Search the Community
Showing results for tags 'துயிலும் இல்லம்'.
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற துயிலுமில்ல நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். " செத்தவர் என்றும்மை செப்புவமோ - உமை சென்மத்தில் நினைந்திடத் தப்புவமோ குத்துவிளக்கதும் நீரல்லவோ - நாம் கும்பிடும் தெய்வங்கள் நீரல்லவோ நித்தமும் வாழுவீர் மாவீரரே - எங்கள் நெஞ்சுகளில் இளம் பூவீரரே! " -->வித்தொன்று விழுந்தாலே பாடலிலிருந்து { ஒரு படிமத்தில் உள்ள கல்லறையினையோ அ நினைவுக்கல்லினையோ அஃது எந்த துயிலுமில்லத்திற்கானது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பதெனில், அதில் உள்ள மாவீரர் பெயரினை எடுத்து இங்கு - http://veeravengaikal.com/ - போட்டால் இதில் இம்மாவீரர் வித்துடல் எங்கு விதைக்கப்பட்டிருந்தது என்ற தகவல் கிடைக்கும். அதன் மூலம் அப்படிமத்தில் உள்ளது எந்த துயிலுமில்லத்திற்கான கல்லறை எ நினைவுக்கல் என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஒரே பெயரில் பல மாவீரர்கள் இருக்கலாம். எனவே கவனம் கூட வேண்டும். ஆனால் நேரமின்மையால் நன்னிச்சோழன் ஆகிய நான் அவ்வாறு செய்யவில்லை. தேவைப்படுவோர் தேடிக்கொள்ளவும். நேரம் கிடைக்கும்போது பையப்பைய செய்து விடுகிறேன்.} "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 220 replies
-
- 2
-
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
-
(and 26 more)
Tagged with:
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- மாவீரர்கள்
- துயிலும் இல்லம்
- கல்லறைகள்
- மாவீரர்
- மாவீரர் நாள்
- thuyilumillam images
- துயிலுமில்லம்
- நினைவுக்கற்கள்
- ltte cemetry
- துயிலுமில்ல கல்லறைகள்
- ஈகைச்சுடர்
- மாவீரர்நாள்
- விடுதலைப்புலிகள்
- கல்லறை
- ltte heroes day
- maaveerar
- maveerar
- maverar
- great heroes day tamil
- great heroes day ltte
- tamil heroes day
- tamil eelam maaveerar day
- துயிலுமில்லங்கள்
- tamil cemetery
- tamil tigers cemetery
- heroes cemetery ltte
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! பாகம் - 01 தமிழீழ விடுதலைப் போராட்டக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து வீரச்சாவடைந்த போராளிகளின் சடலங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன என்பது குறித்து இக்கட்டுரையில் அலசப்பட்டுள்ளது. இந்த அடக்கம் தொடர்பாக பார்பதற்கு முன்னர் இவற்றைக் குறிக்க புலிகளால் பாவிக்கப்பட்ட சில விதப்பான சொல்லாடல்கள் பற்றி முதற்கண் பார்ப்போம். பிடாரச்சொற்கள் (Newly coined terms) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களானோர் சிறிலங்காப் படைத்துறையுடனோ அல்லது இந்தியப் படைத்துறையுடனோ அல்லது தமிழ் தேசவெறுப்புக் கும்பல்களுடனோ மிண்டி ஏற்படும் அடிபாடுகளால் மரணமடையும் போது அச்சாவானது "வீரச்சாவு" என்று புலிகளாலும் தமிழ் மக்களாலும் சுட்டப்பட்டது. இவ்வீரச்சாவானது களத்திடை நிகழும் போது "களச்சாவு" என்றும் களத்தில் விழுப்புண்ணேந்தி மருத்துவமனையில் பண்டுவம் பெற்றுவரும் போது அஃது பலனளிக்காது சாவடைய நேரிட்டால் "காயச்சாவு" என்றும் சுட்டப்பட்டது. எவ்வாறெயினும் வேறுபாடில்லாமல் பொத்தாம் பொதுவாக "வீரச்சாவு" என்ற சொல்லே பாரிய பெரும்பான்மையாக பாவிக்கப்பட்டுள்ளது. "களச்சாவு" என்ற சொல் ஆங்காங்கே இலக்கியத்திலும் இயக்கப்பாடல்களிலும் பாவிக்கப்பட்டுள்ளது. "காயச்சாவு" என்ற சொல்லின் பாவனையோ புலிகள் கால எழுத்துலகில் என்னால் காணமுடியவில்லை! வீரச்சாவடைந்த புலிவீரர் "மாவீரர்" (மா+வீரர்) என்று விளிக்கப்பட்டார். பல்பொருளுடைய இந்த மா என்ற ஓரெழுத்துச் சொல்லானது ஒருவரின் நல்ல, கெட்ட குணங்களை மிகுதிப்படுத்தும் பெயரடையாகும். அத்துடன் இக்கூட்டுச்சொல்லானது மிகப் பெரிய பெருமையும் வலிமையும் உடைய வீரர் என்று வீரச்சாவடைந்த அவ்வீரரை குறிக்கிறது. இது ஆகக்குறைந்தது 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் மாவீரர் வாரத்திலிருந்து பாவிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் இச்சொல்லை சரியாக எப்போதிலிருந்து பாவிக்கத் தொடங்கினர் என்பது தெரியவில்லை. இம்மாவீரரின் சடலமானது "வித்துடல்" (வித்து + உடல்) என்று சுட்டப்பட்டது. இவ்வித்துடல் "துயிலும் இல்லத்தில்" புதைக்கப்படும் செயலானது "விதைத்தல்" என்று அழைக்கப்பட்டது. இச்சொல்லினை, ஒரு தாவரத்தின் வித்து (உவமை) நாட்டப்படும் போது பெரும்பாலும் முளைக்கிறது என்ற நியதியின்படி தமிழ் விடுதலை வீரர்களின் சடலங்களான (உவமேயம்) வித்துடல்கள் விதைக்கப்படும் போது அதனைக்காணும் தமிழர்களும் புதிதாய் இயக்கத்தில் சேர்வார்கள் என்று பொருள்படும் படியான உவமைச் சொல்லாக உண்டாக்கியிருந்தனர். "வீரவணக்கம்" என்ற சொல்லானது 1986ம் ஆண்டு வெளியான விடுதலைப்புலிகள் இதழில் முதன் முதலில் பாவிக்கப்பட்டுள்ளது. இது வீரச்சாவடைந்த ஒருவருக்கு செய்யும் வீரமான வணக்கம் என்ற பொருளில் பாவிக்கப்படுகிறது. ஒருவரின் வீரச்சாவு அறிவித்தல் வெளிவரும் போதோ அல்லது அவரது நினைவு நாள் அறிவித்தலின் போதோ இச்சொல்லானது பாவிக்கப்படுகிறது. இந்தியப் படைக்குப் பின்னான காலகட்டத்தில் மாவீரர் கல்லறைகளின் தலைப் பகுதியின் மேற்பகுதியிலும் மற்றும் நினைவுக்கற்களின் மேற்பகுதியிலும் 'வீரம் நிறைந்த புலி' என்ற பொருள்படத் தக்கதான சொல்லான "வீரவேங்கை" என்ற சொல் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இச்சொல் தான் தவிபுஇன் அடிப்படைத் தரநிலையும் கூட. இம்மாவீரரின் தரநிலையுடனான இயக்கப்பெயருக்கு மேலே "வீரவேங்கை" என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளதைக் காண்க. படிமப்புரவு (Image Courtesy): ஈழநாதம் 1990.12.20 | பக்கம் 2 ஆகக்குறைந்தது 20/12/1990 அன்று தொடக்கமாவது "வீரவேங்கை" என்ற சொல் பாவிக்கப்பட்டிருப்பதை அற்றை நாளில் வெளியான ஈழநாதம் நாளேடு மூலமாக அறியக்கூடியவாறு உள்ளது. அற்றை நாளேட்டில் 'லெப். சுஜி' என்ற மாவீரரின் 45ம் நாள் நினைவஞ்சலி பதிவில் அவரது தரநிலைக்கு மேலே வீரவேங்கை என்ற இச்சொல் எழுதப்பட்டுள்ளது. அதாவது கல்லறை மற்றும் நினைவுக்கற்களின் மேல் எழுதப்பட்டிருப்பதைப் போன்றே இச்சொல் பாவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சொற்கள் யாவும் புலிகளால் உருவாக்கப்பட்டு மக்கள் நடுவணில் பரவலறியாகி புழக்கத்திற்கு வந்தன. இன்றளவும் புழக்கத்தில் உள்ளன. புழக்கச் சொற்களின் பாவனை அப்படியானால் இச்சொற்களிற்கு முன்னர் எத்தகைய சொற்கள் பாவனையில் இருந்தன என்று உங்கள் மனதில் கேள்விகள் எழலாம். இதற்கு முன்னரான காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்று மேற்கூறப்பட்டவை போன்ற தனியான பிடாரச் சொற்கள் (newly coined terms) இருந்ததில்லை. பொதுவாக மக்கள் நடுவணில் புழக்கத்திலிருந்த சொற்களே புலிகளாலும் கையாளப்பட்டன; வீரமரணம், Body (த.உ.: பொடி) அ புகழுடல், தகனம் அ புதைத்தல், கண்ணீர் அஞ்சலிகள் ஆகியனவே அவையாகும். எடுத்துக்காட்டாக, 1984ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 திகதியில் வெளியான புலிகளின் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இதழில் தமிழீழ விடுதலை போரின் முதல் மாவீரரான லெப். சங்கரின் வீரச்சாவின் இரண்டாம் ஆண்டு நினைவையொட்டி ஓர் சுவரொட்டி வெளியாகியிருந்தது. படிமப்புரவு: விடுதலைப்புலிகள் மாத இதழ், 1984 திசம்பர் இச்சுவரொட்டியில் அன்னாரின் தரநிலையுடன் இயக்கப்பெயருக்குப் பகரமாக முதலெழுத்துடனான இயற்பெயரே வழங்கப்பட்டுள்ளது. இயக்கப்பெயரானது மாற்றுப்பெயராக தரநிலையுடன் கீழே வழங்கப்பட்டுள்ளதைக் காண்க. இம்முறைமையானது, "லெப்டினன்ட்" வரையான தரநிலை உடையோருக்கு மட்டுமே 1987ம் ஆண்டு வரை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிவந்த அனைத்து "விடுதலைப்புலிகள்" இதழ்கள் மூலமாக அறியக்கூடியவாறு உள்ளது. எனினும், கப்டன் முதல் லெப். கேணல் ஈறான தரநிலைகளிற்கு பிற்காலத்தில் அவர்களால் கைக்கொள்ளப்பட்டு இறுதிவரை கடைப்பிடிக்கப்பட்ட 'தரநிலையுடனான இயக்கப்பெயர்' என்ற முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 1984ம் ஆண்டு சூலை மாதத்தில் வெளியான விடுதலைப்புலிகள் இதழில் "கப்டன் ரஞ்சன் லாலா" என்று ஒரு போராளியின் (அடிக்கற்களில் ஒருவர்) வீரச்சாவு குறிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தான் பிற அடிக்கற்களில் சிலரான லெப். கேணல் விக்ரர், மேஜர் கணேஸ் உள்ளிட்டோரின் விரிப்புகளும் விடுதலைப்புலிகள் இதழில் வெளியாகியுள்ளன. மேலும், அச்சுவரொட்டியில் வீரச்சாவு என்ற சொற்பதத்துக்குப் பகரமாக "வீரமரணம்" என்ற சொற்பதத்தையே தொடக்கத்தில் பாவித்துள்ளனர். இச்சொல்லானது 1992 நடுப்பகுதி வரை பாவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரிருந்து "வீரச்சாவு" என்ற சொல் பாவானைக்கு வந்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே வீரமரணம் என்ற சொல்லும் சமாந்தரமாக கையாளப்பட்டுள்ளது. இதே காலப்பகுதியிலும் இதற்குப் பின்னான காலப்பகுதியிலும் "களப்பலி" (களச்சாவு என்ற சொல்லுக்கு ஈடான சொல்) பாவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போரின் தொடக்க காலத்திலிருந்து 1991 இன் ஒரு குறித்த (சரியான காலம் தெரியவில்லை) காலம் வரை போராளிகளின் வித்துடல்கள் "பொடி/Body" என்றுதான் பேச்சு வழக்கில் விளிக்கப்பட்டுவந்தது. அக்கால புலிகளின் படைத்துறை ஆவணங்களில் வித்துடல்களைக் குறிக்க 'உடல்' என்ற சொல் பாவிக்கப்பட்டிருப்பதை "விடியலை நோக்கி முடியாத போராட்டங்கள்" என்ற கேணல் கிட்டுவால் 1988இல் எழுதப்பட்ட தொடர் மூலம் அறியக்கூடியவாறு உள்ளது. எவ்வாறெயினும் ஆகக்குறைந்தது 1991ஆம் ஆண்டின் கார்த்திகை மாதத்திலிருந்து "புகழுடல்" என்ற சொல்லானது போராளிகளின் வித்துடல்களைக் குறிக்க பாவிக்கப்பட்டது என்ற தகவலை 1991ஆம் ஆண்டின் ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏட்டிலிருந்து அறியமுடிகிறது. பிடாரச்சொல்லான "வித்துடல்" என்ற சொல் புலிகள் அமைப்பில் பாவனைக்கு வந்த காலத்தை அறியமுடியவில்லை. இதே போன்று பிற்காலத்தில், 1986இலிருந்து, பாவிக்கப்பட்ட "வீரவணக்கம்" என்ற சொல்லுக்கு ஈடாக சாதாரணமாக ஒரு பொதுமகன் இறப்பாராயின் அவரை நினைவுகொள்ள பாவிக்கப்படும் "கண்ணீர் அஞ்சலிகள்" என்ற சொல்லையே புலிகளும் அவர்களின் ஆரம்ப காலத்தில் பாவித்துள்ளனர் என்பதை அவர்கள் லெப். சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந்த் ஆகியோருக்கு 19/05/1983 அன்று ஒட்டிய சுவரொட்டிக்கள் மூலம் அறியக்கூடியவாறு உள்ளது. தொடக்க காலத்தில் போராளிகளின் வித்துடல்கள் சுடுகாடுகளில் தகனப்பட்டன அ இடுகாடுகளில் புதைக்கப்பட்டன. அதனைச் சுட்ட தகனம் அல்லது எரியூட்டல் மற்றும் புதைத்தல் போன்ற வழக்கமான சொற்கள் பாவிக்கப்பட்டன. புலிகள் அமைப்பில் வித்துடல்களை விதைக்கும் பழக்கம் ஏற்பட்ட 1991ஆம் ஆண்டிலும் "புதைப்பு" என்ற சொல்லே இச்செயலைச் சுட்டப் பாவிக்கப்பட்டுள்ளது. விதைத்தல் தொடர்பில் புலிகளால் வெளியிடப்பட்ட முதலாவது அலுவல்சார் கட்டுரை வெளிவந்த ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏட்டில் கூட "புதைப்பு" என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது! எவ்வாறெயினும் "விதைப்பு" என்ற சொல்லின் பாவனை தொடங்கப்பட்ட காலத்தையும் அறியமுடியவில்லை. (தொடரும்) ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழத்தில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்களினுள் இருந்த கல்லறைகளின் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்கள் பற்றியே. இந்த துயிலுமில்லங்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டிருந்தன என்று முதலில் பார்ப்போம். 'தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இருப்பிடங்களை காட்டும் படம் | படிமப்புரவு: fb' மாவட்டந்தோறும் அமையப்பெற்றிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்களின் பெயர் விரிப்பு:- முல்லைத்தீவு நித்திகைக்குளம் காட்டுப்பகுதி - (முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று தலைவர் முதன்மைச் சுடரை ஏற்றி அக வணக்கம் செலுத்திய இடம்) அம்பாறை மாவட்டம் உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம். மட்டக்களப்பு மாவட்டம் தரவை மாவீரர் துயிலுமில்லம். தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம். கண்டலடி மாவீரர் துயிலுமில்லம். மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம். திருகோணமலை மாவட்டம் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம். தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம். வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம். உப்பாறு மாவீரர் துயிலுமில்லம். மன்னார் மாவட்டம் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம். முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம் பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம். வவுனியா மாவட்டம் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம். கிளிநொச்சி மாவட்டம் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம். முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம். யாழ்ப்பாண மாவட்டம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் (தமிழீழத் தேசத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லம்) எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் களிக்காடு மாவீரர் துயிலுமில்லம் மணலாறு ஜீவன்முகாம் எ உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம் மணலாறு டடிமுகாம் எ புனிதபூமி எ கோடாலிக்கல் மாவீரர் துயிலுமில்லம் இந்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப வடிவத்தாலும் தோற்றத்தாலும் நிறத்தாலும் மாறுபட்டன. இவையெல்லாம் அந்தந்த கோட்ட மாவீரர் பணிமனை பொறுப்பாளரால் மேற்பார்வையிடப்பட்டன. அவரின் உத்தரவின் பேரில்தான் இவையாவும் வடிவமைக்கப்படுவதுண்டு; இதுவே வழக்கம். இப்படி ஒரு மாவீரர் துயிலுமில்லம் தோன்றுவதை புலிகள் 'முகையவிழ்த்தல்' என்று குறிப்பிடுவார்கள். நானும் அதையேதான் இவ்வாவணத்திலும் கையாண்டுள்ளேன். இவ்வொவ்வொரு கல்லறைகளினதும் குறிப்புகள் தாங்கிய அந்த அதன்(விதப்பான பெயர் தெரியவில்லை.. கட்டடக் கலையில் அவ்வளவு அறிவில்லை) பின்பக்கத்தின் மேற்புறத்தில் எண்கள் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டிருக்கும் . இது அந்தத்தக் கல்லறைகளின் எண்ணாகும். இதை வைத்து கல்லறைகளை இலகுவாக அடையாளம் காண முடியும். அடுத்து, கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்களைப் பற்றி பார்க்கப்போவதோடு தென் தமிழீழ மாவீரர் துயிலுமில்ல வாயில்களையும் தோற்றங்களையும் உங்களிற்கு காட்டுகிறேன். வாருங்கள் தகவலிற்குள் தாவுவோம்…. 1983 - 20 பெப்ரவரி 2009 வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = அண்ணளவாக 24,000 (தவிபு அலுவல்சார் எண்ணிக்கை) 1982 - 2009 மே 18 நள்ளிரவு வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = 25,500 - 26,500 தன்னிலாபத்திற்காக மாவீரர்கள் எண்ணிக்கை 50,000+ என்று கூவித்திரிவோரை நம்பவேண்டாம். சிங்களத்தின் இறுதிப் போர் பற்றிய ஒருதலைப் பக்கமான அறிக்கையிலும் 27,000+ என்றுதான் உள்ளதை என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்(Humanitarian operation analysis) 1) கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இருந்தவிடம்: இது கொடிகாமம்-பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்தது. முகையவிழ்த்தது: ஏப்ரல் 7, 1991 முதல் வித்து: வீரவேங்கை மைக்கேல் 1995 ஆம் ஆண்டு சிங்களத்தால் அழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்:- 2002 இற்குப் பின்னரான ஒலிமுகம்: 2) எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: 1990 இடிக்கப்பட்டது: 1995 புனரமைக்கப்பட்டது: 2002 முதல் வித்தும் விதைக்கப்பட்டதும்: லெப். செல்வம் சூன் 16, 1991 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 290 நினைவுக்கற்கள் - 490 தியாகசீலம் - 24 'அதன் சுற்றுச்சுவர்' 2002 இலிருந்து இடித்தழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்: 3) கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் இங்குதான் முதன் முதலில் மாவீரர் ஒருவர் விதைக்கப்பட்டார். இருந்தவிடம்: இராசவீதி, கோப்பாய் முகையவிழ்த்தது: சூலை 14, 1991 முதல் வித்து: கப்டன் சோலை மொத்த பரப்பளவு: 12 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 654 நினைவுக்கற்கள் - 1199 2002 இலிருந்து இடித்தழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்: 1991 இலிருந்து 1996 இடித்தழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம், கல்லறைகள் & நினைவுக்கற்கள்: 4) முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சூலை 28, 1991 முதல் வித்து: 2ஆம் லெப். சிகானு (ஆ.க.வெ இல்) மொத்த பரப்பளவு: 15 ஏக்கர் இருந்தவிடம்: கிளிநொச்சியில் இருந்து 51 கி.மீ இலும் மன்னாரில் இருந்து 70கி.மீ தொலைவிலும் உள்ளது. 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 603 நினைவுக்கற்கள் - 348 'பின்னால் மங்கலாக ஒலிமுகமும் தெரிகிறது' 5)ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சூலை 18, 1998 முதல் வித்து: வீர. புரட்சிகா மொத்த பரப்பளவு: 10 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 533 நினைவுக்கற்கள் - 126 'ஆலங்குளத்தில் பொதுச்சுடர் ஏற்றுமிடம்' 'ஆலங்குளம் ஒலிமுகம்' 6)கண்டலடி மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: லெப். பரமசிவம் இருந்தவிடம்: மட்டு-திருமலை வீதியில் வாகரைக்கும் கதிரவெளிக்கும் இடையில் 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 279 'ஒலிமுகம்' 7)தரவை மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: பெப்ரவரி 25, 1991 முதல் வித்து: லெப். விகடன் (கண்டலடி-கட்டுமுறிவு நோக்கிய சிங்களத்தின் முன்னேற்றத்திற்கு எதிரான எறிகணை வீச்சில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர். அவர்களில் முன்னவர் இவரே.) 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 2500+ 'தரவையில் பொதுச்சுடர் ஏற்றுமிடம் | 180 பாகைக் காட்சி' 'தரவை ஒலிமுகமும் உள்வீதியும் ' 8)மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம் 9)தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: (நிலை அறியில்லை) சுதா 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 487 கல்லறைகள் கட்டும் முன்:- கல்லறைகள் கட்டிய பின்:- 'ஒலிமுகம்' 10)ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சனவரி 19, 1991 முதல் வித்து: லெப். நிக்ஸன் & லெப். லவன் மொத்த பரப்பளவு: 5 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 391 நினைவுக்கற்கள் - 385 ஒலிமுகம்: 11)வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: வீர. வாசுகி 12)மன்னார் ஆட்காட்டிவெளி துயிலுமில்லம் 13)மன்னாரில் இருந்த ஏனைய இரு துயிலுமில்லங்களில் ஒன்று எதுவெனத் தெரியவில்லை! 14)கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் 2004 வரையிலான மொத்த கல்லறைகள் - 1,213 நினைவுக்கற்கள் - 755 'இங்கு இரு விதத் தோற்றங் கொண்ட நினைவுக்கற்கள் இருந்தன.' 'இங்கு மூ விதத் தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.' நான் மேலே கொடுத்துள்ள படிமங்களில், இடது பக்கம் இருக்கின்ற கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியனவே வலது பக்கம் இருக்கின்ற இரு கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களாக மேம்படுத்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆயினும் இது என்னுடைய கருதுகோளே அன்றி அறுதிப்படுத்தப்பட்டதன்று. ஒலிமுகம் (பழையது): ஒலிமுகம் (புதியது): எப்போது பழையதை இடித்துவிட்டு புதியதை கட்டினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், தமிழீழ தேசியப் பதக்கம் பெற்ற ஓவியர் புகழேந்தி அவர்கள் நிற்பதை வைத்து (அவர் வந்து சென்ற காலத்தை வைத்துப் பார்த்தால்) இது 2005இற்குப் பின்னரே இடித்துப் புதுப்பிக்கப்பட்டுள்ளதை அறியலாம். 15)முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் 2004 ஆம் ஆண்டில் இது தான் இரண்டாவது மிகப்பெரிய துயிலுமில்லமாகும். 2004 வரையிலான மொத்த கல்லறைகள் - 1,670 நினைவுக்கற்கள் -905 'இங்கு இரு விதத் தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.' 'ஒலிமுகம்' 2004 இற்குப் பின்னரான ஒலிமுகம்: 16)அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் இங்கு மூன்று வித தோற்றங்கொண்ட கல்லறைகள் இருந்தன. அறியில்லா குறிப்பிட்ட ஆண்டு வரை இங்கிருந்த மொத்த, கல்லறைகள் - 74 நினைவுக்கற்கள் - 73 நினைவுக்கல்: 17) உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம் இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே! விதம் 1: விதம் 2: 18) புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம் இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே. அக்கல்லறைகள் இரண்டு விதத்தில் இருந்தன. விதம் 1: விதம் 2: இவ்விதம் தான் முதன்முதலில் கட்டப்பட்டது ஆகும். பொதுச்சுடர் மேடை: 19) தேராவில் மாவீரர் துயிலுமில்லம் இங்கு ஒரு விதமான கல்லறையும் ஒரு விதமான நினைவுக்கல்லுமே இருந்தது. இது விசுவமடுவில் அமைந்திருந்தது. ஒலிமுகம்: "வித்துடல்: லெப். கேணல் அர்ச்சுனனினது ஆகும்" 20) சாட்டி மாவீரர் துயிலுமில்லம் 2002 வரையிலான மொத்தக் கல்லறைகள்: 4 2002 வரையிலான மொத்த நினைவுக்கற்கள்: 150 'சாட்டி ஒலிமுகம்' 'நினைவுக்கற்கள்' 21) உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம் இங்கிருந்த கல்லறைகளும் நினைவுக்கற்களும் (தனியான படிமம் சேர்த்துள்ளேன்) தரவை மாவீரர் துயிலுமில்லததில் இருந்தவற்றைப் போன்றே இருந்துள்ளன என்பதை கீழக்கண்ட படிமத்தில் புலப்படுபவற்றை வைத்து அடையாளம் காணக்கூடியவாறு உள்ளது. ஒலிமுகம்: 22) ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் இங்கு ஒரு விதமான நினைவுக்கல்லும் அறியில்லா வடிவிலான கல்லறையும் இருந்தது. இதுவரையிலும் கிடைத்த படிமம் கல்லறை கல்லால் கட்டப்படும் முன் எடுக்கப்பட்டதாக உள்ளதால கல்லறையின் வடிவத்தை அறியமுடியவில்லை. இது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் கோட்டத்தில் இருந்த ஆலங்குளம் என்ற ஊரில் அமைந்திருந்தது. இதை தலைநகரின் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தோடு குழப்பிக்கொள்ள வேண்டாம் கல்லறைகள்: நினைவுக்கற்கள்: 23)உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் இங்கு ஒரு விதமான நினைவுக்கல்லும் ஒரு கல்லறையும் இருந்தது. இதனது ஒலிமுக வடிவம் எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தினதைப் போலவே கட்டப்பட்டிருந்தது, ஆனால் மஞ்சள் நிறத்தில் (கனகபுரத்தினதை ஒத்த நிறம்) . கல்லறை & நினைவுக்கல்: ஏனைய 5 துயிலுமில்லங்கள் பற்றி என்னிடம் தகவல் இல்லை. ஆனால் மேற்குறிப்பிட்டவற்றைவிட பல்வேறு வடிவ கல்லறைகளின் படங்கள் இருப்பில் உள்ளன. விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவல்: இறுதிப்போர் காலத்தில் கிளிநொச்சி மாவட்டதில் துயிலுமில்லங்களாக விளங்கிய பரப்புகள்: --> தர்மபுரம் (காலம் அறியில்லை) இறுதிப் போர்க்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டதில் துயிலுமில்லங்களாக விளங்கிய பரப்புகள்: -->தேவிபுரம் 'ஆ' பகுதி குடியேற்ற திட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை) -->இரணப்பாலை பெருந்தோட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை) -->வலைஞர் மடம் தெற்கு களித்தரைப் பகுதி (பெப்ரவரி இறுதியில் இருந்து மார்ச் முதலாவது கிழமை வரை) -->இரட்டைவாய்க்காலையும் வலைஞர் மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி (மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை) -->வெள்ளா முள்ளிவாய்க்கால் கப்பல் வீதிக்கு அண்மையில் உள்ள இடம்.(ஏப்ரல் 21- மே 12 வரை) -->மே 13,14,15 அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விதைக்கப்பட்டது. -->மே 16,17,18 விதைக்கப்படவில்லை; விடுபட்டன. இவ்வாறு இறுதிநேரத்தில் விதைக்கப்பட்டவை கீழ்க்கண்டவாறு தோற்றமளித்தன: சனவரி 20 பிற்பாடில் இருந்து மே 12 வரை கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடத்தின் தோற்றம் உசாத்துணை: 2002ல் மாவீரர் நாள் தொடர்பில் புலிகளால் வெளியிடப்பட்ட ஒரு நிகழ்படம்(video) ஆராச்சிகள் மூலம் தேடியெடுத்து எழுதியவை ஈழநாதம்: 28/11/2004 படிமப்புரவு Vimeo sea tigers 85% screenshots only ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
- 6 replies
-
- நினைவுக்கற்கள்
- மாவீரர் நாள்
- (and 9 more)