ஊர்ப்புதினம்

யாழில் வர்த்தகர்களை இலக்கு வைத்து பண மோசடி!

2 months ago
27 JUL, 2024 | 10:12 AM
image
 

யாழில் வர்த்தகர்களைக் குறி வைத்து இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடிகள் இடம்பெறுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,   

சுன்னாகம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்களின் தொலைபேசிக்கு இலங்கை தொலைத்தொடர்பு நிறுவகத்தில் (ரெலிக்கொம்) இருந்து கதைப்பதாகவும், நீங்கள் உங்களது தொலைபேசி கட்டணங்களை சிறந்த முறையில் செலுத்துவதன் காரணத்தால் உங்களுக்கு பரிசு வழங்கவுள்ளதாகவும் அதற்கு உங்கள் அடையாள அட்டை இல, வங்கிக் கணக்கு இலக்கம் என்பனவற்றினை தருமாறும் கோரியுள்ளனர். 

இத்தரவுகள் வர்த்தகர்களினால் வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் ஓர் OTP இலக்கம் வங்கியின் பெயரிலேயே அனுப்பப்படுவதாகும் சிலருக்கு வங்கிக்கு பணம் அனுப்பியது போன்று வங்கியின் பிரத்தியேக செயலிக்கே தரவுகள் அனுப்பப்படுவதாகவும்  வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்பின் மீள் அழைப்பெடுக்கும் மர்மநபர்கள் அவ் குறித்த இலக்கங்களினை கோருவதாக  சுட்டிக்காட்டிய வர்த்தகர்கள் தாம் சந்தேகமடைந்து அந்த  இலக்கத்தை மீளத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.   

எனவே இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் அவதானமாகச் செயற்படுமாறும் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டிருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தையோ அல்லது கணனி குற்றப்பிரிவின் துரித இலக்கங்களினையோ நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/189496

நீதிமன்றத்தின் உத்தரவுகளை வேண்டுமென்றே கடைப்பிடிக்க மறுக்கும் அரசாங்கம் - சட்டத்தரணிகள் சீற்றம்

2 months ago
நீதிமன்றத்தின் உத்தரவுகளை வேண்டுமென்றே கடைப்பிடிக்க மறுக்கும் அரசாங்கம்- சட்டத்தரணிகள் ஒன்றிணைவு சீற்றம்

Published By: RAJEEBAN  27 JUL, 2024 | 08:07 AM

image
 

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமரின் நாடாளுமன்ற உரையின் மூலம் வலுவற்றதாக்க முடியாது- 

image_d59ad66845.jpg

பொலிஸ்மா அதிபர் தேசபந்துதென்னக்கோன் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமரின் நாடாளுமன்ற உரையின் மூலம் வலுவற்றதாக்க முடியாது என சட்டத்தரணிகள் அமைப்பான சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தெரிவித்துள்ளது.

தேசபந்துதென்னக்கோனின் பதவி தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பிலும் அதன் பின்னர் ஜனாதிபதியும் அரசாங்கமும் நடந்துகொண்ட விதம் தொடர்பிலும்  பொதுமக்களிற்கு தெளிவுபடுத்துவதற்காக நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் சட்டத்தரணிகள் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவுகளை வேண்டுமென்றே  கடைப்பிடிக்க மறுக்கும் போக்கினை அரசாங்கம் சமீபத்தில் பின்பற்றுவதை சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணிகள் அமைப்பு இது அனைத்து அம்சங்களிலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையான விடயம் என தெரிவித்துள்ளது.

தேசபந்துதென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக தொடர்ந்து பணிபுரிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் அந்த பதவிக்கான அதிகாரங்களை பயன்படுத்த முயன்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை என சிலர் தெரிவிப்பதை அவர் நிராகரித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை உயர்நீதிமன்றம் சவாலிற்கு உட்படுத்த முடியாது என பிரதமர் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளமை தவறான விடயம் என தெரிவித்துள்ள சட்டத்தரணி சாலியபீரிஸ் அரசியலமைப்பு சட்டத்தின் 41ஜே பிரிவின்படி அரசியலமைப்பு சபையின் விவகாரங்களில் கூட உயர்நீதிமன்றம் தனது அடிப்படை உரிமைகள் நியாயாதிக்கத்தை பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை பெற்றுள்ளது என அவர்குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 22 வருடங்களாக உயர்நீதிமன்றம் இந்த பிரத்யேக நியாயாதிக்கத்தை பயன்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதியின் தீர்மானங்களை அடிப்படை உரிமை மீறல் மனுவின் மூலம் சவாலிற்கு உட்படுத்த முடியும் என தெரிவித்துள்ள சாலியபீரிஸ் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதி தவறினால், அரசமைப்பின் ஏற்பாட்டின் படி ஜனாதிபதி பொருத்தமான நபருக்கு கடமைகள் பொறுப்புகளை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை வலுவற்றதாக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189489

வெடுக்குநாறி ஆலய பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை

2 months ago

Published By: VISHNU   26 JUL, 2024 | 11:54 PM

image

வவுனியா வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

25ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் மதிமுகராசா பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்று இருந்தார்.

அங்கு கடும் விசாரணைகள் இடம் பெற்றதோடு வெடுக்குநாறி ஆலயம் தொடர்பான பல்வேறு விடயங்களும் அவரிடம் வினாவப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாட்டின் போது பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் பொலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களில் ஆலய பூசகரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/189486

பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் - ஆளும், எதிர்க்கட்சி கடும் தர்க்கம்

2 months ago

Published By: VISHNU   26 JUL, 2024 | 09:53 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக செயற்படுவதற்கு  உயர்நீதிமன்றம்  இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ள  நிலையில், பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியுமா? முடியாதா? என்பது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கடும் தர்க்கத்தினால் சபையில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக அமளி துமளி ஏற்பட்டது.

பொலிஸ்மா அதிபர் பதவி விலக்கப்படவோ, பதவி விலகவோ இல்லையென்றும் இதனால் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியாது என்று ஆளும் கட்சியினர் கூறியதுடன், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளித்து பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க ஜனாதிபதிக்கு முடியாவிடின் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்ட கருத்துக்கு ஆளும் தரப்பு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

பொலிஸ்மா அதிபர் தொடர்பாக உயர்நீதிமன்றதால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவு தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவின் நிகழ்த்திய விசேட உரையை தொடர்ந்து ஆளும்  மற்றும் எதிர் இரு தரப்பினருக்கும் இடையே கடும் தர்க்கம் ஏற்பட்டது.

பிரதமர் விசேட உரையாற்றும் போது கூறுகையில்;

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தினால் பொலிஸ்மா அதிபர் விடயத்தில் உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கி தீர்ப்பை வழங்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கருத்துக்கள் கேட்கப்படவில்லை.

ஜனாதிபதி நினைத்தபடி பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கவும் முடியாது. பொலிஸ் மா அதிபர் பதவி இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. பாராளுமன்றம் தான் அரசியலமைப்பு பேரவைக்கு பொறுப்பு. வேறு யாரும் அதற்கு வியாக்கியானம் கொடுக்க முடியாது. அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகளை நீதிமன்றத்தாலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது. இதனால் பொலிஸ் மா அதிபர் மீதான உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை செல்லுபடியாகாது என்று கூறினார்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமரின் கருத்தை எதிர்த்து கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இந்த விடயம் தொடர்பில் சர்ச்சை நிலவியது.

பிரதமரின் உரையை தொடர்ந்து அடிப்படை உரிமைகள் தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்துக்களை முன்வைத்தார்.

அடிப்படை உரிமைகள் தொடர்பில் உயர்நீதிமன்றத்திற்கு தீர்மானம் எடுக்க முடியும். இதன்படி உயர்நீதிமன்றம் பொலிஸ்மா அதிபர் விடயத்தில் இடைக்கால தடையுத்தரவை வழங்கியுள்ளது. இதற்கமைய பதில் பொலிஸ்மா அதிபர் நியமிக்க கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் தமக்கு பாதிப்பான தீர்ப்புகள் வரும் போது அதனை ஏற்காதிருக்க முடியாது. சபாநாயகர் இந்த விடயத்தில் முறையாக அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி தீர்மானங்களை எடுத்தால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஜனாதிபதி நடந்துகொள்ள வேண்டும். அதனை மீறி நடந்துகொள்ள முடியாது. தீர்ப்பை ஏற்க முடியாது என்று கூறவும் முடியாது. அத்துடன்  இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் சிவில் உடையில் பாதுகாப்பு அமைச்சுக்கு சென்று பொலிஸை நிர்வாகம் செய்கின்றார். இதனை சரியென கூற முடியாது. இது முற்றிலும் தவறாகும் என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக ஆளும் கட்சி தரப்பினர்  எதிர்ப்பு வெளியிட்டு அவர் பேசும் போது கூச்சலிட்டு இடையூறுகளை ஏற்படுத்தினர்.

இவ்வேளையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் தவறான கருத்தை முன்வைக்கின்றார். பொலிஸ்மா அதிபர் சிவில் உடையில் பாதுகாப்பு அமைச்சுக்கு சிவில் உடையில் வந்துள்ளார் என்று கூறுவது முற்றிலும் பொய்யாகும் என்றார்.

இதன்போது தொடர்ந்தும் தனது கருத்தை முன்வைத்த எதிரக்கட்சித் தலைவர், ரோயல் கல்லூரி மாணவர்கள் இப்போது இந்த சபையில் நடப்பவற்றை நேரடியாக பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இங்கே பிரதமர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காது கதைப்பது அந்த கல்லூரியின் பழைய மாணவர் என்ற ரீதியில் அவர் வெட்கப்பட வேண்டும் என்றார்.

இவ்வேளையில் எழுந்த எதிர்க்கட்சியின் சுயாதீன அணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறுகையில், இந்த சபையில் அரசியலமைப்பு சபை நிறைவேற்றுத் துறைக்கு சொந்தமானது என்று இந்த பாராளுமன்றத்தில் ஒருவர் கூறும் போது பிரதமர் கூறும் போது அது பாராளுமன்றத்திற்கு உரியது என்று கூறுகின்றார். இதில் எது சரியானது. இந்தப் பிரச்சினையை முதலில் தீர்க்க வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினர்  தயாசிறி ஜயசேகர, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமன விடயத்தில் தடையுத்தரவு வழங்கி விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு தொடர்பில் இது தொடர்பில் எதுவும் சபாநாயகர் செய்யவில்லை. இதேவேளை 2018ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்படும் போது அதற்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவை விதித்த போது அப்போது இதனை ஏற்க மாட்டோம் என்று கூறவில்லை.

அப்போது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தார். அவர் அதனை நிராகரிக்கவில்லை. இந்நிலையில் ஜனாதிபதிக்கு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய செயற்பட கூறுங்கள். இல்லையென்றால் அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர் அரசியலமைப்பை மீறியதாக அவருக்கு எதிராக வழக்குத் தொடரவும் முடியும் என்றார்.

இதன்போது சபையில் அமைதின்மை நிலவிய போது சபை முதல்வரான சுசில் பிரேமஜயந்த, 2017ஆம் ஆண்டு முதல் நிறைவேற்றுத்துறையின் பகுதியாகவே அரசியலமைப்பு பேரவை உள்ளது. இந்நிலையில் தற்போது பொலிஸ்மா அதிபரின் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது. பதவி நீக்கப்படவில்லை.

இதில் மாற்றம் செய்ய வேண்டுமாயின் நியமித்த நிறுவனத்தினாலேயே அதனை மீள மாற்ற முடியும். இதில் பாராளுமன்றத்திற்கும் பணி உள்ளது. பதவி வெற்றிடமாகாத நிலையில் எப்படி பதவிக்கு இன்னுமொருவரை நியமிக்க முடியும். இதன்படி அரசியலமைப்பு பேரவையால் இந்த விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றார்.

இவ்வேளையில் எழுந்த எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல,சபை முதல்வர் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் நான் ஆச்சரியமடைகின்றேன். குறித்த விடயத்தில் உயர்நீதிமன்றத்தினால் தீர்மானங்களை எடுக்க முடியும். இதனை நிராகரிக்க முடியாது. அனுர பண்டார நாயக்கவின் வழக்கு தீர்ப்பை இந்த விடயத்துடன் ஒப்பிட முடியாது. குறித்த விடயம் அரசியலமைப்பு பேரவையுடன் தொடர்புடையது. இது தொடர்பில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்ய முடியும். பேரவையின் உள்ளே தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்படவில்லை. கூட்டம் முடிந்த பின்னரே அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.

இதன்போது  சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்க்கட்சி பிரதம கொரடாவின் கருத்தை நிராகரித்ததுடன், நான் அரசியலமைப்பை எங்கேயும் மீறியதில்லை என்றார்.

இதனை தொடர்ந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு பேரவை பாராளுமன்றத்தின் பகுதி என்று ஒரு தரப்பு கூறும் போது,இன்னுமொரு தரப்பு இதனை நிறைவேற்றுத்துறையின் பகுதியாக கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது பாரதூரமான விடயமாகும். சபாநாயகரை பழியாக்கி தனக்கு வேண்டியவாறு ஜனாதிபதி செயற்படுவதற்கு இடமளித்துவிட வேண்டாம். இந்த விடயம் வழக்கும் திருடனுடையதே, பொருளும் திருடனுடையதே என்று கூறினார்.

இவ்வேளையில் மீண்டும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த பிரச்சினையில் இருந்து ஜனாதிபதி விலகிச் செயற்பட முடியாது. அவர் வேட்பாளர் என்று கூறி அதில் இருந்து விலகிவிட முடியாது. பதில் பொலிஸ்மா அதிபரை அவர் நியமிக்க வேண்டும். அவரால் செய்ய முடியாவிட்டால் அவரை பதவி விலக கூறுங்கள். அதன்பின்னர் பதில் ஜனாதிபதி ஊடாக பணிகளை முன்னெடுக்கலாம் என்றார்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியின் முஜிபூர் ரஹ்மான் உள்ளிட்ட மேலும் சில உறுப்பினர்களும் இந்த விடயம் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து பொலிஸ்மா அதிபர் விடயத்தில் சபாநாயகர் மற்றும் ஜனாதிபதியின் செயற்பாடுகளை விமர்ச்சித்ததுடன், இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இதனால் சபையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சர்ச்சை நீடித்ததுடன், இது தொடர்பில் தனது பதிலை வழங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, என்னால் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நான் அவ்வாறு தவறான தீர்மானங்களை எடுக்கவில்லை. சரியான முடிவையே எடுத்துள்ளேன். மனசாட்சிக்கமைய சரியாக அனைத்து விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து கலந்துரையாடி நடவடிக்கை எடுத்தேன் என்றார்.

https://www.virakesari.lk/article/189482

கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!

2 months ago

Published By: VISHNU   26 JUL, 2024 | 11:35 PM

image

கிளிநொச்சி - ஜெயபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள காதலியை 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை பார்க்க வந்த நிலையில் வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டுக்குப் இலக்காகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதிக்கு வந்த வேளை காலை 11 மணியளவில் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்தப்பட்ட இளைஞர் சற்று முன்னர் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் மானிப்பாய் ஆலடிப்பகுதியில் வீசப்பட்டிருந்தார்.

அவரை மீட்ட பொலிசார் யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்தான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/189485

கைப்பேசியை திருடிய குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது!

2 months ago

Published By: VISHNU   26 JUL, 2024 | 11:59 PM

image

கைப்பேசியை திருடிய ஒருவரும் அதனை வாங்கிய ஒருவரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சூரிய பண்டார அவர்களுக்கு கீழ் இயங்கும், யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலில் அடிப்படையில் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தொலைபேசியுடன் இருவர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

கன்னாதிட்டி பகுதியில் 14/07/2024 அன்று சமுர்த்தி அலுவலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தரது தொலைபேசியானது வீதியில் தவறுதலாக விழுந்த நிலையில் அந்த இடத்தில்  நின்றவர் அதனை எடுத்து சென்றுவிட்டார்.

குறித்த உத்தியோகத்தர் சிறிது தூரம் சென்று பார்த்த பொழுது தொலைபேசியை காணவில்லை. மறுபடியும் அந்த இடத்திற்கு வந்து தேடிய பொழுது தொலைபேசி கிடைக்கவில்லை. பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் cctv  கமரா உதவியுடன் குறித்த நபரை இனம் கண்டனர். அந்தவகையில் குறித்த நபர் வீதியில் நடமாடுவதாக  மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றது.

இதன்போது அந்த பகுதியில் வைத்து பொலிஸார் அவனை கைது செய்து விசாரித்தனர். அவர் அந்த கைப்பேசியை இன்னொருவருக்கு விற்றதாக கூறியுள்ளார். பின்னர் பொலிஸார் கைப்பேசியை வாங்கியவரையும் கைப்பேசியுடன் கைது செய்தனர்.

ஒருவர் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர் என்றும் மற்றவர் முழங்காவில் பகுதியை சேர்ந்தவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்தது. குறித்த கைப்பேசி 76000 ரூபா பெறுமதி வாய்ந்ததாகும். யாழ்ப்பாண தலமை பொலிஸ் நிலையத்தில் பாரபடுத்தி மேலதிக விசாரணையின் பின்னர் அவர்களை யாழ் நீதிமன்றில் முற்படுத்தபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/189487

புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!

2 months ago

 

2088896857.jpg

புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
 

புனித காசி தீர்த்தமானது இன்றையதினம் வட்டுக்கோட்டை உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது.

கலாநிதி சிதம்பரமோகனால் காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தம், சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமாரது தலைமையில், இந்து, பௌத்த மதகுருக்கள், சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் ஆகியோரின் பங்களிப்புடன் உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது.

இதன்போது வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர் மற்றும் இராணுவத்தினரால் குளத்தை சூழவுள்ள பகுதி சிரமதானமும் செய்யப்பட்டது.  (ப)

புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு! (newuthayan.com)

கிளிநொச்சியில் நெல் அறுவடை விழா

2 months ago
26 JUL, 2024 | 06:13 PM
image
 

கிளிநொச்சி செல்வா நகர் விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள கந்தன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் பரசூட் முறையிலான நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் வயலில் அறுவடை விழா நேற்று (25) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் சூ.ஜெகதீஸ்வரி கலந்துகொண்டு அறுவடையை ஆரம்பித்துவைத்தார்.

இதில் பரந்தன் விவசாய கல்லூரியின் விரிவுரையாளர் ம.ரஜீதன் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

01__1_.jpg

01__5_.jpg

கிளிநொச்சியில் நெல் அறுவடை விழா  | Virakesari.lk

கனேடிய பிரதமரின் 'இனப்படுகொலை' குற்றச்சாட்டை நிராகரித்தது இலங்கை

2 months ago
26 JUL, 2024 | 07:04 PM
image
 

 

(நா.தனுஜா)

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் முன்வைக்கப்பட்ட 'இனப்படுகொலை' குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சு, கனடாவில் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் முன்வைக்கப்படும் இக்குற்றச்சாட்டு இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான அமைதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கு ஒருபோதும் உதவாது எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட 'கறுப்பு ஜுலை' கலவரங்கள் அரங்கேறி கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (23) 41 வருடங்கள் கடந்திருக்கின்றன. ஒரு வாரத்துக்கும் மேல் நீடித்த இக்கலவரங்களின் மிக மோசமான தாக்கத்தையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் நினைவுகூர்ந்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

அவ்வறிக்கையில் 'இற்றைக்கு 41 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் தமிழ் மக்களையும், அவர்களின் வர்த்தக நிலையங்களையும் இலக்குவைத்து வன்முறைத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியானதுடன், பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் காயமடைந்தனர். அத்தோடு பலர் பாலியல் வன்முறைகளுக்கு இலக்கானதுடன், நாட்டை விட்டு வெளியேறவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகினர். 

'கறுப்பு ஜுலை' என அறியப்படும் தமிழர்களுக்கு எதிரான கலவரம் நாட்டின் அமைதியின்மையை தோற்றுவித்ததுடன், பல தசாப்தகால போருக்கும் வழிவகுத்தது. இது இலங்கையின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும்' என கனேடியப் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதுமாத்திரமன்றி இவ்வாறான மிக மோசமான வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மற்றும் தப்பிப்பிழைத்தவர்களை நினைவுகூருவதில் கனேடியத் தமிழர்கள் மற்றும் உலகவாழ் தமிழர்களுடன் தாம் உடன்நிற்பதை வெளிக்காட்டும் வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு மே 18ஆம் திகதியை 'தமிழினப் படுகொலை நினைவு நாளாக' பிரகடனப்படுத்துவதற்கான தீர்மானம் கனேடியப் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் வருடாந்தம் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்றும், ஜூலை மாதம் 23ஆம் திகதி கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூரும் தினத்தன்றும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் வெளியிடப்படும் அறிக்கைகளில் பயன்படுத்தப்படும் 'இனப்படுகொலை' என்ற சொற்பதத்தை நிராகரித்து மறுப்பு அறிக்கை வெளியிட்டுவரும் வெளிவிவகார அமைச்சு, இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை எனவும் கூறிவருகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் இம்முறையும் அத்தகையதொரு மறுப்பு அறிக்கையை வெளியிட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் கடந்த 23ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை முற்றாக நிராகரிப்பதாக அதில் தெரிவித்திருக்கிறது. 

அத்தோடு இவ்விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து இதற்கு முன்னரும் கனேடிய பிரதமருக்குத் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் 'கனடாவில் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் முன்வைக்கப்படும் இக்குற்றச்சாட்டு இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான அமைதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கு ஒருபோதும் பங்களிக்காது' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

கனேடிய பிரதமரின் 'இனப்படுகொலை' குற்றச்சாட்டை நிராகரித்தது இலங்கை | Virakesari.lk

இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன்

2 months ago

Published By: VISHNU

26 JUL, 2024 | 07:54 PM
image
 

ஜனாதிபதி தேர்தலில், ஒரு சமூகத்தை மாத்திரம் மையப்படுத்தி வேட்பாளர் நிறுத்தப்படக் கூடாது என்ற அடிப்படையில், தமிழ் பொது வேட்பாளர் கருத்தியலை ஆதரிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் ஜனாதிபதி தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன் | Virakesari.lk

இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில் இந்தி மொழி கற்பதற்கு 36 இலங்கை மாணவர்கள் தெரிவு

2 months ago
26 JUL, 2024 | 05:25 PM
image
 

இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசின் கீழ் இந்தி மொழி கற்பதற்கு 36 இலங்கை மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சன்தோஷ் ஜா நேற்று (25) வியாழக்கிழமை மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட இருந்த நிலையில் இறுதியாக இலங்கை மாணவர்களுடன் உரையாடியுள்ளார்.

இதன்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கலாச்சாரம், மொழி, இலக்கியம் மற்றும் மத உறவுகளை மேம்படுத்துவதில் இந்தி மொழி மற்றும் இலக்கியத்தின் பங்களிப்பை எடுத்துக்காட்டியுள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆறு மாணவர்களும், சுவாமி விவேகானந்தா கலாச்சார நிலையத்திலிருந்து நான்கு மாணவர்களும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், அனுராதபுரத்தில் உள்ள ரஜரட்ட பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், மாத்தறை பல்கலைக்கழகக் கல்லூரியிலிருந்து இரண்டு மாணவர்களும், ஜேதவனாராம பௌத்த மடாலயத்திலிருந்து மூன்று மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இந்தி மொழி மற்றும் இலக்கியம் மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகமாகத் தாக்கம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் உள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்படக் கிட்டத்தட்ட 100 கல்வி நிறுவனங்களில் இந்திய மொழி மற்றும் இலக்கியம் கற்பிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/189456

திருகோணமலை இலந்தைக்குளம் பகுதியில் இரவோடு இரவாக விகாரை அமைக்க காணி துப்புரவு

2 months ago

Published By: DIGITAL DESK 3   26 JUL, 2024 | 03:04 PM

image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் பகுதியில் இரவோடு இரவாக பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது.

குச்சவெளி - இலந்தைக்குளம் 5 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை (25) இரவில் இருந்து பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் பௌத்த விகாரை அமைப்பதற்காக மக்களுடைய காணி துப்பரவு செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

வயலுக்கு சென்ற மக்களால் குறித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை அவதானிக்கப்பட்டு மக்களுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை (26) குச்சவெளி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலந்தைக்குளம் பகுதியில் காலாகாலமாக வாழ்ந்து வந்த மக்கள் யுத்தத்தின் காரணமாக 1990ஆம் ஆண்டு மற்றும் அதனை அண்டிய காலப்பகுதிகளில் இடம்பெயர்ந்திருந்ததாகவும், அப்பகுதியில் மீள குடியமர்வதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீண்டகாலமாக முன்வைத்துவருவதாகவும் இந்நிலையில் தற்போது அப்பகுதி ஆக்கிரமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

குறித்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான பிறப்பு அத்தாட்சி பத்திரம், இறப்பு அத்தாட்சிப் பத்திரம், காணி ஆவணங்கள் உட்பட உடைந்த பாடசாலைக் கட்டடம் மற்றும் அரச கட்டடங்களும் இன்னும் ஆதாரங்களாக காணப்படுவதாகவும், வயல் வரம்புகளும் இன்னும் அழியாமல் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மண்வெட்டிக்காக பிடிக்கம்பு வெட்டினாலே கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் அரச திணைக்களங்கள் பாரிய இயந்திரங்களினாலும், இயந்திர கை வாள்களினாலும் பாரிய பச்சை மரங்களை வெட்டி அழிப்பதற்கு எதிராக ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

451170796_423868290655510_81137086105766

451639839_1045001663688825_6174648838193

451940821_965342082060366_17185694931007

https://www.virakesari.lk/article/189442

இலங்கை மக்களிடம் பில்லியன் டொலர் மோசடி செய்த கனடிய நிறுவனம்

2 months ago

கனடாவின் நிதி நிறுவனம் ஒன்று  இலங்கை மற்றும் பங்களாதேஷ் மக்களிடம் பாரிய அளவிலான நிதி மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் முன்னணி ஊடகம் ஒன்று இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில்  இலங்கை மற்றும் பங்களாதேஷ் மக்களிடமிருந்து மோசடியாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்டவர்ஸ் பொரிங் எக்சேன்ஜ் 
மீட்டவர்ஸ் பொரிங் எக்சேன்ஜ் குரூப் (Metaverse Foreign Exchange Group Inc) என்ற MTFE நிறுவனத்தின் தலைமையகம் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ளது.

இலங்கை மக்களிடம் பில்லியன் டொலர் மோசடி செய்த கனடிய நிறுவனம் | Canadian Company International Pyramid Scheme

இந்த நிறுவனம் கனடாவின் நிதிச் சலவை கண்காணிப்பு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பதிவுகளையும் சரியான முறையில் மேற்கொண்டுள்ள ஓர் சட்ட ரீதியான நிறுவனம் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த நிறுவனத்தின் இணையத்தளம் செயலிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி முதலீட்டு சேவை

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த இலங்கையர்கள் குறித்த நிதி முதலீட்டு சேவை செயலிழந்து உள்ளதாக குற்றம் சுமத்தி இருந்தனர்.

இலங்கை மக்களிடம் பில்லியன் டொலர் மோசடி செய்த கனடிய நிறுவனம் | Canadian Company International Pyramid Scheme

 

எனவே இந்த MTFE நிறுவனம் ஓர் பிரமிடு மோசடி திட்ட நிறுவனம் என இலங்கை மத்திய வங்கி பட்டியலிட்டுள்ளது. பங்களாதேஷிலும் இதே விதமாக சுமார் ஐந்து லட்சம் மக்கள் குறித்த நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இலங்கையில் சுமார் ஒரு பில்லியன் டொலர் வரையில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோசடிகள் தொடர்பில்  இலங்கையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

900,000 டொலர் பணம்

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை இலங்கை அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

இலங்கை மக்களிடம் பில்லியன் டொலர் மோசடி செய்த கனடிய நிறுவனம் | Canadian Company International Pyramid Scheme

நிதிச்சலவையில் ஈடுபட்டதாக இந்த சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இயங்கிய நிறுவனத்தின் 900,000 டொலர் பணம் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிறிப்டோ நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு நாணயக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான முதலீட்டுத் திட்டத்தில் இவ்வாறு இலங்கை மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் பணத்தை முதலீடு செய்திருந்தனர்.

இந்த கனடிய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசடியின் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. 

https://tamilwin.com/article/canadian-company-international-pyramid-scheme-1721893945

கோட்டபாய ராஜபக்ச ஒரு முட்டாள் – பெருமை பிடித்த மனிதன் – அதனால் தான் இறைவன் அவருக்கு யாருக்கும் கொடுக்காத நாட்டை விட்டு ஓடி ஒளிகின்ற கேவலமான நிலையை கொடுத்தான்

2 months ago

IMG_0539-780x780.jpg.webp

 

ஜனாசா எரிப்பை நிறுத்தாது கோட்டபாய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார்-முபாறக் அப்துல் மஜித்

பாறுக் ஷிஹான்

ஜனாசா எரிப்பை நிறுத்தாது கோட்டபாய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார் என்பது எங்களுக்கு தெரிகின்றது.நாங்கள் அவருக்கு ஆதரவான ஒரு கட்சியாக பல கடிதங்கள் ஊடாக சுட்டிக்காட்டி இருந்தோம்.எந்த கடிதத்திற்கும் அவர் பதில் தரவில்லை என   ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ர் முபாறக் அப்துல் மஜித் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

முன்னாள் ஜனாதிபதி அவர்கள் தான் ஜனாதிபதியாக இருந்து  ஏன் விரட்டி அடிக்கப்பட்டேன் என்பதை புத்தகம் ஒன்றினை எழுதி வெளியீட்டிருக்கின்றார்.என்னை பொறத்தமட்டில் இந்த புத்தகமானது தற்போது வெளியீட வேண்டிய அவசியம் இல்லை என்றே கூற முடியும்.இந்த புத்தகத்தை எழுதிவிட்டு அவர் இறந்த பின்னர் இந்த புத்தகம் வெளிவந்து இருந்தால் அவருக்கு ஓரளவு நல்ல பெயரை அவருக்கு கொடுத்து இருக்கும்.இப்போது இந்த புத்தகத்தை அவர் வெளியிட்டு தான் ஒரு குற்றமும் செய்யவில்லை .தன்னை சிலர் பழிவாங்கி விட்டார்கள் என்பது  போன்று கூறுகின்றார்.

ஆனால் அவர் வெளியிட்ட புத்தகத்தை இன்னும் நான் படிக்கவில்லை.அந்த புத்தகம் தொடர்பில் வெளிவந்த செய்திகளை நாங்கள் பார்க்கின்ற போது கோட்டபாய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார் என்பது எங்களுக்கு தெரிகின்றது. நாடு இவ்வாறு தான் சென்று கொண்டிருக்கின்றது என்பதை நாங்கள் அவருக்கு ஆதரவான ஒரு கட்சியாக பல கடிதங்கள் ஊடாக சுட்டிக்காட்டி இருந்தோம்.ஜனாசா எரிப்பை நிறுத்துங்கள்.அது தொடர்பில் பேச எங்களுக்கு அனுமதி தாருங்கள் என கேட்டிருந்தோம்.இது குறித்து பேச பல கடிதங்கள் அனுப்பி இருந்தோம்.எந்த கடிதத்திற்கும் அவர் பதில் தரவில்லை.

ஒரு பெருமை பிடித்த மனிதனாக அவர் காணப்பட்டதனால் தான் இறைவன் அவருக்கு தண்டனை கொடுத்து இந்த நாட்டின் வரலாற்றிலே எந்தவொரு ஜனாதிபதிக்கும் நிகழாத ஒன்றை வழங்கி இருந்தான்.நாட்டை விட்டு ஓடி ஒளிகின்ற கேவலமான நிலைக்கு கோட்டபாய சென்றார்.இவரது புத்தகம் தற்போது உள்ள இனவாத சிந்தனையுடைய அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.ஜனாதிபதியின் அதிகாரம் என்பது சாதாரணமான அதிகாரமல்ல.சர்வதிகாரம் கொண்ட ஒரு அதிகாரம் ஆகும்.இந்த அதிகாரத்தை அவர் வைத்துக்கொண்டு மஹிந்த உட்பட  தனக்கு ஆதரவாக செயற்பட்ட கட்சிகளை ஒதுக்கினார்.

ஒரு கர்வம் உள்ள நபராக செயற்பட்ட காரணத்தினால் தான் அவர் தலை குப்புறமாக விழுந்தார்.இவ்வாறு விழுந்ததற்காக சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் பழி போடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.அவர் ஒரு நேர்மையான மனிதனாக இருந்திருந்தால் வெளியிட்ட புத்தகத்தில் தான் தவறு செய்தமையினால் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓடி ஒளிய வேண்டி ஏற்பட்டிருந்தது என்பதை பகிரங்கமாக ஏற்று எழுதி இருந்தால் உண்மையில் பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும்.

யுத்த காலங்களில் கோட்டபாய ராஜபக்ச ஒரு ஹிரோவாக இருந்தார் என சொல்லப்பட்டாலும் முதலாவது ஹிரோவாக மகிந்த ராஜபக்ஸவே இருந்தார்.இவர் இரண்டாவது ஹிரோவாக இருந்தார் என்பதை இங்கு கூற முடியும்.மஹிந்த ராஜபக்ஸ தான் நாட்டினையும் யுத்தத்தையும் அக்காலப்பகுதியில் சரியாக கொண்டு சென்றவர்.அவரத உத்தரவினை செயற்படுத்தும் நபராகவே கோட்டபாய ராஜபக்ஸ என்பவர் இருந்தார்.

ஆனால் சில சினிமா படங்களில் ஜோக்கர்கள் சில வெளை கதாநாயகர்களாக மாறுகின்ற  மாதிரி  தன்னால் தான் யுத்தம் நிறைவு பெற்றது என்ற திமிர் அவரிடம் காணப்பட்டது.இப்போது அவர் ஒரு பூச்சியமாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறு புத்தகத்தை எழுதி அரசியலுக்கு மீண்டும் வருவார் என சிலர் நினைக்கின்றார்கள்.என்றார்.
 

https://madawalaenews.com/1205.html

 

 

யாழ்.கொள்ளைக்காரி கைது

2 months ago

யாழ்.கொள்ளைக்காரி கைது

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பம் மீது தாக்குதலை மேற்கொண்டு கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அனலைதீவை சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று, கனடாவில் குடியுரிமை பெற்று வந்து அங்கு வசித்து வந்த நிலையில், விடுமுறையை கழிக்க அனலைதீவுக்கு கடந்த வருடம் வந்து தங்கியிருந்துள்ளது.

அந்நிலையில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு , அவர்களிடம் இருந்த வெளிநாட்டு பணம் , நகைகள் , பொருட்கள் , கடவுசீட்டு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றிருந்தது. 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்றுறை பொலிஸார் , யாழ்ப்பாணத்தில் இருந்து, பிரத்தியேக படகில் அனலைதீவுக்குச் சென்று தாக்குலை மேற்கொண்டு , கொள்ளையடித்துக்கொண்டு மீள படகில் ஏறி தப்பி சென்றமையை கண்டறிந்தனர்.

அதனை தொடர்ந்து மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் 03 நபர்களை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தமக்கு பெண்மணி ஒருவர் பணம் கொடுத்து  தம்மை கூலிக்கு அமர்த்தி தாக்குதலை மேற்கொள்ள கோரியதன் அடிப்படையிலையே தாம் தாக்குதல் மேற்கொண்டு கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளனர். 

அதனடிப்படையில் குறித்த பெண் மணியை சுமார் ஒன்றரை வருடங்களாக தேடி வந்த பொலிஸார்   புதன்கிழமை (24) பெண்மணியை கைது செய்துள்ளனர். 

குறித்த பெண்மணியிடம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , கனடாவில் உள்ள ஐயப்பன் கோவில் தலைவரே தனக்கு பணம் அனுப்பி தாக்குதல் மேற்கொள்ள கூறியதன் அடிப்படையிலையே தான் வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் கொடுத்து தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து குறித்த பெண்ணை  வியாழக்கிழமை (25)  ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொலிஸார் , பெண்ணை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர் 

பொலிசாரின் விண்ணப்பத்தை ஏற்ற மன்று , பெண்ணனை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதித்துள்ளது. 

அதேவேளை குறித்த பெண் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும் , அவருக்கு எதிராக ஏற்கனவே கொலை வழக்கொன்றும் , சில மோசடி வழக்குகளும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
 

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழ்-கொள்ளைக்காரி-கைது/71-341068

தொடர்பான திரி:

 

விடுதலைப் புலிகளை ரணிலே பிளவுப்படுத்தினார்: நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

2 months ago

விடுதலைப் புலிகளை ரணிலே பிளவுப்படுத்தினார்: நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு ranilnamal.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பிரதான தேசிய அரசியல் கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் பிளவுப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபகச் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியையும் பிளவுப்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாகவும், எனினும் அதற்கு இடம்கொடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எவ்வித இடையூறும் இன்றி அரசாங்கப் பணிகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்துவதற்கு ஜனாதிபதி செயற்பட்டுள்ளார். இது ரணில் விக்ரமசிங்க வழமையாக செய்து வரும் விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, நல்லாட்சி அரசாங்கம், மக்கள் விடுதலை முன்னணி, விடுதலைப் புலிகள் மற்றும் சுதந்திரக் கட்சியை ரணில் விக்கிரமசிங்க பிளவுப்படுத்தினார்.

இந்நிலையில், அந்த பழக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாங்கள் உண்மையாக உதவி செய்தோம்.

எனினும் எங்கள் கட்சியை பிளவுபடுத்தும் முயற்சி இருந்தால், அதை அவர் சிந்திக்க வேண்டும்.” என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
 

https://akkinikkunchu.com/?p=285408

யாழில் ஊடகவியலாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

2 months ago

Published By: DIGITAL DESK 3   26 JUL, 2024 | 10:06 AM

image

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அ.சேகுவாரா நேற்று வியாழக்கிழமை (16) காலமானார்.

யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் நண்பருடன் தங்கியிருந்த வேளை காலை நெஞ்சு வலிப்பதாக நண்பரிடம் கூறி சில நிமிடங்களில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். 

மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்தி எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும், கலைஞனாகவும் பல்துறைகளிலும் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/189401

வி.எப்.எஸ் விசா விவகாரம்: விசா வெளிவள உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தி சுமந்திரன், ரவூப், சம்பிக்க உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்

2 months ago

Published By: VISHNU   26 JUL, 2024 | 01:51 AM

image

(நா.தனுஜா)

வி.எப்.எஸ் குளோபல் விசா விநியோக விவகாரம் அண்மையில் கடும் சர்ச்சைக்குரிய பேசுபொருளாகியிருந்த நிலையில், இந்த விசா வெளிவள உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

 இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள், குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள அதிகாரி உள்ளடங்கலாக 31 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

இம்மனுக்களில் விசா வெளிவள உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளுக்கு விசா விநியோகிக்கும் பொறுப்பு வி.எப்.எஸ் குளோபல் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட விவகாரத்தில் நிலவும் குழறுபடிகள் மற்றும் சட்டவிரோத நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொள்வனவு செயன்முறை மீறப்பட்டுள்ளமை, தேசிய பாதுகாப்பு மற்றும் தரவுப்பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள், சுற்றுலாத்துறை மீதான தாக்கம், சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகை நியமங்களுக்கு முரணாக இருத்தல், பிளெக்ஸ்டோன் மற்றும் குவேனி டிரவலின் தொடர்பு ஆகிய விடயங்கள் மனுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 அதேபோன்று சர்ச்சையிலுள்ள உடன்படிக்கையின் அமுலாக்கத்தைத் தடைசெய்து, இறுதித்தீர்மானம் எட்டப்படும் வரையில் முன்பு நடைமுறையில் இருந்த இலத்திரனியல் பயண இசைவாணை முறைமைக்குத் திரும்பும் வகையில் இடைக்காலத்தடையுத்தரவினை விதிக்குமாறு மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தினைக் கோரியுள்ளனர். 

இதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள இம்பீரியல் மொனார்ஜ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் என்ற ரீதியில், அக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு தாம் மூவரும் இம்மனுவைத் தனித்தனியாகத் தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

'இந்த வி.எப்.எஸ் குளோபல் விசா விநியோக சேவையை முற்றுமுழுதான ஊழல் நடவடிக்கையாகவே கருதுகின்றோம். இந்த உடன்படிக்கை வி.எப்.எ

ஸ் குளோபல் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், அதன் பின்னாலுள்ள ஐ.வி.எஸ் உள்ளி;ட்ட உரித்தாளர்களின் விபரங்கள் தெரியாத நிறுவனங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. நாம் அரசாங்கத்தில் அங்கம் வகித்த காலப்பகுதியிலும் நாம் அறியாதவண்ணம் இதுபோன்ற மிகப்பாரிய மத்திய வங்கி மோசடி அரங்கேறியது. அதன் விளைவாக நாம் ஆட்சியை இழக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. இருப்பினும் தற்போது இடம்பெற்றுவரும் விசா வெளிவள உடன்படிக்கை ஊழலானது மத்திய வங்கி மோசடியை விடவும் 100 மடங்கு மிகையானதாகும். அம்மோசடியைப்போன்று இதுவும் தேர்தல் காலப்பகுதியிலேயே நடைபெறுகின்றது. எனவே இது பணச்சுத்திகரிப்பை மேற்கொள்வதற்கான உத்தியா? என்ற சந்தேகமும் எழுகின்றது' எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

நாட்டுக்கு சுமார் 2.7 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய இந்த பொறுப்பு முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாமல் பிறிதொரு நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும், இதனூடாக இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளிடம் 25 டொலர் அறவிடப்படுவதன் காரணமாக கடந்த ஏப்ரல்மாத நடுப்பகுதியிலிருந்து சுற்றுலாப்பயணிகளின் வருகை சடுதியாக வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அதேவேளை கடந்த 2018 ஆம் ஆண்டின் பின்னர் கொவிட் - 19 வைரஸ் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியடைந்த சுற்றுலாப்பயணிகளின் வருகை தற்போதுதான் மீண்டும் உயர்வடைய ஆரம்பித்திருப்பதாகவும், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் முறைகேடான விதத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த உடன்படிக்கை சுற்றுலாப்பயணிகளின் வருகையிலும், நாட்டின் பொருளாதாரத்திலும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விசனம் வெளியிட்டார். 

அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் உயர்நீதிமன்றம் நீதியை நிலைநாட்டுமென தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், இவ்விவகாரத்திலும், இதனையொத்த ஏனைய ஊழல் மோசடி விவகாரங்களிலும் அவற்றை முறியடிப்பதற்கான தமது முயற்சிகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/189391

நாட்டை சீரழித்த அனைவரையும் சட்டத்துக்கு முன் நிறுத்துவோம் - சஜித் சபையில் உறுதி

2 months ago

Published By: VISHNU   26 JUL, 2024 | 01:47 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

எமது அரசாங்கத்தில் நாட்டை சீரழித்த அனைவரையும் சட்டத்துக்கு முன் கொண்டுவருவதுடன் திருடப்பட்ட அனைத்து பணத்தையும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்போம். நாட்டை வங்குராேத்து அடையச்செய்தவர்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதாலே நாங்கள் அப்போது நாட்டை பொறுப்பெடுக்க முன்வரவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தை வங்குராேத்து அடையச் செய்தவர்கள், தற்போது எங்களுக்கு தர்ம போதனை செய்கிறார்கள். எங்களுக்கு போதனை செய்வதற்கு முன்னர் தரமத்தின் பிரகாரம் அவர்கள் முதலாது செயற்பட வேண்டும். பொருளாதார சவாலை ஏற்றுக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த சவால் நிலையை ஏற்படுத்தியவர்கள் யார். கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான அரசாங்கத்தின் பிழையான, முட்டாள்தனமான தீர்மானங்கள் காரணமாகவே நாடு வங்குராேத்து நிலைக்கு சென்றது.

நாட்டை வங்குரோத்து அடையச் செய்து நாட்டை சீரழித்த திருடர்களுடன் இணைந்து  நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் முன்வராதமை நாங்கள் செய்த பாவம்  என இவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த பாவத்தை சுமக்க நாங்கள் விருப்பம். ஆனால் பொருளாதாரத்தை வீழ்ச்சியடை காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இவர்கள் மறந்துள்ளனர். கோத்தாபய ராஜபக்ஷ், பசில் ராஜபக்ஷ், மஹிந்த ராஜபக்ஷ், எஸ்.ஆர். ஆட்டிகல, பீ,பீ. ஜயசுந்தர உள்ளிட்ட குழுவினர் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

மேலும் நாங்கள் மக்கள் ஆணை ஒன்றை பெற்றுக்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை, மக்கள் நலனுக்காக மீள் பரிசீலனைக்கு செல்வோம். நாணய நிதியத்துடன் மிகவும் சிநேகபூர்வமான முறையில் இதுதொடர்பில் நடவடிக்கை எடுப்போம் நிச்சியமாக அந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம். இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய மாற்றுத்திட்டம் இருப்பது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்காகும். வங்குராேத்து அடைந்துள்ள நாட்டில் ஊழல் மோசடி செய்தும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை இழுத்துக்கொள்வதற்கு மதுபானசாலை அனுமதி பத்திரம் வழங்கும் இவர்களுக்கு நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

அதனால் நாங்கள் நாட்டை கட்டியெழுப்ப முடியுமான  அனைத்து துறைகளையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள பொருளாதார நிலைமாற்றம் சட்டத்தில் முழுமையான இணக்கப்பாடு எமக்கு இல்லை. அதனால் எமது ஆட்சியில் இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வோம். அதேபோன்று நாட்டை சீரழித்த அனைவரையும் சட்டத்துக்கு முன்கொண்டுவருவோம். நாட்டில் திருடிய அனைத்து பணத்தையும் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவோம் என்ற உறுதியை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/189390

நாட்டின் 9ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி சற்றுமுன்னர் வெளியாகியது.

2 months ago
sri-lanka.jpg?resize=600,375 நாட்டின் 9ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி சற்றுமுன்னர் வெளியாகியது.

நாட்டின் 9ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி சற்றுமுன்னர் வெளியாகியது
மேலதிக தகவலுக்கு எம்முடன் இணைந்திருங்கள்….

https://athavannews.com/2024/1393623

Checked
Sat, 09/28/2024 - 17:19
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr