புதிய பதிவுகள்2

டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்!

1 month 2 weeks ago
டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்! VigneshkumarPublished: Sunday, June 15, 2025, 23:01 [IST] டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீரென சற்று நேரத்திற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் சோனியா காந்தி. 78 வயதான சோனியா காந்தி ஏற்கனவே வயது மூப்பு காரணமாக அவர் தீவிர அரசியலில் இருந்து சற்று விலகியே இருக்கிறார். இதன் காரணமாகவே கடந்த லோக்சபா தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. இப்போது ராஜ்யசபா எம்பியாகவே இருக்கிறார். இதற்கிடையே இன்று இரவு திடீரென சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தி இப்போது இரைப்பைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். சோனியா காந்தி உடல்நலம் சீராகி விரைவில் டிஸ்சார்ஸ் ஆக வேண்டும் எனக் காங்கிரஸ் தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். https://tamil.oneindia.com/news/delhi/sonia-gandhi-admitted-to-delhi-s-ganga-ram-hospital-due-to-stomach-problem-712807.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி “அன்னை சோனியா பீட்சா சாப்பிட்டார். நலமோடு உள்ளார்” என்ற அறிவிப்பு விரைவில் வெளிவருமோ?

வீதி விபத்துகளை தடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் - பிரதமர்

1 month 2 weeks ago
15 JUN, 2025 | 12:25 PM (நமது நிருபர்) உயிர்களைப் பாதுகாப்பதை தமது பொறுப்பாக கருதி வீதி விபத்துகளைத் தடுப்பதற்குப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சட்டங்களினால் மட்டுமன்றி சிறந்த தெளிவோடு அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் மற்றும் இலங்கை பொலீஸ் இணைந்து '' Tack care '' வீதியைப் பாதுகாப்போம்' என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட வீதி விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுமுன்தினம் கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இலங்கை பொலீஸ் உத்தியோகத்தர்கள் வீதி விபத்துக்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பாடசாலை மாணவர்களுக்கு நடத்தினர். இருபத்தைந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இருபத்தைந்து பாடசாலைகளுக்கு பாடசாலை வாகன ஒழுங்குபடுத்துனர்களுக்குத் தேவையான உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்வும் பிரதமரின் தலைமையில் இதன்போது நடைபெற்றது. அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தத் திட்டத்தை கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தால் மேற்கொள்ளப்படும் மற்றொரு முக்கியமான திட்டம் என்று குறிப்பிடலாம். வீதி விபத்துகள் இன்று நாட்டில் பெரும் பேரழிவாக மாறியுள்ளன. இதில் கவலைதரும் விடயம் என்னவென்றால் எமக்கு தேவையும் அர்ப்பணிப்பும் இருந்தால் இவை அனைத்தும் தடுக்கப்படக்கூடியவை என்பதாகும். வீதி விபத்துகளால் தினமும் ஏழு பேர் இறக்கின்றனர். இந்த துயரத்தை நாம் நிறுத்த வேண்டும். வீதி விபத்துகளில் இறப்பவர்கள் ஊனமுற்றவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்களே. ஒருவரின் தாய் தந்தை சகோதரன் சகோதரி அல்லது குழந்தை விபத்தில் சிக்கினால் அது அவர்கள் அனைவரையும் பாதிக்கிறது. இந்த விபத்து புள்ளிவிபரங்கள் வெறும் எண்ணிக்கைகள் அல்ல. அவை ஒரு பெரிய கதையை எமக்குச் சொல்கின்றன. வீதி விபத்துகளைத் தடுப்பது என்பது சட்டத்தை கடைப்பிடிப்பது மட்டுமல்ல மற்றவர்களைப் பற்றி சிந்திக்கும் உயிர்களைப் பாதுகாப்பதை தனது பொறுப்பாகக் கருதும் இரக்கத்துடன் செயற்படும் ஒரு சமூகத்தை உருவாக்குவதும் அவசியம். அரசாங்கம் அத்தகைய அழகான நாட்டை உருவாக்கவே முயற்சிக்கிறது. தண்டனைக்கு முன் கல்வி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன் முன்னுதாரணம். குற்றச்சாட்டுக்கு முன் கவனம் ஆகியவை அவசியம். பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். சாரதிகள் உயிர்களைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். போக்குவரத்து விதிகள் குறித்து பிள்ளைகளுக்கு தெளிவூட்டுவதைப் போன்றே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு பொலிஸார் மக்களுக்கு அதுபற்றி விளிப்புணர்வூட்ட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/217501

நாய் கடித்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்திய உரிமையாளர்!

1 month 2 weeks ago
மட்டக்களப்பு நகரில் பக்கத்து வீட்டுகாரரின் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நட்டஈட்டை நாயின் உரிமையாளர் வழங்க வேண்டும் என பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து நாயின் உரிமையாளர் அந்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை செலுத்திய விசித்திரமான சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது, ஒய்வு நிலை கல்வி ஆசிரியர் ஆலோசகர் வீட்டில் மூன்று நாய்கள் வளர்த்து வருகின்ற நிலையில், பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஓய்வு பெற்ற முன்னாள் கல்வி அதிகாரியின் உறவினர்களை நாய் அடிக்கடி கடிக்க சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் பக்கத்து வீட்டாருடன் முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவதினடான நேற்று சனிக்கிழமை (14) நாயின் உரிமையாளர் நாய்களை திறந்து விட்ட நிலையில் பக்கத்து வீடடின் பெண் ஒருவருக்கு நாய் கடித்துள்ளதை அடுத்து அவர் காயமடைந்துள்ளார். இதனை அடுத்து நாயின் உரிமையாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் கடிவாங்கிய பெண் முறைப்பாடு செய்துள்ளதை அடுத்து நாயின் உரிமையாளரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு இரு சாராரிடமும் விசாரணை மேற்கொண்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நாய் கடித்ததற்கு தடுப்பு ஊசி போடவேண்டும் என தனக்கு நட்டஈடாக 40 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என கோரினார். இந்த விசாரணையை தொடர்ந்து நாய் உரிமையாளர் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை வழங்க இணக்கப்பாட்டுக்கு வந்ததை அடுத்து குறித்த முறைப்பாட்டை பொலிஸார் முடிவுக்கு கொண்டு வந்தனர். -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmbxmbtir01voqpbsqzhlgww3

தந்தையர் தினம்

1 month 2 weeks ago
உலக தந்தையர் தினம்! ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகிலேயே முதல் முறையாக, ஜூன் 19, 1910ல், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில், தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான முயற்சிகளை எடுத்தவர், சோனாரா டாட் என்ற பெண்மணி. கடந்த, 1909ல், சர்ச் ஒன்றில், அன்னையர் தினம் பற்றி குறிப்பிட்டதை கேட்ட அவர், தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் எனக் கருதினார். அடுத்த ஆண்டே அதை நிறைவேற்றினார். பின்னர், 1966ம் ஆண்டு, தந்தையர் தினத்தை அங்கீகரித்து, ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படும் என, அறிவித்தார், அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன். அதன் பின், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, 1972ல், ஒரு சட்டத்தின் மூலம், தந்தையர் தினத்தை, தேசிய விடுமுறை தினமாக அறிவித்தார், அதிபர் நிக்சன். https://www.dinamalar.com/malarkal/vara-malar-weekly-magazine/world-fathers-day/70901

தந்தையர் தினம்

1 month 2 weeks ago
வாழ்க்கை எனும் நாடகம் நிறைவாக அரங்கேற கதாநாயகன் எனும் வேடமேற்று , மெழுகாக உருகி தன் சுகம் தேடாது குடும்பத்துக்காக வாழும் தியாகி " அப்பா " எனும் ஓர் ஜீவன். இன்றுமட்டுமல்ல தினமும் தந்தையர் தினம் தான். (மறந்தவர்களுக்குமட்டும்)இன்றைய நாள் தந்தையர் தினம் யாழ் கள தந்தையர்களுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள். .

வண்டியை இலகுவாக குறைக்கும் வழிமுறைகள் . Dr.சி.சிவன்சுதன். மருத்துவ நிபுணர்

1 month 2 weeks ago
வண்டியை இலகுவாக குறைக்கும் வழிமுறைகள் . Dr.சி.சிவன்சுதன். மருத்துவ நிபுணர் இனிப்பு வகைகளையும் சீனி சம்மந்தமான உணவுகளையும் அறவே நீக்கும்படி கூறியுள்ளீர்கள், ஆனால் நார்சத்துக்காக பழங்களை உண்ணச் சொல்லியிருக்கிறீர்கள், அந்த பழங்களில் காணப்படும் சர்க்கரையாகிய பிரக்டோசு (Fructose) கெடுதல் விளைவிக்காதா? தயவு செய்து அறியத்தரவும். பழங்களில் காணப்படும் பிரக்டோசு கெடுதல் விளைவிக்காது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

1 month 2 weeks ago
யாழ், திருமலை, கண்டிக்கு விஜயம் செய்வார் வோல்கர் ; வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்தே நிகழ்ச்சி நிரலில் யாழ். விஜயம் உள்வாங்கப்பட்டதாகத் தகவல் 15 JUN, 2025 | 10:58 AM (நா.தனுஜா) அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கொழும்பில் உயர்மட்ட சந்திப்புக்களை நடத்தவிருப்பதுடன் கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் 'பொறுப்புக்கூறல் செயற்திட்டம்' முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் ஐக்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் எதிர்வரும் 23 - 26 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவுள்ளார். ஆனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முடிவுக்குவரவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதருவது செப்டெம்பரில் அவர் வெளியிடவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப்படுத்தும் என்ற கரிசனையின் அடிப்படையில் அவரை இப்போது நாட்டுக்கு வருகைதரவேண்டாம் என வலியுறுத்தி உள்நாட்டில் இயங்கிவரும் 104 சிவில் சமூகப்பிரதிநிதிகளின் கூட்டு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் கூட்டு, தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நான்கு தரப்புக்கள் தனித்தனியாக 4 கடிதங்களை உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்திருந்தன. இருப்பினும் அவரது வருகை பெருமளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன்போது அவர் கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், தலைநகரைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகப்பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள அவர், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை இலங்கைக்கு வருகைதரும் பட்சத்தில் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்யுமாறுகோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்த போதிலும், அவரது முள்ளிவாய்க்கால் விஜயம் இன்னமும் உறுதியாகவில்லை. மேலும் ஆரம்பத்தில் 23 - 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு திட்டமிடப்பட்டிருந்த அவரது விஜயத்தில் யாழ் விஜயம் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை எனவும், பின்னர் சிவில் சமூகப்பிரதிநிதிகள் மத்தியில் வலுவடைந்த எதிர்ப்பை அடுத்தே அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதி 26 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு, அதில் யாழ் விஜயமும் உள்வாங்கப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. https://www.virakesari.lk/article/217493

ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்

1 month 2 weeks ago
நாட்டை கட்டியெழுப்புவதற்கு சகலரும் முன்வாருங்கள் - ஜேர்மனியிலுள்ள இலங்கை பிரஜைகளிடம் ஜனாதிபதி கோரிக்கை 15 JUN, 2025 | 11:02 AM வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நிலையான ஆரம்பத்தை எடுத்துள்ளது. எனவே இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கு எந்தவித பேதங்களும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சனிக்கிழமை (14) அங்கு வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு உரையாற்றினார். ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்றுமுன்தினம் ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். இதனியடைடுத்து ஜனாதிபதி பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை சந்தித்து கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டிருந்ததுடன் அவர்கள் ஜனாதிபதியை உற்சாகத்துடன் வரவேற்றனர். வெளிநாட்டலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்இ ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதன்போது அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கு எந்தவித பேதங்களும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் நமது பொருளாதாரத்திற்கு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டுவதோடு வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நமது அரசாங்கம் நிலையான ஆரம்பத்தை எடுத்துள்ளது என்றும் ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/217495

கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 month 2 weeks ago
Keezhadi Excavation - அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையில் என்ன இருந்தது? சர்ச்சைகள் தொடர்வது ஏன்? கீழடி தமிழ்நாட்டின் மதுரைக்கு அருகே அமைந்திருக்கும் ஒரு தொல்லியல் களம். 2014ஆம் ஆண்டிலிருந்து இங்கே அகழாய்வுகள் நடந்துவருகின்றன. இதில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தான் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை சில ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்திருந்தார். இதில் சில விளக்கங்களைக் கோரி அந்த ஆய்வறிக்கையை இந்தியத் தொல்லியல் துறை திருப்பி அனுப்பியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ஆய்வறிக்கையை ஏற்க அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகள் இன்னும் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கீழடியின் தொன்மை தொடர்பாக முன்வைக்கப்பட்டிருக்கும் முடிவுகள் என்ன? தற்போது அதில் என்ன சர்ச்சை? இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம். #Keezhadi #KeezhadiExcavation #AmarnathRamakrishna இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இந்திய விமானம் விபத்துக்குள்ளானது

1 month 2 weeks ago
Flight-ல் ஆபத்து காலத்தில் உதவ என்னென்ன இருக்கும்? Safety பற்றி கட்டாயம் தெரிய வேண்டிய தகவல் ஆமதாபாத் விமான விபத்துக்குப் பின், இதற்கு முன்பு நடந்துள்ள விமான விபத்துக்கள் குறித்தும், விமானங்களின் தரம் குறித்தும் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. விபத்துக்களுக்குக் காரணம் விமானங்களின் பராமரிப்பு குறைபாடா, மனிதப்பிழைகளா என்ற கேள்விகளும் எழுந்துள்ள நிலையில், விமானத்தின் முக்கிய பாகங்கள், அவற்றின் செயல்பாடுகள், பொதுவான விமானப் பராமரிப்பு முறைகள் குறித்து விமானவியல் துறை சார்ந்த நிபுணர்களிடம் பிபிசி தமிழ் கலந்துரையாடியது. #AirIndia #FlightCrash #FlightSafety இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Checked
Sat, 08/02/2025 - 11:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed