புதிய பதிவுகள்2

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 days 10 hours ago
தென் ஆபிரிக்காவின் முன்ன‌னி விக்கேட்டுக்க‌ள் போய் விட்ட‌ன‌ இன்னும் இர‌ண்டு விக்கேட் எடுத்தால் பெரிய‌ ர‌ன்ஸ் ரேட்டில் இந்தியா வென்று விடும்.........................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 days 11 hours ago
இந்திய‌ அணி ம‌ற்ற‌ ம‌க‌ளிர்க‌ள் ந‌ன்றாக‌ விளையாடுகின‌ம் இந்தியா ம‌க‌ளிர் க‌ப்ட‌ன் க‌ரு இவான்ட‌ விளையாட்டு ச‌ரி இல்லை................இது உல‌க‌ கோப்பை இப்ப‌ விழிக்கா விட்டால் அவுஸ்ரேலியா கோப்பைய‌ தூக்கி கொண்டு போய் விடுவின‌ம்..................இந்தியா ம‌க‌ளிர் க‌ப்ட‌ன் க‌ட‌ந்த‌ மூன்று விளையாட்டில் விட்ட‌ பிழைக‌ளை ச‌ரி செய்து அடுத்த‌ விளையாட்டில் சாதிப்பான‌ என‌ ந‌ன்புகிறேன்🙏👍...................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 days 11 hours ago
தோனி இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவ‌து ந‌ல்ல‌ம் தென் ஆபிரிக்கா சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் த‌கிர் அவ‌ருக்கு 45க‌ட‌ந்து விட்ட‌து இப்ப‌வும் க‌ர்விய‌ன் தீவில் ந‌ட‌க்கும் சிபிஎல்ல‌ விளையாடுகிறார்....................... தோனி இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவ‌து ந‌ல்ல‌ம் தென் ஆபிரிக்கா சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் த‌கிர் அவ‌ருக்கு 45க‌ட‌ந்து விட்ட‌து இப்ப‌வும் க‌ர்விய‌ன் தீவில் ந‌ட‌க்கும் சிபிஎல்ல‌ விளையாடுகிறார்............................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 days 11 hours ago
இன்றும் அதே போல்தான். யார் அடிப்பார். யார் உருட்டுவார் என்றே தெரியாமல் போய்க்கொண்டிருக்கு. ஆனால் என்ன கடைசியில் ஒருவர் போட்டு பிளந்துவிடுகிறார். இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை மிக நீளம்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 days 11 hours ago
👍.............. தோனி ரியலி கிரேட் தான்.............. கடைசி வருடம் விளையாடாமல் விட்டிருக்கலாம்......... பல ஜாம்பவான்களும் இப்படித் தான்......... கடைசியில் இழு இழு என்று இழுத்துவிடுவார்கள்............

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 days 11 hours ago
அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து இள‌ம் ப‌ருவ‌ தோனி😁👍.............அந்த‌ ம‌க‌ளிர் உண்மையில் அடித்து ஆட‌க் கூடிய‌ ம‌க‌ளிர் , அவான்ட‌ இர‌ண்டு கைச்சை தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் விட்ட‌ ப‌டியால் தான் 250ர‌ன்ஸ்ச‌ க‌ட‌க்க‌ முடிந்த‌து👍............................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 days 12 hours ago
🤣.............. இந்த தோணி, கப்பல் என்று சொல்லிச் சொல்லியே போன ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் புயலில் மாட்டுப்பட்டது போல சின்னாபின்னமாகியது.................🤣.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 days 12 hours ago
சீமானுக்கு யாழ்களம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால்... யாழ் களத்துக்கு சீமான் செய்தி போட்டாலே ஒரு 18 நாள் திருவிழா தான் , அண்ணி காவடிகள், கச்சான் கடைகள், பிக்பாகெட் காரர்கள், இப்படி... இங்கே பல பக்கங்களை தாண்டும் கருத்துகள், வண்ண வண்ண மீம்ஸ், வடிவான கார்ட்டூன்ஸ்... இப்படியாவது இந்த தளம் தெம்பாக இயங்குவது சந்தோசம். 😁 😜

யாழில் “அணையா விளக்கு” நினைவுத் தூபி உடைக்கப்பட்டது!

2 days 12 hours ago
யாழ்.செம்மணி அணையா விளக்கு மீண்டும் புனரமைக்கப்பட்ட செய்தி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அந்த விளக்கு வெறும் ஒளி அல்ல — அது யாழ்ப்பாணத்தின் கலாச்சார அடையாளம், வரலாற்று நினைவுச் சின்னம், மேலும் அந்த மண்ணின் மக்களின் மன உறுதியின் சின்னமாகும். அது சேதமாக்கப்பட்டபோது பலருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டது, ஆனால் இன்று அது மீண்டும் எழுந்திருப்பது யாழின் உயிர்ப்பையும், ஒருமைப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்வு ஒரு முக்கியமான செய்தியை தெரிவிக்கிறது: அணையா விளக்கு போல், யாழின் ஒளியும் — அதன் பண்பாடும், அதன் மக்கள் உறுதியும் — எந்த விசமத்தாலும் அணைய முடியாது.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 days 12 hours ago
🤣கொஞ்சம் அலட்சியமாக இருந்தால், "சீமான் தான் விஜயலட்சுமி மீது வழக்குப் போட்டார்!" என்றும் புதுக் கதை பின்னுவீர்கள் போல இருக்கிறதே😂? 2011 இல் சீமான் மீது சென்னைக் கோர்ட்டில் கொண்டு FIR வரப் பட்டு, ஒரு நீதிபதியினால் முறைப்பாட்டாளரின் வாக்குமூலமும் பதிவு செய்யப் பட்டபின்னர், விஜயலட்சுமியை மிரட்டி 2012 இல் வாபஸ் வாங்க வைத்தார்கள். 2023 இல் மீண்டும் அவர் அந்தக் கேசைத் திறக்க முனைகிறார். சீமான் இதைத் தடுக்கக் கோரி (விசாரிக்கக் கோரி அல்ல!) சென்னை உயர் நீதி மன்றை நாடுகிறார். "வாக்குமூலம் பதிவாகி விட்டது, எனவே குற்றம் சாட்டியவர் இல்லாவிட்டாலும் கூட வழக்கை தடுக்க முடியாது" என சென்னை நீதி மன்றம் மறுத்து விட்டது. கீழே இணைப்பு. The HinduMadras High Court dismisses Seeman’s plea to quash rape caseMadras High Court dismisses Naam Tamilar Katchi chief Seeman's petition to quash actor vijayalakshmi rape case, directs police to complete investigation in 12 weeks.பெப்ரவரி 2025 இல் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்த உடனே, சீமான் உச்ச நீதிமன்றிற்கு மார்ச் 2025 இல் சென்று "தள்ளுபடி செய்யுங்கள்" என்றே மனுப் போட்டார் (விசாரித்து முடித்து வையுங்கள் என்று அல்ல!). இரு தரப்பையும் "மன்னிப்புக் கேட்டால் வழக்கை தள்ளுபடி செய்யலாம்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அப்படியே கேட்டிருக்கிறார். ஏதோ சீமான் விசாரித்துத் தன் குற்றமற்ற தன்மையை நிரூபிக்கப் போராடியதாகத் தான் இனி சீமான் விசிறிகளும், தம்பிகளும் எழுதுவார்கள் என ஊகித்தேன். இன்று நீங்கள் தொடங்கியே விட்டீங்கள்😂!

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 days 12 hours ago
🤣............. டென்மார்க்கில் இருந்து எறியப்பட்ட கற்கள் இலக்கு தவறி இந்திய வீராங்கனைகளின் தலைகளில் விழுந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.................. இந்தியாவை நம்பியோர் கைவிடப்படுவார்..................🤣.

6 குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்த இருமல் மருந்து!

2 days 12 hours ago
இந்தத் தகவல் உங்களுக்கு "எட்டக்கூடிய" இடத்தில் இருக்கவில்லைப் போல: இந்தியாவில் மருந்துகள் உற்பத்தி, GMP தராதரப் பரிசோதனைகள், அவை மீறப் பட்டால் தண்டனை என்பன மத்திய அரசின் மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்புகள் மூன்றின் கீழ் மட்டும் தான் இருக்கின்றன. மாநில அரசுக்கு இதில் எந்தக் கடப் பாடும் ,அதிகாரமும் இல்லை. "பல்பு" தகவல் தேடுவோருக்கும், பகிர்வோருக்கும் கொடுக்கும் நேரத்தை உங்கள் "பியூஸ் போன பல்பை" மாற்றி ஒளி பெறப் பயன்படுத்துங்கள் ஐயா😎!

சிவவாக்கியம் எனும் தேன்

2 days 13 hours ago
திருச்சிற்றம்பலம்…. இலக்கியாவும், பீரோ ஆண்டியும், பலூன் அக்காவும் டிரெண்ட் ஆகும் தமிழ் சமூகவலை உலகில், அவ்வப்போது அரிதாக முருகனும் டிரெண்ட்டாவது உண்டு. ஆனால்…. நாமே ஓ எல் பரீட்சைக்காக படித்த, மறந்த, 9ம் நூற்றாண்டின் சிவவாக்கியர் டிரெண்ட் ஆவது…. புதுசு கண்ணா…புதுசு… அதுவும் மனிசன் என்னமா எழுதி இருக்கார்ன்னு பார்க்க, பார்க்க….. படிக்க, படிக்க… அட…..அட… இவர் பெரியாருக்கு முதலே பெரியாரிசம் பேசி இருக்கிறாறே, அதுவும் 9ம் நூற்றாண்டில் என்ற வியப்பு எழுவது மட்டும் அல்ல…. ஆசார மறுப்பையும், பக்தியையும், நிலையாமையையும் குழைத்து அப்படியே அதை சிவ நம்பிக்கையில் முக்கி சிவவாக்கியர் நமக்கு அளிக்கும் விருந்து….. தேன்…தேன்… தித்திக்கும் தேன். நீங்களும் பருகுங்காள்….மக்காள். முழுத் தொகுப்பு எனக்குப் பிடித்த பகுதி😂 15 நிமிட காணொளியாக. இதை மீள பிரபலபடுத்தியவர் இவர் என எண்ணுகிறேன்.

தலைமன்னாரிலிருந்து இராமர் பாலம் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான படகுச் சேவை விரைவில்!

2 days 14 hours ago
https://maps.app.goo.gl/x1nRS37xmGgpbGoPA?g_st=ipc இதுதான் அந்த சவக்காலை தங்குமிடம். நிரந்தரமாக மூடிவிட்டார்களாம். பிகு போதிய வசதிகள் செய்தால் - இந்தியன் சங்கிகளின் தலையில் இதுதான் இராமர் பாலம் என சொல்லி நன்றாக மிளகாய் அரைத்து உள்ளூர் வாசிகள் பயனடையலாம்.

தலைமன்னாரிலிருந்து இராமர் பாலம் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான படகுச் சேவை விரைவில்!

2 days 14 hours ago
நல்லது. 3ம் தீவு வரை அலை தாழும் நேரம் (low tide) நடந்தே போகலாம். அலை மீளமுதல் திரும்பி விட வேண்டும். பெரிய அழகு என்றில்லை, ஆனால் ஒரு திரில் அனுபவமாக இருக்கும். வெறும் கூகிள் மேப், போகும் வழியில் கிடைத்த இரு வழிகாட்டிய சிறுவர்களுடன் போய் - வந்தேன். தலைமன்னாரில் ஒரு குடிசைகள் போன்ற தங்குமிடத்தில் தங்கினேன். அதன் உரிமையாளர்+நடத்துபவர் ஒரு ஜேர்மானிய வெள்ளை இனத்தவர். தங்குமிடம் போய் சேர இருட்டி விட்டது. அவர் ஒரு tree house மரத்தில் அமைத்து வாழ்ந்தார். நல்ல சாப்பாடு, கொண்டு போன ஒரு வெளிநாட்டு போத்தலை கொடுத்ததும் அவர் முகத்தில் அளவுகடந்த சந்தோசம். சாப்பாட்டுக்கு காசு வாங்கவில்லை. எல்லாமுமே மிக அடிப்படையான வசதிகள். பாம்புகள் ஓடிய அடையாளம் எங்கும். படுத்தெழும்பி காலையில் பார்த்தால் …. தங்குமிடத்தை ஒரு முன்னாள் சவக்காலையில் அமைத்துள்ளார்🤣.
Checked
Sat, 10/11/2025 - 23:56
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed