ஊர்ப்புதினம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் – காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

1 month 4 weeks ago
IMG-20240730-WA0172.jpg?resize=750,375 நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் – காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பெருந்திருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டுதல் வைபவம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு காளாஞ்சியும்,பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

நல்லூர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டில் மூலம் கல்வியங்காட்டில் உள்ள கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் எடுத்து சென்று கையளிக்கப்பட்டன.

 

இவ் நிகழ்வில் ஆலய பிரதம சிவாச்சாரியர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதுடன், தொடர்ந்து 25 நாட்களுக்கு மகோற்சவ பெருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240730-WA0172.jpg?resize=750,422

IMG-20240730-WA0169.jpg?resize=600,338

IMG-20240730-WA0166.jpg?resize=600,338

IMG-20240730-WA0176.jpg?resize=600,338

IMG-20240730-WA0171.jpg?resize=600,338

https://athavannews.com/2024/1394116

பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!

1 month 4 weeks ago
29 JUL, 2024 | 06:22 PM
image
 

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் வேட்பாளரை களமிறக்க தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானமிக்க கூட்டம் கொழும்பு – விஜயராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இடம்பெற்றது. 

கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான தகவல்களை வெகு விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/189724

நாம் மீட்புப் பெற வேண்டுமெனில் ஊழல் மிக்க ஆளும் கும்பலை விரட்டியடிக்க வேண்டும் - அநுரகுமார

1 month 4 weeks ago

Published By: DIGITAL DESK 7   29 JUL, 2024 | 04:59 PM

image

நாங்கள் மீட்பு பெறவேண்டும். மீட்பு பெறவேண்டுமானால் முதலில் ஊழல் மிக்க, அழிவுமிக்க, தூரநோக்கற்ற ஆளும் கும்பலை விரட்டியடிக்க வேண்டும். எல்லாத்துறையிலும் வளமிக்க நாடொன்றை உருவாக்குவதே எமது நோக்கமாகும் : அநுர குமார திசாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி ஒன்றியத்தின் மாத்தறை மாவட்ட கருத்தரங்கு கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாத்தறை பர்ள் பெலஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இங்கு மேலும் உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க,

நாங்கள் நீண்ட காலமாக வாக்குகளை அளித்திருக்கிறோம். வாக்குகளை அளிக்கும்போது அரசாங்கமொன்றை அமைக்கும்போது பிரஜைகளிடம் நிலவிய எதிர்பார்ப்புகள் ஈடேறியுள்ளனவா? எமது நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடியை நோக்கினாலும், அரச மற்றும் ஏனைய ஒவ்வொரு துறையிலும் தோன்றியுள்ள சீர்குலைவுகளை நோக்கினாலும் நிகழ்ந்திருப்பது முன்னேற்றமல்ல. பின்னடைவுதான்.

நாங்கள் இந்த தலைவிதியிலிருந்து மீட்பு பெறவேண்டும். மீட்பு பெறவேண்டுமானால் முதலில் ஊழல் மிக்க, அழிவுமிக்க, தூரநோக்கற்ற ஆளும் கும்பலை விரட்டியடிக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்தது 1970 இல். 54 வருடங்களாக பாராளுமன்றத்தில். ரணில் வந்தது 1977 இல். 47 வருடங்கள் பாராளுமன்றத்தில். தினேஷ் வந்தது 1983 இல். 41 வருடங்கள் பாராளுமன்றத்தில். பாராளுமன்றத்தில் உறுப்பினர், அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி பதவிகளை வகித்தவர்கள். அவர்களை மேலும் பரீட்சித்து பார்க்கவேண்டியதில்லை. நாங்கள் பல தசாப்தங்களாக அந்த மூடைகளை அவிழ்த்துப் பார்த்திருக்கிறோம். நாங்கள் அந்த வழமையான அரசியல் பாசறையிலிருந்து நவீன அரசியல் இயக்கமொன்றின் கையில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான மிகச்சிறந்த வாய்ப்பு செப்டெம்பர் 21 ஆம் திகதி உருவாகியிருக்கிறது.

WhatsApp_Image_2024-07-29_at_15.55.41.jp

நாங்கள் இந்த அழிவுகளை எங்கள் கண்ணெதிரே காண்கிறோம். தென்கொரியாவின் வளர்ச்சிகள், வியட்நாமின் வளர்ச்சிகள், இந்தியாவின் வளர்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் 80 ஆம் தசாப்தத்தில் குடை உற்பத்தியும் சவர்க்கார உற்பத்தியும் இருக்கவில்லை.

அப்படி இருந்த இந்தியாவையும் இன்று சந்திரனுக்கு செல்கின்ற இந்தியாவையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த பிராந்தியத்திற்கு மோட்டார் வாகனங்கள், ஔடதங்கள், உணவு, விதையின உற்பத்தியை செய்துவருகின்ற இந்தியாவை இப்போது நாங்கள் காண்கிறோம். இந்த அரசுகள் 20 ஆம் நூற்றாண்டில் உருவாகிய தொழில்நுட்பத்தை நன்றாக உறிஞ்சி எடுத்து திட்டங்களை வகுத்து அமுலாக்கிக் கொண்டிருக்கின்றன.

அதேபோலவே நாங்கள் அறிந்த காலத்திற்குள் எமது நாட்டுக்கு ஏற்பட்ட அழிவுகளை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். அதன் ஆரம்ப படிமுறைதான் இந்த ஜனாதிபதி தோ்தலில் தேசிய மக்கள் சக்தியின் கைக்கு அதிகாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்விதமாக எங்கள் பிள்ளைகள் வாழக்கூடாது. உலகின் முன்னிலையில் அபகீர்த்திக்கு இலக்காகிய நாடாக மாறக்கூடாது. அனைவரும் ஒன்றுசோ்ந்து புதிய அரசியல் பயணமொன்றில் எமது நாட்டை பிரவேசிக்கச் செய்ய வேண்டும். 

முதலில் இந்த நாட்டை நாகரிகமான ஒரு நாடாக மாற்றியமைக்க வேண்டும். மானிட கூர்ப்பின் தொடக்க நிலையில் எங்களுடைய மானுடன் மரத்திலிருந்து கீழே இறங்கிய பின்னர் நிர்க்கதியான விலங்காக மாறினான். அந்த நிர்க்கதி நிலைமை எம்மை கூட்டான வாழ்க்கையின் பால் தூண்டியது. ஒரு கூட்டமாகவே வேட்டையாடச் சென்றார்கள். வேட்டையை கூட்டமாகவே அனுபவித்தார்கள். பின்னர் பலம்பொருந்திய ஆள் தலைவனானான். அந்தக் கூட்டத்தில் தலைவனே அனைத்துத் தீர்மானங்களையும் எடுத்தான்.

நீண்டகாலமாக மனிதனின் போராட்டங்கள் எழுச்சிகள் மூலமாக அவை நிறுவனமென்ற வகையில் கட்டியெழுப்புதல் தொடங்கியது. சட்டங்களை வகுப்பதற்காக பாராளுமன்றமும் சட்டத்தை அமுலாக்குவதற்காக நிறைவேற்றுத்துறையை உள்ளிட்ட அமைச்சரவையையும் சட்டம் அமுலாக்கப்படுவது சரியான முறையிலா என்பதை பார்ப்பதற்காக நீதித்துறையும் உருவாகியது.

சட்டங்களை வகுப்பதற்காக பாராளுமன்றம் மக்களாலேயே நியமிக்கப்படுகிறது. நீதிமன்ற முறைமைக்கு பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்கள் ஊடாகவே அதிகாரம் கிடைக்கிறது. சமூகம் நாகரிகமடைந்த நிறுவனங்கள் மூலமாக நிறுவகிக்கப்பட ஆரம்பித்தது.

எமது நாட்டில் இந்த நிறுவனங்கள் சீர்குலைதலுக்கு இலக்காகின. மக்கள் எதிர்பார்த்த நாகரிகமடைந்த பாராளுமன்றமொன்றாக மாறியுள்ளதா? இன்று இந்த நிறுவனங்கள் அநாகரிகத்தின் பிரதிபிம்பங்களாக மாறியுள்ளன. பாராளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் இன்று பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படுகின்ற சட்டம் என்னவென்று அறியாதவர்களாவர். அவை அவர்களுக்கு ஏற்புடையதுமல்ல. ஆனால் அதிகாரம் இருப்பது அந்த இடத்தில் தான். மீண்டும் நாகரிகத்தை அழைப்பித்துவர வேண்டுமானால் இந்த பாராளுமன்றம் மாற்றமடைய வேண்டும். 17 வது திருத்தம் மிகவும் ஜனநாயக ரீதியான புதிய திருத்தமாகும். 17 ஐ முழுமையாக அகற்றி மஹிந்த ராஜபக்ஷ 18 ஐ கொண்டு வந்தார். 17 இற்கு கையை உயர்த்தியவர்கள் 18 இற்கும் கையை உயர்த்தினார்கள். 19,20,21 இந்த அனைத்துவிதமான அரசியலமைப்புத் திருத்தங்களுக்கும் அவர்கள் கையை உயர்த்தினார்கள்.

இத்தகைய அநாகரிகமான நிறுவனத்துடன் முன்னோக்கி பயணிக்க முடியுமா? அநாகரிகத்திலிருந்து நாகரிகத்திற்கு கொண்டு வருகின்ற பாராளுமன்றமாக இந்த பாராளுமன்றத்தை மாற்றியமைக்க வேண்டும். மக்கள் எதிர்பார்த்த தேவைகள் ஈடேடுகின்ற பாராளுமன்றமொன்றை நியமிக்க வேண்டும். நாங்கள் சட்டவாக்க அதிகாரம் உரியவகையில் பிரதிபலிக்கப்படுகின்ற பாராளுமன்றமாக மாற்றியமைப்போம்.

நிறைவேற்று அதிகாரம் மாற்றப்படவேண்டும். தனியாள் ஒருவரிடம் மட்டற்ற அதிகாரம் குவிந்திருக்கிறது. இருக்கின்ற சட்டத்திற்கு பொருள்கோடல் வழங்கி தண்டனை வழங்குவதே நீதிமன்றத்தின் கடமையாகும். ஊழல், மோசடி, விரயத்தை தடுப்பதற்கான பல சட்டங்களை நாங்கள் கொண்டுவருவோம்.

பாராளுமன்றத்தையும் நிறைவேற்றுத்துறையையும் நீதித்துறையையும் திட்டவட்டமான சமூக தேவைகளுக்கான பணியாற்றி வருகின்ற நிறுவனமாக மாற்றியமைக்க வேண்டும். தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டமை தவறானதென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நியமன அதிகாரி ஜனாதிபதியாவார். ஒருவரின் பெயரை ஜனாதிபதி அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைக்கிறார். அரசியலமைப்புச் சபை அதனை அங்கீகரித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறது. ஜனாதிபதி நியமனத்தை செய்கிறார். பாராளுமன்றத்தின் தீர்ப்பின் மீது நீதிமன்றத்தால் கைவைக்க முடியாது என்கின்ற அபிப்பிராயமொன்று இப்போது முன்வைக்கப்படுகிறது. அரசியலமைப்பு சபைக்கு அவ்வாறான அதிகாரம் வழங்கப்படவில்லை.

பாராளுமன்ற செயலாளர் நாயகம், தோ்தல்கள் ஆணைக்குழு, அரசாங்க சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபர் ஆகிய பல்வேறு முக்கியமான நிறுவனங்களுக்கு அரசியலமைப்புச் சபையினால் பதவிகள் வழங்கப்படுகின்றன. எந்த ஒரு பிரஜையும் மேற்படி நியமன முறையியல் முறைப்படி கடைப்பிடிக்கப்படவில்லை என்றுகூறி அடிப்படை உரிமைகள் வழக்கொன்றை தாக்கல் செய்வதற்கான உரிமையை கொண்டிருக்கிறார். 

அரசியலமைப்பு சபையில் ஒன்பது போ் இருக்கிறார்கள். பொலிஸ் மா அதிபரின் பதவியை அரசியலமைப்புச் சபையின் ஐந்து போ் அங்கீகரிக்க வேண்டும். ஒன்பது பேரில் சபாநாயகரும் ஒருவராவார். அன்று நான்கு போ் பொலிஸ் மா அதிபருக்கு சார்பாக வாக்குகளை அளித்தார்கள். இருவர் அமைதியாக இருந்ததோடு இரண்டு போ் எதிர்த்தார்கள்.

அரசிலமைப்பு சபைக்கு வாய்ப்பொன்று இருக்கின்றது. வாக்குகள் சமமான எண்ணிக்கைக் கொண்டதாக இருந்தால் அறுதியிடும் வாக்கினை சபாநாயகரால் பாவிக்க முடியும். சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்புகிறார். 'நான்கு போ் சார்பாக இருக்கிறார்கள். இரண்டு போ் எதிராக இருக்கிறார்கள்.

மேலும் , இரண்டு போ் மௌனமாக இருக்கிறார்கள். மௌனமாக இருக்கின்ற இருவரும் எதிரானவர்கள் என கருதப்படுமாயின் எனது வாக்கினை சார்பாக வழங்குவேன்' என்று. இதற்கெதிராக சபாநாயகருக்கு ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. உயர்நீதிமன்றம் இங்கு ஒரு சிக்கல் இருக்கிறதெனக் கண்டு பொலிஸ் மா அதிபரின் சேவையை இடைநிறுத்துகிறது. 

தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் கூறுகிறார். "அந்த வழக்குத்தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை" என்று. நான் கூறுகிறேன் "தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் கூறிய கதையை இயலுமாயின் வெளியில் வந்து கூறுங்கள்" என்று. ஒரு கடிதத்திற்கு பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் கையொப்பத்தை இடுவதற்காக. அந்த நிறுவனங்களின் நாகரிகத்தையும் கௌரவத்தையும் இந்த ஆட்சியாளர்கள் பாதுகாக்கிறார்களா? ஒட்டுமொத்த சமூகமுமே சீர்குலைவிற்கு இலக்காகியுள்ளது.

ஒட்டுமொத்த அரசாங்கமும் ஒரு திணைக்களத்தின் பிரதானிக்காக தோற்றுவதன் மூலம் வெளிக்காட்டப்படுவது என்ன? நிறுவனம் தங்கியிருப்பது ஓர் ஆளிடம் என்றால் அந்த நிறுவனத்தின் வழியுரிமை இல்லாதொழிந்துவிடும். அரசாங்கம் ஏன் அப்படி சிந்திக்கிறது? தமக்கு அவசியமான முறையற்ற செயல்களில் ஈடுபடுவதற்காகவே. நாட்டின் பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ள சட்டபூர்வமான பணிகளைச் செய்து கொள்ள வேண்டிய தேவையிருக்குமாயின் வேறொரு பொருத்தமான உத்தியோகத்தரை நியமித்துக்கொள்ள முடியும். இந்த அநாகரிகத்தை தோற்கடிக்க வேண்டும்.

எங்கள் அரசியலில் முதலாவதாக நாங்கள் ஏற்றுக்கொள்கின்ற பொறுப்புத்தான் இந்த நிறுவனங்களுக்கு முறைப்படி கையளிக்கப்பட்டுள்ள பணிகளையும் பொறுப்புகளையும் ஈடேற்றுவதற்காக அவசியமான ஒத்துழைப்பினையும் அதிகாரத்தையும் பெற்றுக்கொடுத்தலாகும். 

அடுத்ததாக எமது பொருளாதாரத்தில் பாரிய மாற்றமொன்றை அடையவேண்டும். பொருளாதார மாற்றத்திற்காக எமக்கு தொழில்சார் உழைப்பு அவசியமாகும். எங்களுடைய உழைப்புப் படையணியில் 15% மான தொழில்சார் உழைப்புத்தான் இருக்கிறது. 85% பயிற்றப்பட்ட, பயிற்றப்படாத, பகுதியளவில் பயிற்றப்பட்டதாகவே இருக்கின்றது.

உதாரணமாக வங்கியை நெறிப்படுத்துவதற்காக அந்தத்துறையின் தோ்ச்சி பெற்ற முகாமையாளர் ஒருவர் இல்லாவிட்டால் சாதாரண ஊழியர்களைக் கொண்டு வங்கியை நடாத்திச் செல்ல முடியாது. தொழில்சார் உழைப்பினால் தான் ஏனையவர்களின் சேவை உறிஞ்சப்படுகிறது. மருத்துவர், பொறியியலாளர் போன்ற தொழில்வாண்மையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அதனால் நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் தொழில்சார் உழைப்பு நாட்டை விட்டுச் செல்வதற்காக அழுத்தம் கொடுக்கப்படுகின்ற காரணிகளை நீக்க வேண்டும்.

நாட்டை நெறிப்படுத்துவது குற்றச் செயல் புரிபவர்கள் என்றால் தொழில்சார் ஊழியரில் பலனில்லை என்ற உணர்வு தோன்றுகிறது. அதனால் "நாங்கள் இந்த நாட்டுக்கு அவசியமான மனிதன்" என்ற மனோபாவத்தை உருவாக்கவேண்டும். நாட்டை விட்டுச் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதைச் சோ்ந்தவர்களாவர்.

தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இல்லாமையினாலே அவர்கள் போகிறார்கள். நாங்கள் அவர்களிடம் கூறுவது "உங்களின் பிள்ளைகளுக்கு இந்த நாட்டை நம்பிக்கையான நாடாக மாற்றுவோம்" என்ற நம்பிக்கையை உருவாக்குவோம். மூன்றாவதாக அந்த தொழில்வாண்மையாளர்கள் தமது அறிவையும், பணியையும், முறைப்படி ஈடேற்றிக் கொள்வதற்கான  மதிப்பீடு நிலவவேண்டும். 

தொழில்வாண்மையாளர்களின் சம்பளத்திலிருந்து 36% வரியும் எஞ்சிய பணத்தொகைக்காக சாமான்களை வாங்கும்போது மீண்டும் 18% வரியும் விதிக்கப்படுகிறது. மாதத்தின் இறுதியில் வேலை செய்திருப்பது எங்களுக்காக அல்ல என எண்ணத்தோன்றுகிறது. அப்படி எடுத்தால் பரவாயில்லை. ஆனால் அவ்வாறு எடுக்கின்ற பணத்திற்கு என்ன நடக்கிறது? ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு செல்வதற்காக வரவு செலவில் ஒதுக்கிக் கொண்ட பணத்தொகை போதாதென மேலும் 2000 இலட்சம் ரூபாவை ஒருக்கிக் கொள்கிறார்கள்.

இந்த இரண்டு மாதங்களுக்காக குறைநிறப்பு மதிப்பீடொன்றினைக் கொண்டு வந்து தோ்தலுக்காக 875 கோடி ரூபாவை ஒதுக்கிக் கொள்கிறார். இளைஞர் சேவைகள் மன்றத்திடமிருந்து 400 மில்லியன் ரூபாவை அமைச்சரவை கேட்டது. இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். தமது சம்பளத்திலிருந்து வெட்டிக்கொள்கின்ற பணத்தை விரயமாக்குகிறார்கள், திருடுகிறார்கள். அமைச்சர்களின் வீடுகளில் லயிற் பில் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாவாகும். டீசல் விலை அதிகரித்த வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் டீசல் கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவை அதிகரித்துக்கொண்டார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அந்த ஒரு இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ளவில்லை. பிரஜைகள் மீது சுமை வருகின்றது. தமது வரிப்பணத்திற்கு என்ன நடக்கின்றதென்பதை பிரஜைகள் கண் கூடாகவே பார்க்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் அந்த வரித்தொகையை முறைப்படி செலவிடுதல் பற்றிய வெளிப்படைத்தன்மையை பிரஜைகளுக்கு காட்டுவோம். அதைப்போலவே இந்த வரிகளை கட்டாயமாக குறைப்போம். 

எங்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக நாம் கொண்டுள்ள சாத்திய வளங்களை கண்டறிய வேண்டும். எங்களிடம் கனிய வளங்கள் இருக்கின்றன. மூலதனம் இல்லாவிட்டால் நாங்கள் மூலதனத்திற்காக அழைப்பு விடுப்போம். தொழில்நுட்பம் இல்லாவிட்டால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைப்பிக்க தயார்.

நாங்கள் இயற்கை வளங்களின் அடிப்படையில் பொருளாதாரத்தை திட்டமிட வேண்டும். கிராமிய மக்களின் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்காக கிராமத்தில் இருக்கின்ற சாத்திய வளங்களை இனங்காண வேண்டும். எமது நாட்டின் இடஅமைவின் பேரில் எங்களுக்கு சிறந்ததொரு பொருளாதாரத்திற்கு செல்வதற்கான இயலுமை நிலவுகின்றது. கப்பற்துறை கைத்தொழில் மற்றும் கப்பற் போக்குவரத்து பற்றி கவனம் செலுத்தியிருக்கிறோம்.

சுற்றுலாத் தொழிற்றுறையில் பாரிய சாத்தியவளம் நிலவுகிறது. அதைப்போலவே எமது மனித பலத்தை முன்னேற்றக்கூடியதாக இருக்கின்றது. 2030 இல் உலகிற்கு 45 மில்லியன் மென்பொருள் பொறியிலாளர்கள் அவசியமாகின்றனர். அந்த உலகில் கேள்வி உருவாகின்ற 45 மில்லியன் ஒரு சதவீதத்தை நாங்கள் கைப்பற்றிக்கொள்வது என்பதன் அடிப்படையிலேயே இந்த மனித வளத்தை முன்னேற்ற வேண்டியுள்ளது. முன்னேற்றமடைந்த மனித உழைப்புச் சந்தையை கைப்பற்றிக் கொள்வது பற்றி கவனம் செலுத்தி திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறோம்.

உணவு பாதுகாப்பில் விவசாயத்துறை மீது பாரிய கவனம் செலுத்தப்பட முடியும். இந்த பக்கங்கள் பற்றி நன்றாக சிந்தித்து மிகவும் சிறப்பாக முகாமை செய்து நெறிப்படுத்தினால் சிறந்த பொருளாதார நன்மைகளை அடைவதற்கான இயலுமை நிலவுகிறது. எல்லா விதத்திலும் வளம் நிறைந்த நாட்டை, உலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்டை, சமூக மனோபாவங்களில் வளமான நாட்டை உருவாக்குவது தான் எங்களுடைய எதிர்பார்ப்பு. அதற்காக ஒன்றாக மல்லுக்கட்டினால் ஒன்றாக இடையீடு செய்தால் எம்மால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். எமக்கு மிகச் சிறந்த வாய்ப்பொன்று உருவாகியிருக்கிறது. அதற்கான பாதையை திறந்துகொள்ள வேண்டும். பிற்போக்குவாத பாசறையை தோற்கடிக்க வேண்டும். முற்போக்கான பாசறையை வென்றெடுக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுசோ்வோம் என்றார்.

WhatsApp_Image_2024-07-29_at_15.55.42__1 

சஜித் பிரேமதாசவிடம் இருப்பதாகக்கூறுகின்ற பொருளாதார ஒஸ்தார்கள் அனைவருமே அன்று ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் இருந்தார்கள்.

வங்கி மற்றும் நிதியொன்றியத்தின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் தில்ஷான் ஷாமிகர 

ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்ததாகக்கூறுகின்ற இயலுமையும் அறிவும் 2015 - 2019 காலத்தில் இருந்திருப்பின் நாடு இந்த நிலமைக்கு வீழ்ந்திருக்க மாட்டாது. வெளிநாட்டுக்கடன் பிணைமுறிகளை பாரியளவில் எடுத்தவர் அவரே. தூரநோக்கற்ற வகையில் செயலாற்றி நாட்டை இந்த நிலைமைக்கு இழுத்துப்போட்டவரும் அவரே. ராஜபக்ஷாக்களும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்று சோ்ந்து அரச நிறுவனங்கள் அனைத்திலும் உறவினர்களை நிரப்பி நட்டம் அடைகின்ற நிறுவனங்களாக மாற்றியவரும் அவர்களே. ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாசவிடம் இருப்பதாகக்கூறுகின்ற பொருளாதார ஒஸ்தார்கள் அனைவரும் அன்று ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து இந்த நிலைமைக்கு இழுத்துப்போட்டு 2048 இல் நாட்டை அபிவிருத்தி செய்வதாக இப்போது கூறுகிறார்கள்.

2016 இல் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை திவயின செய்திதாளில் பிரதான செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. 2020 இல் நாட்டை கடன் சுமையிலிருந்து விடுவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கூறுகின்ற கற்பனை கதைகள் இந்த நாட்டின் தொழில்வாண்மையாளர்கள் இனிமேலும் நம்பபோவதில்லை. அவர்களால் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. பொதுமக்கள் அவர்களை நிராகரித்துவிட்டார்கள்.

இந்த நாட்டுக்கு சுதந்திரமாக முதலீட்டாளர்களை வரவழைத்துக்கொள்ளக்கூடிய அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள நாங்கள் அனைவரும் அணிதிரண்டு விட்டோம். அது வேறு எவருமல்ல. செப்டெம்பர் 21 ஆம் திகதி நிச்சயமாக அதிகாரத்திற்கு கொண்டு வருகின்ற அநுர திசாநாயக்காவை முதன்மையாக கொண்ட தேசிய மக்கள் சக்தியாகும். 

பொருளாதாரத்தின் குருதிச் சுற்றோட்டத் தொகுதியாக திசைகாட்டின் வங்கி மற்றும் நிதி ஒன்றியம் முன்னணி வகித்து செயலாற்றும் 

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி

இதுவரை நிலவிய அரசாங்கங்களின் ஒட்டுமொத்த செயற்பாங்கு காரணமாக இன்றளவில் ஏறக்குறைய இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் தொழில்முயற்சிகள் மூடப்பட்டுள்ளன. அந்த தொழில் முயற்சியாளர்கள் பற்றிய விரிவான புரிந்துணர்வும் வங்கி மற்றும் நிதித்துறையைச் சோ்ந்த உங்கள் அனைவருக்குமே இருக்கிறன்றது. நீங்கள் இதுவரைகாலமும் தொழில் முயற்சியாளர்கள் போன்றே கிராமப்புற வறிய மக்களுடனும் நிதிசார் துறையில் பெற்ற அனுபவங்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்ப அத்தியாவசியமானவையாகும். அமைச்சரின் வாயிலிருந்து வெளிப்படுகின்ற வசனத்தை சுற்றறிக்கைகளாக கருதி செயலாற்ற வேண்டிய நிலை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரச வங்கிகளுக்கு ஏற்பட்டது. எனினும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் அத்தியாவசியமான துறைகளுக்கு முதன்மையான நிதிசார் வசதிகள் வழங்கப்படும். தோழர் லால்காந்த அமைச்சர் என்ற வகையிலும் நான் பிரதியமைச்சர் என்ற வகையிலும் குறுகிய காலத்திற்கு செயலாற்றிய சிறு கைத்தொழில்கள் அமைச்சின் பெருமளவிலான அனுபவங்களை அதற்காக ஈடுபடுத்துவோம். தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குகையில் மத்திய வங்கி பிணைமுறி கொள்ளை காரணமாக பாரியளவில் உயர்வடைந்த வட்டி வீதம் 2045 வரை நீண்ட கால ரீதியில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

எனினும் அந்த நிலைமையிலிருந்து விடுபட்டு தேசிய திட்டமொன்றின்படி தொழில் முயற்சியாளர்களை நெறிப்படுத்துவதற்காக குறைந்த வட்டிக்கு கடன் வழங்குகின்ற அபிவிருத்தி வங்கியொன்றை நாங்கள் நிறுவுவோம். தொழில்முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக தாபிக்கப்பட்டிருந்த தேசிய அபிவிருத்தி வங்கிக்கு என்ன நோ்ந்தது. அந்த வங்கியை அரசியல் தலையீடுகளுக்கு இரையாக்கி முற்றாகவே சீர்குலைத்தார்கள். கோப் குழுவின் தவிசாளர் என்ற வகையில் நான் செயலாற்றிய காலத்தில் அந்த விசாரணைகளுக்காக அழைப்பித்த உத்தியோகத்தர்கள் இந்த இடத்திலும் இருக்கக்கூடும். அமைச்சரின் பிடியில் அகப்பட்ட உத்தியோகத்தர்களின் அழுத்தம் பற்றி எமக்கு தெரியும். எனினும் எங்களுடைய அரசாங்கமொன்றின் கீழ் இந்த நிதி ஒன்றியத்தில் இருக்கின்ற தொழில்வாண்மையாளர்களிடமிருந்து தெளிவுப்படுத்திக் கொள்ள முடியும். நாட்டின் பொருளாதாரத்தின் குருதிச் சுற்றோட்டத் தொகுதியாக தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி ஒன்றியம் முதன்மையாக செயலாற்றும். ஏற்கெனவே 21 மாவட்டங்களில் இந்த நிதி ஒன்றியத்தின் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டிருந்தன. அந்தந்த மாவட்டத்திற்கு அவசியமாகின்ற தொழில் முயற்சிகளுக்கு உயிரளிக்கையில் நிதிசார் வசதிகளை வழங்க உங்களின் கருத்துக்கள் அடிப்படையாக பயன்படுத்திக் கொள்ளப்படும். மக்கள் மீது கூருணர்வு கொண்டதாக செவிசாய்த்து நாட்டை கட்டியெழுப்புகின்ற மறுமலர்ச்சிப் பயணத்திற்காக அனைவரினதும் பங்கேற்பினை எதிர்பார்க்கிறோம். 

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்ற மாயாஜால வித்தை அரசியலே என உலக வங்கி பிரதிநிதிகள் கூட ஏற்றுக்கொண்டார்கள்

தேசிய மக்கள் சக்தி பொருளாதார பேரவையின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த 

இன்றளவில் எதிரான குழுக்கள் முன்னெடுத்து வருகின்ற பொய் பிரச்சாரங்கள் மத்தியில் முதன்மையாக அமைவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்று அதிகாரத்திற்கு வந்தால் மக்களின் சேமிப்புக் கணக்குகளிலுள்ள பணத்தை பறிமுதல் செய்யுமென்பதாகும். மாபெரும் மாற்றமொன்றுக்காக மக்களை அணிதிரட்டிக் கொண்டிருக்கும்போது எமக்கெதிராக கட்டியெழுப்பப்படுகின்ற பொய்யான பிரச்சாரங்களுக்கும் குறைகூறல்களுக்கும் பதிலளிக்கவும் வேண்டியுள்ளது. ஒரு கால கட்டத்தில் பேராசிரியர் ஒருவர் கூட ஊழல் மோசடிகளால் ஒரு நாடு அபிவிருத்தியடையுமாயின் பரவாயில்லை எனக்கூறினார்.

அவர்களின் அந்த வழிகாட்டல்களின் அனுசரணையையும் பெற்றுக்கொண்டு சென்ற பயணத்தில் நாட்டை வங்குரோத்து அடையச் செய்வித்த பின்னர் ஊழல் மோசடிகள் பற்றிய பாரிய எதிர்ப்பு மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்திலே ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய குழுவும் புள்ளி விபரங்களை எடுத்துக்காட்டி நாட்டை கட்டியெழுப்பியது தாமே எனக்கூறிக்கொண்டு இருக்கிறார்கள். முன்னெடுத்து வருகின்ற இந்த வேலைத்திட்டம் தடைப்பட்டால் நாடு மீண்டும் படுகுழிக்குள் விழுவதாக பாரிய ஒரு பயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். 

பொருளாதார தரவுகள் என்பது அரசியலிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அமைச்சர்களின் அவசியப்பாட்டுக்கு அமைவாகவன்றி ஜனநாயக ரீதியாக பொருளாதார துறையில் இடையீடு செய்வதற்கான வாய்ப்பினை வழங்குவதனூடாக பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். இந்த நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான மாயாஜால வித்தை அரசியலே என்பதை உலக வங்கி பிரதிநிதிகள் கூட ஏற்றுக்கொண்டார்கள். இது பற்றி வலியுறுத்திக்கூறுவது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் அந்த அலுவல்களை மேற்கொள்வதற்கான இயலுமை நிலவுவது தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே.

பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பண்டங்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்வதில் மேலும் பல காரணிகள் தாக்கம் ஏற்படுத்துவதோடு நிதித்துறை தனித்துவமான முக்கியத்துவத்தை வகிக்கின்றது. பணம் குட்டிப்போடுகின்ற இடங்களில் முதலீடு செய்வதை விட தேசிய அவசியப்பாட்டின் பேரில் உற்பத்தித்துறையில் ஈடுபடுத்துவதை ஒரு கொள்கையாக அமுலாக்க வேண்டும். அது ஒரு அரசியல் தேவையாகும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் தனியார் மற்றும் அரச வங்கிகள் ஒன்று சோ்ந்து ஒத்துழைப்புடன் செயலாற்றும். அரச மற்றும் தனியார் என்ற வகையில் பிரிந்து முரண்பாட்டு நிலைமையுடன் பேணி வரமாட்டாது.

நாட்டுக்கு அவசியமான வலிமைமிக்க நிதிசார் தொகுதியொன்றுக்காக பலம்பொருந்திய அரசதுறையின் நிதிசார் முறைமையொன்றின் வழியுரிமை உறுதிப்படுத்தப்படுகின்றது. தொழில் முயற்சியாளர்கள் வசம் உள்ள ஆதனங்களை பிணையாக வைத்துக்கொண்டு அவர்களின் கழுத்தை நெரித்துக்கொண்டு கடன் கொடுப்பதற்கு பதிலாக அரசு இடையீடு செய்து அவசியப்பாட்டிற்கிணங்க நிதி வழங்குதல் மேற்கொள்ளப்படும். நிதிசார் துறை, தொழில் முயற்சியாளர்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய முத்தரப்பினர்களும் ஒன்று சோ்ந்து நிதித்துறையின் செயற்பொறுப்பினை மறுமலர்ச்சி யுகமொன்றுவரை அணிதிரட்டும். எதிரி பதற்றமடைந்து மேற்கொண்டு வருகின்ற பிரச்சாரங்களுக்கு ஏமாந்து விடவேண்டாம். 

தொழில்வாண்மையாளர்கள் அனைவரினதும் பொறுப்பு அரசியல் மாற்றத்தின் பங்காளிகளாக மாறவேண்டியதே

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க

தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி ஒன்றியத்திற்கு இந்த நாட்டை கட்டியெழுப்புவதில் பாரிய செயற்பொறுப்பினை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. அதைபோலவே எதிர்வரும் நாட்களுக்குள் ஜனாதிபதி தோ்தலுக்காக பாரிய செயற்பொறுப்பினையும் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. இந்த நாட்டை மறுமலர்ச்சி யுகமொன்றுக்கு எடுத்துச் செல்வதிலான அடிப்படை வெற்றியாக தேசிய மக்கள் சக்தியின் அபேட்சகர் தோழர் அநுர குமார திசாநாயக்காவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டியுள்ளது. அதற்காக உங்களை சந்திக்க வருகின்ற வாடிக்கையாளர்களை விழிப்புணர்வூட்டுவதற்கான பொறுப்பு உங்கள் அனைவரிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட மக்களின் பகைவர்கள் பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்திக் கொண்டு உயர்நீதிமன்றத்தைக்கூட கீழடக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத்திற்கு வெளியில் அவர்கள் அந்த கதைகளை கூறினால் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி நேரிடும் என்பதால் பாராளுமன்ற சிறப்புரிமைகளின் மறைவிலிருந்து கொண்டு தமது வங்குரோத்து நிலைமையை மறைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். ரணில் அடித்த கேம் எல்லாமே முடிந்து விட்டது. சுயேட்சை வேட்பாளராக முன்வந்து ஏதோ செய்ய முனைகிறார்.

தோ்தலைக் கண்டு அஞ்சி அவர்கள் அடிக்கின்ற இந்த கேம்களை தோ்தல் நெருங்கும்போது மேலும் உயர்ந்த அடுக்கிற்கு கொண்டு வந்து மக்களை குழப்பியடிக்க முயற்சி செய்கிறார்கள். தொழில்வாண்மையாளர் அனைவருக்கும் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பு இந்த அரசியல் மாற்றத்தின் முனைப்பான பங்காளிகள் என்ற வகையில் பங்களிப்புச் செய்வதாகும். உங்கள் சேவை நிலையத்தில் மாத்திரமல்ல ஊரிலும் மக்களை விழிப்புணர்வூட்டி குழப்பநிலையிலிருந்து மீட்டுக் கொள்வதற்காக பாரிய பணியை ஆற்றவேண்டியுள்ளது. உண்மையான அரசியல் மாற்றமொன்றின் தொடக்க நிலை  அடுத்த செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெற வேண்டியுள்ளது. எங்களுடைய செயற்பொறுப்புப் பற்றி விசேட கவனத்துடன் தொழில்வாண்மையாளர்கள் என்ற வகையில் சமூகத்தில் நிலவுகின்ற அங்கீகரிப்பினையும் எதிர்காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக பிரயோகிப்போம்.

WhatsApp_Image_2024-07-29_at_15.55.42.jp

https://www.virakesari.lk/article/189707

ஜனாதிபதி வேட்பாளர்களில் சமஸ்டியை வலியுறுத்துபவர்களுக்கு ஆதரவு வழங்குவது குறித்து தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும் ; சிறிதரன்

1 month 4 weeks ago

Published By: DIGITAL DESK 3   29 JUL, 2024 | 02:21 PM

image
 

தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஸ்டியை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) கிளிநொச்சியில் நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனினும், எதிர்வரும் மாதம் 10 ,11ஆம் திகதிகளில்  மத்திய குழு கூடி பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது  தேர்தல் விஞ்ஞானத்தில் சமஸ்டியை வலியுறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பதா என்று முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

விக்கினேஸ்வரன் வடமாகாண சபையே நடாத்த முடியாதவர் என்று சுமந்திரன் நேற்றைய தினம் குறிப்பிட்டது தொடர்பாக ஊடக வியலாளர் கேள்வி கேட்ட போது எமது கட்சியைச்சேர்ந்தவரின் கருத்திற்கு வியாக்கினம் வழங்குது சரியான விடயம் அல்ல விக்கினேஸ்வரன் தான் வழங்க வேண்டும். 

இப்போதைய கால சூழல் அனைவரையும் ஒன்றிணைத்து செல்ல வேண்டும் ஒற்றுமையை குழப்பி  அதனை விட்டு பேசிக்கொண்டு இருந்தால் அடிப்படை  அரசியல் கொண்டு செல்வதில் பிரச்சினை உள்ளது. 

மகிந்த ராஜபக்ச பிள்ளையானை நம்பி பொலிஸ் அதிகாரம் கொடுக்கலாமா என்று கேட்டிருந்தார். அதற்காகவே முன்னாள் நீதியரசரை களம் இறக்கி  பொலிஸ் அதிகாரம்  நிதி அதிகாரம்  வழங்குமாறு கோரியிருந்தோம் எல்லாருடைய விருப்பத்திலே தெரிவு  இடம்பெற்றது.

https://www.virakesari.lk/article/189691

சூரிய மின் உற்பத்தியை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!

1 month 4 weeks ago
29 JUL, 2024 | 12:27 PM
image

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் சூரிய மின் உற்பத்தியை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று  திங்கட்கிழமை (29) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.     

நாவற்காடு கிராமத்தில் கடந்த 2022 ஒக்டோபர் மாதம் திறக்கப்பட்டு இயங்கி வரும் சூரிய சக்தி மின் உற்பத்தி (சோலார் பவர்) நிலையம் மேலும் பல மடங்கு விஸ்தரிக்கப்படவிருப்பதாக கூறி சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அண்டிய கிராம மக்கள்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு  போராட்டத்தை முன்னெடுத்தனர். 

இந்த சூரிய மின் உற்பத்தியை விஸ்தரித்தால் தமது விவசாய நிலங்களுக்கும், குடியிருப்புக்களுக்கும் கிராம மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து இதன்போது தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

இந்த விஸ்தரிப்பு திட்டத்தினை நிறுத்தக் கோரி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கையளித்தனர்.   

IMG-20240729-WA0048__1_.jpg

IMG-20240729-WA0050__1_.jpg

IMG-20240729-WA0053__1_.jpg

https://www.virakesari.lk/article/189679

இ.போ.சபையில் தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டுவந்த ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

1 month 4 weeks ago

Published By: VISHNU   29 JUL, 2024 | 01:40 AM

image

வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகளில் (டிப்போக்களில்) கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (28) முதற் கட்டமாக 29 பேருக்கான நியமனக் கடிதங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வைத்தியசலையின் முன்னேற்ற செயற்பாடுகள் குறித்தும் ஆராய்வுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/189643

தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அவதானம்!

1 month 4 weeks ago
67,000+ Phone Shop Pictures

முறையான உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் மூலம் குறித்த அபராதத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் காலங்களில் உரிமம் பெறாத வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் விதிக்கப்படும் எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/306962

யார் பொதுவேட்பாளர்; பொதுக் கட்டமைப்பின் சில முக்கிய தீர்மானங்கள்!

1 month 4 weeks ago

Published By: VISHNU   28 JUL, 2024 | 11:43 PM

image

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள பொதுக் கட்டமைப்பு சில முக்கிய தீர்மானங்களை ஞாயிற்றுக்கிழமை (28) எடுத்துள்ளது.

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டம் யாழ் நகரிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற போதே பொதுக் கட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து  முக்கிய சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இச் சந்திப்பு தொடர்பாக சிவில் சமூகப் பிரதிநிதியும் பொதுக் கட்டமைப்பின் உறுப்பினருமான அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். இதன் போது அவர் தெரிவித்ததாவது..

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் முதலாவது கூட்டம் இன்று நடைபெற்றது.

இதன் போது பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்தான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சில தீர்மானங்களை எடுத்திருக்கிறோம்.

அதாவது இந்த பொதுக் கட்டமைப்பிற்கு கீழ் வரக் கூடிய உப கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வேட்பாளர் யார் என்பதை தெரிவதற்கும், தேர்தல் அறிக்கையை தீர்மானிப்பதற்கும், கட்சி சின்னத்தை தீர்மானிப்பதற்குமான உப கட்டமைப்புக்கள் நிதி மற்றும் பரப்புரை நடவடிக்கைகளுக்கான  உபகட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் உரிய கட்டமைப்புக்களால் உரிய நேரத்தில் அந்தந்த விடயங்கள் தொடர்பில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/189641

அமலநாயகிக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு!

1 month 4 weeks ago
battiii-1.jpg?resize=590,375 அமலநாயகிக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு!

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகியை பயங்கரவாத தடுப்பு பிரிவில் இன்று முன்நிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின், அலுவலகத்திற்கு இன்று காலை 10.00மணிக்கு சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவிக்கு இவ்வாறு புலனாய்வுப் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது உரிமைக்காக போராடுவோரை அச்சுறுத்தும் வகையில் இவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1393930

இரணைமடுக்குள பகுதியில் மாவட்ட பயிர்செய்கை குழுவின் தீர்மானங்களை மீறி மேலதிக நெற் செய்கை

2 months ago

Published By: DIGITAL DESK 7   28 JUL, 2024 | 08:28 PM

image

கிளிநொச்சி இரணை மடுக்குளத்தின் கீழ் உள்ள புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்புக்கு  உட்பட்ட பகுதியில் சுமார் 750ஏக்கருக்கும்  மேற்பட்ட  நிலப் பரப்பில் மாவட்ட பயிர்செய்கை  குழுவின் தீர்மானங்களை மீறி மேலதிக நெற்  செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கமக்கார அமைப்பின் சிபார்சுகளின் படி சிறுபோகத்துக்கான அரச மானியங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி இரணை மடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோக நெற்செய்கைக்கு  தீர்மானிக்கப்பட்ட அளவுகளின் படி  புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்புக்கு  உட்பட்ட பிரதேசத்தில் உள்ள ஆயிரத்து 707  ஏக்கர் நீர்வரி காணிகளில்  530 ஏக்கர் காணி தவிர்ந்த  ஏனைய ஆயிரத்து 177 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை  மேற்கொள்வதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலப்பரப்புடன் சேர்த்து மேலும் 750 ஏக்கர் நிலப்பரப்பு மேலதிகமாக செய்கை பண்ணப்பட்டுள்ளது 

அதாவது மாவட்ட பயிர் செய்கை  குழுவின் தீர்மானங்களை மீறி குறிப்பதேசத்தில் கமக்கார அமைப்புகளின் முக்கிய பொறுப்பில்  உள்ளவர்களும் அவர்களோடு சேர்ந்து செயல்படுபவர்களும் குறித்த பயிர்செய்கைகளை  மேற்கொண்டுள்ளனர் 

இதனால் தனிப்பட்ட விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதே நேரம் குறித்த பிரதேசத்தில் மூன்று ஏக்கருக்கும் குறைவான அனுமதிக்கப் பட்ட  நிலப்பரப்பில்  வாழ்வாதார பயிர்செய்கை மேற்கொண்ட 22 பேரின் காணிகளில் மொத்தமாக 30 ஏக்கர்  நிலப்பரப்பை  மேலதிக செய்கையாக அடையாளப்படுத்தியுள்ளனர் 

ஆனாலும் சட்டவிரோத செய்கை மேற்கொள்ளப்பட்ட குறித்த  நிலப்பரப்புகளை மூடி மறைத்து  மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோதச் செய்கைகளுக்கு குறித்த கமக்கார அமைப்பினால் அரச மானியங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/189620

ஜனாதிபதி வேட்பாளர் - இறுதி முடிவை கூறிய மகிந்த!

2 months ago

ஜனாதிபதி வேட்பாளர் - இறுதி முடிவை கூறிய மகிந்த!

ஜனாதிபதி வேட்பாளர் - இறுதி முடிவை கூறிய மகிந்த!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானம் நாளை (29) எடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி - வேட்பாளரின் நிலை எப்படி உள்ளது?

பதில் - திங்கட்கிழமை முடிவு செய்வோம். திங்கட்கிழமை வரை காத்திருங்கள்.

கேள்வி -  தம்மிக்க பெரேராவை உங்களுடன் இருப்பதை பார்த்தோமே?

பதில் - ஒன்றாகவே அமர்ந்திருந்தோம். அவர் எமது  எம்.பி. அல்லவா!

கேள்வி - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி காலியில் அறிவித்துள்ளாரே?

பதில் - ஆம் நல்லது தானே.

கேள்வி - அவர் ஆதரிக்கப்படுவாரா?

இல்லை... எங்கள் கட்சியில் இருந்து தெரிவு செய்யும் வேட்பாளரையே நாங்கள் ஆதரிப்போம். அதை எங்கள் கட்சிதான் தீர்மானிக்க வேண்டும். நான் எங்கள் கட்சி சொல்வதேயே கேட்கிறேன். அவரை ஆதரிக்கச் சொன்னால், மகிழ்ச்சியுடன் ஆதரிப்போம். ஆனால் அவருக்கு எதிராக வேறு யாராவது நிறுத்துவோம் என்று கட்சி கூறினால் அதற்கு சம்மதிப்போம் என்றார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=190703

சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளுள் இலங்கை : ஃபோர்ப்ஸ் நாளிதழ் அறிக்கை !

2 months ago

சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளுள் இலங்கை : ஃபோர்ப்ஸ் நாளிதழ் அறிக்கை !
By kugen
 
24-6597efb766aa3.jpg

 

சுற்றுலா செல்வதற்கான சிறந்த முதல் மூன்று நாடுகளுள் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் நாளிதழின்படி, 2024ஆம் ஆண்டில் கோடைக் காலத்தில் சுற்றுலா செல்வதற்காக கிரீஸ் , மொரிஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உலகின் சிறந்த சுற்றுலா நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன.

இலங்கை மேடு பள்ளங்களுடன் மற்றும் கண்கவர் கடற்கரைகளுடன் காணப்படக்கூடிய தீவாக உள்ளதுடன் ஒப்பீட்டளவில் பாலி நாட்டைப் போன்ற ஈர்ப்பைக் கொண்டது.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகளுக்காக அதிசொகுசு ரீதியிலான வசதிகள் இலங்கையினுள் காணப்படுகிறது.

இயற்கை அழகை கண்டுகளிக்கும் விதத்தில் 22 தேசிய பூங்காக்கள் உள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் நாளிதழ் கூறுகிறது.

அதனுடன், கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைய நிலமைகளால் மீள எழுந்திருக்கும் இலங்கை இவ்வாண்டில் சுற்றலாவுக்கான சிறந்த நாடுகளுள் முன்னணியில் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

https://www.battinews.com/2024/07/blog-post_394.html

ஒற்றுமையின்மையால் எமது மக்களையும் மண்ணையும் நாம் இழந்துவிடக்கூடாது - செல்வம் அடைக்கலநாதன்

2 months ago

ஒற்றுமையின்மையால் எமது மக்களையும் மண்ணையும் நாம் இழந்துவிடக்கூடாது selvamadaikalanathan.jpg


தமிழர்கள் பூர்வீகமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்தார்கள் என்கிற வரலாற்றை சிதைக்கும் வகையில் இன்றைக்கு தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருகிறது. எமது ஒற்றுமை இன்மை காரணமாக எமது மக்களையும் மண்ணையும் நாங்கள் இழந்துவிடக்கூடாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ கட்சியின் தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, முன்னாள் போராளி ஜெகன் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் 41வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (27) மாலை 6 மணியளவில் மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஓர் இன அழிப்பின் ஆரம்ப இடம் வெலிக்கடை சிறைச்சாலை. ஓர் இனத்தின் மீது வன்முறைகள் ஆரம்பிக்கப்படுவது தான் இலங்கை வரலாற்றில் கூறப்படுகின்ற மிக மோசமான வன்முறையாக உள்ளது.

இந்த நாட்டில் பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளது. தன்னைக் கொலை செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் இணைவார்கள் என தலைவர் கூறிய தீர்க்கதரிசனம் 1983ஆம் ஆண்டு இளைஞர் யுவதிகள் தமது உயிரை எமது தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர்.

ஆயுதப் போராட்டமாக மாறி தற்போது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு, மீண்டும் அகிம்சை ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு எமது இனத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் கால கட்டத்தில் இருக்கிறோம்.

எமது மக்களின் நிலங்கள், கடல் வளம், மண் அபகரிக்கப்படுகின்றன. நாங்கள் ஒரு காலத்திலே தமிழர்கள் பூர்வீகமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்தார்கள் என்கிற வரலாற்றை சிதைக்கும் வகையில் இன்றைக்கு தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருகிறது.

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவர்களையும் போராளிகளையும் இழந்த இயக்கமாக தொடர்ச்சியாக செயல்பட்டு வந்தாலும் கூட தலைவர்களின் சிந்தனையின் அடிப்படையில் எல்லா போராளிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதன் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியுள்ள போதும் ஏனைய ஐந்து கட்சிகளுடன் போராட்ட கட்சியான ஜனநாயக போராளிகள் கட்சியையும் இணைத்து செயல்பட்டு வருகிறோம்.

இன்று நாங்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்றால் எமது மக்களை காப்பாற்ற முடியாது.

தென்னிலங்கையில் உள்ளவர்கள் வடக்கு, கிழக்கில் ஆட்சி நடத்தக்கூடிய அல்லது அவர்களின் செயல்பாட்டை இங்கே திறம்பட செய்யக்கூடிய வாய்ப்பை எமது ஒற்று இன்மையால் காவு கொடுக்கிற நிலைப்பாட்டில் நாங்கள் இருந்துவிடுவோம்.

எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களின் விடுதலைக்காக செயல்பட்டு மக்கள் விரும்புகின்ற ஒற்றுமையை பேணி எமது மக்களுக்காக குரல் கொடுக்கும் எமது மண்ணை மீட்டெடுக்கும் தார்மிக செயற்பாட்டை  முன்னெடுக்க இன்றைய நாளில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

எமது ஒற்றுமையின்மை காரணமாக எமது மக்களையும் மண்ணையும் நாங்கள் இழந்துவிடக்கூடாது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

DSC_0085__1_.JPG

DSC_0019.JPG

DSC_0031.JPG

DSC_0047.JPG
 

 

https://akkinikkunchu.com/?p=285715

யாழ். சிறையில் 74 தமிழ்நாட்டு மீனவர்கள்!

2 months ago
யாழ். சிறையில் 74 தமிழக மீனவர்கள்!
28 JUL, 2024 | 11:17 AM
image

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 74 தமிழக கடற்றொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  

பல்வேறு காலகட்டங்களில் கைதாகி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இவர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  

அவர்களில் 64 பேரின் வழக்குகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (30) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.   

கடந்த ஜூலை முதலாம் திகதி 25 கடற்தொழிலாளர்களும், ஜூலை 16ஆம் திகதி 04 கடற்றொழிலாளர்களும்,  ஜூலை 11ஆம் திகதி 13 கடற்தொழிலாளர்களும், ஜூலை 22ஆம் திகதி 22 கடற்தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.  

இவ்வாறு கைதாகியுள்ள 64 கடற்றொழிலாளர்களின் வழக்கு விசாரணைகளே செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. 

https://www.virakesari.lk/article/189576

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் விடுத்துள்ள அழைப்பு!

2 months ago
27 JUL, 2024 | 08:35 PM
image

(நா.தனுஜா)

தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேசுவதற்குத் தாமும் தயாராக இருப்பதாக தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 

நிறைவேற்றதிகாரமுடைய 9 ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் எனவும், ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதித்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் நேற்று முன்தினம் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதன்படி இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் வலுப்பெற்று, அதனை முன்னிறுத்தி சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை ஒன்றும் அண்மையில் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது.

அதன்பிரகாரம் பொதுவேட்பாளராக யாரைக் களமிறக்குவது என ஆராயப்பட்டாலும், இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட பிரதான வேட்பாளர்களுடன் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், அதற்கமைய அவர்களை ஆதரிப்பதற்கும் தயாராக இருக்கின்றீர்களா? என வினவியபோதே தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு பதிலளித்தனர்.

அதற்கமைய ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்குவதற்கு முன்வருவார்களாயின், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். அதன் முதற்கட்டமாக மாகாணசபை முறைமை உள்ளடங்கலாக அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இருப்பினும் கடந்தகாலங்களில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி, அதில் எவ்வித பயனும் கிட்டாததன் காரணமாகவே தற்போது தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய ரெலோவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், எனவே அதற்குரிய நடவடிக்கைகளைத் தாம் முன்னெடுத்துவருவதாகக் குறிப்பிட்டார்.

'தமிழ்மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்துப் பேசுவதற்கு வேட்பாளர்கள் முன்வருவார்கள் எனில், நாம் அதற்கு இடமளிப்போம். இருப்பினும் இப்பேச்சுவார்த்தைகள் வெறுமனே வாய்வழி வழங்கப்படும் உத்தரவாதங்களாக மாத்திரம் இருக்கக்கூடாது. மாறாக முன்மொழியும் தீர்வு எழுத்துமூல உடன்படிக்கையாக அமையவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை இதுகுறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், 'ஜனாதிபதி வேட்பாளர்கள் எம்முடன் பேசுவதாக இருந்தால், எப்படியும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தே பேசுவார்கள். இருப்பினும் 13 ஆவது திருத்தத்தினால் எவ்வித பயனுமில்லை' எனக் கூறினார். ஆனால் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால்சென்று, சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்குவது குறித்து அவர்கள் பேசத்தயாராக இருந்தால் தாம் பேச்சுவார்த்தைக்கு செல்வோம் எனவும், அன்றேல் தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்குவதை முன்னிறுத்தி நடவடிக்கை எடுப்போம் எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் விளக்கமளித்தார்.

மேலும் பொதுவேட்பாளர் தொடர்பான இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திடாத போதிலும், பொதுவேட்பாளரைக் களமிறக்குவதற்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், இணைந்த வட, கிழக்கில் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்க முன்வரும் வேட்பாளர்களுடன் பேசத்தயார் என்றார். 

https://www.virakesari.lk/article/189546

டீசலில் ஓடும் வாகனங்கள் மண்ணெண்ணையில் ஓடுவது குறித்து விசாரணை

2 months ago
மண்ணெண்ணை மற்றும் டீசல்களில் ஓடும் வாகனங்கள் குறித்து விசாரணை

பொது போக்குவரத்தில் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் லொறிகளில் 30 சதவீதம் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணை பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மண்ணெண்ணை மற்றும் டீசல்களில் ஓடும் வாகனங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புகைப்பரிசோதனையின் போது மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை அடையாளம் காண முடியாது எனவும், வாசனையை வைத்தே வாகனங்களை அடையாளம் காண முடியும் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணை மற்றும் டீசல்களில் ஓடும் வாகனங்கள் குறித்து விசாரணை | Kerosene Instead Of Diesel

பயணிகள் போக்குவரத்து 

குறிப்பாக பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் உரிமையாளர்கள் மண்ணெண்ணெய் மற்றும் டீசலுக்கு இரண்டு எண்ணெய் தாங்கிகளை தயார் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதுள்ள சட்ட அபராதங்களும் சிறியதாக இருப்பதால், இது கட்டுப்படுத்த முடியாத சுற்றுச்சூழல் பிரச்சினையாக மாறியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/kerosene-instead-of-diesel-1722092426

மகிந்தவை சந்தித்தனர் சுசில், சாகல - ரணிலுக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள்

2 months ago

Published By: RAJEEBAN   27 JUL, 2024 | 05:52 PM

image
 

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி அவரது இல்லத்தில் சந்தித்த இருவரும் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189545

 

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் ஆக்கிரமிப்பு : எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொது அமைப்புக்கள் முறைப்பாடு

2 months ago
27 JUL, 2024 | 06:00 PM
image

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவு தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை பிரதேச கமக்கார அமைப்பு போன்ற பொது அமைப்புக்கள், நீர்ப்பாசன பொறியியலாளர் போன்ற அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளன. இருப்பினும், இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என அமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கனகாம்பிகை குளத்தின் ஏ9 வீதியோடு உள்ள பகுதி மண் நிரப்பப்பட்டு அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ளது. 10 கொள்ளளவு கொண்ட இக்குளத்தினை நம்பி சுமார் 300 வரையான சிறுதானிய பயிர்ச்செய்கையாளர்கள் வாழ்கின்றனர்.

எனவே குளம் ஆக்கிரமிக்கப்படும்  நிலைமையானது எதிர்காலத்தில் இக்குளத்தினை நம்பியுள்ள விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிடும். 

ஏற்கனவே இக்குளத்துக்கு சொந்தமான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 20 ஏக்கர் வரையான நிலம் பொது மக்களால் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டுள்ளது. 

DSC_0318.JPG

இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளின் கவனத்துக்குச் கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக குளத்தின் பல பகுதிகள் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தற்போது இடம்பெற்றுள்ள குளத்தின் முக்கிய பகுதி ஆக்கிரமிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் உடனடியாக அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

DSC_0326.JPG

இந்நிலையில், கிளிநொச்சி கிழக்கு பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் எந்திரி கை.பிரகாஸ் கரைச்சி பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு இக்குளத்தின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துமாறு கடிதங்களை எழுதியுள்ளார். 

எனவே, இவ்விடயம் தொடர்பாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரை தொடர்புகொண்டு வினவிய போது, இவ்விடயம் தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் ஆக்கிரமிப்பு பற்றி உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளதாகவும் தெரிவித்தார். 

WhatsApp_Image_2024-07-27_at_11.08.02_57

WhatsApp_Image_2024-07-27_at_11.08.02_44

WhatsApp_Image_2024-07-27_at_11.08.01_f4

https://www.virakesari.lk/article/189543

உலக வரலாற்றில் முதன் முதலில் ஜனாதிபதி தேர்தலில் AI தொழில்நுட்பம் – AKD இணையதளம்

2 months ago
WhatsApp-Image-2024-07-27-at-4.45.58-PM. உலக வரலாற்றில் முதன் முதலில் ஜனாதிபதி தேர்தலில் AI தொழில்நுட்பம் – AKD இணையதளம்

AKD இணையதளம் (akd.lk), தேசிய மக்கள் சக்தியின்  கொள்கை நிலையம் மற்றும் தேர்தல் அவதானிப்பு நிலையம் ஆகியன மெய்நிகர் உண்மை அனுபவத்தின் (virtual reality experience) ஊடாக உத்தியோகபூர்வமாக இன்று (27) பிற்பகல் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

 

உலகில் ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளரொருவர் தனது கொள்கையை மக்கள் மயப்படுத்துவதற்காக AI ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன், ஆசியாவில் அரசியல் தலைவரொருவர் தனது கொள்கையை முன்வைப்பதற்காக AI தொழினுட்பத்தை பயன்படுத்திய முதல் சந்தர்ப்பமும் இதுவாகும். நாட்டின் பிரஜைகளுக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் AKD இணையதளத்தில் தமக்கிருக்கும் சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்வதற்கான AI Chat Bot உம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த தளத்தின் விசேட அம்சமாகும்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை நிலையமானது கொள்கை உருவாக்கத்திற்காக பிரஜைகளுக்கு பன்முக அணுகுமுறையை பெற்றுக்கொடுப்பதோடு, தேர்தல் அவதானிப்பு நிலையம் தேர்தல் செயன்முறைக்குள் இடம்பெறக்கூடிய அத்துமீறல்கள் தொடர்பாக முறையிடுவதற்கும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கும் பிரஜைகளுக்கு திறந்த களத்தை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1393821

நாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு

2 months ago
IMG-20240726-WA0144-e1722061360378.jpg?r நாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு.
யாழில் நாளை கறுப்பு ஜுலை நினைவேந்தலுக்கும், பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைமையிலான பொது அபை்புக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அருகில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை மூன்று மணியளவில் நடைபெறவுள்ளது.
 
உணர்வார்கள் அனைவரையும் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
 
IMG-20240726-WA0144.jpg?resize=283,600
 
Checked
Sat, 09/28/2024 - 17:19
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr