ஊர்ப்புதினம்

என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி - நூல் வெளியிடுகின்றார் கோட்டாபய

3 months 2 weeks ago

Published By: RAJEEBAN   06 MAR, 2024 | 02:46 PM

image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி குறித்து  நூல் ஒன்றை வெளியிடவுள்ளார்.

அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் 2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தன்னை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

gota_books.jpg

ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி முயற்சிகள் என்ற நூலை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டது என தெரிவித்துள்ள அவர் இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர் முதல் 60 வருடங்களில் இந்த நிலை காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

என்னை அரசியலில் இருந்து அகற்றுவதற்கான அரசியல் பிரச்சாரம் இலங்கை அரசியலில் புதிய அம்சத்தை கொண்டுவந்தது எனவும் குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் ஆட்சிமாற்றங்கள் அமைதியான முறையிலேயே இடம்பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2022 இல் இடம்பெற்ற சம்பவங்களால் நாட்டின் எதிர்காலத்திற்கு கடும் பாதிப்பு என தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ச சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிமாற்றத்திற்கான நடவடிக்கைகளின் நேரடி அனுபவங்களை தனது நூல் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/178075

யாழில் காலாவதியான குளிர்பானங்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு 28 ஆயிரம் தண்டம்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3    06 MAR, 2024 | 11:19 AM

image

யாழ்ப்பாணத்தில் காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

சாவகச்சேரி நகர் பகுதி மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதன்போது , காலாவதியான குளிர்பான வகைகளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த இரண்டு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. 

குறித்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, இருவரையும் கடுமையாக எச்சரித்த மன்று, ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டமும், மற்றைய நபருக்கு 08 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்தது. 

அத்துடன் கைப்பற்றப்பட்ட காலாவதியான குளிர்பானங்களை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/178045

பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க இலங்கை ஆதரவளிக்க வேண்டும்: குவைத் அழைப்பு

3 months 2 weeks ago

றிப்தி அலி)
பலஸ்தீன் தனி நாட்டை உரு­வாக்க அரபு நாடு­களின் கூட்­ட­மைப்­பினால் மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­க­ளுக்கு இலங்கை ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என குவைத் அழைப்பு விடுத்­துள்­ளது.

சவூதி அரே­பி­யாவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள இந்த முயற்­சிக்கு குவைத் தொடர்ச்­சி­யாக ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றது என இலங்­கைக்­கான குவைத் தூதுவர் கலஃப் எம்.எம். புதைர் தெரி­வித்தார். இலங்­கையும் இந்த முயற்­சிக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என தூதுவர் தெரி­வித்தார்.

குவைத்தின் 63ஆவது தேசிய தினம் மற்றும் 33ஆவது விடு­தலை தினம் ஆகி­ய­வற்றின் நிகழ்­வுகள் கடந்த கடந்த திங்­கட்­கி­ழமை (26) கொழும்பில் இடம்­பெற்­றது.

இந்த நிகழ்வில் உரை­யாற்றும் போதே இலங்­கைக்­கான குவைத் தூதுவர் கலஃப் எம்.எம். புதைர் இந்த அழைப்­பினை விடுத்தார்.
இதே­வேளை, ஐந்து வரு­டங்­க­ளுக்குள் பலஸ்­தீன அர­சாங்­கத்தை அமைக்க வேண்­டி­யது அவ­சியம் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க வலி­யு­றுத்தி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த நிகழ்வில் தொழில் மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாண­யக்­கார பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டார். இங்கு அவர் நிகழ்த்­திய உரையின் போது இலங்­கைக்கும் குவைத்­திற்கும் இடையில் நீண்ட கால­மாக காணப்­படும் உற­வினை சுட்­டிக்­காட்­டி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்த நிகழ்வில், சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­ய­வர்த்­தன, வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி உட்­பட அமைச்­சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.- Vidivelli

https://www.vidivelli.lk/article/16566

பசில் இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணி

3 months 2 weeks ago
udaya_gammanpila-750x375.jpg பசில் இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணி.

“பசில் ராஜபக்ச இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணி” என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடுமையாக விமர்சித்துள்ளார்.

பசில் ராஜபக்சவின் வருகை  இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.  எனினும் பசில் ராஜபக்ச இலங்கையில் சம்பாதித்துஅமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப்  பயணியாக உள்ளார்.

இலங்கையில் பணம் செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகளையே  நாங்கள் விரும்புகிறோம். இலங்கையின் ஹம்பகராவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அமெரிக்காவில் பணம் செலவழிக்க விரும்புவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1372389

அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் அறிக்கை கோரல்

3 months 2 weeks ago
sri-lanka-government-300x200.jpg

அரசியல்வாதிகள், அரச தரத்திலான அதிகாரிகள் உள்ளிட்ட 150,000இற்கும் அதிகமானோர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை கையளிக்க வேண்டும் என இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி வரை அவற்றை கையளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய இம்முறை முதல் தடவையாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

அதற்கமைய, புதிய அதிகாரிகள் மற்றும் தனிநபர் பிரிவினர், புதிய சட்டத்தின் கீழ் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை வழங்க வேண்டியுள்ளது.

ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை வழங்குவதற்கான வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிருபம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் www.ciaboc.gov.lk உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/294583

45 போலி நோட்டுகளுடன் ஒருவர் கைது; பொத்துஹரவில் சம்பவம்!

3 months 2 weeks ago
06 MAR, 2024 | 10:28 AM
image

பொத்துஹர பிரதேசத்தில் 5000 ரூபா பெறுமதியான  45 போலி நோட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய  ஒருவரை சோதனையிட்டபோதே  அவரிடமிருந்து இந்த போலி நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பொல்பிதிகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராவார்.

இவர் ஏற்கனமே பணம் அச்சடிக்கும் இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்டவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

https://www.virakesari.lk/article/178035

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத கடற்தொழில் முறை நிறுத்தப்பட்டது போல் வடக்கிலும் நிறுத்தப்பட வேண்டும் - முன்னாள் தலைவர் அன்னராச

3 months 2 weeks ago

Published By: VISHNU   06 MAR, 2024 | 02:44 AM

image

கிழக்கு மாகாண ஆளுநர் எவ்வாறு  சட்டவிரோத தொழில் முறையை கிழக்கு மாகாணத்தில் நிறுத்தினாரோ அவ்வாறு வடக்கு மாகாண ஆளுநரும் வடக்கு கடற்பரப்பில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத தொழில் முறைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழிலாளர் சமாசத்தின் முன்னாள் தலைவர் அன்னராச வேண்டுகோள் விடுத்தார்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் களை நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தினால் முன்னேடுக்கப்பட்ட  போராட்டத்தில் கலந்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத தொழில் முறைகளுக்கு எதிராக மீனவர்கள் போராடிய போது அவர்களை அழைத்து சட்டவிரோத தொழில் முறைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்த்துடன் உடனடியாகவே சட்டவிரோத தொழில் முறைகளை நிறுத்தியுள்ளார் .அதேபோல் தான் வடக்கு மாகாண ஆளுநரும் வடக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத தொழில் முறைகள்,முறையற்ற தொழில் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கடற்தொழிலாளர்களை  அழைத்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/178023

ஒரே சீனா கொள்கையை ஆதரிக்கிறோம் - ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது அமர்வில் இலங்கை அறிவிப்பு

3 months 2 weeks ago

Published By: VISHNU   06 MAR, 2024 | 02:27 AM

image

(நா.தனுஜா)

'ஒரே சீனா கொள்கைக்கு' தாம் ஆதரவளிப்பதாகவும், மனித உரிமைகள்சார் விவகாரங்களைக் கையாள்வதில் சீனா வழங்கிவரும் ஒத்துழைப்பைப் பெரிதும் வரவேற்பதாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது அமர்வில் அறிவித்திருக்கும் இலங்கை, இறையாண்மையுடைய எந்தவொரு தேசத்தினதும் உள்ளக விவகாரங்களில் பிற தரப்பினரால் ஏற்படுத்தப்படும் தலையீடுகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ முடியாது எனத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் வாய்மொழிமூல அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை (1) வாசிக்கப்பட்டதுடன், அத்தோடு உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு அன்றைய தினமே ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலகவினால் பதில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் திங்கட்கிழமை (4) இலங்கை நேரப்படி பி.ப 2.30 மணிக்கு ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரின் 12 ஆவது அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதனையடுத்து உயர்ஸ்தானிகரின் அறிக்கைகள் தொடர்பில் உறுப்புநாடுகளின் பங்கேற்புடனான விவாதம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற 55 ஆவது கூட்டத்தொடரின் 13 ஆவது அமர்வில் உறுப்புநாடுகளின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் விதமாக உரையாற்றிய ஹிமாலி அருணதிலக மேலும் கூறியதாவது:

உலகளாவிய ரீதியில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளின் இயலுமை மற்றும் செல்வாக்கு என்பவற்றுக்கு அப்பாற்பட்டு நியாயமான முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். குறிப்பாக தற்போது காஸாவில் சர்வதேச சட்டங்களும், மனித உரிமைகளும் மிகப்பாரதூரமாக மீறப்பட்டுவருகின்றன.

எனவே காஸாவில் உடனடியாகப் போர்நிறுத்தம் அவசியம் என்பதுடன், மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்போருக்கான உதவிகள் அவர்களை உரியமுறையில் சென்றடையவேண்டும். மாறாக இத்தகைய மிகமோசமான மீறலைக் கருத்திலெடுக்கத்தவறுவது சர்வதேச மனித உரிமைகள் சார்ந்து இயங்கும் கட்டமைப்பின் நேர்மைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும்.

அதேபோன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது அரசியல்மயப்படுத்தப்படல் மற்றும் துருவமயப்படுத்தப்படல் போன்ற காரணிகளால் அதன் உண்மையான இலக்குகளை அடைந்துகொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்படும். எனவே பேரவையின் ஸ்தாபகக்கொள்கைகளுக்கு அமைவாக, தேசிய ரீதியிலான சவால்கள் மற்றும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறானதொரு பின்னணியில் உலகின் தென்பகுதியில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம்செலுத்திவிட்டு, ஏனைய பகுதிகளில் இடம்பெறும் மீறல்கள் தொடர்பில் பாராமுகமாக இருப்பது ஏற்புடையதல்ல.

இலங்கை விவகாரத்தைப் பொறுத்தமட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொருத்தமற்ற நடவடிக்கைகள் எவ்வகையிலும் பயன்தராது. எனவே இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முற்றாக நிராகரிக்கும் அதேவேளை, எமது நாட்டுக்கு நன்மையளிக்கக்கூடியதும், ஏற்புடையதுமான பேரவையின் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருக்கின்றோம்.

மேலும் நாம் 'ஒரே சீனா கொள்கைக்கு' ஆதரவளிப்பதுடன், மனித உரிமைகள்சார் விவகாரங்களைக் கையாள்வதில் சீனா வழங்கிவரும் ஒத்துழைப்பைப் பெரிதும் வரவேற்கின்றோம். அத்தோடு இறையாண்மையுடைய எந்தவொரு நாட்டினதும் உள்ளக விவகாரங்களில் பிற தரப்பினரால் ஏற்படுத்தப்படும் தலையீடுகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ முடியாது என்று தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/178021

சுழிபுரம்: புத்தர் சிலையை அகற்றா விட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் - சுகாஷ் எச்சரிக்கை!

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3   06 MAR, 2024 | 09:10 AM

image

சுழிபுரத்திலே புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டதாக எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம். அந்த தகவல் உண்மையானது. சவுக்கடி பிள்ளையார் கோவிலுக்கு பின்பாகவும் இராணுவ முகாமிற்கு முன்பாகவும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்பு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (05) இரவு குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோயிலை ஆக்கிரமிக்கின்ற வகையிலே இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஏனென்றால் தமிழர் தாயகம் எங்கும் தற்சமயம், அதுவும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் ஆக்கிரமிப்புகள் மிகத் தீவிரம் பெற்றுள்ளது. அதனுடைய அடுத்தகட்ட பரிமாணம் தான் இந்த புத்தர் சிலை.

இந்த புத்தர் சிலையை உடனடியாக அகற்றும்படி நாங்கள் இராணுவத்தினரிடம் கூறுகின்றோம். நீங்கள் அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க விட்டால் நாங்கள் வெகு விரைவில் இந்தப் பிரதேசம் மக்களோடும், இராணுவ முகாமை சுற்றியுள்ள அமைப்புகளுடனும் கதைத்து விட்டு, விசேடமாக மீனவர் அமைப்புகளுடன் கதைத்து விட்டு இதற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றோம். அப்போது அந்தப் போராட்டங்கள் என நாங்கள் மக்களுக்கு அறிவிப்போம்.

மக்கள் அனைவரும் இந்த இடத்திற்கு வர வேண்டும். இல்லையேல் தமிழர் தாயகம் பறிபோகும் இதை எவராலும் தடுக்க முடியாது. நாங்கள் கதைப்பதை கூட இராணுவம் அச்சுறுத்தி படம் எடுக்கின்றார்கள். தங்களைக் கதைக்க வேண்டாம், படம் எடுக்க வேண்டாம் என அச்சுறுத்தல் செய்கின்றார்கள். அச்சுறுத்தலை தாண்டித்தான் நாங்கள் இந்த இடத்தில் நிற்கின்றோம். ஏனென்றால் இது நமது மக்களின் எதிர்கால இருப்புடன் சம்பந்தப்பட்ட விடயம். மக்களே வெளிப்படையுங்கள் அல்லது இந்த நாட்டில் தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்படப் போகின்றது - என்றார்.

https://www.virakesari.lk/article/178027

யாழில் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைய முற்பட்ட மக்கள்! பொலிஸார் குவிப்பு

3 months 2 weeks ago

இலங்கை கடற்பரப்பினுள் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்றொழிலாளர்களின் தொழில் முதல்களை அழிப்பதற்கும் எதிராக வடக்கு மாகாண கடற்றொழில் இணையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று (05.3.2024) யாழ் மாவட்டச் செயலகத்திலிருந்து ஆம்பமாகி உள்ளது. 

 

 

வீதித் தடைகள்

போராட்டக்காரர்கள் இந்திய துணை தூதரகம் சென்று மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பொலிஸார் இந்திய துணை தூதரகத்திற்குள் போராட்டக்காரர்களை செல்ல விடாது வீதித் தடைகளையிட்டு மறித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யாழில் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைய முற்பட்ட மக்கள்! பொலிஸார் குவிப்பு | A Massive Demonstration By Fishermen In Jaffna

இந் நிலையில் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்ட போராட்டகாரர்கள் இலங்கை கடற்றொழிலாளர்களின் கடல் வளத்தை அழிக்காதே, தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்து, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.

யாழில் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைய முற்பட்ட மக்கள்! பொலிஸார் குவிப்பு | A Massive Demonstration By Fishermen In Jaffna

மேலும் இந்த நாட்டில் வாழுகின்ற நாங்கள் எங்களது பாதுகாப்பையும் உரிமையையும் வலியுறுத்தி தரையில் போராட்டத்தை நடாத்துகிற போது கம்பிக்கூடுகளை வைத்து எங்களை தடுத்து நிறுத்துகிற இலங்கை படைகள் கடலில் எங்கள் பகுதியில் அத்துமீறி எங்களையே தாக்குகிற இந்திய கடற்றொழிலாளர்களை ஏன் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது என கேள்வி எழுப்பிய கடற்றொழிலாளர்கள் எங்களை கட்டுப்படுத்த முன்னர் இந்தியர்களை கட்டுப்படுத்துங்கள் எனவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைய முற்பட்ட மக்கள்! பொலிஸார் குவிப்பு | A Massive Demonstration By Fishermen In Jaffna

https://tamilwin.com/article/a-massive-demonstration-by-fishermen-in-jaffna-1709618132

விபத்தில் பலியான அருட்தந்தை ; மன்னார் அடம்பன் பகுதியில் பொது மக்கள் போராட்டம் ; வீதி தடை அமைக்குமாறு கோரிக்கை

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3   05 MAR, 2024 | 03:51 PM

image

மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் வீதி தடை ஒன்றை உடன் அமைத்து தருமாறு கோரி அடம்பன் பகுதி மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை (05) வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று திங்கட்கிழமை (4) அடம்பன் பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் டிப்பர் வாகனம் மோதி அருட்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தொடர்ச்சியாக குறித்த வீதியில் விபத்துக்கள் இடம் பெறுவதாகவும், வாகனங்கள் வேகமாக பயணிப்பதாகவும் தெரிவித்து குறித்த வீதியில் வீதித்தடை ஒன்றை அமைக்குமாறு கோரி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த வீதியில் வீதித்தடை ஒன்றை அமைக்குமாறு முன்னதாகவே பிரதேச சபை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டும் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசப்பட்டும் இதுவரை எந்த வித வீதித்தடைகளும் அமைக்கப்படாமையினால் தொடர்சியாக இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மக்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த உதவி மாவட்ட செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்று பொறியியலாளர், பொலிஸார் பொது மக்களுடன் கலந்து பேசிய நிலையில் விரைவில் விபத்துக்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்த நிலையில் மக்கள் போராட்டத்தை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.

254f9693-00aa-4f75-abdc-f425b992b6e3.jpg

a56c2414-e698-4461-8ab7-a15cb77293b7.jpg

IMG_8465.jpg

IMG_8467.jpg

IMG_8466.jpg

https://www.virakesari.lk/article/177972

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை சனத்தொகை

3 months 2 weeks ago

இலங்கையின் சனத்தொகையில் 2023 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், புலம்பெயர்தல், பிறப்பு வீதங்கள் குறைதல் மற்றும் அதிகரித்த இறப்பு வீதங்கள் உள்ளிட்ட காரணங்களினாலயே சனத்தொகை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதன்படி 2022 இல் 2,181,0000 ஆக இருந்த மக்கள் தொகை 2023இல் 2,037,0000 ஆகக் குறைந்துள்ளது.

இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 

 

மேலும், புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 2022இல் 361,800 இல் இருந்து கடந்த ஆண்டு  268,920 ஆகக் குறைந்துள்ளதோடு வருடாந்த இறப்பு விகிதமும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை சனத்தொகை | Decline In Sri Lanka S Population

இந்நிலையில் 2014 இல் 125,334 வீதமாகவிருந்த இறப்பு வீதம் 2023 இல் 196,000 ஆக உயர்ந்துள்ளது.

2022 இல் 85,572 ஆக இருந்த நாட்டை விட்டு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2023 இல் 222,715 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/decline-in-sri-lanka-s-population-1709628328

முடங்கியது முகநூல்

3 months 2 weeks ago

இன்று ஐரோப்பிய நேரம் 16.30 (இலங்கை இரவு9.00) மனி முதல் சமூக வலைதளங்கள் முகநூல் மற்றும் இன்ஸ்டகிராம் உலகம் முழுதும் முடங்கியுள்ளது...!

புங்குடுதீவில் உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டம்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

05 MAR, 2024 | 02:09 PM
image
 

புங்குடுதீவில் இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் தீவக சிவில் சமூகம் அமைப்பின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடலட்டைப் பண்ணை எனும் பெயரில் உள்ளூர் மீனவர்களை முற்றாக புறக்கணித்து இலாப நோக்கில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும், தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கும் கடலட்டை பண்ணைகள் அமைப்பதற்குரிய அனுமதிகளை கடற்தொழில் அமைச்சு வழங்குவதற்கு எதிராகவும், பாரம்பரிய மீன்பிடி தொழிலை அழிப்பதற்கு எதிராகவும், சட்டவிரோத மண் அகழ்வை உடனடியாக தடுக்கக்கோரியும், அழிக்கப்பட்டு வருகின்ற கால்நடை வளத்தை பாதுகாக்க கோரியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா , சமூக செயற்பாட்டாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி, சட்டத்தரணி க. சுகாஷ், தீவக சிவில் சமூகம் அமைப்பின் பொருளாளர் கருணாகரன் குணாளன், வேலணை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கருணாகரன் நாவலன், ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் கே. ஞானேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததோடு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தீவகம் தெற்கு பிரதேச செயலாளருக்கான மகஜர் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

IMG-20240305-WA0032.jpg

புங்குடுதீவில் உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டம் | Virakesari.lk

உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கவுள்ள சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம்!

3 months 2 weeks ago
05 MAR, 2024 | 02:58 PM
image
 

உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்கட்டணங்கள் குறைவடைந்தமையே இதற்கு காரணம் என அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கோப்பை தேநீர் மற்றும் ஒரு  கோப்பை பால் தேநீர் ஆகியவற்றின் விலைகள் முறையே  5 மற்றும் 10 ரூபாவினால்  இன்று  (05)இரவு முதல்  குறைக்கப்படும்.

மேலும், ஒரு  உணவுப்  பார்சலின் விலை 25 ரூபாவினாலும்   பிரைட் ரைஸ், கொத்து ரொட்டிகளின் விலைகள் 50 ரூபாவினாலும்  மற்றும்  சிற்றுண்டி (சோர்ட்  ஈட்ஸ் ) வகைகளின் விலைகள்   10 ரூபாவினாலும் குறைக்கப்படும்.

உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கவுள்ள சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம்! | Virakesari.lk

இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பிரஜா உரிமை வழங்கி வைப்பு

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

05 MAR, 2024 | 04:39 PM
image
 

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (05)  லங்கை பிரஜா உரிமை வழங்கி வைக்கப்பட்டது.

 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்களுக்கு இந்தியாவில் குழந்தைகள் பிறந்த நிலையில் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தனர்.

 நாட்டிற்கு வந்த இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை பிரஜா உரிமை பெறுவதில் சிக்கல் நிலமை காணப்பட்டிருந்தது.

இதனை அடுத்து குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் அனுசரனையில் ஒபர் சிலோன் எனப்படும் அரசு சார்பற்ற நிறுவன பங்களிப்போடு இவர்களுக்கான பிரஜா உரிமை பெற்றுக் கொடுக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக 22 வயதுக்கு மேற்பட்ட இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகள் 71 பேருக்கு இன்று பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.

இவ்வாறு பிரஜாவுரிமை பெற்றவர்கள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பை சேர்ந்தவர்களே பெற்றுக்கொண்டனர்.

இந் நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், குடிவரவு குடியகழ்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் இ. எச். ஜி. பிரசங்க, ஒபர் நிறுவன தலைவி செல்வி. சி. சூரியகுமாரி உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பிரஜா உரிமை வழங்கி வைப்பு | Virakesari.lk

ஜேவிபி தலைவருக்கு இந்தியா சமீபத்தில் விடுத்த அழைப்பு வழமைக்குமாறானதில்லை - இந்திய உயர்ஸ்தானிகர்

3 months 2 weeks ago
image
 

ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு இந்தியா சமீபத்தில் விடுத்த அழைப்பு வழமையான ஒன்று ஒருநாட்டின் பிரபலமான நபர்களுக்கு விடுக்கப்படும் அழைப்பு என தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா இந்த அழைப்பு வழமைக்குமாறானது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகள் மற்றும் மக்களுடன் கலாச்சார பரிமாற்றத்தில் ஈடுபடுவதன் மூலம் இந்தியாவின் கலாச்சார உறவுகளில் ஈடுபட்டுள்ள இந்திய அரசாங்கத்தின் தன்னாட்சி அமைப்பான இந்திய உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் வருகை திட்டத்தின் கீழ்  ஜேவிபி தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும்; இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் தலைவர் ஒருவருக்கான வழமையான அழைப்பு இது எங்களிடம் ஒரு நிகழ்;ச்சி திட்டம் உள்ளது அதன்அடிப்படையில் நாங்கள் ஏனைய நாடுகளின் வர்த்தக தலைவர்கள் அரசியல் தலைவர்கள் மதத்;தலைவர்களை இந்தியாவிற்குஅழைக்கின்றோம் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில்; போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களிற்கும் இவ்வாறான அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு ஏனைய வேட்பாளர்கள் ஏற்கனவே இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் அவர்களில் யாராவது இந்தியாவிற்கு அழைக்கப்படுவார்கள் என்றால் அதுஅவர்களின் முதலாவது விஜயமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் வரவிரும்பினால் அவர்கள் வரவேற்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி தலைவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்தமை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர்  இலங்கையின் பெரிய அரசியல் கட்சியொன்றின் தலைவரை இந்தியாவின் சிரேஸ்ட அமைச்சர்கள் எப்போதும் வரவேற்பார்கள் இது வழமைக்கு மாறானதில்லை எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

ஜேவிபி தலைவருக்கு இந்தியா சமீபத்தில் விடுத்த அழைப்பு வழமைக்குமாறானதில்லை - இந்திய உயர்ஸ்தானிகர் | Virakesari.lk

சாந்தனைத்தான் இழந்துவிட்டோம்; எஞ்சியோரையாவது காப்பாற்றுங்கள்; - சட்டத்தரணி புகழேந்தி

3 months 2 weeks ago
சாந்தனைத்தான் இழந்துவிட்டோம்; எஞ்சியோரையாவது காப்பாற்றுங்கள்
713633176.jpg

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சட்டத்தரணி புகழேந்தி மன்றாட்டம்....

உயிரோடு தாயிடம் அனுப்பிவைப்போம் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில் இன்று சாந்தனை நாம் இழந்துவிட்டோம். எஞ்சிய மூவரையாவது காப்பாற்றுவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வரவேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்டத்தரணி புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

உடுப்பிட்டி கற்பகப் பிள்ளையார் ஆலய முன்றிலில் அவ்வூர் பொதுமக்களால் நேற்று நண்பகல் முன் னெடுக்கப்பட்டிருந்த சாந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து வருகைதந்த சட்டத்தரணி புகழேந்தி ஆற்றிய அஞ்சலி உரையின் போது இந்தக்கோரிக்கையை முன்வைத்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சாந்தனை எப்படியாவது காப்பாற்றித் தாயிடம் அனுப்பி வைப்போம் என்றே நம்பியிருந்தோம். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த சாந்தனின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு நினைவிழந்த நிலைக்குச் சென்றார். அந்த நிலையில் கூட எயார் அம்புலன்ஸ் மூலமாக கட்டுநாயக்கா ஊடாக அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். இருந்தும் அனைத்துப் போராட்டங்களும் பயனற்றுப்போகும் வகையில் அவர் உயிரிழந்தார்.


ஈழத்தில் இருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு உடனடியாக வர வேண்டும். திருச்சி சிறப்பு முகாமில் உள்ள எஞ்சிய மூவரும் எவ்வாறான கொடும் சிறையில் இருக்கின்றார்கள் என்பதை நேரடியாகப் பாருங்கள். தமிழ் நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து, எஞ்சிய மூவரும் விரும்பிய இடங்களுக்குச் செல்வதற்கு உரிய அனுமதி கிடைக்கும் வரை அவர்களை தமிழ்நாட் டில் உள்ள உறவுகளிடம் கையளிக்குமாறு கோரிக்கை வையுங்கள். அது நடைபெற்றால் மட்டுமே அவர்களையாவது நாம் காப்பாற்ற முடியும். திருச்சி சிறப்பு முகாமில் உள்ள எஞ்சிய மூவரையும் காப்பாற்றி அவர்கள் விரும்பும் நாட்டுக்குச் சென்று அவர்களுடைய குடும்பத்துடன் நிம்மதியாக வாழவைப்பதற்கான சட்டப்போரட்டத்தை தமிழ்நாடு திரும்பிய கையோடு முழுவீச்சோடு முன்னெடுக்க உள்ளேன் - என்றார்.

சட்டத்தரணி புகழேந்தி, ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் வழக்கு விடயங்களை 2005 ஆம் ஆண்டு முதல் எவ் விதக் கட்டணங்களும் வாங்காது இலவசமாக முன்னெடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

https://newuthayan.com/article/சாந்தனைத்தான்_இழந்துவிட்டோம்;_எஞ்சியோரையாவது_காப்பாற்றுங்கள்;

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் இன்று ஆரம்பம்

3 months 2 weeks ago

இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் இன்று (05) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களில் இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட மாணவர்கள் பிற்பகல் 02:00 மணிக்கு அந்தந்த மையங்களுக்குச் சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கிறது.

இத்திட்டத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஆங்கில மொழி, மற்றும் அவர்கள் விரும்பும் தொழில்சார் பாடம் ஆகியவற்றை இலவசமாகப் படிக்க முடியும்.
இதேவேளை உத்தேச கல்வி சீர்திருத்தங்கள் மூலம், குழந்தைகள் அறிவு, அணுகுமுறைகள் மற்றும் திறன்களை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/294358

நிகழ்நிலை, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலங்களை மீள்பரிசீலியுங்கள் - ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3   05 MAR, 2024 | 10:44 AM

image
 

(நா.தனுஜா)

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டத்தை உருவாக்க முன்னர் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான செயன்முறையொன்றைப் பின்பற்றவேண்டியது அவசியமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் சுட்டிக்காட்டியிருக்கும் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள், எதிர்வருங்காலங்களில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையைக் கட்டியெழுப்பும் அதேவேளை, பொறுப்புக்கூறலுக்கான பாதையை வகுத்தளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை நேற்று திங்கட்கிழமை (4) வாசிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் அவ்வறிக்கை கடந்த வெள்ளிக்கிழமையே (1) வாசிக்கப்பட்டது. அத்தோடு இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலகவினால் பதில் வழங்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்றைய தினம் இலங்கை நேரப்படி பி.ப 2.30 மணிக்கு ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரின் 12 கூட்டத்தில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. அதனையடுத்து உயர்ஸ்தானிகரின் அறிக்கைகள் தொடர்பில் உறுப்புநாடுகளின் பங்கேற்புடனான விவாதம் நடைபெற்றது.

இதன்போது பிரிட்டன், கனடா, வட மெசிடோனியா, மாலாவி, மொன்டெனேக்ரோ மற்றும் அமெரிக்கா ஆகிய இலங்கையின் இணையனுசரணை நாடுகளின் சார்பில் உரையாற்றிய மனித உரிமைகளுக்கான பிரிட்டனின் சர்வதேச தூதுவர் ரீட்டா ஃப்ரென்ச் மேலும் கூறியதாவது:

இலங்கையைப் பொறுத்தமட்டில் அண்மையகாலங்களில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் சிவில் இடைவெளி ஆகியவற்றுடன் தொடர்புடைய சில முக்கிய சட்ட உருவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் துரதிஷ்டவசமாக இவற்றில் சில சட்ட உருவாக்கங்கள் தீவிர கரிசனையைத் தோற்றுவிப்பவையாக அமைந்துள்ளன.

குறிப்பாக நிகழ்நிலைக்காப்பு சட்டமானது நிகழ்நிலை தொடர்பாடலை தீவிரமாக மட்டுப்படுத்தக்கூடியதும், அனைத்துவித வெளிப்படுத்தல்களையும் குற்றமாக்கக்கூடியதும், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின்மீது மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதுமான சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. எனவே இலங்கையின் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளுக்கு ஏற்புடைய வகையில் அச்சட்டத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அதேபோன்று இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுக்கு ஏற்புடைய சட்டத்தினூடாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யுமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம். கடந்த நவம்பர் மாதம் தடுத்துவைக்கப்பட்ட 9 தமிழர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும். அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் மிகநீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுவிக்குமாறும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அடுத்ததாக உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை அவதானித்துள்ளோம். ஆனால் எந்தவொரு சட்டத்தையும் உருவாக்க முன்னர் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான அனைவரையும் உள்ளடக்கிய செயன்முறையொன்றைப் பின்பற்றவேண்டியது இன்றியமையாததாகும். எதிர்வருங்காலங்களில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் சுயாதீனமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அர்த்தமுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யக்கூடியதாகவும், நிலைமாறுகால நீதிப்பொறிமுறையைக் கட்டியெழுப்பும் அதேவேளை, பொறுப்புக்கூறலுக்கான பாதையை வகுத்தளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டியது அவசியமாகும்.

அதுமாத்திரமன்றி அடிப்படை சுதந்திரத்திலும், சிவில் சமூக இடைவெளியிலும் தீவிர மட்டுப்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய சட்டங்களை கொண்டுவருதாக இருந்தால், அதுகுறித்து சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளடங்கலாக சகல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம்.

மேலும், காணி விடுவிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் கடப்பாட்டை வரவேற்கின்றோம். ஆனால் குறிப்பாக நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் நில ஆக்கிரமிப்புடன் தொடர்புடையவகையில் அதிகரித்துவரும் அமைதியின்மை நிலைவரம் குறித்தும் நாம் கரிசனை கொண்டிருக்கின்றோம். எனவே இச்சவால்களை உரியவாறு கையாள்வதற்கு உங்களுடனும் (உயர்ஸ்தானிகர்), உங்களது அலுவலகத்துடனும் இணைந்து பணியாற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன் 51/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/177926

Checked
Sun, 06/23/2024 - 02:23
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr