ஊர்ப்புதினம்

கந்தளாயில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் இருவர் கைது!

1 month 3 weeks ago
meeta-1024x576.jpg கந்தளாயில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் இருவர் கைது!

வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர்

கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள வனவிலங்குகளை நீண்ட காலமாக சுட்டு கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சீகிரியாவை சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் குழு ஒன்று கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு முன்பாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர்

கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள வனவிலங்குகளை நீண்ட காலமாக சுட்டு கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சீகிரியாவை சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் குழு ஒன்று கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு முன்பாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

https://battinaatham.net/?p=76246

சென்னை - யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை : வெளியான அறிவிப்பு

1 month 3 weeks ago

சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நாளாந்த விமான சேவையை இண்டிகோ நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கையில் இதுவரை கொழும்புக்கு மட்டுமே விமான சேவை காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்துக்கான விமான சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

சுற்றுலாப்பயணிகள் வருகை 

இதேவேளை இம்மாதம் முதலாம் திகதி முதல் விமானத்திற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

சென்னை - யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை : வெளியான அறிவிப்பு | New Flight Service Between Chennai Jaffna Indigo

இலங்கைக்கு இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்து வருகை தருகின்ற நிலையில் இவ் ஆண்டு ஜூன் மாதம் 25.2 (28,631) சதவீதமானர்களும், 2023 ஆம் ஆண்டு 26.7 (26,830) சதவீதமானர்களும் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

எனவே அதிகளவானவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவதற்கு ஆர்வமாகவுள்ள நிலையில், சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையேயான விமானப் பயணத்திற்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதையும் இது பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை அரசியல் – மோடியின் இலங்கை விஜயம் ரத்து

1 month 3 weeks ago
modi-and-ranil.webp?resize=750,375 சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை அரசியல் – மோடியின் இலங்கை விஜயம் ரத்து.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான  உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் புதுடில்லியில் உள்ள தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றையதினம் இலங்கைக் கடற்படையினரின் படகு மோதியதால் இந்திய மீனவர் படகொன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் பலியான சம்பவம் பதிவாகியிருந்தது.

இதனை அடுத்து டெல்லியில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் இந்திய வெளியுறவு அமைச்சால் அழைக்கப்பட்டு இராஜதந்திர ரீதியிலான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளமை சர்வதேசக் கவனத்தை ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

https://athavannews.com/2024/1394460

விளம்பரங்களில் நடிக்க பெண்களுக்கு தடை ? – சுகாதார அமைச்சு

1 month 3 weeks ago
Meaningful-ads-may-help-inculcate-good-h விளம்பரங்களில் நடிக்க பெண்களுக்கு தடை ? – சுகாதார அமைச்சு.

எதிர்வரும் ஜனவரி முதல், கைக்குழந்தைகள், சிறு குழந்தைகள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உணவு சில நோய்களை குணப்படுத்தும் என்ற பிரச்சாரம் தவறானது என சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிநிதி பணிப்பாளர் தெரிவித்தார்.

ஒருவர் வருடத்திற்கு 150 கிலோவுக்கும் அதிகமான அரிசியை உண்பதாகவும், வாரத்திற்கு 2.8 கிலோ உண்பதாகவும், உருளைக்கிழங்கு, சோளம் போன்ற உணவுகளால் கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2024/1394451

ஜனாதிபதி இன்று யாழுக்கு விஜயம்

1 month 3 weeks ago
ஜனாதிபதி இன்று யாழுக்கு விஜயம் ஜனாதிபதி இன்று யாழுக்கு விஜயம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத்தினை இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கவுள்ளது வைத்த பின்னர் , தொடர்ந்து ஜனாதிபதி பல்வேறு அமைப்புகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் –  தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்திற்கு  விசேட விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இன்று இந்த நிலையத்தை திறந்து வைத்தார்.

யாழ்ப்பாண மக்களுக்கு சிறந்த குடிநீர் விநியோகத்தை வழங்கும் நோக்கோடு கடல் நீரை குடிநீராக்கும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும்  இலங்கை  அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  மற்றும் நீர்ப்பாசன மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான்   ஆகியோர் விசேட பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2024/1394509

@Maruthankerny

யாழ். தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு

1 month 3 weeks ago

Published By: DIGITAL DESK 3   02 AUG, 2024 | 11:57 AM

image
 

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ்  தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டது. 

இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/190076

இலங்கை தனது இறைமையை பாதுகாப்பதற்கு அவசியமான இராணுவஉதவிகளை வழங்க தயார் - சீன தூதுவர்

1 month 3 weeks ago

Published By: RAJEEBAN   02 AUG, 2024 | 11:28 AM

image
 

இலங்கை தனது இறைமை ஆள்புல ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்கு இராணுவரீதியிலான உதவிகளை வழங்க தயார் என சீனா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சீன தூதுவர் கி சென்ஹொங் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புவிசார் அரசியல் நகர்வுகள் அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு சூழ்நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் இரு நாடுகளினதும் இராணுவத்தினர் இடையிலான உறவுகள் காலத்தால் சோதிக்கப்பட்டவை என சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மரபுசார் மரபுசாராத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள சீன தூதுவர் எப்போதும் போல இலங்கையின் இறைமை ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றை பாதுகாப்பதற்கு இலங்கையின் ஆயுதப்படையினருக்கும் மக்களிற்கும் சீன மக்களும் இராணுவத்தினரும்  உறுதியான ஆதரவை வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், உயர்மட்ட வருகைகள், உபகரண ஒத்துழைப்பு, பணியாளர்கள் பயிற்சி மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் நமது இரு ஆயுதப் படைகளுக்கும் இடையிலான பரிமாற்றங்களும் ஒத்துழைப்பும் ஆழமடைந்து வருகின்றன என சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான பல்வேறு வகையான தொடர்பாடல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உபகரணங்கள் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் அனைத்து தரத்திலான அதிகாரிகள் மற்றும் பல்வேறு வகையான துருப்புக்களுக்கு இடைவிடாத பயிற்சிகளை வழங்குவதன் மூலம் இலங்கை ஆயுதப் படைகளின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதில் PLA தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. எதிர்காலத்தில், இலங்கையின் இராணுவத்தை எங்களால் இயன்றவரை மேம்படுத்துவதற்கு நாங்கள் தொடர்ந்து உதவுவோம் என சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/190072

தேர்தலின் பின் நாட்டில் கலவரங்கள் வெடிக்கும் அபாயம் : சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு

1 month 3 weeks ago

தேர்தலின் பின் நாட்டில் கலவரங்கள் வெடிக்கும் அபாயம் : சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு
1665868883.jpeg

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் கலவரங்கள் வெடிக்ககூடிய அபாயம் காணப்படுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர்மேலும் தெரிவிக்கையில்;

நாட்டை பொறுத்தவரையில் இப்பொழுதும் எனக்கு ஒரு கரிசனை இருக்கிறது. அதாவது தேர்தலின் பின்னர் கலவரங்கள் வெடிக்கக்கூடும் என்ற நிலை இருக்கிறது. சிங்கள வேட்பாளர்களிடையே ஐம்பது சதவிகித வாக்கை பெறக் கூடியவர்கள் என்று எவரும் இல்லை.  உண்மையில் அவர்கள் ஐம்பது சதவிகித வாக்குகளுக்கும் குறைவாகத்தான் பெறுவார்கள்.
ஆனால் இத்தேர்தலில் பலபேர் போட்டியிடுவதாக கூறினாலும் ரணில், சஜித், அனுர என்ற மூன்று போர் தான் முக்கியமானவர்கள். 

இந்த மூவருக்கும் இடையில் என்ன மாதிரியான போட்டி நடக்க போகிறது. இந்த தேர்தலில் மொட்டு கட்சியின் பங்கு என்னவென்று கேட்டீர்களானால் அந்தக் கட்சியில் இருப்பவர்கள் திரும்பவும் ஒரு தேர்தல் வந்தால் முழுமையாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்றே கருதுகிறேன். 

அதாவது தெற்கிலே இருக்கிற அவர்களுடைய ஆசனங்கள் எல்லாம் ஜே.வி.பி. கட்சிக்கு போய்விடும் என்பது என்னுடைய கருத்து. அந்தளவிற்கு இந்த நாட்டிற்கு இவர்கள் செய்த துரோகம் மக்கம் மனதிலே இருக்கின்றது. 

குறிப்பாக இந்த நாட்டை சூறையாடி இருக்கின்றார்கள்,  போர் போர் என்று போரின் காரணமாக தங்களை தங்கள் வளர்த்து கொண்டார்கள். இவை எல்லலாம் மக்ளுக்கு இப்போது நன்றாகத் தெரியும். 

ஆகவே எந்த விதத்திலும் தற்போது இருக்கிற நாட்டின் ஸ்திரத்தன்மையை இல்லாமல் பண்ணுவதற்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால தங்களுடைய கட்சியின் தனித்துவத்தை வெளிக்கொணர வேண்டும் என்ற முறையில் ஏதோ சில சில பேச்சுக்கள் எல்லாம் பேசி வருகின்றனர்.

அவர்கள் கட்டாயமாக ரணிலுக்கு ஆதரவைத் தெரிவிப்பார்கள் என்பது என்னுடைய கருத்தாக உள்ளது.இப்போது மொட்டு கட்சியில் உள்ள பலர் ரணிலுக்கு ஆதரவை தெரிவித்துள்ள அதேநேரத்தில் தங்களுடைய தனித்துவத்தை எடுத்து கட்டி வேறொரு வேட்பாளரை போடக்கூடும். 

ஆனால் அவர்களில் 92 பேர் ரணிலுக்கு ஆதரவு என்றால் மற்றையவர்களும் இதே மாதிரியான மனோ நிலையில் இருப்பார்கள் என்று தான் நான் நம்புகின்றேன். 
எனினும் முழுமையாக ரணிலிடம்  தாங்கள் சரண்டைந்து விட்டோம் என்று காட்டுவது அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். இன்னும் மக்கள் ஆதரவுடனே இருக்கிறோம் என்று காட்டுவதற்க்கு பலதும் பேசுவார்கள். 

இப்போது அரசாங்கத்தோடு சேர்ந்திருப்பவர்கள் அதிகமாக ரணிலுக்கு ஆதரவை வழங்குவார்கள் என்றே நம்புகிறேன். 
ஏனெனில் ராஜபக்சாக்களோடு இருப்பவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்துவிட்டால் இதன் பின்னர் நாடாளுமன்றம் போக கூடிய நிலைமை பலருக்கு இல்லை என்பது என்னுடைய கருத்தாகும் . - என்றார். 
 

https://newuthayan.com/article/தேர்தலின்_பின்_நாட்டில்_கலவரங்கள்_வெடிக்கும்_அபாயம்_:_சி.வி.விக்னேஸ்வரன்_தெரிவிப்பு

2025 இற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியீடு

1 month 3 weeks ago

Published By: DIGITAL DESK 3   02 AUG, 2024 | 10:33 AM

image
 

2025 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

image_2247fbb8ec.jpg

https://www.virakesari.lk/article/190064

பத்தினிபுரம் கிராம மக்கள் காலாகாலமாக பயன்படுத்திவந்த மயானத்தை பெற்றுத்தருமாறுகோரி ஆளுநரிடம் முறைப்பாடு!

1 month 3 weeks ago
02 AUG, 2024 | 08:54 AM
image

திருகோணமலை,  தம்பலகாமம் - பத்தினிபுரம் கிராம மக்கள் காலாகாலமாக பயன்படுத்திவந்த மயானத்தை பெற்றுத்தருமாறுகோரி ஆளுநரிடம் முறையிட்டிருந்தார்கள்.  

இதனையடுத்து, அவருடைய பணிப்பின்பேரில் ஆளுநரின் ஆலோசகர் உட்பட ஒரு குழுவினர் நேற்று வியாழக்கிழமை  மாலை (01) பத்தினிபுரம் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த இடத்தினை பார்வையிட்டதுடன், மக்களுடனும் கலந்துரையாடியிருந்தார்கள்.    

குறித்த கலந்துரையாடலில் ஆளுநரின் ஆலோசகர் சிவராஜா,  திருகோணமலை தமிழர் பேரவையின் செயற்பாட்டாளர் நிக்களஸ்,  வனவளத்துறை அதிகாரிகள்,  தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட சிவில் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

WhatsApp_Image_2024-08-02_at_07.57.25.jp

இதன்போது குறித்த பகுதியில் இறந்த உடல்களை அடக்கம் செய்யலாம் எனவும் ஆனால் துப்பரவு செய்ய முடியாது எனவும் வருகை தந்திருந்த வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர். இதனை ஏற்றுக் கொள்ளாத பொதுமக்கள் தமது மயானத்தை தமது பாவனைக்காக முழமையாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். குறித்த விடயத்தை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரந்தர தீர்வை பெற்றுத் தருவதாக ஆளுநரின் ஆலோசகர் குறிப்பிட்டார்.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் கிராம மக்கள் மயானம் இன்றி தங்களுடைய இறந்த உடல்களை அடக்கம் செய்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 1970ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே காலாகாலமாக பத்தினிபுரம் கிராம மக்கள் மயானமாக பயன்படுத்தி வந்த இடமானது 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும் வந்தபோது வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்களுடைய எதிர்ப்புக்கு மத்தியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருவதாகவும், ஒரு மனிதனுடைய இறுதி காரியத்தைக்கூட கௌரவமாக செய்யமுடியாதுள்ளதாகவும் அதனை மீட்டுத்தருமாறும் மக்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2024-08-02_at_07.57.24__1

WhatsApp_Image_2024-08-02_at_07.57.24.jp

WhatsApp_Image_2024-08-02_at_07.57.27.jp

https://www.virakesari.lk/article/190054

மஹிந்த ராஜபக்ஷ பூமியை முத்தமிட்டு நாட்டை அழித்துவிட்டார்; நான் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டு வளங்களில் ஒரு சதமேனும் விற்பனை செய்வதற்கு இடமளிக்கமாட்டேன் - விஜேதாச ராஜபக்ஷ்

1 month 3 weeks ago

Published By: VISHNU   02 AUG, 2024 | 02:31 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நான் அமைச்சரவையில் இருந்திருக்காவிட்டால் 2024ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றிருக்காது. அது தொடர்பான தகவல்களை பிரிதொரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவேன். நாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட எந்த பிரேரணைக்கும் நான் பங்காளியாகவில்லை. அதனாலே பலதடவைகள் அமைச்சரவையில் இருந்து ஒதுக்கப்பட்டேன். மஹிந்த ராஜபக்ஷ் பூமியை முத்தமிட்டு நாட்டை அழித்துவிட்டார். நான் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டு வளங்களில் ஒரு சதமேனும் விற்பனை செய்வதற்கு இடமளிக்கமாட்டேன் என்ற உறுதியை வழங்குகிறேன் என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

எமக்கு ஒரு நாடு எனும் தொனிப்பொருளில்  ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ்வின் வெற்றிப்பயணத்துக்கான ஆசிர்வாத கூட்டம் வியாழக்கிழமை (1) இலங்கைமன்ற கல்லூரியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அனைத்து இன தலைவர்களும் ஒன்றுபட்டு ஆங்கிலயர்களிடமிருந்து சுதந்திரத்தை பெற்றுக்கொண்ட எமது நாடு 1978ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசியல்வாதிகளின் மோசடிகள் காரணமாக நாடு வங்குராேத்தடைந்தது. இந்த நிலைக்கு அரசியல்வாதிகளே காரணமாகும். அரசியல்வாதிகள் எப்போதும் நாட்டை நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக தங்களை பலப்படுத்திக்கொள்ளவே நடவடிக்கை எடுத்தார்கள். அதன் பலனாகவே நாடு வங்குராேத்து நிலைக்கு சென்றது.

வாடு வங்குராேத்து அடைந்தபோது நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில் நாங்கள் முன்வந்து. எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நான் சரியாக செய்தேன். குறுகிய காலத்தில் 90க்கும் மேற்பட்ட புதிய சட்டங்களை ஏற்படுத்தியிருக்கிறோம். இந்த சட்டங்களை கொண்டுவரும்போது சில சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சிக்குள் எதிர்ப்பு வந்தது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. ஒருசில சந்தர்ப்பத்தில் ஆளும் எதிர்க்கட்சி இரண்டு தரப்பும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. என்றாலும் நாட்டுக்கு தேவையான சட்டங்களை கொண்டுவர நான் ஒருபோதும் பின்வாங்காமல் அனைத்து சட்டங்களையும் பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டேன்.

அத்துடன் பாராளுமன்றத்துக்கு மேலாக செனட் சபை ஒன்றை ஏற்படுத்தும் பிரேரணை ஒன்றை இறுதியாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதற்கு அமைச்சரை அனுமதியும் கிடைக்கப்பெற்றிருக்கிறது. என்றாலும் தேர்தல் காரணமாக அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியாத நிலை இருக்கிறது. புதிய பாராளுமன்றத்தில் முதலாவது பாராளுமன்ற அமர்வில் இந்த பிரேரணையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன். செனட் சபை மூலம் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கமுடியும். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் நாட்டுக்கு பொருத்தமில்லா சட்டங்களை இதன் மூலம் மாற்றியமைக்க முடியும். 

மேலும் நல்லாட்சி அரசாங்கத்தை நாங்கள் பல எதிர்ப்பார்ப்புடனே அமைத்தோம். என்றாலும் நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை பத்திரம், மத்திய வங்கி ஆளுநராக அர்ஜுன் மஹேத்திரனை நியமிக்க வேண்டும் என்பதாகும். இதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். என்றாலும் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, அர்ஜுன் மஹேந்தின் இல்லாமல் நாட்டை கொண்டுசெல்ல முடியாது என்றார். இறுதியில் மத்திய வங்கியை கொள்ளையடித்து நாட்டைவிட்டு அவர் சென்றுவிட்டார். அர்ஜுன் மஹேந்திரனை நாட்டுக்கு அழைத்துவருவதாக ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் உறுதியளித்தார். ஆனால் இதுவரை அதனை அவரால் செய்ய முடியாமல் போயிருக்கிறது.

அதேபோன்று  இந்த நாட்டில் பாரிய இரத்தக்களறி ஏற்படும் அபாயம் இருப்பதாக நான் 2016இல் தெரிவித்தபோது, நான் இனவாதத்தை தூண்டுவதாக தெரிவித்து, அப்போது இருந்த அமைச்சரவையில் இருந்து என்னை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்கள்.அன்று நான் தெரிவித்த கருத்தை மதித்து செயற்பட்டிருந்தால், ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றிருக்காது. அன்று மரணித்த அனைவரும் உயிருடன் இருந்திருப்பார்கள். நான் அமைச்சரவையில் இருந்துகொண்டு உண்மையை தெரிவித்ததாலே பல தடவைகள் அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்பட்டும். வெளியேறியும் உள்ளேன்.

தற்போதும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன். நாட்டின் வளங்களை விற்பனை செய்வதே தற்போதுள்ள ஆட்சியாளர்களின் பணியாக இருந்து வருகிறது. நான் ஆட்சிக்குவந்தால் நாட்டு வளங்களில் ஒரு சதமேனும் விற்பனைசெய்ய இடமளிக்கமாட்டேன் என்ற உறுதியை வழங்குகிறேன். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த கெளரவம் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு இருக்கிறது.

அதற்காக 2010ல் அவருக்கு மக்கள் ஆணை வளங்கியது நாட்டை கொள்ளை அடிப்பதற்கு அல்ல. அவர் தனது நெஞ்சில் அடித்துக்கொண்டு முதலாவது தடவையும் இரண்டாம் தடவையும் மூன்றாம் தடவையும் தாய் நாடு என பூமியை முத்தமிட்டுக்கொண்டு நாட்டை அழித்துவிட்டார் என்றார்.

https://www.virakesari.lk/article/190052

பெருந்தோட்ட மக்களுக்காக புதிய கிராமங்களை நிர்மானிக்கத் திட்டம்!

1 month 3 weeks ago
Ranjith-Siyambalapitiya-%E0%AE%B0%E0%AE% பெருந்தோட்ட மக்களுக்காக புதிய கிராமங்களை நிர்மானிக்கத் திட்டம்!

சுமார் 200 வருட கால வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட மக்களே, உரிமை இல்லாத காணிகளினால் அதிகம் பாதிக்கப்படுவதாக பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தோட்ட மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு முழு உரிமை வழங்குவது தொடர்பாக கேகாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இதன்போது ”ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் பெருந்தோட்ட மக்களுக்காக புதிய கிராமங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சகல வசதிகளுடனும் குறித்த  கிராமங்கள் நிர்மாணிக்கப்படும் எனவும்  தோட்ட மக்களை சமூகமயப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் எனவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1394432

கடவுச்சீட்டு தொடர்பான அதிரடி அறிவிப்பு!

1 month 3 weeks ago
pass-port.webp?resize=600,375 கடவுச்சீட்டு தொடர்பான அதிரடி அறிவிப்பு!

மூன்று வெவ்வேறு வர்ணங்களில் புதிய அம்சங்களுடன் கூடிய கடவுச்சீட்டுகளை வழங்கவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திரிகளுக்கானவை என்ற அடிப்படையிலேயே 3 வர்ணங்களில் குறித்த கடவுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்  அமைச்சர் டிரான் அலஸ் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1394430

பொதுவேட்பாளர் தோல்வியின் பின் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த முடியாத நிலையேற்படும் - சுமந்திரன்

1 month 3 weeks ago
01 AUG, 2024 | 05:10 PM
image

(நா.தனுஜா)

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப்போன்று இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ்மக்களின் வாக்குகள் மிக முக்கியமானவையாகும். அதன்விளைவாக தற்போது நாம் பேரம்பேசக்கூடிய வலுநிலையில் இருக்கின்றோம். அவ்வாறிருக்கையில் அந்த ஆற்றலைப் புறந்தள்ளி, பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பொறுப்பற்ற செயலாகும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இத்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தோல்வியடைந்ததன் பின்னர், ஆட்சிபீடமேறும் பெரும்பான்மையின ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் தமிழர்களுக்கான தீர்வு குறித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தமுடியாத நிலையும் ஏற்படும் விசனம் வெளியிட்டுள்ளார்.

9 ஆவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படும் எனவும், ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது,

அதன்படி இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் வலுப்பெற்று, அதனை முன்னிறுத்தி சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது. 

ஜனாதிபதித்தேர்தலில் தமிழர்கள் சார்பில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளரால் வெல்லமுடியாத போதிலும், சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு உள்ளடங்கலாக தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை சர்வதேசத்திடம் கூறுவதற்கான களமாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும் எனவும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் மேற்குறிப்பிட்ட உடன்படிக்கையில் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள் எவரும் கைச்சாத்திடவில்லை. தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதா, இல்லையா என்பது குறித்து இதுவரையில் தமிழரசுக்கட்சி எவ்வித தீர்மானத்தையும் மேற்கொள்ளாத போதிலும், பொதுவேட்பாளரைக் களமிறக்கும் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் தான் ஆதரிப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். ஆனால் இத்தீரமானத்தை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக எம்.ஏ.சுமந்திரன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணில், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தாம் தீர்மானித்திருக்கும் நிலையில், அதன் ஓரங்கமாக சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய சுமந்திரன், எதிர்வருங்காலத்திலும் தமிழர்களுக்கான தீர்வு குறித்து வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அதேவேளை இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி, தமிழ்மக்களின் கோரிக்கைகளை முன்வைப்பதன் ஊடாக அக்கோரிக்கைகள் பலமற்றதாகிவிடும் எனக் கரிசனை வெளியிட்ட அவர், இம்முறை போன்று அடுத்தடுத்த ஜனாதிபதித்தேர்தல்களிலும் தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.

'2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலைப்போன்று இம்முறை ஜனாதிபதித்தேர்தலிலும் தமிழ்மக்களின் வாக்குகள் மிகமுக்கியமானவையாகும். அதன்விளைவாக தற்போது நாம் பேரம்பேசக்கூடிய வலுநிலையில் இருக்கின்றோம்.

அவ்வாறிருக்கையில் அந்த ஆற்றலைப் புறந்தள்ளி, பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பொறுப்பற்ற செயலாகும்' என்று தெரிவித்த சுமந்திரன், அதுமாத்திரமன்றி இத்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தோல்வியடைந்ததன் பின்னர், ஆட்சிபீடமேறும் பெரும்பான்மையின ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் தமிழர்களுக்கான தீர்வு குறித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தமுடியாத நிலையும் ஏற்படும் என விசனம் வெளியிட்டார்.

மேலும் அவரும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து விடுத்த அழைப்புக்கு அமைய சில ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய கேள்விகளுக்கு பொதுமேடை ஒன்றில் பதிலளிப்பதற்கு இணங்கியிருப்பதாகவும், அவர்களுடனும், ஏனைய வேட்பாளர்களுடனும் கலந்துரையாடியதன் பின்னரே இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதெனத் தீர்மானிக்கப்படும் எனவும் சுமந்திரன் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/190016

எங்களுடைய உயிர் இருக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை; - காணாமல் ஆக்கப்பட்டவரை தேடும் அம்மாவின் மனகுமுறல்

1 month 3 weeks ago
எங்களுடைய உயிர் இருக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை; எங்களுடைய பிள்ளைகளை பார்க்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் - காணாமல் ஆக்கப்பட்ட உறவினரை தேடும் ஓர் அம்மாவின் மனகுமுறல்

Published By: VISHNU   01 AUG, 2024 | 06:31 PM

image
 

எங்களுடைய உயிர் இருக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதுமில்லை எங்களுடைய பிள்ளைகளை பார்க்கும்வரை நாங்கள் ஓய போவதுமில்லை என காணாமல் ஆக்கப்பட்ட உறவினரை தேடும் ஓர் அம்மா தனது மனகுமுறலை வெளிப்படுத்தியிருந்தார்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தனது மன குமுறலை தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எங்கள் குழந்தைகளை தேடி 15 வருடங்களாக தெருத்தெருவாக சாப்பாடு, தண்ணீர் இல்லாமல், படுக்க இடமில்லாமல்

எத்தனை மாதமாக  அடி வாங்கி, பேச்சு வாங்கி இதுவரையிலும் இந்த போராட்டத்தை கைவிடவில்லை. இனியும் எங்களுடைய உயிர் இருக்கும் வரை இந்த போராட்டத்தை கைவிட போவதில்லை. 

எங்களுக்கு மரண சான்றிதழோ, இரண்டு இலட்சமோ எதுவும் வேண்டாம். நான் இறந்தால், அடுத்தவை, அடுத்தவை என தொடர்ச்சியாக போராடிக் கொண்டே இருப்போம். கடைசி காலம் நாங்கள் மறையும் வரை எங்களுடைய பிள்ளைகளை பார்க்காமல் நாங்கள் ஓயமாட்டோம். புலனாய்வு பிரிவினர், பொலிஸார், இராணுவம் யார் அச்சுறுத்தினாலும் நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தியே தீருவோம். 

இதற்கான முடிவினை சர்வதேசம் கவனத்தில் எடுத்து எங்களுடைய பிள்ளைகளை நாங்கள் இறக்க முன் எங்களுடைய கண்ணுக்கு முன்னால் நாங்கள் பார்ப்பதற்கு நல்லதொரு முடிவு தர வேண்டும் என கேட்டு நிற்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/190041

ஜனாதிபதியாக அல்லது பிரதமராக இளம் தமிழர் ஒருவர் எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனவின் சார்பில் தெரிவு செய்யப்படவேண்டும் என்பது எனது விருப்பம் - நாமல்

1 month 3 weeks ago
இளம் தமிழர் ஒருவர் பொதுஜனபெரமுனவின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவேண்டும் என்பது எனது விருப்பம் - நாமல் 01 AUG, 2024 | 08:36 PM
image
 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் இளம் தமிழர் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாவதை எதிர்பார்ப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என நாமல் ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

நாங்கள் தமிழ் சமூகத்தின் இளையவர்கள் சிலருடன் இணைந்து செயற்படுகின்றோம், வடக்கிலிருந்து எதிர்காலத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவம் செய்வதை எதிர்பார்த்திருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/190046

ஏமாற வேண்டாம்; சுகாதார அமைச்சு விடுத்துள்ள அவசர கோரிக்கை

1 month 3 weeks ago

சில நோய்களை உணவின் மூலம் குணப்படுத்த முடியும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என சுகாதார அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பிட்ட நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி விளம்பரங்கள் செய்யப்படுவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் ஆனந்த ஜெயலால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“பொதுவாக உணவின் முக்கிய எதிர்பார்ப்புகள் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியாகும்.

நோய்களைக் குணப்படுத்துபவைகளை மருந்துகள் என்கிறோம்.

உணவால் நோய்களைக் குணப்படுத்த முடியாது.

உணவால் நோய்களை குணப்படுத்த முடியும் என்று யாராவது சொன்னால் நாட்டின் சட்டப்படி பிரதானமாக உணவு ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.

பல்வேறு நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி உணவு இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு நல்லது என்று விளம்பரப்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம், குறிப்பாக சமூக ஊடகங்கள் மூலம்.

அந்த விளம்பரங்கள் பெரும்பாலும் தவறாக இருக்கும்.

ஒரு உணவினால் நோயைக் குணப்படுத்த முடியும் என்று விளம்பரப்படுத்துவது பெரும்பாலும் சாத்தியமில்லை.

நீங்கள் அவ்வாறு செய்தால் முறையான மருத்துவ தரவு சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் உணவு ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அப்படி இல்லாமல் செய்வது சட்ட விரோதம்” என்றார்.

https://thinakkural.lk/article/307216

பாதுகாப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு ஜனாதிபதி 3 விசேட குழுக்களை நியமிதுள்ளார்

1 month 3 weeks ago
3 விசேட குழுக்களை நியமித்தார் ஜனாதிபதி

ஈரானில் உள்ள ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் படுகொலையின் காரணமாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 விசேட குழுக்களை நியமிதுள்ளார்.

இதன்படி, தேசிய பாதுகாப்பு தொடர்பான விசேட குழுவொன்றும், பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருப்பதோடு அந்த இரண்டு குழுக்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான உயர்மட்ட குழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரின் அங்கத்துவத்துடன் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதாரத்தின் மீதான தாக்கம் குறித்து ஆராய்வதற்கான குழுவின் உறுப்பினர்களாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்‌ஷன ஜயவர்தன ஆகியோர் செயற்படுவர்.

மேற்படி இரு குழுக்களையும் கண்காணிக்கும் உயர்மட்டக் குழுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் உள்ளடங்குவர்.

மேற்படி சம்பவத்தின் விளைவாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலகில் ஏற்படும் நிலைமைகளினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டும் பட்சத்தில் செய்யப்பட வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து உயர்மட்ட குழுவிற்கு அறிக்கையிடும் பொறுப்பு ஏனைய இரு குழுக்களையும் சார்ந்துள்ளது.

எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை பெற்றுக்கொள்வதில் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பிரச்சினையைக் கையாளும் பொறுப்பையும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட இரண்டு குழுக்களிடமும் ஒப்படைத்துள்ளார்.

இரு குழுக்களும் சமர்ப்பிக்கும் அறிக்கையின் பிரகாரம் உயர்மட்டக் குழு உரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

https://thinakkural.lk/article/307182

கேரளா அனர்த்தத்தில் இரு இலங்கை தமிழர்களும் பலி

1 month 3 weeks ago

கேரளா – வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி இரண்டு இலங்கை தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளதுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், சுமார் 180 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உயிரிழந்தவர்களில் இரண்டு இலங்கை தமிழர்களும் அடங்குவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் இருந்து குடிப்பெயர்ந்து தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை வாழும் காளிதாஸ் மற்றும் கூடலூர் அய்யன்கொள்ளியில் வாழும் கல்யாணக் குமார் ஆகியோர் கேரளா வயநாடு நிலசரிவில் சிக்கி உயிரிழந்துள்ளமை கவலையளிக்கிறது.

கேரள வயநாடு பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், 120இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளமையை மிகவும் கவலைக்குரியதாகும்.விரைவில் இந்த இயற்கை இடரில் இருந்து கேரளா மாநிலம் மீள வேண்டும்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் இருந்து குடிப்பெயர்ந்த பல மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மக்கள் எதிர்கொண்டிருந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நான் ஆராய அங்கு சென்றிருந்தேன். அந்த பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்துக்கும் கொண்டுவந்திருந்தேன்.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ள கூடலூர் காளிதாஸ் மற்றும் கல்யாணக் குமாரி ஆகியோர் நான் கூடலூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில் எனது கூட்டத்திற்கு சமுகமளித்தது என் மனதில் நினைவளிக்கிறது.

எதிர்பாராது ஏற்பட்டுள்ள இவர்களது இழப்பு கவலையளிப்பதுடன், இவர்கள் குடும்பத்துக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

https://thinakkural.lk/article/307208

நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து; இந்திய மீனவர் உயிரிழப்பு!

1 month 3 weeks ago
1572229620-dead-body-2.jpg?resize=650,37 நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து; இந்திய மீனவர் உயிரிழப்பு!

நெடுந்தீவு கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமற்  போயுள்ளதாகக்  கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இந்திய மீனவர்கள் குழுவொன்றை கைது செய்யச்  சென்ற போது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது நான்கு மீனவர்கள் கடலில் விழுந்துள்ளதாக அதில் மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டு புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏனைய மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்  உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1394350

Checked
Sat, 09/28/2024 - 17:19
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr