக தமிழகம் முழுக்க பயணித்து வரும் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் மாணவர்கள் கட்டமைப்பு ஒரு இறுதியான வடிவம் பெறும். ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் ஈந்த விக்ரம் மற்றும் கெளதமி அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மாணவர்களின் போராட்டமானது வெற்றிகரமாக பயணித்துக்கொண்டுள்ளது. நாம் நமது இலக்கை நிச்சயமாக சென்றடைவோம். யாரும் இது போன்ற உயிர் மாய்த்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடவேண்டாம் என மாணவர் கூட்டமைப்பு சார்பாக வேண்டிக் கொள்கிறோம். அரசியலில் அனுபவமுள்ள நடுநிலையான பொதுவாழ்வில் எளிமையாக வாழும் தோழர் நல்லக்கண்ணு ஐயா மற்றும் நெடுமாறன் ஐயா போன்றவர்களை மாணாவர்களாகிய எங்களுக்கு ஆலோசனை வழங்க அழைப்புவிடுக்கப்போகிறோம். நன்றி மாநில வழிநடத்தும் குழு சார்பாக ஜோ பிரிட்டோ 86789 62611 -------முகநூலிலிருந்து---------------------
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர்கள் போராட்டத்தின் நிலை!!
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
சற்று நேரத்திற்கு முன்பு ராமபுரம் எஸ் ஆர் எம் ஈஸ்வரி கல்லூரி மாணவர்களின் போராட்டத்தினை அந்த வழியாக சென்ற போது கவனிக்க முடிந்தது. நின்று அந்த மாணவர்களிடம் மிக விளக்கமாக தமிழீழ விடுதலை, தமிழீழ அரசு, பொது வாக்கெடுப்பு, சர்வதேச விசாரனை, அது ஒரு இனப்படுகொலை-’போர்குற்றம் மட்டும் அல்ல’ மற்றும் அமெரிக்க தீர்மானத்தின் அயோக்கியத்தனம் குறித்து விரிவாக பேசினேன். உணர்ச்சிப் பிளம்பாக மாணவர்கள் கைகளை உயர்த்தி ‘தமிழீழமே தீர்வு’ என்றார்கள்.. எந்த ஒரு குழப்பமும் இல்லை...தமிழீழத்தினை தவிர்த்து வேறெதுவும் எங்களுக்கு தேவையில்லை என்று ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களே சொல்லும் போது நம்பிக்கை வராமலா போகும். தமிழர்களுடைய அனைத்து பிரச்சனைகள், மூன்று தமிழர் தூக்கு, முல்லைப்பெரியாறு, கூடன்குளம் என அனைத்திற்கும் போராட வருவீர்களா என்றபோது கர ஒலி எழும்பி ஆமோதித்தது.... பெப்ஸி, கோக், ஏர்டெல்லினை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதும் முழக்கத்துடன் ஏற்கப் பட்டது. இந்தப் போராட்டம் நடக்கும் போது முதலில் அங்கு பதாகையை பிடித்திருந்த மாணவரின் அருகே சென்ற போது அவன் சொன்னான், ‘ I am proud to be tamil' , என்று ஆங்கிலத்தில் சொன்னாலும், அவனுடய தமிழன் என்கிற திமிர் எனக்கு ஆயிரம் ஆண்டுகால உயிர்ப்பினை அளித்தது. இனி ’செத்தான் எதிரி’. முகநூலில் ........................ திருமுருகன் காந்தி
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களுக்கு நன்றிகள்; வாழ்த்துகள். தீ பரவட்டும்!
-
லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு நாள்
பொன்னம்மான் முதலான எல்லா வீரமறவர்களையும் நினைந்து எனது வீரவணக்கங்களைத் தெரிவிக்கிறேன்.இதில் பொன்னம்மான் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தவர்.தலைவர் பிரபாகரனின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர்.தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் பயிற்சிக்கு முழுப்பொறுப்பாக இருந்தவர். இவருடைய வீட்டிற்கு பிரபாகரன் சென்றுவந்திருக்கிறார்.படித்த குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் இவருடைய குடும்பத்தினர்.விடுதலைப்போராட்டத்திற்கு தமது மகனை வழங்கியதுடன் மிகுந்த ஆதரவையும் வழங்கியவர்கள்.குறிப்பாக இவரின் தாயாரை பிரபாகரன் வெகுவாகப் புகழ்ந்துபாராட்டியுள்ளார். விதிவிலக்கான சிறப்புடைய தமிழ்ப்பெற்றோர் அவர்கள்.அதனால் அவர்களையும் நினைந்து வீரவணக்கங்களைத் தெரிவிக்கிறேன்.
-
2ஜி ஊழலை விஞ்சிய நிலக்கரி சுரங்க ஊழல்: அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு: சிஏஜி குற்றச்சாட்டு
[size=4]ஊழல் அரசாங்கத்தை வழிநடத்துகிற மன்மோகன்சிங்.. ஜோக்குகளின் நாயகனாகிவிட்டார்:வாஷிங்டன் போஸ்ட் வறுவல்[/size] [size=3]டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங்கை டைம் பத்திரிகை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் இப்போது அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் "ஊழல் மலிந்த ஒரு அரசாங்கத்தை வழிநடத்துகிற பிரதமர்" என்று மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.[/size] [size=3][size=5]"India's ‘silent' prime minister becomes a tragic figure"[/size] என்ற தலைப்பிலான கட்டுரையில் பிரதமர் மன்மோகன்சிங் பற்றி கூறப்பட்டுள்ளதாவது:[/size] [size=3]இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவுக்கும் இந்திய பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் மிக முக்கிய காரணமாக இருந்த மன்மோகன்சிங்கின் ஆளுமை பெரும் சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஊழல் மலிந்த அரசாங்கத்தை வழிநடத்தக் கூடியவராக இருக்கிறார்.[/size] [size=3]கடந்த இரண்டுவாரங்களாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலால் மன்மோகன்சிங்கின் ராஜினாமாவை கோரி ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்துக் கொண்டிருக்க்ன்றன. 2-வது முறையாக அவர் ஆட்சிப் பொறுப்பேற்றபோது இருந்த அவர் மீதான மதிப்பு சரிந்து போய்விட்டது. இந்தியாவின் பொருளாதாரமும் பெரு வீழ்ச்சியடைந்து விட்டது.[/size] [size=3]மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் முடங்கிப் போய்விட்டன. இந்தியாவின் வளர்ச்சியும் கணிசமாக குறைந்துபோய் ரூபாய் மதிப்பு பெருவீழ்ச்சி கண்டிருக்கிறது. மன்மோகன்சிங் எப்பொழுதுமே மெளனமாக இருப்பதால் அவரது அமைச்சரவை சகாக்கள் தங்களது சொந்த பாக்கெட்டில் பணத்தை நிரப்புகின்றனர்.[/size] [size=3]ஜோக்குகளின் நாயகன்[/size] [size=3]கூட்டங்களிலும் மாநாடுகளிலும் செல்போனை சைலண்ட் மோடுக்கு மாற்றுங்கள் என்பதற்குப் பதிலாக "மன்மோகன்சிங் மோடுக்கு" மாற்றுங்கள் என்று சொல்லும் அளவுக்கு ஜோக்கராகிவிட்டார். மன்மோகன்சிங்கைப் பற்றி ஒரு பல் மருத்துவர் சொன்ன ஜோக் இது... என்னுடைய கிளினிக்கிலாவது மன்மோகன்சிங் வந்து வாயைத் திறக்க வேண்டும்...[/size] [size=3]மன்மோகன்சிங் கடைசியாக வாயை திறந்தது கடந்த வாரம்தான்.. நிலக்கரித்துறை அமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை செய்ததன் மூலம் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை குற்றம்சாட்டியிருந்ததற்கு பதில் அளித்த போதுதான் வாயைத் திறந்தார்...அப்போதும் கூட "என்னுடைய மவுனம் பல ஆயிரம் பதில்களைவிட சிறந்தது" என்று கூறியிருந்தார் மன்மோகன்சிங் என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது.[/size] [size=3]இதற்கு முன்னர் டைம் பத்திரிகை "செயல்படாத பிரதமர்" என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.[/size] http://tamil.oneindia.in/news/2012/09/05/india-now-the-washington-post-calls-pm-manmohan-singh-160874.html Leading US Daily Washington Post has described Prime Minister Manmohan Singh as "dithering, ineffectual bureaucrat presiding over a deeply corrupt government". The article quoted political historian Ramachandra Guha as saying, “More and more, he has become a tragic figure in our history” — a man fatally handicapped by his “timidity, complacency and intellectual dishonesty.” http://news.outlookindia.com/items.aspx?artid=774221
-
2ஜி ஊழலை விஞ்சிய நிலக்கரி சுரங்க ஊழல்: அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு: சிஏஜி குற்றச்சாட்டு
Published: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 17, 2012, 14:06 [iST] Posted by: Chakra டெல்லி: கடந்த 2004-2009ம் ஆண்டில் நாட்டின் 57 நிலக்கரி சுரங்கங்களை ஏலமே விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் தேசத்துக்கு ரூ. 1.86 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைத் துறை (Comptroller and Auditor-General- CAG) குற்றம் சாட்டியுள்ளது. இது தொலைத் தொடர்புத்துறையில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட ரூ. 1.76 லட்சம் கோடியை விட அதிகமாகும். இது தொடர்பான அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2004-2009ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் மட்டும் ரூ.186 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், டாடா நிறுவனமும் தென் ஆப்பிரிக்காவின் சசோல் நிறுவனமும் இணைந்து தொடங்கிய ஸ்டேடர்ஜி எனர்ஜி டெக் சிஸ்டம்ஸ், அனில் அகர்வாலின் நிறுவனங்கள், அதானி குரூப், ஆர்சலர் மிட்டல், எஸ்ஸார் குரூப், லான்கோ ஆகிய நிறுவனங்கள் பெரும் லாபம் அடைந்துள்ளன. சுமார் 44 பில்லியன் டன் நிலக்கரி கொண்ட சுரங்கங்களை ஏலமே விடாமல் மிக மிகக் குறைவான விலைக்கு இவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கித் தந்துள்ளது என்று சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது. http://tamil.oneindia.in/news/2012/08/17/india-coal-block-allotments-cag-final-report-puts-loss-159812.html
-
இப்போது ராகு(ல்) காலம் – பிற்பாடு (என் காலம் )- எம கண்டம் – சொல்வது ராபர்ட் (ப்ரியங்கா) காந்தி !!
கேலியும் கிண்டலுமாக இந்தியநடப்பு அரசியலின் அற்புதமான உண்மைகளை அப்படியே வெளிப்படுத்தியதற்கு பாராட்டுகள்! நன்றிகள். அங்கதச்சுவையின் அழகிய வெளிப்பாடு!