புதிய பதிவுகள்2

பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்; காணாமல்போனோரின் உறவுகளின் சங்கம்

1 month 2 weeks ago
இலங்கையில் தமிழருக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து நடந்தன, நடக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். பல தமிழத்தலைவர்களுடன் உடன்படிக்கைகள் கைச்சசாத்திடப்பட்டன அவைகள் நிறைவேற்றப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டன, கிழித்தெறியப்பட்டன, வன்முறைகள் மூலம் அடக்கப்பட்டன. இதற்கு ஒவ்வொரு இனவாதியும் பிக்குகளும் விடுக்கும் அச்சுறுத்தல்கள், நினைவூட்டல்கள், முந்தைய வரலாறுகள் சாட்சி. அப்படியிருக்கும்போது போரின்போது மஹிந்த அரசாங்கம் சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குமூலம், புலிகளை அழித்த பின்பே தமிழர்க்கு தீர்வு என நிபந்தனை வைத்தார். அப்போ, தமிழருக்கு அரசியல் பிரச்சனை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். அது ஏன், அளிக்கப்போகும் தீர்வை புலிகள் இருக்கும்போது அளித்திருக்கக்கூடாது? புலிகளும் அந்த தீர்வுக்காகவே போராடினர். ம்.... அத்தனை வருடங்களாக உடன்படிக்கை செய்து, தமிழ்த்தலைமைகளின் ஆதரவை பெறுவதும், பின் கிழித்தெறிவதும் கலவரங்களால் அடக்குவதும் வரலாறு. அதனால் இந்தப்போக்கு தொடர்வதையே சிங்களம் விரும்பியது. அதற்குமேல் தமிழ் தலைவர்கள் செல்ல முயலவில்லை, விரும்பவில்லை. இதனால் எதை காட்டி நம்மை அச்சுறுத்தினார்களோ அதை தமிழ் இளைஞர்கள் கையில் எடுத்து, திருப்பி அச்சுறுத்த தொடங்கினார்கள். ஆயுதத்தின் வலிமை சிங்களத்திற்கு தெரியும், அதன் அழிவை தமிழர் சந்தித்தனர், அந்த அழிவை சிங்களம் ஏற்று தோற்றுப்போக விரும்பவில்லை. அடிபணிந்து தீர்வை கொடுத்து முதுகு வளைந்து உழைக்க விரும்பவில்லை. அது, தன் போன்ற கருத்துள்ள, சுய கௌரவத்தை விற்ற தமிழரையே தனது ஆயுதமாக பயன்படுத்தி, அவர்களின் விடுதலைப்போரை பயங்கரமாக்கியது. எமது தமிழ் தலைமைகள் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த அன்றும் தவறிவிட்டனர். ஏனெனில் புலிகள் பக்கம் அதிகாரம் போவதை அவர்களும் விரும்பவில்லை. அதனால் நாட்டை விட்டு ஓடி மறைந்தார்கள். மக்களோடு நிற்க, அவர்களை தேற்ற, அவர்களுக்காக பேச யாரும் முன்வரவில்லை, காணாமல் போய் விட்டனர். மக்கள், அவர்களை தம் தலைவர்களாக தெரிந்தெடுத்ததன் பயன் அது. அப்போது எந்த நாட்டிலிருந்து யாராவது பேச்சுவார்த்தைக்கு வரும்போதெல்லாம், தங்களுக்காக பேசும் மீட்பர்களாக மக்கள் நம்பினார்கள். அங்கே தங்களுக்காக அவர்களுடன் பேச யாரும் முன்வரவில்லை. ஏதேதோ காரணங்களை சொல்லி புலிகளை, மக்களை கொன்று குவித்தார்கள். நிறைவில் கோத்தா சொன்னா(ன்)ர் புலிகளை அழித்து வெற்றி கொண்டு விட்டோம், ஆதலால் தமிழருக்கு இனி தீர்வு என்கிற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் இங்கு வாழ விரும்பினால் வாழலாம், ஆனால் அரசியல் உரிமை எதுவும் கேட்க முடியாது. சரத் பொன்சேகா கூறினார், தமிழர் வந்தேறு குடிகள் என்றார். அதன் பொருள் என்ன? இவர்களுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தது தமிழர், போத்துக்கேயர் ஆட்சிக்கு முன் தமது இராசதானி வைத்து ஆண்டனர் தமிழர், வந்தேறு குடிகளுடனா துட்ட கைமுனு போரிட்டான்? ஏன் இன்னும் நமது தலைமைகள் அடித்து பிடித்து தலைமைக்கு போராடுகிறார்கள்? பழைய ஏமாற்று வித்தைக்கு துணை போவதற்கே. சர்வதேசம் நமக்கு விடிவை தருவதென்றால் எப்போதோ தந்திருக்க முடியும். நமது தலைமைகள் இன்னும் சிங்களத்தை காட்டிக்கொடுக்க, மக்களை காப்பாற்ற விரும்பவில்லை. அதையே சம்பந்தரும் செய்து காட்டினார். இன்று தலைமை என்று சொல்ல யாரும் இல்லாமல் விட்டுச்சென்ற சம்பந்தரை, சர்வதேச ராஜ தந்திரி என்று சொல்வோர், அவரால் நுழைக்கப்பட்டவர்கள் கட்சியை அழிக்க. இதுதான் சம்பந்தர் தனது அரசியலில் சாதித்தது! மக்களை ஏன் என்று கேட்க யாருமில்லாமல் தெருக்களில் தம் உறைவுகளை தேடி கண்ணீரோடு அலைகின்ற்னர். அவர்களைசந்திக்க, அவர்களது துயரங்களை, இழப்புகளை கேட்க, ஆறுதல் சொல்ல, தேற்ற, விடை கொடுக்க விரும்பாத தலைவர்கள் வாக்குகளுக்காக பதவிகளுக்காகஅடிபடுகின்றனர்.

ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்

1 month 2 weeks ago
நெடியவனை சந்திக்கச்சென்ற அனுராவுக்கு ஜேர்மனிய அரசாங்க வரவேற்பு என்றால்; நெடியவனின் அந்தஸ்து விளங்கவேண்டும் கம்மன்பிலவுக்கு. அதோடு விஜித ஹேரத்தின் ஆலோசனையில் இந்தச் சந்திப்பு நடந்ததாம். எப்போதுமே புலிகள் நினைப்பு. இவர்களே முன்னாள் புலிகளை அரசியலில் இணைக்க அனுராவை வற்புறுத்துகிறார்கள் போலிருக்கிறது. ஏன் இந்த அச்சம்? அவர்களின் அரசியல் வாழ்வு நிறைவடைந்துவிடுமென அஞ்சுகிறார்கள். தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை விரைவில் தூசு தட்டி விசாரணைக்கு எடுக்க வற்புறுத்துகிறர்கள். அவரை நான் நெடியவன் என்றெல்லோ நினைத்தேன். ஒருவேளை நெடியவனின் பேச்சாளர் சிறியராக இருக்குமோ? அப்படியானால் பேச்சு சீரியஸாக இருக்குமென எதிர்பார்க்கலாம்!

ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்

1 month 2 weeks ago
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (13) ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்துள்ளார். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டதுடன், அவர்கள் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பை அளித்தனர். இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கு எந்தவித பேதங்களும் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், நமது பொருளாதாரத்திற்கு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டுவதோடு, வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை, மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எமது அரசாங்கம் நிலையான ஆரம்பத்தை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmbvzln7i01ulqpbs04jir2ic

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 2 weeks ago
வாழ்த்துக்கள் கிருபன் ஜீ 💥😂 அமெரிக்கன் தாத்தா மற்றும் வாதவூரானுக்கும் வாழ்த்துக்கள் போட்டியைச் சிம்பிளாக ஆனால் ஆர்வத்துடன் நடத்தி முடித்த கோஷன் சே க்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களும் . செம்பாட்டானுக்கும் 👍 இன்னும் திரியை வாசிக்க வைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்🙏

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 2 weeks ago
போட்டியை சிறப்பாக நடாத்திய @goshan_che க்கும், ஆர்வமுடன் கலந்துகொண்டவர்களுக்கும், திரியைக் கலகலப்பாக்கியவர்களுக்கும் நன்றி! முதல்வர் கிருபன்ஜீக்கு வாழ்த்துகள் .உற்சாகத்துடன் பங்கு பற்றிய கள உறவுகளுக்கும் போட்டியைத்திறம்பட நடத்திய கோஷான் சே யிற்கும் பாராட்டுகள்.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 2 weeks ago
முதல்நாளே சொன்னேன் கிருபன்தான் தலை என்று. அவர் பின்னால் திரண்டு ஒன்றாக நின்றோம். பூச்சியத்துடன் உன் வாழ்க்கை முடியாதடா என்டு காட்டிவிட்டனர் தென்னாபிரிக்கவினர். மிகவும் பிடித்த போட்டி பிடித்த மாதிரியே நடந்து முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி கோசான் இந்த சிறிய போட்டிக்கு. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

யப்பானில் சில நாட்கள் (1-2) - நடேசன் -

1 month 2 weeks ago
யப்பானில் சில நாட்கள்:2 ஷின்டோ ஆலயம் - நடேசன் - - நடேசன் - பயணங்கள் 14 ஜூன் 2025 * Photo by David Edelstein on Unsplash மாலையில் டோக்கியோவில் உள்ள புத்த பகோடாவிற்கும் சின்ரோ ஆலயத்திற்கும் அழைத்து சென்றார்கள். ஆரம்ப காலத்திலே சின்ரோ மதம் யப்பானில் உருவாகிறது. ஒரு விதத்தில் சின்ரோ மதம் விக்கிரகங்கள் அற்ற இந்து மதம் போன்றது. மனிதர்கள் பயந்த, அல்லது தங்களுக்கு உபயோகமான இயற்கையின் சக்திகளின்பாலான வழிபாட்டு முறையாகும். பின்பு மக்களிடையே விவசாயம், நெசவு என்பது உருவாகும் காலத்தில்தான், கொரியாவிலிருந்து பௌத்த மதம் யப்பான் வருகிறது. பௌத்தத்தின் தாக்கத்தில் உயிர்க்கொலைகள் இங்கு தடுக்கப்படுகிறது. இது பல எதிர்ப்புகள் உருவாக்கியபோதும் முக்கிய செல்வாக்கு உள்ள பிரபுக்களால் பௌத்தம் ஏற்கப்படுகிறது. பிற்காலத்தில் புத்த குருக்களின் ஆதிக்கம் அங்கு மேலோங்குவதனால் ஆரம்பத் தலைநகர் நாராவிலிருந்து பின் கொயோட்டா நகருக்கும் , இறுதியில் எடோ என்ற இடத்திற்கு மாறுகிறது . ஆரம்பத்தில் மீன்பிடிக்கும் கிராமமாக இருந்த அந்த எடோ, டோக்கியோவாகிறது. எப்படி பௌத்தம் கொரியாவிலிருந்து வந்ததுபோல் சீனாவிலிருந்து எழுத்து, மொழி, கலண்டர், மற்றைய பல கலாச்சாரத்தின் கூறுகள் வந்து சேரும் போது இங்கு சில குழுவினர் செல்வாக்கடைந்தபின் சமூகம் வளர்ந்து அரசுருவாக்கம் ஏற்படுகிறது. யப்பானில் 80 வீதமானவர்கள் ஷின்ரோ. அதேபோல் 75 வீதமானவர்கள் புத்த சமயத்தவர்கள் இதனால் பெரும்பாலானவர்கள் இரண்டு மத நம்பிக்கையும் உள்ளவர்கள். ஷின்ரோ மதம் யப்பானுக்கு ஏகபோகமானது அதேவேளையில் இதற்கு ஒரு வேதப்புத்தகமோ முழு முதற்கடவுளோ இல்லை. எவரும் புத்தர் யேசுபோல் இதை ஸ்தாபிக்கவும் இல்லை .பல கடவுளை வழிபடும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளது. ஆனால் , விக்கிரகம் இல்லை. ஒரு விதத்தில் மக்களின் வாழ்க்கைக்கு வழியாக அதாவது எழுதப்படாத வாழ்வு முறை போன்றது. ஷின்டோ மதத்தின் கொள்கைகள் எழுதப்படாததால் தற்போது பல பௌத்த கொள்கைகள் இதில் சேர்ந்துள்ளது. கிறிஸ்துவத்தில் பேகன் கொள்கைகளான ஈஸ்டர் முட்டை விடயங்கள்போல் எனலாம். மத்திய கிழக்கில் எப்பொழுது கிறிஸ்மஸ் மரம் (Fir tree) இருந்தது? யப்பானில் உள்ள பௌத்தம், மகாஞான பௌத்தமானதால் வரலாற்றில் இருந்த புத்தரைவிட வான்வெளியில் உள்ள புத்தர்களும் (Celestial Bhuta) அத்துடன் தேவதைகளும் இங்கு நிறைந்துள்ளார்கள் . இவற்றிடையே புவியில் மனிதரகளாக வாழ்ந்தவர்கள் ஷின்டோ மதத்தில் தெய்வமாக்கப்பட்டதால் அவரவர் தேவைக்கேற்ப மக்களுக்கு நம்பிக்கை வைத்து வழிபட இடமுண்டு. யப்பானிய ஆதிகடவுளர்களுக்கு நம்மைப்போல் தொன்மக் கதை உள்ளது. இரு தெய்வங்களால் யப்பான் உருவாகிறது (Male Izanagi and the female Izanami) இவர்களிடமிருந்து இயற்கையில் உள்ள சூரியன், காற்று, நெருப்பு என்ற தெய்வங்களும் உருவாகிறது. அதேபோல் மக்களும் உருவாகிறார்கள். இவர்கள் மதத்தில், இறப்பு கெட்ட விடயம் அதாவது சோகமான முடிவு. இங்கே பௌத்தம் இறப்பை சோகமானதாக பார்க்காது, யதார்த்த வாழ்வின் ஒரு பகுதியாகமட்டுமல்ல புதிய அத்தியாயத்தில் ஆரம்பமாக பார்க்கிறது . இதனால் புதிய அணுகு முறையை யப்பானிய மக்கள் ஏற்கிறார்கள் . யப்பானியர் பிறப்பை ஷின்டோ கோவிலில் கொண்டாடி இறப்பைப் பௌத்த ஆலயத்தில் நடத்த முடிகிறது. ஷின்டோ மதத்தில் முக்கிய தெய்வங்கள் சூரியனும் வாயுவும் அதில் அதில் சூரியனைப் பெண் தெய்வமாக உருவகப்படுத்தி உள்ளதால் யப்பானிய மன்னர் சூரிய வம்சத்தில் வந்தவராவார் . இவை எல்லாம் நாம் கேட்டது போல் இருக்கிறதா ? பௌத்தம் இங்கு வாழ்வின் துன்பங்களைப் பேசுகிறது . ஆனால், சின்ரோ வாழ்க்கையின் வழியையும் அதற்கு சில வழிபாடுகளையும் கொண்டது. உண்மையில் ஷிண்டோ மதம் நமது இந்து மதம் போல் பல மக்களது நம்பிக்கைகளின் தொகுப்பாகும். சின்ரோ ஆலயத்தில் புத்தர் இருப்பார். அதேபோல் புத்த பகோடாக்களில் சின்ரோ வழிபாடு நடக்கிறது. தற்போது இரு மதங்களும் ஒன்றை ஒன்று தழுவியபடி உள்ளன. ஒட்டு மொத்தத்தில் இரண்டு மதங்களும் யப்பானிய மக்கள் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் தழுவிச் செல்கிறது. உதாரணமாக மக்கள் நடந்து செல்லும் போது புல்வெளியில் ஒரு பாதை உருவாகிறது. பின்பு அந்த பாதையில் மக்கள் செல்வார்கள் என்பது போல எனக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. புத்த மதம் இங்கு மகாஜான புத்தமாக இருப்பதுடன் இங்குள்ள ஆரம்ப நம்பிக்கைகளுடன் நீரோடு பாலாக கலந்துள்ளது. [தொடரும்] uthayam12@gmail.com https://www.geotamil.com

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 2 weeks ago
தென்னாபிரிக்கா வெல்லவேண்டும் என்று விருப்பம் இருந்தது.. ஆனால் நான் இப்போட்டியில் வெல்வேன் என்று நினைக்கவில்லை! ஆனால் வென்றுவிட்டேன்😃 கப்பு முக்கியம்😁 போட்டியை சிறப்பாக நடாத்திய @goshan_che க்கும், ஆர்வமுடன் கலந்துகொண்டவர்களுக்கும், திரியைக் கலகலப்பாக்கியவர்களுக்கும் நன்றி! என்ன ஒரு பிரீத்தி ஸிந்தா இல்லை என்பதுதான் குறை! ஆனா த்ரிஷா இருக்கா!

யப்பானில் சில நாட்கள் (1-2) - நடேசன் -

1 month 2 weeks ago
யப்பானில் சில நாட்கள் (1) - நடேசன் - - நடேசன் - பயணங்கள் 06 ஜூன் 2025 * Photo by David Edelstein on Unsplash இரவில் டோக்கியோ போய் சேர்ந்ததும் நாங்கள் தங்க வேண்டிய ஹொட்டேலை அண்ணாந்து பார்த்தேன். இத்தனை உயரமான மாடிக்கட்டிடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால் உயிர் தப்புவோமா என்ற வினா மனத்தில் எழுந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது இடத்தில் நடுங்கியபடி இருக்கும் நாடு யப்பான். கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் தங்களை காப்பாற்றும்படி பிரார்த்திப்பார்கள். படைப்பில் நம்பிக்கையற்ற, பரிணாமத்தை நம்பும் நான் என்ன செய்ய முடியும் ? அரைநூற்றாண்டு தாம்பத்தியம் எங்களிடையே இருப்பதால் எனக்கும் சேர்த்து சியாமளாவே பிரார்த்திக்கலாம்! இலகுவான வழி? எப்படி இந்த நாட்டில் இவ்வளவு உயரமான கட்டிடங்கள் நிலநடுக்கத்தில் தப்புகிறது என்ற எனது கேள்வியை நாகரிகமாக எமது வழிகாட்டியிடம் ஹொட்டேல் வாசலில் வைத்துக் கேட்டேன். அந்த யப்பானிய இளைஞன் என்னை பார்த்து சிரித்தான். ஆனால் , பதில் தரவில்லை. இந்த இரவு நேரத்தில் இது தேவையான கேள்வியா என சியாமளாவின் பார்வை என்னை நோக்கி கூரிய கணையாக வந்தது. அவனது மனத்தில் என்ன நினைத்திருப்பான்? அதைபற்றி என்ன கவலை? நான் கேட்டதற்கு காரணம் உள்ளது. (On 11 March 2011, the Fukushima nuclear power station was damaged after the magnitude 9.0 earthquake and subsequent tsunami.) யப்பானில் ஆங்கிலம் பேசுபவர்கள் மிக குறைவு. ஆனால் , அமெரிக்காவில் இரு வருடங்கள் படித்த இளைஞன் வழிகாட்டியாக கிடைத்தது எங்கள் அதிஸ்டமே . அடுத்த நாள் காலையில் ஹொட்டேலை விட்டு பஸ்சில் ஏறியபின் அவனிடமிருந்து, எனது இரவு கேள்விக்கான விடை அரைநாள் தாமதமாக கிடைத்தது. ‘யப்பானில் ஃபுக்கசீமா நில நடுக்கத்தால் கடலில் ஏற்பட்ட சுனாமியாலே அணு உலையின் குளிராக்கி ( Cooling pond) உடைந்து கதிரியக்கம் வெளிப்பட்டது. அந்த நில நடுக்கம் டோக்கியோவில் தாக்கியபோதும் உயரமான கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. ஆனால், சிறிய தனி வீடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டன. பெரிய கட்டிடங்கள் நிலத்தின் கீழ் அத்திவாரமற்று அவற்றை இரும்பு பிரேம் தாங்கியபடி இருக்கும். அந்த பிரேமில் இப்படியான அதிர்வைத் தாங்கி அசைந்து ஆடிவிட்டு (Horizontal Shock absorber) மீண்டும் அதே நிலைக்கு வரும் தன்மை உள்ளதால்,அடுக்குமாடிகள் இங்கு பாதுகாப்பானவை‘ என்று விளக்கம் கிடைத்தது. யப்பானுக்கு கடந்த வருடம் சென்ற ஒரு மில்லியன் அவுஸ்திரேலியர்களில் இருவராக நானும் சியாமளாவும் சென்றோம். நாங்கள் நடு இரவில் டோக்கியோ சென்றடைந்தபோது ஒரு நாற்பது மாடிகள் கொண்ட ஹொட்டேலுக்கு அழைத்து சென்றார்கள். ஒரு குழுவாக சென்றதால் மொழி, போக்குவரத்து , உணவு என்ற பிரச்சினைகள் எமக்கு இருக்கவில்லை. ஜப்பான் வரலாறு பல ஆசிய நாடுகளில் இருந்து வித்தியாசமானது. எந்த ஒரு ஐரோப்பிய நாடுகள்போல் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருக்காதது மட்டுமல்ல மற்ற நாடுகளை தனது காலனியின் கீழ் வைத்திருக்க முயன்றது. ஜெங்கிஸ்கான் காலத்தில் மங்கோலியர்கள் மூன்று முறை கடல் கடந்து படையெடுத்து தோற்றார்கள். ஒரு முறை புயலே யப்பானியர்களை காப்பாற்றியது என அறிந்தேன். ஆயிரம் வருடங்கள் வரையும் ஷோகன் (Shogun) என்ற ஒரு வித இராணுவ பொறுப்பானவர் முழு யப்பானுக்கும் பொறுப்பாக இருந்தாலும் அவரின் கீழ் இந்திய ஜமீன்தார்கள் போல் பல பிரபுக்கள் கொண்ட பிரிவுகளாக யப்பான் அக்காலத்தில் ஆளப்பட்டது. அவர்களது அதிகாரம் எல்லை கடந்தது. அவர்களிடம் சமுராய் எனப்படும் விசுவாசமாக போர் வீரர்கள்- ( அதாவது பாண்டிய மறவர்கள் போல) இருந்தார்கள். அதன்பின் எல்லா பிரதேசங்களையும் இணைத்து மொத்தமான ஜப்பானுக்கு ஒரு மன்னர் வருகிறார். 7ஆம் நூற்றாண்டின் பின்பாக மன்னர் இருந்தாலும் அவர் அதிகாரமற்றவர். யப்பானிய மன்னர் மீண்டும் அதிகாரம் பெற்றது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே நடந்தது. வரலாற்றுக்கு முன்பாக அதாவது 35,000 வருடங்கள் முன்னால் யப்பான் ஆசியாவோடு நிலமாக இணைந்திருந்த காலத்தில் மக்கள் சைபீரியாவின் பகுதிகளிலிருந்து சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆரம்பக்கால யப்பானின் வரலாறு மற்றைய நாடுகளினது கற்கால மக்கள்போல் ஆரம்பிக்கிறது. அதாவது 10,000 வருடங்களுக்கு முன்பு கரையோரத்தில் வாழும் மக்கள் மீன் பிடித்தல், உள்பகுதியில் வசிப்பவர்கள் வேட்டையாடுதல் என்பன முக்கிய ஜீவனோபாயத் தொழிலாக நடந்தது. யப்பானிய வரலாற்றில் ஒரு வித்தியாசமான விடயம் எனக்கு அறிய முடிந்தது . பெரும்பாலாக பிரதேசங்களில் மண்பாண்டங்களின் உருவாக்கம் விவசாயத்தோடு தொடங்கும். ஆனால், யப்பானில் மண்பாண்டங்கள் விவசாயத்திற்கு ஆயிரம் வருடங்கள் முன்பு தொடங்கியது என்கிறார்கள். யப்பானுக்கு கிட்டத்தட்ட 2500 வருடங்கள் முன்பாக கொரியா போன்ற இடங்களிலிருந்து விவசாயம் மற்றும் உலோக சாதனங்களின் தொழில்நுட்பம் சென்றது. யப்பானின் தெற்குத் தீவுகள் கொரியாவிலிருந்து 40 மைல் தொலைவில் உள்ளன. அதாவது இலங்கைக்கு ,இந்தியா போல அக்கால கடல் பயணத்திற்கு அதிக தூரமில்லை. விவசாயம் ஆரம்பித்தபின் பின்பு சமூக கட்டுமானங்களின் படிமானங்கள் உருவாகிறது. ஒரு காலத்தில் ( கி.பி300) சீனாவிலிருந்து சென்ற ஒரு தூதுவர் ஒருவர் யப்பானை பற்றிச் சொல்லிய சில விவரங்கள் எழுத்தில் உள்ளன . அதில் பல சிறிய அரசுகள் அக்காலத்தில் ஒன்றாகிய யப்பானில் 30 பெரிய அரசுகள் இருந்தன அதில் முக்கியமான அரசைப் பெண் மந்திரவாதி அவளது சகோதரனது உதவியுடன் அரசாண்டாள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. சூரியனை முக்கிய கடவுளாக கொண்டாடிய யப்பானியர்களது வாழ்க்கை சீனாவிலிருந்து சென்றவருக்கு வித்தியாசமானதாகத் தெரிந்திருக்கலாம் . பிற்காலத்தில் எழுத்துமுறை சீனாவிலிருந்து சென்றது. இதனால் ஆரம்ப ஷின்டோ மத நம்பிக்கை, தொன்மைக் கதைகளே. கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டு வரையில் வாய்மொழி விடயங்களாகவே மத நம்பிக்கை இருந்தன. நமது இதிகாசம் புராணங்கள்போல், இதற்கு மேல் வரலாறு தேவையில்லை. நாங்கள் யப்பான் சென்றது இலையுதிர்காலம். வசந்த காலமும் இலையுதிர் காலமும் விசேடமானவை . இளஞ்சிவப்பு நிறத்தில் ஷெரி மரங்கள் வசந்தகாலத்தில் பூத்து குலுங்குவதுபோல் சிவப்பு மஞ்சள் என மாப்பிள் இலைகள் வர்ணத் தோரணமிட்டு நம்மை வரவேற்கும். டோக்கியோவில் முதல் நாள் காலையில் சென்றது அருகில் உள்ள யப்பானிய பூங்காவிற்கு. இந்த பூங்கா 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டோக்கியோ, நாட்டின் தலைநகரானபோது, அப்போதிருந்த ஷோகன் இந்த அழகிய பூங்காவை தனக்காக வடிவமைக்கிறார். அக்காலத்தில் பொதுமக்கள் இந்த பூங்காக்களுக்கு செல்ல முடியாது. கடந்த 100 வருடங்களாக மட்டுமே பொதுமக்கள் உள்ளே சென்று பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த யப்பானிய பூங்காக்களின் தத்துவமே தனியானது. மற்றைய நாடுகளில் பூங்காக்கள் இருந்தாலும் அவைகள் கலாசாரக் கூறுகள் அல்ல.அழகுக்காக உருவாக்கப்பட்டவை. இங்கு பூங்காக்கள் யப்பானிய கலாசாரத்துடன் இணைந்துள்ளன. முக்கியமாக அமிடா பௌத்தம்( Pure land Buddhism) வந்தப்பின் இவை பூமியில் சொர்க்கத்தை பிரதிபலிப்பன . ஷோகன் இறந்தபின், அவர் சொர்க்கம் செல்லும் நம்பிக்கையுடன் இருந்தார் என்பதால் அவரது கற்பனையில் இப்படித்தான் சொர்க்கம் இருக்கும் என்ற நினைவுடன் இந்தப் பூங்காக்கள் வடிவமைக்கப்பட்டது. உண்மையில் சொர்க்கம் இப்படி இருக்குமென்றால் நல்ல விடயம், நானும் அதற்கு பயண சீட்டை எடுக்க விரும்புவேன். கியோசூமி பூங்கா (Kyosumi Garden) மிகவும் அழகானது. பூங்கா என வார்த்தையில் சொல்லாது நான் அதை விவரிக்கவேண்டும். ஒரு மணி நேரம் பூங்காவை சுற்றி வந்தபோது, இதுவரையிலும் ஆங்காங்கு நான் கேள்விபட்ட யப்பானிய பூங்காவின் முக்கிய கூறுகளை அங்கு முழுமையாக பார்க்க முடிந்தது. உலகத்தின் பல பெரிய பூந்தோட்டங்களைப் பார்த்துள்ளேன். பேராதனையில் படித்த காலத்தில் அங்குள்ள பூந்தோட்டம் என்னைக் கவர்ந்தது. அவுஸ்திரேலியாவில் பலவற்றைப் பார்த்தாலும் எனது மனதில் நிற்பது கனடாவின் மேற்குப்பகுதியில் உள்ள விக்டோரியா நகரில்(Butchart Garden) உள்ளதே. இங்கு அழகை விட இந்த பூங்கா ஒரு காலத்தில் சுண்ணாம்பு கற்கள் அ௧ன்றெடுத்த இடமாக இருந்தது. அதை தனி ஒருவராக வடிவமைத்து இப்பொழுது அரசின் பொறுப்பில் உள்ளது. சமீபத்தில் அவுஸ்திரியாவின் சலஸ்பேர்க்கில் உள்ள மிரபெல்லா பூங்காவைப் பார்த்தேன். இவைகள் எல்லாம் ஐரோப்பிய சிந்தனையின் வடிவங்கள். அதேபோல் டெல்லியில் சில பூங்காக்கள் முகாலய அல்லது பேர்சிய சிந்தனையின் வடிவமைப்பில் அமைந்தது. இவற்றிலிருந்து யப்பானியர்களது பூங்கா அமைப்பு முற்றாக வித்தியாசமானவை. யப்பானின் கால நிலைக்கும் அவர்களது நில அமைப்பையும் ஒன்றிணைத்து அமைப்பார்கள். யப்பானில் நான்கு காலநிலைகளிலும் அந்த பூங்காக்கள் அழகாக இருப்பதற்கு, அதற்கேற்ப மலர் செடிகளுடன், எல்லா கால நிலைக்கும் ஏற்ற மரங்கள், யப்பானின் நில அமைப்பு அதாவது மலைகள், பள்ளங்கள், நீர்நிலைகள், அருவிகள் என்பவற்றை ஒன்றிணைத்து, அதற்கேற்ப நீர் தடாகங்கள் உருவாக்கி, அதில் சிறிய அருவிகள் மெல்லிய ஓசையுடன் சலசலத்தபடி ஓடும். ஒழுங்கற்ற தடாகத்தில் மீன்கள், பறவைகள்,நீர்த்தாவரங்களுடன், குறுக்கே வாய்கால்கள் மீது சிறிய மரப்பாலங்கள் பாதையாக அமைந்திருக்கும். ஆங்காங்கே கற்கள் வைக்கப்பட்டு , அவைகளில் பச்சைப் பாசி படித்திருக்கும். சுற்றியிருக்கும் கருங்கற்களில் சிறிய சிற்பங்கள் அல்லது பகோடா போன்ற அமைப்பு இருக்கும். நடக்கும்போது பாதைகளாக மரத்தாலான சிறிய பாதைகள் வளைந்து செல்லும். வர்ண விளக்குகள் பல இடங்களில் அமைத்திருப்பார்கள். மொத்த பூங்காவும் அமிடா புத்தரின் சொர்க்க உலகத்தை நமக்கு படிமமாக்குகின்றன. பூங்காவில் மரங்கள் சிறிதாக, அதாவது பொன்சோ முறையில் வளர்க்கப்படுகிறது. நான் பார்த்தபோது, சில மரங்களின் அடிப்பகுதிகளை சுற்றி காயமடைந்த இடத்தில் துணி சுற்றுவதுபோல் மூங்கில் பாய் போன்ற ஒன்றைக் கொண்டு அந்த மரத்தை சுற்றியிருந்தவர்கள் . அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது . ‘ மரத்தின் சில பகுதிகள் ஏதாவது காரணத்தால் உடைந்தால் அந்த இடங்களில் தொற்று ஏற்படாது பாதுகாப்பதற்காக’ என்ற பதில் கிடைத்தது. பூங்காவின் நுழைவாயில், மூங்கில்களால் அமைந்தது இவை எல்லாம் இங்கு இருந்தால் உள்ளே வருபவர்கள் மனங்கள் பூரண அமைதி அடைய முடியும் என கருதுகிறார்கள். இங்கு யப்பானிய மன்னரது இறுதிக் சடங்குகள் நடந்ததுடன் பல நில நடுக்கங்களை கடந்து வருங்கால சந்ததிக்காக இந்த பூங்கா தற்போது டோக்கியோ நகரசபையினரால் பராமரிக்கப்படுகிறது என்ற அறிவிப்பு அங்கிருந்தது [தொடரும்] uthayam12@gmail.com https://www.geotamil.com

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 2 weeks ago
வணக்கம் வாத்தியார் ....... ! ஆண் : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல எங்கே மாராப்பு…… மயிலே நீ போ வேணாம் வீராப்பு….. பெண் : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல கையே மாராப்பு…. வருவேன் நீ வா வேணா வீராப்பு…. பெண் : நீர் போகும் வழியோடு தான் போகும் என் சேலை நீ போகும் வழி தேடி வருவேனே பின்னால ஆண் : வழி தெரியாத ஆறு இது இத நம்பித்தானா ஓடுவது பெண் : புது வெள்ளம் சேரும்போது வழி என்ன பாதை என்ன காற்றாகி வீசும் போது தசை என்ன தேசம் என்ன ஆண் : மனச தாழ் போட்டு மயிலே நீ போ வேணாம் விளையாட்டு.. ஆண் : என் மேல நீ ஆசை கொண்டாலும் தப்பில்ல.. என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில்ல.. பெண் : நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன் உன்ன நம்பி தானே ஒளிச்சு வச்சேன் ஆண் : பொல்லாப்பு வேணா புள்ள பூச்சூடும் காலம் வல்ல நான் தூங்க பாயும் இல்ல நீ வந்த நியாயம் இல்ல வீணா கூப்பாடு வருவேன் நீ வா ரோசா பூ சூடு…....... ! --- சின்ன பொண்ணு சேலை ---

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 2 weeks ago
முதல்வர் கிருபன்ஜீக்கு வாழ்த்துகள் .உற்சாகத்துடன் பங்கு பற்றிய கள உறவுகளுக்கும் போட்டியைத்திறம்பட நடத்திய கோஷான் சே யிற்கும் பாராட்டுகள்.

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

1 month 2 weeks ago
இப்போது நடக்கும் இஸ்ரேல் - ஈரான் சண்டைகூட, அது சர்வதேச சட்டம், மற்றும் ஐ.நா சாசனத்தின் படி சட்டவிரோதம் என்றாலும், NPT treaty ஐ இரான் மீறிவிட்டது என்ற ஒரு பகுதி அடிப்படையிலும். (அதாவது ஒரு கூட்டு (மேற்கு)அரசுகள் இன்னொரு அரசின் மீது படைபலத்தை இஸ்ரேல் வழியாக பிரயோகிப்பது, treaty ஐ வலோற்றகாரமாக வேறு ஒரு அரசு (ஈரான்) மீது சுமத்துவதற்கு) ஈரானுடன் 2015 இல் JCPOA என்ற ஒப்பந்தம், பாதுகாப்பு சபை 5 நிரந்தர உறுப்பினரும், ஜெர்மனியும் செய்த ஒப்பந்தம் treaty அல்ல. ஏனெனில் , அது முழு அரசுகளாலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை (அதாவது எந்த அரசாலும் ratify பண்ணப்படவில்லை).

பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்; காணாமல்போனோரின் உறவுகளின் சங்கம்

1 month 2 weeks ago
14 JUN, 2025 | 07:18 PM தமிழ் அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர்வாழ்வதே. அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையையும் இல்லாதவர்கள் இதனால் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் சனிக்கிழமை (14) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், போரின் இறுதிக் கட்டத்தின் போதும் அதற்குப் பின்னரும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் தமிழ் தாய்மார்களான எங்கள் போராட்ட பயணம் 3036 வது நாளாக, தொடர்கிறது. எங்கள் குழந்தைகளை கண்டுபிடிக்க வேண்டுமென்ற தவிப்போடு மட்டுமன்றி, இனப்படுகொலையிலிருந்து எதிர்காலத் தலைமுறையினரைப் பாதுகாக்கவும், தமிழர் இறையாண்மைக்கு சர்வதேச ஆதரவைக் கோரவும், அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒரு காலத்தில் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அழைப்பு விடுக்கிறோம். அரசியல் தீர்வு ஒன்றுதேவை என யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கும் அதன் பின்னணியில் இருந்த பங்களிப்பாளர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம், வாக்குறுதி அளித்தது. ஆனால் இன்று வரை எந்த தீர்வும் இல்லை. எங்கள் கண்ணீர் மட்டும் தொடர்கிறது. இன்று, அமைதிக்கு பதிலாக, இலங்கையின் வடகிழக்கு இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. புலனாய்வு அமைப்புகள் பொதுமக்கள் வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்துகின்றன. அதே நேரத்தில் அரசுடன் தொடர்புடைய போதைப்பொருள் வலையமைப்புகள் மற்றும் பாலியல் சுரண்டல் தமிழ் இளைஞர்களையும் பெண்களையும் அச்சுறுத்துகின்றன. நாங்கள் தமிழ் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அவர்களின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர்வாழ்வது என்று தெரிகிறது. அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையையும், தைரியத்தையும், சர்வதேச ஈடுபாட்டின் மூலம் இறையாண்மையைப் பெற்ற பிற ஒடுக்கப்பட்ட நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள எந்த முயற்சியையும் காட்டவில்லை. அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுப்பேற்க வைக்கவோ அல்லது போருக்குப் பிறகு தமிழ் மக்கள் அனுபவித்த துரோகத்தை சர்வதேச சமூகத்திற்கு நினைவூட்டவோ தவறிவிட்டனர். எனவே தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு தமிழரும் எழுந்து சர்வதேச ஈடுபாட்டைக் கோர வேண்டும் என்றும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். தமிழர் இறையாண்மை மட்டுமே தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், முழுக் குடிமக்களுக்கும் நிலையான அமைதியை கொண்டு வரும் என்றனர். https://www.virakesari.lk/article/217475

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
தெஹ்ரானில் பொதுமக்கள் குடியிருப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் - 60 பேர் பலி 14 JUN, 2025 | 04:50 PM ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 20 சிறுவர்கள் உட்பட 60க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் அரச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. 14 மாடிகளை கொண்ட குடியிருப்பு பகுதியில் இடிபாடுகளை அகற்றுவதில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை ஈரானின் அரச தொலைக்காட்சி காண்பித்துள்ளது. ஆறுமாத குழந்தை உட்பட 20 சிறுவர்கள் கொல்லபட்பட்டுள்ளனர் பல உடல்கள் இடிபாடுகளிற்குள் உள்ளன என செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217463

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 2 weeks ago
முதல் கிருபனோடு வந்த நால்வருக்கும் வாழ்த்துக்கள் ........ போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் . ...... சும்மா டிக் டொக் மாதிரி போட்டியை சிறப்பாக நடத்தி வந்த கோஷன் - சே க்கு நன்றி . .........!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
கமேனி தொடர்ந்தும் ஏவுகணைகளை ஏவினால் தெஹ்ரான் பற்றி எரியும் - இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் 14 JUN, 2025 | 04:34 PM ஈரான் தொடர்ந்தும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால் தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் எச்சரித்துள்ளார். ஈரானின் சர்வாதிகாரி அந்த நாட்டு மக்களை பணயக்கைதிகளாக்குகின்றார்,ஈரான் மக்கள் குறிப்பாக தெஹ்ரானில் வசிப்பவர்கள் இஸ்ரேல் மீதான தாக்குதலிற்காக பெரும் விலையை செலுத்தும் நிலையை அவர் உருவாக்குகின்றார் என இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார். கமேனி தொடர்ந்தும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவினால் தெஹ்ரான்பற்றி எரியும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217460 இரானுக்குள் இஸ்ரேல் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவுகளை காட்டும் படங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் முக்கிய தலைவர்களைக் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அதிகாலை இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்தது. 'ஆபரேஷன் ரைசிங் லயன்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இதில் இரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும், இரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்தது. இஸ்ரேலிய தாக்குதல்களில் மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் ஐ.நா.வுக்கான இரான் தூதர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஹ்ரானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் அழிக்கப்பட்ட ஒரு குடியிருப்பு கட்டடத்துக்கு வெளியே ஒரு இரானியர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஹ்ரானில் குடியிருப்புப் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும், குழந்தைகள் உட்பட பொதுமக்களும் கொல்லப்பட்டதாக இரான் அரசு தொலைக்காட்சி கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரானில் தாக்குதலில் சேதமடைந்த கட்டடத்தில் நடந்த மீட்பு பணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஹ்ரானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சேதமடைந்த ஒரு கட்டடம். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஆபரேஷன் ரைசிங் லயன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜூன் 13 அதிகாலை இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட இரானிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளின் படங்களுடன் கூடிய ஒரு போஸ்டர், இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு பாலத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஹ்ரானில் தாக்குதல்களில் சேதமடைந்த கட்டடங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரான் மீதான சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்த இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயின் பதிவு செய்யப்பட்ட காணொளியை தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரு இரானியர். (இடம்: டெஹ்ரானில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு) இஸ்ரேலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்திருந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலை இலக்காகக் கொண்டு அவை செலுத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சில கட்டடங்கள் சேதமடைந்தன. இரான் தாக்குதலில் காயமடைந்த 40 பேர் இஸ்ரேலிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இஸ்ரேலை நோக்கி 2 அலைகளாக 100க்கும் குறைவான ஏவுகணைகளை இரான் ஏவியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே கூறுகிறார். இஸ்ரேலை நோக்கிச் சென்ற இரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவம் உதவியிருக்கிறது. இதனை அமெரிக்க அதிகாரிகள் 2 பேர் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அன்று உறுதிப்படுத்தியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கட்டடங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் தாக்குதலில் கடுமையாக சேதமடைந்த கட்டடங்களைப் பார்க்கும் இஸ்ரேலியர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் பதிலடி தாக்குதல்கள் நடத்தியதை அடுத்து, அதைக் கொண்டாடும் விதமாக டெஹ்ரானின் வீதிகளில் கூடிய மக்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெஹ்ரானின் வீதியில் இதைக் கொண்டாடும் மக்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரான் முழுவதும் பல இலக்குகளைத் தாக்கியுள்ள இஸ்ரேல், இரானின் நடான்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டல் ஆலையை சேதப்படுத்தியுள்ளது. ஆனால் இரான் தனது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதிக்கானது என்றும், புஷேர் போன்ற மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை உற்பத்தி செய்ய யுரேனியத்தை செறிவூட்டுவதாகவும் வலியுறுத்துகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஹ்ரானின் என்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் எதிர்ப்பு போஸ்டர். இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. இரான் தலைநகர் டெஹ்ரானில் மீண்டும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வருகின்றன. இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்கொள்ள டெஹ்ரானின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg7r8m5ln2o
Checked
Sat, 08/02/2025 - 14:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed