Everything posted by நந்தன்
-
சிரிக்க மட்டும் வாங்க
- 2ம் லெப்டினன்ட் சுரேந்தினி
- வித்தியாசமான வீரன் கப்டன் கௌதமன்
வீரவணக்கம்- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- லெப்.கேணல் ரமணன்
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் மன்னார் மாவட்டத்தில் பிறந்த வெள்ளைசாமி கோணேஸ்வரன் என்ற பன்னிரண்டு வயது மாணவன் 1990 ன் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட போது , அவனுடைய சிறு வயது கருதி படைத்துறைப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். அங்கே பொதுக்கல்வியும் படைத்துறை சார்ந்த கல்வியும் சில வருடங்கள் பயின்ற கோணேஸ்வரன், அடிப்படை பயிற்சி பெற்று ரமணன் என்ற போராளியாக செயற்படத் துவங்கினான். 1993 ல் சிறுத்தைப் படையணியில் இணைக்கப்பட்டு ஆங்கே நீண்ட கால பயிற்சியில் ஈடுபட்டு தேர்ந்த போராளியாக தாக்குதலணியில் இணைந்தான் . மணலாற்றுக் காடுகளில் ரமணனுடைய பாதங்கள் வேவு நடவடிக்கைகளிலும் களச் செயற்பாடுகளிலும் ஓய்வின்றி நடந்தன. பல இராணுவ முகாம்கள் மீதான அதிரடித் தாக்குதல்களில் மிகுந்த ஊக்கத்துடன் றமணன் களமாடி ஆர்வத்துடன் களத் திறன்களை வளர்த்துக் கொண்டான். 1995 ல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போராளிகள் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் இணைக்கப்பட்ட பொழுது ரமணனும் இளம் அணித் தலைவராக படையணியில் இணைந்தான் .வேவு நடவடிக்கைகளிலும் பயிற்சித் தளங்களிலும் ரமணன்திறமுடன் செயற்பட்டான் . ஓயாத அலைகள் – 1 சமரில் ரமணன் தாக்குதலணியில் சிறப்பாக செயற்பட்டான் . 1997 ல் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமர்களில் இளம் தளபதி ராகவனின் பொறுப்பின் கீழ் செக்சன் லீடராகவும் வேவுப் போராளியாகவும் ஓய்வின்றி செயற்பட்டான் . 1998 துவக்கத்தில் படையணி உருத்திரபுரம் முன்னரண் வரிசையில் கடமையிலிருந்த போது, கனரக ஆயுதங்கள் அணி லீடர் இராசநாயகத்துடன் நின்று செக்சன் லீடராக செயற்பட்டான் . உருத்திரபுரம் சண்டையில் ரமணன்செக்சன் லீடராக திறமுடன் களமாடி திறமுடன் களமாடி தளபதிகளின் பாராட்டுக்களை பெற்றுக் கொண்டான். ஓயாத அலைகள்-2 கிளிநொச்சி மீட்புச் சமரில் ரமணன் செக்சன் லீடராக களமிறங்கினார். மூர்க்கமான தாக்குதல்களால் எதிரியின் பாதுகாப்பு நிலைகளைத் தகர்த்து, தொடர் காவலரண்களை கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்த ரமணன் தவறுதலாக எதிரியின் நிலக் கண்ணிவெடிகளுக்குள் இறங்கி விட்டார். ‘ தளபதிகள் மன்னிப்பர் , ஆனால் வெடிகுண்டு மன்னிக்காது ‘ என்ற உண்மையின்படி அவனுடைய காலடியில் நிலக் கண்ணியொன்று வெடித்தது. இதனால் பாதத்திற்கு மேலே கால் துண்டாகி இரத்த வெள்ளத்தில் விழுந்தான் றமணன். உடனடியாக சக போராளிகள் அவனை மீட்டு களமருத்துவ நிலையத்தில் சேர்த்து அவனுடைய உயிரைக் காப்பாற்றினர். சில மாதங்கள் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிய பிறகு, செயற்கை கால் பொருத்திக் கொண்ட ரமணன் , 1999 ம் ஆண்டு ராகவன் அவர்கள் படையணியின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றபோது மீண்டும் களமுனைக்கு திரும்பினார். ராகவன் அவர்களின் கட்டளை மையத்தில் கடமையேற்ற றமணன் தொலைத்தொடர்பு, பாதுகாப்பு முதலான கடமைகளில் ஊக்கத்துடன் ஈடுபட்டார். முதுநிலை அணித்தலைவர் சாரங்கனை லீடராகக் கொண்டு ராகவன் உருவாக்கிய விசேட கொமாண்டோ அணியில் ரமணன்ஒரு செக்சன் கொமாண்டராக நியமிக்கப்பட்டார். ராகவனின் அடியொற்றி முரசுமோட்டை , ஊரியான் , பரந்தன், கிளிநொச்சி, உருத்திரபுரம், சுட்டத்தீவு , அம்பகாமம், ஒட்டுசுட்டான் என அனைத்து பகுதிகளிலும் ஓய்வின்றி நடந்து பல்வேறு கடமைகளில் செயற்பட்டார். படையணியில் சிறப்பு மிக்க மோட்டார் அணி லீடர்களான தென்னரசன் , செங்கோலன் , நாகதேவன் , முதலானோருடன் ரமணன் இணைந்து மோட்டார் பீரங்கி பயிற்சிகள் பெற்று சிறந்த மோட்டார் சூட்டாளனாகத் தேறினான் . படையணியின் கனரக ஆயுதங்கள் பொறுப்பாளர் மதன் அவர்கள் றமணனை ஊக்கப்படுத்தி வழிநடத்தினார். ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் றமணன் அம்பகாமம் பகுதியில் இராசநாயகம், வீரமணியுடன் நின்று கடுஞ்சமர் புரிந்தார். பரந்தன் மீட்புச் சமரில் றமணனும் பிரபல்யனும் 60 மி. மீ மோட்டார்களுடன் தீவிரமாக களமாடினர் . இவர்கள் இருவரும் பரந்தன் இராசாயனத் தொழிற்சாலையிலிருந்த இராணுவ முகாம் மீது தொடுத்த செறிவான எறிகணைத் தாக்குதல்களால் அம் முகாம் தீப்பற்றி எரிந்து முற்றிலுமாக அழிந்தது. இதனால் பரந்தன் பகுதி முழுவதும் எம்மால் மீட்கப்பட்டது. இதன் பின்னர் படையணி மன்னார் பகுதியில் பாதுகாப்பு கடமையிலிருந்த போது ரமணன் கோபித்துடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் படையணி முகாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த போது, ரமணன்வீரமணியுடனும் ஐயனுடனும் இணைந்து, எதிரியின் கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் சினைப்பர் தாக்குதல்களுக்கு நடுவில் பாதுகாப்பு கடமைகளிலும் வேவு நடவடிக்கைகளிலும் திறமுடன் செயற்பட்டார். 2000 ம் ஆண்டு ஆனையிறவை மீட்ட இத்தாவில் தரையிறக்க சமரின் போது ரமணன் வீரமணியுடன் இயக்கச்சி பகுதியில் நின்று, தடையுடைப்பு அணியில் தீவிரமாக செயற்பட்டார். வீரமணி மாலதி. படையணி யைக் கொண்டு இயக்கச்சி சந்தியில் தடைகளைத் தகர்த்தெறிந்து மின்னல் வேகத்தில் பளையைக் கடந்து இத்தாவிலில் இணைந்த வரலாற்று சமரில் றமணனுடைய பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது. இதன்பிறகு படையணி இரணைமடு போர்ப்பயிற்சி கல்லூரியில் இருந்தபோது துணைத் தளபதி கோபித்துடன் நின்று பல்வேறு கடமைகளில் ஈடுபட்டார். பின்னர் நாகர்கோவிலை கைப்பற்றிய சமரில் ரமணன்கோபித்துடன் நின்று திறமுடன் களமாடினார். 2001 சனவரியில் நாகர்கோவில் எழுதுமட்டுவாள் பகுதியில் சிறப்புத் தளபதி வீரமணியுடன் நின்ற எமது அணியினர் சிறிலங்கா இராணுவத்தின் பாரிய முற்றுகைக்குள் அகப்பட்ட போது, ரமணன் அவருடனிருந்து , தீவிரமாக களமாடி னார். பின்னர் படையணி முகமாலை களமுனையில் பாதுகாப்பு கடமையிலிருந்த போது றமணன் துணைத் தளபதி கோபித்துடன் நின்று, 60 மி. மீ மோட்டார் அணிகளுக்கு லீடராக செயற்பட்டார். கோபித்தின் கட்டளை மையத்தில் மதுரன் , பாவலன் , அகமன்னன் , முருகேசன், சாந்தீபன் முதலானோருடன் இணைந்து பாதுகாப்பு கடமைகளிலும் முன்னரண் வேலைகளிலும் சிறப்பாக செயற்பட்டார். எதிரி பளையைக் கைப்பற்ற மேற்கொண்ட ” தீச்சுவாலை ” நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமர்களில் றமணன் 60 மி. மீ மோட்டார் சூட்டாளனாகத் திறமுடன் போரிட்டார் . கோபித்தின் கட்டளை மையத்தை சுற்றி நடைபெற்ற கடும் சமரில் றமணன் மதுரன் ,பாவலன் ,வெற்றிநிலவன் முதலானோருடன் இணைந்து தீவிரமாக களமாடினார் . மேலும் நாகதேவன், வைத்தி முதலானோருடன் 81. மி. மீ மோட்டார் அணியில் நின்று சூட்டாளனாகத் திறமுடன் செயற்பட்டார் . இச் சமருக்கு பின்னர் படையணியின் ஒரு பகுதி சிறப்புப் பயிற்சிக்காக கல்லூரிக்கு சென்றபோது ரமணன் அங்கு கடமையாற்றினார் . 2002 ம் ஆண்டு போர் நிறுத்தம் அமலில் இருந்த போது ரமணன் சிறப்பு அரசியல் வேலைத் திட்டங்களுக்காக யாழ்ப்பாணத்திலும் பின்னர் மன்னார் வவுனியா நகரங்களிலும் செயற்பட்டார். குழப்படிகளிலும் பகிடிக் கதைகளிலும் வல்லவராக இருந்த ரமணன் சண்டை செய்வதில் மட்டுமின்றி விளையாட்டிலும் தணியாத ஆர்வம் கொண்டவராக இருந்தார். செயற்கை காலுடன் நடமாடிய போதிலும் வலைப்பந்து , கால்பந்து விளையாட்டுக்களில் ஆர்வத்துடன் தொடர்ந்து விளையாடி வந்தார். மேலும் சதுரங்க விளையாட்டிலும் ரமணன் திறமுடன் விளையாடினார். போர்ப்பயிற்சி கல்லூரியில் எமது அனைத்து படைப் பிரிவுகளுக்குமிடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் ரமணன்முதலாவது இடத்தில் வெற்றி பெற்று, தேசியத் தலைவரிடம் பாராட்டையும் அழகிய மாபில் காய்களைக் கொண்ட சதுரங்கப் பலகையையும் பரிசாகப் பெற்று படையணிக்கு பெருமை சேர்த்தார். மேலும் தமிழீழ திரைப்படத் துறையினர் தயாரித்த ஒரு குறும்படத்திற்கு களமுனை படப்பிடிப்பு ஆலோசகராக சிறப்புடன் செயற்பட்டு பாராட்டும் பரிசும் பெற்றார். இவருடைய இணைபிரியா தோழன் மேஜர் இராசநாயகம் அவர்களுடைய நினைவைப் போற்றும் வகையில், தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி தயாரித்த துயிலறைக் காவியம் நிகழ்ச்சியில் இவர்களுடைய தோழன் வைத்தியுடன் இணைந்து ,இராசநாயகத்தின் களச் செயற்பாடுகளின் பல்வேறு பரிமாணங்களை பதிவு செய்தார். போர்க்களத்தில் உறுதியும் விடாமுயற்சியும் கொண்ட ரமணன்இளகிய மனமும் போராளிகள்யிடையே சகோரத்துவ உணர்வும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டவராகவும் விளங்கினார். சமையற்கலையிலும் ரமணன் தேர்ந்த வராக இருந்தார். தனது சக போராளிகளுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து தருவதில் ஆர்வத்துடன் செயற்படுவார் . ரமணன்இருக்குமிடம் எப்பொழுதும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் காணப்படும். இவருடைய குழப்படிகளுக்காக இடையிடையே சிறு தண்டணைகளையும் புன்னகையுடன் ஏற்றுக் கொள்வார். 2004 ம் ஆண்டு எமது தாயகத்தை சுனாமிப் பேரலைகள் தாக்கிய போது, போர்ப்பயிற்சி கல்லூரியில் கடமைகளில் இருந்த றமணன் உடனடியாக சக போராளிகளுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். இந் நாட்களில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, உடுத்துறை, தாழையடி ஆகிய பகுதிகளில் ரமணன்ஓய்வொழிச்சலின்றி செயற்பட்டார். போர்ப்பயிற்சி கல்லூரியில் ரமணன்கிளைமோரை இயக்குவதில் சிறப்பு பயிற்சி பெற்று தேர்ந்த நிபுணனாக விளங்கியதோடு , மாஸ்டரின் வழிநடத்தலில் புதிய போராளிகளுக்கு அப் பயிற்சிகளை வழங்கி அவர்களை சிறந்த செயற்பட்டாளர்களாக உருவாக்கினார். மேலும் அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சியையும் மேனிலை மோட்டார் பீரங்கி ஒருங்கிணைப்பாளர் பயிற்சியையும் திறமுடன் நிறைவு செய்தார். நாகர்கோவில் களமுனையில் வீரமணி பகுதிப் பொறுப்பாளராக இருந்த போது, ரமணன்இணைந்து பல்வேறு பாதுகாப்பு கடமைகளிலும் வேவு நடவடிக்கைகளிலும் திறமுடன் செயற்பட்டார். 2006 ம் ஆண்டு மே மாதத்தில் எதிர்பாராமல் நிகழ்ந்த வெடிவிபத்தில் வீரமணி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட போது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். வீரமணியை இழந்த தாக்கத்திலிருந்து விரைவில் மீண்ட ரமணன்மன்னார் களமுனையில் தீவிர செயற்பாடுகளில் இறங்கினார். மன்னார் மாவட்டத்தில் எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள் நடவடிக்கைகளுக்கான தயார்படுத்தல்களில் புலனாய்வுத் துறை மற்றும் அரசியறதுறை போராளிகளுடன் இணைந்து ஓய்வின்றி செயற்பட்டார். உள் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட தேசியத் தலைவரிடம் அனுமதி பெற்றுக்கொண்ட ரமணன் எதிரியின் முன்னரண் வரிசையை ஊடறுத்து தான் தெரிவு செய்த பாதையூடாக தனது அணியுடன் மன்னார் நகருக்குள் சென்றார். அங்கு இராணுவத்தினரின் வாகனங்கள் மீது பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தினமேலும் பல மன்னாரைக் கைப்பற்றுவதற்கான வேவு நடவடிக்கைகளிலும் றமணன் தனது அணியை சிறப்புடன் ஈடுபடுத்தினார். இந்நிலையில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மேஜர் கிண்ணி அவர்களின் நினைவு நாளான யூலை 10 அன்று எதிரியின் மீது ஒரு அதிரடித் தாக்குதலை நடத்த வேண்டுமென தீர்மானித்த ரமணன் எதிரியின் சிறு முகாம் ஒன்றை தெரிவு செய்து தாக்குதலுக்கான ஆயத்தங்களைச் செய்தார். அதன்படி 2006 ம் ஆண்டு யூலை மாதம் 10 ம் நாள் அதிகாலையில் ரமணன் புலனாய்வுத் துறை போராளி ஒருவரும் எதிரியின் முகாம் மீது திடீர் தாக்குதலைத் தொடுத்தனர் . சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந் நேரடிச் சமரில் ரமணன் அவருடைய சக தோழனும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர் . அப்பொழுது படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த கோபித் அவர்களும் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லக்ஸ்மன் அவர்களும் எடுத்த பெருமுயற்சியால் இருவருடைய வித்துடல்களும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக எமது பகுதிக்கு எடுத்து வரப்பட்டு கிளிநொச்சி துயிலுமில்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. துயிலுமில்லத்தில் கூடிய பொதுமக்கள் மற்றும் போராளிகளின் பெருங்கூட்டம் ரமணனுடைய அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளையும் மக்கள் பற்றையும் எடுத்துக் காட்டுவனவாக விளங்கின. மிக இளம் வயதிலேயே தமிழரின் தாயக விடுதலைக்காக போராட வேண்டும் என்ற உணர்வோடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ரமணன் மிகுந்த அர்ப்பணிப்போடும் விடாமுயற்சியோடும் தொடர்ந்து களமாடி, விடுதலைப் போரை வீச்சாக்கிய பல்லாயிரம் மாவீரர்களுடன் இணைந்து கொண்டார். படையணியின் தாக்குதல் தளபதிகளுள் ஒருவராக விளங்கிய லெப். கேணல் ரமணன்அவர்களின் போராட்ட வாழ்க்கை இளம் போராளிகளுக்கு ஊக்கமூட்டுவதாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும். ரமணன்காலடிகள் பதிந்த படைத்துறைப் பள்ளியும் புலிகளின் பாசறைகளும் களமாடி வாகை சூடிய களங்களும் அவருடைய உணர்வை எடுத்தியம்பிக் கொண்டேயிருக்கும் . “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” லெப். சாள்ஸ் அன்ரனி முகநூல் பதிவிலிருந்து ……. Like this:- சிரிக்க மட்டும் வாங்க
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- லெப்.கேணல் ராஜன் (ரோமியோ நவம்பர்)
மூடு இனியன் தமிழீழம் இன் இடுகையில் உள்ள படங்கள் மொபைல் பதிவேற்றங்கள் விருப்பத்தேர்வுகள் Messenger இல் அனுப்பு விரும்பு பகிர் இனியன் தமிழீழம் 10 மணி நேரம் · லெப்.கேணல் ராஜன் உறுதியின் உறைவிடம்…. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளனாக முத்திரை பதித்தவன். அன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் ராஜன் எம்மைவிட்டுப் பிரிந்தான். முதல்நாள் மாலை, பண்டத்தரிப்பில் நின்ற போராளிகளைப் பார்க்க வந்த ராஜனிடம், எதிரியின் படையணி ஒன்றின் மீதான சிறியதாக்குதல் திட்டம் ஒன்றைக் கூறினர் கோபியும் தோழர்களும். எதிரியின் புதிய நில அக்கிரமிப்பை கண்டு குமுறிக்கொண்டிருந்த ராஜன் உடனடியாக ஒப்புதல் தந்துவிட, சிறிதாய்த் திட்டமிடப்பட்டிருந்த அந்தத் தாக்குதலுக்கான ஒழுங்குகள் இரவோடிரவாக நடந்து முடிந்தன. திட்டம் மிகவும், சிறியதாகவும், சுலபமானதாகவும் எதிர்பார்க்கப்பட்டதால், திட்டம்பற்றி அதில் நின்றவர்களைத் தவிர வேறு எவருக்கும் எதுவுமே தெரியாது போய்விட்டது. திட்டத்தின் வெற்றி பற்றிய “வோக்கி”ச் செய்தியை எதிர்பார்த்தபடி காந்திருந்தான் ராஜன். கிளைமோர் சத்தம் கேட்டவுடன் கோபி… கோபி… என்று கூப்பிட்டும் தொடர்பில்லாமற்போனது. தலையில் காயத்துடன் கோபியைக் கண்டதும் அவன் வழமையான போர்க்களத்து ராஜனாய் மாறிப்போனான். என்ன நடந்ததோ? இரவு கிளைமோர் வைத்தவர்கள் கவனமின்றி நிற்க எதிரி கண்டானோ? இல்லை எம்மவர் ஏதேனும் “வோக்கி”யில் மாறிக் கதைத்துவிட்டனரோ? வேவு பார்த்தோர் தவறோ? வேறு பிழைகளோ? கோபியின் அணியைச் சூழ்ந்து எதிரிகள். தனி ஆளாய் உள்ளே புகுந்த ராஜன், எல்லோரையும் பின்னுக்கு அனுப்பி விட்டு… அவன் வரவில்லை. கணேஸ், கிங்ஸ்லி என்று எட்டுப் பேருடன் ஒன்பதாவது ஆளாய் ராஜனும் வரவில்லை. ராஜன் இல்லை என்ற செய்தி மெல்லப்பரவ அதிர்ந்து துடித்தது தமிழீழம். அவன் மீது கொள்ளை அன்பை வைத்திருந்த தலைவர், உயிராய்ப் பழகிய நண்பர்கள், அவனால் உருவான போராளிகள், அவனைக் காத்த மக்கள் என்று தமிழீழம் அழுது துடித்தது. ராஜன் – றோமியோ நவம்பர். எங்கள் போராளிகள் மனத்தில் நிறைந்துவிட்ட இனியபுயல், இறுகிய பாறை. அடிக்கடி ரவைகளால் தைக்கப்பட்டு, பிய்பட்டு, இரத்தம் கொட்டி, தழும்புகளால் நிறைந்த தேகம். அவனது மனம் மட்டும் தளரவில்லை அது இறுகிப் பாறையாய் உருவாகியிருந்தது. 1987ன் தொடக்கப் பகுதியில் ஓர் இருண்டபொழுது. யாழ். காவல்துறைய நிலைய தங்ககமும் தொலைத்தொடர்புக் கட்டடமும் கோட்டைக்குத் துணைாய் நிமிர்ந்து நின்றன. அதைநோக்கி இருளோடு இருளாய் நகரும் புலிவீரர்கள் அதில் ஒருவானாய் ராஜன். தன் கை ஆயுதத்தைத் தான் பார்க்க முடியதாக காரிருள். பின்னால் நிற்பவரின் மூச்சுச் சுடும். வியர்வைாற் குளிக்கும் தேகம். தாகம் தண்ணீருக்காய் மட்டுமல்ல, அதற்கும் மேலாய், உயர்வாய், தாகம் தணிக்க உயிர்கொடுக்கத் தயங்காத வேகம், உறுதி, இது எம் தாயகம், எங்கள் பூமி. இங்கு அந்நியனுக்கு என்ன வேலை? இன்று வெல்வோம். அந்நியன் பாடம் படிப்பான். அக்காலத்தில் அவன் காரைநகர் கடற்படைக் காவலரண் பொறுப்பாளன். அதற்கு முந்திய சண்டையிலெல்லாம் தன் முத்திரையை ஆழமாய்ப் பதித்திருந்தான். கிட்டண்ணை அவனைக் கவனித்து வைத்திருந்தார். இந்தச் சண்டைக்கென கிட்டண்ணையால் அழைக்கப்பட்டிருந்தான். ராதா அண்ணை தலைமையில் உள்நுழைந்த குழுவில் ராஜனும் ஒருவன். உள்நுழைந்தோருக்கு குறுகியதாயும், வெளியில் நிற்போருக்கு நீண்டதாயும் அமைந்த இரவு விடிந்தபோது… தனது படைவீரர்களை “யாழ்ப்பாணக் காடுகளில்” தேடிக்கொண்டிருந்தது சிறிலங்கா அரசு. யாழ்ப்பணத்திற் காடுகளைத் தேடிக்கொண்டிருந்தது உலகு. தன் நண்பர்கள் சிலரையும் தன் கைவிரல்கள் இரண்டையும் இழந்த பின் மருத்துவமனையில் இருந்து அந்தச் சண்டையில் தனது பட்டறிவையும் மீட்டுக்கொண்டிருந்தான் ராஜன். இந்திய படைக் காலம், அந்த இரும்பை உருக்காக உருவாக்கிய நாட்கள். இந்தியக் காலத்தில் ராஜனின் நாட்கள் வீரம் செறிந்தவை. அவன் நின்று பிடித்த வெறும் குருட்டாம்போக்கு மட்டுமல்ல. வீரம், விவேகம், உச்ச வழிப்பு, அன்புக்கினிய எம்மக்களின் அரவணைப்பு இவைதான் அவனைக் காப்பாற்றிய கவசங்கள். தொடர்ச்சியான முற்றுகைக்குள் – தொடர்ந்த தூக்கமற்ற இரவுகள். முற்றுகை ஒன்றிலிருந்து பாய்ந்தோடித் தப்பித்து வந்த நாளின் மறுநாட்காலை ஒருவாரக் கசகசப்புத்தீர குளித்துவிட்டு நொண்டிக்கொண்டு வந்தான். அன்புத் தோழனின் மடியில் ஈரம் ஊறிய காலை முள்ளெடுக்கக் கொடுத்துவிட்டு இருந்தவன் அப்படியே தூங்கிப்போனான் பாவம். எத்தகு நெருக்கடிகளிற்கு நடுவிலும், உறுதிதளராத இரும்பு மனம். அதிகம் பேசாதவன். போர்க்களத்திற் பேசுபவான். உறுதியாய்த் தன்னம்பிக்கையுடன், சகபோராளிகளை இலகு நிலையில் வைத்திருக்கும் நகைச்சுவையுடன். இந்தியச் சண்டையின் தொடக்க நாட்கள். எமது பொன்னாலைப் பனைவெளியூடாக எதிரியின் பாதச்சுவடுவகள். பட்டறிவு குறைந்த எமது வீரன் ஒருவனிடம் இயந்திரத்துப்பாக்கி. அவனது சூடுகள் உயர்ந்து மேலாய், மிக மேலாய் வீணாகிப்போயின. இதைக்கண்ட ராஜன் “டேய் தம்பி ஆமி இன்னும் பனையிலை ஏறேல்லை. கொண்டா ஜிபிஎம்ஜி யை”. ஆயுதம் கைமாற ஒரு சூட்டுத் தழும்பினைப் பதித்து வைக்கிறது. பொன்னாலையில் கால் கிழிந்து, இந்தியாவில் விழுப்புண் ஒழுங்காக மாறமுதல் நாட்டுக்கு என்று துடிதுடித்து புறப்பட்டு, மீன்பிடிப்படகில் தீவுக்கு வந்து, இங்கு வந்தால், எங்கும் இந்தியத் தலைகள் தடங்கள். “எங்கட ஆட்கள் எங்கே” என்று எல்லாச் சனத்தையும் கேட்டுத்திரிந்து சந்தித்தான். யாழ்ப்பாணத்தில் எங்கும் படை முகாம்கள் நிறைந்திருந்த காலத்தில் ராஜன் வந்து சேர்ந்ததும் இந்தியப் படையினர் பிரச்சினையை வேறுவிதமாகச் சந்தித்தார்கள். அவனது உறுதி அவர்களை திணறவைத்தது. அரைத்தூக்கம் கலையாத அதிகாலைப்பொழுது, ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் குரைக்கத் தொடங்க, உடலில் உள்ள இரத்தம் எல்லாம் ஒன்றாகிச் சூடாகிப்பாயும். “டேய் தும்பன், வெற்றி, எழும்புங்கோடா” “ரங்கன்” “அண்ணை நான் முழிப்புத்தான்” “வெளிக்கிடுங்கோ…” சிரிப்புத்தான் வரும். என்னத்தை வெளிக்கிடுவது? ஜீன்ஸ் போட்டபடி, கோல்சர் கட்டியபடி வெறுநிலத்திற் படுக்கை, தலைமாட்டில் ஆயுதம் வைக்கவென விரித்திருக்கும் சாரத்தை எடுத்துச் சூருட்டி இடுப்பில் கட்டினால் சரி. “சரி வெளிக்கிட்டாச்சு.” நாய்கள் குரைக்கும் சத்தம் நகர நகர, அது படையினரின் நகர்வை நிழலாய்க்காட்டும். முன்படலை பிசகென்று பின்வேலியால் பாய, காலில் நெருஞ்சி குத்தும். முந்தநாள் வாங்கிய செருப்பு நேற்றைய ரவுண்டப்பில் தவறிப்போனது நினைவுக்கு வரும். விரைவாய் சத்தமின்ற – சத்தமின்றி விரைவாய் அல்லது உள்ளே ரவுண்டப்புக்குள்ளே. ராஜன் அருகில் இருந்தால் அனைவருக்கும் நம்பிக்கை. எப்படியும் ரவுண்டப்பை உடைக்கலாம். “கட்டாயம் உடைக்கலாம். ஒருத்தரும் பயப்படாதேங்கோ” “டேய் தும்பன் நீ முன்னுக்குப் போய் எத்தனை வாகனம் நிக்குதெண்டு பார். கண்டிட்டான் எண்டால் அடியாமல் வராத” “ரங்கனும், வெற்றியும் அங்காலைபோய் அடுத்த சந்தியைப் பாருங்கோ. டேய் ரங்கன் ஜி-3 ரவுண்ஸ் தட்டுப்பாடு சும்மா அடிக்காதை” “தம்பி நீங்கள் என்ன கிறனைட்டோ வைத்திருக்கிறியள். பயப்படாதேங்கோ. என்னோடை நில்லுங்கோ. நான் சொல்லேக்கை கிறனைட் அடிக்கவேணும்” “அம்மா எல்லோரும் இதில குவிஞ்சு நிண்டால்தான் கட்டாயம் காணுவான். நீங்கள் பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு உள்ளுக்குப் போங்கோ, இந்தாங்கோ கோப்பையையும் கொண்டு போங்கோ.” கொஞ்சநேரத்தின் பின் கேட்கும் வெடிச்சத்தங்கள் ஓயும்போது, தேநீர் கொடுத்த அம்மா “ஆர் பெத்த பிளையளோ முருகா காப்பாத்து” என வேண்டிக் கொண்டிருக்கும்போது, இரண்டு றோட்டுக்கடந்து நின்று வரும் ஆட்களிடம் சைக்கிள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் ராஜனும் அவனின் ஆட்களும். கிறனைட்டுடன் வந்த சின்னப்பொடியன் “ராஜண்ணை நான் உண்மையாய்ப் பயந்திட்டன். இனிப்பயப்பட மாட்டன். நான் அடிச்ச கிறனைட்டில் ஆமி செத்திருப்பானே?” என்று கேட்டுக்கொண்டிருப்பான். அவர்களின் அநேக நாட்கள் இப்படித்தான் விடியும். இன்னொரு காலைவேளையில், படுத்திருந்த வீட்டு ஒழுங்கையால் தெருவுக்கு வர, முன்னால் இந்தியப் படை அணி. மற்றவர்கள் காணமுதல் ராஜன் கண்டுவிட்டான். “இண்டைக்குப் பொழுது சூடாகத்தான் விடிஞ்சிருக்கு. நான் இதில வைச்சுத் தொடங்கிறன். நீங்கள் இரண்டு பேரும்மற்றப் பக்கத்தாலை வாங்கோ”. இராணுவம் நிற்கும் செய்தியை அலாதியாய்ச் சொல்வதுடன், அந்தக் கணத்திலேயே திட்டமும் தாக்குதலும். எத்தகையை சூழ்நிலையிலும் ஆபத்தை எதிர்கொள்ள கொஞ்சமும் தயங்காத நெஞ்சுறுதி. பல கட்டங்களில் ராஜன் சாவின் விளிம்பில் ஏறி நடந்து வந்துள்ளான். எமது மண்ணில் அந்நியன் இயல்பாய்த் திரிவதா? அமைதியாய் வாழ்வதா? என்று குமுறுவான். அவன் அடிக்கடி கூறும் வார்த்தைகள். “மச்சான் உவங்களை இப்படியே விடக்கூடாது. இண்டைக்கு ரெண்டு ஆமி எண்டாலும் கொல்லவேணும்.” ஒரு நாள் பண்டத்தரிப்பு முகாம். “என்ன வெடிச்சத்தம்?” என இந்தியப்படையினர் மக்களை விசாரித்துக் கொண்டிருக்கையில் ராஜனும் தும்பனும் தங்கள் பிஸ்டலை இடுப்பில் வைத்த பின்னர், இறந்த படையினரின் துப்பாக்கிகளை ஆளுக்கொன்றாய் எடுத்தபடி சைக்கிளில்… சுழிபுரம் சந்தி முகாம் அருகே, இந்திய படையினர் ஜீப் ஊர்தியுடன் செத்தபடி கிடக்க…. எம் போராளி காசிமை இழந்த பின்னர், நடு நெஞ்சில் துப்பாக்கி ரவை துளைத்த ராஜனைத் தூக்கிக்கொண்டு வந்தனர் தும்பனுடன் நகுலனும், நித்தியும். இந்திய அடிவருடிகள் முகாமிட்டிருந்த சுன்னாகம். இருபுறமும் படைக் காவல். அதனுள்ளே கும்மாளமிட்டனர் எம்மினத்தின் அவமானச் சின்னங்கள். திட்டமிட்ட பெரிய தாக்குதல். அதிக ஆட்கள். முதல்நாள் சாலையைக்கடக்க முடியாமல் ஒத்திவைத்த தாக்குதல். அடுத்த நாள் முயற்சி செய்தபோது, இரவு சுற்றுக்காவல் படையினரை எதிர்கொள்ள, எல்லாமே பாழ். ராஜனை இருட்டுக்குள்ளால் இழுத்தவந்து குப்பியைக் கழட்ட, வந்தது நூல்மட்டுமே. “மச்சான் சுபாஸ் பிறண் அடி கொளுவியிட்டுது.” எனக்கு பெரிய காயம்… இந்தமுறை சரிவராது… எல்லோரும் சாகாமல் இவர்கள் இரண்டு பேரையும் கொண்டுபோங்கோ. சொன்னவர் பின்னர் கரைச்சல் தாங்காமல் மயங்கிப்போனார். “ஐயோ ராஜண்ணை…” என்று சூட்டும் ரங்கனுமாய் வாய்க்குள் விரலைவிட்டுத் தோண்டி, தேங்காய் எண்ணை பருக்கு, தேங்காய் உடைத்து பால் பிழிந்து பருக்கி, காரில் வைத்து, ஸ்ராட் ஆகவில்லை என்று கத்தி, பிறகு வேலிவெட்டி பாதை செய்து, தள்ளு தள்ளு என்று, தள்ளிக்கொண்டு போய். உள் ஒழுங்கை வீட்டில் வைத்து, நீர்வேலிச் சனத்தை காவலுக்கு விட்டு, அந்தநாள் விட்டு அடுத்த நாள், வாதரவத்தைக்குப் போய்ச்சேர, ராஜனும், முரளியும் மயக்கம் தெளிய, லோலோ மயங்கிப்போய், பின்னர் போய்விட்டான். எம்மைவிட்டு போயேவிட்டான்… அவனது தோழர்களின் இழப்புக்கள் ஒன்வொன்றின் போதும் அவன் அமைதியாய்க் குமுறுவான். கண்கள் வெறிக்க அவன் பாறையாய் இறுகுவான். ராஜனது இளமைக்கால நண்பன் தெய்வா, பள்ளிக் காலத்திலிருந்து ஒன்றாய்க் கடலுக்குத் தொழிலுக்குப் போய்வந்து…, படித்து பந்து விளையாடி…, இயக்கத்திற்கு வந்து…, ஒரே படகில் இந்தியா போய்…, கூமாட்டி பயிற்சி முகாமில் ஒன்றாய் இருந்து…, மலைக்கு மூட்டை சுமந்து…, கழுதை கலைத்தது…, பணிஸ்மன்ற் வாங்கி…., பயிற்சி முடித்து…, கரைக்கு வந்து…, எல்லாம்வரை ஒன்றாய் இருந்த தெய்வா பிரிந்துவிட்டான். கடலில் ஓட்டியாய்ப் போனவன் வரவில்லை. அவன் வரவில்லை என்று மாதகல் அழுதது. ராஜன் அழவில்லை. அந்தப் பாறை இறுகியது. ராஜனும் தும்பனும் பிரிந்தது கிடையாது. ராஜன் என்றால் தும்பன். தும்பன் என்றால் ராஜன். துப்பாக்கிகள் பங்கிடும்போது “தும்பனுக்கு கையேலாது எம்-16 தான் வேணுமம்மான்.” ராஜன் சொல்ல சூடுபட்டு உடைந்து வளைந்த கையை தும்பன் மேலும் வளைத்து வந்து வாங்கிவிட்டு மறைவாய் போய் பெரிதாய்ச் சிரித்தார்கள். ஒன்றாய்ச் சாப்பிட்டு, அடிபட்டு, கலைபட்டு ராஜனின் உயிருடன் இணைந்த நட்பு. சுன்னாகத்தில் காலில் இரண்டு வெடிபட்டு காயம் மாறி இந்தியாவில் இருந்து வந்தபோது, தும்பன் இல்லை என்ற செய்தி அவனுக்குத் தெரிந்துதானிருந்தது. இந்தியப் படையினரின் சூடுதானா? விபத்தா என எல்லோரையும் ஓடிஓடிக்கேட்டு ஓய்ந்திருந்தவேளையில், தும்பன் இல்லாத ஏழாலைக் கிணற்றுக்கட்டு, வாழைத்தோட்டங்கள், பனங்கூடல்கள், கலைபட்டு பாய்ந்தவேலிகள், துரையண்ணை வீட்டு ஊஞ்சல்கள் என்று எல்லாமே வெறுமையாய்த் தெரிய ரங்கன் அழுவான். ராஜன் அழமாட்டான். அந்தப் பாறை இறுகியது. ரங்கன் சைக்கிள் உழக்க “பாரில்” ராஜன். சுட்டுவிரல் விசைவில்லையொட்டியபடி, கொஞ்சம் அழுத்தினால் ரவைபாயும், எங்கும் போகும் சைக்கிள். சடசட என்று வெடிகேட்கும், சைக்கிள் ஒன்றுடன் கொஞ்ச ரவையும் செலவாகும். “தப்பியது ரங்கனால்” என்பான் ராஜன். “ராஜண்ணை இல்லையென்றால் நானில்லை” என்பான் ரங்கன். மாவிட்டபுரத்தில் வைத்து வரிசையாய் வந்த மொட்டை ஜீப்புக்கு அடிக்க நல்லாய் நடந்த சண்டை நெடுமாறன் வீரச்சாவடைய, ரங்கன் காயம்பட திசைமாறியது. திருச்சியில், “ராஜண்ணை… ராஜண்ணை” என்று ரங்கன் உரத்துக்கூவி அழுது துடித்து மௌனித்தபோதும் யாழ்ப்பாணத்தில் நின்ற ராஜன் அழவில்லை. பாறை இறுகியது. மாதகலில் தன்னுடன் நின்ற ஏழுபேரை வைத்து பெருங்கூட்டமாய் வந்த இந்தியப் படையினரை அடித்துக்கொன்று, கலைத்து, பெருந்தொகையாய் ஆயுதங்கள் அள்ளிவந்தபோது, எல்லா நாளும் ராஜனுடன் திரிந்த வெற்றி திரும்பிவரவில்லை. ஆயுதங்கள் எல்லாம் அப்படியே குவிந்து கிடக்க, காயப்பட்ட தம்பியையும், வெற்றியின் உடலையும் குப்பிளானில் பின்ற கிளியிடம் அனுப்பிவிட்டு, ஆயுதங்களிற்கு காவலாய் நின்றபோது ராஜன் அழவில்லை. அந்தப் பாறை இறுகியது. இந்தியா போனது. தமிழீழ வீடெங்கும் மகிழ்ச்சிக் குரல்கள், தெருவெங்கும் புலிவீரர். மிச்சமாயிருந்தன இந்திய எச்சங்கள். புலனாய்வுப் பணியில் ராஜன். அவனது மனம் விடுதலைப் போரையும், அதனுடன் இணைந்தவற்றையும் தவிர வேறொன்றைப் பற்றியும் எண்ணியதே கிடையாது. இப்படித்தான் ஒரு நாள் பள்ளியில் அவனுடன் படித்தவள். இயக்கத் தொடர்பில் அறிமுகமாகி பழகிக் கடிதமொன்றில் என்னவோ எழுதி அவனிடம் அனுப்பிவிட்டு காந்திருந்தாள் பாவம். கடிதத்தைப் படித்தவன் பக்கத்தில் நின்றவனுடன் நேரே போய்க் கடிதத்தைக் கிழித்துக் கொடுத்துவிட்டு “போராட்டம் தவிர வேறொன்றும் நான் நினையேன்” என்றான். தன் ஆசைமகன் போகும் ஊர்தியையென்றாலும் பார்போமென்று தாய்க்கிழவி றோட்டில் கால்கடுக்க காந்து நிற்க, இவன் மாதகலில் தான் போன வேலையை முடித்து திரும்பி வருவான். சிறிலங்காவுடன் சண்டை தொடங்கியது. ராஜன் ஒய்வின்றிச் சுழன்றான். அடிக்கடி அண்ணைச் சந்தித்தான். எல்லா இடமும் திரிந்தான். ஒவ்வொரு பங்கருக்கும் ஒவ்வொரு மண்மூட்டைக்கும் இடம் சொன்னான். மயிலிட்டியில் பெருஞ்சமர். ராஜன் ஊண் உறக்கமின்று நின்று வழிநடத்தினான். மழையாய்ப் பொழியும் செல்கள் – ரவைகள். மயிலிட்டிச் சண்டையில் மட்டும் இரண்டு தடவைகள் குண்டுச்சிதறல்கள் அவனைத் துளைத்துச் சென்றன. ஓய்வில்லை – அங்கு நடந்து கொண்டிருந்த சண்டையில் இருந்து அவனால் ஒதுங்கியிருக்க முடியவில்லை. கோட்டை முற்றுகை இறுக இறுக எங்கள் தளபதிகளின் தூக்கமற்ற இரவுகள் பெருகிக்கொண்டிருந்தன. மணியந்தோட்டத்திலிருந்து பொன்னாலைவரை நின்ற இளம் போராளிகள் ராஜனைக் கண்டு சிரிப்பர். இரவில்லை, பகலில்லை, ஓய்வில்லை, உணவில்லை, தன்னைப் பிழிந்து முற்றுகைக்கு உரம் கொடுத்தான். பாணுவின் உற்ற துணையாய் முற்றுகைக்குத் துணை நின்றான். எம்மால் உள்ளிறங்க முடியாமல்போய்விட்ட, இரண்டாவது கோட்டை உட்புகல் நடவடிக்கை முடிந்து விடிந்தபோது, “றோமியோ நவம்பர்” என்று பாணுவின் “வோக்கி” கூப்பிட்டபோதும் பதிலில்லை. மானிப்பாய் மருத்துவமனையில் பேச்சு மூச்சின்றி கிளி, ஜவான் ஆகியோருக்கு இடையில் கந்தல் துணிபோற் சுருண்டு கிடந்தான். காயம் மாறி கொஞ்சம் தேறி எழும்பி வந்தவன். இப்போது சாள்ஸ் அன்ரனி சிறிப்புப் படையணியில். இந்தக் காலம் ராஜனை ஒரு சிறந்த நிர்வாகியாக உருவாக்கியது. பால்ராஜின் துணைவனாய் நின்று படைப்பிரிவை உருவாக்குவதில் பெரும்பங்காற்றினான். சகல போராளிகளுடனும் அன்புடன், கண்டிப்புடன் நடைபெற்ற கடுமையான பயிற்சிக் காலம். தமிழீழத்தின் எல்லா இடங்களிலிருந்தும் வந்திருந்த போராளிகள். குடும்பத்தைப் பிரிந்து வந்தவர்களிற்கு தாயாக, தந்தையாக, நண்பனாக ஆசானாக. தமிழேந்தி அண்ணனிடம் காசுவாங்கி, இல்லையென்றால் ஊரில் கடன்வாங்கி, அதுவும் முடியாவிட்டால் வீட்டுக்குப் போய் பொருட்களைத் தூக்கி, அண்ணன் வணிகத்திற்கும் வைத்திருக்கும் பொருட்களை அள்ளி ஊர்தியில் ஏற்றி… எப்படியோ போராளிகளைத் தனது பிள்ளைகளாய் உயிராய் பார்த்தான். கவனித்தான். வன்னி போர்க் களம். எங்கள் வன்னிக் காடுகளை எதிரியின் பல்லாயிரம் படைகள் ஊடறுத்துவர முற்பட்ட “வன்னிவிக்கிரம” பெரும் படைகொண்டு ராஜன் மோத எதிரிப்படை திணறியது. சுட்டுவீழ்த்தப்பட்ட ஹெலிகப்டர் துண்டுகளை அள்ளி எடுத்து அனுப்பிய பின்னரும் தொடர்ந்தது சண்டை. எல்லாப் பக்கங்களாலும், பூவரசங்குளம் சந்திக்கு வந்து ஏறிய எதிரிகளை எதிர்கொண்டனர் எம்வீரர்கள். கடும் சண்டை. வானை நோக்கி நின்றவைகளும் நிலம் நோக்க, அனைத்து ஆயுதங்களையும் ஏந்திய கரங்களும் உறுதியாய் நிற்க, ஓடினான் எதிரி. கொஞ்ச நாள் இடைவெளியில் எதிரியின் இன்னொரு முயற்சி. வவுனியாவல் நகர்ந்து தோற்ற எதிரி, இம்முறை மன்னார் பக்கமாய்… இம்முறை சண்டை கொஞ்சம் கடுமையாய்.. எமது வீரர்களை இருபுறமும் சூழ்ந்தபடி எதிரி. ராஜனை உணர்ச்சிவசப்பட வைக்கும் சண்டை. எதைப்பற்றியும் யோசிக்காது எதிரியின் முகம் தெரியும் தூரத்தில் நின்று மோதிய, ராஜனின் விரல் இல்லாத உள்ளங்கையை உடைத்தபடி ஒரு ரவை, இன்னொரு ரவை அதே கையில் நடுவில். மிக அருகில் எதிரியின் துப்பாக்கிகள் சடசடக்க உறுதியாய் எதிர்த்து நின்றனர் தோழர்கள். உள்ள ஆயுதங்கள் எல்லாம் கொண்டுபோய், அடிஅடி என்று அடித்து ஆமியைக் கலைத்துவிட்டு, மயங்கிக்கிடந்தவனை, இழுந்து வந்து சேர்த்தான் ரூபராஜ். அன்று ராஜன் திரும்பி வந்தது, நம்பமுடியாத அதிசயம். அவன் மயங்கி வீழ்ந்து கிடந்தபோது, எதிரி மிக அருகில். மிக அருகிலேயே நின்றிருந்தான். ஆனையிறவு பெரும் போர்க்களம். ஒன்வின்றிப் பம்பரமாய் ராஜன். சென்றி நிற்கும் பங்கருக்குள், பசீலன் பொயின்ரில், சமையற் கொட்டிலில், சந்தியில் இருந்த மெடிக்ஸ் வீட்டில், எங்கும் நின்றான். எல்லா நேரமும் நின்றான். கட்டைக்காட்டில் ஆமியின் கவச ஊர்தி தகர்ந்தாலும், ஆர்.பி.ஜிக்கு ரோமியோ நவம்பர். புல்லாவெளியில் ஆட்டிலறி செல்விழுந்து இரண்டுபேர் செத்து ஐந்து பேர் காயமென்றால் மெடிக்ஸ் வானுக்கு றோமியோ நவம்பர். மெடிக்ஸ் வானை போகவிடாமல் கெலி நின்றால் கலிபர் அனுப்பவும் றோமியோ நவம்பர். குணாவின் குறூப்பிற்கு அனுப்பிய காக்குகளுக்கு சாக்குஊசி வேணுமெண்டால் றோமியோ நவம்பர். வீரர் வீழ்ந்து வியூகம் உடைந்து எதிரிப்படை முன்னேறும்வேளையில் தனித்த வீரரை ஒன்றாய்ச் சேர்நது எதிரியைத் தடுக்கும்வேலைக்கும் றோமியோ நவம்பர். எல்லாவற்றிற்கும் நின்றான். எல்லாப் பாரத்தையும் தானாய்ச் சுமந்தான். எப்படிப்பட்டவனை நாம் இழந்துவிட்டோம். பட்டறிவு மிக்க போர்த்தளபதியாய் ராஜன் நின்றபோதும் அவன் போர்க் களத்திலிருந்து தள்ளியே வைக்கப்பட்டிருந்தான். எங்கள் தலைவரின் பெருங்கனவுகளின் உறைவிடமாக ராஜன் இருந்தான். யாழ்ப்பாணச் சண்டையில் ஈடுபட்டிருந்த குழுக்களுக்கு உணவு வழங்கல் செய்யும் வேலையை அவனிடம் வலிந்து கொடுத்திருந்ததன் காரணம் அவனை யுத்த களத்திற்கு முன்முனையிலிருந்து எட்ட நிற்க வைப்பதற்கன்றி, வேறில்லை. பட்டறிவு மிக்க வீரன். அவனது பட்டறிவுகள் மெய்சிலிர்க்கும் கதைகள். ஓய்வில்லாக் கடும் உழைப்பாளி. அவன் மறையும்போது தலைவரின் பெரும் கனவில் உருவான மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளன். சிறந்த போர் பட்டறிவுகளை முன்னரே பெற்றிருந்த அவன். இங்கு எல்லா இடமும் இருந்து பொறுக்கி எடுத்த வீரர்களைப் பயிற்றுவித்தான். தன் அனுபவங்களை பிழிந்தெடுத்துக் கொடுத்தான். போர்க்கலை நுட்பங்களைக் கற்றான், கற்பித்தான். நேர்த்தியான வேலைத்திட்ட ஒழுங்கமைப்பை, கண்டிப்பை, அன்பை, கடும்பயிற்சியை, வியூகங்கள், வழங்கல்கள், வரைபடம்… என்று எல்லாவறறையும் கற்றான். கற்பித்தான். ராஜன் அமைதியானவன். தன் செயல்களினால் மட்டும் தன்னை அடையாளம் காட்டியவன். ஆம் செயல்களினால் மட்டும். எந்த வேலையாக இருந்தாலும் ராஜன் அதிகம் பேசுபவனல்ல. ஏதாவது படையத் திட்டம் தீட்டப்படும் வேளைகளில், பேசாது பார்த்தடி, கேட்டபடி இருக்கும் ராஜன் , திட்டம் தீட்டப்படுவது நிறைவுறுவதற்கு முன்னால் உள்ள இடைவெளியில் பேசுவான். குறிப்பிட்ட திட்டம் செயல் வடிவம் பெறும்போது அவனது யுக்தியின் பெறுமதி தெரியும். தனது கடமையைச் முழுமைமாகச் செய்வதில் தன்னை வெளிப்படுத்துவான். எந்தச் வேளையிலும் மற்றைய ஒருவரைக் குறை செல்வதைக் காண்பதரிது. “கடமையைச் செய், பயனை எதிர்பாராதே” என்பதற்கு எடுத்துக்காட்டாய் கர்ம வீரனாய் விளங்கினான். அவனது வரலாறு முழுமையாக எழுதப்பட்டால், அது பெரும் காவியமாகும். படைய வல்லுநர்களால் மட்டுமல்ல, மருத்துவ வல்லுநர்களாலும் நம்பமுடியாத அதிசயமாய் அவன் வரலாறு திகழும். எண்ணற்ற தாக்குதல்கள், எண்ணற்ற தோழர்கள், அவன் செய்தவைகள், அவன் பெற்ற பட்டறிவுகள் எண்ணி முடியாதவை. எழுத்தில் அடங்காதவை. நினைவுபகிர்வு:- ச.பொட்டு (தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர்) “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” வினோ தமிழீழம்- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.