1 month ago
அண்மையில் துப்பரவு தொழிலாளர்கள் கொஞ்ச சம்பளம் கூடக் கேட்டுப் போராடினார்களே என்னாச்சு? உயிரோடு இருக்கும் போது ஒத்தை ரூபா கொடுப்பதானாலும் கணக்கு பார்க்கிறார்கள். சாராயத்தைக் குடித்தோ இப்படி ஏதாவது வழியில் இறப்பவர்களுக்கு லட்சக் கணக்கில் வாரி இறைக்கிறார்கள். இனிமேல் கூட்டங்களுக்கு போகும்போது வீட்டார் ஆள் திரும்ப வருதா? அல்லது பணம் வருதா என்று ஏங்கப் போகிறார்கள்.
1 month ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
1 month ago
கொஞ்சம் பொறுங்கோ அணிலுக்கு துணையாக நிறைய இராமார்கள் களமிறங்கி இருக்கிறார்கள். நைட்டோட நைட்டாக அணில் இராமரிடம் சரணாகதி என்று கதை வருது. இல்லை அண்ணை நீங்கள் உ.பி யும் இல்லை அணிலும் இல்லை ஆனால் சீமான் போபியாவால் பாதிக்கப்பட்டதால் இவை எல்லாவற்றிலும் இருப்பீர்கள். அதாவது கூத்தமைப்பு போபியாவால் பாதிக்கப்பட்ட என்னைப் போல் ,இப்போது அணிலுக்கு ஆதரவாக இராமர்கள் குதித்திருப்பதால் உங்களின் அடுத்த தெரிவு எது என்று பார்க்க ஆசை. மற்றைய தலைவர் , அமல் , கருணா பிள்ளையான், சாணக்கியன், அர்ஜ்ஜுனா, அனுர இதெல்லாம் நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஈழ தமிழரும் தவிலடிக்கும் விடையம் யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே . England இல இருந்திருந்தால் இலங்கை அரசியலில் ஏகபத்தினி விரதனாக இருந்திருக்கலாம். இலங்கையில் இருப்பதால் தசரதனாக தான் இருக்க முடியும்.
1 month ago
விஜைக்கு எதிராக வீரமணி, சுபவீ போராட்டம் என்ற நாதகவின் தம்பிகள் பரப்பிய செய்தி, வழமை போலவே கஞ்சா, கப்ஸா கதை என்பது நிரூபணமாகியுள்ளது. ஆளுனருக்கு எதிரான போராட்டத்தை மாற்றி அடித்துள்ளார்கள். பார்க்கவே பொய் என தெரியும் செய்தியை இணைத்தமைக்கு சிறி அண்ணா எந்த மன்னிப்பும் கேட்க மாட்டார் என்பதை நான் உத்தரவாதப்படுத்துகிறேன்😂. தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் கி.வீரமணி தலைமையில் நடந்தது.பிகு இணைப்புக்கு நன்றி
1 month ago
அண்ணன் தனியே நின்று நம்ம அணிலுக்கு டிபெண்டர் ஓடும்போதே தெரிகிறது நம்ம அண்ணன் ஒரு நடுநிலை சிகரம் என்று , கொஞ்சம் வேகத்தை குறைச்சு ஓட்டுங்க அண்ணை கொண்டை தெரிகிறது. அப்படியே விஜய் எதற்கு 7,8 மணி லேட்டாக வந்தார் என்று ஆதாரபூர்வமாக காரணம் சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம். Stampede நடக்கும் என்று காவல்துறை ஆதவ் அர்ஜுனாவிடம் தெரிவித்ததாகவும் வேண்டுமென்றே ஜனக்கூட்டத்திற்கு நடுவில் வாகனத்தை குறிப்பிட்ட இடத்திற்கு செலுத்தியதாகவும் அறிக்கை வந்துள்ளது தவறாக , பொய்யாக இருந்தால் விஐய் வழக்கு தொடர்ந்து அதனை பொய் என்று நிரூபிக்கலாம். விஜய் தலை தெறிக்க ஓடியதிலேயே பய தான் கேப்மாரி என்று தெரிகிறது. அதுவரை மக்களை கொலை செய்தது அணில் தான்
1 month ago
https://www.facebook.com/share/v/168YHEgZUF/ இத்தனை உயிரிழப்புகளின் பின்னரும் சென்னை விமான நிலையத்தில் சிரித்தபடி செல்ஃபி .....
1 month ago
இந்த பேனரும், இந்த செய்தியும் நாம் தமிழர் தம்பிகள் வீட்டில் தயாரித்த கப்ஸா என நினைக்கிறேன். திக வோ, வீரமணியோ, சுபவீ யோ இப்படி அறிக்கை விட்டதாகவோ, அல்லது பேனருடன் போராட்டம் நடத்தியதாகவோ நான் வாசிக்கவில்லை.
1 month ago
கரூர் படுகொலையை பின்புறமாக இருந்து செயல்படுத்தியவர்களின் முகம் தெரிகிறது. நன்கு திட்டமிடல் இருக்கும் போல. எல்லாத்தையும் மறச்ச நீ கொண்டைய மறைக்கலயே என்கிற கதையா சம்பவத்திற்கு பிறகு நடக்கிற ஒவ்வொரு நாடகங்களும் சந்தேகத்தை மேலும் மேலும் உறுஜிதப்படுத்துகிறது. புரிஞ்சவன் பிஸ்தா குகன் அருமைநாட்டார்
1 month ago
இதெல்லாம் 15 வருடமாக முக்கியும் டிரோனில் காட்டும் அளவுக்கு கூட்டம் வரவில்லை என்ற வெப்பு 😂
1 month ago
வேண்டுமென்றே ட்ரான் ஷாட்டில் மக்கள் கூட்டத்தை திரளாக படம் பிடித்து மாஸ்காட்ட ஆசைப்பட்டு அணில் குஞ்சுகளை கொலை செய்திருக்கிறது T VK கொலைக்கும்பல்
1 month ago
அர்ச்சுனா எம்.பிக்கு பிணை! கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது. இன்று காலை அவர் வாக்குமூலம் அளிக்க கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார். அண்மையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது வந்த நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். Athavan Newsஅர்ச்சுனா எம்.பிக்கு பிணை!கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது.
இன்று காலை அவர் வாக்குமூலம் அளிக்க கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வந்தபோது கை
1 month ago
கரூர் சம்பவத்தின் கதாநாயகன் விஜய் சார் இன்னும் பாதிக்கப்பட்டவர்களை போய் சந்திக்கவே இல்லையாம். ரொம்பத்தான் ஷாக் ஆயிட்டார் போல....
1 month ago
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது! யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1448885
1 month ago
ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே முன்னுரிமை! -ஜேர்மனி திட்டவட்டம். ஜேர்மனி அரசு 2025 செப்டம்பர் முதல் 2026 டிசம்பர் வரை 154 முக்கிய பாதுகாப்பு ஆயுத கொள்முதல்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஆயுதங்களுக்கு வெறும் 8% மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், மீதமுள்ள பெரும்பான்மையான கொள்முதல்கள் ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனி எடுத்துள்ள இந்த “யூரோப் ஃபர்ஸ்ட்” கொள்கை, ஐரோப்பிய பாதுகாப்பு தொழில் துறையை வலுப்படுத்துவதோடு, உக்ரைன்–ரஷ்யா போரை அடுத்து ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பு உற்பத்தியில் சுயாதீனமாக இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துவதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448927
1 month ago
4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள ஜேர்மன் விமான நிறுவனம்! ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa), 2030 ஆம் ஆண்டுக்குள் 4,000 வேலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனம் செலவுகளைக் குறைத்து புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்க முயற்சிப்பதன் விளைாவக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக AFP செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் தற்போது உலகளவில் சுமார் 103,000 பேரைப் பணியமர்த்துகிறது. அதன் வலையமைப்பில் யூரோவிங்ஸ், ஆஸ்திரிய ஏர்லைன்ஸ், சுவிஸ், பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் இத்தாலியின் புதிய முதன்மை விமான நிறுவனமாக அண்மையில் கையகப்படுத்திய ஐடிஏ ஏர்வேஸ் ஆகியவை அடங்கும். ஜேர்மனி இரண்டாவது வருட மந்தநிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு வேலையின்மை மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. அதே நேரத்தில் நாட்டின் பெரிய நிறுவனங்கள் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள், சீனாவின் போட்டி மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் மெதுவான முன்னேற்றத்தை சமாளிக்க போராடி வருகின்றன. லுஃப்தான்சா மட்டுமே ஜேர்மன் நிறுவனமான ஊழியர்களைக் குறைக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு, தொழில்துறை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான போஷ், உலகளவில் 13,000 வேலைகளை குறைப்பதாகக் கூறியது, இது அதன் பணியாளர்களில் 3% ஆகும். மறுசீரமைப்புடன், லுஃப்தான்சா 2028 முதல் 2030 வரையிலான ஆண்டுகளுக்கு புதிய நிதி இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 8% முதல் 10% வரை சரிசெய்யப்பட்ட இயக்க இலாபத்தை அடைவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வேகமாக மாறிவரும் விமானப் போக்குவரத்துத் துறையில் போட்டித்தன்மையுடன் இருக்கவும், ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவில் கடினமான பொருளாதார சூழலுக்குத் தயாராகவும் நிறுவனத்தின் முயற்சியை இந்த வேலை குறைப்புகள் பிரதிபலிக்கின்றன. https://athavannews.com/2025/1448910
1 month ago
கரூரில் அரசியல் பலத்தை காட்ட விஜய் தாமதமாக வந்தார்.. எப்.ஐ.ஆரில் போலீசார் பரபரப்பு தகவல் Mani Singh SUpdated: Monday, September 29, 2025, 13:20 [IST] கரூர்: அரசியல் பலத்தை காட்ட திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக விஜய் வேலுசாமிபுரம் வந்தார் என்று போலீஸ் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்களிலும், கடை கொட்டகைகளிலும் தவெக தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர். மரக்கிளை முறிந்ததால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர். ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரிடம் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை, நீண்ட நேரம் காத்திருப்பு, தண்ணீர், மருத்துவ வசதி இல்லை என எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. Also Read "அரசியல் பலத்தை காட்ட திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதம். மரங்களிலும், கடை கொட்டகைகளிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர், மரக்கிளை முறிந்ததால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர் - அசாதாரண சூழல் * ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரிடம் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை, நீண்ட நேரம் காத்திருப்பு, தண்ணீர், மருத்துவ வசதி இல்லை * கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அழுத்தத்தால் மக்கள் உடல் நிலை சோர்வு. கீழே விழுந்தவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்" என்று எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆர் அறிக்கை போலீஸ் எப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பதாவது:- கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 கரூர் அவர்களுக்கு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது. கரூர் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளராகிய நான் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ புறக்காவல் நிலைய ருந்து 21.00 மணிக்கு கிடைக்கப்பட்ட மருத்துவமனை தகவலீ, அடிப்படையில் வழதிவு செய்த விபரம் பின்வருமாறு. தமிழக வெற்றிக்கழகம் மேற்கு மாவட்ட அவர்கள் அவரது கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் கரூர் மாவட்டத்தில் செயலாளர் திரு.மதி பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு கொடுத்த விண்ணப்பத்தின் (456/Pet/1/5DOP/KRR/2025 Dt. 26.09.25) அடிப்படையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் 27.09.2025 ம் தேதி கரூர் நகர உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களின் ந.க.எண்.278/கா.து.கா/கா.உ./கரூர்/2025 நாள்.26.09.25 செயல்முறை ஆணையின்படி 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு இன்று 27.09.2025 ம் தேதி கனம் காவல் துறைத்தலைவர் மத்திய மண்டலம் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் ஊர்க்காவல்படையை சேர்ந்த சுமார் 500 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். Recommended For You எச்சரித்தும் அறிவுரை வழங்கினேன் தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியும் அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் திணறல் உயிர் சேதம் ஏற்படும் என்று தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகளிடமும் பொது செயலாளர் புஷி ஆனந்திடமும் மற்றும் இணை செயலாளர் CTR நிர்மல்குமாரிடமும் மற்றும் தவெக நிர்வாகிகள் பலரிடமும் நானும் காவல் துணைக்கண்காணிப்பாளர் பலமுறை எச்சரித்தும் அறிவுரை வழங்கினேன். நாங்கள் சொன்னதை கேளாமல் தொடர்ந்து அசாதாரண செயல்களில் மடுபட்டதால், போதிய பாதுகாப்பில் போலீசார் வழங்கியபோதும், தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களை சரிவர கையாளவில்லை. ரோட்டில் அருகிலுள்ள கடைகளுக்கு நிழல் தரவேண்டி அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளிலும் மற்றும் அருகிலிருந்த மரங்களிலும் கட்சி தொண்டர்கள் ஏறி தகர கொட்டகை உடைந்தும் மரம் முறிந்ததால் அதில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் கீழே விழுந்தனர். வேண்டும் என்றே லேட் ஆக வந்த விஜய் கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்ததால் பொதுமக்களில் பெரும்பாலோனோருக்கு மூச்சு திணரல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. தவெக கட்சியின் கரூர் ஏற்பட்டாளர்களுக்கு விஜய் அவர்களின் பொதுக்கூட்டத்திற்கு மாலை 03.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. You May Also Like குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை இருந்த போதிலும் அதிக மக்கள் கூட்டத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் அவர்கள் கரூருக்கு வருவதை நான்கு மணிநேரம் தாமதப்படுத்தியும் அந்த நீண்ட தாமரத்தின் காரணமாக இவை நேர்ந்தன.. என்று கூறபப்ட்டுள்ளது. https://tamil.oneindia.com/news/karur/vijay-came-late-to-show-off-his-political-strength-in-karur-shocking-information-in-police-fir-739261.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel
1 month ago
என்னது விஜை என் அபிமான நடிகரா…. ஆனாலும் என் மேல் இப்படி அவதூறு பரப்ப கூடாது. என் அபிமான நடிகன் என்றால் அது எப்போதும் நம்ம பரட்ட சார்தான். “ கு…கு..கூ…கூலி பவர் ஹவுசூ” இங்கே உங்களுக்கும் இன்னும் சிலருக்கும் அனைவருக்கும் எனையோரை பற்றி சில மட்டமான பார்வை இருக்கிறது. இவர் ஒரு நடிகரின் அரசியல் வரவை ஆதரிக்கிறார் ஆகவே இவர் ஒரு விசிலடிச்சான் குஞ்சு ஒரு நடிகர் எனவே அவர் மொக்கனாகதான் இருப்பார் இவை இரெண்டுமே உங்கள் போன்றோரின் மேட்டுகுடிவாதம். அரசியல் என்பது எந்த நிலையில் இருப்பவராலும் செய்ய முடியும் அவருக்கு அந்த தன்மை இருப்பின். முக முத்து அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும் என்ன முக்கியும் முடியவில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாத துறையில் இருந்து வந்த ஜெ அரசியலில் மிளிர்ந்தார். அதே போல் நல்லாட்சியை கொடுத்த ரீகனும், சுவாஸ்னேகரும் கூட நடிகர்கள்தான். என்னை பொறுத்தவரை நான் எவரையும் அவரின் தொழிலை பார்த்து எதிலும் ஒதுக்குவதில்லை. விஜை கொள்கைகள் என்ன, அவரின் அரசியல் எதை ஆதரிக்கிறது எதை எதிர்கிறது என ஆராய்ந்த போது அது எனக்கு ஏற்புடையதாக தெரிந்ததால் ஆதரித்தேன். இதையேதான் ஆரம்பத்தில் சீமான் களத்துக்கு வந்த போதும் செய்தேன். ஆதரவு அவரை இனம் கண்ட பின் எதிர்ப்பாக மாறியது. நாளைக்கு விஜை தடம்புரண்டாலும் இதுவே. எங்களுக்கு டவுட்.. இரவோடு இரவாக உடற்கூறு ஆய்வு ஏன்? அத்தனை டாக்டர் எப்படி? தவெக வழக்கறிஞர் கேள்வி Rajkumar RUpdated: Monday, September 29, 2025, 14:16 [IST] மதுரை: தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் இந்திய முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் இரவோடு இரவாக கரூர் வந்ததோடு, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் இரவோடு இரவாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த அனைவரின் உடல்களையும் ஒரே நாளில் உடற்கூராய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர் என தவெக தரப்பு வழங்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சம்பவம் உலுக்கியுள்ள நிலையில், மருத்துவமனையில் 6 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் இரவோடு இரவாக உடற்குறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக கரூர் மற்றும் அதனைச் சுற்றி இருந்த மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். Also Read இந்நிலையில், உயிரிழந்த அனைவரின் உடல்களையும் ஒரே நாளில் உடற்கூராய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர் என தவெக தரப்பு வழங்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரையில் கிளையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அவசர அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்? அதுவும் ஒரே நாளில் அனைவரையும் உடற்கூறாய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? Recommended For You குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உடற்கூறாய்வு செய்யக்கூடாது என்பது விதி, உயிரிழந்தவர்களுக்கு தகுதியான மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தார்களா? விஜய் கரூரில் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் செய்த இடத்திற்கு அதிக அளவில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. இதனால் சந்தேகம் இருக்கிறது. விஜய் பிரச்சாரம் செய்த இடத்தில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள் என்று காவல்துறையினர் சொல்வது அப்பட்டமான பொய்." என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/41-dead-in-karur-crowd-crush-at-vijay-s-campaign-tvk-lawyer-raised-questions-on-medical-procedures-739283.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
1 month ago
வெற்றி பெற வாழ்த்துகள்
1 month ago
இது ஒரு நல்ல கேள்வி கு . சா ........ நான் மச்சம் சாப்பிடுவதை விட்டு ஒரு 18/20 வருடங்கள் இருக்கும் ........பிரான்ஸ் வந்தபின்னும் சாப்பிட்டானான் ........! __ வீட்டில குழல் புட்டு அவிக்க சொல்லிவிட்டு மாதகல் போய் முரல்கருவாடு சிற்பம் வாங்கி வந்து அடுப்புத் தணலுக்குள் சுட்டு புட்டுடன் சாப்பிடுறனான் .......! __கருமேகங்கள் குவிந்து மழை பொழியும் நேரம் பொன்னாலையில் ஓரா, பண்ணைப்பாலத்தில் ஒட்டி , மற்றும் காரையூர் , சின்னக்கடை சந்தை , பாசையூர், கொழும்புத்துறை படகுகளில் வரும் மீன்கள், நாவற்குழியடியில் விசேஷமான கயல் என்று வாங்கி விழுங்கிய நாட்கள் பல ......! __ அன்று முற்றவெளி முனியப்பர் கோயிலில் இறைச்சி படையலிட்ட நாளில் இருந்து (பின்பு அது நிறுத்தியாச்சுது ) கவனாவத்தையோடு மற்றும் பல கோவில்களின் வேள்வி இறைச்சிகள் , பரந்தனில் இருந்து வவுனியா மடு ஈறாக காட்டு வேலைகள் விதம் விதமான இறைச்சி வகைகளுக்கு குறைவில்லை . .......! __ கோழி முட்டை , மீன் முட்டை என்று பலப்பல முட்டைகள் எதையுமே விட்டதில்லை ......! __ ப்ளவுஸ் ,மொக்கங் கடை என்று கொழும்பு ஈறாக எத்தனை எத்தனையோ கடை சாப்பாடுகள் ......! அப்படியெல்லாம் சாப்பிட்டதால்தானோ என்னமோ இப்போ பல வருடங்களாக முட்டை கூட தொடுவதில்லை . ......ஆனால் அந்த சுவை இன்னும் நாக்கில் ........! மலரும் நினைவுகளை மீட்ட கேள்வி தொடுத்த உங்களுக்கு நன்றி . .......! 😇
1 month ago
சீமான் விருப்பம்போல் நடக்கிறதா! பகற்கனவு!!. சீமான் விருப்பம்போல் நடைபெற்றிருந்தால் இப்போது தமிழ்நாடு தனிநாடாக மிளிர்ந்திருக்கும். உலகில் தமிழனுக்கு என்று ஒரு அரசும் பிறந்திருக்கும். திராவிடம் என்று தமிழினத்தின் காலைச் சுற்றிய பாம்பிடமிருந்து கடிபடாமல் மீண்டிருக்கும். இலங்கையிலும் அதற்கு ஒரு வாரிசு உருவாகியிருக்கும்.😌
Checked
Wed, 11/05/2025 - 11:52
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed