ஊர்ப்புதினம்

கனிய மணல் அகழ்வாய்விற்கு ரவிகரன் உள்ளிட்ட மக்கள் எதிர்ப்பு : அவ்விடத்திலிருந்து வெளியேறிய திணைக்களங்கள்

1 month 3 weeks ago

Published By: VISHNU   01 AUG, 2024 | 01:37 AM

image

கனியவள மணல் அகழ்விற்கான முன்னாயத்த ஆய்வு பணி மேற்கொள்வதற்காக கனிய மணல் திணைக்களத்தினருடன் இணைந்த சில திணைக்களங்களின் நடவடிக்கைக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஆய்வு பணி கைவிடப்பட்டு அவ்விடத்திலிருந்து சென்றிருந்தனர்.

IMG-20240731-WA0193.jpg

மீண்டும் பிறிதொரு இடத்தில் குறித்த திணைக்களம் உள்ளிட்ட குழுவினர் கனிய மணல் ஆய்வில் ஈடுபட சென்றபோது அங்கும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மக்கள் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, திணைக்களத்தினருடன் கடுமையான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றதையடுத்தும் குறித்த ஆய்வு நடவடிக்கையும் கைவிடப்பட்டிருந்ததுடன் தாம் அவ்விடத்திலிருந்து செல்வதாக கூறி குறித்த ஆய்வு திணைக்களத்தினர் சென்றுள்ளனர்.

IMG-20240731-WA0195.jpg

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் கனிய வள மணலை அகழ்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (31.07.2024) முல்லைத்தீவு மாவட்ட. செயலகத்தில் இடம்பெற்றதனை தொடர்ந்து இரகசியமான முறையில் முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் இருந்து தீர்த்த கரைவரை ஆய்வு பணியினை மேற்கொள்ள சென்றிருந்தார்கள்.

IMG-20240731-WA0194.jpg

குறித்த ஆய்வு பரிசோதனையை மேற்கொள்வதற்காக கடலோர பாதுகாப்பு திணைக்களம் , கனிய மணல் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் , சுற்றுச்சூழல் திணைக்களம், நீர் வள முகாமைத்துவத்தினர், புவிசரிதவியல் திணைக்களம் இவர்களுடன் இணைந்து கரைதுரைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் மற்றும் அப்பகுதி கிராம சேவையாளர், ஆகியோர் இணைந்து ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக குறித்த இடத்திற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடதக்கது.

IMG-20240731-WA0185.jpg

IMG-20240731-WA0189.jpg

IMG-20240731-WA0181.jpg

IMG-20240731-WA0174.jpg

IMG-20240731-WA0177.jpg

 

IMG-20240731-WA0180.jpg

IMG-20240731-WA0170.jpg

IMG-20240731-WA0171.jpg

https://www.virakesari.lk/article/189952

தமிழ் வேட்பாளர் – அடுத்த வார இறுதியில் அறிவிப்பு

1 month 3 weeks ago
c.v.-wigneshwaran.jpg?resize=274,184 தமிழ் வேட்பாளர் – அடுத்த வார இறுதியில் அறிவிப்பு.

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில், அடுத்த வாரம் அறிவிப்புக்கள் வெளியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

மேலும், தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் அநேகமான தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. வேட்பாளராக நிறுத்த சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களில் யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பில் ,அதுக்கென நியமிக்கப்பட்ட குழு ஆராய்ந்து வருகிறது.

அடுத்த வாரமளவில் ஒருவரை தெரிவு செய்து அவரின் பெயரை அறிவிப்போம் என தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் இறுதி செய்யப்படும் என இவ்விடயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1394355

திருகோணமலையில் டொல்பின் சிலை திறப்பு

1 month 3 weeks ago
01 AUG, 2024 | 12:03 PM
image
 

திருகோணமலை நகரத்தை அழகுபடுத்தும் விதமாக திருகோணமலை நகராட்சி மன்றத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் புதிதாக டொல்பின் சிலை அமைக்கப்பட்டு நேற்று  (31) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.

நகராட்சி மன்ற செயலாளர் தே.ஜெயவிஷ்ணுவின் வேண்டுகோளுக்கிணங்க  உத்தியோகபூர்வமாக இந்த சிலை திறக்கப்பட்டது.

இதன்போது நகராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர். 

20240731_213114.jpg

20240731_213130.jpg

20240731_212908.jpg

20240731_213146.jpg

20240731_213200.jpg

https://www.virakesari.lk/article/189976

கூலிப்படை மூலம் தனது கணவனையே போட்டுத்தள்ளிய மனைவி – இலங்கையில் பதிவான சோக சம்பவம்

1 month 3 weeks ago

கூலிப்படை மூலம் தனது கணவனையே போட்டுத்தள்ளிய மனைவி – இலங்கையில் பதிவான சோக சம்பவம்  யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலை ஏவி கணவனை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியையும், மனைவிக்கு துணைபுரிந்த இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடுப்பிட்டி இமையான் பகுதியில் கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்த குடும்பஸ்தரே இதில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 03ஆம் திகதி அதிகாலை வெளிமாவட்டத்தில் இருந்து வாகனம் ஒன்றில் கோழிகள் கொண்டு வரப்பட்டு , அவருக்கு விநியோகம் செய்த பின்னர் வாகனம் திரும்பி சென்றுள்ளது.

அதன் பின்னர் வீட்டின் வெளியே சத்தம் கேட்டு குடும்பஸ்தர் வெளியே வந்து பார்த்த போது, வன்முறை கும்பல் ஒன்று அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

சத்தம் கேட்டு அவரது மனைவி வெளியே வந்த போது, வாள் முனையில் அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட்டு கும்பல் தப்பி சென்றுள்ளது.

வாள் வெட்டில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சில நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.

அந்நிலையில், குடும்பஸ்தரின் கொலையை , நகைக்கான கொலையாக மாற்றவே நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்த நிலையில், கொலையானவரின் மனைவியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மற்றுமொரு இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

https://madawalaenews.com/1577.html

வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்: உடற்கூற்றுப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

1 month 4 weeks ago

வவுனிக்குளத்திலிருந்து (Vavuni) நேற்று சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்ட சட்டவைத்திய அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞன் நேற்று (30.07.2024) வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (29) இரவு சுமார் இருபது இலட்சம் ரூபா பணத்துடன் யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளம் சென்ற குறித்த இளைஞனை காணவில்லை என உறவுகள் தேடிய நிலையில் நேற்று (30) அதிகாலை வவுனிக்குளம் குளத்தில் உடலமாக மீட்கப்பட்டார்.

உடற்கூற்று பரிசோதனை

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்து உடலத்தை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ் ஏச் மக்ரூஸ் உடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார்.

வவுனியாக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்: உடற்கூற்றுப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Vavunikulam Murder Youth Strangled Police Investig

இந்நிலையில் இன்று (31) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெற்றது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் முடிவில் குறித்த இளைஞன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நட்டாங்கண்டல் காவல்துறையினர் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

https://ibctamil.com/article/vavunikulam-murder-youth-strangled-police-investig-1722427603

புத்தளத்தில் இணைய வழி மோசடியில் ஈடுபட்ட 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது

1 month 4 weeks ago
31 JUL, 2024 | 05:27 PM
image
 

புத்தளம் பிரதேசத்தில் இணைய வழி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 44 ஆண்களும் 09 பெண்களும் அடங்குவர்.

சந்தேக நபர்கள் புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து 98 கையடக்கத் தொலைபேசிகள், 44 கணினிகள் மற்றும் பல சிம் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/189920

வடக்கில் பல இடங்களில் விகாரைகள் முளைக்க சஜித்தே காரணம்

1 month 4 weeks ago

தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலை வரும் என்பதனை நாங்கள் பார்க்கவில்லை என முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.  எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதி அந்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக 15 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றது.

அதில் இதுவரையில் பிரதான வேட்பாளர்களாக இப்போது இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார். அதை விடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா போட்டியிடுவதாக கூறப்பட்டிருக்கின்றது அதனைத் தொடர்ந்து ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கூறப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் இப்போது மொட்டு கட்சியை சேர்ந்தவர்கள் முடிவெடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள் நான் நினைக்கின்றேன். இன்று அல்லது நாளை அவர்கள் ஒரு முடிவு எடுத்து வெளியில் அறிவிக்க வேண்டியது இருக்கின்றது.

அதில் என்னை பொறுத்த அளவில் ரணில் விக்ரமசிங்கவை த்தான் அவர்கள் ஆதரிக்க வேண்டிய ஒரு நிலை வரும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கின்றது.

இப்போது இருக்கின்ற ஜனாதிபதி கூட மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் செல்ல பிள்ளையாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றார் அதில் எது வித மாற்றுக்கருத்தும் இல்லை கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை நாட்டில் இருந்து போராட்டத்தின் மூலமாக வெளியேற்றப்பட்டாலும் கூட இப்போது இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களால் அவர் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக இருக்கின்றார்.

அவர் மொட்டு கட்சியிலே இருக்கின்றவர்கள் கூறுவதற்கு தலையாட்டுகின்ற ஜனாதிபதியாக தான் இதுவரையில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது அதில் அவர் பல்வேறுபட்ட கருத்துக்களை கூறியிருக்கின்றார் யாழ்ப்பாணத்திற்கு பலமுறை சென்றிருக்கின்றார் மட்டக்களப்பிற்கும் வருகை தந்திருக்கின்றார் வடகிழக்கு மக்களுக்கான பிரச்சினையை தீர்ப்பதாக 13 வது அரசியல் யாப்பை அதிகார பரவலை செய்வதாக கூறியிருந்தார் ஆனால் எமது சம்பந்தன் ஐயாவின் இறுதி கிரியையில் வந்து அவர் பேசுகின்ற போது பொலிஸ்  அதிகாரத்தை விட்டு ஏனைய அதிகாரங்களை தான் தருவதற்கு தயாராக இருப்பதாக கூறி இருக்கின்றார்.

மாறுபட்ட கருத்துக்கள் முழுமையான அதிகாரம் தரக்கூடிய எந்த ஒரு வேட்பாளர்களாகவும் தமிழ் மக்களுக்கு இந்த வேட்பாளர்களை நாங்கள் பார்க்க முடியாத நிலை இருக்கின்றது தமிழ் மக்களை ஒரு வாக்கு பெறுகின்ற தரப்பாக பாவித்து தாங்கள் நினைப்பதை சாதிக்கின்ற ஜனாதிபதிகளாகத்தான் இந்தமுறை வருகின்றவர்கள் இருக்கின்றார்கள்.

இதற்கு முன்னர் இருந்த எட்டு ஜனாதிபதிகளை பார்க்கின்றோம் இவர்கள் அனைவரும் எங்களை ஏமாற்றியவர்களாக இருந்திருக்கின்றார்கள் குறிப்பாக 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி செய்து கொல்லப்பட்ட

 இலங்கை இந்திய ஒப்பந்தம் இன்று 37வது ஆண்டு விழாவை காண இருக்கின்றது.

ஆகவே இந்த 37 வருடங்களாக இலங்கை இந்தியா ஒப்பந்தத்தில் கூறப்பட்ட இலங்கை அரசாங்கத்தினால் அதாவது 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 13 வது அரசியல் யாப்பில் கூறப்பட்ட விடயங்களை இதுவரையில் அமல்படுத்தவில்லை.

தொடர்ச்சியாக மக்கள் ஏமாற்றப்பட்டு இந்த ஜனாதிபதி தேர்தலில் அந்த 37 வருடங்களுக்கு முன் போடப்பட்டதை தூசிக் தட்டிக் கொண்டு மக்கள் மத்தியில் சில விடயங்களை கூறுகின்றார்கள்.

நாங்கள் கேட்பது அதுவல்ல 13 வது அரசியல் யாப்பு விடயத்தை வைத்து நீங்கள் எங்களிடம் வாக்கு கேட்பதை விடுத்து இணைந்த வட கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு தருவோம் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் பகிரங்கமாக கூறுவார்களாக இருந்தால் அது பரிசீளிக்க தயாராக இருக்கின்றோம்.

இவர்கள் ஏமாற்றப்பட்டதன் விளைவாகத்தான் தமிழ் பொது வேட்பாளர்களை நிறுத்துவதற்காக ஏறக்குறைய 8 தமிழ் தேசிய கட்சிகள் அதைவிட 92 அமைப்புகளும் பிரதிநிதிகள் இணைந்து ஒரு முதன் முதலாக

 இலங்கையில் தமிழ் பொது பொறுப்பாளரை ஆதரிக்க வேண்டும் என்கின்ற பிரச்சாரமும் முன்னெடுத்து கொண்டு செல்லப்படுகின்றது.

இந்த விடயங்களை பார்க்கின்ற போது தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் நான் நினைக்கவில்லை பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலை வரும் என்பதனை நாங்கள் பார்க்கவில்லை ஆனால் தேர்தல் விஞ்ஞாபனம் எந்த வகையில் வரும் என்பதனை பொறுத்திருந்து பார்க்க இருக்கின்றோம்.

இவருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்களா என்கின்ற கேள்விக்குறி எனக்கு இருக்கின்றது ஏனென்றால் அவருக்கு ஆதரவளிக்கின்றவர்களை நாங்கள் பார்க்கின்ற போது அரசாங்கத்துடன் ஏற்கனவே இருந்தவர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராக நின்றவர்கள் தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக நின்றவர்கள் தான் அது வடக்காக இருக்கலாம் அல்லது கிழக்காக இருக்கலாம் அவரை ஆதரிப்பதாக இப்போது பகிரங்கமாக கூறியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த ஊழல் தொடர்பாக பல விடயங்களை செய்வேன். ஊழல் தொடர்பாக ஒழிப்பேன் என்கின்ற விடயங்களை கூறுகின்றது எல்லாம் உங்களுக்கு தெரியும் ரணில் விக்கிரமசிங்கை பொறுத்த வரையில் எந்த விதத்தில் அரசியலில் நின்று எவ்வாறு தமிழ் மக்களை பிரித்தாடுகின்ற தன்மையை விடுதலைப் புலிகளை 2004 ஆம் ஆண்டு தான் பிரித்ததாக அவரை ஒப்புக்கொண்டு பாராளுமன்றத்தில் கூறியிருக்கின்றார்.

அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தற்போது கூறுகின்ற கருணா அவர்கள் மீண்டும் அதனை கூறுகின்றார் என்னை பிரித்தது மஹிந்த ராஜபக்ஷ அல்ல தற்போது இருக்கின்ற ஜனாதிபதி அவர்தான் பிரித்தார் என கூறுகின்றார்.

ஆகவே இவ்வாறு தமிழ் தேசியத்தை விடுதலை புலிகள் போராட்டத்தை பிரித்தவர் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் தேசிய அரசியலில் இருந்து அதனை பிரிப்பதற்கான முயற்சியை செய்தவர் அதில் வெற்றி கண்டவர் 16 உறுப்பினர்களை 10 உறுப்பினர்களாக குறைத்த பெருமையும் ரணில் விக்ரமசிங்க அவர்களையே சாரும்.

இவ்வாறான விடயங்களை வைத்துக்கொண்டு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கினால் தான் அவர் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்றார் அவர் எதை கூறினாலும் முதலாவது அவர் இருக்கின்ற அந்த கட்சியிலே அல்லது அல்லது அவர்கள் ஏற்கனவே செய்த விடயங்களை எதையும் செய்யவுமில்லை செய்யவும் மாட்டார்.

இப்போது போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளராக இருக்கின்ற மூன்று வேட்பாளர்கள் ரணில் விக்ரமசிங்கமாக இருக்கலாம் சஜித் பிரேமதாசாவாக இருக்கலாம் அனுரகுமார திசாநாயக்கவாக இருக்கலாம் எவருமே ஜனாதிபதியாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்கள்.

இதில் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் அதிர்ஷ்டத்தினால் ஜனாதிபதியாக அவர் இருக்கின்றார்.

அனுமார் திசநாயக்க நான் 2004 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இவருடைய கட்சி தான் 2006 ஆம் ஆண்டு இணைந்த வடகிழக்கை பிரித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் அவர்கள் இந்த வழக்கு தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால் இன்று இணைந்த வட கிழக்குக்கு நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றிருக்கும் அவ்வாறானவர்கள் இணைந்த வடகிழக்கை பிரித்து விட்டு இப்போது மக்கள் மத்தியில் நாங்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தரப் போகின்றோம் அல்லது தமிழ் மக்களுக்கான முன்னேற்றத்தை அரசியல் விடயத்தை செய்யப்போகின்றோம் என்று கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத கதையும் மக்களை ஏமாற்றுகின்ற விடயமாக தான் இருக்கின்றது.

அதேபோன்று சஜித் பிரேமதாசாவை எடுத்து நோக்குவோமாக இருந்தால் அவரைக் கூட நான் உத்தமனாக பார்க்கவில்லை ஏன் என்றால் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை இருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆயிரம் பன்சாலைகளை கட்டுவதற்கான ஒரு பிரேரணையை கொண்டு வந்து பல இடங்களில் வடக்கு கிழக்கில் பன்சாலைகளை கட்டுவதற்கு துணை போனவர் அவர்தான் அவரையும் ஒரு இனவாதியாக தான் நாங்கள் பார்க்கின்றோம்.

தேர்தல் வருகின்ற போது தமிழ் மக்களை கவர்கின்ற விதத்தில் பல வாக்குறுதிகளை தருவார்கள் அதை நம்பி இங்கிருக்கின்ற முகவர்கள் அவர்களுக்கு பின்னால் செல்வார்கள் அந்த முகவர்கள் தங்களுக்குரிய சலுகைகளை பெற்றுக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றுவார்கள் அது இம்முறை தேர்தலில் இடம் பெறும்.

ஆகவே இந்த விடயங்களில் தமிழ் மக்கள் அவதானமாக பார்க்க வேண்டி இருக்கின்றது நாங்கள் 75 வருடங்களாக இப்போது இனப்பிரச்சனைக்காக அகிம்சை ரீதியாக ஆயுத ரீதியாக போராடி இப்போது ராஜதந்திர ரீதியாக போராட்டம் சென்று கொண்டிருக்கின்றது.

இந்த விதத்தில் தான் 8 ஜனாதிபதிகளிடமும் நாங்கள் படித்த படிப்பினை கற்றுக் கொண்ட பாடம் ஏமாற்றங்கள் தான் இப்போது இந்த 15 வருட முள்ளிவாய்க்கால் மௌனித்ததன் பிற்பாடு 3 ஜனாதிபதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சொல் கேட்டு தமிழ் மக்கள் ஆதரித்தார்கள் அவர்களும் ஏமாற்றியதன் விளைவாகத்தான் இம்முறை ஒரு புது விதமான நடவடிக்கை அதாவது பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கின்ற விடயம் முன்னுரிமை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆகவே எக்காரணம் கொண்டும் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வர மாட்டார் அந்த ஜனாதிபதியாக வருகின்றவர் அந்த ஜனாதிபதிக்காக போடுகின்ற வாக்கு என்பதை நாங்கள் தான் நீங்கள் நீங்கள் தான் என்கின்ற விடயம் காட்டப்பட இருக்கின்றது இதில் நாங்கள் மிகவும் கரிசினையாக நாங்கள் பரிசீலித்துக் கொள்ள வேண்டும்.

தமிழரசு கட்சி இது வரை எந்த முடிவு எடுக்கவில்லை யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக உத்தியோகபூர்வமாக ஒரு முடிவெடுப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

என்னை பொருத்தமட்டில் ஆதரிப்பதாக இருந்தால் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றேன் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் கட்சி ஒரு முடிவு எடுத்தால் கட்சி கூறுகின்ற விடயத்திற்கு நான் செவி சாய்ப்பது என்பது என்னுடைய முடிவு என அவர்  தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/307114

இறப்பு சான்றிதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்?; முல்லையில் முழங்கிய உறவுகள்

1 month 4 weeks ago

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்? என்ற கேள்வியுடன் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யுத்தம் நிறைவடைந்த நாள்முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 2017 மார்ச் எட்டாம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவே, இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்? OMP ஒரு கண்துடைப்பு நாடகம், சர்வதேச விசாரணையே தேவை, இழப்பீடுகள் வேண்டாம், எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற பல கோசங்களையும், பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

https://thinakkural.lk/article/307159

வாழைச்சேனையில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

1 month 4 weeks ago

Published By: DIGITAL DESK 7   31 JUL, 2024 | 10:36 AM

image
 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுரியா நகர் பகுதியில் ஆயுதங்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (30) நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே ஆயுதங்களுடன் 43 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ரி-56 ரக இரு துப்பாக்கிகள், ஒரு வாள், துப்பாக்கி ரவைகள் 60, மெகசீன் 2 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்ட நபரையும் ஆயுதங்களையும் வாழைச்சேனை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/189868

வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு: பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை

1 month 4 weeks ago

Published By: VISHNU   31 JUL, 2024 | 03:17 AM

image
 

வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

யூலை மாதம் 1 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது சரியான தராசை பயன்படுத்தாமை, விற்பனைக்கு பொருளை மறுத்தமை, விலை அழிக்கப்பட்டிருந்தமை, விலை குறிக்கப்படாமை, காலாவதியான பொருள்களை வைத்திருந்தமை, தகவல் குறிக்கப்படாமை, உத்தரவாதம் வழங்காமை போன்றன தொடர்பில் 54 வழக்குகளும், பேக்கரி தொடர்பில் 6 வழக்குகளுமாக 60 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நகரம், கோவில்குளம், வைரவபுளியங்குளம், குருமன்காடு, பட்டானிச்சூர், வேப்பங்குளம், நெளுக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலேயே மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/189852

யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நீதி வழங்கப்பட்டுள்ளது - கமல் குணரத்ன

1 month 4 weeks ago

Published By: VISHNU   31 JUL, 2024 | 03:13 AM

image
 

யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் கொடுப்பனவுகள், மருத்துவ புனர்வாழ்வு மற்றும் வாழ்நாள் முழுவதும் பராமரிப்பை வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் ஊடாக, பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் மூலம் அதிகபட்ச நீதியை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடங்களில், பாதுகாப்பு அமைச்சு நாட்டை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஸ்திரப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், மக்களுக்கு சிறந்த பாதுகாப்பான சூழலை உறுதி செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

''இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்'' என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (30)  நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன(ஓய்வுபெற்ற) இதனைக் குறிப்பிட்டார். 

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்வி வசதிகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், சிவில் மருத்துவ மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த  ஜெனரல் கமல் குணரத்ன,

அனைவருக்கும் அமைதியான நாடு என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயற்படும் பாதுகாப்பு அமைச்சு, கடந்த இரண்டு வருடங்களில் நாட்டை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஸ்திரப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மனித கடத்தல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் பாதுகாப்பு அமைச்சு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைக் கூற வேண்டும்.

 அண்மைக்காலமாக அதிக கவனம் பெற்றுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்காக போதைப்பொருள்களைக் கைப்பற்றி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து கடற்படை தலைமையிலான முப்படையினரும் தலையிட்டு பெரும் பங்காற்றியுள்ளனர்.

அதன்படி 2023ஆம் ஆண்டு மாத்திரம் முப்படையினரின் நடவடிக்கைகளினால் சுமார் 560 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 3350 கிலோ கஞ்சா, 5220 கிலோ கேரள கஞ்சா, 60 கிலோ ஐஸ் போதைப்பொருள், சுமார் 151,000 போதை மாத்திரைகள்/கெப்சூல்கள் மற்றும் 6650 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

ஜூலை 2024க்குள், சுமார் 270 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது, 3640 கிலோ கஞ்சா, 12,720 கிலோ கேரள கஞ்சா, 150 கிலோ ஐஸ் போதைப்பொருள், 43,600 போதை மாத்திரைகள்/ கெப்சூல்கள் மற்றும் 5000 லீட்டர் கசிப்பு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பை ஒருபோதும் மறக்க முடியாது என்பதையும் குறிப்பிட வேண்டும். அந்தப் போரில் 

மரணம் அடைந்த போர்வீரர்களைத் தவிர, நாம் பாதுகாக்க வேண்டிய இன்னும் பலரும் இருக்கிறார்கள்.

அதாவது போரில் காயமடைந்த 60,000 வீரர்களில் சுமார் 10,000 போர்வீரர்கள் படுக்கையில் அல்லது சக்கர நாற்காலிகளில் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ மறுவாழ்வு வழங்கவும், வாழ்நாள் முழுவதும் சிகிச்சை அளிக்கும் வகையிலும் அத்திடிய, அனுராதபுரம், கம்புருப்பிட்டிய மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் நிவாரண நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும், நாட்டுக்காகப் போராடி மருத்துவக் காரணங்களால் ஓய்வு பெற்றிருக்கும் போது, 55 வயது நிறைவடையும் முன் உயிரிழந்த இராணுவ வீரர்களின் தங்கி வாழ்வோர்களுக்கு, அவர்கள் உயிருடன் இருந்தபோது பெற்று வந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் நிலையான மாதாந்திர கொடுப்பனவாக வழங்கப்படும். அதன்படி போரின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நீதி கிடைத்துள்ளது என்பதையும் கூற வேண்டும்.

22 வருட சேவையை முடித்து ஓய்வு பெறும் 3000 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுக்கு ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம், மீண்டும் தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. செங்கடலில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 550 கடல்சார் பாதுகாவலர்களை அனுப்ப வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கான ஆட்சேர்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும், சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்வி வசதிகளின் தரம் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிவில் மருத்துவ மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ மாணவர் சேர்ப்பது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பரிந்துரைத்த இஸட் புள்ளி அடிப்படையில் மாத்திரமே மேற்கொள்ளப்படும். திறமையான, நிபுணத்துவம் பெற்ற மற்றும் அங்கீகாரம் பெற்ற பேராசிரியர்கள் மாத்திரமே கற்பித்தலுக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதையும் கூற வேண்டும்.

மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்காக ஸ்தாபிக்கப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் 1000 க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் இலவச சிகிச்சை பெறுகின்றனர். அத்தோடு 2012 ஆம் ஆண்டு முதல் 286 வெளிநாட்டு மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மனிதக் கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியானது இலங்கையில் மனித கடத்தலுக்கு எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதுடன், அதற்கேற்ப, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இரண்டாம் நிலை அமுலாக்கத்தை இலங்கையினால் தொடர்ந்து 03 வருடங்களாக பேண முடிந்தது.

அத்துடன், கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட அமைதி காக்கும் நடவடிக்கைகளில் மீளப் பங்கெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது 301 இராணுவ வீரர்கள்  லெபனான், தென் சூடான் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு பகுதிகளில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அண்மைக் காலமாக அதிக சர்ச்சைக்குள்ளான மியன்மாரில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதில்  கவனம் செலுத்தி வருகிறோம். 

உக்ரைன்-ரஷ்யா போருக்காக சென்றிருக்கும் முன்னாள் இராணுவ வீரர்கள் தொடர்பிலும் சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து பணியாற்றுகிறோம். இதேவேளை, முன்னாள் படைவீரர்கள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால், பாதுகாப்பு அமைச்சுக்கு தெரிவிக்குமாறு ரஷ்ய தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும், பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் கீழ் மண்சரிவு  தேசிய மையமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது. இதன் மூலம், தற்போது, இலங்கையில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. 

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) நிதியுதவியுடன், 128 மண் சரிவு அபாயமுள்ள இடங்களை "நிலைப்படுத்துதல் நுட்பங்கள் மூலம் மண்சரிவு அபாயத்தைக் மட்டுப்படுத்தல்" திட்டத்தின் மூலம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

 உறுதிப்படுத்தி வருகிறது. மேலும், இதுவரை 46 மண்ச்சரிவு அபாயமுள்ள இடங்களில் நிலைப்படுத்தல் பணிகளை நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. 

இதேவேளை, நாட்டின் சுகாதார திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மாத்தறை வைத்தியசாலையில் பத்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு கடற்படையினரால் பத்து மாடிக் கட்டிடம்  நிர்மாணிக்கப்படுகிறது. அத்துடன், விமானப்படையின் ஆளணி 

பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட மஹரகம அபெக்‌ஷா புற்றுநோய் வைத்தியசாலையின் ஆறு மாடிக் கட்டிடத்தை எதிர்வரும் வாரத்தில் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்தோடு நாடு முழுவதும் உள்ள பல்வேறு மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைகளை புனரமைப்பதற்காக முப்படையின் ஆளணியை வழங்கி வருவதுடன், தொடர்ந்தும் அதே சேவை வழங்கப்படவுள்ளது. 

மேலும், பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதை மட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கை, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, நிவாரணம் வழங்குதல், அனர்த்த சூழ்நிலைகளுக்கு தயார்படுத்துதல், அனர்த்த தவிர்ப்புக்கு தேவையான நுட்பங்களை செயல்படுத்துதல், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், பாதிக்கப்பட வேண்டிய பகுதிகளை கண்டறிந்து மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது போன்ற முக்கிய பணிகளை நாங்கள் செய்துள்ளோம். அதனால் சொத்து சேதம் ஏற்பட்டாலும் உயிர் சேதத்தை குறைக்க முடிந்துள்ளது"என்றும் அவர் தெரிவித்தார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மேஜர் ஜெனரல் சீ.ஏ விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஏ. எம். சீ. டபிள்யூ. அபேகோன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/189851

மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியா கொலை வழக்கு!

1 month 4 weeks ago
court-order.jpg?resize=750,375 மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியா கொலை வழக்கு!

புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் விசாரணைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் மேன்முறையீட்டு மனுக்கள், 5 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டது.

இந்த வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பிரதிவாதி சார்பில் முன்னிலையாகிய  சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, இந்த பிரதிவாதிகள் 08 வருடங்களுக்கும் மேலாக சிறைச்சாலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக பிரதி மன்றாடியார் நாயகம் ஆயிஷா ஜினசேன மன்றிற்கு தெரிவித்தார்.

பிரதிவாதிகள் கொலை, சதி மற்றும் சட்டவிரோத குடியேற்றம் ஆகிய குற்றங்களில் குற்றவாளிகளாக காணப்பட்டதாக தெரிவித்த அவர், யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பிரதிவாதிகள் இருவர் விடுவிக்கப்பட்டதாகவும் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனையடுத்து வழக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பிரதிவாதிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மன்றாடியார் நாயகத்துக்கு உத்தரவிட்டது.

அத்துடன், வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தி வைக்கப்பட்டுவதாகவும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1394208

1500 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்!

1 month 4 weeks ago
z_p25-Watawala.jpg?resize=750,375&ssl=1 1500 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு உடன்படிக்கையை மீள கைச்சாத்திட பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

 

பொகவந்தலாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் தெரிவித்தார்

அடிப்படை சம்பளமாக 1350 ரூபாவுடன் 1500 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

அத்துடன் 1700 ரூபா சம்பளத்திற்கான அழுத்தத்தை பிரயோகித்ததை அடுத்தே, 1500 ரூபா சம்பள அதிகரிப்புக்கான இணக்கப்பாட்டிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் வந்துள்ளதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் .சக்திவேல் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1394209

கடந்த 2023ஆம் ஆண்டில் 9,436 சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவு

1 month 4 weeks ago
30 JUL, 2024 | 07:01 PM
image
 

கடந்த 2023ஆம் ஆண்டில் 9,436 சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரி கீத் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இணையவழி பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக காலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிகளவான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளன.

அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 1,124 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 907 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 548 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும் பதிவாகியுள்ளன.

மேலும், குருணாகல் மாவட்டத்திலிருந்து 760 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 598 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும்,  காலி மாவட்டத்திலிருந்து 541 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், கடந்த ஆண்டில் 53 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளனர். 125 சிறுவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை பதிவாகியுள்ளது.

இதேவேளை, சிறுவர் திருமணங்கள்,சிறுவர் வன்முறைகள் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துதல் உள்ளிட்ட 1,714 சிறுவர்கள் தொடர்பான குற்றங்கள் பதிவாகியுள்ளன.

மேலும், நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாகக் கூறி பணம் பெறுதல், உடலுறவில் ஈடுபட்ட காட்சிகளைக் காணொளிகளாக எடுத்து அச்சுறுத்துதல் , சமூக ஊடகங்களின் மூலம் தொடர்பு கொண்டு அச்சுறுத்தி பல்வேறு தேவைகளை நிறைவேற்றுதல் ஆகிய குற்றங்கள் அதிகரித்துள்ளன.

எனவே,பெற்றோர்கள் அனைவரும் தங்களது பிள்ளைகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் சிறுவர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமெனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189837

வேகமெடுக்கும் இன்ஃப்ளூவன்ஸா; குழந்தை நல மருத்துவ ஆலோசகர் விடுத்துள்ள எச்சரிக்கை

1 month 4 weeks ago

இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதனால், கொவிட் -19 தொற்றின் போது கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து காணப்படுவதாக குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் எனவும் கை சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் குறிப்பாக பொது போக்குவரத்து மற்றும் சமூக கூட்டங்களின் போது சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும் பாடசாலைகள், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் இந்த வைரஸ் பரவுவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக காணப்படுவதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல்நிலை தொடர்பில் எப்போதும் அவதானமாக இருக்குமாறும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும் வைத்தியர் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/307059

தேசபந்து தென்னகோனுக்கு ஆதரவாக தேரர் குழுவொன்று பேரணி!

1 month 4 weeks ago
%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0% தேசபந்து தென்னகோனுக்கு ஆதரவாக தேரர் குழுவொன்று பேரணி!

தேசபந்து தென்னகோனை மீண்டும் பொலிஸ் மா அதிபர் பதவியில் அமர்த்துமாறு கோரி அகலக்கட சிறிசுமண தேரர் முக்கியஸ்தர்கள் குழுவொன்று கொழும்பில் இன்று பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

அதன்படி கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பமாகி கோட்டை போதி வரை சென்றதுடன் இந்த பாதயாத்திரையில் வெளிநாட்டு தேரர்களும் கலந்துகொண்டிருந்தனர்

இந்தக் குழுவினர் போதி கோட்டைக்கு அருகில் சென்று சமயச் சடங்குகளை நடத்தியதுடன், பொலிஸ் மா அதிபருக்கு அவர் பதவிக்காலத்தில் பணியாற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்

அத்துடன் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்காக பொலிஸ் மா அதிபரினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு எதிராக தற்போது பல்வேறு தடைகள் விதிக்கப்படுவதாக அங்கு கூடியிருந்த தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர்

மேலும் தேஷ்பந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றுவதைத் தடுத்து, உயர் நீதிமன்றம் ஜூலை 24 அன்று இடைக்காலத் தடை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1394179

@ரசோதரன் 😂

போதிய உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு இன்மையினால் நாட்டு மக்களின் உடல் பருமன் அதிகரிப்பு

1 month 4 weeks ago

Published By: DIGITAL DESK 3   30 JUL, 2024 | 04:36 PM

image

போதிய உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு இன்மையினால் நாட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் அதிக எடை மற்றும் உடல் பருமன் விகிதம் வேகமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர்  பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற மருத்துவ முகாம் ஒன்றில் உரையாற்றிய அவர்,

நாட்டில் சுமார் 48 சதவீதமான  பெண்கள் அதிக எடையுடனும், 33.3 சதவீதமான ஆண்கள் தங்கள் ஆரோக்கியமான எடையை விட அதிக எடையுடனும் உள்ளார்கள்.

சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகமாக உட்கொள்ளும் போது உடற்பயிற்சி செயற்பாடு குறைவாக உள்ளது. அத்துடன், அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ளல் குறைந்துள்ளது.

பெரும்பாலான மக்கள் தங்கள் நோய்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர், நாட்டின் முதியவர்களில் 42 சதவீதமானவர்கள் உயர் இரத்த அழுத்தத்தால்  பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிபிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/189808

மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!

1 month 4 weeks ago

Published By: DIGITAL DESK 7   30 JUL, 2024 | 11:41 AM

image

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை (28)  இடம் பெற்றுள்ளது.

மரணமடைந்த இளம் தாய் 27 வயதுடையவர் எனவும் இவர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

இறந்த இளம் தாய்க்கு முதலாவது ஆண் குழந்தை  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 09 ம் திகதி பிறந்துள்ளது. 11 ஆம் திகதி மருத்துவமனையில் இருந்து தாய் சேய் நலமாக வெளியேறியுள்ளார்கள்.

7 நாட்களின் பின்னர் முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டுமாறு  கூறியதையடுத்து  கடந்த 16ம் திகதி முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டப்பட்டதாக  இறந்த பெண்ணின் தாயார் தெரிவித்தார்.

தனது மகளை அவரே  மருத்துவமனையில் வைத்து பராமரித்து வந்துள்ளார்.

அதன் பின்னர் கடந்த சனிக்கிழமை (27) தாய்க்கு  குருதிப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அன்று இரவு  நோயாளர் காவு வண்டி மூலம்  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று  ஓ.பி.டி பதிவுகளின் பின்னர் உரிய நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.

குருதி ஓட்டம் கட்டுப்படாமல் தெர்ச்சியாக கசிந்து கொண்டே இருந்ததன் காரணத்தினால் விடிய காலை  ஆறு முதல் ஏழு மணி அளவில் சுய நினைவை அவர் இழந்ததாக தாயார் தெரிவித்தார்.

அதன்பின் அவசர சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட போது நண்பகல் 11.மணியின் பின்னர் இளம் தாய் மரணித்து விட்டதாக  செய்தி  எமக்கு கிடைத்தது.

குருதிப் பெருக்கு காரணமாக  மருத்துவமனைக்கு கொண்டு சென்ற  அன்று இரவு வைத்தியர்கள் பார்வையிட்டு இருந்தால் தனது மகளை காப்பாற்றியிருக்கலாம் என இந்த பெண்ணின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இறந்த இளம் தாய் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த போதும் பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் நடைபெறவில்லை.  குறித்த பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில்  இவ்வாறு  சோக  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனவுகளோடு படித்து  திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து உயிரிழந்த  இளம் தாய்  இனி உயிருடன் மீளப் போவதில்லை. ஆனால்  இறுதி நேரத்தில் கூடவே இருந்து பராமரித்து வந்தவரும் இறந்த பெண்ணின் தாயுமானவர் தெரிவித்த குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? என்று நீதியான விசாரணை செய்து உண்மைத் தன்மையை  வெளிப்படுத்த சுகாதாரத் துறையினர் முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் வினவிய போது,

பெண்ணின் மரணம் தொடர்பாக விசேட சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை நேற்று திங்கட்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டது.

அதிக குருதிப் பெருக்கு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாகவும், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை அறிக்கை வெளிவந்தால் மரணத்திற்கான காரணத்தை முழுமையாக அறிய முடியும். எப்படி இருந்தாலும் வைத்தியசாலை தரப்பினர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/189757

எம்.பி. அல்லாத விஜயகலாவுக்கும் 19 கோடி ரூபா திட்ட நிதி ஒதுக்கீடு

1 month 4 weeks ago

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி நிதியாக தலா ஐந்து கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஆளும் கட்சி அமைப்பாளரான விஜயகலா மகேஸ்வரனிற்கு (Vijayakala Maheswaran) 19 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 5 கோடி ரூபா நிதி தற்போது 6 நாடாளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, த.சித்தார்த்தன், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி நிதிகளுக்கான நிதி

நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.விக்னேஸ்வரனுக்கான நிதி இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

 

19-crore-project-fund-allocation-for-vijayakala

இதேநேரம் எட்டாவது நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதனுக்கு 15 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான அபிவிருத்தி நிதிகளுக்கான நிதியை மாவட்ட செயலகத்திற்கு விடுவித்தமையோடு நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தலைவராக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் விஜயகலா மகேஸ்வரனால் சிபார்சு செய்யப்பட்ட 19 கோடி ரூபா பெறுமதியிலான திட்டங்களுக்கும் விஜயகலா மகேஸ்வரனின் பரிந்துரை எனக் குறிப்பிட்டு நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/19-crore-project-fund-allocation-for-vijayakala-1721876604?itm_source=parsely-special

யாழில். காணி மோசடி – நில அளவையாளர் உள்ளிட்ட மூவர் கைது!

1 month 4 weeks ago

யாழில். காணி மோசடி – நில அளவையாளர் உள்ளிட்ட மூவர் கைது!
adminJuly 30, 2024
 

காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நில அளவையாளர் உள்ளிட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.

வெளிநாடொன்றில் வசிக்கும் தம்பதியினர், மருதங்கேணி பகுதியில் உள்ள தமது காணி ஒன்றிக்கு ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு அற்றோணி தத்துவத்தை வழங்கியுள்ளார்.

குறித்த நபர் தனக்கு அற்றோணி தத்துவம் ஊடாக கிடைக்கப்பெற்ற காணியை சூழ உள்ள காணிகளையும் அடாத்தாக கையகப்படுத்தி நில அளவையாளர் ஊடாக காணி வரைபடத்தினை கீறி அற்றோணி தத்துவ காணியை பிறிதொரு நபருக்கு மோசடியாக விற்பனை செய்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு  பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, காணி மோசடியில் ஈடுபட்டவர், நில அளவையாளர் மற்றும் காணியை கொள்வனவு செய்த நபர் ஆகிய மூவரையும் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், அவர்களை நீதிமன்றில் முற்படுத்திய போது , அவர்களை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
 

https://globaltamilnews.net/2024/205444/

Checked
Sat, 09/28/2024 - 17:19
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr