1 month 2 weeks ago
கடற்படை வசமுள்ள காணிகளை அளவிடும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன் General15 June 2025 மன்னார் - பள்ளிமுனை பகுதியில், கடற்படையினரின் வசமுள்ள காணிகளை அளவிடும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர், குறித்த காணிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் கடிதங்கள் அனுப்பியிருந்த போதிலும், தற்போது காணி அளவீடு தொடர்பான அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மக்களுக்கு இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும், அவற்றைக் கடற்படையினர் அபகரிக்கும் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரப்படுவது தொடர்பில் குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதா? இல்லையா? என்பதைக் கட்சியே தீர்மானிக்கும் எனவும், மூன்றாம் தரப்பின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்பட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். https://hirunews.lk/tm/407181/the-process-of-measuring-lands-owned-by-the-navy-should-be-abandoned-selvam-adaikalanathan
1 month 2 weeks ago
கலாநிதி கீதா கோபிநாத் இன்று இலங்கை செல்கின்றாா். adminJune 15, 2025 சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இன்று (15) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை செல்கின்றாா். அவா் தனது பயணத்தின் போது, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, கடன் மற்றும் நிர்வாகம்” என்ற தலைப்பில் 2025 ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய சீர்திருத்தத் திட்டத்தின் முதல் பாதி நிறைவடைந்துள்ள நிலையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை அடைவதில் உள்ள அனுபவங்கள், கடன் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகம் மற்றும் எதிா்கொள்ளவுள்ள சவால்கள் குறித்து கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது https://globaltamilnews.net/2025/216841/
1 month 2 weeks ago
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை adminJune 15, 2025 தென்னாபிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.3.22 கோடி பண மோசடி செய்த குற்றச்சாட்டில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான ஆசிஷ் லதா ராம்கோபின்னுக்கு, டர்பன் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது . அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அகிம்சைக்கான சர்வதேச மையம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனராகவும், செயல் இயக்குனராகவும் உள்ள 56 வயதான ஆசிஷ் லதா ராம்கோபின் தென்ஆப்பிரிக்காவில் உள்ள ‘நியூ ஆப்ரிக்கா அலையன்ஸ்’ என்ற காலணி விநியோக நிறுவனத்தின் இயக்குனர் மகாராஜ் என்பவாிடம் , தனக்கு தென்னாபிரிக்காவில் உள்ள பிரபல நெட்கேர் குழும மருத்துவமனைக்கு துணிகள் விநியோகிக்க, இந்தியாவில் இருந்து 3 கன்டெய்னர்களல் இறக்குமதி செய்துள்ளதாகவும், அதற்கு வரி செலுத்த 6 மில்லியன் ரேண்ட் (ரூ.3.22 கோடி) பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். . இதற்கு சான்றாக போலியான பற்றுச்சீட்டுக்களையும் காட்டியுள்ளார். ஆசிஷ் லதா மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி என்பதால், அவரை நம்பி மகாராஜ் 6 மில்லியன் ரேண்ட் பணம் வழங்கியுள்ளார். ஆனால் ஆசிஷ் லதா வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்த வில்லை. அவர் கொடுத்த ஆவணங்களும் போலி எனத் தெரிந்தது. இதனால் ஆசிஷ் லதா மீது மகாராஜ் மோசடி புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த டர்பன் நீதிமன்றம் ஆசிஷ் லதாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அவர் தற்போது 50,000 ரேண்ட் பிணைத் தொகை செலுத்தி பிணையில் வெளிவந்துள்ளார். மகாத்மா காந்தியின் வாரிசுகள் பலர் மனித உரிமை ஆர்வலர்களாக பணியாற்றுகின்றனர். அவர்களில் ஆசிஷ் லதா ராம்கோபின்னும் ஒருவர். தென்னாபிரிக்காவில் பிரபலமான இவரது தாயான எலா காந்தியின் பணிகளை பாராட்டி இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அரசுகள் அவருக்கு விருதுகள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/216844/
1 month 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா பெண் : தமிழுக்கு மறுப் பெயர் அமுதா அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா ஆண் : நூறு கோடி பாடல் நெஞ்சில் ஊறுகின்ற வேளையிது பெண் : ஏடு போன்ற கன்னம் கண்டு இதழ்களாலே எழுதுவது ஆண் : அந்தி பொழுதில் தொடங்கும் பெண் : அன்பு கவிதை அரங்கம் ஆண் : இளமைக்கு பொருள் சொல்ல வரவா பெண் : அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா ஆண் : நாடி நரம்பில் கோடி மின்னல் ஓடி பாய்ந்து மறைவதென்ன பெண் : கூந்தல் தொடங்கி பாதம் வரையில் கைகள் கொண்டு அளப்பதென்ன ஆண் : அது முதல் முதல் பாடம் பெண் : அடுத்தது என்ன நேரும் ஆண் : எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும் பெண் : அதில் இருவருக்கும் சரி பங்கு இருக்கும் ஆண் : ஆலிலை மேலே கண்ணனை போலே நூலிடை மேலே ஆடிடவோ பெண் : ஆடும் பொது கூடும் சுகத்தை வார்த்தை கொண்டு கூரிடவோ ஆண் : பெண்மை மலர்ந்தே வழங்கும் பெண் : தன்னை மறந்தே மயங்கும் ஆண் : விடிந்த பின் தெளிவது தெளியும் பெண் : அது தெளிந்த பின் நடந்தது புரியும் ........ ! --- அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா ---
1 month 2 weeks ago
அழகுக்கு மறுபெயர் பெண்ணா ......... ! 😍
1 month 2 weeks ago
வானத்தில் விமானங்கள் பறந்து செல்வதை வேடிக்கை பார்த்த கண்கள் இப்போது பயத்தடன் பார்க்கின்றன.🫣
1 month 2 weeks ago
கொலிஜ் கொலிஜ் இந்து கொலிஜ் ............. வாட் ஈஸ் த கலர் , ப்ளூ & வைட் ....... ! 😂
1 month 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 15 JUN, 2025 | 10:30 AM இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை 5:20 மணியளவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ஸ்ரீ கேதார்நாத் தாம் நகரிலிருந்து குப்தகாஷிக்குச் சென்று கொண்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்றே, கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக தெளிவற்ற நிலையில் கௌரிகுண்ட் காட்டு பகுதியில் விழுந்து விபத்து நிகழ்ந்ததாக உத்தரகாண்ட் மாநில அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217490
1 month 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 14 JUN, 2025 | 07:58 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன. இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும். மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வை வழங்காமல், மக்களின் அடிப்படை உரிமையையும் மனித உரிமையையும் அரசாங்கம் மீறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சுமத்தியுள்ளார். மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன. இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும். இலவச சுகாதாரம் என்பது மக்களின் மனித உரிமையாகும். இலவச சுகாதார கட்டமைப்பினுள் வினைதிறனான சேவைகளைப் பெறுவது நாட்டு மக்களுக்கு அடிப்படை உரிமையாக அமைந்து காணப்பட்டாலும், இத்தருணத்தில் நமது நாட்டின் சுகாதார கட்டமைப்பில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதே இதற்குக் காரணமாகும். புற்றுநோய் நோயாளிகள், இதய நோயாளிகள், உயர் இரத்த அழுத்த நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் மருந்துகளுக்கும், வலி நிவாரணிகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கும் கடுமையான தட்டுபாடு நிலவுகின்றன. கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் 180 க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு இவ்வாறு தட்டுப்பாடு நிலவுகிறது. மருத்துவமனை கட்டமைப்பில் நிலவும் மருந்து தட்டுபாட்டுப் பிரச்சினைய பாராளுமன்றத்தில் நான் முன்வைத்தேன். இலவச சுகாதாரப் பராமரிப்பின் கீழ் அரச மருத்துவமனைகளுக்குச் சென்றாலும் நோயாளர்களுக்கு மருந்துகள் கிடைப்பதில்லை. தனியார் மருத்துவ நிறுவனங்கள் மூலம் அதிக விலைக்கு மருந்துகளைப் பெற வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனை இலவச சுகாதார சேவையாக கருத முடியாது. மாறாக கட்டணம் செலுத்தும் சுகாதார சேவையாகவே காணப்படுகின்றன. நமது நாட்டின் நலன்புரி பொருளாதாரம் மற்றும் நலன்புரி அரசில் இலவச சுகாதார சேவைகளை திறம்பட செயல்படுத்த அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஒட்டுமொத்த அரசாங்கமும் முழு மூச்சோடு பாடுபட வேண்டும். மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வை வழங்காமல், மக்களின் இந்த அடிப்படை உரிமையையும் மனித உரிமையையும் அரசாங்கம் மீறி வருகின்றது. அரசாங்கம் எந்த தீர்வையும் வழங்காத ஒரு கொள்கையையே பின்பற்றி வருகிறது. இது குறித்து பாராளுமன்றத்தில் வினவப்பட்டாலும், அரசாங்க தரப்பில் இருந்து இதற்கு எந்த தீர்வுகளும் வழங்கப்படவில்லை. மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள இந்நேரத்தில், நாட்டு மக்களை உயிருடன் வைத்திருக்கத் தேவையான மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். பல ஆண்டுகளாக நடைமுறையில் காணப்படும் விலைமனு செயல்முறையை மட்டும் சுட்டிக்காட்டாமல், இந்த மருந்துப் பிரச்சினைக்கு அவசரத் தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். மக்களின் உயிர்வாழ்வை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாக அமைந்து காணப்படுவதனால், மனித உயிர்களைக் கருத்தில் கொண்டு இந்த கடுமையான பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு வலியுறுத்துகின்றோம். https://www.virakesari.lk/article/217453
1 month 2 weeks ago
டெஹ்ரானை மீண்டும் தாக்கிய இஸ்ரேல், அலையலையாக ஏவுகணைகளை வீசும் இரான் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் - இரான் ஆகிய இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலைத் தொடர்வதால் மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவும் போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையகம், எண்ணெய் சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. அதே நேரத்தில், இரான் ஒரே இரவில் அலையலையாக இரு முறை ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் இரு நாடுகளிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. டெஹ்ரானில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் டெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கை இஸ்ரேல் தாக்கியதாக இரானிய எண்ணெய் அமைச்சகமும் கூறுகிறது. இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கை இஸ்ரேல் தாக்கியதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. அதில் எரிபொருள் அதிகமாக இல்லை என்றும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். டெஹ்ரானில் மக்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகில் ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கு அமைந்துள்ளதால், அது அதிக ஆபத்து நிறைந்தது என்று டெஹ்ரானின் தீயணைப்புத் துறை முன்பு எச்சரித்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இரானின் அணுசக்தி உள்கட்டமைப்பை தாக்கினோம் - இஸ்ரேல் ராணுவம் இரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய டெஹ்ரானில் உள்ள உள்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. இரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகமும் தங்களது இலக்குகளில் அடங்கும் என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது இரான் சரமாரி ஏவுகணை வீச்சு இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அந்நாட்டின் மீது சரமாரியாக ஏவுகணைகளை இரான் ஏவியது. ஒரே இரவில் இரண்டு முறை அலையலையாக இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல் அவிவ் நகருக்கு தெற்கே உள்ள பாட் யாமில் ஒரு கட்டடம் இரான் தாக்குதலுக்கு இலக்கானது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று இஸ்ரேலிய அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES டெல் அவிவ் அருகே நடந்த மற்றொரு தாக்குதலில் 60 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அவசர சேவையான மேகன் டேவிட் அடோம் (MDA) தெரிவித்துள்ளது. அதே பகுதியில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர், அதே போல் யூடியன் அடிவாரத்தில் நடந்த தாக்குதலில் 24 பேர் காயமடைந்துள்ளனர் என்று MDA இன் செய்தித் தொடர்பாளர் கூறினார். இஸ்ரேலின் வடக்கே ஹைஃபா அருகே ஒரு குடியிருப்பு பகுதியை ஏவுகணைகள் தாக்கியதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாக பல இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கைகளை இந்த நேரத்தில் பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை. இஸ்ரேலுக்கு இரான் எச்சரிக்கை இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. "இஸ்ரேலில் போர் விமான எரிபொருள் மற்றும் எரிசக்தி விநியோக மையங்களை குறிவைத்து தாக்கியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் இரானின் தாக்குதல் "மேலும் தீவிரமடையும்" என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1j5j07l8deo
1 month 2 weeks ago
14 JUN, 2025 | 07:20 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி தனது ஜேர்மன் விஜயத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் நெடியவன் என்பவரை சந்திக்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருப்பதாக நான் தெரிவித்திருந்தேன். அதனை அடிப்படையாக்க கொண்டு நான் இனவாதத்தை தூண்டுவதாகக் குறிப்பிட்டு என்னை கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. சிறையிலடைப்பதாகக் கூறியோ சுட்டுக் கொல்வோம் எனக் கூறியோ என்னை அச்சுறுத்தி என் குரலை ஒடுக்க முடியாது என முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார். சனிக்கிழமை (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜே.வி.பி.யின் செயற்பாட்டாளர்களே என்னை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தின் பல்வேறு தவறுகளை நான் ஆதாரத்துடன் நாட்டுக்கு வெளிப்படுத்துவதால் தான் என்னை கைது செய்வதற்கு தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நான் இனவாதத்தைத் தூண்ட முயற்சித்ததாகக் குறிப்பிட்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சட்டத்தின் கீழ் என்னை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் நீண்ட காலம் பிணை இன்றி என்னை விளக்கமறியலில் வைக்க முடியும் என்பதே அரசாங்கத்தின் திட்டமிடலாகும். அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவே எனக்கெதிராக இரு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் என்னிடம் வாக்குமூலம் பெற்று அதன் பின்னர் கைது செய்வதே இதன் நோக்கமாகும். ஆனால் அரசாங்கத்தின் திட்டத்துக்கமைய என்னை கைது செய்ய முடியாது. காரணம் என் மீது அவ்வாறு எந்தக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. நான் எந்த வகையில் இனவாதத்தை தூண்டியிருக்கின்றேன் என்பதை இவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாக நான் கூறியதாகத் தெரிவித்தனர். ஆனால் இது தொடர்பில் சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்சீவவினால் தான் முதன் முதலில் சந்தேகம் வெளியிடப்பட்டது. ஜனாதிபதி தனது ஜேர்மன் விஜயத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் நெடியவன் என்பவரை சந்திக்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருப்பதாக நான் தெரிவித்திருந்தேன். இதனை அடிப்படையாகக் கொண்டும் என்னை கைது செய்ய முடியுமா என்று கலந்தாலோசித்து வருகின்றனர். என்னை எவ்வாறு கைது செய்வது என்பது குறித்து சிந்திப்பதை விடுத்து, வெளியாகியுள்ள இந்த செய்திகள் குறித்து உண்மையை வெளிப்படு;த்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம். எவ்வாறிருப்பினும் அரசாங்கம் திட்டமிடுவதைப் போன்று என்னை ஒருபோதும் கைது செய்ய முடியாது. நான் ஒரு சட்டத்தரணி என்பதால் மிகுந்த அவதானத்துடன் சொற்களை அல்லது வசனங்களைப் பிரயோகிப்பேன். பிள்ளையானைப் போன்று என்னையும் சட்டத்துக்கு விரோதமாக கைது செய்து, மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துவதை தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கக் கூடும். உதய கம்மன்பிலவை சிறையிலடைப்பதாவோ சுட்டுக் கொல்வதாகவோ கூறி மிரட்ட முடியாது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தெளிவாகக் கூறிக் கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/217474
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
பட மூலாதாரம்,WARREN FAMILY COLLECTION படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு விமான விபத்தில் ஹூபர்ட் வாரன் (இடது) இறந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரெபேக்கா சீல்ஸ் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 1934ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மிஸ் ஹோபார்ட் என்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. அதில் பயணித்த 8 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என அனைவரும் உயிரிழந்தனர். டாஸ்மேனியாவிற்கும் ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதிக்கும் இடையில் அமைந்துள்ள பாஸ் நீரிணை பகுதியில் அந்த விமானம் விழுந்ததாக நம்பப்படுகிறது. விமானத்தின் சிதைவுகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த விமானத்தில் இருந்தவர்களில் ஒருவர் 33 வயதான ஆங்கிலிகன் மிஷனரி ரெவரெண்ட் ஹூபர்ட் வாரன். அவர் சிட்னியின் என்ஃபீல்டில் உள்ள தனது புதிய திருச்சபைக்குச் சென்று கொண்டிருந்தார். அவரது மனைவி எல்லி மற்றும் 4 குழந்தைகள் அவருடன் பயணிக்கவில்லை. தனது எட்டு வயது மகன் டேவிட்டிற்கு, ஹூபர்ட் கடைசியாக ஒரு பரிசு அளித்திருந்தார். அது ஒரு கிரிஸ்டல் வானொலிப் பெட்டி, அதை அந்தச் சிறுவன் மிகவும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருந்தார். டாஸ்மேனியாவில் உள்ள லான்செஸ்டன் ஆண்கள் பள்ளியில் தங்கியிருந்த டேவிட் வாரன், வகுப்புகளுக்குப் பிறகு அந்த வானொலியை ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். வானொலி மூலம் கிரிக்கெட் போட்டிகளைக் கேட்க நண்பர்களிடம் ஒரு பைசா என கட்டணம் வசூலித்தார். சில வருடங்களுக்குள் தான் சொந்தமாக தயாரித்த சிறு வானொலிகளை ஒவ்வொன்றும் ஐந்து ஷில்லிங் என்ற விலையில் விற்றார். டேவிட் ஒரு துடிப்பான இளைஞனாகவும் அற்புதமான பேச்சாளராகவும் இருந்தார். ஆழ்ந்த மதப்பற்று கொண்ட அவரது குடும்பத்தினர், அவர் ஒரு சுவிசேஷப் பிரசாரகர் ஆக வேண்டும் என்று கனவு கண்டனர். ஆனால் அது நடக்கவில்லை. தந்தை ரெவ் ஹூபர்ட் அளித்த அந்தப் பரிசு, டேவிட்டிற்கு அறிவியல் மீது பெரும் காதல் ஏற்பட வழிவகுத்தது. வருங்காலத்தில் பல உயிர்களைக் காப்பாற்றுவதில் அந்தக் காதல் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது. ஏஆர்எல் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணி பட மூலாதாரம்,WARREN FAMILY COLLECTION படக்குறிப்பு, டேவிட் பள்ளி மாணவனாக இருந்தபோது, மின்னணு சாதனங்களால் ஈர்க்கப்பட்டு, சொந்தமாக வானொலி பெட்டிகளை உருவாக்கக் கற்றுக்கொண்டார். டேவிட் வாரன் தனது இருபதுகளின் நடுப்பகுதியில், சிட்னி பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு, மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் கல்வியில் டிப்ளமோ மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் வேதியியலில் முனைவர் பட்டம் ஆகிய படிப்புகளை முடித்தார். அவரது நிபுணத்துவம் ராக்கெட் அறிவியல். எனவே அவர் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் துறையின் ஒரு அங்கமான விமான ஆராய்ச்சி ஆய்வகங்களில் (ARL- ஏஆர்எல்) ஆராய்ச்சியாளராகப் பணியாற்றச் சென்றார். அத்துறை விமானங்களில் கவனம் செலுத்தியது. ஏஆர்எல் துறை 1953ஆம் ஆண்டில், ஒரு முக்கியமான மர்மத்தைத் தீர்க்க முயற்சிக்கும் ஒரு நிபுணர் குழுவிடம் டேவிட்டை அனுப்பிவைத்தது. உலகின் முதல் வணிக ஜெட் விமானமும் புதிய ஜெட் யுகத்தின் பெரும் நம்பிக்கையுமான, பிரிட்டிஷ் டி ஹாவிலேண்ட் காமெட் (de Havilland Comet) விமானம் ஏன் தொடர்ந்து விபத்துகளை சந்தித்தது? என்பதே அந்த மர்மம். அதற்கு காரணம் எரிபொருள் டேங்காக இருக்கலாம் என்று டேவிட் நினைத்தார். ஆனால் பல்வேறு சாத்தியமான காரணங்கள் இருந்தன. இருப்பினும், மனித உடல்கள் மற்றும் விமான பாகங்கள் தவிர ஆதாரம் என வேறு எதுவும் இந்த விபத்துகளில் இருந்து கிடைக்கவில்லை. "விமானியின் தவறுகளா, ஊழியர்களுக்கான பயிற்சி போதவில்லையா, விமானத்தின் வால் பகுதி உடைந்ததா என எனக்குத் தெரியாத பிற விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்," என்று டாக்டர் டேவிட் வாரன் 50 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை நினைவு கூர்ந்தார். "ஒரு வாரத்திற்கு முன்பாக தான், இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய முதல் வர்த்தக கண்காட்சி சிட்னியில் நடைபெற்றது. அதில் நான் பார்த்த ஒரு பொருளைப் பற்றி அந்த கூட்டத்தில் யோசித்துக் கொண்டிருந்தேன். அதுதான் - முதல் பாக்கெட் ரெக்கார்டர் (Pocket recorder) என்று கூறப்படும் மினிஃபோன். ஒரு ஜெர்மன் சாதனம். அதற்கு முன்பு அது போன்ற ஒரு சாதனம் இருந்ததில்லை." பட மூலாதாரம்,DEFENCE SCIENCE AND TECHNOLOGY, AUSTRALIA படக்குறிப்பு, 1958 ஆம் ஆண்டு ஏஆர்எல் அமைப்பில் டேவிட் வணிகர்களுக்கான ஒரு 'டிக்டேஷன்' இயந்திரமாக மினிஃபோன் சந்தைப்படுத்தப்பட்டது. இந்த இயந்திரம் மூலம் ஒருவர் தனது பேச்சை அல்லது தகவலை எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவு செய்யலாம், பின்னர் அவர்களின் உதவியாளர்களால் அது தட்டச்சு செய்யப்படும். ஸ்விங் இசை ரசிகரான டேவிட், ஜாஸ் இசைக்கலைஞர் வூடி ஹெர்மனின் இசையைப் பதிவு செய்ய ஒரு மினிஃபோன் கிடைத்தால் போதுமென விரும்பினார். இருப்பினும், அவரது சக விஞ்ஞானிகளில் ஒருவர், கடைசியாக விபத்துக்குள்ளான காமெட் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறிய போது, அவருக்கு ஒரு யோசனை எழுந்தது. ஒரு ரெக்கார்டர் விமானத்தில் இருந்து, அது தீ விபத்தில் இருந்து தப்பித்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஆனால் வானத்தில் பறக்கும் ஒவ்வொரு விமானத்தின் காக்பிட்டிலும் ஒரு மினி ரெக்கார்டர் இருந்தால்? அது சாத்தியம் என்றால், விபத்து குறித்து புலனாய்வு செய்பவர்கள் மீண்டும் ஒருபோதும் இவ்வளவு குழப்பமடைய மாட்டார்கள். ஏனென்றால் விபத்து நடந்த தருணம் வரை பதிவான அவர்களிடம் ஆடியோ இருக்கும். குறைந்தபட்சம், விமானிகள் என்ன சொன்னார்கள், என்ன கேட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த யோசனை அவரை மிகவும் கவர்ந்தது. ஏஆர்எல்-க்கு திரும்பியதும், அதைப் பற்றி தனது மேலதிகாரியிடம் சொல்ல விரைந்தார். ஆனால், மேலதிகாரி அவரது உற்சாகத்தைப் புரிந்து கொள்ளவில்லை. "இது வேதியியலோ அல்லது எரிபொருட்களோ சம்பந்தப்பட்டதல்ல. நீங்கள் ஒரு வேதியியலாளர். எனவே இந்தப் பிரச்னையை கருவிகள் குழு கையாளட்டும்" என்று தன்னிடம் கூறப்பட்டதாக டாக்டர் டேவிட் வாரன் சொல்கிறார். 'இதை வெளியே பேசினால், வேலை பறிக்கப்படும்' பட மூலாதாரம்,WARREN FAMILY COLLECTION படக்குறிப்பு, டேவிட், அவரது மனைவி ரூத் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகள் (1958) காக்பிட் ரெக்கார்டர் குறித்த தனது யோசனை சிறப்பானது தான் என்று டேவிட் அறிந்திருந்தார். ஆனால் அதிகாரப்பூர்வ ஆதரவு இல்லாமல், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த யோசனையை மனதில் இருந்து அகற்றவும் முடியவில்லை. அவரது மேலதிகாரி பதவி உயர்வு பெற்று சென்றபிறகு, டேவிட் மீண்டும் தனது யோசனையை முன்வைத்தார். அவரது புதிய மேலதிகாரியும், ஏஆர்எல்-இன் தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் லாரி கூம்ப்ஸும் இதில் ஆர்வம் காட்டினர். அவர்கள் அவரை அதில் தொடர்ந்து பணியாற்றுமாறு வற்புறுத்தினர் - ஆனால் ரகசியமாக. இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முயற்சியோ அல்லது போரில் வெற்றிபெற உதவக்கூடிய ஒரு ஆயுதமோ இல்லை என்பதால், அதற்கென ஆய்வக நேரத்தையோ பணத்தையோ ஒதுக்க முடியாது. "இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் யாரிடமாவது பேசுவதைக் கண்டால், நான் உங்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டியிருக்கும்" என்று தலைமை கண்காணிப்பாளர் தன்னை எச்சரித்ததாக டாக்டர் டேவிட் வாரன் கூறினார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு இளைஞனுக்கு அது சற்று கவலைக்குரியதாகவே இருந்தது. ஆனால் அவரது மேலதிகாரியின் ஆதரவுடன், புதிய டிக்டேஷன் ரெக்கார்டர்களில் ஒன்றை மறைமுகமாக வாங்கி, அதை 'ஆய்வகத்திற்குத் தேவையான ஒரு கருவி' என்ற பட்டியலில் சேர்த்தார் டேவிட். அதன் பிறகு உற்சாகமடைந்த டாக்டர் டேவிட் வாரன், "விமான விபத்துகள் பற்றிய விசாரணைக்கு உதவும் ஒரு சாதனம்" என்ற தலைப்பிட்ட ஒரு அறிக்கையில் தனது யோசனையை எழுதி, அதைத் துறை முழுவதும் அனுப்பினார். விமானிகள் சங்கம் அதற்கு கோபத்துடன் பதிலளித்தது, அந்த ரெக்கார்டரை ஒரு உளவு பார்க்கும் சாதனம் என்று முத்திரை குத்தியது. "இந்த உளவு சாதனம் பொருத்திக் கொண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து எந்த விமானமும் புறப்படாது" என்றும் வலியுறுத்தியது. ஆஸ்திரேலிய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் இந்த சாதனத்திற்கு 'உடனடி முக்கியத்துவம் இல்லை' என்று அறிவித்தனர். இத்தகைய யோசனை 'விளக்கங்களை விட அதிக அவதூறுகளுக்கே வழிவகுக்கும்' என்று விமானப்படை அஞ்சியது. அனைத்து முயற்சிகளையும் நிறுத்தி விடலாமா என்ற எண்ணம் டாக்டர் வாரனுக்கு எழுந்தது. டேவிட்டின் பிடிவாத குணம் பட மூலாதாரம்,AFP/GETTYIMAGES படக்குறிப்பு, கருப்புப் பெட்டி என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் அது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இருப்பினும், டாக்டர் டேவிட் வாரனின் மூத்த மகனான பீட்டரின் கூற்றுப்படி, "டேவிட் பிடிவாத குணம் கொண்டவர். அவரின் சுதந்திர மனப்பான்மை, அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் ஆதிக்கம் செலுத்தியது". அந்த குணம் தான் டேவிட் வாரனை தொடர்ந்து முயற்சி செய்ய வைத்தது. தனது கேரேஜுக்கு சென்ற டேவிட், தனது 20 வருட பழைய வானொலி பாகங்களை ஒன்று சேர்த்தார். தன் மீதான விமர்சனங்கள், கேலிகள் மற்றும் சந்தேகத்தைப் போக்க ஒரே வழி, ஒரு வலிமையான முன்மாதிரி சாதனத்தை உருவாக்குவதுதான் என்று அவர் முடிவு செய்தார். அதுதான் உலகின் முதல் விமான ரெக்கார்டர் அல்லது கருப்புப் பெட்டி. ஒரு சிறிய விமான ரெக்கார்டர் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட பிறகு, 1958ஆம் ஆண்டில், ஒருநாள் ஏஆர்எல் ஆய்வகத்திற்கு எதிர்பாராத ஒரு விருந்தினர் வந்தார். தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் கூம்பஸ், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நண்பருக்கு ஆய்வகத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தார். "டேவிட், நீ என்ன செய்கிறாய் என்பதை என் நண்பரிடம் சொல்" என கூம்பஸ் கூறினார். அதைத் தொடர்ந்து டாக்டர் டேவிட் வாரன் விளக்கினார். தான் உருவாக்கிய உலகின் முதல் முன்மாதிரி விமான ரெக்கார்டர் கொண்டு, நான்கு மணிநேர விமானிகளின் உரையாடல்கள் மற்றும் கருவிகளின் தரவுகளை சேமிக்க முடியும் என்றும், அதற்கு எஃகு கம்பியைப் பயன்படுத்துவதாகவும் டேவிட் கூறினார். இது பழைய பதிவுகளை தானாகவே அழித்துவிடும் என்பதால், இந்த ரெக்கார்டர் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியதாக இருந்தது என்பதையும் அவர் விளக்கினார். அந்த நண்பருக்கோ பெரும் ஆச்சரியம். "கூம்ப்ஸ் இதுவோரு நல்ல யோசனை. இந்த பையனை அடுத்த கூரியரில் லண்டனுக்கு அனுப்பு. இதை லண்டனில் உள்ளவர்களுக்கு காண்பிப்போம்." என்றார் அவர். இங்கு அவர் குறிப்பிட்ட கூரியர் என்பது, பிரிட்டனுக்கு வழக்கமாக பறந்துகொண்டிருந்த 'ஹேஸ்டிங்ஸ் போக்குவரத்து விமானம்'. ஆனால் அதில் ஒரு டிக்கெட்டை பெற வேண்டும் என்றால், மிகவும் சக்தி வாய்ந்த ஒருவரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட விமானத்தின் டிக்கெட்டுகளை தன் இஷ்டத்திற்கு வழங்கும் இந்த மனிதர் யார் என்று டாக்டர் வாரன் யோசித்தார். அதற்கு பதில், ராபர்ட் ஹார்டிங்ஹாம் (பின்னர் சர் ராபர்ட்), பிரிட்டிஷ் விமானப் பதிவு வாரியத்தின் செயலாளர் மற்றும் பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸின் முன்னாள் ஏர் வைஸ்-மார்ஷல். பிரிட்டனுக்கு ரகசிய பயணம் பட மூலாதாரம்,FAIRFAX MEDIA VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு மினிஃபோனுடன் டேவிட் வாரன் (2002) டேவிட்டின் வார்த்தைகளில், "ராபர்ட் ஒரு ஹீரோ. அவர் கூம்ப்ஸின் நண்பர். அவர் ஒரு இடத்தைக் கொடுத்தால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்கள்." சில வாரங்களுக்குப் பிறகு, டாக்டர் வாரன், பிரிட்டன் செல்லும் விமானத்தில் ஏறினார். ஆனால், அவர் உண்மையில் என்ன செய்யப்போகிறார் என்பதை ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறையிடம் சொல்லக் கூடாது என்ற கடுமையான உத்தரவுகளுடன் அவர் பயணித்தார். நம்பமுடியாத ஒரு முரண்பாடாக, அந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் பயணத்தபோது அதன் ஒரு இயந்திரம் செயலிழந்தது. டாக்டர் வாரன் நினைவு கூர்ந்தார்: "விமானத்தில் இருந்தவர்களிடம் 'அன்பர்களே, நாம் ஒரு இயந்திரத்தை இழந்துவிட்டோம் - யாராவது திரும்பிச் செல்ல விரும்புகிறீர்களா?' எனக் கேட்டேன். ஆனால் துனீசியாவில் சுமார் 45 டிகிரி வெப்பநிலை நிலவியது என்பதால், அந்த நரகத்திற்குத் நாங்கள் திரும்பிச் செல்ல விரும்பவில்லை." தொடர்ந்து விமானத்தை இலக்கை நோக்கி இயக்கினால் தப்பித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். தடுமாறிக் கொண்டிருந்த அந்த விமானத்தில் தான் இறந்தாலும் பரவாயில்லை, ஆனால் தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக மீதமுள்ள விமானப் பயணத்தை ரெக்கார்டரில் பதிவு செய்தார் டேவிட். "ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு எதுவும் நடக்கவில்லை. நாங்கள் பாதுகாப்பாக தரையிறங்கிவிட்டோம்." என்றார் டேவிட். பிரிட்டனில், 'ஏஆர்எல் விமான நினைவக அமைப்பு' என்ற பெயரில் ராயல் ஏரோநாட்டிக்கல் எஸ்டாப்ளிஷ்மென்ட் மற்றும் சில வணிக கருவிகள் தயாரிப்பாளர்களுக்கு தனது கண்டுபிடிப்பை முன்வைத்தார். பிரிட்டிஷ்காரர்கள் இதை விரும்பினர். பிபிசி இதை ஆய்வு செய்யும் வகையில் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை நடத்தியது. பிரிட்டிஷ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் சிவில் விமானங்களில் இந்த சாதனத்தை கட்டாயமாக்கும் பணியைத் தொடங்கியது. மிடில்செக்ஸ் நிறுவனமான 'எஸ் டேவல் அண்ட் சன்ஸ்', உற்பத்தி உரிமைகள் குறித்து ஏஆர்எல் அமைப்பை அணுகி, உற்பத்தியைத் தொடங்கியது. இந்தக் கருவி 'கருப்புப் பெட்டி' என்று அழைக்கப்பட்டாலும், விபத்துக்குப் பிறகு அவற்றைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவை ஆரஞ்சு நிறத்தில் உருவாக்கப்பட்டன. இன்றும் அவை அப்படியே இருக்கின்றன. 'கருப்புப் பெட்டி' பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, டேவிட் வாரனின் இறுதிச் சடங்கு 1958ஆம் ஆண்டு தனது தந்தை டேவிட் வாரன் பிபிசிக்கு அளித்த பேட்டியிலிருந்து 'கருப்புப் பெட்டி' என்ற இந்தப் பெயர் தோன்றியதாக பீட்டர் வாரன் நம்புகிறார். "ஒரு பத்திரிகையாளர் இதை 'கருப்புப் பெட்டி' என்று குறிப்பிட்டார். இது மின்னணு பொறியியலில் இருந்து வந்த ஒரு பொதுவான சொல், அந்தப் பெயர் அப்படியே ஒட்டிக்கொண்டது." ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 1960 ஆம் ஆண்டு ஏற்பட்ட விவரிக்க முடியாத ஒரு விமான விபத்தில் 29 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, விமான காக்பிட் குரல் பதிவுகளை கட்டாயமாக்கிய முதல் நாடாக ஆஸ்திரேலியா ஆனது. நீதித்துறை விசாரணையின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வந்தது. அது சட்டமாக மாற மேலும் மூன்று ஆண்டுகள் ஆயின. இன்று, கருப்புப் பெட்டிகள் நெருப்பு மற்றும் கடல் நீரால் பாதிக்கப்படாத வகையில், எஃகு கவசத்தால் மூடப்பட்டு உருவாக்கப்படுகின்றன. அவை ஒவ்வொரு வணிக விமானத்திலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. விபத்தைச் சந்தித்த விமானங்களின் இறுதித் தருணங்களில் இருந்து கிடைத்த தரவுகள் மூலம் பல குறைபாடுகள் அம்பலப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய கண்டுபிடிப்புகள் வந்தன. இந்த கருப்புப் பேட்டி மூலம் எத்தனை பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்பதைச் சொல்ல முடியாது. 'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி' பட மூலாதாரம்,FAIRFAX MEDIA VIA GETTY IMAGES டேவிட் வாரன் 1983இல் ஓய்வு பெறும் வரை ஏஆர்எல் அமைப்பில் பணியாற்றினார், அதன் முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானியானார். அவர் ஜூலை 19, 2010 அன்று தனது 85 வயதில் இறந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கருப்புப் பெட்டி தொடர்பான அவரது முன்னோடிப் பணி கிட்டத்தட்ட அங்கீகரிக்கப்படாமல் போனது. இறுதியாக 1999ஆம் ஆண்டில், அவருக்கு 'ஆஸ்திரேலிய எரிசக்தி நிறுவன பதக்கம்' வழங்கப்பட்டது, பின்னர் 2002 ஆம் ஆண்டில் விமானத் துறைக்கு அவர் செய்த சேவைக்காக 'ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா' (AO) அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் அங்கீகரிக்கப்படுவதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்தது என்று கேட்டபோது, அவரது மகள் ஜென்னி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "மந்தநிலைதான் அவரது எதிரி. அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட விஞ்ஞானி, நுட்பமாக ஆய்வு செய்யும் மனதைக் கொண்டவர், விஷயங்கள் எப்படி வெளிப்படும் என்பதை அவரால் முன்னரே கற்பனை செய்ய முடிந்தது." "அவர் 1958ஆம் ஆண்டிலேயே, 'இந்த சாதனம் இதைச் சாத்தியமாக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தார்." ஆனால், "நல்ல கண்டுபிடிப்புகள் எல்லாம் பிரிட்டன், ஜெர்மனி அல்லது அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் கண்டுபிடிக்கப்படும், வேறு இடங்களில் இருந்து வராது என்ற 1950களின் காலனித்துவ மனநிலை தான் அதற்கு காரணம்" என பீட்டர் வாரன் குற்றம் சாட்டுகிறார். ஏஆர்எல்-இன் பணியைச் சுற்றியுள்ள வரலாற்று ரகசியம், இப்போது பரவலாகப் புரிந்து கொள்ளப்படுகிறது, இது மற்றொரு சாத்தியமான காரணியாகும். 2008ஆம் ஆண்டு, குவான்டஸ் நிறுவனம் ஒரு ஏர்பஸ் A380 விமானத்திற்கு டாக்டர் டேவிட் வாரன் பெயரைச் சூட்டியது. ஆனால் 'கருப்புப் பெட்டி' தொடர்பான ராயல்டியாக ஒரு ரூபாய் கூட டாக்டர் டேவிட் வாரனுக்கு கிடைக்கவில்லை. இது குறித்து எப்போதாவது டேவிட் வாரன் வருத்தப்பட்டது உண்டா என்ற கேள்விக்கு பதிலளித்த பீட்டர், "ஆம், நான் செய்த வேலைக்கான பலன்கள் அரசுக்கு கிடைத்தது. அதே நேரம், தோல்வியில் முடிந்த எனது பல முயற்சிகளுக்கு அவர்கள் என்னிடம் பணம் கேட்கவில்லை அல்லவா?" என டேவிட் வாரன் கூறியதாகச் சொல்கிறார். விமானத்தில் பயணிக்கும் போது உங்கள் தந்தையைப் பற்றி எப்போதாவது நினைத்து பார்ப்பது உண்டா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜென்னி மற்றும் பீட்டர், "ஒவ்வொரு முறையும்" என்றார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c201xd2573no
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் மூவர் பலி 15 JUN, 2025 | 09:07 AM இஸ்ரேலிய தலைநகர் டெல்அவியின் தென்பகுதியில் உள்ள பட்யாம் கட்டிடத்தின் மீது ஈரான்மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/217479
1 month 2 weeks ago
முதலிடம் பெற்ற கிருபன் அண்ணைக்கும் இரண்டாம் இடம்பெற்ற ஈழப்பிரியன் அண்ணைக்கும் மூன்றாமிடம் பெற்ற வாதவூரானுக்கும் போட்டியில் கலந்து கொண்ட 17 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள். போட்டியை சுருக்கமான கேள்விகளுடன் சிறப்பாக நடத்தி முடித்த @goshan_cheஅண்ணைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
1 month 2 weeks ago
தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது? - நிலாந்தன் புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்கும் விடயத்தில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே நிகழும் போட்டா போட்டிகளும் உள்ளூராட்சி சபைகளை ஒரு கட்சி கைப்பற்றிய பின் கட்சிகளின் விசுவாசிகள் சமூக வலைத்தளங்களில் மோதிக் கொள்ளும் காட்சிகளும் ஒரு விடயத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. நடப்பது கட்சிகளுக்கு இடையிலான போட்டிதான். அதாவது தேர்தல்மைய அரசியல் தான். இதில் தேசத்தைத் திரட்டும் அரசியல் அல்லது தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் எங்கே இருக்கிறது? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை ஒப்பீட்டளவில் அதைச் செய்யலாம். அதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், அது ஒப்பீட்டளவில் இறந்த காலத்தில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் விளைவு என்று தோன்றுவது. இரண்டாவதாக,அது ஒப்பீட்டளவில் தமிழ்த் தேசிய அரசியலில் இப்போதைக்கு ஏதோ ஒரு வகையான பண்புருமாற்றத்தைப் பிரதிபலிக்கின்றது. மூன்றாவதாக அது ஒப்பீட்டளவில் உள்ளவற்றில் பெரிய கூட்டாகக் காணப்படுகின்றது. பைபிளில் ஒரு வசனம் உண்டு,“பூமியிலே சூரியனுக்கு கீழே நூதனமானது எதுவுமே இல்லை”. இப்பொழுது உருவாக்கப்பட்டுவரும் புதிய பிரதேச சபைகளுக்கும் அது பொருந்தும். தமிழ்த் தேசியப் பேரவைக்கும் அது பொருந்தும். தமிழ்த் தேசியப் பேரவைக்குள் இருக்கும் கட்சிகளுக்குள் டெலோ மற்றும் சந்திரகுமாரின் கட்சிகளைத்தவிர ஏனைய கட்சிகள் தமிழ் மக்கள் பேரவைக்குள் இருந்தவைதான். அதாவது கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவைக்குள் ஒன்றாக இருந்தவை. அப்பொழுது தயாரித்த யாப்பு முன்மொழிவைத்தான் இப்பொழுது இறுதித் தீர்வுக்கான முன்மொழிவாக அவர்கள் வைக்கிறார்கள். அப்பொழுது இரண்டாவது எழுக தமிழில் சிறீதரனும் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார். தமிழ்மக்கள் பேரவைக்குள் காணப்பட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், விக்னேஸ்வரனின் கட்சி ஆகிய இரண்டும் இப்போதுள்ள கூட்டுக்குள் இல்லை. புதிதாக சந்திரகுமாரும் டெலோவும். அப்படித்தான் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளரை முன் நிறுத்திய தரப்புகளில் பெரும்பாலானவை இப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து புதிய கூட்டுக்குள் காணப்படுகின்றன. அதாவது கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன்பு தமிழ்ப் பொது வேட்பாளருக்காக ஒன்றுதிரண்ட அதே தரப்புகள் இப்பொழுது சமத்துவக் கட்சி, சைக்கிள் கூட்டு என்பவற்றோடு இணைந்து ஒரு புதிய கூட்டாக மேலெழுந்திருக்கின்றன. பத்து மாதங்களுக்கு முன்பு கஜேந்திரக்குமார் பொது வேட்பாளரை எதிர்த்தவர். அந்த விடயத்தில் அவரும் சுமந்திரனும் ஒரே கோட்டில் நின்றார்கள். இருவேறு நிலைப்பாடுகளோடு அவர்கள் பொது வேட்பாளரை எதிர்த்தார்கள். தேர்தலுக்குப் பின் கஜேந்திரக்குமார் பொது வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகளைத் தேசியப் பண்புமிக்கவை என்று சொன்னார். இப்பொழுது அதே கட்சிகளோடு கூட்டு. ஆனால் மூன்று வித்தியாசங்கள். தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு இல்லை. விக்னேஸ்வரனின் கட்சி இல்லை. சந்திரகுமாரின் கட்சி உள்ளே வந்திருக்கிறது. அப்பொழுது சிறீதரன் பொது வேட்ப்பாளரோடு துணிந்து நின்றார். எனவே இப்பொழுது தொகுத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ் மக்கள் பேரவையைப் பாதுகாக்க வேண்டும் என்ற முடிவெடுத்து கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன் பொறுமையாகவும் தீர்க்கதரிசனமாகவும் செயற்பட்டு இருந்திருந்தால் இன்றைக்கு தமிழ்த் தேசிய அரசியலின் நிலைமை எங்கேயோ போயிருக்கும். அப்படித்தான் ஆகக்குறைந்தது கடந்த ஆண்டு பொது வேட்பாளரின் விடையத்திலாவது முன்னணி தீர்க்கதரிசனமாக முடிவெடுத்து இருந்திருந்தால் இன்றைக்கு முன்னணிதான் சிலசமயம் தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைச் சக்தியாக மேல் எழுந்திருந்திருக்கும். ஆனால் கடந்த சுமார் 10ஆண்டுகளில் அவர்கள் தீர்க்கதரிசனமற்ற முடிவுகளை எடுத்தார்கள். பகைவர்களைச் சம்பாதித்தார்கள். குறிப்பாக தமிழ்மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு ஆகிய நூதனமான கட்டமைப்புகளை பலப்படுத்தத் தவறினார்கள். தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பொதுக கட்டமைப்பு ஆகியவை இந்தப் பிராந்தியத்திலேயே நூதனமான அரசியல் தோற்றப்பாடுகள். கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய ஒரு கலவை. அப்படி ஒரு கலவைதான் இப்பொழுது நாட்டை ஆளும் தேசிய மக்கள் சக்தியும். தமிழ்மக்கள் பேரவை படிப்படியாக பலமிழந்து போன ஒரு காலகட்டத்தில், 2019இல் தெற்கில் தேசிய மக்கள் சக்தி உருவாகியது. இன்றைக்கு அது ஆளுங்கட்சியாக எழுச்சி பெற்றுவிட்டது. அதற்கு முன் தோன்றிய தமிழ் மக்கள் பேரவையும் இப்பொழுது இல்லை. அதற்குப்பின் தோன்றிய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பும் இப்பொழுது இல்லை. 10ஆண்டுகளில் தமிழ்மக்கள் இரண்டு தடவைகள் மேலெழ முயன்றார்கள் என்று பொருள். எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த ஒரு தசாப்த காலத்தில் விட்ட தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் புதிய கூட்டைப் பாதுகாக்குமாக இருந்தால் தமிழ்த் தேசிய அரசியலில் அடுத்த கட்டத்திற்கு தலைமை தாங்கும் சக்தியாக அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள முடியும். கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது சொந்தக் கட்சிக்காரர்களாலே நிராகரிக்கப்பட்டவரும், அதே ஆண்டின் இறுதியில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவருமாகிய சுமந்திரன் இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சி ஒன்றின் தீர்மானிக்கும் சக்திபோலச் செயற்படுகிறார். கட்சிக்குக் கிடைத்த வெற்றிக்கூடாக அவர் தன்னை ஸ்தாபித்துக் கொள்ளப் பார்க்கிறார். தமிழ் மக்கள் மத்தியில் வடக்கு கிழக்கு தழுவிய ஒரே கட்சியாக அது காணப்படுகின்றது. அதனால்தான் அது ஏனைய கட்சிகளை விடவும் பலமாக மேலெழ முடிந்தது. ஆனால் முன்னணி யாழ்ப்பாணத்துக்கு வெளியில் போதிய அளவுக்கு வேலை செய்யவில்லை என்பதுதான் உண்மை. கடந்த 15 ஆண்டுகளிலும் அவர்கள் ஒரு கட்சியாகவும் தங்களை வளர்த்துக்கொள்ளத் தவறிவிட்டார்கள்; தங்கள் கொள்கைகளை மக்கள் மயப்படுத்தி தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டவும் தவறிவிட்டார்கள். அதன் விளைவாக தமிழரசுக் கட்சியின் முதன்மையைக் கேள்விக்கு உள்ளாக்க அவர்களால் முடியவில்லை. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் வழங்கிய ஆணை என்பது மிகத்தெளிவானது. ஒன்றுபட்டால் மட்டும்தான் என்பிபியை எதிர்கொள்ளலாம் என்பதே அந்த ஆணை. வவுனியா உள்ளூராட்சி சபையில் அதுதான் நிலைமை. ஒன்றுபடவில்லையென்றால் என்பிபி அடுத்த மாகாண சபைக்குள் மேலும் பலமாக கால்களை ஊன்றப் பார்க்கும். ஆனால் கடந்த சில வாரங்களாக புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்கும் விடயத்திலும், சபைகளைக் கைப்பற்றிய பின்னரும் தமிழ்த்சிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், வாதப் பிரதிவாதங்கள், மோதல்கள், குறிப்பாக அவர்களுடைய விசுவாசிகள் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கும் வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றைத் தொகுத்துப்பார்த்தால் தெரிவது என்னவென்றால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் வழங்கிய ஆணையை மேற்படி கட்சிகள் சரியாகக் கிரகித்துக் கொள்ளவில்லை என்பதுதான். இந்த ஆணை புதியது அல்ல. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் ஏறக்குறைய தமிழ் மக்கள் வழங்கிய ஆணை அத்தகையதுதான். தேசமாகத் திரளவில்லை என்றால் என்பிபியின் வழிகளை இலகுவாக்குவீர்கள் என்பதே. எனவே பொது எதிரிக்கு எதிராகத் தேசமாகத் திரள்வது எப்படி என்பதுதான் இங்குள்ள சவால். சுமந்திரன் அதற்குத் தயாரில்லை என்பதற்காக, சிவிகே அந்த விடயத்தில் தளம்புகிறார் என்பதற்காக, தமிழரசுக் கட்சிக்குள் உள்ள எல்லாரையுமே அவ்வாறு தேசத் திரட்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்த முடியாது; குத்தவுங்கூடாது. ஏனென்றால் தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது தெளிவாக இரண்டு அணிகள் உண்டு. அதில் சிறீதரன் அணியானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் பரிவோடு காணப்படுகிறது. எழுக தமிழ்கள்,பொது வேட்பாளர் ஆகிய இரண்டு தீர்மானகரமான தருணங்களிலும் சிறீதரன் மிகத்தெளிவான நிலைப்பாட்டை எடுத்தார். சந்திரக்குமாரை புதிய கூட்டுக்குள் உள்ளீர்த்ததன்மூலம் சிறீதரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவில் சில நெருடல்கள் ஏற்படலாம். ஆனாலும் சுமந்திரனுக்கு எதிரான அணிச் சேர்க்கை என்று பார்க்கும் பொழுது சிறீதரன் அணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குக் கிட்டவாகத்தான் நிற்கும். அதற்காக அரசியலை சுமந்திரனுக்கு எதிராக குவிமையப்படுத்தத் தேவையில்லை. மாறாக,தேசத்தைத் திரட்டுவது என்ற அடிப்படையில் கிராமங்களில் இருந்து தமிழ்த் தேசியப் பேரவையை எப்படிக் கட்டியெழுப்புவது என்று சிந்திக்கலாம். ஏறக்குறைய ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவைக்குள் இருந்த பொழுது இதே கட்சிகள்தான் எழுக தமிழ்களைச் செய்தன. மக்கள் எழுச்சிகள்தான் அரசியலில் புதிய ரத்தச் சுற்றோட்டங்களை ஏற்படுத்தும்.அவ்வாறான மக்கள் எழுச்சிகளுக்குரிய உணர்ச்சிகரமான தொடக்கப் புள்ளிகள் ஏற்கனவே உண்டு. உதாரணமாக தையிட்டி.அடுத்தது, கிழக்கில் மேய்ச்சல் தரை.மன்னாரில் கனியவள மண் அகழ்வு.இவை தவிர அண்மைக் காலமாக கிண்டப்பட்டு வரும் செம்மணிப் புதைகுழி. செம்மணிப் புதைக்குழு ஓர் உணர்ச்சிகரமான விடயம்.அது தமிழ் மக்களை வீதிக்குக் கொண்டுவரும்.அங்கே இதுவரையிலுமான 19 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அது ஒரு சுடலை.அரியாலை மக்களுக்கான சித்துப்பாத்தி மயானம்.அங்கே யாரையும் புதைப்பதில்லை.அங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் ஆடைகளோடு இல்லை.பொதுவாக பூத உடல்களை நிர்வாணமாக எரிப்பதும் இல்லை;புதைப்பதும் இல்லை.அந்தப் பகுதியில் சுமார் 600க்கும் குறையாதவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கத் தேவையான தகவல்களை சம்பந்தப்பட்ட படைத்தரப்பினரே நீதிமன்றங்களில் வாக்குமூலங்களாக வழங்கியிருக்கிறார்கள். இப்பொழுது அப்புதை குழி கிண்டப்படுகிறது. அங்கே புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றவர்களின் உறவினர்கள் அப்புதை குழிக்குள் தங்களுடைய உறவுகளின் ஏதாவது ஒரு தடையம் அல்லது மிச்சம் இருக்குமா என்ற தவிப்போடு அங்கே வந்திருக்க வேண்டும். உக்காத ஒரு சேலைத் துண்டு அல்லது ஒரு செருப்பு அல்லது பிளாஸ்டிக் காப்பு போன்ற ஏதாவது ஒரு தடயம் அங்கே கிடைக்குமா என்ற பதட்டங் கலந்த தவிப்போடு அப்பகுதிக்கு இதுவரை எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்? இந்த இடத்தில் தென்னிலங்கையில் 2012இல் மாத்தளைப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பொழுது,அப்பொழுது உயிரோடு இருந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஆகிய சுனிலா அபயசேகர தெரிவித்த ஒரு கருத்தை இங்கு சுட்டிக்காட்டலாம்.மாத்தளை ஆஸ்பத்திரி வளாகத்தில் 150க்கும் குறையாத எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.அதுதொடர்பாக சுனிலா,”சண்டே டைம்ஸ்” பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்காணலில் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டியிருந்தார்.“இதுவே லத்தீன் அமெரிக்க நாடாக இருந்தால் அங்கே இப்படி ஒரு புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டால்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அந்த இடத்தை நோக்கிக் குவிந்திருப்பார்கள்.ஆனால் இலங்கையிலோ நிலைமை அவ்வாறில்லை. யாரும் அந்த இடத்திற்கு வரவில்லை” என்ற பொருள்பட சுனிலா கவலையோடு கருத்துத் தெரிவித்திருந்தார். மாத்தளையில் மட்டுமல்ல செம்மணியிலும் நிலைமை அதுதானா? இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் செம்மணிப் புதை குழியைப் பார்வையிட வருகிறார்.செம்மணிப் புதைகுழி போல ஏற்கனவே மன்னார் புதைக்குழி,கொக்குத்தொடுவாய் புதைக்குழி என்று பல புதைக்குழிகள் உண்டு.எனவே புதைக்குழிகள் தொடர்பான சுதந்திரமான விசாரணையைக் கேட்டு தமிழ் மக்களை வீதியில் இறக்கலாம்.கடந்த ஐந்தாம் திகதி யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் அதுதொடர்பான ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை செம்மணியில் ஒழுங்குபடுத்தியிருந்தார்கள். உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான போட்டா போட்டிகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு புதைக்குழிகளின் மீது கட்சிகள் கவனத்தைத் திருப்புமா?குறிப்பாக தமிழ்த் தேசிய பேரவைக்குள் உள்ள கட்சிகளுக்கு ஏற்கனவே “எழுக தமிழ்” செய்த அனுபவம் உண்டு.மக்களை எழுச்சிபெறச் செய்வதென்றால் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் எதையாவது காட்டவேண்டும்.அல்லது உணர்ச்சிக் கொதிப்பான ஏதாவது ஒன்று நடக்கவேண்டும்.தமிழ்த் தேசிய அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த தரப்புகள் ஒன்றாகத் திரளும்பொழுது அது மக்கள் மனதில் புதிய நம்பிக்கைகளை உருவாக்கும். கடந்த பௌர்ணமி நாளன்று தையிட்டியில் வழமையைவிடக் கூடுதலானவர்கள் திரண்டார்கள்.அது ஐக்கியத்தின் பலம். அதுபோலவே செம்மணிப் புதைகுழிக்கு நீதி கேட்டு மக்களை வீதிக்கு கொண்டு வரலாம்.தனது கட்சிக்காரருக்கு எதிராகவும் ஏனைய கட்சிகளுக்கு எதிராகவும் வழக்குப்போடும் அரசியல்வாதிகள் இந்தவிடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்குப்போடலாம். அவர்கள் அதைச் செய்வார்களோ இல்லையோ தமிழ்த் தேசிய பேரவையைப் பொறுத்தவரை அது ஒரு தேர்தல் மையக் கூட்டு அல்ல மக்கள்மைய அரசியலுக்கான ஒரு தொடக்கமே என்பதனை நிரூபிப்பதற்கான பொருத்தமான களம் அது. https://www.nillanthan.com/7457/
1 month 2 weeks ago
இலங்கையில் தமிழருக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து நடந்தன, நடக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். பல தமிழத்தலைவர்களுடன் உடன்படிக்கைகள் கைச்சசாத்திடப்பட்டன அவைகள் நிறைவேற்றப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டன, கிழித்தெறியப்பட்டன, வன்முறைகள் மூலம் அடக்கப்பட்டன. இதற்கு ஒவ்வொரு இனவாதியும் பிக்குகளும் விடுக்கும் அச்சுறுத்தல்கள், நினைவூட்டல்கள், முந்தைய வரலாறுகள் சாட்சி. அப்படியிருக்கும்போது போரின்போது மஹிந்த அரசாங்கம் சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குமூலம், புலிகளை அழித்த பின்பே தமிழர்க்கு தீர்வு என நிபந்தனை வைத்தார். அப்போ, தமிழருக்கு அரசியல் பிரச்சனை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். அது ஏன், அளிக்கப்போகும் தீர்வை புலிகள் இருக்கும்போது அளித்திருக்கக்கூடாது? புலிகளும் அந்த தீர்வுக்காகவே போராடினர். ம்.... அத்தனை வருடங்களாக உடன்படிக்கை செய்து, தமிழ்த்தலைமைகளின் ஆதரவை பெறுவதும், பின் கிழித்தெறிவதும் கலவரங்களால் அடக்குவதும் வரலாறு. அதனால் இந்தப்போக்கு தொடர்வதையே சிங்களம் விரும்பியது. அதற்குமேல் தமிழ் தலைவர்கள் செல்ல முயலவில்லை, விரும்பவில்லை. இதனால் எதை காட்டி நம்மை அச்சுறுத்தினார்களோ அதை தமிழ் இளைஞர்கள் கையில் எடுத்து, திருப்பி அச்சுறுத்த தொடங்கினார்கள். ஆயுதத்தின் வலிமை சிங்களத்திற்கு தெரியும், அதன் அழிவை தமிழர் சந்தித்தனர், அந்த அழிவை சிங்களம் ஏற்று தோற்றுப்போக விரும்பவில்லை. அடிபணிந்து தீர்வை கொடுத்து முதுகு வளைந்து உழைக்க விரும்பவில்லை. அது, தன் போன்ற கருத்துள்ள, சுய கௌரவத்தை விற்ற தமிழரையே தனது ஆயுதமாக பயன்படுத்தி, அவர்களின் விடுதலைப்போரை பயங்கரமாக்கியது. எமது தமிழ் தலைமைகள் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த அன்றும் தவறிவிட்டனர். ஏனெனில் புலிகள் பக்கம் அதிகாரம் போவதை அவர்களும் விரும்பவில்லை. அதனால் நாட்டை விட்டு ஓடி மறைந்தார்கள். மக்களோடு நிற்க, அவர்களை தேற்ற, அவர்களுக்காக பேச யாரும் முன்வரவில்லை, காணாமல் போய் விட்டனர். மக்கள், அவர்களை தம் தலைவர்களாக தெரிந்தெடுத்ததன் பயன் அது. அப்போது எந்த நாட்டிலிருந்து யாராவது பேச்சுவார்த்தைக்கு வரும்போதெல்லாம், தங்களுக்காக பேசும் மீட்பர்களாக மக்கள் நம்பினார்கள். அங்கே தங்களுக்காக அவர்களுடன் பேச யாரும் முன்வரவில்லை. ஏதேதோ காரணங்களை சொல்லி புலிகளை, மக்களை கொன்று குவித்தார்கள். நிறைவில் கோத்தா சொன்னா(ன்)ர் புலிகளை அழித்து வெற்றி கொண்டு விட்டோம், ஆதலால் தமிழருக்கு இனி தீர்வு என்கிற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் இங்கு வாழ விரும்பினால் வாழலாம், ஆனால் அரசியல் உரிமை எதுவும் கேட்க முடியாது. சரத் பொன்சேகா கூறினார், தமிழர் வந்தேறு குடிகள் என்றார். அதன் பொருள் என்ன? இவர்களுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தது தமிழர், போத்துக்கேயர் ஆட்சிக்கு முன் தமது இராசதானி வைத்து ஆண்டனர் தமிழர், வந்தேறு குடிகளுடனா துட்ட கைமுனு போரிட்டான்? ஏன் இன்னும் நமது தலைமைகள் அடித்து பிடித்து தலைமைக்கு போராடுகிறார்கள்? பழைய ஏமாற்று வித்தைக்கு துணை போவதற்கே. சர்வதேசம் நமக்கு விடிவை தருவதென்றால் எப்போதோ தந்திருக்க முடியும். நமது தலைமைகள் இன்னும் சிங்களத்தை காட்டிக்கொடுக்க, மக்களை காப்பாற்ற விரும்பவில்லை. அதையே சம்பந்தரும் செய்து காட்டினார். இன்று தலைமை என்று சொல்ல யாரும் இல்லாமல் விட்டுச்சென்ற சம்பந்தரை, சர்வதேச ராஜ தந்திரி என்று சொல்வோர், அவரால் நுழைக்கப்பட்டவர்கள் கட்சியை அழிக்க. இதுதான் சம்பந்தர் தனது அரசியலில் சாதித்தது! மக்களை ஏன் என்று கேட்க யாருமில்லாமல் தெருக்களில் தம் உறைவுகளை தேடி கண்ணீரோடு அலைகின்ற்னர். அவர்களைசந்திக்க, அவர்களது துயரங்களை, இழப்புகளை கேட்க, ஆறுதல் சொல்ல, தேற்ற, விடை கொடுக்க விரும்பாத தலைவர்கள் வாக்குகளுக்காக பதவிகளுக்காகஅடிபடுகின்றனர்.
1 month 2 weeks ago
நெடியவனை சந்திக்கச்சென்ற அனுராவுக்கு ஜேர்மனிய அரசாங்க வரவேற்பு என்றால்; நெடியவனின் அந்தஸ்து விளங்கவேண்டும் கம்மன்பிலவுக்கு. அதோடு விஜித ஹேரத்தின் ஆலோசனையில் இந்தச் சந்திப்பு நடந்ததாம். எப்போதுமே புலிகள் நினைப்பு. இவர்களே முன்னாள் புலிகளை அரசியலில் இணைக்க அனுராவை வற்புறுத்துகிறார்கள் போலிருக்கிறது. ஏன் இந்த அச்சம்? அவர்களின் அரசியல் வாழ்வு நிறைவடைந்துவிடுமென அஞ்சுகிறார்கள். தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை விரைவில் தூசு தட்டி விசாரணைக்கு எடுக்க வற்புறுத்துகிறர்கள். அவரை நான் நெடியவன் என்றெல்லோ நினைத்தேன். ஒருவேளை நெடியவனின் பேச்சாளர் சிறியராக இருக்குமோ? அப்படியானால் பேச்சு சீரியஸாக இருக்குமென எதிர்பார்க்கலாம்!
1 month 2 weeks ago
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (13) ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்துள்ளார். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டதுடன், அவர்கள் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பை அளித்தனர். இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கு எந்தவித பேதங்களும் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், நமது பொருளாதாரத்திற்கு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டுவதோடு, வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை, மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எமது அரசாங்கம் நிலையான ஆரம்பத்தை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmbvzln7i01ulqpbs04jir2ic
Checked
Sat, 08/02/2025 - 11:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed