Jump to content

நியானி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    2990
  • Joined

  • Days Won

    16

Everything posted by நியானி

  1. எங்களுக்கு... சிறிது கால, அவகாசம் வழங்குங்கள் – ஜனாதிபதி கோரிக்கை! எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் பல நீக்கப்பட்டு திரியும் பூட்டப்படுகின்றது.
  2. வணக்கம், யாழ் கள உறுப்பினர்கள் பலரும் யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதியில் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக. இதுவரை " யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 20 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. எஸ்கியூஸ் மீ மூருகா ( putthan) இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல.. ( ராசவன்னியன்) வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது.......! ( suvy) யாழ் எனும் திமிர். (valavan) பார்வை ஒன்றே போதுமே.......! (suvy) அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள் (மெசொபொத்தேமியா சுமேரியர்) 'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..! (ராசவன்னியன்) நினைவுகள் நிழல்கள் (theeya) இலைச் சருகுகள். (நிலாமதி) சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles) (ஈழப்பிரியன்) இயற்கையுணவே!எமக்கு வலிமை! (பசுவூர்க்கோபி) அந்த மனிதன் (மெசொபொத்தேமியா சுமேரியர்) மன வைராக்கியம் (நிலாமதி) ஈழத்திருநாடே என்அருமைத் தாயகமே (நிலாமதி) இரை .......! ( suvy) மனிதாபிமானப் பன்னாடை (புங்கையூரன்) மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால் (ரஞ்சித்) சீனா உருவாக்கிய பாலைவனப் பூமி...நகராகுமா..?! (nedukkalapoovan) நேற்று என் கனவில் கடல் வந்தது (நிழலி) புட்டினும் புதுமாத்தளனும் (goshan_che) குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும். இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும். சக கள உறுப்பினர்கள், பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம். நன்றி
  3. வணக்கம், யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதிக்கான இணைப்பு கருத்துக்களம் பகுதியின் மேற்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பதியப்படும் ஆக்கங்கள் அதிக பார்வைக்கு செல்லும் வாய்ப்புள்ளது. பல யாழ் கள உறுப்பினர்கள் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக. சுய ஆக்கங்கள் எழுதக்கூடிய ஆற்றல் உள்ள பல யாழ் கள உறுப்பினர்கள் உள்ளனர். ஆயினும், ஆக்கங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன. எனவே, காலந்தாழ்த்தாது ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். இதுவரை " யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. எஸ்கியூஸ் மீ மூருகா ( putthan) இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல.. ( ராசவன்னியன்) வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது.......! ( suvy) யாழ் எனும் திமிர். (valavan) பார்வை ஒன்றே போதுமே.......! (suvy) அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள் (மெசொபொத்தேமியா சுமேரியர்) 'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..! (ராசவன்னியன்) நினைவுகள் நிழல்கள் (theeya) குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும். இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும். சக கள உறுப்பினர்கள், பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம். நன்றி
  4. வணக்கம், யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்கள் போன்று சுய ஆக்கங்களைப் பதிந்து யாழ் அகவை 24 இனை சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 24 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். நன்றி
  5. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2022 அன்று யாழ் இணையம் 23 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 24 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து உலகை முடக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிக்குள்ளும் உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 24 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 24 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 24 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் இரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
  6. உலகில் புற்றுநோய் இல்லாத ஒரே நாடு பிஜி. எனும் திரி இணைத்தவரின் வேண்டுகோளின்படி நீக்கப்பட்டுள்ளது.
  7. யாழ்கள கருத்தாடல்கள் விதிமுறைகள் தெளிவாகவே உள்ளன. விதிமுறைகளை உள்வாங்கிக் கருத்துக்கள் வைப்பதும், களவிதிகளை மீறும் கருத்துக்களை உடனுக்குடன் முறைப்பாட்டு (Report) முறை மூலம் அறியத்தருவதும் கருத்துக்களத்தின் தரத்தைப் பேண உதவும். மட்டுறுத்துனர்கள் சகல கருத்துக்களையும் பார்த்து மட்டுறுத்துவது என்பது நடைமுறைச் சாத்தியமில்லை. அதனால் களவிதிகளை மீறும் சில கருத்துக்கள் கருத்துக்களத்தில் காணப்படலாம். இவற்றினை அகற்ற கள உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மேலும், கள உறுப்பினர்களில் சிலர் கருத்துக்கள விதிமுறைகளை சட்டைசெய்யாதும், விதிமுறைகளை மீறும் வகையில் தந்திரமாக வளைத்தும் கருத்துக்கள் வைப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கருத்துக்கள விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீது மட்டுறுத்துதலும், பயனர்கள்/கள உறுப்பினர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகளும், எ.கா. நிரந்தர மட்டுறுத்துனர் பார்வையில் விடப்படுவது, எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். மேலே உள்ள கருத்துக்கள் தொடர்பான சில விதிகள்: கருத்துக்கள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் சமூகப் பொறுப்புடனும் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும். தனிநபர்களையும் அமைப்புக்களையும் தாக்கும், திட்டித் தூற்றும், புண்படுத்தும், குந்தகம் விளைவிக்கும் பாதகமான கருத்துக்கள்/பதிவுகள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும். நாடுகளின் நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களையும் (உதாரணம்: சனாதிபதி, பிரதமர், மந்திரிகள்), சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்களையும், உயிரோடு இருக்கும்/மறைந்த சமூகத் தலைவர்களையும், கட்சித் தலைவர்களையும், கலைஞர்களையும் (சினிமாத்துறை உள்ளடங்கலாக) ஒருமையில் விளித்தலும், அவதூறான சொற்களால் இகழ்தலும், இழிவுபடுத்தும் காணொளிகளும், மீமி படங்களும், அசைபடங்களும், போலியாக உருவாக்கப்பட்ட படங்களும், சமூகவலை இணைப்புக்களும் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும். யாழ்கள விதிகள்:
  8. தற்போது கருத்துக்கள உறவுகள் ஆறு விருப்புப் புள்ளிகள் வழங்கலாம்.
  9. நிர்வாகத்தினர் மட்டுமே பார்க்கக்கூடிய பகுதியில் நடைபெறும் கருத்தாடல்களுக்கு நிர்வாகத்தில் உள்ளவர்களால் வழங்கப்படும் விருப்புப் புள்ளிகளின் எண்ணிக்கையை பொதுவில் பார்க்கக்கூடியதாக இருந்தாலும், அக் கருத்துக்களை நிர்வாகத்தினர் மட்டுமே பார்க்கமுடியும். மேலும், கருத்துக்கள மாற்றங்கள் பற்றிய கருத்தாடல் நிர்வாகப் பகுதியில் நடந்துகொண்டிருக்கின்றது. இது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.
  10. கள உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் சீண்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் அநாகரீகமாக உரையாடவும் திண்ணையைப் பாவிப்பதை அனுமதிக்கமுடியாது. களவிதிகளை மீறும் கருத்துக்களை முறைப்பாடு முறை மூலம் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துவதை விடுத்து திண்ணையில் தேவையற்ற உரையாடலை தொடர்ந்ததனால் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் கள உறுப்பினர்கள் தமக்குள் உரையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள திண்ணைப் பகுதி தொடர்பான விதிகள்: திண்ணை உரையாடல்கள் யாழ் கருத்துக்கள விதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். திண்ணை உரையாடல்கள் கண்ணியமான முறையிலும் நட்பு ரீதியிலும் இருத்தல் வேண்டும். தனிநபர் தாக்குதல், சீண்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் உரையாடுதல், நீ, வா, போ என ஒருமையில் சக உறுப்பினரை விளித்தல், அநாகரீகமாக உரையாடுதல், இழிவான வார்த்தைகளைப் பிரயோகித்தல் போன்றன கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்
  11. கருத்துக்கள உறவுகள் குழுமத்திற்கு தரமுயர்த்தியுள்ளோம். எனவே பிற பகுதிகளிலும் திரிகளை ஆரம்பிக்கவும் பதில்களை எழுதவும் முடியும்.
  12. சுவைப்பிரியன், நகலெடுத்து ஒட்டுவது வேலை செய்கின்றது. எந்த உலாவியில் (browser) வேலை செய்யவில்லை என்று தெரியப்படுத்தினால் சரிபார்க்கமுடியும்.
  13. கருத்துக்களத்தில் மறைவில் நிற்பவர்களை சக கள உறுப்பினர்கள் காணமுடியாது. எனினும் புதிய திண்ணையில் மறைந்து நிற்கும் வசதி இப்போது இல்லை.
  14. தமிழில் எழுதுவதற்கு எந்த மென்பொருளை பாவிக்கின்றீர்கள் என்று கூறினால் என்ன பிரச்சினை என்று சோதித்துப் பார்க்கலாம். ஒருங்குறியில் பதிவுகளை மேற்கொள்ள Ipad இல் தமிழ் தட்டச்சைத் தெரிவு செய்யலாம். அல்லது இகலப்பைபையை மடிக்கணினியில் நிறுவித் தமிழில் எழுதலாம். தமிழில் எழுதப் பின்வருவனவற்றைப் பயன்படுத்தலாம்.விண்டோஸ் இயங்குதளத்தில் அமைந்த கணினி: இகலப்பை. காணொளி விளக்கம்: eKalappai விளக்கம் Keyman - தமிழ் சுரதா பாமுனி. கட்டணமற்றது. விண்டோஸ் 8 எனில் அதில் உள்ள Short-Cut வசதியைப் பாவித்து தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாற்றிக் கொள்ள முடியும் Keyman Tavultesoft * கட்டணம் செலுத்தவேண்டும். iOS இயங்குதளத்தில் அமைந்த iPad வரைபட்டிகை (tablet), iPhone திறன்பேசி (smartphone):தமிங்கில விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Anjal தமிழ்99 விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Tamil 99 Android இயங்குதளத்தில் அமைந்த வரைபட்டிகை (tablet), திறன்பேசி (smartphone):செல்லினம்
  15. பெயர் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது. பெயர் மாற்றங்களுக்குக் கீழுள்ள திரியைப் பயன்படுத்த வேண்டும். http://www.yarl.com/forum3/index.php?/topic/1195-பெயர்-மாற்றங்கள்/
  16. சில உலாவிகள் (உதாரணம்: FireFox) கடவுச் சொல்லை சேமித்து வைத்திருக்கும். எனவே உலாவியின் இணையத் தெரிவுகள் பக்கம் சென்று சேமித்து வைக்கப்பட்டிருக்கும், கடவுச் சொற்கள், cookies போன்றவற்றை அழித்துவிட்டால் உலாவி கடவுச் சொல்லை நினைவில் வைத்திருக்காது. பொது இடங்களில் அல்லது பிறருக்குச் சொந்தமான கணணிகளைப் பாவிக்கும்போது கடவுச் சொல்லைத் சேமிக்கவேண்டுமா என்று உலாவி கேட்டால் கட்டாயம் "இல்லை" என்பதைத் தெரிவு செய்யவேண்டும். பாவித்து முடித்த பின்னர் உலாவியை மூட முன்னர், history, cookies, temporary internet files, passwords போன்றவற்றை மறக்காமல் அழித்துவிடவேண்டும். மேலுள்ளதை முயன்றதன் பிற்பாடும் பிரச்சினைகள் இருந்தால் அறியத் தாருங்கள். நன்றி.
  17. ஈழநாதனுக்கு யாழ் கள உறவுகளின் சார்பில் அஞ்சலி முகப்பில் பிரதான செய்திகளுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
  18. யாழ்கள உறவுகளுக்கு வணக்கம், நியானி என்ற பெயரில் மட்டுறுத்துனராக புதிதாக யாழில் இணைந்துள்ளேன். ஒரு கருத்துக்களையும் பதியாமல் மட்டுறுத்துனராக இணைந்ததையிட்டு சந்தேகங்கள், சங்கடங்கள், கேள்விகள் பலரிடமும் இருக்கலாம். எனவே ஒரு சிறு அறிமுகம். யாழுடன் எனக்கு பல வருடங்கள் பரிச்சயம் உண்டு. தாயகச் செய்திகளை அறிவதற்கு பல்வேறு இணையத் தளங்களிற்கு போகாமல் ஒரே இடத்தில் பார்க்கும் வசதி யாழில் உள்ளது என்பதும் செய்திகளுக்கு வரும் கருத்துக்கள் மூலம் கள உறவுகளின் சிந்தனை ஓட்டத்தை அறிய முடிவதும் பிடித்தமான விடயங்கள். தனியே செய்தித் தளமாகவும் , பொழுதுபோக்கு தளமாகவும் இயங்காமல் தமிழில் ஆர்வமாக எழுதக் கூடியவர்களை ஊக்குவித்து பல படைப்பாளிகளை உருவாக்கியுள்ளதும் யாழுக்கே மிகவும் தனித்துவமானது. இந்த நேரத்தில் யாழ் களத்தை பல சிரமங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் சிறப்பாக இயங்கச் செய்துவரும் யாழ்களப் பொறுப்பாளர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். யாழ் முரசத்தில் வந்துள்ள அறிவித்தலின் படி யாழ்கள பொறுப்பாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் சக கருத்துக்கள உறவு நுணாவிலானுடன் மட்டுறுத்துனராக செயற்பட சம்மதித்தேன். எனினும் அதிக சர்ச்சைகள் இல்லாமல் யாழ் களம் இயங்குவதால் மட்டுறுத்தல் வேலை எனக்கு குறைவாகவே இருக்கும் என நம்புகிறேன். யாழ் கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைய மட்டுறுத்தும் பணியில் ஈடுபட்டாலும் தவறுகள் ஏற்படலாம். அப்படி ஏதாவது பிழைகள் வந்தால் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி ஒத்துழைக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். நியானி - நியாயம், அநியாயம், ஞானம், அஞ்ஞானம் எல்லாம் கலந்த கலவை. அநியாயமும் ஞானமும் மிகவும் சொற்பமாக இருக்கும். நன்றி. http://www.yarl.com/forum3/index.php?showtopic=109049&hl=
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.