ஊர்ப்புதினம்

என்னை படுகொலை செய்ய இராஜாங்க அமைச்சர் சதி உரிய விசாரணைகளை முன்னெடுங்கள் - சாணக்கியன் சபையில் வலியுறுத்தல்!

2 months ago

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

என்னை படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி செய்வதாக இணையத்தள செய்தி சேவை ஒன்றில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தி குறித்து பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர் மனித படுகொலையுடன் தொடர்புடையவர்  என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை (23)  சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் உரையாற்றியதாவது, 

என்னை படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி செய்வதை வெளிநாட்டு புலனாய்வுப்பிரிவொன்று கண்டுபிடித்துள்ளதாக தனியார் இணையத்தள செய்தித் சேவை கடந்த 20 ஆம் திகதி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அச்செய்தி பாரதூரமானது.இந்த விடயம் தொடர்பில் நான் சபாநாயகருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்.  

 என்னை படுகொலை செய்வதற்கு சதி செய்வதாக   கூறப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை  படுகொலை செய்தமை  மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த செய்தி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்துகின்றேன் என்றார். 

 

என்னை படுகொலை செய்ய இராஜாங்க அமைச்சர் சதி உரிய விசாரணைகளை முன்னெடுங்கள் - சாணக்கியன் சபையில் வலியுறுத்தல்! | Virakesari.lk

ஜனாஸா எரிப்புக்கும் கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் மன்னிப்பு கோருகிறோம் - நீதியமைச்சர்

2 months ago

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில்  தகனம் செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் என்ற ரீதியில் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம்.

அத்துடன் 41 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் தமிழ் மக்களிடம் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் மன்னிப்பு கோருகிறேன் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (23) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் ஊடாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிறைவேற்றுத்துறையின் ஒருசில அதிகாரங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அண்மையில் எழுத்து மூலமாக அறிவுறுத்தியுள்ளேன்.இச்சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுடனும்,சுயாதீன தரப்பினர்களுக்கும் தெளிவுபடுத்துவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

அரசியலமைப்பினால் தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக்கப்பட்டுள்ளது.ஆணைக்குழுவின் சுயாதீனத்துக்கு எதிராகச் செயற்படும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆகவே ஆணைக்குழு சுயாதீனமாகச் செயற்படலாம்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் போது உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டன.இவ்விடயம் குறித்து நீர்ப்பாசனத்துறை அமைச்சு அறிவியல் ரீதியில் முன்னெடுத்த ஆய்வு அறிக்கைக்கு அமைய  வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி,நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட நான்  ஒன்றிணைந்து கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில்  தகனம் செய்யப்பட்டமைக்கு  மன்னிப்பு கோரும் வகையில்  அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.ஆகவே முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம்.அத்துடன் கவலையடைகிறோம்.

1983 ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு கரும் புள்ளியாக காணப்படுகிறது.41 வருடங்களுக்கு முன்னர் நேர்ந்த  சம்பவங்கள்  பாரிய விளைவுகளை ஏற்படுத்தின.அக்காலப்பகுதியில் நாங்கள் அரசியலில் ஈடுபடவில்லை.இருப்பினும் நாட்டு பிரஜை என்ற ரீதியில் தமிழர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றார்.

ஜனாஸா எரிப்புக்கும் கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் மன்னிப்பு கோருகிறோம் - நீதியமைச்சர் | Virakesari.lk

யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

2 months ago
23 JUL, 2024 | 04:35 PM
image
 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று செவ்வாய்க்கிழமை (23) முன்னெடுத்தனர். 

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கலைத்தூது மண்டபத்திற்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் ஆனாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் நாட்களில் சுழற்சி முறையில் முன்னெடுக்கவுள்ளதாக உறவுகள் தெரிவித்தனர்.

IMG_9331.jpg

IMG_9303.jpg

IMG_9296.jpg

IMG_9293.jpg

IMG_9287.jpg

https://www.virakesari.lk/article/189194

கோட்டாபய 2022 இல் மாலைதீவிற்கு தப்பிச்சசெல்வதற்கு இலங்கை விமானப்படையே உதவியது - விமானப்படை தகவல்

2 months ago

Published By: RAJEEBAN   23 JUL, 2024 | 02:27 PM

image

அரகலய நாட்களின் போது  கோட்டாபய ராஜபக்ச மாலைதீவிற்கு தப்பிச்செல்வதற்கு இலங்கை விமானப்படையின் விமானமும்  நிதியும்  பயன்படுத்தப்பட்டமை தகவல்அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

2022 ஜூலை13ம் திகதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை விமானப்படை விமானம் மூலமே மாலைதீவிற்கு தப்பிச்சென்றுள்ளார்.

file_669a929773ec5-696x1472.jpg

அரகலய போராட்டத்தின் போது  ஆர்ப்பாட்டக்காரர்களும் பொதுமக்களும்  ஜனாதிபதி மாளிகையை 2022 ஜூலை 9ம் திகதி ஆக்கிரமித்ததை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் கோட்டாபய மாலைதீவிற்கு தப்பிச்சென்றார்.

இலங்கை விமானப்படையின் விமானத்தை பயன்படுத்தியே அவர் மாலைதீவிற்கு சென்றார், திறைசேரி பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட நிதி இதற்கு பயன்படுத்தப்பட்டது என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

எனினும் இதற்கான செலவு குறித்து விமானப்படை எந்த தகவலையும் வழங்கவில்லை.

ஜனாதிபதியே நாட்டின் தலைவர் முப்படைகளின் தலைவர் என்பதால் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள ஏற்பாட்டின் படி ஜனாதிபதியின் போக்குவரத்திற்கான எரிபொருள் பயன்பாட்டை நாங்கள் கணக்கிடவில்லை என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

நாட்டின் தலைவர் மிக முக்கிய பிரமுகர் என்பதற்குள் அடங்குவதால் ஜனாதிபதியின் போக்குவரத்திற்கான எரிபொருள் பயன்பாட்டை நாங்கள் கணக்கிடவில்லை என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

எனினும் இந்த விவகாரத்தின் இரகசிய தன்மை காரணமாக  அனுமதி வழங்கப்பட்டமைக்கான ஆவணத்தை இலங்கை விமானப்படை பகிர்ந்துகொள்ள மறுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/189169

9 மாகாணங்களுக்கும் சர்வதேச தரத்திலான 9 தாதியர் பயிற்சி நிலையங்களை ஸ்தாபிப்பேன் - சஜித் பிரேமதாச!

2 months ago
23 JUL, 2024 | 01:44 PM
image
 

ஒரு நாட்டின் குடிமக்களின் மனித வள மூலதன வளர்ச்சியை மேம்படுத்தக் கூடிய சிறந்த திட்டம் கிராமத்திலும் நகரத்திலும் அமைந்து காணப்படும் பாடசாலைகளை வலுப்படுத்துவதாகும். பிள்ளைகளுக்கு தரமான தரத்திலான சர்வதேச கல்வியை வழங்குவதன் மூலம் ஸ்மார்ட் குடிமக்களை உருவாக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

WhatsApp_Image_2024-07-23_at_04.21.49__1

ஸ்மார்ட் குடிமக்களைக் கொண்ட ஒரு நாட்டில், மனித மூலதனத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டு பணியாளர்கள் எமது நாட்டிற்காக பெரும் தியாகங்களைச் செய்து, அந்நியசெலாவணியை ஈட்டித் தருகின்றனர்.

Health care given எனும் தொழிற்துறையின் கீழ் கூடிய வருமானம் சம்பளம் ஈட்டலாம். என்றபடியால், இதன் ஆரம்ப கட்டமாக, அரச-தனியார் கூட்டாண்மைத் திட்டங்களின் ஊடாக நிபுணத்துவம் வாய்ந்த தாதியர்களாக மாற்றும் நடவடிக்கையின் நிமித்தம் 9 மாகாணங்களிலும் சர்வதேச தரத்திலான 9   தாதியர் பயிற்சி நிலையங்களை நிறுவுவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ், திறன் மற்றும் தகுதியை மையமாகக் கொண்ட இலக்கு வைக்கப்பட்ட இத்துறைசார் ஏராளமான வேலைகள் எமது நாடு பெறும் வாய்ப்பு காணப்படுகிறது. பிலிப்பைன்ஸில் இந்தப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதால், நாமும் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 361 ஆவது கட்டமாக 11,77,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கம்பஹா, ஜா-எல, நாகொட புனித ஜோன் பெப்டிஸ்ட் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 22 ஆம் திகதி இடம்பெற்றது.

WhatsApp_Image_2024-07-23_at_04.21.46__3

WhatsApp_Image_2024-07-23_at_04.21.45__1

WhatsApp_Image_2024-07-23_at_04.21.44__2

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

அவ்வாறே, பிரதேச செயலக மட்டத்தில் இளைஞர் அபிவிருத்தி நிலையங்கள் தாபிக்கப்படும். ஒவ்வொரு மாகாணத்திலும் சர்வதேச தாதியர் பயிற்சி நிலையங்கள்  நிறுவப்படுவது போல், இந்தியாவில் காணப்படுவது போலான IIT, IIM நிறுவனங்கள் நிறுவப்பட்டு முக்கியமான மனித மூலதனம் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் அறிவால் ஆயுதம் ஏந்திய தலைமுறையை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

WhatsApp_Image_2024-07-23_at_04.21.42__2

WhatsApp_Image_2024-07-23_at_04.21.41__1

WhatsApp_Image_2024-07-23_at_04.21.48__1

WhatsApp_Image_2024-07-23_at_04.21.46__2

WhatsApp_Image_2024-07-23_at_04.21.40__1

WhatsApp_Image_2024-07-23_at_04.21.44__3

https://www.virakesari.lk/article/189155

இலங்கையில் 20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை

2 months ago
Water.jpg

இந்நாட்டு சனத்தொகையில் 20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை என தெரியவந்துள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, இது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் உள்ள 16.1% வீதமான மக்களுக்கான குடிநீரின் பிரதான ஆதாரம் பாதுகாப்பற்ற கிணறுதான் என்பதும் தெரியவந்துள்ளது.

இலங்கை மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொடர்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, உள்நாட்டு சனத்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வளாகங்களில் பாதுகாப்பான குடிநீர் சேவையைப் பெற முடியும் என தெரியவந்துள்ளது.

நகர்ப்புற மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களும், கிராமப்புற மக்களில் நான்கில் ஒரு பகுதியினரும் பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துவதாகவும், தோட்டப்புற மக்களில் 3.1% மட்டுமே பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்நாட்டு மக்களில் 70% க்கும் அதிகமானோர் தங்கள் வளாகங்களில் மேம்படுத்தப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தி குடிநீரைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையின் சனத்தொகையில் 6.3% அடிப்படை சுகாதார சேவைகளைப் பயன்படுத்துவதில்லை என்றும் 0.1% வீதமான மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதாகவும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் 84.9 வீதமான குடும்ப மக்கள் மூடிய கழிவறைகளைப் பயன்படுத்துவதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளது.

https://thinakkural.lk/article/306642

கறுப்பு ஜூலை என்பது ஈழத்தமிழர்களின் காயாத இரத்தம் – இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு

2 months ago
கறுப்பு ஜூலை என்பது ஈழத்தமிழர்களின் காயாத இரத்தம் – இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு கறுப்பு ஜூலை என்பது ஈழத்தமிழர்களின் காயாத இரத்தம் – இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு.

83 கலவரத்தின் அத்திவாரம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன..??
கறுப்பு ஜூலை இனக்கலவரம் இடம்பெற்று இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

july-83.jpg?resize=600,305

 

ஈழத் தமிழர் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி என்பது பாரிய திருப்பத்தை எற்படுத்திய நாள்.
தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்ட நாள் என்றே கூறவேண்டும்.

நாட்டில் மீண்டும் கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாமல் இருப்பதற்கான கட்டமைப்பை, அரசாங்கம் உருவாகியுள்ளதா என்பதே தற்போதைய காலகட்டத்தில் முதலாவது கேள்வியாக எமது கண்முன்னே எழுந்து நிற்கின்றது.

1983ஆம் ஆண்டு 23ஆம் திகதியை கறுப்பு ஜூலை என பிரகடனப்படுத்தியுள்ள, இந்த பௌத்த மேலாதிக்க அதிகாரவர்க்த்தினர் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கியுள்ளார்களா என்ற கேள்வியும் எழுப்படுகின்றது.

நாட்டில் சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த ஒருசில அரசியல்வாதிகள், மற்றும் அரச தலைவர்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் தோளில் சுமந்து கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் முதன்முறையாக வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன.

black-july.jpg?resize=600,411

இதனை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி மிலேட்சத்தனமான முறையில் இனகலவரம் அரங்கேற்றப்பட்டது.
இந்த இனகலவரம் காரணமாக தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்களுக்கு இடையில் இரும்பு வேலியை வலுவாக தோற்றுவித்தது.

1983 ஜூலை 23 ஆம் திகதியன்று அதிகாலை யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவச் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்த 13 இராணுவத்தினரின் சடலங்களும் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிங்கள மக்கள் அதிகமான ஒன்றுகூடியிருந்தனர்.

அதனால் கொழும்பில் 41 வருடங்களுக்கு முன்னர் இதே ஒரு நாளில் பதற்றமும் நிலவியது.
இதன் பின்னரே தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமானது.

Diwi0TLVAAAiJHp.jpg?w=481

கொழும்பு நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு, வீடுகள், மற்றும் மிகப்பெரிய வர்த்தக நிலையங்கள் பெரும்பான்மை இனத்தவர்களினால் எரிக்கப்பட்டன.

 

நிலைமை மோசமடைந்ததை போதும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஜேஆர்.ஜயவர்தனவினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பது இன்றளவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த கிளர்ச்சிச் சூழலை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஜே.வி.பி உட்பட மூன்று கட்சிகளுக்கு அப்போதைய அரசாங்கம் தடை விதித்திருந்தது.

கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என வர்னிக்கப்படுகின்ற இந்த கலவரத்தை இன்றும் உலகிலுள்ள அனைத்து தமிழர்களும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

https://athavannews.com/2024/1393294

வட்டியில்லாக் கடன்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

2 months ago
Loan-fe.webp?resize=600,320 வட்டியில்லாக் கடன்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறிப்பாக, தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் ஊடாக வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படவுள்ளன.

 

இதற்கு இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவை பங்களிப்பை வழங்குகின்றன. மேலும் எதிர்காலத்தில் மக்கள் வங்கியுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 650 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டாம் கட்டமாக 10 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய நவீனமயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்த 75 பிரதேச செயலகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

விவசாய நவீனமயமாக்கல் கடன் திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடன் பொறிமுறைமையொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

கடன் சலுகைக் காலம் அதிகபட்சம் 06 மாதங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடன் சலுகைக் காலம் உட்பட கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய அதிகபட்ச காலம் 05 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1393258

யுக்திய : 24 மணித்தியாலங்களில் 732 சந்தேக நபர்கள் கைது !

2 months ago
image_2af9d74749.jpg?resize=750,375&ssl= யுக்திய : 24 மணித்தியாலங்களில் 732 சந்தேக நபர்கள் கைது !

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ், 732 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 719 ஆண்களும் 13 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 17 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 127 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

 

குறித்த சந்தேகநபர்கள் அனைவரும், போதைப்பொருள் குற்றம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து, 178 கிராம் 303 மில்லிகிராம் ஹெரோயின், 327 கிராம் 281 மில்லிகிராம் ஐஸ், 1,907 கிராம் 588 மில்லிகிராம் கஞ்சா மற்றும் 3,405 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1393250

164 இலங்கையர்களுக்கு எதிராகச் சிவப்பு பிடிவிறாந்து!

2 months ago
court-order.jpg?resize=750,375 164 இலங்கையர்களுக்கு எதிராகச் சிவப்பு பிடிவிறாந்து!

நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட பின்னர், தப்பிச்சென்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொலிஸாரிடம் இவ்வாறு சிவப்பு பிடிவிறாந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவிதுள்ளனர்.

பாதாள உலகக் குழுவின் செயற்பாடுகள், போதைப் பொருள் வர்த்தகம், போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இவ்வாறு சிவப்பு பிடிவிறாந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. இந்தக் குற்றவாளிகளில் அநேகமானவர்கள் டுபாயில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட வேறும் நாடுகளிலும் மேலும் சில குற்றவாளிகள் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கிளப் வசந்த படுகொலையுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கஞ்சிபானை இம்ரான் பிரான்சில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

அத்துடன் கஞ்சிபானை இம்ரானுடன், குடு அஞ்சு என்ற மற்றுமொரு பாதாள உலகக் குழு தலைவரும் பிரான்ஸில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த சந்தேக நபர்களை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1393219

திருகோணமலை – உட்துறைமுக வீதியில் மேற்கொள்ளப்படும் நடைபாதை விஸ்தரிப்புக்கு மக்கள் எதிர்ப்பு

2 months ago

Published By: DIGITAL DESK 7   23 JUL, 2024 | 09:28 AM

image

(துரைநாயகம் சஞ்சீவன்)

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான திருகோணமலை – உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையின் அளவை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 600 மீற்றர் வரையான நடைபாதையின் அகலத்தை 6அடி 3அங்குலம் வரை அதிகரிப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றன. இதற்காக 1கோடியே 50 இலட்சம் ரூபா மாகாணசபையின் நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த, வீதியானது சிங்கள மகாவித்தியாலயம் தொடக்கம் துறைமுக பொலிஸ் நிலையம் வரையான 1078 மீற்றர் தூரம் நீளமான நடைபாதையின் அளவை 6அடி 3அங்குலம் வரை வீதியின் உட்புறமாக அகலமாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக 600 மீற்றர் வரையான தூரத்தை விஸ்தரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் புதிதாக போடப்பட்ட குறித்த நடைபாதையானது முற்றாக உடைக்கப்பட்டு வருகின்றது.

இதனால் அனைத்து மக்களும் இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வீதிக்கு மாகாணசபையின் பெருமளவான நிதி செலவிடப்படுவதாகவும், அண்ணளவாக 1 தொடக்கம் 2 அடி அகலமாக்குவதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையினை முற்றாக உடைத்து வருவதாகவும் மக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

அத்துடன் மாகாண சபையின்கீழ் உள்ள பெருமளவான வீதிகள் பயன்படுத்த முடியாமல் செப்பனிட வேண்டியும், புணரமைக்கப்பட வேண்டியும் உள்ள நிலையில் அவற்றை கருத்தில் கொள்ளாது பெருமளவான மக்களுடைய பணம் வீண் செலவு செய்யப்படுவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

WhatsApp_Image_2024-07-23_at_09.17.37.jp

WhatsApp_Image_2024-07-23_at_09.17.38.jp

WhatsApp_Image_2024-07-23_at_09.17.39.jp

WhatsApp_Image_2024-07-23_at_09.17.40.jp

https://www.virakesari.lk/article/189130

குற்றச் செயல்களுக்கான தண்டப்பணம் அதிகபட்சம் ஒரு மில்லியன் ரூபா: சட்டத்தில் திருத்தம்

2 months ago
ஒரு மில்லியன் ரூபாவாக உயரும் அபராதத் தொகை: சட்டத்தில் திருத்தம்

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றினால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச அபராதத் தொகையை அதிகரிக்கும் சட்ட மூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அபராதத் தொகையை அதிகரிக்கும் நோக்கில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeydasa Rajapaksha) தாக்கல் செய்த சட்ட மூலம், வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம்

இதுவரையில் 1500 ரூபாவாக காணப்பட்ட அபராதத் தொகை ஒரு மில்லியன் ரூபாவாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

1500-fine-will-be-increaed-to-1-million  

1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் சட்டத்தினை திருத்தும் நோக்கில் சட்ட மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் சில சரத்துக்கள் இந்த சட்ட மூலத்தின் ஊடாக திருத்தப்பட்டுள்ளது.

அபராத தொகை

நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச அபராதத் தொகையும் அதிகரிக்கும் வகையில் சட்ட மூலத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

1500-fine-will-be-increaed-to-1-million

குழப்பம் விளைவித்தல் தொடர்பில் விதிக்கப்பட்ட அபராதத் தொகை 100 ரூபாவிலிருந்து பத்தாயிரம் ரூபாவாக உயர்த்துவதற்கு யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. 

https://tamilwin.com/article/1500-fine-will-be-increaed-to-1-million-1721664072?itm_source=parsely-api

பாடப் புத்தகங்களை பிரதேச களஞ்சியங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று முதல்…

2 months ago
susil-premajayantha-1-300x200.jpg

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்கி ஆசிரியர் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை 100 வீதம் வழங்குவதாக சீன அரசாங்கம் அமைச்சுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் புத்தகங்களை பிரதேச களஞ்சியங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும்.

பிரதான மற்றும் தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் 17 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு கடந்த காலத்தில் நிறுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது பல்கலைக்கழக கட்டமைப்புக்கும் நிர்மாணத் துறைக்கும் மிகவும் முக்கியமானது என்பதைக் கூற வேண்டும்.

மேலும், கல்வித்துறையில் ஆசிரியர் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பான இரண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அதன் கீழ், ஆசிரியர்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்டும். அதன் மூலம் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க முடியும். அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பிரகாரம், எதிர்வரும் புதன்கிழமைக்குள், உரிய உத்தரவுக் கடிதங்கள் அமைச்சுக்கு கிடைத்த பின்னர், மாகாண அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

அத்துடன், இந்தக் காலப்பகுதியில் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் சுமார் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்க ஏற்பாடு செய்தோம். பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வுகளை வழங்குவதில் வெற்றி பெற்றுள்ளோம். மேலும், 2700 Smart Board களை, பாடசாலைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முழுமையான பாடசாலை வலயமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவதே எமது திட்டமாகும். மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க 400 மில்லியன் டொலர்களை வழங்க திட்டமிட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/306628

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி மக்களின் வரிப்பணத்தை வீண்விரயமாக்கத் தயாரா - ஜி.எல்.பீரிஸ் கேள்வி

2 months ago
22 JUL, 2024 | 05:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு தயார் என்று ஜனாதிபதி குறிப்பிடலாம் ஆனால் அதற்கு அவரது தனிப்பட்ட நிதி பயன்படுத்தப்படமாட்டாது. நாட்டு மக்களின் வரிப்பணமே பயன்படுத்தப்படும். மக்களின் வரிப்பணத்தை வீண்விரயம் செய்ய மக்கள் பிரதிநிதிகள் தயாராக உள்ளார்களா என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிறைவுப் பெறும் வரை அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட வேண்டாம் என தனது செயலாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கடந்த 18 ஆம் திகதி குறிப்பிட்ட நிலையில் 19 ஆம் திகதி சட்டமூலத்தை ஜனாதிபதி வர்த்தமானியில் வெளியிட்டார்.

ஜனாதிபதியின் செயற்பாட்டினால் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெறுவதுடன்இசர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும்.

நிதி பற்றாக்குறை காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.நாட்டு மக்கள் மீது முறையற்ற வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளது.கடினமான முறையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில் பல மில்லியன் ரூபா செலவு செய்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் இயலுமை அரசாங்கத்திடம் உள்ளதா?

சர்வஜன வாக்கெடுப்புக்கு தயார் என்று ஜனாதிபதி குறிப்பிடலாம் ஆனால் அதற்கு அவரது தனிப்பட்ட நிதி பயன்படுத்தப்படமாட்டாது.நாட்டு மக்களின் வரிப்பணமே பயன்படுத்தப்படும்.மக்களின் வரிப்பணத்தை வீண்விரயம் செய்ய மக்கள் பிரதிநிதிகள் தயாராக உள்ளார்களா?

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.10 ஆண்டுகள் நிறைவுப் பெறவுள்ள நிலையில் உறக்கத்தில் இருந்து எழுந்ததைப் போன்று சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும்  என்று குறிப்பிடுகிறார்.பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் பல மில்லியன் ரூபா செலவு செய்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வது பயனற்றது என்றார்.

https://www.virakesari.lk/article/189102

மண்ணித்தலை,புராதன இந்து ஆலயங்கள் அடுத்த மாதம் சீரமைப்பு!

2 months ago

மண்ணித்தலை,புராதன இந்து ஆலயங்கள் அடுத்த மாதம் சீரமைப்பு!

தொன்மை வாய்ந்த மண்ணித்தலை சிவன் ஆலயம் மற்றும் கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயம் என்பவற்றின் சீரமைப்புப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை தொல்லியல் திணைக்களத்தால் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

சோழர் காலத்துக்குரியது என நம்பப்படும் மண்ணித்தலை சிவன் கோவில் மற்றும் கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயம் என்பன தொன்மை வாய்ந்த தலங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அடையாளப்படுத்தபட்டிருந்த நிலையில், அவற்றின் புனரமைப்புக்காக 8 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதையடுத்தே அடுத்தமாதம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.   (ப)

#Eelam #srilanka #jaffna #uthayan #digital #newuthayan #sanjeevi #newupdet

மண்ணித்தலை,புராதன இந்து ஆலயங்கள் அடுத்த மாதம் சீரமைப்பு! (newuthayan.com)

பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024”

2 months ago

பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024”

தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கண்காட்சி முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 23 முதல் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கண்காட்சியை முற்றிலும் இலவசமாக பார்வையிடமுடியும். முதல் நாள் நிகழ்வில் யாழ். இந்திய துணைவேந்தர், வடக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதியாக கலந்துகொள்வார்கள். இரண்டாம் நாள் கடற்தொழில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே ஏற்பாட்டாளர்கள் அதனை அறிவித்துள்ளனர்.

கண்காட்சி தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கட்டுமானம், பிற தொழில் துறைகளில் பங்காளர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த ஒரு தளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 200இற்கும் மேற்பட்ட காட்சி கூடங்களுடன் பல்வேறு நிபுணர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள், கட்டுமானம் மற்றும் பிற தொழில்களை இணைந்து மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைக்கப்படுகின்றனர் இதேசமயம், சிறு தொழில் முயற்சியாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பிரபலப்படுத்தவும் உதவும்.

வடக்கு, தெற்கு வர்த்தக இணைப்புகளை வலுப்படுத்தும் இந்த கண்காட்சியில் கட்டுமானம் சார் இயந்திரங்கள், உபகரணங்கள், விவசாயம் சார் உபகரணங்கள், மின் உபகரணங்கள், கைவினை பொருட்கள், செரமிக் மற்றும் கண்ணாடிப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சுகாதாரம், உணவு மற்றும் உடைகள் போன்ற பல துறைகளில் உள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தவுள்ளன.

இந்தக் கண்காட்சியில், பொருட்கள் சேவைகளை 40 வீதம் வரையில் விலைக்கழிவுடன் பெற்றுக்கொள்ள முடியும். வடக்கைச் சேர்ந்த தொழில்
முயற்சியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காட்சிக்கூடங்களை வழங்கவுள்ளோம். -என்றனர்

பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” (newuthayan.com)

ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிடலாம் – சன்ன ஜயசுமன!

2 months ago
Channa.jpg?resize=590,375 ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிடலாம் – சன்ன ஜயசுமன!

”22 ஆம் அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும்”  என முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நொச்சியாகம பிரதேசத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத்  தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” 22 ஆம் திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால். அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு வெளியிடப்படும்.

உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைப்பதற்கு மக்கள் கருத்துக்கணிப்பு கோரப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் பரிந்துரை முன்வைத்தால் ஜனாதிபதி அதற்கு ஏதேனும் சூழ்ச்சிகளை மேற்கொள்வார்.

மறுபுறம் 22 ஆம் திருத்தத்தை நாடாளுமன்றில் 3 இல் 2 பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சாத்தியம் உள்ளது.

தற்போதைய நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை தற்போது அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் விரும்பமாட்டார்கள்” இவ்வாறு முன்னாள் அமைச்சர் சன்னஜயசுமன தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1393114

அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்ய உத்தரவு

2 months ago
IOP.jpg?resize=750,375 அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்ய உத்தரவு.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

களனிவெலி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று காலை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்தரப்பினர் முன்நிலையாகாத நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

குறிப்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் சம்வத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக சபர்களை கைதுசெய்து அடுத்த மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

 

இன்றைய தினம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வருகை தராத நிலையில் இது தொடர்பான மேலதிக தகவல்களை நுவரெலியா பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தகவல்களை பரிசீலனை செய்த நீதிபதி ஜயமினி அம்பகஹவத்த வழக்கின் பிரதான சந்தேக நபரான அமைச்சர் ஜீவன்

தொண்டமான் உள்ளிட்ட நபர்களை கைதுசெய்து ஒகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1393139

சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கலை மேம்படுத்த ஜப்பானின் ஒத்துழைப்புடன் குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகள்

2 months ago
22 JUL, 2024 | 01:17 PM
image
 

இலங்கை முழுவதிலும் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் முறைமையை மேம்படுத்துவதற்காக யுனிசெப் நிறுவனம் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுகாதார அமைச்சிற்கு ஒன்பது குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகளை கையளித்தது. 

இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான செயல்படும் பிரதிநிதி பேகோனா அரேலானோ ஆகியோரின் பங்கேற்புடன் சுகாதார அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரனவிடம் அந்த ட்ரக் வண்டிகள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய வைத்தியர் ரமேஷ் பதிரன, இலங்கையின் சுகாதார முறைமையின் மிகவும் முக்கிய தூண்களில் ஒன்றான நிர்ப்பீடனமாக்கல் செயற்றிட்டத்தினை மேலும் பலப்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் மற்றும் யுனிசெப் நிறுவனம் இணைந்து வழங்கும் இந்த ஒத்துழைப்பினை மனப்பூர்வமாக வரவேற்பதாக கூறி, இது தடுப்பூசிகளை பாதுகாப்பாக உரிய நேரத்திற்கே கொண்டு செல்வதற்கு சுகாதார அமைச்சிற்கு துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஜப்பான் அரசாங்கம் 2021ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் காலத்துக்குக் காலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான குளிர்ச் சங்கிலி உபகரணத் தொகுதிகளை இலங்கையின் சுகாதார அமைச்சிற்கு வழங்கி வந்துள்ளன. 

தடுப்பூசிகளை பாதுகாப்பான வெப்பநிலையில் களஞ்சியப்படுத்துவதற்காக பெரிய நடமாடும் குளிரூட்டப்பட்ட அறைகள், எடுத்துச் செல்லத்தக்க தடுப்பூசி கொள்கலன்கள் மற்றும் வெப்பநிலைக் கண்காணிப்பு மானிகள் என்பன ஏற்கனவே கையளிக்கப்பட்ட குளிர்ச் சங்கிலி உபகரணங்களாகும். அதன் தொடராகவே இன்று குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகள் கையளிக்கப்படுகின்றன.

இங்கு உரையாற்றிய இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் திரு. மிசுகோஷி ஹிடேகி, “இலங்கையின் சுகாதார அமைச்சிற்கு ஒன்பது குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகளை கையளிப்பதில் நான் பெருமிதம்கொள்கிறேன். இது இலங்கையின் பொதுச் சுகாதார சேவைகளை பலப்படுத்துவதற்காக ஜப்பான் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற அர்ப்பணிப்பினை பறைசாட்டுமென உறுதியாக நம்புகிறேன். 

நாடு முழுவதும் தடுப்பூசிகளை தடையின்றி கொண்டு செல்வதற்கான முக்கியமான போக்குவரத்துச் சாதனமாக இந்த ட்ரக் வண்டிகள் விளங்குமென்பதோடு, ஒவ்வொரு சமூகமும் தடுக்கக்கூடிய நோய்களுக்கெதிராக அவசியமான பாதுகாப்பினைப் பெறுவதை உறுதி செய்யும்” என்றும் குறிப்பிட்டார்.

தடுப்பூசிகளை மத்திய களஞ்சிய அறையிலிருந்து பிராந்திய களஞ்சிய அறைகளுக்கும் அங்கிருந்து சுகாதார வசதிகளை வழங்கும்  நிலையங்களுக்கும் கொண்டு செல்வதற்கு இந்த ட்ரக் வண்டிகள் உதவும். தடுப்பூசி கொள்கலன்கள் மற்றும் குளிர் பெட்டிகள் ஏற்கனவே சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

“தடுப்பூசியேற்றல் சிறுவர்களை தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாப்பதுடன், அவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு துணைநிற்கின்றது. தடுப்பூசிகள் வெப்பநிலை உணர்திறன் கொண்டவை என்பதால் அவற்றை பொருத்தமான நிலைமைகளில் கொண்டு செல்வது அவசியம். 

எனவே, இலங்கையின் ஒவ்வொரு மூலையிலும் வாழ்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் சரியான தடுப்பூசி சரியான நேரத்தில் சென்றடைவதற்கு இந்த ட்ரக் வண்டிகள் உதவும் என்பதில் ஐயமில்லை. 

நாட்டின் சிறுவர்களின் சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கத்தின் நீண்டகால ஆதரவையும் சுகாதார அமைச்சின் கூட்டு ஒத்துழைப்பினையும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் பெரிதும் மதிக்கின்றது” என யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான செயல்படும் பிரதிநிதி பேகோனா அரேலானோ இந்நிகழ்வில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

சிறுவர்களின் குறுகிய மற்றும் நீண்டகால தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமும் சுகாதார அமைச்சும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் பல ஆண்டுகளாக பாரிய பங்களிப்புக்களை வழங்கி வருகிறது.

https://www.virakesari.lk/article/189076

யாழில் இளைஞர்களிடம் 75 இலட்சம் ரூபா மோசடி - இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது!

2 months ago

Published By: DIGITAL DESK 7   22 JUL, 2024 | 12:07 PM

image
 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்களிடம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருந்தொகையான பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறியவர்களை நம்பி பணத்தினை கொடுத்து ஏமாந்த மூவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர் 

மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை 10 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும், காத்தான்குடி பகுதியை சேர்ந்தவரும் தற்போது களுத்துறை பகுதியில் வசித்து வரும் பெண்ணொருவரை 25 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் தற்போது தெஹிவளையில் வசித்து வரும் நபரொருவரை 40 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/189068

Checked
Sat, 09/28/2024 - 17:19
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr