ஊர்ப்புதினம்

இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட 11 அபிவிருத்தித்திட்டங்களை மீள ஆரம்பித்தது ஜப்பான் : திறைசேரியின் செயலாளரிடம் கடிதம் கையளிப்பு

2 months ago

Published By: VISHNU    24 JUL, 2024 | 07:14 PM

image
 
  • இலங்கையில் ஜப்பானின் கடன் திட்டங்களுக்கான பணக்கொடுப்பனவை மீண்டும் தொடங்குவதற்கான அதன் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்தது

உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவிற்கும் (OCC) இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையொப்பமிடப்பட்டதைத் தொடர்ந்தும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு உடன்படிக்கையை விரைவாக முடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்தும், 2022 ஆம் ஆண்டு இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்தாததிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஜப்பானின் நிதியிலான கடன் திட்டங்களுக்கான பணக்கொடுப்பனவை மீண்டும் தொடங்க ஜப்பான் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முடிவு செய்துள்ளது.

ஜூலை 24 அன்று, இலங்கை அரசாங்கம், ஜப்பான் தூதரகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் (JICA) இலங்கை அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த முடிவை நிதி அமைச்சில் ஆரம்பித்து வைப்பதற்காக கூட்டாக செய்தியாளர் மாநாட்டை நடத்தியது. 

இலங்கைக்கும் OCC க்கும் இடையிலான கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர் மிசுகொஷி (MIZUKOSHI Hideaki), OCC இன் இணைத் தலைவராக பொதுக் கடன் மறுசீரமைப்பை வழிநடத்தி முடிப்பதில் ஜப்பான் அரசாங்கத்தின் இதுவரை இல்லாத முயற்சி மற்றும் சிறந்த பங்களிப்பை எடுத்துரைத்தார்.

நாட்டை மீண்டும் ஒரு நிலையான பாதைக்கு வழிநடத்துவதற்கு அவசியமான விரிவான பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அதிகாரிகளின் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக தூதுவர் மிசுகொஷி பாராட்டினார்.

இடைநிறுத்தப்பட்ட அனைத்து யென் கடன் திட்டங்களும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கியமான உட்கட்டமைப்புகளாகும் என்றும், இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான ஜப்பானின் தொடர்ச்சியான மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தி அவர் கூறினார்.

JICA இலங்கை அலுவலகத்தின் பிரதம பிரதிநிதி திரு. யமடா டெட்சுயா சார்பாக, சிரேஷ்ட பிரதிநிதி திருமதி. இதெ யூரி இந்த தீர்மானம் தொடர்பாக JICA இன் தலைவர் டாக்டர் தனகா அகிஹிகோவிடமிருந்து கௌரவ. ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு முகவரியிடப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளர் திரு.மகிந்த சிறிவர்தன விடம் கையளித்தார்.

யென் கடன் திட்டங்களின் மீள ஆரம்பம் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், நீண்டகால நிலையான வளர்ச்சியை நோக்கிய வேகத்தைப் பெறுவதற்கும் உதவும் என்று திருமதி ஐடிஇ யூரி நம்பிக்கை தெரிவித்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் சிறிவர்தன கடன் மறுசீரமைப்பில் ஜப்பானின் சிறந்த முன்முயற்சி மற்றும் நீண்ட கால அர்ப்பணிப்பை பாராட்டி இந்த தீர்மானத்திற்கு தனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்தார். யென் கடன் திட்டங்களுக்கான பணக்கொடுப்பனவு மீண்டும் தொடங்குவதானது ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதுடன், இந்தத் தீவு தேசம் பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் திரும்பி இந்தியப் பெருங்கடலில் ஒரு மையமாகச் செயற்பட்டு தன்னைத் தானே முன்கொண்டு வர உதவும் என்று நம்பப்படுகிறது.

https://www.virakesari.lk/article/189302

பழைய செம்மலை நீராவியடி பொங்கல் நிகழ்வில் ஆலய வளாகத்தில் சிவலிங்கம் வைப்பு - வதந்தியை நம்பி நீதிமன்றத்தை நாடிய பொலிஸார்!

2 months ago

Published By: VISHNU    24 JUL, 2024 | 06:56 PM

image

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு புதன்கிழமை (24) இடம்பெற்றுவரும் நிலையில் கொக்குளாய் பொலிஸார் இந்த பொங்கல் நிகழ்வுக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றை நாடியுள்ளனர். 

IMG_0565.jpg

தொல்லியல் திணைக்களத்துக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று இடம்பெறும் நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் நிகழ்வில் ஆலய வளாகத்தில் 17 அடி சிவலிங்கம் ஒன்று நிறுவப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக இதனை நிறுத்துமாறு கோரி கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் தொல்லியல் திணைக்களத்தால் நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்துக்கு எதிராக முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. 

IMG_0566.jpg

இதனையடுத்து இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் நீராவியடி பிள்ளையார் ஆலய பூசகர் மற்றும் நிர்வாகத்தினருக்கு எதிராக வழக்கு ஒன்றினை தாக்கல் செய்து குறித்த பொங்கல் நிகழ்வில் புதிதாக சிலைகள் வைப்பதை தடை செய்யுமாறும் புதிய கட்டுமானங்களை செய்வதை தடை செய்யுமாறும் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

IMG_0564.jpg

இதனை ஆராய்ந்த மன்று இந்த ஆலய விவகாரம் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய உத்தரவை தொடர்ந்தும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் மற்றும் பௌத்த விகாரை தரப்பினர் பேணுமாறும் அதனை மீறி யாராவது புதிய கட்டுமானங்கள் புதிய சிலைகளை நிறுவினாலோ பொலிஸார் நடவடிக்கை எடுக்கலாம் என சுட்டிக்காட்டியதோடு ஏற்கனவே நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ள படி இரு தரப்பும் அமைதியான முறையில் நீதிமன்ற உத்தரவை மீறாது வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என சுட்டிக்காட்டியுள்ளது. 

IMG_0550.jpg

கடந்த இரு நாட்களாக தென்பகுதியை சேர்ந்த சில முகநூல் கணக்குகள் ஊடாக சிங்கள மக்கள் மத்தியில் கொதி நிலையை தோற்றுவிக்கும் வண்ணம் நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் நிகழ்வு தொடர்பில் பொய் செய்திகள் பரப்பப்பட்டு வந்ததோடு நேற்றையதினம் ஆலய நிர்வாகத்தினரிடம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தொல்லியல் திணைக்களத்தினர் இந்த பொய் வதந்தி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலம் பெற்றுள்ளனர். 

IMG_0548.jpg

இந்தனை தொடர்ந்து புதன்கிழமை (24) பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுவரும் நிலையில் கொக்கிளாய் பொலிஸார் பொய் செய்தியை நம்பி நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றை நாடியுள்ளனர். 

IMG_0549.jpg

இவ்வாறு பொங்கல் நிகழ்வு தொடர்பில் பொய் செய்திகளை சமூகவலைதளங்கள் ஊடக பகிர்ந்து வந்த தென்பகுதியை சேர்ந்த முகநூல் கணக்குகள் இதே போன்று கடந்த வருடம் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வு தொடர்பிலும் பொய் வதந்திகளையும் வெறுப்பு பேச்சுக்களையும் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் கொதி நிலையை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்த சமூகவலை தள கணக்குகளாகும்.

IMG_0549.jpg

இவர்களுக்கு தமிழ் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் விகாரை அமைத்து காணிகளை அபகரித்துள்ள பௌத்த பிக்குகளுக்கும் இராணுவ புலனாய்வு தரப்பினருக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக பிரதேச தமிழ் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

IMG_0547.jpg

https://www.virakesari.lk/article/189301

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு கப்பல்

2 months ago
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல் மைக்கேல் மர்பி

Published By: DIGITAL DESK 3  24 JUL, 2024 | 05:10 PM

image
 

அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி (USS Michael Murphy) என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமை (23) கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

155 மீற்றர் நீளமுள்ள, இந்த ஏவுகணை எதிர்ப்பு கப்பல் 323 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.

கொழும்புக்கு வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர்  பாரம்பரிய கடற்படை மரபுக்களுக்கமைய வரவேற்றனர்.

கப்பலின் கேப்டன் ஜொனாதன் பி. கிரீன்வால்ட் மேற்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.

இந்த கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26) நாட்டில் இருந்து புறப்படவுள்ளது.

1_62.jpeg

3_73.jpeg

4_69.jpeg

5_62.jpeg

12_39.jpeg

8_54.jpeg

https://www.virakesari.lk/article/189282

யாழில் சட்டவிரோத மணல் அகழ்வு; நான்கு டிப்பருடன் மூவர் கைது

2 months ago

Published By: DIGITAL DESK 3   24 JUL, 2024 | 04:58 PM

image
 

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 4 டிப்பர் வாகனமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. 

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர். 

பொலிஸாரை கண்டதும் மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிய நிலையில் மூன்று நபர்கள் பொலிஸாரினால் மடக்கி பிடிக்கப்பட்டனர். 

அதேவேளை அவ்விடத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட நான்கு டிப்பர் வாகனத்தையும் பொலிஸார் மீட்டனர். 

டிப்பர் வாகனங்களை பொலிஸ் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார், கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/189286

யாழ். அச்சுவேலி தொண்டைமானாறு வீதி சேதம் : பொதுமக்கள் பயணத்தில் அசெளகரியம்!

2 months ago
24 JUL, 2024 | 04:52 PM
image
 

யாழ்ப்பாணம், அச்சுவேலி தொண்டைமானாறு வீதி மிக மோசமான நிலையில் பழுதடைந்துள்ளமையால், அவ்வீதியால் பயணிப்போர் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

யாழ்ப்பாணத்தில் பருவமழை காலத்தில் தொண்டைமானாறு நீர் அவ்வீதியில் பாய்வதால் அந்த வீதிகளில் மழைக் காலங்களில் பாரிய குழிகள் தோன்றியுள்ளன. 

இதனால் பொதுமக்கள் பயணிக்க முடியாத அளவுக்கு அந்த வீதி மோசமாக சேதமடைந்துள்ளது. 

01__1_.jpg

மழைக்காலம் முடிந்து, தொண்டைமானாற்றில் நீர் மட்டம் குறைகிறபோது வீதியில் உள்ள குழிகளை தற்காலிகமாக மூடி, வீதியை புனரமைத்து மக்கள் தமது போக்குவரத்தினை தொடர்வார்கள்.

இம்முறை வீதி பருவமழைக்காலம் முடிவடைந்து சுமார் 07 மாதங்கள் கடந்த நிலையிலும் பழுதடைந்த வீதியினை தற்காலிகமாகவேனும் புனரமைக்கப்படாதிருப்பதால், வீதியில் செல்லும் பாதசாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். 

எதிர்வரும் 04ஆம் திகதி செல்வச்சந்நிதி ஆலய வருடாந்திர திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், அதிகளவானோர் இந்த வீதியினூடாக வாகனங்களில் பயணிப்பார்கள் என்பதால் வீதியினை விரைந்து புனரமைத்து தருமாறு கோரப்பட்டுள்ளது.

தொண்டைமானாறு நீர் வீதியின் மேலாக ஓடாதவாறு அந்த வீதியானது உயர்த்தப்பட்டு, பொருத்தமான இடங்களில் சிறிய பாலங்கள் அமைத்து, வீதியை நிரந்தரமாக தரமான வீதியாக புனரமைத்து தருமாறு பல வருடங்களாக அப்பகுதி மக்கள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

01__2_.jpg

https://www.virakesari.lk/article/189283

முல்லைத்தீவில் துப்பாக்கிச் சூடு; விவசாயி காயம்

2 months ago
24 JUL, 2024 | 02:08 PM
image
 

முல்லைத்தீவு, கல்விளான் பகுதியில் இன்று (24) புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்விளான் பகுதி விவசாய அமைப்பின் செயலாளரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இவர் வயலுக்குச் சென்றிருந்த போது  இனந்தெரியாத நபர்கள் சிலரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு, கல்விளான் பகுதியில் மணல் கடத்தல்காரர்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருவதால் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கும் மணல் கடத்தல்காரர்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் தொடர்பில் எந்தவித தகவல்களும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/189262

அதிபரை மாற்றுமாறு கோரி ஆர்பாட்டம்!

2 months ago

Published By: DIGITAL DESK 3   24 JUL, 2024 | 02:37 PM

image
 

வவுனியா ஶ்ரீ இராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலத்தின் அதிபரை மாற்றுமாறு கோரி பெற்றோர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று புதன்கிழமை (24) பாடசாலையின் காலை பிரார்த்தனை முடிவடைந்த பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது,

எமது பாடசாலை கல்விநிலையில் வீழ்ச்சி நிலையினை கண்டுள்ளது. பாடசாலையில் நடைபெறும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கணக்கறிக்கைகள் எவையும் சமர்பிக்கப்படவில்லை. அங்கு நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக பெற்றோர்களிற்கு அறிவித்து கலந்துரையாடும் நடவடிக்கையினையும் அவர் முன்னெடுப்பதில்லை. 

இவ்வாறானா காரணங்களால் பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு போகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்தநிலைமை தொடர்ந்தால் பாடசாலையினை இழுத்து மூடவேண்டிய நிலைமையே ஏற்படும். எனவே உடனடியாக அவரை மாற்றித்தருமாறு உரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக பாடசாலையின் அதிபரை தொடர்புகொண்டு கேட்டபோது,

நான் பொறுப்பேற்ற பின்னர்  பாடசாலையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்துள்ளோம். 

குறிப்பாக வெளிநபர்களின் உதவிகளை பெற்று மாணவர்களது கல்விவளர்ச்சிக்கு உரிய தேவைகளை செய்துள்ளோம், வறுமைப்பட்ட மாணவர்களின் தேவை கருதி சத்துணவு திட்டத்தினை விஸ்தரித்துள்ளோம். அனைத்திற்கும் கணக்கறிக்கை சமர்பிக்கப்பட்டு அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

பாடசாலையின் நிர்வாகத்தை ஒரு சிலநபர்கள் சொல்வது போல நடாத்தமுடியாது. சில பெற்றோர்கள் தமது பிள்ளைகள் விடயத்தில் சரியாக செயற்பட்டால் நாம் பாடசாலையில் மாணவர்களுடன் முரண்பட வேண்டிய தேவை ஏற்படாது என்றார்.

https://www.virakesari.lk/article/189265

தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரித்தல் அவர்களுக்கான சுயாட்சி என்பவை தான் எமது நிலைப்பாடு - ரஜீவ்காந்

2 months ago
தமிழ் மக்களிற்கான சுயாட்சி தீர்விற்காக மக்கள் போராட்ட முன்னணி போராடும் - - தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரித்தல் அவர்களுக்கான சுயாட்சி என்பவை தான் எமது நிலைப்பாடு.. -ரஜீவ்காந்

Published By: RAJEEBAN   24 JUL, 2024 | 05:33 PM

image
 

சுயாட்சியுடன் கூடிய , ஒற்றைய ஆட்சியை நிராகரிக்கின்ற, அலகுகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியோடு, மக்கள் போராட்ட முன்னணி இந்த அரசியல் களத்தில் குதித்திருக்கின்றது என தெரிவித்துள்ள  மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் சுயாட்சிக்காக தொடர்ந்தும் போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அரகலய போராட்ட குழுவான மக்கள் போராட்ட முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

வடக்குகிழக்கில் பிறந்து வளர்ந்து வடக்குகிழக்கினது ஒடுக்குமுறைகளை மிக மோசமாக சந்தித்தவன் என்ற வகையிலே எங்களது அரசியல் பிரச்சினைகள், இன்று வரை தீராமலிருக்கின்றது என்ற வருத்தம் இன்றுவரை எங்களிற்கு இருக்கின்றது.

rajivkanth_july_2024.jpg

குறிப்பாக இன்று கருப்பு ஜூலை தினம், 1983ம் ஆண்டு கொத்துகொத்தாக தமிழ் மக்கள் தலைநகரில் எந்தவித கரிசனையும் இல்லாமல், கொல்லப்பட்டிருந்தார்கள்.

இன்றுவரை எந்தவொரு பொறுப்புக்கூறலும் இல்லாத அந்த நிகழ்வு போல எத்தனை ஆயிரக்கணக்கான கொலைகளும், வன்முறைகளும், காணாமல்ஆக்கப்படுதலும், தமிழ் மக்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்த நேரத்தில் தென்னிலங்கையிலிருந்து எத்தனையோ கட்சிகள் வடக்குநோக்கி வருகின்றன, அவர்கள் தமிழ் மக்களிற்கு என்ன வேண்டும் என்ன கொடுக்கப்போகின்றோம் என்பது தொடர்பில் இங்கு ஒன்றை கூறிவிட்டு, தென்னிலங்கையில் அதற்கு மாற்றான வேறு ஒன்றை கூறுவார்கள் கூறுவார்கள்.

அங்கு இனவாதத்தையும் இங்கு வாக்குகளை பெறுவதற்கான யுக்தியையும் சிங்கள அரசியல்வாதிகள் தொடர்ந்து கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இந்த விடயத்தில், இந்தமாதிரி விடயங்களை தென்னிலங்கையிலும் தமிழ்மக்கள் மத்தியிலும் சரியான விடயங்களை தெரிவிக்ககூடிய  ஒரே கட்சியாக மக்கள் போராட்ட முன்னணி உருவெடுத்துள்ளது.

நான் நினைக்கின்றேன், வரலாற்றில் முதல் தடவையாக சுயாட்சியுடன் கூடிய, ஒற்றை ஆட்சியை நிராகரிக்கின்ற, அலகுகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியோடு, மக்கள் போராட்ட முன்னணி இந்த அரசியல் களத்தில் குதித்திருக்கின்றது. இது தென்னிலங்கையில் உள்ள இனவாதிகள் மத்தியில் எப்படியான குழப்பங்களை ஏற்படுத்தும், நன்கறிந்தும் அவை எல்லாவற்றையும் தாண்டி, மக்கள் நலன்கருதி, ஒட்டுமொத்த நாடும் முன்னோக்கி செல்லவேண்டும், நீண்டகால பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்ற நோக்கில் மக்கள் போராட்ட முன்னணி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது.

குறிப்பாக தென்னிலங்கையில் இருக்ககூடிய பிரதான இரு சிங்கள இடது சாரி கட்சிகளும் வடக்குகிழக்கில் நீண்டகாலமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இடதுசாரி கட்சியும் இணைந்து இந்த கட்சியை உருவாக்கியுள்ளன.

குறிப்பாக சுயாட்சி அலகுகள் என்பது தமிழ் மக்கள் மிக நீண்டகாலமாக தீர்வு என்ற அடிப்படையில் எதனை கேட்டுக்கொண்டிருந்தார்களோ, அதனை எந்த வித பாரபட்சமும் இல்லாமல் அவர்களிற்கு ஒரு ஆட்சிமுறையை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

எழுத்து வடிவத்தில், மூன்றுமொழிகளிலும் முன்மொழியப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில கட்சிகள் மாறிமாறி கூறுவது போல இல்லாமல், தீர்க்கமாக உண்மையாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயத்தை நான் இன்று ஊடகங்களிற்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

நீங்கள் என்று ஆட்சிக்கு வரப்போகின்றீர்கள் இதெல்லாம் எப்போது நடக்கப்போகின்றது என்ற கேள்விகள் எல்லாம் மக்களிற்கு இருக்கலாம்.

நாங்கள் போராட்ட முன்னணி என்று நாங்கள் சுயாட்சி என்ற முடிவை எடுத்தோமோ அதற்காகவும் எங்கள் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதை நான் இங்குள்ள தமிழ் மக்களிற்கும் ஊடகவியலாளர்களிற்கும் தெளிவுபடுத்த ஆசைப்படுகின்றேன்.

குறிப்பாக வடக்குகிழக்கை பொறுத்தவரையில் சிங்களமயமாக்கல் திட்டமிடப்பட்டு மிக நீண்டகாலமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது, இதனை நிறுத்துவதற்கான முன்மொழிவுகளை மேற்கொண்டிருக்கின்றோம், இந்த அடிப்படையில் சிங்களமயமாக்கல் தடுத்துநிறுத்தப்படும்.

people_stru_alia.jpg_11.jpg

அதேபோல பௌத்தமயமாக்கல் தொல்பொருள் என்ற பெயரிலே குறிப்பாக இலங்கையின் வடக்குகிழக்கிலே  இடம்பெறுகின்றது. எந்தவிதமான தயவு தாட்சண்யம் இல்லாம் வடக்குகிழக்கு தமிழ் மக்களின்  அடையாளங்களிற்கு மேல் எத்தனையோ ஆயிரக்கணக்கான நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன, அந்த நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்படவேண்டும் அவை தமிழ் மக்களிற்குரிய நிலங்கள் எனவே தொல்பொருள் என்ற பெயரில் கைப்பற்றப்பட்ட அத்தனை நிலங்களையும் விடுவிக்கவேண்டும் என்ற கொள்கையையும் நாங்கள் முன்வைத்திருக்கின்றோம்.

https://www.virakesari.lk/article/189289

இலவசமாக வழங்கப்பட்ட மடிக்கணனிகளுக்கு பெருந்தொகை வரி விதித்த சுங்கத்துறை

2 months ago

இலங்கை மாணவர்களுக்காக அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் அன்பளிப்பு செய்த மடிக்கணனிகளுக்கு சுங்கத்துறையால் ரூபா 2.2 மில்லியன் வரி விதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake)தெரிவித்துள்ளார்.

நன்கொடையாக வழங்கப்படும் மடிக்கணனிகளுக்கு இது போன்ற வரி விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அவர்கூறினார்.

முன்னர் ஒருபோதும் செலுத்தியதில்லை
“நாங்கள் சுங்க வரியாக ரூ 2,286,000 செலுத்தியுள்ளோம் அதற்கு 18% வரி காரணமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். நன்கொடையாக வழங்கப்படும் மடிக்கணனிகளுக்கு இதற்கு முன்னர் நாம் வரி செலுத்தியதில்லை'' என்றார்.

இலவசமாக வழங்கப்பட்ட மடிக்கணனிகளுக்கு பெருந்தொகை வரி விதித்த சுங்கத்துறை | Customs Charges Duties Even For Donated Laptops

200க்கும் மேற்பட்ட மடிக்கணனிகள் 
இலங்கை மாணவர்களுக்கு 200க்கும் மேற்பட்ட மடிக்கணனிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலவசமாக வழங்கப்பட்ட மடிக்கணனிகளுக்கு பெருந்தொகை வரி விதித்த சுங்கத்துறை | Customs Charges Duties Even For Donated Laptops

ரஞ்சன் ராமநாயக்க அறக்கட்டளை நடாத்தும் நிகழ்வு நேற்று(23) கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

https://ibctamil.com/article/customs-charges-duties-even-for-donated-laptops-1721809221

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை, 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி ரத்து!

2 months ago
images-4-1.jpg?resize=300,168 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை,  1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி ரத்து!

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி;இரத்து செய்யப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக அதிகரித்துக் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது

 

இதனையடுத்து பெருந்தோட்ட;நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியதன் அடிப்படையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவைப்;பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் ;இரத்து செய்யப்படுவதாக அறிவித்து தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தரவினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன விடயத்தில் அரசாங்க தரப்பினருக்கும் ;பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையே புதிய இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த நிலையில், முன்னதாக முன்மொழியப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் குறைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1393342

தேர்தலுக்குத் தேவையான நிதியினை விடுவிக்குமாறு நிதி அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

2 months ago
sri-lankas-president-ranil-wickremesingh தேர்தலுக்குத் தேவையான நிதியினை விடுவிக்குமாறு நிதி அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நிதியினை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியினை தாமதமின்றி விடுவிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது தேர்தல் செலவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக மதிப்பிடப்பட்ட நிதி தொடர்பாக 45 பொலிஸ் பிரிவுகளில் இருந்து அறிக்கைகள் கோரப்பட்டுள்ள அதேவேளை அதன் அறிக்கைகள் கிடைக்கபெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

கிடைத்துள்ள அறிக்கைகளின் அடிப்படையில் இறுதி செலவு மதிப்பீடு தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1393346

வரலாற்றில் மிக இருண்ட யுகம் – இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்கிறார் கனேடிய பிரதமர்

2 months ago
justin-trudeau.jpg?resize=750,375 வரலாற்றில் மிக இருண்ட யுகம் – இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்கிறார் கனேடிய பிரதமர்.

பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என கனடா தொடர்ந்தும் கோருவதாகக் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையின் 41வது ஆண்டை நினைவுகூரும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

41 ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் தமிழ் பொது மக்களின் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் ஆரம்பமாகின.

ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டதுடன், பல தமிழர்கள் காயமடைந்தனர். பலர் நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

கறுப்பு ஜூலை எனப்படும் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம், பதற்றங்களை அதிகரித்தது. அது பின்னர் பல தசாப்தகால ஆயுதமோதலாகப் பரிணமித்தது.

 

இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயமாக அது விளங்குகின்றது.

இதனடிப்படையில் மே 18ஆம் திகதியைத் தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் தினமாக அங்கீகரிக்கும் தீர்மானத்தைக் கனடாவின் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியது.

இது அர்த்தமற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களை நினைவுகூர்வதில் கனடாவின் அர்ப்பணிப்பை வெளிக்காட்டுவதாகக் கனேடிய பிரதமர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1393425

 

அடுத்த ஜனாதிபதியை முஸ்லிம்களே தீர்மானிப்பர் – ஹரீஸ் எம்.பி

2 months ago

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி யார் என்பதை இந்த நாட்டு முஸ்லிம் சமூகமே தீர்மானிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவிவித்துள்ளார். கல்முனையில் நடந்த நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

“வடக்கில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் பொழுது தெற்கில் 03 வேட்பாளர்கள் பக்கம் சிங்கள மக்கள் பிரிந்திருக்கும் பொழுது இந்த நாட்டு முஸ்லிம்கள்தான் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிப்பர்.

இதனை எந்த அரசியல் ஆய்வாளரும் மறுக்க மாட்டார்கள். எந்த ஊடகவியலாளரும் மறுக்க மாட்டார்கள். எங்கள் முன்னாள் தலைவர் அஷ்ரப் செய்தது போன்று அந்த வேட்பாளர்களிடம் எழுத்து மூலம் பேரம் பேசும் விடயங்களை ஆவணப்படுத்த வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவிவித்துள்ளார்.

https://madawalaenews.com/1169.html

சிறைக்கைதிகள் நிர்வாணமாக சோதனைக்குட்படுத்தப்படுகிறார்கள் - ரோஹன பண்டார

2 months ago

Published By: VISHNU    24 JUL, 2024 | 01:08 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நீதிமன்ற விசாரணைக்கு சென்று சிறைக்கு திரும்பும் ஆண் மற்றும் பெண் கைதிகள் நிர்வாணமாக சோதனைக்குட்படுத்தப்படுகிறார்கள் என எதிரணியின் உறுப்பினர் ரோஹன பண்டார குறிப்பிட்ட கருத்துக்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட கைதி மற்றும் முறையற்ற வகையில் செயற்பட்ட அதிகாரியின் பெயர் விபரங்களை தாருங்கள் என அமைச்சர் கோரிய போது விபரங்களை வழங்க முடியாது என ரோஹன பண்டார குறிப்பிட்டார். அவ்வாறாயின் நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள், கீழ்த்தரமாக நடந்துக் கொள்ள வேண்டாம் என நீதியமைச்சர் கடுமையாக சாடினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய  எதிர்க்கட்சியின் உறுப்பினர் ரோஹன பண்டார, நீதிமன்ற விசாரணைக்கு சென்று  மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பும் ஆண் மற்றும் பெண் கைதிகள் நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்தப்படுகிறார்கள். வைத்தியர்கள், தாதியர்கள் இல்லாமல் சிறைச்சாலை ஊழியர்கள் கைதிகளை முறையற்ற வகையில்  மல வாயில் முறையற்ற வகையில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

சிறைக்கைதிகளின் மலவாய் பகுதியை சோதனை செய்யும் போது கைதிகளின் சுய கௌரவமும்,உளவியலும் பாதிக்கப்படும்.நவீன தொழினுட்பம் காணப்படுகின்ற நிலையில் முறையான வகையில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். சிறைச்சாலை ஊழியர்களுக்கும் முறையாக வசதிகள் இன்மையால் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த  நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, சிறைச்சாலை தொடர்பில் இவர் குறிப்பிட்ட கருத்து பாரதுரமானதுடன், கீழ்த்தரமானது. இக்கருத்தினால் சிறைக்கைதிகள் அவமானப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலை அதிகாரிகள் மிக மோசமானவர்கள் என்று சித்தரிக்கப்படுகிறது அத்துடன் இலங்கையில் சிறைக்கைதிகளுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் சர்வதேசத்துக்கு குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறான முறையற்ற செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தால் அதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.நாட்டில் பொருளாதார நெருக்கடி என்பதொன்று கிடையாது என்ற நிலையில் இருந்துக் கொண்டு இவர் பேசுகிறார்.சிறைச்சாலை  ஊழியர்களுக்கு 13 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இம்மாதம் முதல் வழங்கப்படும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, நான்  கீழ்த்தரமான விடயத்தை குறிப்பிடவில்லை.சிறைச்சாலையில் இடம்பெறும் கீழ்த்தரமான செயற்பாட்டை உறுதிப்படுத்தியதன் பின்னரே குறிப்பிடுகிறேன்.என்னை விமர்சிக்காமல் உரிய நடவடிக்கைகளை முன்னெடுங்கள் என்றார்.

மீண்டும் எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர், உறுதிப்படுத்தினால் பாதிக்கப்பட்ட கைதி மற்றும் முறையற்ற செயற்பட்ட அதிகாரியின் பெயரை குறிப்பிடுங்கள் அல்லது என்னிடம் தாருங்கள் நான் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கிறேன் என்றார்.

இதற்கு பதிலளித்த ரோஹன பண்டார,அந்த விடயங்களை வழங்க முடியாது என்றார்.

மீண்டும் உரையாற்றிய நீதியமைச்சர் அவ்வாறாயின் நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள், அரச அதிகாரி ஒருவர் முறையற்ற வகையில் செயற்பட முடியாது.ஆகவே  விபரங்களை தாருங்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கிறேன்.விபரங்களை வழங்க முடியாது என்றால் நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள்.கேவலமாக நடந்துக் கொள்ள வேண்டாம் என்று கடுமையாக சாடினார்.

https://www.virakesari.lk/article/189217

தேசபந்து தென்னகோனுக்கு இடைக்காலத் தடை

2 months ago
Deshabandu Tennakoon assumes duties as IGP

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் செயற்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று மீள பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட 8 தரப்பினரால் 9 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

https://thinakkural.lk/article/306697

மத்திய வங்கியின் வட்டி வீதங்கள் குறைப்பு!

2 months ago
central-banks.jpg

மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 25 அடிப்படை புள்ளிகளால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (23) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்கள் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/306701

தேர்தலின் பின்னரும் மறுசீரமைப்புக்களைத் தொடர்வது அவசியம் - உலக வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளர்

2 months ago
23 JUL, 2024 | 03:09 PM
image

(நா.தனுஜா)

சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் தேர்தலின் பின்னர் தாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான மீள்பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றியமைக்கப்போவதாக கூறுகின்றன.

ஆட்சிபீடம் ஏறும் அரசாங்கம் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முற்படுகையில், முன்னைய அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மாற்றியமைக்கக்கூடும். தேர்தலின் பின்னர் தமக்கான நிவாரணங்கள் குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் உயர்வாகக் காணப்படும்.

இருப்பினும் நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை அடுத்து இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. அதனைத்தொடர்ந்து பேணுவதற்கும், மேம்படுத்துவதற்கும் தற்போதைய மறுசீரமைப்புக்களைத் தொடர்வது அவசியமாகும் என உலக வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளர் கிரெகரி ஸ்மித் வலியுறுத்தியுள்ளார். 

தேசிய தேர்தல்கள் நடைபெறவுள்ள பின்னணியில் நாட்டின் பொருளாதார நிலைவரம் குறித்து விளக்கம் வகையில் யூடியூப் தளமொன்றின் கலந்துரையாடலில் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியிருப்பதாவது: 

இதற்கு முன்னர் இலங்கை 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கின்றது. இருப்பினும் 2009 ஆம் ஆண்டின் பின்னரான பொருளாதார நெருக்கடி மற்றும் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகியவையே சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட இரண்டு மிகமோசமான சந்தர்ப்பங்களாகும்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது மிகக்கடினமான செயன்முறையாகும். நெருக்கடிகளின்போது நாணய நிதியம் உதவ முன்வந்தாலும், அதற்கு ஈடாக மிகக்கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும். எது எவ்வாறிருப்பினும் இலங்கை கடந்தகால நெருக்கடியிலிருந்து தற்போது படிப்படியாக மீட்சியடைய ஆரம்பித்துள்ளது.   

இலங்கையின் பொருளாதாரம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 6 சதவீத பொருளாதார வளர்ச்சி உள்ளடங்கலாக மிகச்சிறந்த நேர்மறை குறிகாட்டிகளையே காண்பித்தது. இருப்பினும் 2018 ஆம் ஆண்டளவில் அதற்கு முன்னர் பெற்ற அதிகளவிலான கடன்கள் சுமையாக மாறத்தொடங்கிவிட்டது.

இப்பொருளாதார நெருக்கடிக்கு கொவிட் - 19 பெருந்தொற்றுப்பரவல் மற்றும் அதன்விளைவாக சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஏற்பட்ட வருமான இழப்பு என்பன தூண்டுதலாக அமைந்திருந்தாலும், நீண்டகாலமாக மறுசீரமைப்பு செயன்முறைகளில் நிலவிய பின்னடைவு, பெருமளவிலான வரிக்குறைப்பு, ஏற்றுமதிகள் மீதான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடு, வெளிநாட்டு முதலீடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பன இந்நெருக்கடி தோற்றம் பெறுவதற்கு அடிப்படையாக அமைந்தன. 

இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டில் பல்வேறு துறைகளிலும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதில் அரசாங்கம் சிறப்பாக செயற்பட்டுவருகின்றது. இருப்பினும் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்ப்பதற்கு அம்முதலீட்டாளர்களைக் கவரக்கூடிய பொருத்தமான தெரிவுகள் மற்றும் சலுகைகளை வழங்கவேண்டும். 

அதேவேளை கடந்த சில மாத அவதானிப்புக்களின் பிரகாரம் இலங்கை உரியவாறான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து, சரியான பாதையில் பயணிக்கின்றது. குறிப்பாக நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதற்குத் தேவையான மறுசீரமைப்புக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

அவசியமான சட்டங்கள் உருவாக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இருப்பினும் இம்மறுசீரமைப்புக்களையும், சட்டங்களையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதே கடினமானதாகும். இருப்பினும் அவற்றை உரியவாறு அமுல்படுத்துவதன் ஊடாக நிலையான நேர்மறை மாற்றத்தை அடைந்துகொள்ளமுடியும். 

மேலும் சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் தேர்தலின் பின்னர் தாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான மீள்பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றியமைக்கப்போவதாக கூறுகின்றன.

ஆட்சிபீடம் ஏறும் அரசாங்கம் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முற்படுகையில், முன்னைய அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மாற்றியமைக்கக்கூடும். தேர்தலின் பின்னர் தமக்கான நிவாரணங்கள் குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் உயர்வாகக் காணப்படும். இருப்பினும் நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை அடுத்து இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. அதனைத்தொடர்ந்து பேணுவதற்கும், மேம்படுத்துவதற்கும் தற்போதைய மறுசீரமைப்புக்களைத் தொடர்வது அவசியமாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/189175

இலங்கையர்களுக்கு போலந்தில் வேலைவாய்ப்பு!

2 months ago
polad.jpg

இலங்கை தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் வேலை வழங்குவதற்கு போலந்து கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.

போலந்துக்கு விஜயம் செய்த பின்னர் தனது “எக்ஸ்” தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.

இலங்கையர்கள் போலந்திற்குள் நுழைவதற்கான விசா வசதிகளை தளர்த்துவது குறித்தும் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தனது கோரிக்கைகள் தொடர்பில் போலந்து வெளிவிவகார அமைச்சரின் பதில்களுக்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/306662

வங்கிகளில் தங்க ஆபரணங்களை அடகு வைத்தோருக்கு அரசாங்கத்திடமிருந்து விசேட சலுகை!

2 months ago
23 JUL, 2024 | 09:10 PM
image

(எம்.மனோசித்ரா)

வங்கிகளில் தங்க ஆபரணங்களை அடகு வைத்த நபர்களுக்கு சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியில் அனைத்து பிரிவுகளும் நேரடியாக அல்லது மறைமுகமாக பாதகமான தாக்கத்துக்கு உள்ளானார்கள். 

அதன் விளைவாக தங்க நகைகளை அடகு வைத்தல் வேகமாக அதிகரித்துள்ளது. 2019 ஆண்டில் 210 பில்லியன் ரூபா அளவிலிருந்த அடகு முற்பண நிலுவைத் தொகை 2024 ஆண்டு மார்ச் மாதமளவில் 571 பில்லியன் வரை அதிகரித்து 172 வீத அதிகரிப்பை காட்டியுள்ளது. 

குறித்த நிலையை கருத்திற் கொண்டு உரிமம் பெற்ற வங்கிகள் மூலம் அடகு முற்பணம் பெற்றுள்ள குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அதற்கமைய, வாடிக்கையாளர்கள் தனிநபர் அடிப்படையில் 2024 ஜூன் மாதம் 30 திகதி அல்லது அதற்கு முன்னர் உரிமம் பெற்ற வங்கிகளில் பெற்ற முற்பணத்துக்கு வருடாந்தம் 10 வீதம் உச்ச எல்லைக்கு உட்பட்ட சலுகை வட்டியை திறைசேரியிலிருந்து வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/189205

முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

2 months ago
Gazette-300x200.jpg

நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொதுமக்களின் அமைதியை பேணும் நோக்கில், முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது.

அதற்கமைய இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் சகல உறுப்பினர்களும் நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று(22) முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/306679

Checked
Sat, 09/28/2024 - 17:19
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr