புதிய பதிவுகள்2

சிஸ்ட்டர் அன்ரா

1 month 1 week ago
மட்டக்களப்பில் ஒரு சில நாட்கள் சிஸ்ட்டர் அன்ராவின் மடத்தில் தங்கவைக்கப்பட்டேன். அதன்பிறகு புளியந்தீவில் இயங்கிவந்த சிறுவர்களுக்கான விடுதியில் சேர்க்கப்பட்டேன். நோர்வேயில் இருந்து யாரோ ஒருவர் அநாதைகளுக்கென்று அனுப்பிய பணம் எனக்குபடிக்கவும், உயிர்வாழவும் உதவியது. மாதத்திற்கு 450 ரூபாய்கள். சிஸ்ட்டர் அன்ராவே வந்து விடுதியில் கட்டிச் சென்றார். அப்படி ஒவ்வொருமுறையும் வரும்போதும் தன்னைப் பார்க்க வருவோர் கொண்டுவரும் பழங்கள், இனிப்புக்கள் என்று கொண்டுவந்து தருவார். அவரைக் காண்பதற்காகவே நாட்கணக்கில் காத்திருக்கத் தொடங்கினேன். எனக்கான பணத்தினை விடுதிப் பராமரிப்பாளரிடம் கட்டிவிட்டு, வெளியே விருந்தினர்க்காகப் போடப்பட்டிருக்கும் வாங்கில் என்னுடன் இருந்து சிறிது நேரம் பேசிவிட்டு, தான் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அவர் தாண்டவன்வெளி நோக்கிச் செல்வார். அவர் சென்றபின்னரும் அவர் போன வழியே கண்ணிமைக்காது பார்த்துக்கொண்டிருப்பேன். அங்கு எனக்கிருந்த உறவு அவர் மட்டும்தான். எனது அன்னையே என்னைப் பிரிந்துபோவது போன்று துக்கம் கழுத்தினுள் இறுககிக் கிழிக்க, வேறு வழியின்றி விடுதிக்குள் நுழைந்து, தொலைந்துபோவேன். இப்படியே மாதம் ஒருமுறை வருவார், சில நிமிடங்களாவது பேசுவார், அம்மாவின் குரல் அவரிடமும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும், அம்மாவுடன் பேசுவதுபோன்ற பிரமை ஏற்படும். அன்றிலிருந்து எனக்கு அம்மா அவர்தான் என்று நினைக்கத் தொடங்கினேன். கொடுமையான தகப்பனாரிடமிருந்து என்னை விடுவித்து, தனது சொந்த முயற்சியில், கன்னியாஸ்த்திரியாக இருந்தபோதிலும் என்னை மட்டக்களப்பிற்குக் கூட்டிவந்து, விடுதியில் இடம் எடுத்து, எனக்கான செலவுகளைச் செய்து, பாடசாலையிலும் தனக்குத் தெரிந்தவர்கள் ஊடாக படிக்க உதவிய அவர் அன்னையன்றி வேறு யாராக இருக்க முடியும்?

சிஸ்ட்டர் அன்ரா

1 month 1 week ago
மட்டக்களப்பில் இருந்து விடுமுறைக்காக அக்கா வந்து தங்கியது வெறும் 2 வாரங்கள்தான். அவ்விரு வாரங்களிலும் அக்காவும், எனது சித்தியும் (கன்னியாஸ்த்திரி) எனது தகப்பனாரிடம் மன்றாடாத நாளில்லை. "அவனை என்னுடன் விடுங்கள், நான் படிப்பிக்கிறேன், பாவம், அவனது படிப்பைக் குலைக்கவேண்டாம்" என்றெல்லாம் அவர் மன்றாடிப்பார்த்தார். தகப்பனாரோ சிறிதும் இளகவில்லை. "அவன் போனால் ஆர் வீட்டில வேலையெல்லாம் பாக்கிறது? தென்னை மரங்களுக்கும், பூக்கண்டுகளுக்கும் ஆர் கிணற்றிலை இருந்து தண்ணி அள்ளி இறைக்கிறது? ஆர் புல்லுப் பிடுங்கிறது? ஆர் கடைக்குப் போறது? அவன் இங்கேயே இருக்கட்டும், ஒரு இடமும் விடமாட்டன்" என்று பிடிவாதம் பிடிக்கத் தொடங்கினார். ஆனால் அக்காவும், சித்தியும் தொடர்ச்சியாகக் கெஞ்சவே, "ஒரு சதமும் தரமாட்டன், கூட்டிக்கொண்டு போறதெண்டால், கூட்டிக்கொண்டு போங்கோ" என்று இறுதியாகச் சம்மதித்தார். சிஸ்ட்டர் அன்ரா எனக்காகச் செய்த முதலாவது நண்மை, தகப்பனாரின் கொடுங்கரங்களில் இருந்து , தழைகளில் இருந்து என்னை விடுவித்தது. தினமும் கொடுமைகளையே சந்தித்து, பழக்கப்பட்ட இருண்ட வாழ்வினுள் இருந்து எனக்குக் கிடைத்த முதலாவது விடுதலை. எதற்காக அடிவாங்குகிறேன், எதற்காகத் திட்டப்படுகிறேன் என்கிற தெளிவே இல்லாது தினமும் வாழ்வில் சித்திரவதைகளை அனுபவித்த எனக்குக் கிடைத்த விடுதலை. ஆகவே மகிழ்ந்துபோனேன். அக்காவுடனும், சிஸ்ட்டர் அன்ராவுடனும் மட்டக்களப்பிற்குச் சென்று வாழப்போகிறேன் என்கிற உணர்வே என்னை மகிழ்விக்க, புறப்படும் நாளிற்காகத் தவமிருக்கத் தொடங்கினேன். ஆனால் மனதினுள் இனம்புரியாத அச்சம் ஒன்று தொடர்ச்சியாக இருந்துவந்தது. அதாவது, தகப்பனார் என்னை விடுதலை செய்யச் சம்மதித்திருந்தத்போதும் , கடைசி நாளில்க் கூட அவர் அதனைத் தடுத்து நிறுத்திவிடலாம். தனக்கும் தனது புதிய மனைவிக்கும் சேவை செய்ய என்னை வீட்டிலேயே மறித்துவிடலாம். தெய்வாதீனமாக அது நடக்கவில்லை, இடையிடையே "நீ அங்கை போனால் வீட்டில ஆர் வேலை பார்க்கிறது? ரஞ்சன வேலை செய்யச் சொல்லி ஏவ ஏலாது, அவனுக்கு இன்னும் 10 வயசுதான்..." என்று இடையிடையே சுருதி மாற்றிப் பேசியபோதும் என்னை அவர் மறிக்கவில்லை. போக அனுமதித்துவிட்டார். முதலாவது வெற்றி. எனக்கு, சிஸ்ட்டர் அன்ராவிற்கு, அக்காவுக்கு!

சிஸ்ட்டர் அன்ரா

1 month 1 week ago
நேற்று நடந்தது போல இன்னமும் அப்படியே மனதில் பதிந்திருக்கின்றது. 1988 சித்திரையாக இருக்கலாம். தனது அனுமதியின்றி எனது மைத்துனனை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் அருகே இருந்து பார்த்துக்கொண்டமைக்காக எனது தகப்பனார் எனக்குத் தந்த தண்டனை. இரவு முழுதும் தூக்கம் துறந்து, உணவின்றி, களைப்புடன் வீடு வந்து உறங்கலாம் என்று எண்ணி வாசல்வந்து சேர்ந்தபோது, பூட்டிக்கிடந்தது கண்டு களைத்துப்போய் ஆங்கே இருந்துவிட்ட அந்தக் காலைப்பொழுது. அரைத்தூக்கத்தில் வாசலுக்கு வெளியே, படலையில் சாய்ந்து உறங்கத் தொடங்க, உள்ளிருந்து கேட்ட அகோரமான குரல், "பயங்கரவாதியே, இங்க ஏன் வந்தனீ? உள்ளுக்கை கால் வைச்சியெண்டால் வெட்டிக் கொல்லுவன்". கனவில் கேட்பதாக நினைத்து விழித்தபோது வீட்டின் முன் கதவில் தகப்பனார் கையில் கத்தியுடன். ஏன் , எதற்கென்றுகூடத் தெரியாது நான் தண்டிக்கப்பட்ட அப்பொழுது. அவரது கோபம் அடங்கும், ஒருவாறு வீட்டினுள் சென்றுவிடலாம் என்கிற நம்பிக்கையெல்லாம் சிறிது சிறிதாக அற்றுப்போய், கண்களில் கோபம் கொப்பளிக்க அவர் கையில்க் கிடந்த கத்தியைத் தவறாமல் எனக்கு நேரே பிடித்திருக்க, வேறு வழியின்றி தெல்லிப்பழை நோக்கி நடந்த அக்காலைப்பொழுது. கையில் பணமின்றி, நடப்பதற்கும் உடலில் பலமின்றி, மருதனார் மடத்தின் வீதியில் இருந்துகொண்டே வீதியில் செல்வோரிடம் பிச்சையாகப் பணம் கேட்டு, யாரோ ஒருவரின் புண்ணியத்தால் தெல்லிப்பழைவரை செல்ல முடிந்த அதே காலைப்பொழுது. அப்பம்மாவீட்டிற்குச் சென்று, "இனிமேல் அவருடன் வாழமுடியாது, நான் இங்கேயே உங்களுடன் இருக்கப்போகிறேன்" என்று அழுதழுது அவர்களிடம் மன்றாடிய காலைப்பொழுது. இற்றுடன் 37 வருடங்கள் கரைந்தோடிவிட்டன. நான் வீட்டிலிருந்து துரத்தப்பட்ட நாளில் இருந்து சுமார் இரு வாரங்களுக்கு தகப்பனார் என்னைத் தேடவில்லை. உயிருடன் இருக்கின்றேனா இல்லையா என்பது கூட அவருக்குப் பொருட்டாக இருந்திருக்காது என்பது திண்ணம். இதே காலப்பகுதியில் மட்டக்களப்பில் கன்னியாஸ்த்திரிகளினால் பராமரிக்கப்பட்டு வந்த மடம் ஒன்றில் எனது அக்கா படித்துக்கொண்டிருந்தாள். அது விடுமுறை காலமாதலால் யாழ்ப்பாணம் வந்திருந்தாள். வழமைபோல கோண்டாவிலில் நாம் வாழ்ந்த வீட்டிற்கு வந்து என்னைத் தேடியிருக்கிறாள். ரஞ்சித் எங்கே என்று தகப்பனாரிடம் கேட்டபோது அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவனை அடித்து விரட்டிவிட்டேன் என்று மட்டுமே அவரால் கூற முடிந்தது. அவன் எங்கு போனான், உயிருடன் இருக்கிறானா என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.அக்கா என்னைத் தேடத் தொடங்கினாள். முதலில் உறவினர்கள், அம்மம்மாவின் பக்கத்திலிருந்து அவள் தேடினாள். பின்னர் அப்பாவின் உறவினர்களிடம் தேடினாள், தெல்லிப்பழையில் நான் இருப்பதைத் தெரிந்துகொண்டாள். அப்போது எனது தாயாரின் தங்கை, ஒரு கன்னியாஸ்த்திரி, மட்டக்களப்பில் படிப்பித்துவந்தார். இவரின் உதவியினாலேயே அக்கா மட்டக்களப்பின் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தாள். தகப்பனார் என்னை வீட்டை விட்டுத் துரத்தியதுபற்றி அக்கா எனது சித்தியிடம் தெரிவித்திருக்க வேண்டும். உடனடியாக செயலில் இறங்கிய அவர் எப்படியாவது என்னை எனது தகப்பனாரின் கொடுங்கரங்களில் இருந்து மீட்டுவிடவேண்டும் என்று அங்கலாய்க்கத் தொடங்கினார். மட்டக்களப்பில் இருந்து வந்துசேர்ந்த அக்கா எனது நிலைபற்றி உறவினர்களிடம் பேசத் தொடங்கவே தகப்பனாரின் நிலை தர்மசங்கடமாகிப்போனது. மூத்த இரு பிள்ளைகளையும் மனைவி இறந்தவுடன் வீட்டை விட்டுத் துரத்திவிட்டான் என்பதை உறவினர்கள் பேசத் தொடங்கவே வேறு வழியின்றி என்னை வீட்டிற்குள் அனுமதித்தார். ஆனால் படிக்கவைக்க அவர் விரும்பவில்லை. "வீட்டில் நிண்டுகொண்டு வேலைகளைப் பார், உன்னைப் படிக்க வைக்க என்னிடம் பணமில்லை" என்று கையை விரித்துவிட்டார். எனக்கும் வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எங்காவது கூலிவேலைக்குச் சென்றுவிடலாம் என்பதே அப்போது எனக்கிருந்த ஒரே தெரிவு. ஆனால் எனக்கோ வயது 15.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஈரானுக்கு அணுகுண்டு கொடுக்க‌ ப‌ல‌ நாடுக‌ள் த‌யார் ப‌ல‌ நாடுக‌ள் என்றால் , ர‌ஸ்சியா வ‌ட‌கொரியா ,சீனா.................அமெரிக்கா உன‌க்கு இந்த‌ அவ‌மான‌ம் தேவையா😁😛........................அமெரிக்கா இஸ்ரேல் சேர்ந்து ஈரானுக்கு எவ‌ள‌வ‌த்துக்கு அடிக்கின‌மோ அவ‌ள‌வ‌த்துக்கு இஸ்ரேல் எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு அழிவை ச‌ந்திப்பின‌ம்...................

எரிபொருள் வரிசையில் நின்ற மக்களும் தொங்கு சபைகளும் - நிலாந்தன்

1 month 1 week ago
எரிபொருள் வரிசையில் நின்ற மக்களும் தொங்கு சபைகளும் - நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தையில்,இஞ்சி வாங்கினேன். ஒரு கிலோ 3000 ரூபாய். ஏன் அவ்வளவு விலை என்று கேட்டேன். “இஸ்ரேலும் ஈரானும் மோதத் தொடங்கி விட்டன. அதனால் விலையை ஏற்றி விட்டார்கள்” என்று வியாபாரி சொன்னார். “மேற்காசியாவில் இருந்தா எங்களுக்கு இஞ்சி வருகிறது?” என்று கேட்டேன். ”எங்கிருந்து வருகிறதோ தெரியாது. ஆனால் சண்டை தொடங்கியதால் விலை கூடிவிட்டது என்று மொத்த வியாபாரிகள் கூறுகிறார்கள்” என்று அவர் சொன்னார். அதே நாளில் யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து நின்றார்கள். மேற்காசியாவில் போர் தொடங்கியதால் எரிபொருள் தட்டுப்பாடு வரலாம் என்ற ஊகம்;பயம்; தற்காப்பு உணர்வு போன்றவைகள் காரணமாக எரிபொருளை நிரப்புவதற்குச் சனங்கள் முண்டியடித்தார்கள். கடந்த திங்கட்கிழமை மட்டுமல்ல இதற்கு முன்னரும் மேற்கு ஆசியாவில் போர்ப் பதற்றம் ஏற்படும் போது யாழ்ப்பாணத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக இவ்வாறு நீண்ட வரிசைகளைக் காண முடிந்தது. யாழ்ப்பாணத்தவரின் முன்னெச்சரிக்கை உணர்வும் ரத்தத்தில் ஊறிய சேமிப்புக் கலாச்சாரமும்தான் அதற்குக் காரணமா? முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு சமூகம் அவ்வாறு முன்னெச்சரிக்கையோடு சில விடயங்களை ஊகித்து-அந்த ஊகங்கள் பிழையாக இருந்தாலும் பரவாயில்லை- தற்காப்பு உணர்வோடு சிந்திப்பது நல்லது. யாழ்ப்பாணத்தின் சேமிப்புக் கலாச்சாரம் என்பது தற்காப்பு உணர்வின் அடிப்படையானது. அரசற்ற ஒரு மக்கள் கூட்டம் தற்காப்பு உணர்வின் அடிப்படையில் சிந்திப்பது நல்லது. ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால், இவ்வளவு முன்னெச்சரிக்கை உணர்வுடைய;தற்காப்பு உணர்வுடைய ஒரு மக்கள்கூட்டம் தமது பிரதிநிதிகளைத் தெரியும் பொழுது எந்த அடிப்படையில் முடிவெடுக்கின்றது? படித்த பெரும்பாலான யாழ்ப்பாணத்தவர்களைக் கேட்டால், கணிதம் விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைத்தான் உயர்வான பாடங்கள் என்று கூறுவார்கள். ஆனால் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொழுது தமிழ் மக்கள் கணிதமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் சிந்தித்து முடிவெடுக்கின்றார்களா? லண்டனைச் சேர்ந்த ஒரு மருத்துவர் சில நாட்களுக்கு முன் முகநூலில் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். மேற்காசியாவில் நிகழும் போர் தொடர்பான காணொளிகளைப் பற்றிய குறிப்பு அது. “படிச்ச பெரிய மனிதர்கள் என்கிறார்கள். டொக்டர், எஞ்சினியர்கள் என்கிறார்கள். அதுகூடப் பரவாயில்லை ,சொப்ட்வெயார் எஞ்சினியர் என்று புரொபைலில் போட்டு வச்சிருக்கானுகள். ஆனால் இப்படியான AIபடங்கள் (செயற்கை நுண்ணறிவின் மூலம் தயாரிக்கப்பட்ட படங்கள்) அதுவும் AI படங்கள் என்று இலகுவாக கண்டு பிடிக்கக்கூடிய படங்களையும், வீடியோக்களையும் பகிர்கிறார்கள்….என்னதான் படித்தாலும் பொதுப்புத்தி இல்லை. அடுத்தது தொழில்நுட்ப வளர்ச்சியை அறிந்துகொள்ளும் ஆர்வமில்லை.” அவர் கூறுவதுபோல தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொழுது தமிழ் மக்களில் எத்தனை பேர் பொதுப் புத்தியைப் பயன்படுத்துகின்றார்கள்? ஒரு பக்கம் கணித,விஞ்ஞான ஒழுக்கங்களைப் போற்றும் ஒரு சமூகம், பூகோள அரசியலில் நிகழும் மாற்றங்களை வைத்து தற்காப்பு உணர்வுடன் சிந்திக்கும் ஒரு சமூகம்,ஆனால் உள்நாட்டில் தனது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொழுது அவ்வாறு அறிவுபூர்வமாக,தீர்க்கதரிசனமாகச் சிந்தித்து முடிவெடுக்கின்றதா? கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை எந்த அடிப்படையில் தெரிவு செய்தார்கள்? கடந்த மாதம் நடுப்பகுதியளவில் மானிப்பாய் அந்தோணியார் கோவிலில் நடந்த ஒரு மக்கள் சந்திப்பில் இந்த கேள்வியை வளவாளர் அங்கு வந்திருந்தவர்களிடம் கேட்டார். பெரும்பாலானவர்கள் சொன்னார்கள்,உள்ளூர் உணர்வுகளை மதித்து வாக்களித்ததாக.”எமது ஊரவர்; எமக்கு வேண்டியவர்; எமது இனசனம்;எமதுசமயம்;எமது சாதி; எமக்கு உதவுபவர்”…போன்ற உள்ளூர் உணர்வுகளின் அடிப்படையில்தான் தமிழ்மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதேசமயம் கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொழுது எந்த அடிப்படையில் அதைச் செய்தன? முக்கியமாக மூன்று அளவுகோல்கள் அங்கே இருந்தன. முதலாவது அளவுகோல், அவர் உள்ளூரில் வெல்லக்கூடியவராக இருக்க வேண்டும். இரண்டாவது அளவுகோல், அவர் கட்சித் தலைமைக்கு விசுவாசமானவராக இருக்க வேண்டும். கட்சித் தலைமையின் சொல் கேட்டு நடப்பவராக இருக்க வேண்டும். மூன்றாவது அளவுகோல்-இது ஒரு விதத்தில் ஒரு சட்ட ஏற்பாடும் கூட-ஒரு தொகுதி வேட்பாளர்கள் பெண்களாக இருக்க வேண்டும். இந்த மூன்று அளவுகோள்களிலும் எனது கட்டுரைகளில் நான் திரும்ப திரும்ப கூறுவதுபோல,கீழிருந்து மேல் நோக்கிய தேசியப் பண்புமிக்க உள்ளூர்த் தலைமைகளை வார்த்தெடுக்க வேண்டும் என்ற கட்சிகடந்த தமிழ்த் தேசியத் தரிசனம் எத்தனை கட்சிகளிடம் இருந்தது? வாக்களித்த மக்களும் தேசியப் பண்புமிக்க உள்ளூர்த் தலைமைகளைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று கருதி வாக்களிக்கவில்லை. வேட்பாளர்களைத் தெரிவு செய்த கட்சிகளும் கீழிருந்து மேல் நோக்கிய உள்ளூர் தலைமைகளைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற தரிசனத்தோடு அதைச் செய்யவில்லை. மிகச் குறைந்தளவு விதிவிலக்குகளைத்தவிர இப்போதுள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் எத்தனை பேர் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல தமிழ் மக்களின் புத்திக் கூர்மையை; தற்காப்பு உணர்வை; எதிர்காலத்தை நோக்கிய முன்னெச்சரிக்கை உணர்வைப் பிரதிபலிக்கிறார்கள்? அண்மை நாட்களாக புதிய சபைகளை உருவாக்கும் விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இடையே நடக்கும் மோதல்களும் ரகசியப் பேரங்களும் ரகசிய வாக்கெடுப்புகளும் எதைக் காட்டுகின்றன ?அது தேசத்தைத் திரட்டும் அரசியலா?அல்லது கட்சி அரசியல் போட்டியா? மிகக்குறிப்பாக அவை தமிழரசுக் கட்சிக்குள் உள்ள முரண்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன. கட்சியின் மத்திய குழுவுக்கு விசுவாசமாக இருப்பதா? அல்லது தேசத் திரட்சிக்கு விசுவாசமாக இருப்பதா ? என்ற கேள்வி எழும் பொழுது உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் சிறு தொகையினர் தமது கட்சித் தலைமைக்கு விசுவாசமாக முடிவெடுக்கவில்லை. இந்த விடயத்தில் தமிழ்த் தேசியப் பேரவை தந்திரமாகக் காய்களை நகர்த்தி சில சபைகளைக் கைப்பற்றியிருக்கிறது. அதேசமயம் இந்த நகர்வுகள் தமிழ்த் தேசிய பேரவைக்கும் சுமந்திரன் அணிக்கும் இடையிலான முரண்பாடுகளை மேலும் ஆழமாக்கக் கூடியவை. சுமந்திரன் அணி எதிர் காலத்தில் பழிவாங்கும் உணர்வோடு சபைகளைக் கையாளும். அது பிரதேச சபைகளை நிர்வகிப்பதில் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடும். பிரதேச சபைகளை ஸ்திரமாக நிர்வகிப்பது சவால்களுக்கு உள்ளாகலாம். வென்ற கட்சிகளும் வெல்லாத கட்சிகளும் முகநூலில் மோதிக் கொள்ளும் காட்சிகளைப் பார்த்தல் அப்படித்தான் சிந்திக்க வேண்டியுள்ளது. நாடு பிடிக்கப் புறப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் பிரதேச சபைகளைப் பிடிப்பதற்கு அடிபடும் காட்சி ரசிக்கத்தக்கதாக இல்லை. தமிழ் கட்சிகளுக்கு இடையிலான பிடுங்குப்பாடு தனக்குச் சாதகமானது என்று தேசிய மக்கள் சக்தி நம்புகின்றது. தேசிய மக்கள் சக்தி தமிழ்ப் பகுதிகளில் இறுதி வாக்கெடுப்பின்போது நடுநிலை வகித்ததாகக் கூறுகிறது. ஆனால் அவர்கள் வாக்கெடுப்பில் நடுநிலைமை வகித்தமை என்பது தந்திரமானது. தனக்குத் தேவை என்று கருதிய சபையில், குறிப்பாக தையிட்டி விகாரை அமைந்திருக்கும் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ரகசிய வாக்கெடுப்பைக் கேட்டது. மேலும், ஏனைய சபைகளில் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அதில் குழப்பம் ஏற்பட்டால் தமிழ்க் கட்சிகள் அதை இனமுரண்பாட்டுக்கூடாக வியாக்கியானப்படுத்தும். மாறாக வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டால் தமிழ்க் கட்சிகள் தாங்களே தங்களுக்குள் மோதி சபைகளைக் கொட்டிக் குலைக்கும். அதைவிட முக்கியமாக இதுவரை காலமும் யாரோடு கூட்டுச்சேர மாட்டோம் என்று கூறி வந்தார்களோ அவர்களோடு கூட்டுச்சேர அல்லது அவர்களுடைய ஆதரவை மறைமுகமாகப் பெறவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அவ்வாறு இதுவரை காலமும் தாங்கள் துரோகிகள் என்று பழித்தவர்களின் ஆதரவைக் கேட்கும் கட்சிகளை தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் விதத்தில் அமைச்சர் சந்திரசேகரன் கருத்துத் தெரிவித்து வருகிறார். ஒருபுறம் அரசாங்கம் தமிழ்க் கட்சிகளை குறிப்பாக தமிழரசுக் கட்சியை வாக்காளர்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இன்னொருபுறம் தமிழ்க் கட்சிகள் தங்களுக்கு இடையே மோதி உள்ளூராட்சி சபைகளை போட்டுடைக்கும்போது தமிழ்மக்கள் அக்கட்சிகளின் மீது வெறுப்படைந்து, சலிப்படைந்து தேசிய மக்கள் சக்தியை நோக்கித் திரும்புவார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடந்ததுபோல்.ஏன், உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திதானே இரண்டாம் இடத்தில் நிற்கின்றது? தேசிய மக்கள் சக்தி அப்படியொரு எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஒரு பின்னணிக்குள் தமிழ்க் கட்சிகள் எல்லா விதமான முரண்பாடுகளுக்கும் அப்பால் உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசிய நிர்வாகத்தை பலப்படுத்துவது என்ற அடிப்படையில் முடிவெடுத்தால் மட்டும்தான் உள்ளூர்ப் பொருளாதாரத்தை தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகக் கட்டி எழுப்பலாம்; உள்ளூர்த் தலைமைகளை தேசியப் பண்புமிக்கவர்களாக வார்த்து எடுக்கலாம். இல்லையென்றால் முன்னாள் மாகாண சபை உறுப்பினரான, மறைந்த பசுபதிப்பிள்ளை ஒருமுறை மாகாண சபையில் கூறியதுபோல “நந்தவனத்து ஆண்டிகள் போட்டுடைத்த தோண்டிகளாக”உள்ளூராட்சி சபைகள் மாறக்கூடுமா? https://www.nillanthan.com/7466/

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
இவ‌ர் வேற காமெடி ப‌ண்ணிக்கிட்டு.............மூன்று வ‌ருட‌மா இவ‌ர்க‌ளால் புட்டினின் கால் முடிய‌ கூட‌ புடுங்க‌ முடிய‌ வில்லை , ஈரான் மீது இந்த‌ மிர‌ட்ட‌ல் , ஈரான் இப்ப‌டி ப‌ல‌ நூறு மிர‌ட்ட‌லை பார்த்து விட்டுது ஹா ஹா😁😛.......................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை சீனா கடுமையாக கண்டிக்கிறது.................க‌ண்டிப்ப‌தோட‌ நிக்காம‌ க‌ள‌த்தில் இற‌ங்கி அடிக்க‌னும்...............அல்ல‌து ஈரானுட‌ன் சேர்ந்து ம‌றைமுக‌மாக‌ அமெரிக்காவை போட்டு தாக்க‌னும்..................இது ந‌ட‌க்குமா ந‌ட‌ந்தால் இதை விட‌ வேறு என்ன‌ ம‌கிழ்ச்சி என‌க்கு🙏🥰.............................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
இஸ்ரேல் புனித பூமி என்று இத்துணை காலம் கதை விட்டுட்டு இருந்தாங்க இப்போ அந்த புனித பூமியை அப்படியே விட்டு விட்டு உயிருக்கு பயந்து ஓட்டம் பிடிக்கும் (யூத) வந்தேறி திருடர்கள் உணவு உட்பட அடிப்படை வசதிகள் எல்லாம் இழந்தும் கூட வாழும் பாலஸ்தீன மக்கள் தான் உண்மையான பூர்வகுடிகள்...............................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
யூத‌ர்க‌ளை வ‌ள‌ர‌ விட்டால் இன்னும் நூறாண்டு க‌ழித்து சொல்லுவானுங்க‌ள் த‌ங்க‌ட‌ பைப்பில்ல‌ போட்டு இருக்கு 1000வ‌ருட‌த்துக்கு முத‌ல் யூத‌ர்க‌ள் தான் யாழ்பாண‌த்தில் வாழ்ந்த‌வை ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு அந்த‌ இட‌ம் தேவை என‌ போர் தொடுத்தாலும் தொடுப்பாங்க‌ள் ஹாசாவில் ஈன‌ இரக்க‌ம் இன்றி ம‌க்க‌ளை கொன்று உண‌வுக‌ள் போக‌ விட‌மா ப‌ண்ணி அந்த‌ ம‌க்க‌ள் ம‌ர‌ணிக்க‌ அந்த‌ இட‌ங்க‌ளை யூத‌ர்க‌ள் த‌ங்க‌ளின் சொந்த‌ நில‌ம் ஆக்கி அக‌ன்ட‌ இஸ்ரேல் நாட்டை உருவாக்குவாங்க‌ள் அது தான் அவ‌ங்க‌ளின் திட்ட‌ம்........................கோமாளி ர‌ம்ப் என்ன‌ சொன்ன‌வ‌ர் , ஹாசாவில் வ‌சிக்கும் ம‌க்க‌ள் வேறு நாடுக‌ளுக்கு போங்கோ.................... நாம‌ த‌மிழீழ‌ம் வேண்டும் என்று இப்ப‌வும் அகிம்சை வ‌ழியில் போராடுவ‌து எத‌ற்காக‌...................... ஈழ‌ ம‌ண்ணில் வ‌சிக்கும் ம‌க்க‌ளுக்கு உங்க‌ளுக்கு நாங்க‌ள் வேறு ஒரு இட‌ம் த‌ருகிறோம் அங்கு போய் வ‌சியுங்கோ ஈழ‌ நில‌ப் ப‌ர‌ப்பை விட்டு விடுங்க‌ள் என்றால் நாங்க‌ள் ஏற்று கொள்ளுவோமா........................ அடுத்த‌வ‌ன்ட‌ நாட்டை ஆட்டைய‌ போட்ட‌ யூத‌ர்க‌ள் இவ‌ங்க‌ளை அட‌க்கா விட்டால் இவ‌ங்க‌ள் வ‌ரும் கால‌ங்க‌ளில் ப‌ல‌ நாடுக‌ளுக்கு பெருத்த‌ த‌லையிடிய‌ கொடுப்பாங்க‌ள்..................... அதுக்கு ந‌ல்ல‌ உதார‌ன‌ம் ஹாசா , போர் தொட‌ங்கி இர‌ண்டு ஆண்டும் முடிய‌ வில்லை 60ஆயிர‌ம் ம‌க்க‌ளை கொன்று விட்டாங்க‌ள் யூத‌ர்க‌ள்................ ஈரான் எத்த‌னையோ விடைய‌த்தில் பொறுமை காத்த‌து , உக்கிரேனுக்காக‌ முட்டை க‌ண்ணீர் விட்ட‌ கூட்ட‌ம் , ஈரான் விடைய‌த்தில் தொப்பிய‌ மாற்றி போடுவ‌தை நினைக்க‌ அருவ‌ருப்பாக‌ இருக்கு ஈரான் த‌ன‌து நாட்டின் இறையான்மைக்காக‌ அணுகுண்டு செய்வ‌தில் த‌வ‌று எதுவும் இல்லை.......................இவை ம‌ட்டும் அணுகுண்டை வைத்து மிர‌ட்டுவின‌ம் ஆனால் ஈரான் அணுகுண்டு த‌யாரித்தால் அது குற்ற‌மாம்...........................

ஜேவிபி செம்மணிக்குப் பொறுப்புக் கூறுமா? நிலாந்தன்.

1 month 1 week ago
ஜேவிபி செம்மணிக்குப் பொறுப்புக் கூறுமா? நிலாந்தன். இம்மாத இறுதியில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வரும் பொழுது செம்மணிப் புதைகுழியைப் பார்வையிடுவார் என்று தெரிகிறது. அதை நோக்கி தமிழ் மக்கள் மத்தியில் உள்ள செயற்பாட்டு அமைப்புக்கள் போராட்டங்களை ஒழுங்குபடுத்தி வருகின்றன. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வரப் போகிறார் என்ற செய்தி கிடைத்ததும் கடந்த மாதம் 22 ஆம் திகதி சுமார் 35 தமிழ் குடிமக்கள் அமைப்புகள் இணைந்து ஐநா மனித உரிமைகள் ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதின.அதன் விளைவாக ஐநா அலுவலர்களுக்கும் தமிழ் குடிமக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஒரு மெய்நிகர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்ட்து.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்குள் வரக்கூடாது என்று குடிமக்கள் அமைப்புக்கள் கேட்டிருக்கின்றன. ஏனென்றால், இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐநாவின் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.உள்நாட்டு விசாரணையைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறி வருகிறது. ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் “சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான கட்டமைப்போடு” இந்த அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை. அக்கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் வருவதற்கு இன்றுவரை விசா வழங்கப்படவில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில், ஐநா தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளாத, ஐநா மனித உரிமை அலுவலர்களை நாட்டுக்குள் வர அனுமதிக்காத ஒரு நாட்டுக்கு, மனித உரிமைகள் ஆணையாளர் வருவது அந்த அரசாங்கத்துக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரமாகக் கருதப்படும் என்று அந்தக் குடிமக்கள் சமூகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.ஆனால் ஐநா மனித உரிமைகள் பேரவையோடு ஒத்துழைக்க மறுக்கும் ஓர் அரசாங்கத்தை அப்படியே வெளியில் விட முடியாது என்றும், அதை நெருங்கிச் சென்றுதான் அதன் தீர்மானங்களில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும், ஐநாவின் கண்காணிப்பு வளையத்துக்குள் அதை கொண்டு வரலாம் என்றும், ஒர் அபிப்பிராயம் ஐநா மட்டத்தில் உள்ளதாகத் தெரிகிறது. இது இனப்பிரச்சினை தொடர்பில் இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுப்புக் கூற வைப்பதற்கான ஒரு முயற்சியாக வெளியில் தோன்றினாலும்,இதற்குப்பின் பிராந்திய மற்றும் உலகளாவிய ராஜதந்திர உள்ளோட்டங்கள் உண்டு. இப்போது ஆட்சியில் இருப்பது சீன இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த ஜேவிபியை அடித்தளமாக கொண்ட ஒரு கட்சியாகும். இக்கட்டுரை எழுதப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜேவிபியின் முடிவெடுக்கும் தலைவராகிய ரில்வின் சில்வா சீனாவில் காணப்பட்டார். எனவே சீனாவின் செல்வாக்குக்குள் விழக்கூடிய ஓர் அரசாங்கத்தை இயன்ற அளவுக்கு மேற்கின் செல்வாக்கு வளையத்துக்குள் பேணுவதுதான் மேற்கு நாடுகளின் தீர்மானமாக காணப்படுகிறது. இந்த அரசாங்கத்தை சீனாவை நோக்கித் தள்ளுவதற்குப் பதிலாக தாங்கள் அரவணைக்க வேண்டும் என்று இந்தியாவும் மேற்கு நாடுகளும் சிந்திக்கின்றன என்பதனைத்தான், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த அரசாங்கத்தோடு மேற்கும் இந்தியாவும் எவ்வாறு இடையூடாடி வருகின்றன என்பதை தொகுத்து அறியக்கூடியதாக உள்ளது. எனவே இந்த ராஜதந்திர இலக்கின் அடிப்படையில்தான் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்குள் வருகிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் ஐநா குடிமக்கள் சமூகங்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவில்லை.எனினும், அவ்வாறு மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்குள் வருவாராக இருந்தால், அவர் இங்கு செம்மணிப் புதை குழியைப் பார்க்க வேண்டும் என்று குடிமக்கள் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஐநா ஏற்றுக் கொண்டுள்ளது.அந்த அடிப்படையில் அவர் இந்த மாத இறுதியில் இலங்கை வருகையில்,யாழ்ப்பாணத்துக்கும் வந்து செம்மணிப் புதை குழியைப் பார்வையிடுவார் என்று தெரிகிறது. அவருடைய வருகையையொட்டி தமிழ் குடிமக்கள் சமூகங்களும் செயற்பாட்டு அமைப்புகளும் கவனயீர்ப்பு போராட்டங்களை ஒழுங்குபடுத்திவருகின்றன. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வருவதன்மூலம் அதுபோன்ற மனிதப் புதைகுழிகள் மீதான அனைத்துலக கவனக்குவிப்பு செறிவாக்கப்படும். ஆனால் அது இப்போதிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான அழுத்தமாக எப்பொழுது மாறும் ? ஏன் இப்படிக் கேட்க வேண்டியுள்ளது என்று சொன்னால், இப்போதிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது,நான் எனது கட்டுரைகளில் திரும்பத் திரும்பக் கூறுவது போல, ஒரு மிதவாத கட்டமைப்பில் இருந்து வந்தது அல்ல. மேட்டுக்குடி கட்டமைப்பும் அல்ல.அது ஒரு இயக்கம். இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு,இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்டு, இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட ஒரு இயக்கம். தன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டு எழுந்த ஒரியக்கம். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கண்ணீரையும் துயரத்தையும் இதற்கு முன்பு இருந்த எந்த ஓர் அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் நன்கு விளங்கிக் கொள்ள முடியும். ஏனென்றால் ஜேவிபியின் இரண்டு ஆயுதப் போராட்டங்களில் போதும் கொல்லப்பட்டவர்களின் தொகை ஆயிரக்கணக்கில் வரும். குறிப்பாக இரண்டாவது ஆயுதப் போராட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொகை சுமார் 12,000 என்று உத்தியோகபூர்வ குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் உத்தியோகப் பற்றற்ற குறிப்புகளின்படி அத்தொகை ஒன்றரை லட்சத்தைத் தாண்டும் என்று ஒரு குத்துமதிப்பான கணிப்பு உண்டு. இவ்வாறு தனது தோழர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில்,அது தொடர்பாக ஜேவிபி இதுவரை எடுத்த நடவடிக்கைகள் எவை ? இந்த கேள்விக்கு விடை கூறமுன்பு, கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன் வவுனியாவில் நடந்த ஒரு கருத்தரங்கை இங்கே நினைவுபடுத்த வேண்டும். கருத்தரங்கு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அனுசரணையோடு நடந்ததாக ஒரு ஞாபகம்.காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஒரு கருத்தரங்கு. அதில் நான் ஒரு பேச்சாளராகக் கலந்து கொண்டேன்.தென்னிலங்கையில் இருந்து மற்றொரு வளவாளர், பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, கலாநிதி ஜயலத் கலந்து கொண்டார். தனது உரையில் அவர் ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக் காட்டினார்.”தென்னிலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதை என்பது மறக்கப்பட்ட ஒரு கதை” என்று. அவர் கூறினார்.தென்னிலங்கையில் அது மறக்கப்பட்ட கதை என்றால் அதை யார் மறந்தது? யார் அதற்காக போராட வேண்டுமோ அவர்கள்,அதாவது ஜேவிபி அதை மறந்து விட்டது என்று தானே பொருள்? ஜேவிபி ஏன் தன் தோழர்கள் தோழியர்கள் காணாமல் ஆக்கப்பட்டதை மறக்க விரும்புகிறது? அல்லது அதற்காக ஏன் நீதி கேட்டுப் போராடத் தயாரில்லை ? விடை மிக எளிமையானது. மிகக்குரூரமானது. ஜேவிபி தனது தோழர்களுக்கு நீதி கேட்டுப் போராடத் தயாரில்லை.ஏனென்றால் அவ்வாறு நீதி கேட்டுப் போராடினால் அவர்கள் யாரை இப்பொழுது யுத்த வெற்றி நாயகர்களாக கொண்டாடுகிறார்களோ,அவர்களில் பலரை விசாரிக்க வேண்டிவரும். அவர்களில் பலர் குற்றவாளிகளாக தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும். அதாவது இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால், இறுதிக்கட்டப் போரில் யாருடைய வெற்றிக்காக ஜேவிபி தன்னை வருத்தி உழைத்ததோ, யாருடைய வெற்றிக்காக ஆட்களை சேர்த்துக் கொடுத்ததோ,யாருடைய வெற்றிக்காக பிரச்சாரம் செய்ததோ,அந்தத் தரப்பை,அதாவது ஸ்ரீலங்கா படைத்தரப்பைத்தான் குற்றம் சாட்ட வேண்டியிருக்கும். விசாரிக்க வேண்டியிருக்கும். தண்டிக்க வேண்டியிருக்கும். இதை அவர்கள் செய்வார்களா? இப்பொழுது நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர் அதாவது முப்படைத் தளபதி யார் என்று பார்த்தால், ஒரு ஜேவிபி உறுப்பினர்தான். காணாமல் ஆக்கப்பட்ட தன் தோழர்களுக்காக அவர் ஒரு முப்படைத் தளபதி என்ற அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடுவாரா? இல்லை. செய்ய மாட்டார். ஏனென்றால் அவர்களே இறுதிக்கட்டப் போரில் அந்த யுத்தத்தின் பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள்.எனவே விசாரணை என்று தொடங்கினால் ஒரு கட்டத்தில் ஜேவிபியும் அந்த விசாரணைக்குள் வரும். இதுதான் பிரச்சனை. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதை தென்னிலங்கையில் எங்கே மறைக்கப்பட்டது என்றால், அதற்காகப் போராட வேண்டிய ஜேவிபி போராட்டத் தயாரில்லை என்பதால்தான். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால்,தமிழ் மக்களுக்கு எதிரான ஜேவிபியின் இனவாத நிலைப்பாட்டின் காரணமாகத்தான் அவர்கள் இவ்வாறு முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது. தமது தோழர்களுக்கான நீதியை விடவும் தமிழ் மக்களை வெற்றி கொள்வது முக்கியம் என்று அவர்கள் நம்புகிறார்கள். தமிழ் மக்களை வெற்றி கொண்ட படை வீரர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்று அவர்கள் நம்புகிறார்கள். அதனால்தான் கடைசியாக நடந்த ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பேசிய புதிய வெளியுறவு அமைச்சராகிய விஜித ஹேரத் ஐநாவின் பன்னாட்டு பொறிமுறையை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அனுர குமார அசோசியேட் நியூஸ் பிரஸ் இற்கு வழங்கிய ஒரு நேர்காணலில் என்ன சொன்னார் தெரியுமா?பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றுதான் கேட்கின்றார்களே தவிர,குற்றம் சாட்டப்படுகிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்கவில்லை என்று. யார் அவருக்கு அப்படி சொன்னது? அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் குற்றவாளிகளை தண்டிக்க விரும்பவில்லை என்று யார் அவர்களுக்குச் சொன்னது? தமிழ்ப் பகுதிகளில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் எந்த ஒரு தாயாவது அவ்வாறு கூறியிருக்கிறாரா? இல்லை.தமிழ்மக்கள் மத்தியில் உள்ள எந்த ஒரு கட்சியாவது அவ்வாறு கூறியிருக்கிறதா? இல்லை.ஆனால் ஜனாதிபதி அவ்வாறு கூறினார். அவர் அப்பொழுது ஜனாதிபதி அல்ல. வேட்பாளராக இருந்தார். மேலும் உண்மையை ஏன் கண்டறிய வேண்டும்? நிலை மாறு கால நீதியின் கீழ் உண்மையை கண்டறிவது என்பது குற்றவாளிகளை கண்டறிவது. குற்றம் நடந்த சூழலை, குற்றத்தின் பின்னணியை,குற்றத்துக்கான உளவியல் நோக்கத்தைக் கண்டறிவது.அந்த அடிப்படையில் குற்றவாளிகளை விசாரிப்பது.தண்டிப்பது.அதன்மூலம்,குற்றச் செயல்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பது. குற்றம் புரிந்தாலும் தண்டனையிலிருந்து தப்பலாம் என்ற கொடூரமான பண்பாட்டை மாற்றி, குற்றம் செய்தவர்களை பொறுப்புக்கூற வைப்பது. எனவே உண்மைகளைக் கண்டடைவது என்பது பொறுப்புக் கூறுவதற்காகத்தான்.ஆனால் அனுர கூறினார்,பாதிக்கப்பட்ட மக்கள் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்கவில்லை என்று. அதே நிலைப்பாட்டோடுதான் அவர் இப்பொழுதும் காணப்படுகிறாரா? இப்பொழுது விடயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது அல்லவா? இப்பொழுதுள்ள அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.ஏனென்றால் அதுவே தனது தோழர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு நீதியைக் கேட்டுப் போராடவில்லை.தனது காணாமல் ஆக்கப்பட்ட தோழர்களை மறப்பதற்குத் தயாரான ஒரு இயக்கம்,தமிழ் மக்களின் விடயத்தில் நீதியைப் பெற்றுத்தரும் என்று எப்படி எதிர்பார்ப்பது? ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வருவதால் அந்த நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என்று எப்படி எதிர்பார்ப்பது? https://athavannews.com/2025/1436592

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து முற்றாகத் துடைத்தழித்து விடுவோம் என்பதே ஈரானின் தாரக மந்திரம். இவ் இலக்கினை நோக்கியே ஈரான் தனது இராணுவ, ஆயுத பலத்தினை உருவாக்கி வந்திருக்கிறது. இஸ்ரேலினைத் தொடர்ச்சியாக முற்றுகைக்குள் வைத்திருக்கும் நோக்கத்திலேயே இஸ்ரேலினைச் சூழ்வுள்ள இஸ்லாமிய நாடுகள், மற்றும் தனது முகவர் அமைப்புக்களை உருவாக்கி, வள‌ர்த்து, இராணுவ மயப்படுத்தி வந்திருக்கிறது. பலஸ்த்தீன அமைப்புக்களான ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத், லெபனானின் ஹிஸ்புள்ளா, ஆசாத்தின் சிரிய அரசு, ஈராக்கின் இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள், யெமெனின் ஹூத்தீக்கள் என்று பல முகவர் அமைப்புக்களை இஸ்ரேலின் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துமாறு ஊக்குவித்து வந்திருக்கிறது. ஆக 1967 ஆம் ஆண்டின் ஆறு நாள் யுத்தம் மற்றும் 1973 ஆம் ஆண்டின் யொம் கிப்புர் யுத்தம் ஆகியவற்றை நடத்தி இஸ்ரேலினை முற்றாக அழித்துவிட சூழவுள்ள இஸ்லாமிய நாடுகள் முயன்று, தோற்றதன் பின்னர், நவீன காலத்தில் ஈரான் தனது முகவர்களைக் கொண்டு இவ்வாக்கிரமிப்பினை நடத்த முயல்கிறது. யூத இனம் இரண்டாம் உலக யுத்தத்தின்போது சுமார் ஆறு மில்லியன் மக்கக்ளை இழந்திருந்தது. கடந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் இனக்கொலையாக இது பார்க்கப்படுகிறது. இன்று வெறும் 9 மில்லியன் மக்களை மட்டுமே கொண்டு, 20,000 சதுரக் கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்டிருக்கும் இஸ்ரேல் மீது நடத்தப்படும் எந்தவொரு அணுவாயுதத் தாக்குதலும் நிச்சயமாக இன்னொரு பாரிய இனக்கொலையாகவே முடிய வாய்ப்பிருக்கிறது. ஆகவேதான், தமது இனம் இரண்டாவது முறையாகவும் இன்னொரு இனக்கொலையினைச் சந்தித்துவிடக் கூடாதென்பதில் யூதர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள். (கிறீஸ்த்துவிற்குப் பின்னரான காலத்தில் அன்றைய இஸ்ரேலில் இருந்து அகதிகளாக உலகெங்கும் அடித்துவிரட்டப்பட்ட யூதர்களைத் தேடித்தேடி மீளவும் தமது சரித்திர நிலத்திற்குக் கொண்டுவந்துசேர்க்க இஸ்ரேலிய அரசாங்கங்கள் கடந்த 70 வருடங்களாக முயன்று வருகின்றன. இதன் ஒரே நோக்கம் யூதவினம் அழியாது, ஓரினமாக ஓரிடத்தில் வாழவேண்டும் என்பதுதான்). தனது இனத்தை முற்றாக அழித்தும், தனது சின்னஞ்சிறிய நாட்டை முற்றாக ஆக்கிரமிக்கவும் மட்டுமே ஒரு நாடு அணுவாயுதத்தினைத் தயாரிக்கின்றது என்றால், அவ்வணுவாயுதத்தை எப்பாடுபட்டாவது அழித்துவிட பாதிக்கப்பட்ட அவ்வினம் முயல்வதில் தவறு இருக்கின்றதா? ஈரானினால் உருவாக்கப்பட்டு வரும் அணுச்சக்தி எதற்காகப் பயன்படுத்தப்படப் போகின்றது? தனது சக்தித் தேவைக்காக வெறும் 1 வீதத்தினை மட்டுமே அணுச்சக்தியில் இருந்து பெற்றுக்கொண்டுவரும் ஈரானிற்கு மிகப்பெரும் அணுச்சக்தியைக் கொடுக்கப்போகும் பல அணுவாலைகள் எதற்கு? தனது நிலப்பரப்பில் பெருமளவு எண்ணெய்வளத்தையியும், இயற்கை வாயுவையும் கொண்டிருக்கும் ஈரான், அணுச்சக்தியில் மிகுந்த கவனம் செலுத்த விரும்புவது எதற்காக? அணுவாயுதம் ஒன்றினை உருவாக்குவதற்கான மிகத்தூய . செறிவான யுரேனியத்தை உருவாக்கியும் சேமித்து வைப்பது எதற்காக? மருத்துவத் தேவைக்காகவும், சக்தித் தேவைக்காகவும் என்று கூறிக்கொண்டே இத்தேவைகளை நிவர்த்திசெய்யும் அளவினை விட பலமடங்கு சக்திவாய்ந்த யுரேணியம் பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டு வருவது எதற்காக? தான் உருவாக்கும் அணுச்சக்தி வெறுமனே மருத்துவத் தேவைக்காகவும், மின்சாரத்திற்காகவும் மட்டும்தான் என்றால், இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து முற்றாகத் துடைத்தழிப்போம் எனும் கொள்கையினை ஈரானின் முல்லாக்கள் இதுவரை கைவிடாது இருப்பதும், அக்கொள்கையினை நோக்கி தமது கவனத்தை தொடர்ச்சியாக வைத்திருப்பதும் எதற்காக? அணுவாயுதத்தை தயாரிக்கும் நோக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தன்னைச் சுற்றியிருக்கும் நாடுகளுடன் சுமூகமான முறையில் பயணிப்பதற்கு ஈரானிற்கு பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. ஒபாமாவின் ஆட்சியில் அணுவாயுத நோக்கத்தினைக் கைவிட்டு ஏனைய துறைகளில் கவனம் செலுத்தவென அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன ஈரானுடன் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டபோதும், 2006 இல் எதிரிகள் எவரிடமிருந்து வரும் தாக்குதல்களில் இருந்து தனது அணுவாயுதத் திட்டத்தைப் பாதுக்காகவென‌ போர்ட்டொவில், மலைகளுக்கு நடுவில், 300 அடிகள் ஆளத்தில், மிகப்பாதுகாப்பான அணு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி, அணுவாயுத உற்பத்திக்கான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் பாதுகாத்து வருகிறது. இந்த அணு ஆராய்ச்சி நிலையம் உட்பட மூன்று அணுவாராய்ச்சி நிலையங்களே இன்று தகர்க்கப்பட்டிருக்கின்றன. என்னைப்பொறுத்தவரையில் சர்வாதிகாரிகளிடமும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமும் இருக்கும் மிகப்பெரும் அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்கள் மனித குலத்தின் இருப்பிற்கே ஆபத்தானவை. வட கொரியா, ஈரான், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை இதற்காகக் குறிப்பிடலாம். ஏனெறால், தமது சொந்த நலனிற்காகவும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், மதவெறியினால் உந்தப்பட்டும் இவர்கள் தம்மிடமிருக்கும் நாசகார ஆயுதத்தினை எப்போது வேண்டுமானாலும் பாவித்துவிடுவார்கள். ஆகவேதான் இவர்களிடம் அணுவாயுதங்கள் உட்பட நாசகார ஆயுதங்கள் சேர்வதை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பது அவசியமாகிறது. ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் நடத்திய தாக்குதல்களை நியாயப்படுத்த முடியும். தவறேயில்லை.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
மற்ற மேற்றகில் உள்ளவர்கள் தங்களுக்கு எதோ ஈரானை பற்றி முழுமையாக தெரியும் என்றது போலவே நீங்கள் சொல்வது இருக்கிறது. முதலில் இரான், காலனித்துவதில் இருந்து விடுதலை பெற்றதாயினும், புதிய நாடு இல்லை. இரான் அரசின் இருப்பு ஆகக்குறைந்தது சைரஸ் கி.மு 600 இல் இருந்து. அதுக்கு முதல் மெடியன் பேரரசு. அதுக்கும் முதல் Elam (Elamites, கி.மு 2700 அளவில்) பெரிய அரசு உட்பட, மற்றும் சிற்றரசுகள் இப்பொது உள்ள இரானையும், இராக்கின் பகுதிகளையும் உள்ளடக்கி. தெற்கில் பாரசீக (Persian), Achaemenid இராச்சியங்கள், இந்த தென் இராச்சியங்களில் இருந்தே சைரஸ் இன் Achaemenid பேரரசாக எழும்பியது. இப்போதைய நிலையில், ஒரு சிறு உதாரணம் இஸ்லாமிய அரசு 1979 இல் வந்தபோது, யாப்பு கூட கொண்டுவந்தது எல்லோரும் சமம், சம உரிமை ... என்று (அமெரிக்காவின் / மேற்றுகின் அரபு நாடுகள் வால்கள் இப்போதும் இருப்பது மன்னர் இராச்சியங்களாக) சிறிய உதாரணம் ஈரானில் பெண்கள் வாகனம் ஓடலாம் என்பது 1979 யிலேயே கொண்டு வரப்பட்டு அனுமதிக்க படுகிறது. அமெரிக்காவின் வாலான சவூதியில் 2018 இல் இருந்தே குறியீடாக அனுமதிக்கப்படுகிறது.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 03

1 month 1 week ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 03 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 03 / 'புத்தர் தனது முதல் இரண்டு வருகைகளின் போது, இலங்கையின் பூர்வீக குடிமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்காக, உண்மையில் ஒரு பயங்கரவாதியாக நடந்து கொண்டாரா?' புத்தர் தனது முதல் வருகையின் போது இலங்கையின் பூர்வீக குடிமக்களைப் பயமுறுத்தினார். மேலும் அவர்களை வேறு ஒரு தீவுக்கு, திரும்பி வர முடியாதவாறு கட்டாயப்படுத்தி துரத்தினார். புத்தரின் இந்த செயல்கள் மற்றும் தந்திரோபாயங்களால், அவர்கள் மிகவும் பயந்தனர்; அவர்கள், புத்தரால் காட்டப்பட்ட வேறு ஒரு தீவுக்கு திரும்பி பார்க்காமல் ஓடினார்கள். இரண்டு நாக இளவரசர்களுக்கு இடையில் [மாமா மருமகனுக்கு இடையில்] அரியணைக்காக நடக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர, புத்தரின் இரண்டாவது இலங்கை வருகை நடைபெற்றதாக மகாவம்சம் கூறுகிறது. அப்பொழுது அவரே அந்த அரியணையை பெற்றார் என்கிறது. இது அவரது குணாதிசயத்தின் மீதான அவமதிப்பு போல் தெரிகிறது [It is sacrilege on his character], ஏனென்றால், அவர் தனது உரிமையான அரியணையையே துறந்தவர். அது மட்டும் அல்ல, பிம்பிசாரன் [a contemporary king, Bimbisara] அரியணை கொடுத்த பொழுதும், அதை ஏற்காதவர் அவர். அதாவது, இரு தரம் அரியணையை துறந்தவர். எப்படி இதற்கு உரிமைகோருவார்?. யாராவது, சொந்தபுத்தி உள்ள மற்றும் உண்மையான புத்த தர்மத்தை அறிந்த சமய வாதிகள், இதற்குப் பதில் சொல்லட்டும். இதே போன்ற நிகழ்வு தமிழ் காவியமான ‘’மணிமேகலை’ யிலும் விவரிக்கப்பட்டுள்ளது. அனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் மரியாதையுடன் இங்கு அது முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத் தக்கது. ஏனேன்றால் அந்தப் பிரச்சனை சிம்மாசனத்துக்காக அல்ல, புத்தர் அமர்ந்து உபதேசம் செய்யும் இருக்கைக்காக மட்டுமே. இரண்டு நாக இளவரசர்களில் எவராலும் அதை தூக்கி எடுக்க முடியவில்லை, அதே நேரத்தில் அதற்காக சண்டையை நிறுத்தவும் அவர்கள் விரும்பவில்லை. அவ்வேளையில் தான் புத்தர் வந்து, அவர்களின் சண்டையை நிறுத்தி, அதன் மீது அமர்ந்து அவர்களுக்கு உபதேசித்தார் என்கிறது தமிழில் பொது ஊழி (CE) ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன் எழுதப்பட்ட மணிமேகலை. மற்றும் ஒன்றையும் நான் குறிப்பிடவேண்டும். புத்தர் இலங்கைக்கு 500 பிக்குகளுடன், கல்யாணியை ஆட்சி செய்த நாக அரசனின் [Naga (Serpent) king at Kalyani] அழைப்பை ஏற்று, தனது மூன்றாவது வருகையில், காற்றில் பறந்து வந்தார் என்று கூறுகிறது. எப்படி ஒரு நாக அரசன், 2500 ஆண்டுகளுக்கு முன்பு, 1500 மைலுக்கும் அப்பால் இருக்கும் புத்தருக்கு அழைப்பு விட்டார் என்பது, யாருக்காவது தெரியுமாயின் எனக்கும் சொல்லவும்? மேலும் இந்த பெரும் தூரத்தை 501 பேர், புத்தரையும் சேர்த்து, காற்றில் பறந்து இருந்தால், கட்டாயம் அது ஒரு கண்கவர் கட்சியாக இந்தியாவில் இருக்கும் பலருக்கு இருந்து இருக்கும். ஆனால், எந்த வரலாற்று குறிப்புகளிலோ, அல்லது இந்தியா புராணங்களிலோ அது என்றும் பதியப்படவில்லை. பிந்தைய அத்தியாயம் ஒன்றில், மன்னன் தேவநம்பிய திஸ்ஸ அல்லது தீசன் மகிந்த தேரரிடம் பல தேரர்கள் அங்கு இருக்கிறார்களா என்று விசாரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது! தீபவம்சம் 12-55 மற்றும் மகாவம்சம் 14-13 யை இது சம்பந்தமாக பார்க்கவும். புத்தரின் மூன்றாவது இலங்கை வருகையின் போது அவருடன் ஐந்நூறு தேரர்கள் பறந்து வந்த அந்த பயணத்தை எப்படி மறந்தார்களோ நான் அறியேன் பராபரமே! ஒருவேளை மன்னருடன் மக்களும் மிகக் குறுகிய நினைவுகள் கொண்டவர்களாக இருக்கலாம்?. மேலும் இராசாவலிய நூலில், புத்தரின் இலங்கை வருகை பற்றிய கால விவரங்களில், சிறிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆனால் 'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends', என்ற குறிப்பின்படி, புத்தர் மத்திய கங்கை சமவெளியிலும் அதைச் சுற்றியும் முன்னும் பின்னுமாக நடந்து, குறுக்கே நடந்து, மிகக் குறைந்த பகுதியில் அறிவுரை வழங்கினார் [உபதேசித்தார்]. கல்கத்தாவிலிருந்து பெனாரஸ் மற்றும் அலகாபாத் வழியாக, இன்றைய டெல்லியின் கிராண்ட் டிரங்க் சாலையின் [Grand Trunk Road] தெற்கே வரை கூட அவர் அன்று வரவில்லை என்கிறது அந்த வரலாற்று ஆய்வு நூல். புத்தர் என்றால் ஞானம் பெற்றவர் என்று பொருள். சித்தார்த்தா என்பது பிறக்கும்போது அல்லது பிறந்த சிறிது நேரத்திலேயே கொடுக்கப்பட்ட பெயர். புத்தர் மிகவும் நேர்மையான மற்றும் அற்புதமான மனிதர், சோகம், துன்பம் மற்றும் மனித வாழ்க்கையில் சிக்கிய அவலங்கள் ஆகியவற்றிற்கான பதில்களைக் கண்டுபிடிக்க பாடுபட்டார். இளவரச வாழ்க்கையின் சுகங்களை அறிந்த ஒரு நபராக இருந்தும், அவ்வற்றை முற்றாக துறந்த ஒருவர். அவர் நாடு அல்லது மொழி என்பனவற்றில் சிக்காமல், அதை பொருட்படுத்தாமல் ஒரு உலகளாவிய ஆசிரியராக இருந்தார். மேலும் ஒரு புதிய மதத்தை உருவாக்க அவர் என்றும் கூட நினைக்கவில்லை. இருப்பினும், மனுவின் கோட்பாட்டில் உள்ள அசிங்கமான நிலை அளவுக்கு இல்லாவிட்டாலும், அவர் ஒரு சாதி அமைப்பை நம்பியதாகத் தோன்றுகிறது. இந்த புத்தரின் உண்மையான குணத்தை, இயல்பை வைத்து, அவர் எந்த நேரத்திலும் தீவிரவாதியாக, பயங்கரவாதியாக இருந்து இருப்பாரா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். Part: 03 / 'Is really The Buddha behaved as a terrorist to strike fear in the original inhabitants of Lanka on his alleged first two visits?' He terrorised the original inhabitants of Lanka in his first visit, and uprooted them to another island, never to return. They were so terror stricken because of the Buddha’s actions and tactics; they ran to the other island shown to them. The Buddha struck fear and terror in the two Naga (serpent) princes, uncle and nephew, and in their soldiers who were fighting for a throne in his second visit. He obtained the throne for himself. It is sacrilege on his character, as he renounced his legitimate throne and another throne offered to him by a contemporary king, Bimbisara. Having renounced throne twice, would he have claimed any throne, which did not belong to him? Similar event is described in the Tamil Epic ‘’Manimekalai’, and it respectfully ended the issue. It was not for a throne but for a seat on which the Buddha used to sit and preach. Any one of the two Naga princes could not take it, at the same time unwilling to stop fighting for it. Then the Buddha came, sat on it and preached them. The Buddha came, by flying, with five hundred Theras on his third visit to Lanka on the invitation of the Naga (Serpent) king at Kalyani. One may wonder how the Serpent king sent an invitation to the Buddha who was more than one thousand five hundred travel miles away! One high school geography textbook indicates the sea travel distance from Calcutta to Colombo as two thousand three hundred Kilometres. Five hundred Theras too flew along with the Buddha. It would have been a spectacular sight to see the five hundred and one to fly! In a later chapter, the king Devanampiya Tissa would inquire from Mahinda Thero whether many Theros were there! See 12-55 of the Dipavamsa and 14-13 of the Mahavamsa in this regard. People, along with the king, had very short memories to forget the flying visits of the five hundred Theros who accompanied the Buddha on his alleged third visit to Lanka. There are minor differences in details about time of Buddha’s visits in the Rajavaliya. But as per the Reference 'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends', The Buddha preached in a very limited area, walking back and forth and crisscrossing, in and around the central Gangetic plain. He never came down far south of the present day Grand Trunk Road from Calcutta to Delhi via Benares and Allahabad '. The Buddha means the person who attained enlightenment. Siddhartha is the given name at birth or shortly after the birth. The Buddha is a very sincere and wonderful person who strived to find answers for tragedy, suffering, and sadness entangled with human life. A person, who knew the comforts of the princely life, renounced it never to return. He was a universal teacher, irrespective of the country or the language, and never intended to create a new religion. However, he seemed to have believed in the caste system, though not to the ugly level as in the Code of Manu. With these Buddha's real character, please think, whether He would have terrorist any one at any time? நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 04 தொடரும் / Will Follow

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

1 month 1 week ago
கமிந்துவின் அரைச் சதத்தை ஷத்மான், ஷன்டோ அரைச் சதங்கள் விஞ்சின; இலங்கையை விட 187 ஓட்டங்களால் பங்களாதேஷ் முன்னிலை Published By: VISHNU 20 JUN, 2025 | 07:55 PM (நெவில் அன்தனி) காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் குவித்த அரைச் சதத்தை ஷத்மான் இஸ்லாம், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகியோரின் அரைச் சதங்கள் விஞ்சியதுடன் பங்களாதேஷ் முன்னிலையில் இருக்கிறது. போட்டியின் நான்காம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (20) இலங்கையை முதலாவது இன்னிங்ஸில் 485 ஒட்டங்களுக்கு ஆட்டம் இழக்கச் செய்த பங்களாதேஷ் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதம் இருக்க இலங்கையை விட 187 ஓட்டங்களால் பங்களாதேஷ் முன்னிலையில் இருக்கிறது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) பாடாலை மாணவர்கள் காலி கோட்டைக்கு மேலே உள்ள புல்வெளியில் இருந்து போட்டியைக் கண்டு களித்தமை விசேட அம்சமாகும். போட்டியின் ஐந்தாவதும் கடைசியுமான நாளைய தினம் சனிக்கிழமை (21) அதிசயம் நிகழ்ந்தாலன்றி இந்தப் போட்டி சுவாரஸ்யமற்ற முடிவை நோக்கி நகர்வதை தவிர்க்க முடியாது. பங்களாதேஷின் இரண்டாவது இன்னிங்ஸில் அனாமுல் ஹக் (4), மொமினுள் ஹக் (14) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். ஆனால், ஷத்மான் இஸ்லாம் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 76 ஓட்டங்களைப் பெற்றதால் பங்களாதேஷ் நல்ல நிலையை அடைந்தது. ஷத்மான் இஸ்லாமும் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் 3ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து ஷன்டோ திறமையாகத் துடுப்பெடுத்தாடி இப் போட்டியில் இரண்டாவது தடவையாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் முஷ்பிக்குர் ரஹிமுடன் 49 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளார். ஷன்டோ 56 ஓட்டங்களுடனும் ரஹீம் 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்னனர். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, மிலன் ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். முன்னதாக, நான்காம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 368 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 485 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா (19), குசல் மெண்டிஸ் (5) ஆகிய இருவரும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (386 - 6 விக்.) அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ், மிலன் ரத்நாயக்க ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதியான 84 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால் இருவரும் மொத்த எண்ணிக்கை 470 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தனர். கமிந்து மெண்டிஸ் தனது 13ஆவது டெஸ்டில் 5ஆவது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்து 87 ஓட்டங்களுடன் வெளியேறினார். மிலன் ரத்நாயக்க 39 ஓட்டங்களைப் பெற்றார். பின்வரிசையில் பிரபாத் ஜயசூரிய 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் நயீம் ஹசன் 121 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஹசன் மஹ்முத் 74 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/218025 டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உணர்ச்சிவசப்பட்டவராக விடைபெற்றார் மெத்யூஸ் : இலங்கை - பங்களாதேஷ் டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு 22 JUN, 2025 | 04:44 AM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியான ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தனது கடைசி இன்னிங்ஸில் ஏஞ்சலோ மெத்யூஸ் 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார். போட்டி முடிவில் பேசிய அவர், 'நான் ஏற்கனவே எனது ஓய்வை அறிவித்ததிலிருந்து எனக்கு கிடைத்த பாசத்தை என்னால் நம்பமுடியவில்லை. நிச்சயமாக பாசத்தினால் நிரம்பியிருக்கிறேன். எனக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது ஒரு எளிதான பயணம் அல்ல. நிறைய மேடு பள்ளங்களை சந்தித்தேன். ஆனால், எனக்கு கிடைத்த ஆதரவின் காரணமாக அவற்றை எல்லாம் கடந்து என்னால் எனது டெஸ்ட் வாழக்கைப் பயணத்தை நிறைவு செய்ய முடிந்தது. வெளிப்படையாக (நான் உணர்ச்சிவசப்படுறேன்) கூறுவதென்றால், கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வடிவத்திலிருந்தும் நான் விளையாட விரும்பிய வடிவத்திலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். இங்கிருந்து இளையவர்கள் கிரிக்கெட்டில் தொடர வேண்டிய தருணம் இது. 'ஓர் அற்புதமான டெஸ்ட் போட்டியில் விளையாடியதற்காக பங்களாதேஷை வாழ்த்தவேண்டும். முஷி (முஷ்பிக்குர்), ஷன்டோ ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். அதேபோன்று பெத்துமும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்' என்றார் மெத்யூஸ். தனது சொந்த கிரிக்கெட் வாழ்க்கையில் ஈட்டிய மகத்தான வெற்றிகளைப் பற்றி மெத்யூஸ் கூறுகையில், 'இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஈட்டிய வெற்றி, அவுஸ்திரேலியாவிற்கு எதிராக எமது சொந்த மண்ணில் 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் ஈட்டிய முழுமையான வெற்றி என்பன முக்கியமானவையும் மகத்தானவையுமாகும். அது முழு அணிக்கும் கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகும். எனக்கு ஒத்துழைப்பு நல்கிய சகல வீரர்களுக்கும் பயிற்றுநர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் அறிமுகமானது முதல் என்னோடு இருந்த அனைத்து இரசிகர்களுக்கும் நன்றி. மிக்க நன்றி' என்றார். இது இவ்வாறிருக்க, இப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பங்களாதேஷ் அணித் தலைவர் சதங்கள் குவித்தது விசேட அம்சமாகும். பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 296 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆட்டம் முடிவுக்குவந்த போது 4 விக்கெட்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பெத்தும் நிஸ்ஸன்க 24 ஓட்டங்களைப் பெற்றதுடன் கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் தலா 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீ;ச்சில் தய்ஜுல் இஸ்லாம் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பங்களாதேஷ் 6 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆட்டம் இழக்காமல் 125 ஓட்டங்களையும் ஷத்மான் இஸ்லாம் 76 ஓட்டங்களையும் முஷ்பிக்குர் ரஹிம் 45 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 102 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் 495 ஓட்டங்களையும் இலங்கை 485 ஓட்டங்களையும் பெற்றன. https://www.virakesari.lk/article/218092

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
பெரும்பாலான‌ ஈரான் ம‌க்க‌ள் ayatollah ali khameneiயின் ஆட்சிய‌ விரும்புகின‌ம் , இல்லையெனில் ஈரானில் எப்பவோ க‌ல‌வ‌ர‌ம் வெடித்து இருக்கும் , 36வ‌ருட‌மாய் இந்த‌ ஆட்சிக்கு கீழ் தானே வாழ்ந்த‌வை பெண்க‌ளுக்கு சிறு அட‌க்குமுறை இருக்கு அது அவ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம்........................த‌லைவ‌ர் ஈழ‌ ம‌ண்ணில் வாழ்ந்த‌ கால‌த்தில் பெண்க‌ள் இர‌வு நேர‌ம் சுத‌ந்திர‌மாய் ந‌ட‌மாட‌ முடியும் , இப்போது அந்த‌ நிலை இருக்கா , பெண் பிள்ளைக‌ளை பெத்த‌ பெற்றோர்க‌ள் ப‌ய‌ப்பிடுகின‌ம் இர‌வு நேர‌ங்க‌ளில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் வெளியில் விட‌ அப்ப‌டி ஈரானிலும் க‌லாச்சார‌ ச‌ட்ட‌ திட்ட‌ம் இருக்கு👍............................. அமெரிக்க‌ன் த‌லைகீழாக‌ நின்றாலும் ஈரானில் ஒரு போதும் ஆட்ச்சி மாற்ற‌ம் வ‌ராது...................அமெரிக்க‌ன் ஈராக்கில் செய்த‌ ச‌தி , அது ஈரானில் எடுப‌டாது.........................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
வசியவர்களே, எப்படி எண்ணெய் சட்டியிலிருந்து அடுப்பினுள் வீழ்வது போன்றா? இது இன்னும் நிலைமையை மோசமாக்குவதோடு மேலும் கொதிநிலைக்கான வழியாக மாறாதா?

ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்

1 month 1 week ago
பெத்தப்பா என்னும் தெய்வம் தி. செல்வமனோகரன் December 13, 2024 | Ezhuna அறிமுகம் மனிதர் பேரியற்கை மீது கொண்டிருந்த வியப்பு, அச்சம் மற்றும் மரணம், பிறப்புப் பற்றிய சூக்குமமறியா மனோநிலைகள், துயரம் தந்த வாழ்வு போன்றன இயற்கைக்கதீதமான ஒன்றைப் பற்றிச் சிந்திக்கவும், அதை நம்பவும் வழிபடவும் செய்தது. அச்சந்தர்ப்பத்தில் குறித்த துயரத்தில் இருந்து விடுபடல் நிகழும் போது அதனை மேலும் மேலும் வழிபடச் செய்தது. அரூப இயற்கையை – வெறுவெளியை அல்லது நிலம், நீர், காற்று, தீ என்பவற்றை வழிபடுதல் பூரண பிடிப்பைத் தராத சூழலில் கல், மரம் முதலான இயற்கைப் பொருட்களைக் குறியீடாகப் பயன்படுத்தி தெய்வத்தை உருநிலைப்படுத்தி வழிபடத் தொடங்கினர். அது ஆவி, முன்னோர், உயிரியம், மனா எனப் பன்முகத்தளத்தில் அமைந்திருந்ததை மானிடவியலாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர். பிற்காலத்தில் ஏற்பட்ட நாகரிக வளர்ச்சி பல்வேறு படித்தரங்களை மானுட வாழ்விலும் சமய வாழ்விலும் ஏற்படுத்திற்று. பல்வேறு பெருந்தெய்வங்களும் அரச, அதிகார ஆதரவுடனுமான சமயங்கள், தத்துவங்களும் உருவாக்கம் பெற்றன. ஒன்றுடன் ஒன்று மோதித் தம்மையே மெய்மை என நிரூபணம் செய்ய அரும்பாடுபட்டன. வலியது வாழ மீதி மறைந்தன. மறைந்தவற்றுள் சில மீள வலிமை பெற்று எழுந்து நின்று நிலைத்தன. பெருங்கோயில்கள், கலையடையாளங்கள் என மனித குல வரலாற்றில் அவை தனித்துவமான சமூகப் பெறுமானத்தைப் பெற்றன. ஆனால் சாதாரண சனங்களின் வாழ்வில் இயற்கையோடு இயைந்த தெய்வ வழிபாடுகளே இன்றும் நின்று நிலவுகின்றன. தங்கள் வாழ்வில் ஏற்பட்ட நல்லவைகளுக்குத் துணை நின்ற தெய்வங்களைத் தாம் கவனியாது – ஆதரியாது விடும் போது தமது வாழ்வில் பல்வேறு துன்பங்கள் ஏற்படுவதாக அவர்கள் நம்புகின்றனர். தமது குறைகளை நீக்கவும், நன்மை நடக்கவும் இத்தெய்வங்களை வழிபடுகின்றனர். இவை நிலம், தொழில், சாதி என்ற பல்வேறு அடித்தளங்களில் இருந்து உருவான தெய்வங்களாகக் காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் ஈழத்துப் புலத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இன்றும் நின்று நிலவும் கிராமியத் தெய்வங்களுள் ஒன்றாக ‘பெத்தப்பா’ காணப்படுகின்றது. “சேர் உங்களுக்குப் பெத்தப்பா வழிபாடு பற்றி ஏதும் தெரியுமா?” என்ற வினாவோடு தனது ஆய்வேடு தொடர்பாக என்னுடன் 2019 இல் உரையாட வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறையைச் சேர்ந்த செல்வி ப. கீதாஞ்சலிக்கு, “ஓம், தென்மராட்சியில் இருக்க வேண்டும்” என்று பதில் கூறினேன். “நான் கிட்டத்தான் இருக்கிறன். ஒரு கோயிலை வச்சுக் கொண்டு என்ன செய்கிறது?” என்று அவர் மீண்டும் வினாவினர். கச்சாயைப் பூர்வீகமாகக் கொண்ட, தற்பொழுது திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ் பிராந்தியத்திற்குப் பொறுப்பாக இருக்கும் திரு க. கந்தவேளுடன் அவரைத் தொடர்புபடுத்திவிட்டேன். நண்பரும் புவியியல் ஆசிரியருமான திரு மா. மோகனகிருஷ்ணன், புங்குடுதீவில் இவ்வழிபாடு இருப்பதை அறியத் தந்தார். இந்த முன்னறிவுடன் களஆய்வில் ஈடுபட்ட பின்னர் இக்கட்டுரை எழுதப்படுகிறது. பெத்தப்பா ஈழத்தின் கடலோடு ஒட்டிய வாழ்வியல் புலம் பல்வேறு வழிபாட்டு முறைகளை எமக்குத் தந்தது. பெத்தப்பா கடலை அண்மித்த யாழ்ப்பாணம், புங்குடுதீவு மற்றும் சாவகச்சேரி, கச்சாய் கடல்நீரேரியை அண்மித்த ஊர்களான பாலாவி, கெற்பேலி போன்ற இடங்களில் நின்று நிலவும் தெய்வமாகக் காணப்படுகின்றார். ‘பெத்தப்பா’ எனும் சொல் அகராதிகளில் இடம்பெறவில்லை. அது பேச்சு வழக்குச் சொல்லாகவே காணப்படுகின்றது. பெத்தப்பா என்பதை பெற்ற அப்பா என்று பொருள் கொள்ளலாம். சங்க இலக்கியத்தில் பெற்றதாய், வளர்ப்புத்தாய் என்போர் நற்றாய், செவிலித்தாய் என அழைக்கப்பட்டமை போல இது அமைகின்றதெனலாம். பெரியப்பா, சித்தப்பா – குஞ்சியப்பா எனும் வழக்காறுகள் தோன்றிய காலத்தில் பெத்தப்பா என்ற சொல் தோன்றி நிலைத்திருக்கலாம். புங்குடுதீவில், பெத்தப்பா தெய்வம் பெத்தப்பு, பெத்தப்பர் எனக்கூறி வழிபடப்படுகின்றார். தமிழில் “தாயை நல்லம்மா என்றும் பேயைப் பெத்தப்பா என்றும் பேச வேண்டிய காலம்” எனும் பழமொழி ஒன்றுண்டு. இது, பேய் – முன்னோர் வழிபாடாக பெத்தப்பா வழிபாடு உருவாகி இருக்கலாம் எனும் ஊகத்துக்கு இடமளிக்கின்றது. அதேவேளை பெத்தப்பா, பெத்தாச்சி என்பவைகளை தாத்தா, அப்பம்மாவை அல்லது பெரியப்பா, பெரியம்மாவைக் குறிப்பதாகப் பொருள் கொள்வோரும் உளர். ‘இச்சா’ நாவலில் க்ஷோபசக்தி எழுதிய “அம்பாலை மரக்காலைக்காரர் செய்த ஊழைச் சூனியம், அப்பாவை முடக்கி விசர்க் கோலமாக்கியது. பெத்தப்பா மீது யாரோ மூதேவி அழைப்பை ஏவி விட்டிருந்தனர். பெத்தப்பாவுடன் வீட்டுக்கு வந்த புலுடு என்ற பேய் பெத்தாச்சியின் தூசணத்துக்கு நாணி அகன்றது” எனும் வரிகள் இதனைச் சான்றுபடுத்துகின்றன. ‘மூனா கானா’ தினகரனில் (2013.2.10) எழுதிய ‘குஞ்சார் பெத்தப்பா கதையும் வேறு சில கதைகளும்’ இஸ்லாமிய தமிழ்ச் சமூகத்திடம் இச்சொல் இன்றுவரை பெருவழக்கில் இருப்பதை உறுதி செய்கின்றன. ஸ்ரீ பெத்தம்மா தாய் கோயில் (Sri Peddamma Thalli Temple) அல்லது பெத்தம்மா தல்லி குடி என்பது தெலுங்கானாவின் ஐதராபாத்தில் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். பெத்தா மற்றும் அம்மா என்ற இரண்டு தனித்தனி சொற்களைக் கொண்ட ‘பெத்தம்மா’ என்ற வார்த்தையின் அர்த்தம் ‘பெரிய தாய்’ என்பதாகும். ‘பெத்தம்மா’ என்பதை ‘பெரிய அம்மன்’ என்றும் பொருள் கொள்ளலாம். கிராமியத் தெய்வங்களின் 11 வடிவங்களில் ஒன்றான இது, மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. தெலுங்கானா மக்களின் காவல் தெய்வம் என்ற சிறப்பைக் கொண்டதாகத் திகழ்கிறார். 200 ஆண்டுகளுக்கு முன்பு, மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக, இந்தத் துர்க்கை அம்மன் ஆலயம் கருதப்படுகிறது. இந்தக் கோவில் தோன்றியதற்கு பல்வேறு விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மக்களுக்கும் துன்பத்தை விளைவித்து வந்த ஒரு அசுரனுடன் துர்க்கா தேவி போரிட்டாள். அந்த அசுரனை வதம் செய்தபிறகு, அந்தக் களைப்பு நீங்க ஒரு கிணற்றின் நீரை அருந்தி துர்க்கை அம்மன் தாகம் தணித்துக் கொண்டாள். அப்போது அந்த வழியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் துர்க்கை அம்மனைக் கண்டார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அன்னையின் திருவுருவம் மறைந்தது. தனக்கு தெய்வத்தின் அருட்காட்சி கிடைத்ததை நினைத்து அவர் மனம் மகிழ்ந்தார். அன்னை காட்சி தந்த அந்த இடத்திலே ஒரு சிலை இருப்பதையும் கண்டு அவ்விடத்தில் இந்த பெத்தம்மா ஆலயத்தைக் கட்டினார் என்று இதன் தல வரலாறு கூறப்படுகின்றது. இவ்வாறான தல வரலாறுகளோ கதையாடல்களோ பெத்தப்பா ஆலயங்களுக்கு இன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில் பெத்தப்பா வழிபாடு இல்லை. ஈழத்தில் பெத்தம்மா வழிபாடு இருப்பதாக அறியமுடியவில்லை. ஆயினும் தெலுங்கு தேசத்துடன் மற்றும் தமிழகத்துடனான உறவு வழியே ஆண் தெய்வ வழிபாடாக பெத்தப்பா உருவாகி இருக்க வேண்டும். ஈழத்தில் பெத்தப்பா வழிபாடு ஈழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாலாவி, கெற்பேலி முதலான ஊர்களில் பெத்தப்பா வழிபாடு காணப்படுகின்றது. பாலாவி தெற்கில் ஏழு கோயில்களையும்; பாலாவி வடக்கில் ஒரு கோயிலையும்; கெற்பேலி மேற்கில் நான்கு கோயில்களையும் எம்மால் அடையாளப்படுத்த முடிகின்றது. ஆக தென்மராட்சியில் பன்னிரண்டு கோயில்களையும் அதே போல யாழ்ப்பாணத்துத் தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் மூன்று கோயில்களையும் அறிய முடிந்தது. ஈழத்தின் வேறு பிரதேசங்களிலோ தமிழகத்திலோ இவ்வழிபாடு இருப்பதாக அறிய முடியவில்லை. புங்குடுதீவு பிரதேசத்தில் உள்ள பெத்தப்பா ஆலயங்கள் சிவாலயங்களாகவே இன்று கருதப்பட்டு வருகின்றன. ஆனால் தென்மராட்சிப் பிரதேச ஆலயங்களில் பெத்தப்பா தனித் தெய்வமாக வழிபடப்பட்டு வருகின்றார். தென்மராட்சிப் பிரதேசத்தில் இத்தெய்வத்தை வழிபடுபவர்கள் சாண்டார் இன மக்களாக – எண்ணெய்ச் செக்கு வைத்துத் தொழில் புரிபவர்களாகக் – காணப்படுகின்றனர். ஆயினும் இவர்கள் தொன்று தொட்டு விவசாயத்திலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. புங்குடுதீவில் வேளாளர், பறையர் சமூகத்தினரின் வழிபடு தெய்வமாகவே பெத்தப்பா விளங்குகின்றது. இதனை முன்னோரால் கையளிக்கப்பட்ட வழிபாடாகவும் நீண்ட பாரம்பரியமுடைய வழிபாடாகவும் இப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். பெத்தப்பா தெய்வம் குறித்த தனிக் கதையாடல்கள் எதனையும் இம்மக்களால் எடுத்துரைக்க முடியவில்லை. ‘முன்பிருந்தே வழிபடுகின்றோம், எங்கள் தாத்தா காலத்துக்கு முன்பிருந்தே வழிபடுகின்றோம்’ போன்ற வரிகளையே அவர்கள் உதிர்க்கின்றனர். அதேவேளை இத்தெய்வத்தை ஆதரிக்காது விடுமிடத்து தமக்குப் பல்வேறு குறை குற்றங்களும், துன்பங்களும், நோய் நொடிகளும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஒழுங்காக ஆதரித்துவரும் பட்சத்தில் தமக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படுவதில்லை என்றும் கூறப்படுகின்றது. பெத்தப்பா பெரும்பாலும் சிவனாகவே கருதப்படுகின்றார். ஆதலால் திரிசூல வழிபாடு அதிகம் காணப்பட்டாலும் சங்கு, விளக்கு, கல், வேல் போன்றவற்றை வைத்து வழிபடும் வழக்கமும் காணப்படுகிறது. பெரும்பாலும் பெத்தப்பா ஆலயங்கள் ஓலைக்குடிசைகளாலும் மண்ணால் கட்டப்பட்டதாகவுமே காணப்படுகின்றன. பிற்காலத்தில் கற்களால் கட்டப்பட்டன. அதிலும் சில கோயில்கள் கருவறை, முன் மண்டபம், உடையனவாகவும் தனியாட்களின் கோயில்களாகவும் காணப்படுகின்றன. இவற்றுக்குப் பரிவார மூர்த்திகள் இல்லை. ஆயினும் பிற்காலத்தில் புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த பெத்தப்பா ஆலயம் ஸ்ரீ முருக மூர்த்தி தேவஸ்தானமாக்கப்பட்டு 1982 இல் மஹா கும்பாபிக்ஷேகம் நிகழ்த்தப்பட்டு ஆகமக் கோயில் ஆக்கப்பட்டுள்ளது. தீவின் ஏனைய பெத்தப்பா ஆலயங்களும் இன்று ஆகமமயமாதலுக்கு உள்ளாகி விட்டன. தென்மராட்சிப் பிரதேசக் கோயில்கள் பல ஆகமம் சாராத கிராமிய வழிபாட்டினைக் கொண்டமைந்த மக்கள் தெய்வத்தின் ‘மெய்தீண்டி இன்புறத்தக்க’ வழிபாட்டு முறையுடனே காணப்படுகின்றன. ஆயினும் வசதி படைத்த சில ஆலய உரிமையாளர்கள் குறிப்பிட்ட சில சிறப்புத் தின வழிபாடுகளுக்கு பூசகரை அழைக்கும் வழக்கம் காணப்படுகிறது. இங்கு பெத்தப்பா மூர்க்கத் தெய்வமாக அமையவில்லை. அருட்தெய்வமாகவே மக்களால் நம்பப்படுகின்றார். இத்தெய்வ ஆதரிப்பு முறை தந்தை வழி, தாய் வழி என இரு மரபும் துய்ய நிகழ்வது குறிப்பிடத்தக்கது. பூசையும் வழிபாடும் இந்த ஆலயங்களில் தத்தம் வசதிக்கேற்ப விளக்கு வைத்தல் நடைபெறுகின்றது. வாரத்தில் ஒரு நாள், ஒவ்வொரு நாளும் வைத்தல் எனும் முறைகள் காணப்படுகின்றன. சில கோயில்களில் காலை, மாலை பூசையாக இது காணப்படுகின்றது. நாளாந்தப் பூசை முறையில், பூசாரி விளக்கு வைத்து கற்பூரம் ஏற்றுவார். வசதியான ஆலயங்களில் பால், பழம், பொங்கல் வைத்து வழிபடும் முறைமையும் காணப்படுகின்றது. இங்கு பூசாரி என்பவர் பரம்பரை பரம்பரையான உரிமையாளராகவே பெரிதும் காணப்படுகின்றார். ஏனைய கிராமியத் தெய்வங்களைப் போலவே வைகாசி மாதம் இத் தெய்வத்திற்குச் சிறப்பு வாய்ந்தது. வைகாசி விசாகப் பொங்கலை அடுத்து வரும் திதிகளில் ஆண்டுப் பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது தவிர தைப்பூசம், தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, ஆடிப்பிறப்பு, சிவராத்திரி, நவராத்திரி, திருவம்பா போன்ற தினங்களிலும் விசேட பூசை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான விசேட தினங்களில் அவிசு, பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கும் நடைமுறை எல்லா பெத்தப்பா ஆலயங்களிலும் காணப்படுகின்றது. ஆண்டுப் பொங்கலில் முதல் நிகழ்வாக அமைவது மடைப்பண்டம் எடுத்தல் ஆகும். இதில் பழங்கள், மரக்கறி வகைகள், வெற்றிலை, பாக்கு, பால், அபிஷேகத் திரவியங்கள், பட்டு, உத்தரியம், கற்பூரம், சாம்பிராணி, மஞ்சள், தேசிக்காய், சிலம்பு, கண்ணாடி, பிரம்பு போன்றவை எடுத்துச் செல்லப்படும். அத்தோடு இத்தெய்வத்திற்குப் பலியிடுவதற்காக ஆடு, கோழி என்பனவும், அவற்றை வெட்டுவதற்கான கத்தி அல்லது வாள் என்பனவும் மடைப்பண்டங்களாகக் கொண்டு செல்லப்படுகின்றன. புங்குடுதீவு பெத்தப்பா ஆலயங்களில் பலியிடல் ஆரம்ப காலம் தொட்டே நடைபெறுவதில்லை என எஸ்.கே. சண்முகலிங்கம் (முன்னாள் அதிபர்), ஆறுமுகம் யோகநாதன் (வர்த்தகர்) போன்றோர் குறிப்பிடுகின்றனர். மடைப்பண்டத்தை உரிமையாளர் வீட்டிலிருந்து அல்லது அருகில் உள்ள சந்தியில், மரத்தடியில் இருந்து எடுக்கும் வழக்கம் காணப்படுகிறது. பெரும்பாலும் பண்டத்தை நடைப்பயணமாகவே கொண்டு செல்லும் வழக்காறும் இருந்துள்ளது. இந்நடைப்பயணத்தின் போது கிராமிய வழிபாட்டின் வாத்தியங்களான பறை, உடுக்கு, மத்தளம், சங்கு, சேமக்கலம் சகிதம் ஊர்வலமாகச் செல்லுதலே வழக்கமாக உள்ளது. கொண்டு செல்லப்பட்ட மடைப்பண்டத்தில் பொங்கல் வளந்தை பூசாரி, வாத்தியங்களின் இசைகேற்ப மேலே எறிந்தெறிந்து ஏந்துவார். இது ‘தூளி பிடித்தல்’ எனப்படும். இது எல்லாத் திக்குகளையும் நோக்கி எறிந்து ஏந்தப்படும். இது பக்தியுணர்வைத் தரும் சடங்காகக் கூறப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் நடைபெறும் இப்பொங்கலுக்கு ஏனைய தெய்வங்களால் இடையூறு நிகழாமல் இருக்கும் வண்ணம் பூசாரியால் மேற்கொள்ளப்படும் சடங்கு ‘பரிகலம் அழைத்தல்’ ஆகும். மந்திர உச்சாடனத்துடன் கூடிய சடங்காக இது நிகழ்த்தப்படுகிறது. பூசாரி வளந்துப் பானை வைத்து பொங்கலிட, ஏனைய மக்களும் பொங்கலிட்டு பூசையில் மடை பரவுவர். இம்மடை பரவுதல் பெரும்பாலான கோயில்களில் உள்மடை, வெளிமடை எனப் பரவப்படுகிறது. உள்மடை பூசாரி மற்றும் கோயில் உரித்துடையவர்களாலும் வெளிமடை ஏனையவர்களாலும் வைக்கப்படும். உள்மடையில் காய்மடை, பூமடை, பழமடை என்பன அடுக்காக வைக்கப்பட்டிருக்கும். உள்மடை, பிரசாதத்துடன் கோயில் உரித்துடையவர்களுக்கு வழங்கப்படும். வெளிமடையில் பொங்கல், பலகாரங்கள், அவிசு, அன்னதானக் கறி, சோறு உள்ளிட்டவை படைக்கப்படும். இவை ஆலயத் தொண்டர்கள், அடியவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த உள்மடை, வெளிமடைச் செயற்பாட்டை வர்க்க வேறுபாடாகவே எண்ணத் தோன்றுகிறது. பூசாரி கலையாடி குறி சொல்லுகின்ற – கட்டுச் சொல்லுகின்ற நடைமுறையும் காணப்படுகிறது. அதேவேளை கோயில் உரித்தாளரும் கலையாடும் முறைமையும் சில ஆலயங்களில் காணப்படுகின்றது. குறித்த தாள கதியில் வாத்தியங்கள் இசைக்கப்பட அதற்கேற்ற கலையாடல் நிகழும். ஒருவர் மீது பல தெய்வங்கள் மாறி மாறி உருப்பெறுதலும் உண்டு. இது ‘கலை மாற்றி ஆடுதல்’ எனப்படுகிறது. கட்டுக்கேட்போருக்குக் கட்டுச்சொல்லி திருநீறு இடப்படும். கட்டுக்கேட்போர் அவர் உரைத்ததற்கு ஏற்ப பரிகாரங்களை தம் பெத்தப்பா தெய்வத்துக்குச் செய்துவரும் வழக்கமும் காணப்படுகிறது. காவடி, கற்பூரச்சட்டி, பாற்செம்பு முதலானவை எடுத்தல், விரதமிருந்து மடை பரவுதல், நேர்த்திப் பொருட்களை வாங்கி வழங்குதல் போன்றன அவற்றுட் சில. பெரும்பாலான தென்மராட்சிக் கோயில்களில் பலியிடும்முறை தொன்றுதொட்டுக் காணப்பட்டு வந்துள்ளதெனினும், இன்று அது அருகி வருகிறது. ஆடு, கோழி முதலானவற்றை வாங்கி காதறுத்து விடுதல், சிறு கீறு கீறி இரத்தம் காணல் அல்லது ஆலயத்துக்கு நேர்ந்துவிடுதல் முதலியனவே இன்று பெரிதும் காணப்படுகின்றன. இறுதியாக நடைபெறும் சடங்கு ‘வழிவெட்டுதல்’ ஆகும். பொங்கல் முடிந்தவுடன் மடைப்பண்டங்களான இளநீர், தேசிக்காய் போன்றவற்றோடு ஏனைய பொருட்களையும் எடுத்துக்கொண்டு பூசாரியும் ஆலய உரித்துடையோரும் சிறிது தூரம் சென்று அவற்றைப் படைப்பர். செல்லும் வழியில் இளநீர், தேசிக்காய் என்பவற்றை வெட்டிச் சென்று படையலிட்ட பின் தெய்வத்துக்கு நன்றி சொல்லி, ஆண்டுப் பொங்கலை நிறைவு செய்வதாகவும், அடுத்த ஆண்டுப் பொங்கல் எவ்வித தடங்கலுமின்றி நடைபெற வேண்டியும் தடை வெட்டி வருவார். தென்மராட்சிப் பாலாவி பிரதேச பெத்தப்பா கோயில் ஒன்றில் பெண் பூசாரி பூசை நிகழ்த்துவதைக் காணமுடிகிறது. பெரும்பாலும் வழக்கில் இருக்கும் கிராமியத் தெய்வக்கோயில்களில் விளக்கு வைத்தல் முதலியன பெண்களால் செய்யப்பட்டு வரும்போதும், பூசாரிகளாக ஆண்களே காணப்படும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. தனது கணவனின் பரம்பரைக் கோயிலில் பூசாரியாக இருக்கும் திருமதி அருந்தவமலர் தர்மலிங்கம், கணவன் இல்லாததால் தானே பூசை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். சில அவதானிப்புகள் பெத்தப்பா என்னும் சொல் சமயத்துக்கு அப்பாலான நாட்டார் வழக்காற்றுச் சொல்லாக விளங்குகின்றது. பெத்தப்பா சுவாமி கோவில்கள் தென்மராட்சி பாலாவி, கெற்பேலி கிராமங்களிலும் புங்குடுதீவிலும் மட்டுமே காணப்படுகின்றன. இத் தெய்வம் பற்றிய தொல் மரபுக் கதைகள் எதையும் அறிய முடியவில்லை. பெத்தப்பா எனும் இத் தெய்வம் சிவனாகவே பெரிதும் சித்தரிக்கப்படுகின்றது. ஆயினும் புங்குடுதீவின் ஊரதீவில் உள்ள பெத்தப்பா, தொன்று தொட்டு முருகனாக வழிபடப்பட்டு வருகின்றது. முருகன் – தகப்பன்சுவாமி; ஆகவே பெத்தப்பா எனும் தெய்வம் முருகனாகவே இருக்கலாம் அல்லது இது சிவ – முருக இணைவு வழிபாடாகவும் உருவாகி இருக்கலாம். தென்மராட்சியில் சாண்டார் சமூகத்தின் குலதெய்வமாக காணப்படும் இத்தெய்வம் புங்குடுதீவில் வேளாளர், பறையர் சமூகத்தினரால் வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கது. இம்மூன்று சமூகத்தினரும் நிலத்தோடும் விவசாயத்தோடும் தொடர்புபட்டவர்களாக இருப்பது கவனத்தை கோரும் விடயமாகும். புங்குடுதீவு பெத்தப்பா கோயில்கள் ஆகமமயமாதலுக்கு உள்ளாகிவிட்டன. தம் அடையாளத்தைத் துறந்து வருகின்றன. தென்மராட்சி ஆலயங்களில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பினும் அவை முழுமையான ஆகமமயமாதலுக்கு இன்னும் உள்ளாகவில்லை. பெத்தம்மா வழிபாடும் சொல் வழக்கும் தெலுங்கில் முதன்மை பெற்றவை. அதன் வழி வந்த சொல்லாக பெத்தப்பா எனும் சொல் வழக்கும் தெய்வமும் ஈழத்தவர்களிடம் செல்வாக்குப்பெற்று இருக்கலாம். முகமது ரியாஸின் ‘சிகிரி மார்க்கம்’ சிறுகதைத் தொகுப்பில் வரும் பெத்தம்மா எனும் சொல் தெலுங்கு பரப்பில் இருந்து (வணிகம் மற்றும் குடியேற்றம் என்பனவற்றின் ஊடாக) வந்தமையை உறுதி செய்கின்றது. ஆக பெத்தப்பா, பண்பாட்டு ஆய்வை கோரி நிற்கும் ஒரு வழிபாடாக – சொல்லாகத் திகழ்கின்றது. முடிவுரை தமிழகம், தெலுங்கானா போன்ற பிரதேசங்களில் பெத்தம்மா வழிபாடு காணப்பட்ட போதும் ஈழத்தில் இவ்வழிபாடு இல்லை. ஆயினும் பெத்தப்பா வழிபாடு ஈழத்திலேயே காணப்படுகின்றது. ஆண் வழிச் சமூக அமைப்பின் தொடர்ச்சியாக இவ்வழிபாடு விளங்குகிறது எனலாம். தென்மராட்சி, புங்குடுதீவுப் பிரதேசங்களில் காணப்படும் இவ்வழிபாடு சாண்டார், பறையர், வேளாளர் சமூகங்களில் குலதெய்வ வழிபாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சாதியப் போராட்டம் நிகழ்ந்த புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் சூழலில் பறையர் சமூகத்தவராலும் வேளாளராலும் குலதெய்வமாக பெத்தப்பா வழிபடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். கண்ணகி கோயில் திருவிழா பற்றிய அறிவித்தலில் பறையர் சமூகத்தை இக்கால நிர்வாகத்தினர், ‘காராம் பசு வாகனத் திருவிழா (மூன்றாம் திருவிழா) உபயகாரர்கள் பெத்தப்பா சிவாலயம்’ எனக் குறிப்பிடுதல் சாதியம் தாண்டிய குலவழிபாடாக பெத்தப்பா வழிபாடு இருத்தலை உணர்த்துகின்றது. அதற்கு தெய்வத்தின் மீது மக்கள் கொண்டிருந்த அதீத நம்பிக்கை காரணமாக இருந்திருக்கலாம். ஆயினும் இத்தெய்வம் பற்றிய கதைகள், அற்புதங்கள் பற்றிய உரையாடல்கள் பேணப்படாதது வருத்தத்துக்கும் ஆச்சரியத்துக்கும் உரியதாகும். இன்று கலையாடுதல், மடைப் பண்டம் எடுத்தல், உள்ளிட்ட பல பாரம்பரியங்கள் அருகிவருகின்றன. கற்கோயில்களாகப் பெரும்பாலான கோயில்கள் மாறி வருகின்றன. முன்மண்டபமுடையதான ஆலயங்கள் சிலவற்றில் சாதாரண தினங்களில் பூசாரியும்; விசேட தினங்களில் பிராமணர் அல்லது சைவக்குருக்களும் பூசை செய்யும் முறைமையை அவதானிக்க முடிகிறது. மேனிலையாக்கச் சிந்தனை வழி ஆகம மரபுக்கு உட்பட்டு வரும் இவ்வழிபாடு, அதன் கதைகள் போலவே சிறிது காலத்தில் காணாமல் போவதற்கும், இதனூடாக சமூக வரலாற்றின் ஒரு பகுதி இழக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. இது தமிழர் அல்லது தமிழ் பேசும் மக்களின் அடையாளச் சிதைவுக்கும் வழிவகுக்கும் எனலாம். https://www.ezhunaonline.com/goddess-bethappa/
Checked
Tue, 08/05/2025 - 15:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed