Search the Community
Showing results for tags 'திருகோணமலை'.
-
தமிழ் மக்கள் 80 வீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம் - இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சண்முகம் குகதாசன் இம் முறை நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் 80 சதவீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுன்ற முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலையில் (22) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தால் தான் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 1985ம் ஆண்டு முதல் நில அபகரிப்பு செய்யப்பட்ட விவசாய மக்கள் காணிகளை மீளப் பெறலாம் வன இலாகா 4000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களையும் தொல்பொருள் திணைக்களம் 2600 ஏக்கர்களையும் இது போன்று இலங்கை துறை முக அதிகார சபை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்களையும் பௌத்த பிக்குகள் விகாரைக்கான கட்டுமானம் என்ற போர்வையில் பல நிலங்களை அபகரித்துள்ளனர். இதனை மீட்க தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகள் தேவை. எனவே தான் அனைவரும் ஒன்றினைந்து ஒரே குடையின் கீழ் செயற்படுவதுடன் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் இரு ஆசனங்களை பெறலாம் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆகிவிடும். பல கட்சிகளும் பல சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன, தமிழ் வாக்குகளில் மொத்தமாக 98ஆயிரம் வாக்குகள் காணப்படுகிறது. இதில் சுமாராக எழுபதாயிரம் வாக்குகளையாவது தமிழ் மக்கள் அளிக்க வேண்டும். வாக்குகளை அளிப்பதற்காக மக்களை ஊக்கப்படுத்த வேண்டும். இஸ்லாமியர்கள் 80 வீதமான வாக்குகளை அளிக்கின்றனர். தமிழ் மக்கள் 65 வீதமான வாக்குகளையே அளிக்கின்றனர். எனவே இம் முறை 85 வீதமான வாக்குகளை அளிக்க வேண்டும். அப்போது தான் நம் மண்ணின் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு உரிமைகள் அபிவிருத்திகளை பெற முடியும். இந்தியாவில் 15 பேரை வைத்து மோடி ஆட்சி நடத்துகிறார் தெலுங்கான மக்கள் ஒற்றுமை காரணமாகவே இந்த ஆட்சி நடைபெறுகிறது மொத்தமாக 545 உறுப்பினர்களை வைத்து அங்கு ஆட்சி இடம் பெறுகிறது அது போன்று இங்கு 225 உறுப்பினர்களில் நாம் 25 தமிழ் பிரதிநிதிகளை பெற வேண்டும். இவ்வாறாக தான் நாம் இலங்கை தமிழ் அரசு கட்சி டெலோ, புளட், ஈபிஆர்எல் எப் போன்ற கட்சிகள் ஒற்றுமையாக இணைந்துள்ளோம். இதனால் நம் பிரதிநிதித்துவத்தை ஒற்றுமை மூலமே பாதுகாக்க முடியும் என்றார். https://www.virakesari.lk/article/196958
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ அறிமுகவுரை இந்த ஆவணக்கட்டில் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை முஸ்லீம்களால்; 1989ம் ஆண்டு இவர்களை 'முஸ்லிம்கள்' என்ற தனி இனக்குழுவாக விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டனர்; மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் மாத்திரமே ஒருமுகப்படுத்தப்பட்டு பதிவுசெய்யப்படும். முஸ்லிம்கள் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்டதென்று (புலிகள் மறுத்துள்ள போதிலும்) அவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவை குறித்து எதுவுமே பதிவிடப்படாது என்பதையும் முன்கூட்டிய பறைந்துகொள்கிறேன். இதைத் தொகுப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று, இலங்கை முஸ்லிம்கள் எப்பொழுதும் தம்மால் எழுதப்படும் கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் தமது தரப்பால் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் அனைத்தையும் வேண்டுமென்று மறைத்தே தமிழர் தரப்பு மீதான கொலைப் பழிகளை விரிப்பர். அவ்விரிப்புகளில் நல்லபிள்ளை வேடமிட்டு தாம் முதலில் தமிழரைத் தாக்கவில்லை என்பது போன்றும் தமிழரே சும்மா இருந்த தம்மைத் தாக்கினர் என்பதான தோற்றப்பாட்டையும் உண்டாக்கியிருப்பர். அதாவது மெய்மைக்கு மாறாக பொய்யான தோற்றப்பாட்டை உண்டாக்கியிருப்பர். மேலும், அதில் தமிழர் தரப்பு மீது குற்றஞ்சாட்டப்பட்ட கொலைகள் ஏற்படுவதற்கு வழிவகுத்த தம்மால் தமிழருக்கு ஏவல்செய்யப்பட்ட படுகொலைகள் குறித்து கிஞ்சித்தும் எழுதியிரார். ஆகவே காலம் காலமாக இருந்துவந்த இந்த முஸ்லிம் பக்கம் மட்டும் நியாயம் கேட்பு என்பதற்கு மாறாக தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளையும் எடுத்துரைக்க இவ் ஆவணக்கட்டு முயலும். மேலும் தமிழர் தரப்பும் இதுநாள் வரை வீரியமாக சிங்களவரின் படுகொலைகளை ஆவணப்படுத்தியது போல் முஸ்லிம்களின் அட்டூழியங்களை ஆவணப்படுத்த சிரத்தை எடுத்ததில்லை என்பது எம்தரப்பின் வலுவீனமே. ஆகவே அக்குறையினை போக்கும் படியாகவும் தமிழர் தரப்பு அனுபவித்த கொடுமைகளை எடுத்துரைக்கவும் இவ்வாவணக்கட்டு எழுதப்படுகிறது. இதில் எனது சொந்த எழுத்தாக ஆதாரங்களின் துணையோடு எழுதியிருப்பது "முன்னுரை" மாத்திரமே. மேற்கொண்டு பதிவிட இருப்பவை எல்லாம், பல்வேறு நம்பகமான வலைத்தளங்கள், மாதயிதழ்கள், நாளேடுகள் மற்றும் சில குறிப்பிட்ட பன்னாட்டு அமைப்புகளால் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள், ஊர்காவல்படை, & காடையர்கள் பற்றியும் அவர்களால் ஈழப்போர் காலத்தில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் பற்றியும் வெளியிடப்பட்ட கட்டுரைகள், செய்திகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவையே ஆகும். சுருகங்கச் சொல்லின் ஒரு தொகுப்பாக இருக்கும். இவ் ஆவணக்கட்டானது தொடர்ந்து என்னால் இற்றைப்படுத்தப்பட்டு எமது தமிழ் தேசத்திற்கு இலங்கை முஸ்லிம்களின் இனவெறியால் ஏவல்செய்யப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பான ஒரு பாரிய வரலாற்றுப் பேழையாக, அடுத்தடுத்த தலைமுறைகளின் வரலாற்று அறிவுப்பெட்டகமாக பேணப்படும். *****
- 164 replies
-
- 6
-
- முஸ்லிம்கள்
- சோனகர்
-
(and 59 more)
Tagged with:
- முஸ்லிம்கள்
- சோனகர்
- படுகொலைகள்
- வன்புணர்ச்சி
- கொலை
- குற்றம்
- இனவழிப்பு
- இனப்படுகொலை
- முஸ்லிம் ஊர்காவல் படை
- இஸ்லாமியர்
- ஜிஹாத்
- ஜிகாத்
- தமிழர்
- தமிழீழம்
- ஈழம்
- விடுதலைப் புலிகள்
- சிறிலங்கா
- அதிரடிப்படை
- காத்தான்குடி
- திருகோணமலை
- மட்டக்களப்பு
- அம்பாறை
- முஸ்லிம் படுகொலை
- காத்தான்குடி படுகொலை
- பள்ளிவாசல்
- மசூதி
- தமிழ் இனப்படுகொலை
- சிறிலங்கா இராணுவம்
- இராணுவம்
- ஊர்காவல்படை
- முஸ்லிம்களால் ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்
- இஸ்லாமியர்களால் ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லீம்கள் செய்த படுகொலைகள்
- நிகழ்த்திய
- முசுலிம்
- அழிவுகள்
- கொலைகள்
- வீரமுனை படுகொலை
- ஊர்காவல் படை
- காடையர்கள்
- muslim
- massacres
- tamils
- sri lanka
- tamil eelam
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- முஸ்லிம் தாக்குதல்
- பள்ளிவாசல் தாக்குதல்
- இஸ்லாமியர் மீதான கொலை
- வன்முறை
- கற்பழிப்பு
- அடிதடி
- படுகொலை
- கொள்ளை
- தமிழர் படுகொலை
- தாக்குதல்
- முஸ்லிம்கள் படுகொலை
- காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை
- ஏறாவூர் படுகொலை
-
02 AUG, 2024 | 08:54 AM திருகோணமலை, தம்பலகாமம் - பத்தினிபுரம் கிராம மக்கள் காலாகாலமாக பயன்படுத்திவந்த மயானத்தை பெற்றுத்தருமாறுகோரி ஆளுநரிடம் முறையிட்டிருந்தார்கள். இதனையடுத்து, அவருடைய பணிப்பின்பேரில் ஆளுநரின் ஆலோசகர் உட்பட ஒரு குழுவினர் நேற்று வியாழக்கிழமை மாலை (01) பத்தினிபுரம் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த இடத்தினை பார்வையிட்டதுடன், மக்களுடனும் கலந்துரையாடியிருந்தார்கள். குறித்த கலந்துரையாடலில் ஆளுநரின் ஆலோசகர் சிவராஜா, திருகோணமலை தமிழர் பேரவையின் செயற்பாட்டாளர் நிக்களஸ், வனவளத்துறை அதிகாரிகள், தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட சிவில் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது குறித்த பகுதியில் இறந்த உடல்களை அடக்கம் செய்யலாம் எனவும் ஆனால் துப்பரவு செய்ய முடியாது எனவும் வருகை தந்திருந்த வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர். இதனை ஏற்றுக் கொள்ளாத பொதுமக்கள் தமது மயானத்தை தமது பாவனைக்காக முழமையாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். குறித்த விடயத்தை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரந்தர தீர்வை பெற்றுத் தருவதாக ஆளுநரின் ஆலோசகர் குறிப்பிட்டார். தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் கிராம மக்கள் மயானம் இன்றி தங்களுடைய இறந்த உடல்களை அடக்கம் செய்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 1970ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே காலாகாலமாக பத்தினிபுரம் கிராம மக்கள் மயானமாக பயன்படுத்தி வந்த இடமானது 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும் வந்தபோது வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்களுடைய எதிர்ப்புக்கு மத்தியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருவதாகவும், ஒரு மனிதனுடைய இறுதி காரியத்தைக்கூட கௌரவமாக செய்யமுடியாதுள்ளதாகவும் அதனை மீட்டுத்தருமாறும் மக்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/190054