Search the Community
Showing results for tags 'sea tigers sri lanka'.
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் உருவோட்டப்பட்ட Wave Rider வகுப்புக் கலங்கள் பற்றியே. இவ்வாணத்தில், இவை பற்றி நானறிந்த செய்திகளை எழுதி வைத்துள்ளேன். '2005 ஆண்டு முல்லைத் தீவுக் கடலில் ஓடும் கடற்புலிகளின் படகுகள். இப்படத்தில் 3 விதமான மொத்தம் 4 படகுகள் காணப்படுகின்றன.' இவை 1993 இல் இருந்து 2009 ஐந்தாம் மாதம் வரை கடலில் ஓடின. பின்னாளில் சிங்களக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு 'Wave Rider' என்னும் அதே பெயரிலே மீண்டும் கடலில் ஓடுகின்றன. இவைதான் கடற்புலிகளின் முதன்மை கடற்சண்டைக் கலங்கள் ஆகும். இவை உலகத்தால் சுடுகலப் படகு (GB) என்னும் வகையினில் சேர்க்கப்பட்டன. கடற்புலிகளிடம் இவை 10–20 வரை இருந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. புலிகளால் பயன்படுத்தப்பட்ட இக்கடற்கலங்கள் எல்லாம் ஆடியிழைகளால் (fiber glass) ஆனவை.. ஆகையாலத்தான் இவை யூதரின் டோறாக்களைப் (Super Dvora Mk-III. 2008 ஆம் ஆண்டின் இறுதியில் இதன் பெரும வேகம் 48.3 நோட்ஸ் ஆகும்) போல அதிவேகமாக கடலில் ஓடின. ஏன் டோராக்களையே கடலில் துரத்தும் அளவிற்கு வேகம் பெற்றிருந்தன. கடற்புலிகளால் நான்காம் ஈழப்போரில் கட்டப்பட்ட ஒரு இவ்வகுப்பான சண்டைப் படகுகளானவை 50 நோட்ஸ் வேகத்தில் ஓடியவை ஆகும். அதன் படம் எனக்கு கிடைக்கப் பெறவில்லை. அந்த சண்டைக் கலத்தின் வெள்ளோட்டத்தின் போது தான் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை அவர்கள் நேர்ச்சியாகக் காயப்பட்டவர் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. இக்கடற்கலங்களை கட்டுவதற்கு புலிகளிடம் 2 பிரிவுகள் இருந்தன. அவையாவன, மங்கை & டேவிட் படகு கட்டுமானம் என்பவையே.. கடற்புலிகள் தங்களின் இந்தக் கலங்களை வண்டி என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள். அதில், சமருக்குச் செல்லும் கலங்களிற்கு சண்டை வண்டி என்று அடைமொழியிட்டிருந்தனர். இவர்கள் தங்கள் கடற்கலங்களில் KOEN, FURNOCO, JRC, JMA, TOKIMEC, Garmin & Ray Marine ஆகிய கதுவீகளை (RADAR) பயன்படுத்தியிருந்தார்கள். (இவற்றில் எந்தக் கலத்தில் எதனைப் பயன்படுத்தினார்கள் என்பது தெரியாததால் அவற்றின் வடிவங்களை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்..) இக்கலங்கள் யாவும் தரித்து நிற்க துறைமுகங்கள் இல்லையாதலால் இவை படகுகாவிகளில்(dock) ஏற்றி அவர்கட்கு தேவையான இடங்களில் உருமறைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பின் கடற்சமர் வரும்போது உழுபொறியின்(tractor) உதவியுடன் கரைக்கு இழுத்துவரப்பட்டு அங்கு நிற்கு ஒருவகை இடிவாருவகத்தின்(Bulldozer) உதவியுடன் கடலினுள்ளே இறக்கப்படும். இறக்கும் போது கரையோர மணல் சாய்வாக தோண்டப்பட்டே இறக்கப்படும். இறக்கிய பின்னர் படகுகாவிகள் எல்லாம் அருகில் உருமறைக்கக் கூடிய இடங்களில் தரிபெறும். பின்னர், கடற்சமர் முடித்து கரைக்கு திரும்பிவரும் படகுகள் யாவும் படகுகாவிகளில் ஏற்றப்பட்டு மீண்டும் பாதுகாப்பான இடங்களிற்கு கொண்டு செல்லப்படும். தொடர்தடம் (Continuous track) உடைய இடிவாருவகங்கள் மட்டும் கடற்புலிகளிடம் ஆகக் குறைஉந்தது 6 இருந்தன. இவை யாவும் ஓயாத அலைகள் - 2 இன் போது சிறிலங்கா படைத்துறையிடமிருந்து விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டவையாகும். 'பலவகை படகுகாவிகள்' 'மணலைத் தோண்ட வரும் அந்த இடிவாருவகம்(bulldozer) | கவனி: இவ்வூர்தியினை ஓட்டுபவர் ஒரு பெண் போராளியாவார்' 'மணலைத் தோண்டும் இடிவாருவகம்' 'தோண்டப்பட்ட சாய்வான இடத்தினூடாக கடலினுள் இறக்கபடும் வேவ் ரைடர் படகு | படகு, படகுகாவியின் மேலே வைக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்' கடற்புலிகளின் கடற்கலங்கள் பல்வேறு வகையாக இருந்தாலும் அவர்கள் தங்களின் ஒவ்வொரு கடற்கலங்களுக்கும் தனித்தனிப் பெயர்களை (கலப்பெயர்) சூட்டியிருந்தனர். அவை அவர்களின் அமைப்பில் இருந்து வீரச்சாவினை தழுவிய போராளிகளின் பெயர்களை தாங்கி இருந்தன. இப்பெயர்கள் யாவும் அக்கலங்களின் கலக்கூட்டின் நடு அல்லது முன்பகுதியில் எழுதப்பட்டிருந்தன. சில கலங்களின் கலக்கூட்டில் அவற்றின் கலப் பெயர்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை. அவ்வாறு இருந்த பெயர்களை என்னால் இயன்றளவு தேடிச் சேகரித்துள்ளேன். அவையாவன, வேவ் ரைடர்(Wave Rider) வகுப்புக் கடற்கலன்: இங்கு 25 கடற்கலங்களின் பெயர்களை கொடுத்துள்ளேன். கூர் அணிய வேவ் ரைடர்கள்:- பரந்தாமன், மாதவி, இசையரசி, உதயச்செல்வி, மதன், மருதன், ஆதிமான்(ஒஸ்கார்), பாரதிதாசன், அகச்செழியன், இளநிலா, கடலரசன், இந்துமதி, சுகி, அருணா, கேசவன், றோசா Rosa கரண்டி அணிய கத்தேட்றல் கலக்கூட்டு வேவ் ரைடர்கள்:- பசீலன், எரிமலை, வேங்கை, போர்க், வெண்ணிலா, பிரசாந்த், ராஜ்மோகன், சேரன் கரண்டி அணிய பிளானிங் கலக்கூட்டு வேவ் ரைடர்கள் ஆகக்குறைந்தது ஒரு படகு 'வர்மன்' என்னும் கலப்பெயரைக் கொண்ட இக்கலத்தின் வகுப்பு, வகை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. சரி, இனி ஒவ்வொரு வகையினைப் பற்றியும் காண்போம். — வேவ் ரைடர் வகைப் படகு (Wave Rider Type boat) முதலில் வேவ் ரைடர் வகைப் படகுகள் பற்றி காண்போம். இவை வேவ் ரைடர்(Wave Rider) என்றும் புலிகளால் அழைக்கப்பட்டன. இப்பெயரானது இக்கலங்களின் மீகாமன் அறையின் பக்கவாட்டில் பொறிக்கப்பட்டிருக்கும். இவற்றில் கடற்புலிகளிடம் 3 விதமான படகுகள் இருந்ததன. அவை ஆவன; கூர் அணியப் படகு (Pointed bow boats) - Planing Hull கரண்டி அணியப் படகு (spoon bow boats) - Cathedral hull கரண்டி அணியப் படகு (spoon bow boats) - Planing hull இவ்வகைக் கலங்கள் பெரியளவிலான தாக்குதல் கலங்கள் ஆகும். இவை யூதர் படகேறி சீறும் கணையோடு கடலில் விரையும் சிறீலங்காக் கடற்படையோடு பொருத கடற்புலிகளுக்கு பெரிதும் உற்ற துணையாய் இருந்தன. மேலும் கலத்தினைச் சுற்றிவர பக்கவோரத்தில்(gunwale) இரும்புக் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. கடையாரில் இருந்து முதன்மைச் சுடுகலன் வரையிலான இரும்புக் கம்பி வேலியின் உயரம் 3.4 அடி ஆகும். அதன் பிறகு பாதியாகக் குறைந்து 1.7 அடியாகக் குறைந்து சிறிது தூரம் வரை இருக்கிறது. மேற்குறிப்பிட்ட மூன்றாவது விதமான வேவ் ரைடரின் பக்கவோரத்தின் கம்பிவேலி அதன் அணியத்தின் நுனி வரை நீண்டுள்ளது. இக்கலங்களில் கடற்புலிகளின் கொடியும் தமிழீழத் தேசியக் கொடியும் பறக்கவிடப்பட்டிருக்கும். இக்கலங்களின் உள்ளேயே, இவற்றிற்குத் தேவையான அனைத்து கூடுதல் கணைகளும்(ammunition) இருப்பில் வைக்கப்பட்டிருக்கும். சில படகுகளின் கலக்கூட்டில் கடற்புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அணியத்தின் ஆக முன்பகுதியின் மேற்புறத்தில் ஒரு கட்டை உள்ளது. அது படகினைக் கட்டி வைக்க(நங்கூரமிட) உதவுகிறது. அத்துடன் கலக்கூட்டின் ஆக முன்பகுதியின்(அணியத்தின் கீழ்ப்புறம்) கீழ்புறத்தில் ஒரு கட்டை உள்ளது. அது படகுகாவியில் இருந்து இப்படகினை கீழே இழுத்து இறக்க உதவுகிறது. இக்கலங்களின் கடையாரின் இரு பக்கவோரங்களின் தொடக்கத்தில்(கடையாரில் இருந்து) இரு கட்டைகள்(இடப்பக்க-1; வலப்பக்கம்-1) உள்ளன. இக்கலங்களில் சிலவற்றின் மீகாமன் அறையின் வெளிப்புறத்தில் வளைவாக இரு கம்பிகள் சமாந்தரமாக பொருத்தப்பட்டிருக்கும். இக்கம்பிகள் பக்கவாட்டுச் சாளரத்திற்குச் சமாந்தராமக இருக்கும். இவற்றின் மேல் தொலைதொடர்பு வட்டு, கதுவீ போன்றன பொருத்தப்பட்டிக்கும். தேவைப்படின் கொடிக்கம்பங்களும் இதில் கட்டப்பட்டிருக்கும். (பட விளக்கத்திற்கு கரண்டி அணிய விதம் மூன்றில் உள்ள வெண்ணிலா என்னும் படகினைக் காண்க) அடுத்து இவற்றின் கலக்குழு (crew) பற்றிப் பார்ப்போம். குழுவினர்: 13–15 முதன்மைச் சுடுகலனின் முதன்மைச் சூட்டாளர் - 1 கடையாரில் இன்னொரு கனவகை சுடுகலன் பூட்டப்பட்டிருப்பின் அதற்கும் ஒரு முதன்மைச் சூட்டாளர் அமர்த்தப்பட்டிருப்பார். முதன்மைச் சுடுகலனின் உதவியாளர்மார் - 2/3 பொறியியலாளர் & உதவியாளர் - 1+1 பக்கவாட்டில் உள்ள 5/6 சுடுகலன்களிற்குமான சூட்டாளர்மார் - 5/6 தொலைத்தொடர்பாளர் (படகு கட்டளை அதிகாரி) - 1 உந்துகணை சூட்டாளர் - 1 மீகாமன் - 1 இனி ஒவ்வொரு வகுப்பாக விரிவாகக் காண்போம்:- குறிப்பு: நான் இங்கே கொடுத்திருக்கும் பல்வேறு படைக்கலன்களின்(munition) பெயர்கள் யாவும் கடற்புலிகளின் பல வேவ் ரைடர் வகைப் படகுகளின் படங்களில் நான் கண்டவற்றை அடிப்படையாக வைத்தே எழுதியுள்ளேன். பட ஆதாரம் தேவைப்படுவோர் "கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images" என்ற என்னால் ஆக்கப்பட்ட படிம கப்பகத்தினுள் இருந்து எடுத்துக்கொள்ளவும். கூர் அணியம் கொண்ட சண்டைப்படகு - இது கூர் அணியம் கொண்ட கலமாகும். இவ்விதக் கடற்கலங்கள் பிளானிங் வகை கலக்கூட்டினை உடையவை ஆகும். இவற்றில் ஒரு தெறுவேயம்[cannon (முதன்மை)] உட்பட மொத்தம் 6 & 7 சுடுகலங்கள் (உதயச்செல்வி(8) தவிர) இருந்தன. இவற்றில் நான்கு விதம் உண்டு. 'கலக்கூடு(hull)' 'மூன்று விதமான இவ்வகை சண்டைப் படகுகள் (வலது படிமம்) | இவற்றில் வலது படிமத்தில் உள்ள படகுகளில் இடது பக்கத்தில் இருக்கும் படகின் இடது பக்கவாட்டுப் பார்வையானது, இடது பக்கத்தில் தனியாக உள்ள படிமத்தில் காட்டப்பட்டுள்ளது' நீளம் = 55' அகலம் = 18' வேகம் : 35–40 kts தொலைத்தொடர்பு = EMCON, VHF கதுவீ = வட்டு வடிவம் வெளியிணைப்பு மின்னோடி= 4/5 x 250 HP புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது. இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன. ஆய்தம் = முதன்மை: 1x {ZPU-2/ ZU-23 (ஒற்றை & இரட்டை)/ 20mm GIMAT / 25mm ஓர்லிகோன்/ 35மி.மீ ஓர்லிகோன்} பக்கவாடு: 2/3 x 12.7mm [DSHK(பெரும்பாலும் வகை-54)/ PKT/ M2/ W85/ T-85 ]/ M1919, 1xதானியங்கி கைக்குண்டு செலுத்தி, 2/3 x 7.62 Pk/FN MAG கையடக்கம்(portable) -01 x RPG/Carl Gustav, AKS துமுக்கிகள்(rifle) விதம் - 1 இது கல்லப்பட்டுள்ளது. அதாவது இதன் தளப்பகுதிக்கு மேலே ஒரு காப்பு அடுக்கு ஒன்று போடப்பட்டிருக்கிறது. அதன் தாழ்வானது, கிட்டத்தட்ட ஒரு சராசரி மனிதனின் முழங்கால் வரையிலான உயரம் உடைய அளவிற்கு தளத்தின் மேற்பரப்பிலிருந்து இருக்கிறது. இந்த காப்பு அடுக்கானது முழு அணியத்திற்கும் பக்கவோரத்திற்கும்(gunwale) போடப்பட்டுள்ளது. கடைக்காலில் அதன் பக்கவோரத்திற்கு மட்டும் போடப்பட்டுள்ளது.. அணியத்தின் முன்பகுதியில், பிறை வடிவ, ஓர் சராசரி மனிதனின்(ஈழத் தமிழன்) இடுப்பளவு உயர தடுப்பு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது அந்த காப்பு அடுக்கைக் காட்டிலும் உயரமானது ஆகும். இது முதன்மைத் தெறுவேயத்தை நோக்கி சுடப்படும் எதிரியின் சன்னத்தில் இருந்து ஓரளவிற்கு காப்பளிக்கிறது. இதுவும் விதம்-1 போன்றே இருந்தாலும் அணியக் கட்டை மற்றும் சுடுகலத் தண்டு எண்ணிக்கை அடிப்படையில் வேறுபடுகிறது. இது போன்ற படகுகளிற்கு கட்டையானது நடுவில் இல்லாமல் அவற்றின் அணியத்தின் இருபுறத்திலும் இருக்கிறது. மேலும் இவற்றில் வலது பக்கவாட்டிற்கு 2 சுடுகலனும், இடது பக்கவாட்டிற்கு மூன்றும் சுடுகலனும் (எல்லாவற்றையும் போல் முதன்மைச் சுடுகலனாய் ஒன்றும்) என மொத்தம் 6 சுடுகலன்கள் உள்ளன. 'தளப்பகுதிக்கு காப்பு அடுக்கு போடப்பட்டுள்ளதையும் அணியத்தில் தடுப்பு கட்டமைப்பு(structure) உள்ளதையும் நோக்குக' விதம் - 2: இதுவும் விதம்-1 போன்றே இருந்தாலும் காப்பு அடுக்கு அடிப்படையில் மட்டும் வேறுபடுகிறது. இது கல்லப்படவில்லை. இதற்கு, காப்பு அடுக்கு முன்னர் போடப்பட்டு பேந்து கழற்றப்பட்டுள்ளது. அதற்கான அடையாளங்களும் இதன் தளப்பகுதில் தெரிகிறது. மாறாக தளத்தின் மேற்பரப்பில் இருந்து அரையடி உயரத்திற்கு பக்காவோரத்தில் (gunwale) உள்ள கம்பியின் அடியில் தகரம் போடப்பட்டுள்ளது. இதற்கு காப்பு அடுக்கு போடப்படாதலால் முன்பக்க தடுப்பும் இல்லை. இதன் நீளம் விதம் ஒன்றினது போலத்தான் உள்ளது. மேலும் அணியத்திற்கு வரும் பக்கவோர கம்பியின் உயரம் 0.8 அடியாக உள்ளது. 'இவ்விதக் கலங்களின் முன்னிருந்து நோக்கும் காட்சி' இதுவும் விதம்-2 போன்றே இருந்தாலும் சுடுகலத் தண்டு அடிப்படையில் வேறுபடுகிறது. இதன் பெயர் 'உதயச்செல்வி' ஆகும். இது நீல வரி அணிந்த பெண் போராளிகளைக் கொண்டிருந்தது. இதில் 8 சுடுகலன்கள் பூட்டப்பட்டிருந்தன. அவற்றில் முன்னிற்கும்(ZPU-2) பின்னிற்கும் (ஓர்லிகோன் 20மி.மீ) தலா ஒரு முதன்மைத் தானியங்கி தெறுவேயம்(Autocannon) பூட்டப்பட்டிருந்தது. வலது பக்க நடுவில் மட்டும் ஒற்றைக் குழல் கைக்குண்டு செலுத்தி(40 mm) இருந்தது. இடது பக்க நடுவில் 7.62mm GPMG ஓர் பூட்டப்பட்டிருந்தது. ஏனைய நான்கு மூலைக்கும் இரண்டு 12.5மிமீ உம் இரண்டு PK GPMG உம் பூட்டப்பட்டிருந்தது. மேலும் இதன் கடைக்காலின் பக்கவோரத்திற்கு(gunwale) இரும்புக் கம்பிவேலி போடப்படவில்லை. இவை சில நேரத்தில் ஐந்து வெளியிணைப்புப் பொறிகளையும் கொண்டிருக்கும். இவை இனியில்லை என்ற வேகத் தாக்குதலிற்கு பூட்டப்பட்டு கொண்டு செல்லப்படும். 'மாதவியில் ஐந்து பொறிகள்(250Hp) பூட்டப்பட்டிருப்பதைக் காண்க' விதம் - 3: கலப்பெயர்: றோசா Rosa இதனுடைய கலப்பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதனது கலக்கூட்டில் மேற்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது. இதுவும் விதம்-2 போன்றே இருந்தாலும் பொறிகள் ( 3 உள்ளிணைப்பு மின்னோடி(IBM) கொண்ட கலம்) அடிப்படையில் வேறுபடுகிறது. இதன் பொறிக்கு(engine) கடைக்காலில் தனியாக ஓர் பெட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதனினுள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பெட்டியின் கரையோரத்திற்கும் கம்பிவேலி போடப்பட்டுள்ளது. ஆனால் பெட்டி தளத்தில் இருந்து சிறிது உயரமாக இருப்பதால் கம்பிவேலியின் உயரம் குறைவாக உள்ளது. மேலும் அந்த கம்பிவேலியின் உயரம் ஏற்கனவே கடைக்காலிற்கு முன்னால் போடப்பட்டிருக்கும் கம்பி வேலியில் இருந்து காலடியாவது குறைவாக இருக்கிறது. கரண்டி அணிய வகை சண்டைப்படகு இவை கரண்டி வடிவ அணியத்தினையும் கத்தேட்றல் கலக்கூடுகளை(cathedral hull) உடையவை. நீளம் = தெரியவில்லை அகலம் = 18' கலவர் = 12–15 வெளியிணைப்பு மின்னோடி = 4/5 x 250 HP வேகம் : 35-40 kts(உச்ச வேகத்தில்) தொலைத்தொடர்பு = EMCON, VHF கதுவீ = நீள சதுர வடிவம், வட்டு வடிவம் புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது. இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன. ஆய்தம் = முதன்மை: 1x {ZPU-2/ 20mm GIMAT/ 2M-3 25மி.மீ (ஒற்றைக்குழல்)/ 25mm ஓர்லிகோன்/ 35மி.மீ ஓர்லிகோன்} பக்கவாடு: 2/3 x 12.7mm [DSHK(பெரும்பாலும் வகை-54)/ PKT/ M2/W85/ T-85] / M1919, 1xதானியங்கி கைக்குண்டு செலுத்தி, 2/3 x 7.62 Pk/FN MAG கையடக்கம் (portable) - 01 x RPG, துமுக்கிகள்(rifle) விதம்-1: இவை கல்லப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 7 சுடுகலத் தண்டுகள் இருந்தன. அதற்கு அதிக உருமறைப்பு செய்யும் வகையில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதன் தளத்திற்கும் காப்பு அடுக்கு போடப்பட்டிருக்கிறது. இவற்றில் ஒன்றே ஒன்றினைத் தவிர ஏனை அனைத்துக் கலங்களிற்கும் மீகாமன் அறை ஒரே மாதிரி இருந்தது. 1) 2) இதன் மீகாமன் அறையும் ஏனைய கலங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறது. அதாவது, மீகாமன் அறையின் சாளரங்கள் வேறுபடுவதோடு அவை சாய்ந்தாரமாக(slopy) இல்லை. முன்பக்க சாளரங்கள் எல்லாக் கலங்களிற்கும் பிரிந்திருப்பது(இடத்திற்கு ஒன்று வலத்திற்கு ஒன்று) போன்று இல்லாமல் இரண்டும் இணைந்து செவ்வக வடிவில் உள்ளன. இதன் மீகாமன் அறை: 'இதன் முகப்புச் சாளரம் பிரிபடாமல் உள்ளதைக் காண்க' விதம்-2: இவை கல்லப்பட்டவில்லை. ஆனால் இவற்றின் தளத்திற்கு காப்பு போடப்படவேயில்லை. மாறாக பக்கவோரங்கள் 0.8 அடிக்கு தகரம் கொண்டு அடிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உருமறைப்பு செய்யும் வகையில் வரி வண்ணமும் லேபெர்மஸ்டெர் வண்ணும் பூசப்பட்டுள்ளது . இது, விதம் ஒன்றில் இருந்து நீளம் குறைவானது ஆகும். 4 ஆம் ஈழப்போரில் தான் இது கட்டப்பட்டிருக்கிறது. இவை வெளியிணைப்பு மின்னோடி கொண்டவையாகும். இவற்றில் ஒரு தெறுவேயம்(முதன்மை) உட்பட மொத்தம் 7 சுடுகலங்கள் இருந்தன. இதன் கலப்பெயர்: போர்க் விதம்-3: இது, விதம் 2 போன்றே தோற்றத்தில் இருந்தாலும் மின்னோடி அடிப்படையில் வேறுபடுகின்றன. ஆனால் நீளம் அதே தான். இவை கல்லப்பட்டவில்லை. இவற்றில் ஒரு தெறுவேயம்(முதன்மை) உட்பட மொத்தம் 7 சுடுகலங்கள் இருந்தன. இது போன்ற கலத்தினை புலிகளின் எந்தவொரு பாடல் நிகழ்படங்களிலும் காண முடியவில்லை. இப்படகின் பெயர் வெண்ணிலா என்பதாகும். இதே போன்ற மற்றொரு கலத்தின் பெயர் பிரசாந் என்பதாகும். இவை 3 உள்ளிணைப்பு மின்னோடி கொண்டவையாகும். இதன் பொறிக்கு(engine) கடைக்காலில் தனியாக ஓர் பெட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதனினுள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பெட்டியின் கரையோரத்திற்கும் கம்பிவேலி போடப்பட்டுள்ளது. ஆனால் பெட்டி தளத்தில் இருந்து சிறிது உயரமாக இருப்பதால் கம்பிவேலியின் உயரம் குறைவாக உள்ளது. மேலும் அந்த கம்பிவேலியின் உயரம் ஏற்கனவே கடைக்காலிற்கு முன்னால் போடப்பட்டிருக்கும் கம்பி வேலியில் இருந்து காலடியாவது குறைவாக இருக்கிறது. உள்ளிணைப்பு மின்னோடி = 3 x 250 HP 'உள்ளிணைப்பு மின்னோடி' கரண்டி அணிய பிளானிங் கலக்கூடு வகை சண்டைப்படகு இவை கரண்டி வடிவ அணியத்தினையும் பிளானிங் கலக்கூடுகளை (Planning hull) உடையவை. நீளம் = தெரியவில்லை அகலம் = 18' கலவர் = 12–15 வெளியிணைப்பு மின்னோடி = 4/5 x 250 HP வேகம் : 35-40 kts(உச்ச வேகத்தில்) தொலைத்தொடர்பு = EMCON, VHF கதுவீ = நீள சதுர வடிவம், வட்டு வடிவம் புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது. இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன. ஆய்தம் = முதன்மை: 1x {2M-3 25மி.மீ இரட்டைக்குழல் / 25mm ஓர்லிகோன்} கடையார்: 1x ZPU-2 பக்கவாடு: 1/2 x 12.7mm [DSHK(பெரும்பாலும் வகை-54)/ PKT/ M2] /.30mm M1919, 2/3 x 7.62 Pk/FN MAG கையடக்கம் (portable) - 01 x RPG, துமுக்கிகள்(rifle) அணியத்தின் ஆக முன்பகுதியில் (கீழ்க்கண்ட படத்தில் கம்பிவேலி குத்தென்று விழுமிடத்திற்கு முன்னால்) இதைக் கட்டி வைப்பதற்கான கட்டை உள்ளது. 'புலிகளின் குமுதனின் அணிய கலக்கூடு' 'அணியம்' மேலும் இதன் மீகாமன் அறையின் முகப்புத் தோற்றமும் சால்டாக்கைப் (Shaldaq - 2) போன்று உள்ளது (அதாவது சாளரங்களில் நடுவில் ஒன்று நேராகவும், அதன் இரு பக்கங்களிலும் இரு சாளரங்கள் சற்று சத்தாராகவும், மூலையும் பக்காவடும் தொடங்கும் இடத்தில் முக்கோண வடிவில் இரு பக்கத்திற்கும் ஒவ்வொன்றென இரண்டும் போடப்பட்டுள்ளது). மீகாமன் அறை முற்றிலும் வேறுபாடாக உள்ளது. சிறு மறைப்போடு பெரும்பகுதி திறந்த வெளியாகவே உள்ளது . மீகாமன் அறைக்கு மேலே வட்டுவடிவ கதுவீ பொருத்தப்பட்டுள்ளது. 'மீகாமன் அறையும் சுற்றுப்புறமும்' 'மீகாமன் அறையும் சுற்றுப்புறமும்' 'அணியச் சுடுகலத் தொகுதி' 'அணியச் சுடுகலன்கள்' உள்ளிணைப்பு மின்னோடிப் பெட்டியுனுள் கடையாரிலிருந்து ஏறுவதற்கு பின்பக்கமாக நிரந்தர ஏணி பொருத்தப்பட்டிருக்கிறது. 'புலிகளின் டோறாவின் கடையால்' இதற்கு வெளியிணைப்பு மின்னோடி(OBM) இல்லை. பெட்டியின் பின்புறத்தின் அடியில் 6 சிறு துவாரங்கள் உள்ளன. இதன் கடையாலின் அடிப்புறத்தை உத்துப் பார்க்கும் போது இதற்கு 3/4 உள்ளிணைப்பு மின்னோடி(IBM) பொருத்தப்பட்டிருப்பது தெரிகிறது . 2) புலிகளிடம் இருந்த இரண்டாவது கடற்கலன்: இது இவ்வகுப்பைச் சேர்ந்த இரண்டாவது படகா அல்லது ஒரே படகின் அணியச் சுடுகலன் மட்டும் மாற்றப்பட்டதாலான படகா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. இதில் முதன்மைச் சுடுகலனாக வகை - 61 ஐச் சேர்ந்த 25 மி.மீ சுடுகலன் பொருத்தப்பட்டுள்ளது. இச்சுடுகலனானது ஓ.அ- 3 இன் மூன்றாங் கட்டமான ஆனையிறவுச் சமர்க்களத்தில் கைப்பற்றப்பட்டதாகும். இதன் கடையாலில் சிபியு 2 பூட்டப்பட்டுள்ளது. கனவகைச் சுடுகலனுக்குப் பின்னால், பக்கவாட்டில், மேலும் இரு சுடுகலன்கள் பூட்டப்பட்டுள்ளன. இக்கடற்கலத்தில் வேறேதும் சுடுகலன் பூட்டப் பட்டிருக்கிறதா என்பதை என்னால் அறியமுடியவில்லை! வேவ் ரைடர் வகுப்புக் கலனின் மீகாமன் அறைத் தோற்றம்: வேவ் ரைடர்கள் மொத்தம் மூன்று வரை மீகாமன் அறை வடிவத்தினைக் கொண்டிருந்தன. அனைத்து கூர் அணிய வடிவங்களும் ஒரே மாதிரியான அறையினைக் கொண்டிருந்தன (இவற்றின் முகப்பில் இரு சாளரங்கள் இருந்தன). இதனை நீங்கள் மேலே காணலாம், கூர் அணிய வடிவில். கரண்டி அணிய வடிவங்களானவை கூர் அணிய வடிவங்களின் அறையோடு இன்னும் இரு (ஒன்றினது முகப்புச் சாளரம் பிரிபடாமல் ஒரே சாளராமகவும் வேறு இரண்டில் இங்கிலாந்தின் வோட்டர் ஜெட்டின் மீகாமன் அறையை ஒத்த அறை வடிவமும் காணப்பட்டன) வடிவங்களையும் கொண்டிருந்தன. 'வேவ் ரைடர் கலனின் மீகாமன் அறைத் தோற்றம்' 'மீகாமன் அறையினுள் இரு பெண் மீகாமர் கலத்தினை செலுத்தும் காட்சி' 'மீகாமன் அறையினுள் ஒரு மீகாமனும் படகு கட்டளை அதிகாரியும் (வோக்கியுடன்) நிற்கின்றனர்' மேற்கண்ட படத்தில் மீகாமன் அறையின் சாளரத்தை நோக்குக. இம்மீகாமன் அறையின் கூரையில் ஒரு கம்பி பொருத்தப்பட்டுள்ளது. இது பிடித்துக்கொண்டு நிற்பதற்காகும். முகப்புச் சாளரத்தின் மேலே முச்சக்கரவண்டிகளுக்கு இருப்பது போன்று நீர் உள்ளே வராமல் தடுப்பதற்கான திரை (தரப்பாள் போன்ற பொருண்மத்தால் ஆனது) மடித்துக் கட்டப்பட்டுள்ளது. 'இங்கிலாந்தின் வோட்டர் ஜெட்டின் மீகாமன் அறையை ஒத்த அறை வடிவம்' சுடுகலத் தண்டு: வேவ் ரைடர் வகுப்புக் கலங்களில் இருக்கும் இச்சுடுகலத் தண்டுகள் யாவும் வளி மூலம் இயங்குபவை ஆகும். இவற்றை எத்திசையிலும் எப்படியும் சுழற்ற இயலும். ஆனால் கீழ்நோக்கி குறிவைக்க முடியாது. இவை மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. முதன்மைத் தண்டு - முதன்மைச் சுடுகலன்கள்/ தெறுவேயங்களிற்கு(cannon) மட்டும் நடுத்தரத் தண்டு - 12.7 மிமீ சுடுகலன்களிற்கும் கைக்குண்டு செலுத்திகளிற்கும் மெல்லிய தண்டு - 7.62 மி.மீ சுடுகலன்களிற்கு மட்டும் ' குடைக்கப்படாத கூர் அணியக் கலனின் உட்புறத் தோற்றம்' 'வேவ் ரைடர் வகைப் படகுகளில் பூட்டப்பட்டிருக்கும் தானியங்கி கைக்குண்டு செலுத்தி (GL)' இவற்றுள் முதன்மைச் சுடுகலனானது(ஒருசிலவற்றிற்கு - ZPU-23 ) அதன் தண்டில் ஆடாமல் அசையாமல் நிற்பதற்கு மிண்டு கொடுக்கப்பட்டிருக்கும். மிண்டானது அதன் தண்டோடு கீழ்கண்டவாறாக இணைக்கப்பட்டிருக்கும். அதன் மேல்தான் சுடுகலன் வைக்கப்பட்டிருக்கும். இந்தச் சுடுகலங்களை இயக்கும் விற்பனர்கள் நிற்கும் இடத்திற்கு ஒரு குறுகிய உயரம் கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏறி நின்றபடியே எதிரிமீது இவர்கள் சுடுவார்கள். அது ஒரு அரையடி/ முக்கால் அடி உயரம் உடையதாகும். பின்னுதைப்பற்ற சுடுகலன்(Recoilles gun):- இவ்வகைகலங்களில் (வேவ் ரைடர்) பின்னுதைப்பற்ற சுடுகலனும்(106 mm) பொருத்தப்பட்டிருக்கிறது. 'பொருத்தப்பட்டிருப்பதை நோக்கவும். படம் அவ்வளவாக தெளிவாக இல்லையாதலால் இதன் வகைப்பெயர் என்னவென்று என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை' மற்றுமொன்று குறிப்பிடப்பட வேண்டியது யாதெனில், கடற்புலிகளின் முதன்மைச் சுடுகலன்களிற்கு மேலேயும் வட்டு வடிவ தொலைத் தொடர்புக் கருவி & சுடுகலனின் வலது / இடது பக்கத்தில் கதுவீ திரையும்(RADAR display) பொருத்தப்பட்டிருக்கும். 'முதன்மைச் சுடுகலனிற்கு மேலே தொலைத் தொடர்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளதை நோக்குக| இப்படகு கட்டப்பட்ட ஆண்டு : 1999 இன் பிற்பகுதி.' 'முதன்மைச் சுடுகலனிற்கு மேலே கதுவீ திரை பொருத்தப்பட்டுள்ளதை நோக்குக' நங்கூரம் - இவ்வகைப் படகுகளின் அணியத்தில் தான் இவற்றின் நங்கூரம் இருக்கும். (அணியத்தின் மேற்புறத்தில் உள்ள கட்டை). இதன் மூலம் இது கடல்களில் நங்கூரமிடப்பட்டிருக்கும் 'மாதவி என்னும் கலப்பெயர் கொண்ட வகுப்புக் கலம். இதன் நங்கூரத்திற்கு அருகில் தெரியும் அந்த சுவர் போன்ற கட்டமைப்புத்தான், சன்னத் தடுப்பு கட்டமைப்பாகும்' கலப் பெயர்: வர்மன் உயரம்: 6' - 6.3' — புலிகள் சூட்டிய வகுப்புப் பெயர் தெரியவில்லை இது ஒரு வேறுபட்ட வகுப்பிலான படகாகும். இதன் வடிவம் வேவ் ரைடர் வகையை ஒத்திருப்பது போல தோன்றினாலும் அதனினின்று வேறுபட்டது ஆகும். இது கூர் அணியத்தைக்(pointed bow) கொண்டிருந்தது. இதன் கலக்கூடானது ஏனைய கலங்களின் கலக்கூட்டில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டதாக உள்ளது. (மேலே & கீழே உள்ள படத்தைக் கண்டு தெளிக). 'கலக்கூடு(hull)' 'அணியம்' ' அணியத்தின் தளம் கல்லப்பட்டுள்ளதைக் காண்க' இதற்கு அணியத் தளத்தின் உட்பகுதியானது இரண்டு அடிக்கு தோண்டப்பட்டுள்ளது. ஆனால் மீகாமன் அறையின் முன்பகுதித் தொடக்கத்தோடு இக்கட்டமைப்பு முற்றுப்பெறுகிறது. கடையார் அனைத்தும் தட்டையாக உள்ளது. அதற்கு தகரம் கூட அடிக்கப்படவில்லை. அணியத்தில் இருந்து கடைக்காலினை நோக்கும்போது கிட்டத்தட்ட ஒரு படி போல இருக்கிறது, இதன் தளம். அதாவது அணியப் பகுதியிலிருந்து ஏறி கடையாரிற்குச் செல்வது போல! ' 'Battle field' என்று எழுதப்பட்டுள்ளதிற்கு இடது புறத்திலே அந்த படி அமைப்பு முற்றுப்பெறுகிறதைக் காண்க' 'பக்கவாட்டுத் தளம் கல்லப்படாததைக் காண்க' இதன் பின்பகுதியில் ஐந்து வெளியிணைப்புப் பொறிகள்(OBM) பொருத்துவதற்கு ஏற்ப இட வசதி உண்டு. ஆனால் எத்தனை பொருத்தினார்களோ நானறியேன். மேலும் கலத்தினைச் சுற்றிவர வேவ் ரைடருக்கு போடுவது போல பக்கவோரத்தில்(gunwale) இரும்புக் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. கடையாரில் இருந்து மீகாமன் அறை வரையிலான இரும்புக் கம்பிவேலியின் உயரம் 3.4 அடி ஆகும். மேலும் எங்குமே சுடுகலன் பூட்டுவதற்கான தண்டுகளைக் காண முடியவில்லை. பின்வாங்கும்போது கழற்றிச் சென்றிருப்பார்களோ என்னவோ. ஆனால் கழற்றிச் சென்றிருந்தாலும் அதற்கான தடையம் இருந்திருக்கும், இதில் அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை! அணியம் மொட்டையாக இருந்தது. கடையாரில் சரக்கறைகள் இருந்தன(எண்ணிக்கைக்கு - என்னால் சரியாக எண்ண முடியவில்லை!). 'இதுதான் மீகாமன் அறை' 'கடையாரும் வெளியிணைப்புப் பொறிக்கான(4/5) இட வசதியும் இங்கு காட்டப்பட்டுள்ளது | கடையாரில் சரக்கறைகள் தெரிகிறதைக் காணவும் ' இந்தச் செய்தியாளரை வைத்து அதன் நீள அகலத்தை எடை போட்டுக்கொள்ளவும்! நான் குறிப்பிட்டிருப்பவை பிழையாக இருக்கும் பக்கத்தில் சரியானவற்றை எழுதிட எனக்கு உதவிடுங்கள். பெயர் மட்டுமே எனக்கு வேண்டும். வேறெதுவும் வேண்டும். வரலாற்றில் தமிழரிடமிருந்த கடற்கலங்களின் பெயர்கள் விடுபட்டுவிட்டன. இந்தத்தடவையாவது நாம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. உசாத்துணை: youtube - virusinic http://boatswainslocker.com/ https://www.maritimemanual.com/types-of-bow-designs/)ations Asymmetric Warfare at Sea - The Case of Sri Lanka, SLN Admiral Jayanath Colombage ஏனைய அனைத்தும் சொந்தமாக எழுதியவையே! லெப். கேணல் நிரோஜன் வாழ்க்கை வரலாறு படிமப்புரவு YouTube Photography Unit of Liberation Tigers Google EelamView Log In or Sign Up Royalty Free Stock Photos, Illustrations, Vector Art, and Video Clips நீல அச்சுப்படிகள் ரொகான் குணரத்னேவால் எழுதப்பட்ட "Maritime Terrorism: Technologies, Tactics, and Techniques" இருந்து எடுத்து நான் திருத்தியவை ஆகும் ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
- 6 replies
-
- கடற்புலிகள்
- maritime wing of ltte
- (and 11 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)