ஊர்ப்புதினம்

கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதி விபத்து

3 months 2 weeks ago

Published By: VISHNU

10 JUN, 2024 | 07:33 PM
image
 

கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பேருந்து அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்றுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்தின் பிரேக் பழுதானதால் குறித்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதி விபத்து | Virakesari.lk

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் பயணிகள் படகு சேவை!

3 months 2 weeks ago
10 JUN, 2024 | 12:16 PM
image

(புதுடில்லியிலிருந்து லியோ நிரோஷ தர்ஷன்) 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள ஜனாதிபதி ரணல் விக்கிரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது.

இன்று திங்கட்கிழமை (10) புதுடில்லியிலுள்ள ஐ.டி.சி. ஹோட்டலில் இந்த இரு தரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கூடிய விரைவில் கைச்சாத்திடப்படும் என ஜனாதிபதி ரணில் பங்களாதேஷ் பிரதமருக்கு தெரிவித்தார்.

அத்துடன் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இந்தக் கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/185731

இந்திய பிரதமர் மோடி இலங்கை வர உத்தேசம்! - ஜெய்ஷங்கர்

3 months 2 weeks ago
10 JUN, 2024 | 12:57 PM
image

(புதுடில்லியிலிருந்து லியோ நிரோஷ தர்ஷன்) 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள ஜனாதிபதி ரணல் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும்  இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (10) டில்லியிலுள்ள  ஐ.டி.சி. ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன்போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

d326e8b2-1988-4922-8fe2-0f41bd68a54c.jpg

https://www.virakesari.lk/article/185730

IMF இன் கடப்பாடுகளை அரசாங்கம் உரியவாறு நிறைவேற்றவில்லை!

3 months 2 weeks ago
IMF-Sri-Lanka.jpg?resize=700,375&ssl=1 IMF இன் கடப்பாடுகளை அரசாங்கம் உரியவாறு நிறைவேற்றவில்லை!

அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் மூன்றாவது கொடுப்பனவை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை எதிர்வரும் 12 ஆம் திகதி அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இலங்கை அதன் பொருளாதார மீட்சிக்கு அடித்தளமாக இருக்கும் நிர்வாக மேம்பாடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளதாக வெரிட்டே ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி, 2023 டிசம்பரில் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள் 25 வீதக் கடப்பாடுகளை நிறைவேற்ற இலங்கை தவறியுள்ளதுடன், நிறைவேற்ற வேண்டிய 63 பொறுப்புகளில் 32 பொறுப்புக்கள் நிறைவேற்றியுள்ளதுடன், 16 பொறுப்புகளை நிறைவேற்றவில்லை எனவும் 15 பொறுப்புக்கள் குறித்து தகவல்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்படாத 16 உறுதிமொழிகளை ஆராயும்போது அவற்றில் 7 நிபந்தனைகள் நிதி மேலாண்மையுடன் சம்பந்தப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 6 நிபந்தனைகள் நிதி வெளிப்படைத்தன்மை விடயத்திலும், 3 நிபந்தனைகள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுடனும் தொடர்புடையவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1386994

முன்பள்ளி ஆசிரியைகளின் கொடுப்பனவு அதிகரிப்பு!

3 months 2 weeks ago
 

Pre-School-Teachers

முன்பள்ளி ஆசிரியைகளுக்கான 2,500 ரூபாய் கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய முன்பள்ளி ஆசிரியைகளின் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் முன்பள்ளி ஆசிரிய பணியில் சுமார் 34,000 பேர் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/303474

யாழில் போதை மாத்திரைகள், வாளுடன் நான்கு இளைஞர்கள் கைது

3 months 2 weeks ago
10 JUN, 2024 | 01:52 PM
image

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் வாள் என்பவற்றுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆனைக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நான்கு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் ஆயிரம் போதை மாத்திரைகளும் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/185736

குழந்தைகளுக்கு தரமற்ற சோப்பை பயன்படுத்த வேண்டாம்!

3 months 2 weeks ago
02-4.jpg

தரமற்ற சோப்புகளை பயன்படுத்துவதால் சிசுக்களின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார சூழ்நிலை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சோப்பை பயன்படுத்துவதாகவும், அதன் விளைவு எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் அதன் பொருளாளர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்தார்.

“இந்த நாட்களில் நாங்கள் குழந்தைகளுக்கு சில ஒவ்வாமைகளைப் புகாரளித்துள்ளோம். இதை ஆராய்ந்தபோது ஒரு விஷயம் புரிந்தது, தரமற்ற குழந்தை சோப்பை பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, தாய்மார்கள் குழந்தைகளுக்கான சோப்பைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய விடயம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழுடன் கூடிய குழந்தை சோப்பைப் பயன்படுத்துவதேயாகும். குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது. எனவே இன்றல்ல பல வருடங்களில் இதன் பலன் தெரியும். எனவே, குறிப்பாக பொருளாதார சூழ்நிலையில், இதில் கவனமாக இருங்கள்” எனவும் பிரியங்கனி சுசங்கிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://thinakkural.lk/article/303471

பிரான்ஸ் பாராளுமன்றம் கலைப்பு; ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தேர்தலுக்கு அழைப்பு

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3   10 JUN, 2024 | 10:12 AM

image
 

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய தேர்தல்கள் ஜூன் 6 முதல் 9 வரை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் நடைபெற்றது. அதில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனின் கட்சி தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/185714

ஜேவிபியின் மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என மிரட்டல் - முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் தெரிவிப்பு

3 months 2 weeks ago
ஜேவிபியின் நேற்யை மாநாட்டில் சிஐடியின் முன்னாள் இயக்குநர் - சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் - பல முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் - மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிப்பு

Published By: RAJEEBAN  10 JUN, 2024 | 11:13 AM

image

தேசிய மக்கள் சக்தியின் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமைப்பின் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில்  சிஐடியின் முன்னாள் அதிகாரிகள் உட்பட ஓய்வு பெற்ற பல பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் நேற்றைய மாநாட்டில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற பொலிஸ், இராணுவ அதிகாரிகள், நீதித்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ravi_akd.jpg

ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் கூட்டு என்பது உண்மையில் நியாயபூர்வமான ஜனநாயக அமைப்பு என தெரிவித்துள்ள முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவி செனிவிரட்ண பொலிஸார் மீது தாக்கம் செலுத்தும் நோக்கமோ அல்லது அல்லது பொலிஸ் துறைக்கு மீள திரும்பும் நோக்கமோ இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மேடையில் ஏறவேண்டாம் என பல தரப்பினரிடமிருந்து எனக்கு அழுத்தம் வந்தது, எனக்கு மாத்திரமல்ல ஏனைய முன்னாள் அதிகாரிகளிற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் கூட விடுத்துள்ளனர் எனவும் ரவிசெனிவிரட்ண தெரிவித்துள்ளார். அவர் மொனராகல பொலிஸில் இது  குறித்து முறைப்பாடு செய்துள்ளார், பின்னர் தொலைபேசியில் ஒருவர் அவரை தொடர்புகொண்டு முறைப்பாட்டை விலக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் எனவும் ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.

ஒய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் கூட்டினை உருவாக்குவதற்கான காரணங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள ரவி செனிவிரட்ண இரண்டு வருடங்களின் முன்னர் நாங்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்துடன்  தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டோம் நாங்கள் எங்கள் கரிசனைகள் கேள்விகள் எண்ணங்களை பகிர்ந்துகொண்டோம் என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் இந்த குழுவினர் நேர்மையானவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம் இன்றைய அரசியலில் நேர்மையானர்வகள் குறைவு என ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்கள் தங்கள் நோக்கங்களிற்காக குறிப்பிடத்தக்க தியாகங்களை செய்ய தயாராகயிருக்கின்றார்கள். இது இன்று சமூகத்தில் அரிதாக காணப்படக்கூடிய விடயம். மேலும் அவர்கள் எங்கள் கேள்விகளிற்கு எல்லாம் தெளிவான பதிலை வழங்கினார்கள், நாட்டை கட்டியெழுப்புவதற்கான  தெளிவான திட்டம் இருப்பதை வெளிப்படுத்தினார்கள், அதன் பின்னர் நாங்கள் அவர்களுடன் இணைய தீர்மானித்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/185721

இரண்டு மாத சந்தோஷம் 15ஆம் திகதியுடன் பறி போக போவதாக வடக்கு மீனவர்கள் கவலை

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 7   09 JUN, 2024 | 08:11 PM

image
 

தமது இரண்டு மாத சந்தோஷம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் பறிபோகப்போவதாக யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கவலை தெரிவித்துள்ளார். 

யாழில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் மீன் பிடி தடைக்காலம் கடந்த இரண்டு மாதங்களாக இருந்தமையால்,  வடபகுதி கடற்றொழிலாளர்கள் மிகவும் சந்தோஷமாக தொழில் மேற்கொள்ளக் கூடியதாகவிருந்தது.

எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவில் மீன்பிடித் தடைக் காலம் முடிவடையவுள்ளது, அதனால் மீண்டும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையலாம். எனவே இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வராமல் இருக்க இரு நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்திய பிரதமராக மோடி மீண்டும் தெரிவானமை தமக்கு மகிழ்ச்சியே என தெரிவித்த அவர், இந்திய பிரதமர் இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவைமடிப் படகுகளை தடைசெய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார். 

https://www.virakesari.lk/article/185682

யாழில் ஆலய கும்பாபிஷேகத்தில் தாலிக்கொடி உள்ளிட்ட நகைகளை திருடிய பெண் கைது!

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 7   09 JUN, 2024 | 04:55 PM

image

யாழ்ப்பாணம் கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அடியார்களின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகளை திருடிய பெண்ணொருவர் ஞாயிற்றுக்கிழமை (9) கைது செய்யப்பட்டார்.

கைதான பெண் வவுனியா பூந்தோட்டத்தில் வசிக்கும் கொழும்பு - வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பெண்ணை கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்தியபோது, திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் தங்க நகைகள் பெண்ணின் உள்ளாடைக்குள்ளிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்பெண், மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கபட்டு, பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

34__2_.jpg

https://www.virakesari.lk/article/185676

பாஸ்போர்ட்டுகளை பெற புதிய தேசிய அடையாள அட்டை அவசியம்

3 months 2 weeks ago

புதிய தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஏராளமான விண்ணப்பதாரர்கள் பல தசாப்தங்கள் பழமையான தேசிய அடையாள அட்டைகளையே வைத்திருப்பதாக அறியப்படுகிறது, மேலும் பாஸ்போர்ட் பெற தேவையான ஆவணங்களுடன் ஒட்டப்பட்ட புகைப்படம் வண்ண புகைப்படத்துடன் பழைய அடையாள அட்டை புகைப்படங்கள் பெரிதும் வேறுபடுகிறன என்றார்.

பழைய தேசிய அடையாள அட்டைகள் எண்கள் கூட தெரியாத அளவுக்கு சிதைந்து கிடப்பதால் இந்த நடைமுறை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் பொலிஸ் மற்றும் விமான நிலைய அதிகாரிகளால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு (SLBFE) 523 போலி கடவுச்சீட்டுகள் பதிவாகியுள்ளதாக என்றும் அவர் கூறினார்.

எனவே புதிய தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/303407

தென்னிந்திய படகு உரிமையாளர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் கட்டளை இரத்து : யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவு

3 months 2 weeks ago
09 JUN, 2024 | 11:20 AM
image

(நமது நிருபர்)

தென்னிந்திய படகு உரிமையாளர்களது படகுகளை பறிமுதல் செய்யும் நீதிவான் நீதிமன்ற கட்டளைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த தென்னிந்திய படகு உரிமையாளர்களின் படகுகளையும் அவர்களின் கடற்றொழில் உபகரணங்களையும் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தனர் எனும் குற்றத்துக்காக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் 21.11.2022 அன்று வழங்கிய கட்டளைகளினால் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யும் கட்டளைகள் வழங்கியிருந்ததுடன் அதன் அடிப்படையில் இந்த படகுகள் மயிலிட்டி துறைமுகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தன. 

இக்கட்டளைகளுக்கு எதிராக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு வழக்குகள் படகு உரிமையாளர்களால் தொடரப்பட்டன. இவ்வழக்கில் படகு உரிமையாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அந்த கட்டளைகளை யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இரத்து செய்து கட்டளையாக்கியிருந்தது. 

தென்னிந்திய படகு உரிமையாளர்களது படகுகளையும் கடற்றொழில் உபகரணங்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கான உரிமைக்கோரிக்கையை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் மேல்நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டு 03 மாத காலத்துக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டு படகு உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.எஸ்.கணேசராஜனுடன் சட்டத்தரணிகள் சாரா ஹரிபிரவீன், சபிஷாந்த் மோகன் தோன்றியதோடு எதிர்மனுதாரர்கள் சார்பில் அரச சட்டவாதி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

https://www.virakesari.lk/article/185641

இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகள் தொடரும் – அமெரிக்க சிறப்புத் தூதுவர்!

3 months 2 weeks ago
02-1.jpg?resize=750,375&ssl=1 இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகள் தொடரும் – அமெரிக்க சிறப்புத் தூதுவர்!

நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன்(julie chang) இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான (US United States Ambassador-at-Large for Global Criminal Justice) சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக் (Beth Van Schaack) தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முக்கியமான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதை மையப்படுத்தி தொடர்ந்தும் பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வொஷிங்டனில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை சந்தித்தபோது, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த தலைமை இராஜதந்திரிகளின் அமர்வில் பங்கேற்றிருந்தார்.

இதில் பங்கேற்பதற்கச் சென்றிருந்த ஜுலி சங் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக்குடன் உரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது, தூதுவர் ஜூலி சங்குடனான சந்திப்பது அருமையாக இருந்தது – நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு அமெரிக்க தூதுவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக பெத் வான் ஷாக் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி நிஷா பிஸ்வாலையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

இதன்போது, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தினை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு 553 மில்லியன் டொலர்கள நிதி உதவியை செயற்படுத்துவது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கும், இலங்கையில் தனியார் துறையின் முன்னணி வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்வதற்கும் மேற்குறித்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செயலாளர் அன்டனி பிளிங்கனையும் சந்தித்து உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1386818

பாடையில் ஏற்றப்பட்ட பட்டங்கள்- யாழ். வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்!

3 months 2 weeks ago
IMG-20240609-WA0018.jpg?resize=750,375&s பாடையில் ஏற்றப்பட்ட பட்டங்கள்- யாழ். வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்!

பல்கலைக்கழகத்தினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்படுகின்ற பட்டத்தை பிரேதப்பெட்டியில் ஏற்றி, வேலையில்லா பட்டதாரிகள் இன்று யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னாபாக இன்று காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது?, படிப்பிற்க்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா?, எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும், படித்ததக்கு கூலிதொழிலா கடைசி வரைக்கும்?, படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா?, பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா?, படித்தும் பரதேசிகளாக திரிவதா?” என பல்வேறுப்பட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240609-WA0009.jpg?resize=600,338&s

IMG-20240609-WA0014.jpg?resize=600,338&s

IMG-20240609-WA0015.jpg?resize=600,338&s

IMG-20240609-WA0012.jpg?resize=600,338&s

IMG-20240609-WA0017.jpg?resize=600,338&s

IMG-20240609-WA0022.jpg?resize=600,338&s

IMG-20240609-WA0026.jpg?resize=600,338&s

IMG-20240609-WA0027.jpg?resize=600,338&s

https://athavannews.com/2024/1386848

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு

3 months 2 weeks ago

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு ranil.jpg

சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரு வருடங்களுக்கு நீட்டிப்பதாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலத்தையும் அதனடிப்படையில் இரு வருடங்களுக்கு நீடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பதவிக் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தால் பெரும்பாலான அமைச்சர்கள் அதற்கான சர்வஜன வாக்கெடுப்புக்கு இணக்கம் தெரிவிப்பார்கள் என அரசியல் வட்டாரங்களிலில் பேசப்படுகிறது.

அதேவேளை, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கும் சர்வஜன வாக்கெடுப்பை எதிர்வரும் ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, ஜனாதிபதிக்கு சமீபமான பெரும்பாலானோரின் நிலைப்பாடு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது சிறந்தது எனவும் இரு வருடங்களில் நாடு ஸ்தீரமடைந்த பின் தேர்தலை நடத்துவது சிறந்தது என்பது அவர்களின் நோக்கமாக உள்ளது எனவும் அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1982ஆம் ஆண்டில் ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியாக பதவி வகிக்கும் போது நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீட்டிக்க மேற்கொண்ட சர்வஜன வாக்கெடுப்பு முறைமையை தற்போது மேற்கொள்ள முடியுமா என அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் சிலர் சட்டத்தரணிகளிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவ்வாறு நீதிமன்றத்தின் முன்னிலையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படின் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான குழுவிலும், பத்தரமுல்லை ‘Waters edge‘ ஹோட்டலிலும் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் முஸ்லிம், தமிழ் உறுப்பினர்கள் சுமார் 30க்கும் அதிகளவில் காணப்படுவதால் அவர்களில் பெருமபாலானோர் சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் அவர்களின் நிலைப்பாட்டை இன்னும் தெளிவாக முன்வைக்கவில்லை.

இதன் காரணமாக சர்வஜன வாக்கெடுப்புக்கு அவர்களின் விருப்பம் கிடைக்குமா கிடைக்காதா என்பது தொடர்பில் உறுதியான ஒரு சூழல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டுமெனில் அரசியலமைப்பை மீறிய ஒரு சட்டத்தை அரசாங்கம மூலம் தயாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், சர்வஜன வாக்கெடுப்பு கொண்டு வரப்படுமேயானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தயார் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://akkinikkunchu.com/?p=279426

தமிழர் இருப்புக்காக செயற்றிட்ட வரைவு!

3 months 2 weeks ago

தமிழர் இருப்புக்காக செயற்றிட்ட வரைவு!
1265271105.jpg

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தயாரிப்பு

(ஆதவன்)

தமிழ்த் தேசிய இருப்புக்காக, ஐந்து அம்ச யோசனைகளைக் கொண்ட மூலோபாயக் கொள்கை மற்றும் செயற்றிட்ட வரைவைத் தயாரிக்க முன்முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பினர் தெரிவித்ததாவது:-

* தமிழர் தாயகத்தில் தமிழர் குடிப்பரம்பலை நிலைநிறுத்தலும், பிறப்பு வீதத்தை அதிகரித்தலும், அனைத்துத் தமிழர் கல்வி அடைவுமட்ட உயர்த்தலும்

* தாயகக் கிராமங்களில் விஞ்ஞானத்துறை ஆசிரிய வளத்தை அதிகரித்தலும், வளப் பங்கீட்டை உறு திப்படுத்தலும்

* தமிழர் பிரதேசங்களில் சுகா தார மருத்துவ சேவைகளை மேம்படுத்தலும் மருத்துவமனைகளில் மனிதவளம் குறிப்பாகத் தமிழ்த் துணை மருத்துவ ஆளணி மேம்பாட்டை அதிகரிக்கும் வேலைத்திட்ட முன்னெடுப்பும்

* தமிழர் எதிர்கொள்ளும் விவசாய, மீன்பிடி, கால்நடை வளர்ப்புச் சவால்களை வெற்றிகொள்ளலும், ஏழைத்தமிழரின் நீண்டகால வாழ்வாதாரத்தை மேம்படுத்தலும்

*இளையோர் எதிர்கொள்ளும் போதை, தற்கொலை, விபத்துப் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவர முயல்தலும், தமிழ் மாணவர்களின் அறநெறிக் கல்வியை வலுப்படுத்தலும்ஆகியனவே இந்த ஐந்து அம்சத் திட்ட யோசனைகளாகும்.

இதேவேளை நிபுணர் குழுவில் இணைந்து பங்களிக்க விரும்புவோர் எமக்கு அறியத்தரலாம் என்பதுடன், பொருத்தமானவர்களை முன்மொழியலாம் - என்றுள்ளது.(ஏ)

https://newuthayan.com/article/தமிழர்_இருப்புக்காக_செயற்றிட்ட_வரைவு!

 

கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ் வந்துவர் போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் கைது

3 months 2 weeks ago

கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ் வந்துவர் போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் கைது
adminJune 9, 2024
 

கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ்ப்பாணம்  சென்று, போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரத்தை விற்பனை செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபர் கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடும்பத்தினருடன் சென்ற  நபர் ஒருவர் அரியாலை பகுதியில், நாள் வாடகைக்கு வீடொன்றினை பெற்று குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த நபர் திருநெல்வேலி சந்தைக்கு அண்மித்த பகுதியில் போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரம் , மற்றும் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படும் தாள்கள் என்பவற்றை நபர் ஒருவருக்கு விற்பனை செய்யும் நோக்குடன் காத்திருந்த போது , கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நபரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த பொருட்களையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட நபரை  காவல்து நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அவர் குடும்பத்துடன் அரியாலை பகுதியில் தங்கியிருப்பது தெரிய வந்து , குறித்த வீட்டிற்கு  காவல்துறைக் குழு  சென்ற  போது, வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

https://globaltamilnews.net/2024/204032/

இந்தியாவில் கைதாகி சிறையிடப்படும் இலங்கை மீனவர்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸினூடாக நடவடிக்கை - ஈ.பி.டி.பி கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர்

3 months 2 weeks ago
08 JUN, 2024 | 05:39 PM
image

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி இந்திய கடற்பரப்புக்குள் சென்று, இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் அவ்வாறான மீனவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் விடுவிக்கப்பட்டு, நாடு திரும்ப நடவடிக்கை எடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (E.P.D.P.) மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளரும் அமைச்சரின் மாவட்ட இணைப்பாளருமான சுப்பையா  சந்துரு தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (8) பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

மன்னார் -தலைமன்னார் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 2023ஆம் ஆண்டு 11 மாதம் இந்திய கடலோர காவல் படையினரால் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்திய சிறைகளில் வாடியிருந்தார்கள். அவர்களை விடுவிக்கக் கோரி அவர்களுடைய  குடும்பத்தினர் எமது கட்சியை நாடியிருந்தனர்.

நாங்கள் அவர்களது கோரிக்கையை ஏற்று, இவ்விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டுசென்றோம். 

அதனையடுத்து, அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கடந்த செவ்வாய்க்கிழமை அனைத்து மீனவர்களும் நாடு திரும்பியுள்ளனர். 

அதேபோல் இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் விளைவுகள் காரணமாக இந்திய எல்லையை தாண்டி, இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்படும் இலங்கை மீனவர்கள் பல காலங்களாக சிறையில் வாடும் நிலை காணப்பட்டது.

இனிமேல் அவ்வாறான பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில், அவை எங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால், நாங்கள் நிச்சயம் அமைச்சரை தொடர்புகொண்டு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

மேலும், விடுதலையான தலைமன்னாரை சேர்ந்த 5 மீனவர்களும் அமைச்சரின் மன்னார் அலுவலகத்துக்குச் சென்று நன்றி தெரிவித்ததோடு ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/185616

யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை நடை - 2024"

3 months 2 weeks ago

Published By: VISHNU   08 JUN, 2024 | 09:40 PM

image
 

யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை  நடை - 2024" இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது .

2024_06_08_10_00_IMG_7436.JPG

யாழ் மத்திய பேருந்து நிலையம்  முன்னாலிருந்து  ஆரம்பித்த  குறித்த நடைபயணம், சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து பண்ணை வீதியூடாக  பொலிஸ் நிலைய வீதி, சென்று பொது நூலக  முன்பாக நிறைவடைந்தது. 

2024_06_08_09_59_IMG_7431.JPG

சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் எமது சுயமரியாதை  நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

2024_06_08_09_50_IMG_7417.JPG

2024_06_08_10_11_IMG_7453.JPG

https://www.virakesari.lk/article/185624

Checked
Sat, 09/28/2024 - 14:18
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr