2 days 6 hours ago
வணக்கம் வாத்தியார் . ...........!
பெண் : சில்லென்ற தீப்பொறி
ஒன்று சிலு சிலு சிலுவென
குளு குளு குளுவென சர சர
சர வென பரவுது நெஞ்சில்
பார்த்தாயா
பெண் : இதோ உன் காதலன்
என்று விறு விறு விறுவென
கல கல கலவென அடி மன
வெளிகளில் ஒரு நொடி நகருது
கேட்டாயா
பெண் : உன் மெத்தை
மேல் தலை சாய்கிறேன்
உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன்
என்னென்னவோ பண்ணுதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
பெண் : கண்ணா உன் காலணி
உள்ளே என் கால்கள் நான்
சேர்ப்பதும் கண்மூடி நான்
சாய்வதும் கனவோடு நான்
தொய்வதும் கண்ணா உன்
கால் உறை உள்ளே என் கைகள்
நான் தொய்ப்பதும் உள்ளுற தேன்
பாய்வதும் உயிரோடு நான் தேய்வதும்
பெண் : முத்து பையன் தேநீர்
உண்டு மிச்சம் வைத்த
கோப்பைகளும் தங்க கைகள்
உண்ணும் போது தட்டில் பட்ட
ரேகைகளும் மூக்கின் மேலே
முகாமிடும் கோபங்களும் ஓஓஓ…
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
பெண் : அன்பே உன் புன்னகை
கண்டு எனக்காக தான் என்று
இரவோடு நான் எரிவதும்
பகலோடு நான் உறைவதும்
நீ வாழும் அரை தனில் நின்று
உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலர்வதும்
நோய் கொண்டு நான் அழுவதும்
பெண் : அக்கம் பக்கம் நோட்டம்
விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல
நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில்
சுவாசங்களும் ஓஓஓ…
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே.......!
--- தித்திக்குதே தித்திக்குதே ---
2 days 6 hours ago
விமர்சனத்துக்கு நன்றி கிருபன் . .........!
2 days 7 hours ago
20 DEC, 2024 | 04:54 PM
(எம்.மனோசித்ரா)
சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கிய காலமொன்று இருந்தது. இந்த கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இலங்கை மது ஒழிப்பு பேரவையின் புதிய அலுவலக திறப்பு விழாவில் இன்று வெள்ளிக்கிழமை (20) கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கிய காலமொன்று இருந்தது. இந்த கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும்.
நாட்டின் சமூக ஒழுங்கு குறித்து உண்மையான யதார்த்தமான புரிதலை நாம் கொண்டிருக்க வேண்டும். இதை விடுத்து வெறுமனே பேசக் கூடாது. நாட்டில் டொலருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அடுத்த ஆண்டு முதல் வட்டியில் ஒரு பகுதியை செலுத்த வேண்டும்.
பிற வெளிநாட்டு கடன்களையும் செலுத்த வேண்டியுள்ளன. இதை அடைவதற்காக நமது நாட்டின் அந்நிய செலாவனி கையிருப்புக்களை உயர் மட்டத்தில் வெற்றிகரமாக பேண வேண்டும்.
இதன் பொருட்டு, சுற்றுலாத் துறையானது அந்நியச் செலாவணியை ஈட்டும் முக்கிய ஏற்றுமதி வணிகங்களில் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் அதேவேளை, அதனால் சமூகத்தில் ஏற்படும் சமூக பாதிப்புகளைக் குறைப்பதற்கும், தடுப்பதற்கும் சமச்சீரான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக மதுபானசாலை உரிமைப் பத்திரங்கள் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக அல்லாமல் அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்காக வழங்கப்பட்டன.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு, அரசியல்வாதிகளை பலப்படுத்தவும், கட்சி தாவும் நடவடிக்கையையும் மேற்கொள்வுமே இவை வழங்கப்பட்டு வந்தன. இந்தக் கலாசாரத்திலிருந்து விலகி நல்லொழுக்கமுள்ள நாகரீகமான சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
முறையான கொள்கை உருவாக்கத்துடன், கட்டளைச் சட்டங்கள் மற்றும் வரைவுச் சட்டங்கள் மூலம் மது இல்லாத சிந்தனை மற்றும் கருத்து உருவாக்கப்பட வேண்டும்.
அதன் மூலம் அவை செயல்படுத்தப்பட்டு, பின்பற்றப்பட்டு, கண்காணிக்கப்படவும் வேண்டும். இந்த இலக்குகளை நிறைவு செய்யும் செயற்பாட்டை வெற்றியடையச் செய்வதன் மூலம் அனைவரது அபிலாஷைகளையும் வெற்றிகொள்ள முடியும் என்றார்.
https://www.virakesari.lk/article/201750
2 days 7 hours ago
பாலின ஈர்ப்புகளில் என்னென்ன வகைகள் உள்ளன? பொம்மைகள் மீதும் காதல் வருமா?
20 டிசம்பர் 2024, 10:59 GMT
@akihikokondosk
அகிஹிகோ கோண்டோ தன்னை ஒரு ஃபிக்டோசெக்ஷூவல் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அகிஹிகோ கோண்டோ, கடந்த 2018ஆம் ஆண்டில், தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தார் எதிர்ப்பையும் மீறி காதலி 'ஹட்சுனே மிக்குவை' கரம்பிடித்தபோது, அந்தத் திருமணம் உலகம் முழுவதும் பேசுபொருளானது.
சமீபத்தில், அவர் தனது மனைவியுடன் ஆறாவது திருமண நாளைக் கொண்டாடியதும் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்தது.
ஜப்பானை சேர்ந்த ஒருவர் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்வதிலோ அல்லது தனது திருமண நாளைக் கொண்டாடுவதிலோ என்ன இருக்கிறது, இது ஏன் செய்திகளில் இடம்பிடித்தது என்று நீங்கள் நினைக்கலாம்.
அதற்குக் காரணம், அவரது மனைவி ஹட்சுனே மிக்கு, ஒரு அனிமே கதாபாத்திரம். இன்னும் சொல்லப்போனால் அவர் திருமணம் செய்தது, மிக்குவின் முழு உருவ பொம்மையைக்கூட அல்ல, ஒரு முப்பரிமாண ஹோலோகிராம் பிம்பம் மட்டுமே.
மென்பொருளின் உதவியோடு அந்த பிம்பம் அவருடன் பேசியது. அதாவது அமேசானின் அலெக்ஸா (Alexa) அல்லது ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Siri) போல, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஹட்சுனே மிக்குவுடன் உரையாடி, அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தார் அகிஹிகோ கோண்டோ.
ஜப்பானை சேர்ந்த 'கேட்பாக்ஸ் (Gatebox)' என்ற நிறுவனம்தான் இந்த ஹோலோகிராமை தயாரித்திருந்தது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, அந்நிறுவனம் 'ஹட்சுனே மிக்கு'வுக்கான மென்பொருளை கைவிட்டது.
முன்னர் போல, மிக்குவுடன் பேச முடியவில்லை என்றாலும்கூட அந்தக் கதாபாத்திரத்தின் பொம்மைகளுடன் கோண்டோ வாழ்ந்து வருகிறார். கோண்டோ தன்னை ஒரு 'ஃபிக்டோசெக்ஷூவல்'(Fictosexual) என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். அதாவது கற்பனை கதாபாத்திரங்கள் (Fictional characters) மீது ஈர்ப்பு கொள்பவர்கள்.
தன்னுடைய இந்த வாழ்க்கை முறை காரணமாகப் பலரும் தன்னை வெறுத்ததாகவும், குடும்பத்தினர்கூட இதுவொரு 'உளவியல் கோளாறு' என நினைத்ததாகவும் ஊடக நேர்காணல்களில் கோண்டோ தெரிவித்திருந்தார். அதேநேரம் இத்தகைய பாலின ஈர்ப்பு, நிச்சயமாக ஒரு 'உளவியல் கோளாறு' அல்ல.
'உளவியல் சார்ந்தது அல்ல'
@akihikokondosk
மிக்குவுடன் பேச முடியவில்லை என்றாலும்கூட அந்த கதாபாத்திரத்தின் பொம்மைகளுடன் கோண்டோ வாழ்ந்து வருகிறார்
அமெரிக்க மனநல சங்கத்தின் (American Psychiatric Association- ஏபிஏ) உளவியல் கோளாறுகளை வகைப்படுத்துவதற்கான கையேட்டில் 'ஃபிக்டோசெக்ஷூவல்' மனநோயாக வகைப்படுத்தப்படவில்லை.
ஏபிஏ என்பது அமெரிக்காவில் உளவியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னணி அறிவியல் மற்றும் தொழில்முறை அமைப்பாகும். 132 ஆண்டுகள் பழமையான இந்த அமைப்பில், 157,000க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்கள் மற்றும் மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தன்பாலின ஈர்ப்பு (Lesbian, Gay), இருபாலின ஈர்ப்பு (Bisexual), பாலின ஈர்ப்பு இல்லாமை (Asexual) எனப் பல்வேறு வகையான பாலின ஈர்ப்புகள் உள்ளன. அவற்றையும் அமெரிக்க மனநல சங்கம் எந்தவித உளவியல் பிரச்னையாகவும் அடையாளப்படுத்தவில்லை. அவை மனிதர்களின் இயல்பான குணங்கள்தான் என ஏபிஏ கூறுகிறது.
பாலின ஈர்ப்பு என்றால் என்ன?
Getty Images
பாலின ஈர்ப்பு (Sexual orientation) என்பது ஒருவரின் உணர்ச்சி, காதல் அல்லது பாலியல் நோக்கிலான ஈர்ப்புகளின் நீடித்த வடிவத்தைக் குறிப்பதாக அமெரிக்க மனநல சங்கம் கூறுகிறது.
எளிமையாகச் சொன்னால், குயர் சென்னை கிரானிக்கிள்ஸ் கையேட்டின்படி, ஒரு நபர், எந்த நபர்கள் அல்லது பாலினங்களுடன் உடல்ரீதியாக, உணர்வு ரீதியாக அல்லது காதல் சார்ந்து ஈர்க்கப்படுகிறார் என்பதே பாலின ஈர்ப்பு.
பாலின ஈர்ப்பும் பாலின அடையாளமும் (Gender identity) ஒன்றல்ல. பிறப்பின்போது வழங்கப்படுகிற பாலினத்தைச் சார்ந்த வழமைகள், நடத்தைகள், பாலின பங்களிப்பு ஆகியவற்றை வைத்து சமூகம் ஒரு நபரைப் பார்க்கும் விதமே பாலினம் (Gender) எனப்படும்.
ஆனால், ஒரு நபர் தனது பாலினத்தை எவ்வாறு வரையறுக்கிறார் என்பதே பாலின அடையாளம். இந்த பாலின அடையாளம் என்பது பிறப்பின்போது வழங்கப்படுகின்ற பாலினம் சார்ந்த வழமைகள் மற்றும் சமூகம் வைத்திருக்கும் எதிர்பார்ப்பைப் பொறுத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
பல்வேறு வகையான பாலின ஈர்ப்புகள்
Getty Images
பொதுவாக ஒருவரின் பாலின ஈர்ப்புக்கு அடிப்படையாக இருக்கும் முக்கியக் கூறுகள் வளரிளம் பருவத்தின் தொடக்கத்தில் வெளிப்படுகின்றன என்றும் உணர்ச்சி, காதல் மற்றும் பாலியல் ஈர்ப்பின் இந்த வடிவங்கள் எந்தவொரு பாலியல் முன் அனுபவமும் இல்லாமல்கூட எழலாம் என்றும் ஏபிஏ கூறுகிறது.
அதேபோல, ஒருவரின் பாலின ஈர்ப்பை மாற்றுவதற்கு, அறிவியல் ரீதியாகப் பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகள் ஏதும் இல்லை எனக் கூறும் அமெரிக்க மனநல சங்கம், அத்தகைய சிகிச்சைகளை ஊக்குவிப்பது தன்பாலின மற்றும் இருபாலின ஈர்ப்பாளர்களுக்கு சமூகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறுகிறது.
அமெரிக்காவை சேர்ந்த கிளாட் (Glaad) எனும் அரசு சாரா ஊடக கண்காணிப்பு அமைப்பு பலதரப்பட்ட பாலின ஈர்ப்புகளை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டுமென விளக்குகிறது.
ஊடகங்கள், பொழுதுபோக்குத்துறை மற்றும் சமூகத்தில் பால் புதுமையினருக்கான (LGBTQ+) முறையான பிரநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த கிளாட் அமைப்பு செயல்படுகிறது.
பாலின ஈர்ப்பு வகைகள்
Getty Images
கிளாட் அமைப்பின் விளக்கப்படி,
எதிர்பாலீர்ப்பு (Hetrosexuality)
ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் வரும் பாலீர்ப்பு பொதுவாக எதிர்பாலீர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. பாலின ஈர்ப்பு என்பதைத் தாண்டி காதல் அல்லது உணர்வு சார்ந்த ஈர்ப்பும் இதில் அடங்கும்.
தன்பாலின ஈர்ப்பு (Lesbian, Gay)
தங்களுடைய பாலினத்தைச் சேர்ந்தவர்கள் மீது பாலின ஈர்ப்பு கொள்வது தன்பாலின ஈர்ப்பு அல்லது ஒருபாலீர்ப்பு எனப்படும். இதிலும் பாலின ஈர்ப்பு என்பதைத் தாண்டி காதல் அல்லது உணர்வு சார்ந்த ஈர்ப்பும் உண்டு.
இருபாலின ஈர்ப்பு (Bisexual)
தன்னுடைய பாலினத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற பாலினத்தைச் சேர்ந்தவர்கள் மீது பாலின ரீதியாகவோ, காதல் அல்லது உணர்வு ரீதியாகவோ ஈர்ப்பு கொள்பவர்கள் இதில் அடங்குவார்கள். ஆனால் இந்த இருபாலினத்தவர்கள் மீதான ஈர்ப்பு என்பது ஒரே நேரத்தில், ஒரே விதத்தில் இருக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை.
எதிர்பாலீர்ப்பு, தன்பாலின ஈர்ப்பு, மற்றும் இருபாலின ஈர்ப்பு, இவை அனைத்துமே மனித பாலுணர்வின் இயல்பான அம்சங்கள் என்றும், இவை பல்வேறு கலாசாரங்கள் மற்றும் வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ஏபிஏ கூறுகிறது.
Getty Images
அமெரிக்க இசைக் கலைஞரும் நடிகையுமான மைலே ரே சைரஸ், தனது பாலின ஈர்ப்பு குறித்து வெளிப்படையாகப் பேசிய பிரபலங்களில் ஒருவர்
அனைத்துப் பாலின ஈர்ப்பு (Pan sexual)
பாலின அடையாளத்திற்கு அப்பாற்பட்டு அல்லது அனைத்து பாலினங்களைச் சேர்ந்தவர்கள் மீதும் வரக்கூடிய ஈர்ப்பு 'அனைத்துப் பாலின ஈர்ப்பு' எனப்படும். அதேநேரம் அனைத்து பாலினங்களின் மீதும் ஒரே மாதிரியான அல்லது ஒரே அளவிலான ஈர்ப்பு இருக்கும் என்று கூற முடியாது.
அமெரிக்க இசைக்கலைஞரும் நடிகையுமான மைலே ரே சைரஸ், அமெரிக்க பாடகி மற்றும் நடிகை ஜானெல்லே மோனே ராபின்சன், பிரிட்டன் நடிகை காரா ஜோஸ்லின் டெலிவிங்னே, உள்படப் பல பிரபலங்கள் தங்களை 'அனைத்துப் பாலின ஈர்ப்பு கொண்டவர்கள்' என பொதுவெளியில் அறிவித்துள்ளனர்.
பாலீர்ப்பு இல்லாமை (Asexual)
யார் மீதும் பாலின ஈர்ப்பு இல்லாத நபர்களைக் குறிக்க 'பாலீர்ப்பு இல்லாமை' என்ற சொல் பயன்படுகிறது. அதேநேரம், எவரின் மீதும் காதல் அல்லது உணர்வு ரீதியான ஈர்ப்பு கொள்ளாத நபர்களைக் குறிக்க ஏரோமான்டிக் (Aromantic) என்ற சொல் பயன்படுகிறது.
இதில் 'பாலீர்ப்பு இல்லாத' நபர்கள், ஏரோமான்டிக் நபர்களாக இருக்கலாம் அல்லது அவர்களுக்கு பாலீர்ப்பு அல்லாத காதல் ஈர்ப்பு மட்டும் இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல ஏரோமான்டிக் நபர்கள் பாலியல் ஈர்ப்பு கொண்டவர்களாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
எதிர்பாலீர்ப்பு கொள்ளாதோரையும் அல்லது பிறப்பில் குறிக்கப்படும் பாலினத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்களையும் குறிக்க 'குயர்' என்ற வார்த்தை பயன்படுகிறது. கடந்த காலங்களில், சமூகத்தின் பாலின மற்றும் பாலீர்ப்பு எதிர்பார்ப்புகளுக்கு ஒத்துவராதவர்களுக்கான அவச்சொல்லாக இது இருந்தது. ஆனால், இப்போது பால் புதுமை சமூகத்தினர் (LGBTIQA+) தங்களை வரையறுத்துக் கொள்வதற்காக இதைப் பயன்படுத்துகின்றனர்.
Getty Images
ஆன்ரோசெக்ஷுவல் மற்றும் கைனேசெக்ஷுவல்
ஆன்ரோசெக்ஷுவல் (Androsexual) என்பது ஆண்மை (Masculinity) என விவரிக்கப்படும் சில விஷயங்களுக்காக, ஒருவர் மீது காதல், அழகியல் அல்லது பாலினரீதியிலான ஈர்ப்பு கொள்பவர்களைக் குறிக்கப் பயன்படுகிறது.
அதேபோல பெண்மை என விவரிக்கப்படும் சில விஷயங்களுக்காக, ஒருவர் மீது ஈர்ப்பு கொள்பவர்களை கைனேசெக்ஷுவல் (Gynesexual) என்று குறிப்பிடுவார்கள்.
மேலே குறிப்பிட்டவை தவிர்த்து, சில பாலின ஈர்ப்புகள் இன்னும் பரவலாக அறியப்படவில்லை என்றாலும், இணையத்தில் அவை குறித்து விவாதங்கள் எழுவதைக் காணலாம். அதில் குறிப்பிடத்தக்க சில,
ஃபிக்டோசெக்ஷூவல் (Fictosexual)
புத்தகங்கள், அனிமேக்கள், வீடியோ கேம்கள் அல்லது திரைப்படங்களின் கற்பனை கதாபாத்திரங்கள் மீது காதல் அல்லது பாலின ஈர்ப்பு கொண்டிருப்பவர்களை இவ்வாறு விவரிக்கிறார்கள்.
சேபியோசெக்ஷுவல் (Sapiosexual)
உடல் தோற்றத்தைப் பொருட்படுத்தாமல், புத்திசாலித்தனம் அல்லது மதிநுட்பத்திற்காக ஒருவர் மீது ஈர்ப்பு கொள்ளும் நபர்களை விவரிக்க இந்தச் சொல் பயன்படுகிறது.
லித்தோசெக்ஸுவல் (Lithosexual)
லித்தோசெக்ஸுவல் என்பது, ஒரு நபர், மற்றவரிடம் காதல் அல்லது பாலின ஈர்ப்பைக் கொண்டிருப்பார், ஆனால் அதே ஈர்ப்பையோ அல்லது காதலையோ தான் விரும்பும் நபரிடம் இருந்து எதிர்பார்க்கமாட்டார். இந்த வகையான ஈர்ப்பைக் கொண்டிருப்பவர்கள், தான் விரும்பும் நபருடன் உடல் ரீதியிலான அல்லது உணர்வு ரீதியிலான இணைப்பு ஏற்படுத்துவது குறித்துக் கவலைகொள்ளமாட்டார்கள்.
பலதரப்பட்ட பாலின ஈர்ப்புகள் குறித்த சமூகப் பார்வை
Getty Images
"இதுபோன்ற பலதரப்பட்ட பாலின ஈர்ப்புகளை ஏற்றுக்கொள்வதிலும், அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதிலும் பல்வேறு சிக்கல்கள் சமூகத்தில் உள்ளன. ஆனால், எந்த வகையான பாலின ஈர்ப்பாக இருந்தாலும், அதில் ஒருவரின் 'சம்மதம்' (Consent) என்பது மிகவும் முக்கியம்" என்கிறார் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் அமைப்பைச் சேர்ந்த மௌலி.
இந்த அமைப்பு, ஒரு சுயாதீன பதிப்பகமாகவும் இலக்கியக் குழுவாகவும் செயல்பட்டு வருவதாகக் கூறும் மௌலி, "பால் புதுமை (LGBTIQA+) எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மீது சமூகத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்" என்கிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் வேல்ஸில் பாலின ஈர்ப்பு சார்ந்து ஒரு கணக்கெடுப்புநடத்தப்பட்டது. அதில் 13 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களை தன்பாலின ஈர்ப்பு அல்லது இருபாலின ஈர்ப்பு கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
அதில், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில், 1.5 சதவீதத்திற்கும் அதிகமானோர் (7,48,000 பேர்) தன்பாலின ஈர்ப்பு கொண்டதாகவும், 6,24,000 பேர் (1.3%) இருபால் ஈர்ப்பு கொண்டவர்கள் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் அந்தக் கணக்கெடுப்பு கூறுகிறது.
மேலும், சுமார் 1,65,000 பேர், தாங்கள் பிற பாலின ஈர்ப்புகளைக் கொண்டவர்கள், அதாவது தன்பால் ஈர்ப்பு, இருபால் ஈர்ப்பு, அனைத்துப் பால் ஈர்ப்பு தவிர்த்த பாலின ஈர்ப்புகளைக் கொண்டவர்கள் எனத் தெரிவித்தனர். சுமார் 2,62,000 பேர் (0.5%) பிறப்பில் பதிவு செய்யப்பட்ட பாலினத்தில் இருந்து தங்களுடைய பாலின அடையாளம் வேறுபட்டுள்ளதாகக் கூறினர்.
"எதிர்பால் ஈர்ப்பு தவிர்த்து பிற பாலின ஈர்ப்புகளை இந்தச் சமூகம் அந்நியமாகப் பார்க்கிறது. இதில் இருவரின் சம்மதம் என்பது உறுதி செய்யப்படும்போது, அவர்களை கண்ணியத்தோடும், விருப்பப்படியும் வாழ அனுமதிக்க வேண்டும்" என்கிறார் மௌலி.
"ஆனால் அந்த அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டிய சூழல்தான் இன்றும் நம் சமூகத்தில் நிலவுகிறது" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
https://www.bbc.com/tamil/articles/cp839g3v7eqo
2 days 7 hours ago
விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?
RS Infotainment
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
விடுதலை முதல் பாகம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இன்று அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.
விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்கும், இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விடுதலை 2 படம் குறித்துப் பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் என்ன சொல்கின்றன?
படத்தின் கதைகளம்
விடுதலை முதல் பாகத்தில், மலைப் பகுதியில் மக்கள் வாழுமிடத்தில் சுரங்கம் அமைத்து வளங்களைச் சுரண்ட நினைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராக புரட்சி வெடித்து மக்கள் படை ஒன்று உருவாகிறது. அதை தலைமை வகிக்கும் பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) என்ற கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகர்கிறது.
புரட்சி செய்யும் மக்கள் படைக்கு எதிராக அரசாங்கம் சிறப்பு போலீஸ் படையை அப்பகுதிக்கு அனுப்புகிறது. அதன் ஜீப் ஓட்டுநராக குமரேசன் என்னும் கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார்.
முதல் பாகத்தில் குமரேசன் (சூரி) கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது போல், இரண்டாம் பாகம் முழுக்க பெருமாள் வாத்தியாரின் பின்கதைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக `டைம்ஸ் ஆஃப் இந்தியா' குறிப்பிட்டுள்ளது.
``பெருமாள் வாத்தியார் யார்? அவர் எப்படி இந்த தமிழர் மக்கள் படையைக் கட்டமைத்தார்? அவருக்கான அடிப்படைத் தத்துவக் கோட்பாட்டுகள் என்ன? அவரை உருவாக்கியது யார்? ஆயுதப் போராட்டத்தை அவர் கையில் எடுத்ததற்கான காரணம் என்ன?" என்பதுதான் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை" என்கிறது இந்து தமிழ் திசை விமர்சனம்.
RS Infotainment
விடுதலை 2
முதல் பாகத்தில் புரட்சியாளர் `பெருமாள் வாத்தியார்' (விஜய் சேதுபதி) கைது செய்யப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் மலையில் இருந்து குமரேசன்(சூரி) உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அவரை வேறு இடத்திற்கு அழைத்து வருகிறார்கள். வழி நெடுக பெருமாள் வாத்தியார் தனது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறார்.
இந்த நிலையில் "அவரின் பின்கதை குமரேசனை எப்படி பாதிக்கிறது எனும் போக்கில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது" என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் கூறுகிறது.
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 வலுவான கதைகளத்தைக் கொண்டிருப்பதாக `இந்தியா டுடே' தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
``சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் இந்தத் திரைப்படம் கம்யூனிசத்திற்கான ஒரு கையேடு" என்றும், "கூற விரும்பும் கம்யூனிச கருத்தை எளிமையாக்கி, இன்றைய பாமர மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்” இந்தியா டுடே பாராட்டியுள்ளது.
`இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம்'
RS Infotainment
"முதல் பாகத்தில், மலைக் கிராம மக்களின் வாழ்வியலையும் காவல்துறையின் அத்துமீறல்களையும் சமரசமற்று பதிவு செய்திருந்த இயக்குநர் வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் களப்போராட்ட வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பங்களின் வாழ்வியல் வலிகளை உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்" என்று இந்து தமிழ் திசை விமர்சனம் கூறுகிறது.
விடுதலை 2 திரைப்படம், "தலைமறைவு, கைது, கண்ணீர், கொடூரமான மரணங்கள் என இயக்கவாதிகளின் வாழ்வாதாரப் போராட்டத்தை டிஜிட்டல் யுகத்தில் ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறும் இந்து தமிழ், "வெற்றிமாறன் இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம் கற்பித்திருக்கிறார்" என்றும் விவரிக்கிறது.
மேலும் விடுதலை 2 மூலம் சரியான கேள்விகளைக் கேட்டு, `யார் சரி எது சரி' என்று வெற்றிமாறன் மக்களைச் சிந்திக்க வைப்பதாக இந்தியா டுடே கூறுகிறது.
`பெருமாள் வாத்தியாரின் பின்கதை ஏற்படுத்திய தொய்வு'
RS Infotainment
"இயக்குநர் வெற்றி மாறன் முதல் பாகத்தில் தனது பாணியில் வன்முறைக் காட்சிகளை அழுத்தமாகக் காட்சிப்படுத்தி சில விமர்சனங்களைச் சந்தித்தார். இரண்டாம் பாதியும் அதேபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது" என தினமணி விமர்சித்துள்ளது.
"இரண்டாம் பாகத்தில் இருக்கும் வன்முறைக் காட்சிகளில் எந்தவிதமான உணர்ச்சிகளும் கைகூடவில்லை. குண்டு வெடிக்கிறது, பெண்ணை ஆடையில்லாமல் சித்தரவதை செய்கின்றனர், பண்ணை அடிமைத்தனத்தைக் கொடூரமாகக் காட்டுவது என எதிலும் நமக்கு உணர்ச்சிகள் கடத்தப்படவில்லை. இது திணிக்கப்பட்ட காட்சிகளாகவே எஞ்சுகின்றன" என்றும் தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.
இந்து தமிழ் விமர்சனத்திலும், படத்தில் வரும் வன்முறைக் காட்சிகளில் அதிகமான ரத்தம் தெறிப்பதாகக் கூறுகிறது. இந்தியா டுடே தன் விமர்சனத்தில், ``பெருமாளின் பிளாஷ்பேக்கை விவரிக்கும்போது படம் தொய்வடைகிறது" எனக் கூறியுள்ளது.
"விடுதலை 2 அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த கதையாக இருக்காது" என்றும் இந்தியா டுடே விமர்சித்துள்ளது.
`போலித்தனம் இல்லாத காதல் காட்சிகள்'
RS Infotainment
படத்தின் ஆரம்பத்தில் கென் கருணாஸ் வரும் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்வதாகக் கூறும் இந்தியா டுடே, விடுதலை 2 படத்தின் முக்கிய பலம் இயக்குநர் வெற்றிமாறன் எழுதிய ஆழமான வசனங்கள்தான் என்கிறது.
படத்தின் கதாபாத்திரங்கள் பற்றிப் பேசியுள்ள இந்து தமிழ், "இங்கு சிவப்பு மற்றும் கருப்பு நிற அரசியல் தோன்றுவதற்கான அவசியத்தையும், அதன் ஆரம்பத்தையும் ரத்தம் தெறிக்கப் பேசியுள்ள இந்தப் படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, சுப்ரமண்ய சிவா, இளவரசு, சேத்தன், இயக்குநர் தமிழ், பாவெல், பாலாஜி சக்திவேல் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் படத்துக்கு பலம் சேர்த்திருப்பதாக" பாராட்டியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி அற்புதமான நடிப்புடன் படத்தைத் தாங்குவதாகக் குறிப்பிட்டுள்ள இந்தியா டுடே, சூரி, குமரேசனாக இரண்டாம் பாகத்தில் படத்துக்கு பலம் சேர்ப்பதாக எழுதியுள்ளது.
இந்து தமிழ் விமர்சனம் படத்தில் வரும் காதல் காட்சிகளில் வெற்றிமாறன் வாகை சூடியிருப்பதாகப் புகழ்ந்துள்ளது.
"அழுக்கும், ரத்தமும் படிந்த இயக்கவாதிகளின் போலித்தனம் இல்லாத காதலை விஜய் சேதுபதியும்-மஞ்சு வாரியாரும் பரிமாறிக் கொள்ளும் விதம் சிறப்பு" என்றும் குறிப்பிடுகிறது.
திரைப்பட ட்ரெய்லரின்போது மஞ்சு வாரியாரின் ஹேர்ஸ்டைலுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் "வெற்றிமாறன், திரைப்படத்தில் அதற்கு அருமையான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். இனி தலைமுடியை வெட்டிக்கொள்ளும் கலாசாரம் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றும் இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது.
ஒளிப்பதிவு சிக்கல்கள்
RS Infotainment
விடுதலை 2 படத்தில் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்கு சரியான முடிவை அளித்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
``இது பாராட்டுக்குரிய முயற்சி. சில தொடர்ச்சியான ஓவர்லேப் வசனங்களின் சிக்கல்கள் இருந்த போதிலும், உரையாடல் சார்ந்த கதைக்களத்துடன், பல முற்போக்கான சித்தாந்தங்கள் மற்றும் கருத்துகளைக் காட்சிப்படுத்தியன் மூலம் கதை வலுப்பெறுகிறது" என இந்தியா டுடே கூறியுள்ளது.
இளையராஜாவின் பின்னணி இசையைப் பாராட்டியுள்ள பற்றி இந்து தமிழ், ``பின்னணி இசையில் இளையராஜா மிரட்டுகிறார். விஜய் சேதுபதி, மஞ்சு வாரியரின் காதல் காட்சிகளில் கிட்டாரில் மிருதுவாகவும், விஜய் சேதுபதியின் வன்முறைக் காட்சிகளில் ட்ராம்போனில் பதற்றத்துடனும் நம் செவிகளுக்குள் அவரது இசை புகுந்து கொள்கிறது" என்று பாராட்டியுள்ளது.
படத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டிய இந்து தமிழ் விமர்சனம், ``ஒரு வசனம் முடிந்து மற்றொரு வசனம் வருவதற்குள் ஓவர்லேப் டயலாக்குகள் வந்துவிடுவதால், நிறைய வசனங்களை முழுமையாகக் கேட்க முடியவில்லை" என்று விமர்சித்துள்ளது.
படத்தின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், அது தேவையின்றி பொருத்தப்பட்ட இடைச்செருகல் போன்ற உணர்வை மட்டுமே கொடுப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
``காட்சிகளாகவே நிறைய முரண்பாடுகள் இருப்பதாக சூரியின் பார்வையில் விரியும் விடுதலையின் கதை, இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் கதையாகவே மாறியுள்ளதாக" தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.
``சூரிக்கு அதிக காட்சிகள் இல்லை. மஞ்சு வாரியரின் வருகை, பெருமாளான விஜய் சேதுபதி வாத்தியாராக மாறுவதில் பெரிய அழுத்தங்கள் இல்லை. கொலைக்கு கொலை என்றே கதை கூறப்பட்டு இருப்பதாகவும்" விமர்சித்துள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c3907kerl3go?at_campaign=ws_whatsapp
2 days 7 hours ago
Published By: DIGITAL DESK 2 20 DEC, 2024 | 05:48 PM
(எம்.மனோசித்ரா)
இந்திய கடலோர பாதுகாப்பு படையின் 4 கப்பல்கள் கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களுக்கு விஜயம் செய்யவுள்ளன. இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல்களான வைபவ் மற்றும் அபிராஜ் திங்கட்கிழமை (23) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.
இக்கப்பல்கள் 23 - 27 வரை அங்கு நங்கூரமிடப்பட்டிருக்கும் என்பதோடு, ஏனைய இரு கப்பல்களும் 29ஆம் திகதி முதல் ஜனவரி 2ஆம் திகதி வரை காலி துறைமுகத்துக்கும் செல்லவுள்ளன.
இக்கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் இலங்கை கடலோரக் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர். மேலும் தீயணைப்பு, அனர்த்தங்கள், கடல் மாசடைவை எதிர்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை தொடர்புகள் பற்றிய கூட்டுப் பயிற்சி ஆகியவை விஜயத்தின் போது இடம்பெறவுள்ளன.
இவை தவிர யோகா நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை நோக்கிய பயணத்தின் போது கப்பல்கள் கடற்கரையை சுத்தம் செய்தல் மற்றும் நடைபயிற்சி போன்ற சமூக செயற்பாடுகளிலும் இக்கப்பல்கள் ஈடுபடவுள்ளன.
இந்திய கடலோரக் காவல்படை மற்றும் அதன் திறனைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும், இலங்கை கடலோர பாதுகாப்பு பணியாளர்களுக்கு அவற்றை பார்வையிட அனுமதி வழங்கப்படவுள்ளது.
பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பிற்கான பகிரப்பட்ட சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்காக இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் திறன்களை மேம்படுத்துவதற்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு இந்த கப்பல்களின் விஜயம் அமைந்துள்ளது.
https://www.virakesari.lk/article/201761
2 days 7 hours ago
எமது அரசாங்கம் நீண்டகால சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகிறோம் - வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ
Published By: VISHNU 20 DEC, 2024 | 06:10 PM
(செ.சுபதர்ஷனி)
இலங்கையில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ள நீண்டகால சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் கடுமையாக உழைப்பதோடு அர்ப்பணிப்புடனும் செயற்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) சுகாதார அமைச்சின் தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு, சீன விஞ்ஞானக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆய்வு அறிக்கை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் மிக முக்கியமான சுகாதார சவாலை எதிர் கொள்வதற்காக ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பை வழங்கிய சீன அரசாங்கம் மற்றும் சீன அறிவியல் அகாடமிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கைக்கு பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ள நீண்டகால சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் கடுமையாக உழைப்பதுடன் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகின்றது. அதற்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் இத்தகைய செயலமர்வுகள் மற்றும் புதிய ஆய்வுகள் அறிவையும் விஞ்ஞானத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான களமாக அமைகின்றன.
எவ்வாறெனினும் எதிர்காலத்தில் சிறுநீரக நோயாளர்களை இனங்கண்டு சிகிச்சை அளிப்பதற்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கு இந்த ஆய்வு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. மேலும் இந்த சவாலை எதிர் கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான தொடர்ச்சியான ஆதரவையும் தொழில்நுட்ப வழிகாட்டலையும் வழங்கிவரும் சீன அரசாங்கம் மற்றும் சீன அறிவியல் அகாடமிக்கு மீண்டு ஒரு முறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
https://www.virakesari.lk/article/201768
2 days 7 hours ago
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு - வெளியானது புதிய தகவல்
20 DEC, 2024 | 06:59 PM
(துரைநாயகம் சஞ்சீவன்)
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் நேற்றைய தினம் (19) கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்த படகில் பயணித்த 115 பயணிகளும் அஷ்ரப் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு குருதி மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் கர்ப்பிணித் தாய் ஒருவர் உட்பட 39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும் அடங்குகின்றனர்.
இவர்களை பிற்பகல் 3 மணியளவில் திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் விஜயம் மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டிருந்தார். மாலை 4.30 மணிக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உட்பட அரச திணைக்களங்களும், பொலிஸாரும், தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றார்கள். அத்துடன் இவர்களை தங்கவைப்பதற்காக நாமகள் வித்தியாலயமும் ஒழுங்குபடுத்தப்பட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தரவின் பின்னர் அவர்களை தங்க வைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தினம் (20) இவர்களுக்கான மதிய உணவை AHRC தொண்டர் நிறுவனம் வழங்கியிருந்தது.
மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை UN பராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் இதனால் வாழமுடியாத சூழ்நிலையில் இலங்கை நாட்டுக்கு செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கின்றார்கள்.
இலங்கைக்கு வருகை தரும் நோக்கில் மூன்று படகுகளில் 120 பேர் வருகை தந்ததாகவும் இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும் இதனால் ஒரு படகில் மற்றைய படகில் வந்த நபர்களும் சேர்ந்து பயணித்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் வரும் வழியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஐந்து பேர் பசியினால் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அந்த குடும்பத்தில் ஒரு சிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று தங்கள் நாட்டின் பெறுமதியில் ஒவ்வொருவரும் 8 இலட்சம் ரூபா வழங்கி படகினை கொள்வனவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா இந்த நபர்களை பார்வையிட்டு அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக அரச அதிகாரிகளுடனும் பொலிஸாருடனும் கலந்துரையாடியிருந்தார்.
அதன்படி, படகில் வந்தவர்களை திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/201762
2 days 7 hours ago
சட்டவிரோத நிதி திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்களில், சில நிறுவனங்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
ஏனைய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நோக்கில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியால் வௌியிடப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட திட்டங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் பின்வருமாறு...
01. Tiens Lanka Health Care (Pvt) Ltd
02. Best Life International (Pvt) Ltd
03. Mark-Wo International (Pvt) Ltd
04. V M L International (Pvt) Ltd
05. Fast3Cycle International (Pvt) Ltd
06. Sport chain app, Sport chain zs society Sri Lanka
07. Onmax DT
08. MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka, MTFE DSCC Group
09. Fastwin (Pvt) Ltd.
10. Fruugo Oline App/Fruugo Oline (Pvt) Ltd.
11. Ride to Three Freedom (Pvt) Ltd.
12. Qnet
13. Era Miracle (Pvt) Ltd and Genesis Business School
14. Ledger Block
15. Isimaga International (Pvt) Ltd.
16. Beecoin App and Sunbird Foundation
17. Windex Trading
18. The Enrich Life (Pvt) Ltd
19. Smart Win Entreprenuer (Private) Limited
20. Net Fore International (Private) Limited / Netrrix
https://tamil.adaderana.lk/news.php?nid=197582
2 days 7 hours ago
எந்தவொரு உத்தியோகத்தருக்கும் அநீதி இழைக்கப்பட்டால் அந்த நபரின் பாதுகாப்பிற்காக நான் முன் நிற்பேன் - ஜனாதிபதி
Published By: DIGITAL DESK 7 20 DEC, 2024 | 05:51 PM
(நமது நிருபர்)
அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை. அரசாங்கம் என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவை கண்டுள்ளது. மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதாகும். தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும் புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல் அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் பணியை நிறைவேற்றும் போது எந்தவொரு உத்தியோகத்தருக்கும் அசௌகரியம், அநீதி அல்லது அசாதாரணம் இழைக்கப்பட்டால் அந்த நபரின் பாதுகாப்பிற்காக நான் முன் நிற்பேன். எவரேனும் அதிகாரியொருவர் அந்த திட்டத்தை சிதைக்கும் நோக்கில் தாமதப்படுத்தாவாராயின் அதற்கும் நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' கட்டிடத்தில் அமைந்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற மாவட்ட செயலாளர் ஃ அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,
அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த சேவையானது 200 வருடங்கள் பழமையானது. எமது நாட்டை புதிய திசையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளது. இருப்பினும் இறுதி நோக்கம் மற்றும் இலக்கு தொடர்பில் திருப்தியடையும் வகையில் தற்போதைய நிலைமை இல்லை. அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை. அரசு என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவை கண்டுள்ளது.
சரிவடைந்திருக்கும் கட்டமைப்பை மீள உருவாக்க நாம் தயாரா? இல்லையா? என்பது குறித்து எம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதாகும். அரச சேவையில் இருக்கின்ற கதிரை தொடர்பான பிரச்சினை எனக்கு இல்லை. கதிரையில் அமர வைப்பதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற பிரச்சினையே எனக்கு உள்ளது.
உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி அவற்றுக்கு இசைவான மாற்றங்களை செய்துகொண்டு தமது துறைக்கு தலைமைத்துவம் வழங்கி அதனை வெற்றியை நோக்கி வழிநடத்தும் கதிரைகள் வெற்றிடமாக காணப்படுகின்றது. எனது இந்திய விஜயத்தின் போது 1500 அதிகாரிகளை இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சி அளிக்க இணக்கம் எட்டப்பட்டது.
அடுத்த வருடத்தில் உயர்தரத்தில் சித்தியடையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு அரசாங்கத்தின் புலமைப்பரிசில்களை வழங்க எதிர்பார்க்கிறோம்.
சில நிறுவனங்கள் மற்றும் பதவிகள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பது பிரச்சினையாக உள்ளது. எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் காணப்படுவதால் அதற்கான புதிய வியூகம் ஒன்று அவசியப்படுகிறது.
எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்வதற்கான புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்குகளை பொருட்படுத்தாமல் அவை தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும். அரச சேவையை மட்டுப்படுத்தும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லை. ஆனால் அரச சேவையை நடத்திச் செல்வதற்கான செலவில் பிரச்சினைகள் இருப்பதால் அரச சேவையை ஒரே நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து முறையான பொறிமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகார அடிப்படையில் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவோம். அரச அதிகாரிகளின் பங்களிப்பே இந்தப் பணிகளின் வெற்றிக்கு வழிவகுக்கும். மக்கள் ஆணையின் 80 வீதம் எதிர்பார்ப்புகளை அரச உத்தியோகத்தர்களே வௌிப்படுத்தியுள்ளனர் என்ற வகையில் அரசியல் அதிகார தரப்பின் பணிகளுக்கு அவர்கள் இணக்கம் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். எனவே இவை இரண்டும் இருவேறு முரண்பாடான குழுக்கள் அல்ல. இரண்டும் இணக்கமான குழுக்கள்.
அதன்படி அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் இலக்குகள் சமநிலையானதாக காணப்படுவதை கடந்த மக்கள் ஆணை வௌிப்படுத்தியிருப்பதால் இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பணியே எம்முன் உள்ளது. மேலும் மக்களுடன் தொடர்புபடும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் விரைவுபடுத்தப்பட்டு புதிய வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் 'ஊடநயn ளுசடையமெய' திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக வறுமையை ஒழித்தல் டிஜிட்டல் மயமாக்கல் சமூகத்தை கருத்தியல் ரீதியாக மாற்றியமைத்தல் என்ற மூன்று துறைகளின் கீழ் 'ஊடநயn ளுசடையமெய' ஊடாக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அந்த பணியை நிறைவேற்றும் போது எந்தவொரு உத்தியோகத்தருக்கும் அசௌகரியம் அநீதி அல்லது அசாதாரணம் இழைக்கப்பட்டால் அந்த நபரின் பாதுகாப்பிற்காக தாம் முன் நிற்போம். எவரேனும் அதிகாரியொருவர் அந்த திட்டத்தை சிதைக்கும் நோக்கில் தாமதப்படுத்தாவாராயின் அதற்கும் நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய. அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ. எச். எம். எச். அபயரத்ன, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார, மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
https://www.virakesari.lk/article/201758
2 days 8 hours ago
மூன்று பெரிய கட்சிகள் ...உள்ளூரட்சி தேர்தலுக்கு..இந்தத் தவழுகை தவழ வேண்டியிருக்கு,....
2 days 8 hours ago
வரி திருத்தம் தொடர்பில் IMF விசேட அறிவிப்பு
இலங்கையின் அண்மைய வரி திருத்தங்களை மீளாய்வு செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்திற்கு நிறைவேற்று சபையின் ஒப்புதலைத் தொடர்ந்து பணியாளர் அறிக்கையில் முழுமையான மதிப்பீடு உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
https://tamil.adaderana.lk/news.php?nid=197568
2 days 8 hours ago
எம்மாம் பெரிய கூட்டம் இவ்வளவையும் பாதுகாக்க 300ம் 400மே காணாது. யாரை வணங்கிப் பாதுகாப்பு கேட்கிறார்கள்? ஆண்டவனையா அநுராவையா??
2 days 8 hours ago
எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல், அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' கட்டிடத்தில் அமைந்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) நடைபெற்ற மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த சேவையானது 200 வருடங்கள் பழமையானது எனவும், எமது நாட்டை புதிய திசையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
இருப்பினும், இறுதி நோக்கம் மற்றும் இலக்கு தொடர்பில் திருப்தியடையும் வகையில் தற்போதைய நிலைமை இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும், அரசு என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவை கண்டுள்ளதெனவும் தெரிவித்தார்.
சரிவடைந்திருக்கும், கட்டமைப்பை மீள உருவாக்க நாம் தயாரா? இல்லையா? என்பது குறித்து எம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
அரச சேவையில் இருக்கின்ற கதிரை தொடர்பான பிரச்சினை தனக்கு இல்லை எனவும், கதிரையில் அமர வைப்பதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற பிரச்சினையே தனக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி, அவற்றுக்கு இசைவான மாற்றங்களை செய்துகொண்டு , தமது துறைக்கு தலைமைத்துவம் வழங்கி அதனை வெற்றியை நோக்கி வழிநடத்தும் கதிரைகள் வெற்றிடமாக காணப்படுகின்றதென கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது இந்திய விஜயத்தின் போது 1500 அதிகாரிகளை இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சி அளிக்க இணக்கம் எட்டப்பட்டது என்றும் கூறினார்.
அடுத்த வருடத்தில் உயர்தரத்தில் சித்தியடையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு அரசாங்கத்தின் புலமைப்பரிசில்களை வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சில நிறுவனங்கள் மற்றும் பதவிகள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பது பிரச்சினையாக உள்ளதாகவும், எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் காணப்படுவதால், அதற்கான புதிய வியூகம் ஒன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்வதற்கான புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் செல்வாக்குகளை பொருட்படுத்தாமல் அவை தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
அரச சேவையை மட்டுப்படுத்தும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லை எனவும், ஆனால் அரச சேவையை நடத்திச் செல்வதற்கான செலவில் பிரச்சினைகள் இருப்பதால், அரச சேவையை ஒரே நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து முறையான பொறிமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகார அடிப்படையில் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும், அரச அதிகாரிகளின் பங்களிப்பே இந்தப் பணிகளின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மக்கள் ஆணையின் 80% எதிர்பார்ப்புகளை அரச உத்தியோகத்தர்களே வௌிப்படுத்தியுள்ளனர் என்ற வகையில், அரசியல் அதிகார தரப்பின் பணிகளுக்கு அவர்கள் இணக்கம் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். எனவே, இவை இரண்டும் இருவேறு முரண்பாடான குழுக்கள் அல்ல என்பதையும் இரண்டும் இணக்கமான குழுக்கள் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதன்படி, அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் இலக்குகள் சமநிலையானதாக காணப்படுவதை கடந்த மக்கள் ஆணை வௌிப்படுத்தியிருப்பதால், இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பணியே எம்முன் உள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், மக்களுடன் தொடர்புபடும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
https://tamil.adaderana.lk/news.php?nid=197592
2 days 8 hours ago
Published By: VISHNU 20 DEC, 2024 | 08:09 PM
உள்ளுராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருடம் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (20) கண்டிக்கு விஜயம் செய்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலும் அடுத்த வருடத்திற்குள் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.
முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்ததுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அதனையடுத்து மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.
அதனையடுத்து அஸ்கிரிய விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வண. ஆணமடுவே தம்மதஸ்ஸி தேரர், பிரதி பதிவாளர் வண. நாரம்பனாவே ஆனந்த தேரர்,முதியங்கன ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண.முருத்தெனியே தம்மரத்தன தேரர் உள்ளிட்டோர் இதன்போது வருகை தந்திருந்ததுடன் அவர்கள் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்கு ஆசி வழங்கினர்.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.
https://www.virakesari.lk/article/201771
2 days 8 hours ago
சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் தான் பூமிக்கு திரும்புவார்
சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது. 2025 பிப்ரவரி மாதம் அவர் பூமி திரும்புவார் என கடந்த ஆகஸ்ட் மாதம் நாசா தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அவரது வருகை மேலும் தாமதமாகி உள்ளது.
நாசா விண்வெளி வீரர்கள் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் க்ரூ-9 மிஷனுக்கான விண்கலம் மூலம் பிப்ரவரியில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்தது.
இந்நிலையில், தற்போது அதன் புறப்பாடு மேலும் தாமதம் அடைந்துள்ளதாக தகவல். இதை நாசாவின் கமர்ஷியல் க்ரூ திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் உறுதி செய்துள்ளார்.
https://thinakkural.lk/article/313979
2 days 8 hours ago
சுமந்திரன், கீதநாத் காசிலிங்கம், டக்ளஸ் இவர்கள் மூவரும் தினமும் ஒரு பரபரப்பான அறிக்கை விடுவதாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகின்றது ....................
2 days 9 hours ago
உள்ளேன் ஐயா😂!
ஓம், தேங்காய்ப் பாலை (அதுவும் அடர்த்தியான முதல் பாலை😎) எல்லாக் கறிக்குள்ளும் போட்டு அவித்ததால் இலங்கையில் மாரடைப்பும், மூளை இரத்த அடைப்பும் தான் முதல் இரு மரணக் காரணங்களாக வந்திருக்கின்றன👇.
https://www.healthdata.org/research-analysis/health-by-location/profiles/sri-lanka
ஆனால், தேங்காயை வேறெதற்கும் பாவிக்கலாமா? ஆம். தேங்காயில் இருக்கும் நிரம்பாத கொழுப்பு பாண்டலடையாது. எனவே, மருந்துகள் தயாரிக்க எண்ணை தேவையானால் தேங்காய்க் கொழுப்பு திறமான கரைப்பான். அழகுசாதனப் பொருட்கள் இதனால் தான் தேங்காய் எண்ணையில் தயாரிக்கப் படுகின்றன.
2 days 9 hours ago
நீங்கள் அதிகம் பக்தி முத்திப் பேசுவதாக எனக்குப் படுகிறது.
சில சமயங்களில் உங்கள் போன்றோரின் புலிகள் கால சம்பவங்களைப் பற்றிய பதிவுகளைப் பார்க்கையில், உண்மையிலேயே வடக்கு கிழக்கில் பிறந்து , அங்கேயே பல வருடங்கள் வசித்தவர்களுடன் தான் பேசுகிறோமா, அல்லது வடக்கு கிழக்கின் வர்ணமே தெரியாமல் சின்னத் திரையில் பார்த்து விட்டு புளகாங்கிதம் அடைந்தவர்களோடு பேசுகிறோமா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.
புலிகளின் கொள்கையாக கப்பம், கடத்தல், மிரட்டல், சுருட்டல் என்பன இருக்கவில்லை. இதையே தான் அக்னியும் சொல்லியிருக்கிறார்.
ஆனால், அடிப்பொடிகளால் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. யாழில் இருக்கும், அங்கே வசித்த அனைவருக்கும் - அவர்கள் முட்டைக் கோதுக்குள் இழுத்துப் போர்த்திக் கொண்டு வசித்திருந்தால் ஒழிய- சில சம்பவங்கள் தெரிந்திருக்கும். இதெல்லாம் அப்போதிருந்த செய்தித் தாள்களில் கூட வந்திருக்காது, ( இருந்தவை எல்லாமே புலிகளின் செய்தித் தாள்கள் என்பதால்). இதை இங்கே அசாத்தின் தனிமனித சர்வாதிகாரத்தோடு ஒப்பிட்டது தான் தவறு.
"இப்படி எதுவும் நடக்கவில்லை" என்று நீங்கள் சாதிப்பது புலிகள் மீதான பக்தியின் வெளிப்பாடு. எல்லாம் 100% வீதம் வெள்ளையாக இருந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உடையாமல் பாதுகாக்க முயலும் self-preservation மனநிலை. இது உங்கள் இஷ்டம், உரிமை.
"நடந்தால் ஏன் பெயர் சொல்லி தண்டனை வழங்கத் தயங்குகிறார் அக்னி?" என்று கேட்பது இலங்கையில் இருக்கும் சட்ட ஒழுங்கு நிலை தெரியாத ஒரு அப்பாவி கோயிந்தனின் மனநிலை😂. இது உங்களிடம் இருப்பது எனக்கு ஆச்சரியம் தருகிறது.
2 days 9 hours ago
செத்தகிளியால் எழும்பி நடக்கமுடியுமா? சமரசம் செய்துதானே ஆகவேண்டும். எங்கண்ட ட்ரம்ப் வந்து ஓடர்போடப் போறார் எண்டு செத்தகிளி மீசையில் மண் ஒட்டவில்லை கதை விடுது!😂
அது சரி கிளிக்கே மீசையில்லை அப்ப எப்பிடி செத்தகிளிக்கு மீசைவரும் எண்டு நீங்கள் கேள்வி கேட்டால் நான் அதற்குப் பொறுப்பல்ல!
Checked
Sun, 12/22/2024 - 22:04
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed