புதிய பதிவுகள்2

Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம்

2 days 13 hours ago
வரி திருத்தம் தொடர்பில் IMF விசேட அறிவிப்பு இலங்கையின் அண்மைய வரி திருத்தங்களை மீளாய்வு செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார். அதேபோல், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்திற்கு நிறைவேற்று சபையின் ஒப்புதலைத் தொடர்ந்து பணியாளர் அறிக்கையில் முழுமையான மதிப்பீடு உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=197568

வெளிநாட்டில் உள்ளவர்களால் மகிந்தவுக்கு அச்சுறுத்தல்! ராஜபக்ச தரப்பின் முக்கிய அறிவிப்பு

2 days 13 hours ago
எம்மாம் பெரிய கூட்டம் இவ்வளவையும் பாதுகாக்க 300ம் 400மே காணாது. யாரை வணங்கிப் பாதுகாப்பு கேட்கிறார்கள்? ஆண்டவனையா அநுராவையா??

அரச சேவை தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

2 days 13 hours ago
எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல், அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' கட்டிடத்தில் அமைந்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) நடைபெற்ற மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த சேவையானது 200 வருடங்கள் பழமையானது எனவும், எமது நாட்டை புதிய திசையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். இருப்பினும், இறுதி நோக்கம் மற்றும் இலக்கு தொடர்பில் திருப்தியடையும் வகையில் தற்போதைய நிலைமை இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும், அரசு என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவை கண்டுள்ளதெனவும் தெரிவித்தார். சரிவடைந்திருக்கும், கட்டமைப்பை மீள உருவாக்க நாம் தயாரா? இல்லையா? என்பது குறித்து எம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். அரச சேவையில் இருக்கின்ற கதிரை தொடர்பான பிரச்சினை தனக்கு இல்லை எனவும், கதிரையில் அமர வைப்பதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற பிரச்சினையே தனக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி, அவற்றுக்கு இசைவான மாற்றங்களை செய்துகொண்டு , தமது துறைக்கு தலைமைத்துவம் வழங்கி அதனை வெற்றியை நோக்கி வழிநடத்தும் கதிரைகள் வெற்றிடமாக காணப்படுகின்றதென கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது இந்திய விஜயத்தின் போது 1500 அதிகாரிகளை இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சி அளிக்க இணக்கம் எட்டப்பட்டது என்றும் கூறினார். அடுத்த வருடத்தில் உயர்தரத்தில் சித்தியடையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு அரசாங்கத்தின் புலமைப்பரிசில்களை வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சில நிறுவனங்கள் மற்றும் பதவிகள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பது பிரச்சினையாக உள்ளதாகவும், எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் காணப்படுவதால், அதற்கான புதிய வியூகம் ஒன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்வதற்கான புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் செல்வாக்குகளை பொருட்படுத்தாமல் அவை தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார். அரச சேவையை மட்டுப்படுத்தும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லை எனவும், ஆனால் அரச சேவையை நடத்திச் செல்வதற்கான செலவில் பிரச்சினைகள் இருப்பதால், அரச சேவையை ஒரே நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து முறையான பொறிமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகார அடிப்படையில் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும், அரச அதிகாரிகளின் பங்களிப்பே இந்தப் பணிகளின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மக்கள் ஆணையின் 80% எதிர்பார்ப்புகளை அரச உத்தியோகத்தர்களே வௌிப்படுத்தியுள்ளனர் என்ற வகையில், அரசியல் அதிகார தரப்பின் பணிகளுக்கு அவர்கள் இணக்கம் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். எனவே, இவை இரண்டும் இருவேறு முரண்பாடான குழுக்கள் அல்ல என்பதையும் இரண்டும் இணக்கமான குழுக்கள் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதன்படி, அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் இலக்குகள் சமநிலையானதாக காணப்படுவதை கடந்த மக்கள் ஆணை வௌிப்படுத்தியிருப்பதால், இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பணியே எம்முன் உள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், மக்களுடன் தொடர்புபடும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். https://tamil.adaderana.lk/news.php?nid=197592

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் - ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க

2 days 13 hours ago
Published By: VISHNU 20 DEC, 2024 | 08:09 PM உள்ளுராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருடம் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (20) கண்டிக்கு விஜயம் செய்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலும் அடுத்த வருடத்திற்குள் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்ததுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அதனையடுத்து மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர். அதனையடுத்து அஸ்கிரிய விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வண. ஆணமடுவே தம்மதஸ்ஸி தேரர், பிரதி பதிவாளர் வண. நாரம்பனாவே ஆனந்த தேரர்,முதியங்கன ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண.முருத்தெனியே தம்மரத்தன தேரர் உள்ளிட்டோர் இதன்போது வருகை தந்திருந்ததுடன் அவர்கள் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்கு ஆசி வழங்கினர். போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201771

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!

2 days 13 hours ago
சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் தான் பூமிக்கு திரும்புவார் சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது. 2025 பிப்ரவரி மாதம் அவர் பூமி திரும்புவார் என கடந்த ஆகஸ்ட் மாதம் நாசா தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அவரது வருகை மேலும் தாமதமாகி உள்ளது. நாசா விண்வெளி வீரர்கள் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் க்ரூ-9 மிஷனுக்கான விண்கலம் மூலம் பிப்ரவரியில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்தது. இந்நிலையில், தற்போது அதன் புறப்பாடு மேலும் தாமதம் அடைந்துள்ளதாக தகவல். இதை நாசாவின் கமர்ஷியல் க்ரூ திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் உறுதி செய்துள்ளார். https://thinakkural.lk/article/313979

அரசாங்கம் மீது ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகம் என்கிறார் சுமந்திரன்

2 days 13 hours ago
சுமந்திரன், கீதநாத் காசிலிங்கம், டக்ளஸ் இவர்கள் மூவரும் தினமும் ஒரு பரபரப்பான அறிக்கை விடுவதாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகின்றது ....................

வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பது தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சு - அமைச்சர் லால்காந்த

2 days 14 hours ago
உள்ளேன் ஐயா😂! ஓம், தேங்காய்ப் பாலை (அதுவும் அடர்த்தியான முதல் பாலை😎) எல்லாக் கறிக்குள்ளும் போட்டு அவித்ததால் இலங்கையில் மாரடைப்பும், மூளை இரத்த அடைப்பும் தான் முதல் இரு மரணக் காரணங்களாக வந்திருக்கின்றன👇. https://www.healthdata.org/research-analysis/health-by-location/profiles/sri-lanka ஆனால், தேங்காயை வேறெதற்கும் பாவிக்கலாமா? ஆம். தேங்காயில் இருக்கும் நிரம்பாத கொழுப்பு பாண்டலடையாது. எனவே, மருந்துகள் தயாரிக்க எண்ணை தேவையானால் தேங்காய்க் கொழுப்பு திறமான கரைப்பான். அழகுசாதனப் பொருட்கள் இதனால் தான் தேங்காய் எண்ணையில் தயாரிக்கப் படுகின்றன.

சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!

2 days 14 hours ago
நீங்கள் அதிகம் பக்தி முத்திப் பேசுவதாக எனக்குப் படுகிறது. சில சமயங்களில் உங்கள் போன்றோரின் புலிகள் கால சம்பவங்களைப் பற்றிய பதிவுகளைப் பார்க்கையில், உண்மையிலேயே வடக்கு கிழக்கில் பிறந்து , அங்கேயே பல வருடங்கள் வசித்தவர்களுடன் தான் பேசுகிறோமா, அல்லது வடக்கு கிழக்கின் வர்ணமே தெரியாமல் சின்னத் திரையில் பார்த்து விட்டு புளகாங்கிதம் அடைந்தவர்களோடு பேசுகிறோமா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. புலிகளின் கொள்கையாக கப்பம், கடத்தல், மிரட்டல், சுருட்டல் என்பன இருக்கவில்லை. இதையே தான் அக்னியும் சொல்லியிருக்கிறார். ஆனால், அடிப்பொடிகளால் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. யாழில் இருக்கும், அங்கே வசித்த அனைவருக்கும் - அவர்கள் முட்டைக் கோதுக்குள் இழுத்துப் போர்த்திக் கொண்டு வசித்திருந்தால் ஒழிய- சில சம்பவங்கள் தெரிந்திருக்கும். இதெல்லாம் அப்போதிருந்த செய்தித் தாள்களில் கூட வந்திருக்காது, ( இருந்தவை எல்லாமே புலிகளின் செய்தித் தாள்கள் என்பதால்). இதை இங்கே அசாத்தின் தனிமனித சர்வாதிகாரத்தோடு ஒப்பிட்டது தான் தவறு. "இப்படி எதுவும் நடக்கவில்லை" என்று நீங்கள் சாதிப்பது புலிகள் மீதான பக்தியின் வெளிப்பாடு. எல்லாம் 100% வீதம் வெள்ளையாக இருந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உடையாமல் பாதுகாக்க முயலும் self-preservation மனநிலை. இது உங்கள் இஷ்டம், உரிமை. "நடந்தால் ஏன் பெயர் சொல்லி தண்டனை வழங்கத் தயங்குகிறார் அக்னி?" என்று கேட்பது இலங்கையில் இருக்கும் சட்ட ஒழுங்கு நிலை தெரியாத ஒரு அப்பாவி கோயிந்தனின் மனநிலை😂. இது உங்களிடம் இருப்பது எனக்கு ஆச்சரியம் தருகிறது.

உக்ரேன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் - ரஷ்யா

2 days 14 hours ago
செத்தகிளியால் எழும்பி நடக்கமுடியுமா? சமரசம் செய்துதானே ஆகவேண்டும். எங்கண்ட ட்ரம்ப் வந்து ஓடர்போடப் போறார் எண்டு செத்தகிளி மீசையில் மண் ஒட்டவில்லை கதை விடுது!😂 அது சரி கிளிக்கே மீசையில்லை அப்ப எப்பிடி செத்தகிளிக்கு மீசைவரும் எண்டு நீங்கள் கேள்வி கேட்டால் நான் அதற்குப் பொறுப்பல்ல!

பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்

2 days 14 hours ago
இது போன்ற "ரொய்லெற் ஊடக" ஊகங்கள் உண்மையா என்பது முக்கியமான கேள்வி. எனக்கென்னவோ இது சுமந்திரன் வந்து விடுவார் என்று நினைக்கும் சகலவழிகளையும் ரூம் போட்டு யோசித்து அதை யூ ரியூப்பாக்கி விட்டு, "அப்பவே சொன்னேன் பார்த்தியா?" என்று கிறெடிற் தேடும் ரொய்லற் ஊடக உத்தியாகத் தான் படுகிறது😂. இது உண்மையாக இருந்தால் , சுமந்திரன் இதைச் செய்யக் கூடாது என்பது தான் என் அபிப்பிராயம், அவா.தன் நடவடிக்கைகளை சுதந்திரமாக ஒரு பா.உ/மக்கள் பிரதிநிதி என்ற கட்டுப் பாடுகள் இல்லாமல் செய்யக் கூடிய சுதந்திரத்தை சுமந்திரன் பயன்படுத்த வேண்டும்.

இறைவனிடம் கையேந்துங்கள்

2 days 14 hours ago
🎧 அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா! ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா பொன்னடியைப் பொற்றுகின்றோம் சரணம் ஐயப்பா கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா! வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா!

அரசாங்கம் மீது ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகம் என்கிறார் சுமந்திரன்

2 days 14 hours ago
அப்படி இப்படி சுத்தி இங்கே வந்து நிற்கிறார். இது நோக்கம் போல தெரியவில்லை. ஏதாவது தடக்கினால் தானே அவரும் தலையை நிமிர்த்தலாம்.

பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்

2 days 15 hours ago
தமிழரசுக்கட்சியின்(Itak) பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தை தேசிய பட்டியலினூடாக தெரிவுசெய்தமையானது சுமந்திரனை(M.A.Sumanthiran) நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான தந்திரோபாயமாக இருக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் மதன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தேசிய பட்டியலுக்கான பெயர் பட்டியல் உறுப்பினர்களை முன்னதாகவே கொடுக்காதது சுமந்திரனை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான உத்தியாக கூட இருக்கலாம். தற்போது தெரிவுசெய்யப்பட்டிருக்கும், சத்தியலிங்கம் நடுநிலையானவர் அல்ல, அவர் ஒரு குழு சார்ந்து செயற்படக் கூடியவர். சுமந்திரன் மீதான வெறுப்பே தமிழரசுக்கட்சியின் பின்னடைவிற்கான காரணம். தாம் நினைக்கின்ற விடயங்களை எடுத்து நடத்தக்கூடிய விடயங்களில் சுமந்திரன் வல்லவர் என குறிப்பிட்டுள்ளார். சம்பந்தனின் பதவியையும், அவரின் வயது மூப்பையும் அவர் தனக்கு சாதகமாக சுமந்திரன் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...

பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்

2 days 15 hours ago
சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வதற்கு விரைவில் புதிய நகர்வு! https://tamilwin.com/article/sumathiran-s-next-step-to-enter-parliamen-1734690467

உக்ரேன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் - ரஷ்யா

2 days 16 hours ago
சமரசம்,...? இது சரியான சொல்லாடல் அல்ல. தான் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வருவதாக ரஸ்யா தெரிவித்துள்ளது. ஆனால் சமரசம் செய்ய ஆயத்தமாக உள்ளதாக கூறியதாகச் செய்திகள் ஏதும் இல்லை என நினைக்கிறேன்.

வெளிநாட்டில் உள்ளவர்களால் மகிந்தவுக்கு அச்சுறுத்தல்! ராஜபக்ச தரப்பின் முக்கிய அறிவிப்பு

2 days 16 hours ago
இராசபக்ஸ முட்டையடி கொஸ்ரிகளையிட்டு பயப்படுகிறார் போல,...🤣 புலம்பெயர் போலி டமில் தேசிய வியாபாரிகளால் போராட்டத்தையே அழிக்க முடியுமென்றால், ராசபக்ஸ பயப்படுவதில் நியாயம் உண்டு.

"Historical truth of New Year / புத்தாண்டு வரலாற்று உண்மை" [ஆங்கிலத்திலும் தமிழிலும்]

2 days 16 hours ago
"Historical truth of New Year / புத்தாண்டு வரலாற்று உண்மை" [ஆங்கிலத்திலும் தமிழிலும்] One of the earliest recorded New Year celebrations dates back around 4,000 years ago in ancient Babylon, where the Babylonians celebrated the New Year during the spring equinox began with the new moon (mid-March). They held a festival called Akitu, which lasted 11 days and involved various religious rituals and ceremonies to ensure a prosperous new year and in Assyria with the new moon nearest the autumn equinox (mid-September). The practice of celebrating the New Year has evolved over time and varied among different cultures. The ancient Egyptians, for instance, celebrated the New Year in conjunction with the annual flooding of the Nile River, which marked the beginning of their agricultural season. The Romans celebrated the New Year in March, but in 46 B.C., Julius Caesar introduced the Julian calendar, which moved the beginning of the year to January 1st in honor of Janus, the Roman god of beginnings and transitions. This change marked the start of the year in alignment with the cycle of nature and the winter solstice. The Romans derived the name for the month of January from their god Janus, who had two faces, one looking backward and the other forward. The practice of making resolutions to rid oneself of bad habits and to adopt better ones also dates to ancient times. Throughout history, various societies have celebrated the New Year with feasts, religious observances, and customs specific to their cultures. Many traditions associated with New Year's celebrations, such as making resolutions, exchanging gifts, and holding festivities, have endured through time and have been adopted by different civilizations around the world. Today, the celebration of the New Year is a global event marked by diverse customs and traditions, reflecting a blend of ancient practices and modern influences. It symbolizes new beginnings, hope, and the opportunity for a fresh start as people welcome the coming year. மிகப் பழைய பதிவு செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டம் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய பாபிலோனில் இருந்தது இன்று தெரிய வருகிறது, அங்கு பாபிலோனியர்கள் வசந்த உத்தராயணத்தின் போது புத்தாண்டைக் கொண்டாடினர். அவர்கள் அகிடு என்று அழைத்து இந்த திருவிழாவை நடத்தினர், இது 11 நாட்கள் நீடித்தது மற்றும் வளமான புத்தாண்டை உறுதி செய்வதற்காக பல்வேறு மத சடங்குகள் மற்றும் சடங்குகளை இது உள்ளடக்கியது. வசந்த உத்தராயணம் என்றால் என்ன? இரவும் பகலும், சமமாக இருப்பதால், மார்ச் மாதம் வசந்த காலம் என்று கூறப்படுகிறது. இது வசந்த காலம் அல்லது வடக்கு நோக்கிய உத்தராயணம் என்று அழைக்கப்படுகிறது. சூரியன் பூமத்திய ரேகை முழுவதும் கடந்து, வடக்கு நோக்கி நகர்ந்து, வடக்கு அரைக்கோளத்தில் நீண்ட (அதனால் வெப்பமான) நாட்களையும், தெற்கு அரைக்கோளத்தில் குறுகிய (மற்றும் குளிரான) நாட்களையும் கொண்டு வரும் நிகழ்வைக் குறிக்கிறது. புத்தாண்டைக் கொண்டாடும் பழக்கம் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியடைந்து பல்வேறு கலாச்சாரங்களிடையே வெவ்வேறாக மாறுபட்டது. உதாரணமாக, பண்டைய எகிப்தியர்கள், நைல் நதியின் வருடாந்த வெள்ளப் பெருக்குடன் இணைந்து புத்தாண்டைக் கொண்டாடினர், இது அவர்களின் விவசாய பருவத்தின் தொடக்கத்தைக் குறித்தது. ரோமானியர்களும் மார்ச் மாதத்தில் புத்தாண்டைக் கொண்டாடினர், ஆனால் கிமு 46 இல், ஜூலியஸ் சீசர் ஜூலியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார், இது ஆரம்பம் மற்றும் மாற்றங்களின் ரோமானிய கடவுளான ஜானஸின் நினைவாக ஆண்டின் தொடக்கத்தை ஜனவரி 1 ஆம் தேதிக்கு மாற்றியது. இந்த மாற்றம் இயற்கையின் சுழற்சி மற்றும் குளிர்கால சங்கிராந்தியுடன் இணைந்து ஆண்டின் தொடக்கத்தைக் குறித்தது. ரோமானியர்கள் ஜனவரி மாதத்திற்கான பெயரை தங்கள் கடவுளான ஜானஸிலிருந்து பெற்றனர், அவர் இரண்டு முகங்களைக் கொண்டிருந்தார், ஒன்று பின்னோக்கி மற்றொன்று முன்னோக்கிப் பார்க்கிறார். தீய பழக்கங்களில் இருந்து விடுபடவும், சிறந்த பழக்கங்களை கடைப்பிடிக்கவும் தீர்மானங்களை எடுக்கும் பழக்கமும் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது என்பது இதில் இருந்து புலப்படுகிறது குளிர்கால சங்கிராந்தி என்றால் என்ன? குளிர்கால சங்கிராந்தி என்பது பெரும்பாலும் "ஆண்டின் குறுகிய நாள்" என்று அழைக்கப்படுகிறது. இது வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தின் முதல் நாளைக் குறிக்கிறது. இந்த குளிர்கால சங்கிராந்தி பொதுவாக ஆண்டுதோறும் டிசம்பர் 20 அல்லது 21 ல் நடைபெறுகிறது. மிகவும் அரிதான காலங்களில் டிசம்பர் 23 ல் நடைபெறுகிறது. வரலாறு முழுவதும், பல்வேறு சமூகங்கள் புத்தாண்டை விருந்துகள், மத அனுசரிப்புகள் மற்றும் தங்கள் கலாச்சாரங்களுக்கே உரிய குறிப்பிட்ட பழக்கவழக்கங்களுடன் கொண்டாடியுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய தீர்மானங்கள், பரிசுகளை பரிமாறிக் கொள்வது மற்றும் பண்டிகைகளை நடத்துவது போன்ற பல மரபுகள் காலப்போக்கில் நிலைத்தது மட்டும் அல்ல உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாகரிகங்களால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ளன. இன்று, புத்தாண்டு கொண்டாட்டம் என்பது பல்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளால் குறிக்கப்பட்ட உலகளாவிய நிகழ்வாகும், இது பண்டைய நடைமுறைகள் மற்றும் நவீன தாக்கங்களின் கலவையாக இன்று பிரதிபலிக்கிறது. புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பாக வரவிருக்கும் ஆண்டு மனித வாழ்வின் புதிய தொடக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் போன்றவற்றை ஏற்படுத்தும் என மகிழ்வாக அதை வரவேற்கின்றனர். (கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna)
Checked
Mon, 12/23/2024 - 04:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed