Search the Community
Showing results for tags 'தெல்லிப்பழை'.
-
திரு. கதிர்காமர் பாலசுந்தரம் (யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஓய்வுநிலை அதிபர், எழுத்தாளர் ,சமூக ஆர்வலர் , இலக்கியவாளர்) யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், வீமன்காமம், கொழும்பு, புறூனை, லண்டன் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமர் பாலசுந்தரம் அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர்-வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புக்கணவரும், Dr. கயல்விழி (கீத்தா), யாழ்கோவன் (தீபன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், யுசிலானந்தன், சந்திமா ஆகியோரின் அன்பு மாமனாரும், Dr. யவ்வனா, மிதுசனா (ஆசிரியர்), Dr. ருக்சன், லூக் (உதவி அதிபர்) ஆகியோரின் பாசமிகு பேரனும். காலஞ்சென்றவர்களான சின்னத்துரை (தமிழரசு), தர்மலிங்கம், இராசலிங்கம் மற்றும் செல்வபாக்கியம், பரமேஸ், பூமணி ஆகியோரின் அன்பு சகோதரருமாவார். அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3) என்ற முகவரியில் 12-06-2024 புதன்கிழமை அன்று மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும், 13-06-2024 வியாழக்கிழமை காலை 8:00 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். தொடர்புகளுக்கு: தீபன்(கனடா)மகன்: +1 (416) 270 4303 ஶ்ரீவாஸ்(UK) பெறாமகன்:+44 780 155 6620 www.tamilthakaval.org
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான வீதிகளை பயன்படுத்த அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும், இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பாதுகாப்பு பிரிவினரிடம் நேற்று (07) தெரிவித்தார். ஒட்டகப்புலம் பகுதிக்கு நேற்று விஜயம் செய்த ஆளுநர் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டத்துடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார். யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். வசாவிளான் கிழக்கு (J/244), வசாவிளான் மேற்கு (J/245), பலாலி வடக்கு (J/254), பலாலி கிழக்கு (J/253), பலாலி தெற்கு (J/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.8 ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டது. இங்கு வசித்த 327 குடும்பங்கள் காணி உரிமை கோரி பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் 171 குடும்பங்களைச் சேர்த்தவர்கள் தங்களின் காணிகளை அடையாளப்படுத்தி துப்பரவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் இலகுவாக பிரவேசிக்கக்கூடிய வகையில் பாதைகளை திறக்கவும், வீதிகளை பயன்படுத்தவும் அனுமதிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டதற்கமைய, அதற்கான அனுமதியினை பாதுகாப்பு பிரிவினருடன் கலந்துரையாடி ஆளுநர் பெற்றுக்கொடுத்தார். அதற்கமைய, பொன்னாலை - பருத்தித்துறை கடற்கரை வீதியில் கண்ணகி அம்மன் கோவில் சந்தியிலிருந்து நாகதம்பிரான் கோவில் வீதி ஊடாக விடுவிக்கப்பட்ட காணிக்குள் பிரவேசிக்க முடியும். அத்துடன் வீரப்பளை வீதியில் பலாலி வீதி நோக்கி 100 மீற்றர் தூரத்துக்குள்ளும், வீரப்பளை சந்தியில் தெற்கு நோக்கி தம்பாளை வீதி (விமான நிலைய வீதி) ஊடாகவும் விடுவிக்கப்பட்ட காணிக்குள் பிரவேசிக்க முடியும். யாழ். தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பிரவேசிப்பதற்கான வீதிகளை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி | Virakesari.lk
-
யாழில் வெகு விமர்சையாக இடம்பெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா! யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பஞ்ச ராஜகோபுர மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் பங்குனி உத்தர நன்னாளில் நடைபெற்றது. இன்று காலை 9.25 மணி தொடக்கம் முற்பகல் 10.33 மணிவரையான சுபமுகூர்த்த வேளையில் துர்க்காதேவிக்கு பெரும் சாந்தி விழா நடைபெற்றது. காலை 6.00 மணி முதல் 7.10 மணிவரை இராஜகோபுர கும்பாபிஷேகமும் காலை 9.25 மணி முதல் 10.33 மணிவரை மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது. கடந்த 20 ஆம் திகதி காலை கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் ஆரம்பமானனதுடன் நேற்று மாலை 2.00 மணி வரை அடியார்களுக்கு எண்ணெய்க்காப்பு சாத்துவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1374782