புதிய பதிவுகள்2

உக்ரேன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் - ரஷ்யா

2 days 4 hours ago
உக்ரேனுடன் சமரசமா, சண்டையா, பேச்சுவார்த்தையா என்பதை விட, புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் என்று ஒரு இனிய செய்தியை சொல்லியிருக்கின்றார் புடின்......... உலகத்துக்கு ஒரு கிறிஸ்மஸ் பரிசு கொடுத்திருக்கின்றார்............ தடுப்பூசிக்கு பெயர் இன்னமும் வைக்கவில்லை என்று நினைக்கின்றேன், ஆனால் 'ஸ்புட்னிக் .....' என்று மீண்டும் ஆரம்பிப்பதற்கு சாத்தியம் இருக்கின்றது. யாரில் முதல் சோதிக்கப் போகின்றார்கள் என்கிறீர்கள்............... அந்த வடகொரியத் தோழர்களுக்கு தான் அதிர்ஷ்டம் போல...............

மருத்துவர்களின் ஓய்வு வயது 63ஆக அதிகரிப்பு!

2 days 4 hours ago
தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்வதற்கு வயது வரம்பு இல்லை, நியாயம். இலங்கையில் இளையோர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று எல்லா அரசுப் பணிகளுக்கும் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டது என்று நினைக்கின்றேன். பல நாடுகளில் இப்படி ஒரு வரம்பு இல்லை. அமெரிக்காவில் 67 என்பது ஒரு மைல்கல் போன்றது. விரும்பினால் அல்லது வீட்டில் இருப்பது தொல்லை அதிகம் என்றாலும், வேலைக்கு அதன் பின்னரும் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கலாம். போன வாரம் ஒரு மருத்துவரை இங்கு சந்தித்தேன். அவருக்கு 80 வயதுகள் இருக்கும். அவருடைய அலுவலக மேசையிலேயே விழுந்து அவரின் உயிர் போகும் என்று சொன்னார்.........

திங்களன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள இந்திய கடற்படை கப்பல்கள்

2 days 4 hours ago
இந்த வாரம்தானே சீன மருத்துவ ஆராச்சிக்கப்பல் வருவதாக இருந்தது...இந்தியாவில் சொருகின ஆப்பு ஸ்ரங்கானதா?

அரசாங்கம் மீது ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகம் என்கிறார் சுமந்திரன்

2 days 4 hours ago
🤣............ அடுத்த மாதத்திலிருந்து எங்களின் தலைநகரில் முன்னுக்கு மடிப்புக் கலையாத, ஆனால் பின்பக்கம் தாறுமாறாகக் கிழிந்த சட்டைகளுடன் நிற்கப் போகின்றார்கள் இந்த இருவரும், இன்னும் சிலரும்............. ஒரு நாலு வருடங்கள் இவர்களின் கண்களில் படாமல் அப்படியே மேசைக்கு கீழேயே குனிந்து இருக்கவேண்டும்...............🤣.

மருத்துவர்களின் ஓய்வு வயது 63ஆக அதிகரிப்பு!

2 days 4 hours ago
இந்த அறுபத்து மூன்று வயது எல்லை என்பது இலங்கை அரச மருத்துவமனைகளில் சேவையாற்றுவதற்கான கட்டுப்பாடா? இந்த வயது எல்லையின் பின்னரும் தனியார் மருத்துவமனைகளில் வேலையாற்றலாமா? அறுபத்து ஐந்து வயது ஏன் அறுபதாக குறைக்கப்பட்டது? மற்றைய நாடுகளில் வயது எல்லை என்ன?

திண்ணை

2 days 4 hours ago
என்னப்பா, டயட் கோக்கில ஐஸ் போட்டு அடியுங்கோ எண்டுபோட்டு, அடிச்சுப்போட்டு வந்து பார்த்தா, எங்கிருந்தாலும் வாழ்க பாட்டு போட்டு சோகமா இருக்கிறியள். நம்ம பாட்டு இதுதான், அது சரி கண பேர் என்னை சந்திச்ச விசயம் சொல்லி இருந்தினம். உண்மைதான்.

சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!

2 days 4 hours ago
இங்கே நடக்கும் சம்பாசனைகளுக்கும் தலையங்கத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை. சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்! சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறை என்பதற்கு பதிலாக புலிகளின் என்று போட்டால் சரி.

அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்

2 days 5 hours ago
சஜித்தின் இந்தக் கூற்று ஏற்கனவே பார் அநுமதிப் பத்திரத்துக்கு சிபாரிசு செய்த சமூகவிரோதிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தமாதிரி இருக்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பிந்தங்கிய மாவட்டமாகிய கிளிநொச்சியில் 16 பார்களுக்கு சமுகவிரோதிகள் சிலர் சிபாரிசு செய்துள்ளமை சகலதரப்பாலும் கண்டிக்கப்படவேண்டியது!

"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?

2 days 5 hours ago
சீமான் செய்யும் அரசியல் அவருக்கானது. ஈழத்தமிழர்களுக்கு அதனால் பலன் ஏதும் இல்லையென்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சர்வ வல்லமை பொருந்திய எம் ஜி ஆரே முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்ய முடியாததை இதுவரை தேர்தலில் ஒரு ஆசனத்தைத்தன்னும் வெல்லக் கஸ்ட்டப்படும் சீமான் செய்வார் என்று எதனை வைத்து எதிர்பார்க்க முடியும், ஆகவே அவரைக் கடந்து சென்று விடலாம். ஆனால், சீமானை எதிர்க்கிறோம் என்கிற கொள்கையில் இருந்துகொண்டு கருனாநிதியை ஆதரிக்கின்ற சிலர் அவர் ஈழத்தமிழர் தொடர்பாக நடந்துகொண்ட முறையினைச் சரியென்று ஏற்றுக்கொள்கிறார்களா?எம் ஜி ஆரிற்குப் போட்டியாகவே அரசியல் செய்துவந்த கருனாநிதி புலிகள் உட்பட ஏனைய போராளிகளை ஆதரித்ததோ அல்லது அவ்வாறு நடந்துகொண்டதோ தனது அரசியல் ஆதாயத்திற்காகவே என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா? சகோதர யுத்தம் சகோதர யுத்தம் என்று தொடர்ச்சியாக பேசிவந்த கருனாநிதி இறுதிப் போர்க்காலத்தில் நடந்துகொண்ட முறையினைச் சரியென்று ஏற்றுக்கொள்கிறார்களா? தமிழ்நாட்டில் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களை நசுக்கியமை, பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை கொடுத்து மாணவர் விடுதிகளை மூடியமை, பாசாங்கு உண்ணாவிரதம் இருந்து தமிழர்களை ஏமாற்றியமை, இறுதி நாட்களில் தில்லியில் கூடாரமடித்து தனது குடும்ப உறவுகளுக்கு பாராளுமன்ற பதவிகளை உறுதிப்படுத்திக்கொண்டமை, இனக்கொலை அகோரமாக நடந்துகொண்டிருக்கும்போது யுத்தநிறுத்தம் வந்துவிட்டதாக பொய்கூறி பின்னர் மழை விட்டாலும் தூவானம் விடாது பெய்வதில்லையா அதுபோலத்தான் என்று சப்பைக் கட்டுக் கட்டியமை.................என்று பல விடயங்களைச் செய்திருந்தாரே? அவற்றைச் சரியென்று இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? 2015 ஆம் ஆண்டில் அன்றைய வெளிவிவகார அமைச்சர் சிவ்சங்கர் மேனன் தெரிவுகள் எனும் புத்தகத்தை எழுதினார். அதில் இறுதிப்போரை நடத்த முன்னர் தமிழ்நாட்டு அரசியல்த் தலைவர்களைச் சந்தித்து போரிற்கெதிரான அவர்களின் நிலைப்பாட்டை நாடிபிடித்தறிந்து, அதனைத் தணிக்கும் காரியங்களில் ஈடுபடுமாறு தன்னையும், பிரணாப் முகர்ஜியையும் சோனியா தமிழ்நாட்டிற்கு அடிக்கடி அனுப்பி வந்ததாகக் கூறியிருந்தார். அந்தப் பயணங்களின்போது தானே அதிசயித்துப் போகும் வண்ணம் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்த் தலைவர்கள் புலிகளை அழிக்கும் போரிற்கெதிராக தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பெதனையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறுகிறார். வெளியில் மேடைகளில் போரை எதிர்ப்பதாகக் கூறும் அதே தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில் புலிகள் அழிக்கப்படுவதை விரும்பினார்கள் என்று கூறுகிறார். கருனாநிதி ஒரு படி மேலே சென்று தனது தனிப்பட்ட பாதுகாப்பிற்குப் புலிகளால் ஆபத்து வரும் என்று தன்னிடம் கூறியதாகவும் அவர் கூறுகிறார். இந்த அரசியல்வாதிகளில் ஜெயலலிதா கூட விதிவிலக்கல்ல. சீமானை எதிருங்கள், அதில் தவறில்லை. அதற்காக கருனாநிதியை தியாகியாகக் காட்டுவதை நிறுத்துங்கள்.

அரசாங்கம் மீது ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகம் என்கிறார் சுமந்திரன்

2 days 5 hours ago
இந்த வரிசையில் அமெரிக்காவிலிருந்தும் எலான் மாஸ்கையும் ராமசாமியையும் சேர்க்க வேண்டுகிறேன். வாலி சம்பந்தமில்லாத அனுராவை கேட்பதைவிட ரணிலிடமே நேரடியாக கேட்கலாமே? சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் தான் நல்ல உறவு உள்ளதே.

அரசாங்கம் மீது ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகம் என்கிறார் சுமந்திரன்

2 days 5 hours ago
இவ்வாறான சந்தேகம் மக்கள் மத்தியில் வலுவாக இருக்கின்றது. பின் தங்கிய மாவட்டமாகிய கிளிநெச்சியில் சில சமூகவிரோதிகளின் சிபாரிசின் அடிப்படையில் 16 பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சமூகவிரோதிகள் மக்களுக்கு அடையாளம் காட்டப்படவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இச் சமுகவிரோதிகளை அநுர அரசு காப்பாற்ற முனைந்தால் தமிழ் மக்களின் ஆதரவை இழக்கவேண்டியிருக்கும். தம்மைப் பாதுகாக்கும் நோக்கில் ஒருசில அரசியல்வாதிகள் அநுர அதிபரான மறுநாளே விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் காலில் விழாக்குறையகச் சந்தித்தது இங்கு குறிப்பிடப்படவேண்டியது அவசியமாகின்றது!

அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்

2 days 5 hours ago
நல்ல சிந்தனை. ஆனால் பிழையான ஆட்களுக்கு சொல்லப்படுகிறதே?
Checked
Sun, 12/22/2024 - 22:04
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed