ஊர்ப்புதினம்

படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தல்

2 months ago
25 JUL, 2024 | 05:34 PM
image

இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து இன்றைய தினம் வியாழக்கிழமை (25) மாலை 3.05 மணிக்கு யாழில் நினைவேந்தல் நடைபெற்றது. 

'வெலிக்கடை சிறைப் படுகொலை' இடம்பெற்ற நாளான இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள 'தந்தை செல்வா கலையரங்கில்' நினைவேந்தல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், அரசியல் கைதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் அரசியல் கைதிகள், சர்வகட்சி அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர் சமூகத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

IMG_9524.jpg

IMG_9533.jpg

IMG_9579.jpg

IMG_9550.jpg

IMG_9549.jpg

IMG_9544.jpg

IMG_9537.jpg

IMG_9522.jpg

IMG_9511.jpg

IMG_9567.jpg

IMG_9559.jpg

https://www.virakesari.lk/article/189375

8 ஆவது சீன - தெற்காசிய கண்காட்சியில் சபாநாயகர் பங்கேற்பு

2 months ago
25 JUL, 2024 | 05:15 PM
image
 

இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான குழுவினர் ஜூலை 21 முதல் 25 வரை சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் நடைபெறும் 8ஆவது சீன - தெற்காசிய கண்காட்சியில் கலந்துகொண்டனர். 

பாராளுமன்ற உறுப்பினர்களான பிரியங்கர ஜயரத்ன, எம்.எஸ்.தௌபீக் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரும் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.

கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் உரையாற்றிய சபாநாயகர் அபேவர்தன குறிப்பிடுகையில், 

China_Expo_Visit_202407__3_.jpeg

சீன - தெற்காசிய கண்காட்சி 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பொருளாதார மற்றும் வர்த்தக பரிமாற்றத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக பங்காற்றியதாக சுட்டிக்காட்டினார். இக்கண்காட்சி இலங்கைக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை பெற்றுத்தந்ததுடன், சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவியதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார். 

அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் உபசரிப்புக்கும் சீன வர்த்தக அமைச்சுக்கும் யுனான் மாகாண அரசாங்கத்துக்கும் சபாநாயகர் அபேவர்தன நன்றி தெரிவித்தார்.

China_Expo_Visit_202407__4_.jpeg

இந்த விஜயத்தின்போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  நேற்று (24) நடைபெற்ற 5 ஆவது சீன - தெற்காசிய ஒத்துழைப்பு ஒன்றியத்தின் ஆரம்ப நிகழ்விலும் உரையாற்றினார். இங்கு "பிராந்திய அபிவிருத்திக்கான ஒருமித்த கருத்தை உருவாக்குதல்" எனும் ஒன்றியத்தின் தொனிப்பொருளுக்கு அமைய சபாநாயகர் உலகளாவிய அபிவிருத்தி சவால்களுக்கான கூட்டுத் தீர்வுகளின் அவசியத்தை வலியுறுத்தினார். இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பரஸ்பர ஒத்துழைப்புடன் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

யுனான் மாகாண குழுவின் செயலாளரும், யுனான் மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவருமான வாங் நிங் மற்றும் 14வது தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் டிங் சோங்லி ஆகியோருடனும் தூதுக் குழுவினர் உயர்மட்ட கலந்துரையாடல்களை நடத்தினர். 

சீன மக்கள் குடியரசின் 75வது ஆண்டு நிறைவு மற்றும் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகள் தொடர்பான 70வது ஆண்டு நிறைவு விழாவுக்கும் சபாநாயகர் வாழ்த்துத் தெரிவித்தார். 

China_Expo_Visit_202407__1_.png

வர்த்தகம், முதலீடு, கலாசார பரிமாற்றம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகிய துறைகளில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான 67 வருட சிறந்த இராஜதந்திர உறவுகளை விருத்தி செய்வதன் மூலம் ‘ஒரே சீனா’ கொள்கைக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், சீனாவின் 'ஒரு பெல்ட் ஒரு பாதை' திட்டத்தின் கீழ் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, குறிப்பாக கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சபாநாயகரின் சீனாவுக்கான விஜயத்தின் நிகழ்ச்சி நிரலில் சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (China Global Television Network - CGTN) உடனான நேர்காணல் மற்றும் யுனான் மாகாணத்தில் உள்ள ஒரு சூரிய வலு மையம், உயர் தொழில்நுட்ப பசுமை தொழில் கண்காட்சி மற்றும் தொழிற்கல்வி போக்குவரத்து கல்லூரிக்கான விஜயமும் உள்ளடங்குகின்றன.  

https://www.virakesari.lk/article/189371

Yarl IT Hub இன் YGC புத்தாக்க திருவிழா - ஆகஸ்ட் மாதம் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில்

2 months ago
மீண்டும் இவ்வருடம் பிரம்மாண்டமாகவும் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடனும் யாழ் ஐடி ஹப்(Yarl IT Hub) இன் YGC புத்தாக்க திருவிழாவாக நடைபெற உள்ளது ! 🎉
 
📅 ஆகஸ்ட் மாதம் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் முயற்சியாண்மை என அனைத்தும் ஒரே இடத்தில் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டம் - YGC புத்தாக்க திருவிழா.
 
🌐 YGC புத்தாக்க திருவிழாவில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்
🚀 Pitching போட்டி, 🤖 ரோபோட்டிக் போட்டி (Robotic Competition),
🤝 வலையமைப்பு நிகழ்வுகள் (networking events),
📚 மாஸ்டர் கிளாஸ்கள் (master classes),
🏬 கண்காட்சிகள் (mini expo),
🌍 சந்திப்புகள் (ecosystem meetups),
🤩 பாடசாலை மாணவர்களின் கண்காட்சி (YGC juniors alumni expo),
🛠 அனுபவ கற்கை நெறிகள் (Experiential Learning),
புத்தொழில் கண்காட்சி,
செயற்கை நுண் அறிவு,
கைத்தறி, களிமண், ஓலை போன்றவற்றின் செயன்முறைகள்,
Fun Activities மற்றும் பல.
 
✨ இத் திருவிழாவில் பங்கு பெறுவதன் மூலம் நீங்களும் முயற்சியாண்மை, புத்தாக்கம் என்பவற்றை முயற்சித்து அதில் வெற்றி பெற்ற பலரை நேரடியாக சந்தித்து அவர்களின் அனுபவங்களைப் பெற முடியும்.
 
நீங்கள் ஒரு தொழில்முனைவோராகவோ, சிறுவர்களாகவோ, மாணவர்களாகவோ, பல்கலைக்கழக மாணவர்களாகவோ, கல்வி ஆர்வலராகவோ அல்லது புதிய விடயங்களில் ஆர்வமுடையவர்களாக இருந்தாலும் உங்களுக்கு ஏற்ற நிகழ்வுகள் இப் புத்தாக்க திருவிழாவில் காணப்படும் .
 
ஒன்றிணைவோம், ஊக்குவிப்போம், புதுமைப்படுத்துவோம்! 🚀✨

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

2 months ago

Published By: DIGITAL DESK 3   25 JUL, 2024 | 03:37 PM

image

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று வியாழக்கிழமை (25)  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் இன்றையதினம் காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது.

சர்வதேச விசாரணையை தேவை, இழப்பீடுகள் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற போன்ற கோசங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். 

IMG-20240725-WA0064.jpg

IMG-20240725-WA0058.jpg

IMG-20240725-WA0056.jpg

https://www.virakesari.lk/article/189356

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வறட்சி : வற்றும் குளங்கள், ஏரிகள், குட்டைகள் : மீனவர்களும் விவசாயிகளும் பாதிப்பு!

2 months ago

Published By: DIGITAL DESK 7    25 JUL, 2024 | 03:07 PM

image
 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக குளங்கள், ஏரிகள், குட்டைகள் என்பன முற்றாக வற்றி வருகின்றன. இதனால் மீனவர்களும் விவசாயிகளும் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர் .

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அதிகமான வறட்சியான காலநிலை காணப்படுவதால் விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்க பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

விவசாயிகள் தமது வயல் நிலங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளதினால் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது பெரும் அவலங்களை சந்தித்து வருகின்றனர்.

இம் மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு இம்முறை அதிகமான வறட்சியான காலநிலை காணப்படுகிறது. இதனால் கடும் உஷ்ணமான காலநிலை நிலவுவதால் குழந்தைகளும், முதியோர்களும் வெளியே வர முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல்வேறு நோய்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளியில் வராமையினால் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றது .

குளங்கள் வற்றுவதனால் பெறுவதால் ஏரிகள் வடிகான்கள் வற்றி வருவதால் மீனவர்களும் விவசாயிகளும் பல்வேறு அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர் இதனால் ஏற்படும் இன்னல்கள் குறித்து விவசாயிகளும் மீனவர்களும் கருத்து தெரிவித்தனர்.

1721885462878.jpg

1721885462872.jpg

1721885462901.jpg

1721885462895.jpg

https://www.virakesari.lk/article/189330

சிறுவர்கள், இளைஞர், யுவதிகள் மத்தியில் மனநல நோய்க்கான அறிகுறிகள் அதிகரிப்பு

2 months ago
25 JUL, 2024 | 12:49 PM
image
 

மனநல நோய்க்குரிய அறிகுறிகளுடன் பதுளை போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் சிறுவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பதுளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மனநல நோய்க்குரிய அறிகுறிகளுடன் நாளாந்தம் 4 முதல் 5 சிறுவர்களும், 3 முதல் 4 இளைஞர் யுவதிகளும் வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர்.

மயக்கம், வேகமாகச் சுவாசித்தல், நெஞ்சு வலி, கை கால் மரத்துப் போதல், கை கால் விரல்கள் இழுத்தல், சுவாசிப்பதற்குச் சிரமம் ஏற்படல், அதிகமாக வியர்வை வெளியேறுதல் மற்றும் தூக்கமின்மை உள்ளிட்டவை மனநல நோய்க்குரிய அறிகுறிகளாகும்.

இது பெரும்பாலும் 'Panic Attack'  என அழைக்கப்படுகின்றது. அதிகளவான அச்சம், வாழ்க்கை தொடர்பான அச்சம், சமாளிக்க முடியாத சூழ்நிலைகள் தொடர்பான அச்சம்  காரணமாக இந்த Panic Attack'  ஏற்படலாம். 

எனவே, இத்தகைய நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189339

22 சிங்கள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வவுனியாவில் போராட்டம்!

2 months ago
vavuniya-1.jpg?resize=750,375 22 சிங்கள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வவுனியாவில் போராட்டம்!

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 22 சிங்கள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகத்  தெரிவித்து வலயக்கல்வி பணிமனை முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

இதன்போது 22 சிங்கள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரமாக இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1393527

 

ஓய்வூதிய திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டும் சஜித்

2 months ago

ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பு தொடர்பான ஓய்வூதிய திருத்தம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எவ்வித உறுதியான தீர்மானத்தையும் எடுக்காது இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எனினும் ஓய்வூதியம் பெறுவோருக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியை தான் திருத்தியமைத்துத் தருவதாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(25) கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

ஓய்வூதிய திருத்தம்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பின் ஓய்வூதிய திருத்தம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஓய்வூதிய திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டும் சஜித் | Pension Revision Increase Salary Payable Pensioner

ஆனால், பாதிக்கப்பட்ட 241 ஓய்வூதியம் பெறுநர்கள் இணைந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்பளப் பாக்கியோடு 2025-2026 ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவோருக்கு இந்த சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்க வேண்டிய சம்பள அதிகரிப்பு தொடர்பான ஓய்வூதிய திருத்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழங்கிய பதிலையே அரசாங்கம் நாடாளுமன்றத்திலும் தெரிவிக்க வேண்டும்.
பாரிய அநீதி

ஆனால் அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் ஒரு பதிலையும் நாடாளுமன்றத்தில் மற்றொரு பதிலையும் வழங்கியுள்ளது.

ஓய்வூதிய திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டும் சஜித் | Pension Revision Increase Salary Payable Pensioner

ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பு தொடர்பான ஓய்வூதிய திருத்தம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எவ்வித உறுதியான தீர்மானத்தையும் எடுக்காது இருக்கிறது.

எனவே ஓய்வூதியம் பெறுவோருக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியை தான் திருத்தியமைத்துத் தருகின்றேன்.” என  குறிப்பி்ட்டார்.

https://ibctamil.com/article/pension-revision-increase-salary-payable-pensioner-1721838897

யாழில் எம் பி அல்லாத ஆளும் கட்சி அமைப்பாளருக்கு பாரிய நிதி...! எழுந்துள்ள சர்ச்சை

2 months ago

யாழ். தேர்தல் மாவட்டத்தில் அபிவிருத்தி நிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஆளும் கட்சி அமைப்பாளருக்கு 19 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளமை பேசுபொருளாக மாறி உள்ளது

இதேவேளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி நிதியாக தலா ஐந்து கோடி ரூபாயே அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 5 கோடி ரூபா நிதி தற்போது 6 நாடாளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda), நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

நிதி அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.விக்னேஸ்வரனுக்கான (C. V. Vigneswaran) நிதி இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

யாழில் எம் பி அல்லாத ஆளும் கட்சி அமைப்பாளருக்கு பாரிய நிதி...! எழுந்துள்ள சர்ச்சை | Billion Rupees Funds Allocated Mp Ruling Party

இதேநேரம் எட்டாவது நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதனுக்கு 15 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான அபிவிருத்தி நிதிகளுக்கான நிதியை மாவட்ட செயலகத்திற்கு விடுவித்மையோடு நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தலைவராக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் விஜயகலா மகேஸ்வரனால் சிபார்சு செய்யப்பட்ட 19 கோடி ரூபா பெறுமதியிலான திட்டங்களுக்கும் விஜயகலா மகேஸ்வரனின் பரிந்துரை எனக் குறிப்பிட்டு நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ள முக்கிய விடயம்!

2 months ago

Published By: DIGITAL DESK 7  25 JUL, 2024 | 09:27 AM

image
 

இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை தமது கட்சியான பொதுஜன பெரமுனவுக்கு வழங்க வேண்டும் பஷில் ராஜபக்‌ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவு வேண்டுமாயின் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை தமது கட்சிக்கு வழங்க வேண்டும் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/189315

அரசியலில் குதிக்கும் வைத்தியர் அர்ச்சுனா...! வெளியான அதிரடி அறிவிப்பு

2 months ago
தனி கட்சியில் அரசியலில் குதிக்கும் வைத்தியர் அர்ச்சுனா...! வெளியான அதிரடி அறிவிப்பு

இன்றில் இருந்து தனது அரசியல் பிரவேசம் ஆரம்பமாகி உள்ளதாக யாழ்ப்பாணம் (jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ((Ramanathan Archchuna) அறிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபடுவதில் தனக்கு விருப்பம் இருக்கவில்லை என்றும் ஆனால் இன்று தான் நேரடி அரசியலில் குதிக்க உள்ளதாகவும் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தனது தனிப்பட்ட சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொளி பதிவொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

சொந்த கட்சி

அத்துடன் சொந்த கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் ஏனைய அரசியல் கட்சிகள் இணையும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனி கட்சியில் அரசியலில் குதிக்கும் வைத்தியர் அர்ச்சுனா...! வெளியான அதிரடி அறிவிப்பு | Doctor Ramanathan Archuna Into Politic

அத்துடன், பெரும்பான்மையான மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு அரசியல்வாதியாக தான் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ள கருத்துக்கள் கீழுள்ள காணொளியில் காணலாம்...............
 

https://ibctamil.com/article/doctor-ramanathan-archuna-into-politic-1721820988

மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் கவிழ்ந்தது குடியேற்றவாசிகளின் படகு - 150க்கும் அதிகமானவர்களை காணவில்லை என தகவல்

2 months ago
25 JUL, 2024 | 10:15 AM
image

மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 150க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர்.

ஐரோப்பாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த குடியேற்றவாசிகளின் படகே கவிழ்ந்துள்ளது என ஐஓம்எம் தெரிவித்துள்ளது.

நீண்ட மீன்பிடிபடகொன்றில் 300 பேர் பயணம் செய்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களது படகு ஏழு நாட்கள் நடுக்கடலில் தத்தளித்துள்ளது.

கம்பியாவின் பிரோக்கில் 300 பேர் படகில் ஏறினார்கள்,ஜூலை 22ம் திகதி நவாக்சோட் என்ற பகுதியில் படகுகவிழ்ந்துள்ளது என ஐஓஎம் தெரிவித்துள்ளது.

190பேரை தேடும் பணிகள் இன்னமும் இடம்பெறுகின்றன என ஐநாவின் அமைப்பு தெரிவித்துள்ளது.

103 பேர் கரையோர காவல்படையினர் மீட்டுள்ளனர், 25 உடல்களையும் மீட்டுள்ளனர் என கரையோர காவல்படையின் தளபதி தெரிவித்துள்ளார்.

கரையோர காவல்படையினர் அந்த பகுதிக்கு சென்றவேளை ஏற்கனவே 15 பேர் உயிரிழந்திருந்தனர் என 10 பேர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த பகுதியில் வீசிய கடும்காற்று காரணமாக உடல்கள் கரையொதுங்கின் என ஒருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

கடலோர பகுதியில் 30 உடல்களை சேகரிப்பதை நான் பார்த்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் மேலும் பல உடல்கள் மீட்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் ஒரு மாதகாலத்தில் இடம்பெற்ற இரண்டாவது துயரசம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம்ஐந்தாம் திகதி குடியேற்றவாசிகளின் 89 உடல்கள் மீட்கப்பட்டன

migrants5.jpg

மேற்கு ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பா செல்ல முயலும் குடியேற்றவாசிகளிற்கான பிரதான இடைத்தங்கல் நாடாக மொரெட்டேனியா காணப்படுகின்றது. ஆயிரக்கணக்கான படகுகள் குடியேற்றவாசிகளுடன் இங்கிருந்து புறப்படுவது வழமை.

ஆபத்தான இந்த பாதையில் பயணிக்கும் படகுகள் ஸ்பெயினின் கனரி தீவுகளை நோக்கி செல்கின்றன - கடந்த வருடம் இந்த தீவிற்கு 40இ000க்கும் அதிகமானவர்கள் வந்து சேர்ந்தனர் என தெரிவிக்கும் ஸ்பெயின் அரசாங்கம் இது முன்னைய ஆண்டை விட அதிகம் என குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பாவிற்கு செல்ல முயலும் குடியேற்வாசிகள் அளவுக்கதிகமானவர்கள் ஏற்றப்பட்ட  படகுகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

2024ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஸ்பெயினை சென்றடைய முயன்ற 4000க்கும் அதிகமானவர்கள் கடலில் உயிரிழந்துள்ளனர் என ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/189310

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா - 2024 !

2 months ago

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா - 2024 !
1276484194.jpg

யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் ஏற்பாட்டில்  யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறுபட்ட புத்தக விற்பனை நிறுவனங்கள் மற்றும்   வெளியீட்டகங்களின் புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது.

நாம் நமது உடலுக்கு உடற்பயிற்சி செய்வது போல, வாசிப்பு என்பது நம் மனதுக்கும் புத்திக்கும் ஒரு புத்துணர்ச்சி அளிக்கக்கூடியது. 

அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப இந்த உலகில் நமது சமூகத்தில் வாசிப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தேவை நமக்கு உள்ளது. 

அந்த வகையில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாசிப்பைமேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு தேவையான புத்தகங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு உண்டு.

உள்நாட்டிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஆர்வமும் பங்குகொள்ள விருப்பமும் உள்ள புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றிணைத்து இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

ஒவ்வொரு வருடமும் பல புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன ஆனால் யாழ்ப்பாணத்தில், உள்ளூர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றமானது இந்த புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

 இக் கண்காட்சியின் மூலம் வடமாகாணத்தை சேர்ந்த நூலகங்கள் , சனசமூக நிலையங்களுக்கும் இந்த புத்தகத் திருவிழா நல்லதொரு வாய்ப்பாக அமையும் என நாம் கருதுகிறோம்.  பாடசாலைகள் கூட தமது நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களை இந்த புத்தக திருவிழாவில் பெற்றுக்கொள்ள முடியும்.

புத்தக திருவிழா இடம்பெறும் தினங்களில் புத்தக வெளியீடுகள், அறிமுக நிகழ்வுகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் என்பவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வடமாகாணத்தை சேர்ந்த அனைத்து மக்களும் இந்த நிகழ்வில் பங்குபற்ற கூடியவாறு அமையப்பெற்றுள்ளது.

இக் கண்காட்சி  முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும். 40 காட்சி கூடங்கள் அமைக்கப்படும். அவற்றில் உள்ளூர் வெளியூர் எழுத்தாளர்களின் புத்தகங்களை காட்சிப்படுத்தவுள்ளோம் என ஏற்பாட்டாளர்கள்  தெரிவித்துள்னர்.

குறித்த ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் நிறைவேற்று இயக்குனர் கு. விக்னேஷ் , வர்த்தக தொழில்த்துறை மன்ற தலைவர் கலாநிதி வாசுதேவன் ராசையா மற்றும் உப தலைவர் கலாநிதி  செல்லத்துரை திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  (

 

https://newuthayan.com/article/யாழ்ப்பாண_சர்வதேச_புத்தகத்_திருவிழா_-_2024_!

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்

2 months ago

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்

நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தனது 81ம் வயதில் காலமானார்.

கடந்த 2010ம் ஆண்டில் கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுருந்தார்.

விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் உரிமை

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக கொழும்பில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

1977ம் ஆண்டில் விக்ரமபாகு கருணாரட்ன நவ சமசமாஜ கட்சியில் இணைந்து கொண்டிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் கடந்த காலங்களில் நெருக்கமான தொடர்புகளை பேணியிருந்தார். 

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார் | Vikrmabahu Paassed Away

 இலங்கை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, கேம்றிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுக் கொண்டார்.

அவர், 18 ஆண்டுகளாக பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக குரல் கொடுத்த காரணத்தினால் அவர் தனது தொழிலை இழக்க நேரிட்டது.

இனங்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://tamilwin.com/article/vikrmabahu-paassed-away-1721874586

பௌத்த கல்வியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை விட்டுக்கொடுக்கப் போவதில்லை!

2 months ago
ranill.jpg?resize=750,375 பௌத்த கல்வியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை விட்டுக்கொடுக்கப் போவதில்லை!

“நாடு எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் பௌத்த கல்வியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில்கள் வழங்கும் வேலைத்திட்டத்தின் புதிய கட்டத்தை இன்று நாம் ஆரம்பித்துள்ளோம்.

சமய மாணவர்களுக்கும் இந்த புலமைப்பரிசில்களை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இவர்களுக்கான நிதிகளை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நாம் மாற்றியுள்ளோம். இந்த உதவித் திட்டத்திற்கு ஒரு பின்னணி உள்ளது.

கடந்த 4 வருடங்களில் இந்நாட்டு மக்கள் எதிர்கொண்டிருந்த துன்பங்களை நான் சொல்லத் தேவையில்லை. பொருளாதாரத்தின் வங்குரோத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாகியுள்ளது.

எனவே அரசாங்கம் என்ற வகையில் நாம் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடமைப்பட்டுள்ளோம். அதற்காக அஸ்வசும, உறுமய போன்ற பல்வேறு திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களின் கல்வியைத் தொடர்வதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பல புலமைப்பரிசில் திட்டங்களை தற்போது நான் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

நாட்டில் துறவிக் கல்விக்கான கற்றல் செயற்பாடுகள் எந்த காரணத்திற்காகவும் வீழ்ச்சியடைவதை நான் அனுமதிக்க மாட்டேன். பௌத்த சமய ஒழுங்கு முறையில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

 

நாட்டில் புதிய தலைமுறைக்கா பிக்குகளை கட்டியெழுப்புவதற்கு தேவையான பின்னணியை நாம் தயார் செய்ய வேண்டும். அதற்காக அரசாங்கம் செய்யக்கூடிய முக்கியமான செயற்பாடுதான் இந்த புலமைப்பரிசில் திட்டமாகும்.

நாட்டில் தொடர்ந்து பௌத்த கல்வியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
நாட்டில் எந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இந்த கடமையில் இருந்து எவரும் மீறிச் செல்லமுடியாது.

நாடு எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் பௌத்த மதக் கல்வி தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1393521

இலங்கை ராணுவப் படையினர் நாடு திரும்பியுள்ளனர்

2 months ago
Mali-MINUSMA-Hero-Image.jpg?resize=750,3 இலங்கை ராணுவப் படையினர் நாடு திரும்பியுள்ளனர்.

மாலியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை ராணுவப் படையினர் நாடு திரும்பியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையினால் மாலியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை ராணுவப் படையினர் நாடு திரும்பியுள்ளனர்.

இதன்படி 14 524 மில்லியன் ரூபா வருமானத்துடன் மாலியிலிருந்து இலங்கை படையினர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய நாடுகள் சபையின் மாலியில் நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து இலங்கை ராணுவப் படையினர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

மாலி நாட்டில் அமைதி காக்கும் பணிகளுக்காக 1099 இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் 14 பணிநிலை அதிகாரிகளும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.

 

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளின் கீழ் இயங்கி வந்த மாலியில் உள்ள பன்முக ஒருங்கிணைந்த ஸ்திரத்தன்மை நடவடிக்கை தலைமையகத்தின் இராணுவ போக்குவரத்துக் குழுவிற்காக இராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்,

இந்த நிலையில் பணிகளை நிறைவு செய்யப்பட்டதையடுத்து இவ்வாறு நாட திரும்பியுள்ளனர்

மாலி அமைதி காக்கும் பணியின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய கேணல் பின்சர விக்ரம ஆராச்சியினால் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவிடம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய நாடுகளின் கொடி சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதன் ஊடாக அவர்கள் இலங்கைக்கு ஈட்டிய அந்நியச் செலாவணியின் அளவு 14524 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவம் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது இலங்கை படையணியின் கெப்டன் எச்.டபிள். யூடி ஜயவிக்ரம இயந்திரவியல் படையணியின் கோப்ரல் எஸ்எஸ் விஜேகுமார மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கோப்ரல் எம்ஜிஎல் தேசபிரிய ஆகியோர் இலங்கை இராணுவ வாகனத் தொடரணியை இலக்கு வைத்து மேற்கொண்ட குண்டு தாக்குதல்களில் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

மேலும், மாலியில் ஐந்து இராணுவ அதிகாரிகள் மற்றும் 29 சிப்பாய்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1393478

இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட 11 அபிவிருத்தித்திட்டங்களை மீள ஆரம்பித்தது ஜப்பான் : திறைசேரியின் செயலாளரிடம் கடிதம் கையளிப்பு

2 months ago

Published By: VISHNU    24 JUL, 2024 | 07:14 PM

image
 
  • இலங்கையில் ஜப்பானின் கடன் திட்டங்களுக்கான பணக்கொடுப்பனவை மீண்டும் தொடங்குவதற்கான அதன் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்தது

உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவிற்கும் (OCC) இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையொப்பமிடப்பட்டதைத் தொடர்ந்தும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு உடன்படிக்கையை விரைவாக முடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்தும், 2022 ஆம் ஆண்டு இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்தாததிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஜப்பானின் நிதியிலான கடன் திட்டங்களுக்கான பணக்கொடுப்பனவை மீண்டும் தொடங்க ஜப்பான் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முடிவு செய்துள்ளது.

ஜூலை 24 அன்று, இலங்கை அரசாங்கம், ஜப்பான் தூதரகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் (JICA) இலங்கை அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த முடிவை நிதி அமைச்சில் ஆரம்பித்து வைப்பதற்காக கூட்டாக செய்தியாளர் மாநாட்டை நடத்தியது. 

இலங்கைக்கும் OCC க்கும் இடையிலான கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர் மிசுகொஷி (MIZUKOSHI Hideaki), OCC இன் இணைத் தலைவராக பொதுக் கடன் மறுசீரமைப்பை வழிநடத்தி முடிப்பதில் ஜப்பான் அரசாங்கத்தின் இதுவரை இல்லாத முயற்சி மற்றும் சிறந்த பங்களிப்பை எடுத்துரைத்தார்.

நாட்டை மீண்டும் ஒரு நிலையான பாதைக்கு வழிநடத்துவதற்கு அவசியமான விரிவான பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அதிகாரிகளின் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக தூதுவர் மிசுகொஷி பாராட்டினார்.

இடைநிறுத்தப்பட்ட அனைத்து யென் கடன் திட்டங்களும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கியமான உட்கட்டமைப்புகளாகும் என்றும், இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான ஜப்பானின் தொடர்ச்சியான மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தி அவர் கூறினார்.

JICA இலங்கை அலுவலகத்தின் பிரதம பிரதிநிதி திரு. யமடா டெட்சுயா சார்பாக, சிரேஷ்ட பிரதிநிதி திருமதி. இதெ யூரி இந்த தீர்மானம் தொடர்பாக JICA இன் தலைவர் டாக்டர் தனகா அகிஹிகோவிடமிருந்து கௌரவ. ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு முகவரியிடப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளர் திரு.மகிந்த சிறிவர்தன விடம் கையளித்தார்.

யென் கடன் திட்டங்களின் மீள ஆரம்பம் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், நீண்டகால நிலையான வளர்ச்சியை நோக்கிய வேகத்தைப் பெறுவதற்கும் உதவும் என்று திருமதி ஐடிஇ யூரி நம்பிக்கை தெரிவித்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் சிறிவர்தன கடன் மறுசீரமைப்பில் ஜப்பானின் சிறந்த முன்முயற்சி மற்றும் நீண்ட கால அர்ப்பணிப்பை பாராட்டி இந்த தீர்மானத்திற்கு தனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்தார். யென் கடன் திட்டங்களுக்கான பணக்கொடுப்பனவு மீண்டும் தொடங்குவதானது ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதுடன், இந்தத் தீவு தேசம் பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் திரும்பி இந்தியப் பெருங்கடலில் ஒரு மையமாகச் செயற்பட்டு தன்னைத் தானே முன்கொண்டு வர உதவும் என்று நம்பப்படுகிறது.

https://www.virakesari.lk/article/189302

பழைய செம்மலை நீராவியடி பொங்கல் நிகழ்வில் ஆலய வளாகத்தில் சிவலிங்கம் வைப்பு - வதந்தியை நம்பி நீதிமன்றத்தை நாடிய பொலிஸார்!

2 months ago

Published By: VISHNU    24 JUL, 2024 | 06:56 PM

image

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு புதன்கிழமை (24) இடம்பெற்றுவரும் நிலையில் கொக்குளாய் பொலிஸார் இந்த பொங்கல் நிகழ்வுக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றை நாடியுள்ளனர். 

IMG_0565.jpg

தொல்லியல் திணைக்களத்துக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று இடம்பெறும் நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் நிகழ்வில் ஆலய வளாகத்தில் 17 அடி சிவலிங்கம் ஒன்று நிறுவப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக இதனை நிறுத்துமாறு கோரி கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் தொல்லியல் திணைக்களத்தால் நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்துக்கு எதிராக முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. 

IMG_0566.jpg

இதனையடுத்து இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் நீராவியடி பிள்ளையார் ஆலய பூசகர் மற்றும் நிர்வாகத்தினருக்கு எதிராக வழக்கு ஒன்றினை தாக்கல் செய்து குறித்த பொங்கல் நிகழ்வில் புதிதாக சிலைகள் வைப்பதை தடை செய்யுமாறும் புதிய கட்டுமானங்களை செய்வதை தடை செய்யுமாறும் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

IMG_0564.jpg

இதனை ஆராய்ந்த மன்று இந்த ஆலய விவகாரம் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய உத்தரவை தொடர்ந்தும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் மற்றும் பௌத்த விகாரை தரப்பினர் பேணுமாறும் அதனை மீறி யாராவது புதிய கட்டுமானங்கள் புதிய சிலைகளை நிறுவினாலோ பொலிஸார் நடவடிக்கை எடுக்கலாம் என சுட்டிக்காட்டியதோடு ஏற்கனவே நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ள படி இரு தரப்பும் அமைதியான முறையில் நீதிமன்ற உத்தரவை மீறாது வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என சுட்டிக்காட்டியுள்ளது. 

IMG_0550.jpg

கடந்த இரு நாட்களாக தென்பகுதியை சேர்ந்த சில முகநூல் கணக்குகள் ஊடாக சிங்கள மக்கள் மத்தியில் கொதி நிலையை தோற்றுவிக்கும் வண்ணம் நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் நிகழ்வு தொடர்பில் பொய் செய்திகள் பரப்பப்பட்டு வந்ததோடு நேற்றையதினம் ஆலய நிர்வாகத்தினரிடம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தொல்லியல் திணைக்களத்தினர் இந்த பொய் வதந்தி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலம் பெற்றுள்ளனர். 

IMG_0548.jpg

இந்தனை தொடர்ந்து புதன்கிழமை (24) பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுவரும் நிலையில் கொக்கிளாய் பொலிஸார் பொய் செய்தியை நம்பி நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றை நாடியுள்ளனர். 

IMG_0549.jpg

இவ்வாறு பொங்கல் நிகழ்வு தொடர்பில் பொய் செய்திகளை சமூகவலைதளங்கள் ஊடக பகிர்ந்து வந்த தென்பகுதியை சேர்ந்த முகநூல் கணக்குகள் இதே போன்று கடந்த வருடம் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வு தொடர்பிலும் பொய் வதந்திகளையும் வெறுப்பு பேச்சுக்களையும் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் கொதி நிலையை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்த சமூகவலை தள கணக்குகளாகும்.

IMG_0549.jpg

இவர்களுக்கு தமிழ் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் விகாரை அமைத்து காணிகளை அபகரித்துள்ள பௌத்த பிக்குகளுக்கும் இராணுவ புலனாய்வு தரப்பினருக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக பிரதேச தமிழ் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

IMG_0547.jpg

https://www.virakesari.lk/article/189301

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு கப்பல்

2 months ago
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல் மைக்கேல் மர்பி

Published By: DIGITAL DESK 3  24 JUL, 2024 | 05:10 PM

image
 

அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி (USS Michael Murphy) என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமை (23) கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

155 மீற்றர் நீளமுள்ள, இந்த ஏவுகணை எதிர்ப்பு கப்பல் 323 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.

கொழும்புக்கு வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர்  பாரம்பரிய கடற்படை மரபுக்களுக்கமைய வரவேற்றனர்.

கப்பலின் கேப்டன் ஜொனாதன் பி. கிரீன்வால்ட் மேற்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.

இந்த கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26) நாட்டில் இருந்து புறப்படவுள்ளது.

1_62.jpeg

3_73.jpeg

4_69.jpeg

5_62.jpeg

12_39.jpeg

8_54.jpeg

https://www.virakesari.lk/article/189282

யாழில் சட்டவிரோத மணல் அகழ்வு; நான்கு டிப்பருடன் மூவர் கைது

2 months ago

Published By: DIGITAL DESK 3   24 JUL, 2024 | 04:58 PM

image
 

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 4 டிப்பர் வாகனமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. 

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர். 

பொலிஸாரை கண்டதும் மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிய நிலையில் மூன்று நபர்கள் பொலிஸாரினால் மடக்கி பிடிக்கப்பட்டனர். 

அதேவேளை அவ்விடத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட நான்கு டிப்பர் வாகனத்தையும் பொலிஸார் மீட்டனர். 

டிப்பர் வாகனங்களை பொலிஸ் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார், கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/189286

Checked
Sat, 09/28/2024 - 14:18
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr