புதிய பதிவுகள்2

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கீடு மிகைப்படுத்தப்பட்டுள்ளது; வெரிட்டே ரிசேர்ச் ஆய்வில் வெளிக்கொணர்வு

1 month 2 weeks ago
Published By: VISHNU 15 JUN, 2025 | 05:56 PM (எம்.வை.எம்.சியாம்) இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலரினால் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. சீன மக்கள் வங்கியுடன் (People’s Bank of China – PBoC) உள்ள 10 பில்லியன் (அ.டொலர் 1.4) பெறுமதியான நாணய பரிமாற்றத்தை ஒதுக்கீடாக கருதியமையால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது சர்வதேச அளவில் வெளிநாட்டு ஒதுக்கீடாக கருதப்பட வேண்டிய தரநிலையை பூர்த்தி செய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள “Balance of Payments Manual, 6th edition” அறிக்கைக்கு அமைய வெளிநாட்டு சொத்து இருப்பானது திரவத்தன்மையை கொண்டிருக்க வேண்டும் அல்லது நிபந்தனையற்ற முறையில் உடனடியாகக் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் நாணய பரிமாற்றம் இதனை நிறைவேற்ற தவறியுள்ளது. ஏனெனில் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்டுபட்டு காணப்படுகின்றது. எதிர்காலத்தில் குறித்த நிபந்தனைகள் நீக்கப்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது. அந்த வகையில் வெளிநாட்டு ஒதுக்கீடாக அங்கீகரிக்கப்படாத சொத்துகளைச் சேர்ப்பதனால் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவே கருதப்படுகின்றது. உதாரணமாக 2025 மே மாதத்தில் மத்திய வங்கி அறிவித்த உத்தியோகபூர்வ ஒதுக்கீடு 6.3 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. சர்வதேச தரநிலைக்கேற்ப கணக்கிட்டிருந்தால் இது சுமார் 4.9 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்திருக்க வேண்டும். மேலும் இந்த தவறான கணக்கீட்டைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் இரண்டு விதமான கணக்கீடுகளை (சீன மக்கள் வங்கி) சேர்த்ததும் சேர்க்காததும் பயன்படுத்தி ஒரு காலப்புள்ளியிலிருந்து மற்றொரு காலப்புள்ளிவரை வெளிநாட்டு ஒதுக்குகளின் அதிகரிப்பை ஒப்பிட்டு மதிப்பீடு செய்ய முயற்சித்துள்ளனர். இதனால் 2022 ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் வெளிநாட்டு ஒதுக்கங்களின் அதிகரிப்பு தொடர்பில் தவறான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. சர்வதேச தரநிலைகளுடன் ஒத்துபோகும் பரிந்துரைக்கப்பட்ட அணுகுமுறை என்னவெனில் IMF தனது ஊழியர் அறிக்கைகளில் 'பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கம் ( (usable reserves)” )' எனக் குறிப்பிடும் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒப்பீடு செய்வதே ஆகும். இதில் பரிமாற்ற ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டு ஒதுக்க சொத்துகளுக்கான வரையறையை பூர்த்தி செய்யாத எந்தவொரு சொத்தும் உள்வாங்கப்படாது. https://www.virakesari.lk/article/217549

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி

1 month 2 weeks ago
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் போட்டிகளில் 27 ஆண்டுகளுக்குப்பின் தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

1 month 2 weeks ago
2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் பனை மரம் ஏறி கள் இறக்கினார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (ஜூன் 15) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் நடத்தப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwywywry9p5o

போர் பதற்றத்துல தப்பு பண்ணிட்டோம்! காஷ்மீரில் நடந்த தவறு! - இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்!

1 month 2 weeks ago
போர் பதற்றத்துல தப்பு பண்ணிட்டோம்! காஷ்மீரில் நடந்த தவறு! - இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்! இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் இஸ்ரேல் செய்த ஒரு சிறு தவறுக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை இஸ்ரேல் தொடர்ந்து கண்டித்து வந்த நிலையில் சமீபத்தில் இருநாடுகளும் தாக்குதலை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அடியாக தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், ஈரானின் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் ஈரானின் அணு ஆயுத உற்பத்தி மற்றும் பரிசோதனை மையங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் ஒரு மேப்பையும் வெளியிட்டது. அந்த உலக மேப்பில் ஜம்மு, காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தானின் பகுதிகள் என இஸ்ரேல் குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய நெட்டிசன்கள் பலர் அந்த பதிவிலேயே கமெண்டில் இதுகுறித்து சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அந்த பதிவையே இஸ்ரேல் ராணுவப்பிரிவின் எக்ஸ் தள நிர்வாகம் நீக்கியுள்ளது. இதுகுறித்து பேசிய இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் ”எல்லைகளை சரியாக கவனிக்காததன் தோல்வி இது” என்று கூறியுள்ளார். இதுகுறித்து IDF (Israeli Defence Force) வெளியிட்டுள்ள பதிவில் “இந்தப் பதிவு இந்தப் பகுதியை விளக்குகிறது. இந்த வரைபடம் எல்லைகளைத் துல்லியமாகக் காட்டத் தவறிவிட்டது. இந்தப் படத்தால் ஏற்பட்ட எந்தவொரு குற்றத்திற்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளது. https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/israel-apologize-to-india-for-their-wrong-measurements-in-india-and-kashmir-in-their-maps-125061500009_1.html

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 2 weeks ago
கிருபன், ஈழப்பிரியன், வாதவூரானுக்கு வாழ்த்துக்கள். போட்டியை இனிதுற நடாத்திய கோசானுக்கு நன்றி. தென்னாபிரிக்கா வென்றது சந்தோசம்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
Fire and smoke rise from an oil storage in Tehran as Israel continues strikes on Iran. [Abedin Taherkenareh/EPA] People watch from a bridge as flames rise from the Sharan oil depot following Israeli strikes in Tehran. [Majid Asgaripour/WANA via Reuters] Israeli forces inspect a building hit by an Iranian missile near Tel Aviv. [Ohad Zwigenberg/AP Photo] A building hit by an Iranian strike in Tamra, northern Israel. [Ammar Awad/Reuters] Damaged buildings after Iranian missiles hit Rehovot, central Israel. [Abir Sultan/EPA]

தமிழ்நாட்டில் கடன் வசூல் முறையை நெறிப்படுத்த புதிய சட்டம் - கடன் செயலிகள் கட்டுக்குள் வருமா?

1 month 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் 'கடன் வழங்கும் நிறுவனங்கள் - நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்' (Tamil Nadu Money Lending Entities-Prevention of Coercive Actions Act, 2025) அமலுக்கு வந்துள்ளது. கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதுடன், 'பொதுமக்களிடம் இருந்து கடன் வசூல் செய்யும் போது நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்தால் ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும்' என்றும் புதிய சட்டம் கூறுகிறது. புதிய சட்டத்தின்படி, கடனை வசூலிக்க எந்தெந்த வழிமுறைகளைக் கையாள்வது குற்றமாகும்? அதற்கு என்ன தண்டனை? அதனால் கடன் செயலிகள் (app) கட்டுக்குள் வருமா? கடன் தொல்லையால் தொடரும் தற்கொலைகள் கடன் தொல்லை காரணமாக, கடந்த ஜனவரி மாதம் சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பால்ராஜ் தனது மனைவி, மகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்த புத்தேரியை சேர்ந்த யுவராஜ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். சில மாதங்களாக வேலையில்லாமல் தவித்த அவர், கடன் செயலியில் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் கடன் செயலி நிறுவனத்தினர் அளித்த மனஉளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்கிறது செங்கல்பட்டு டவுன் காவல்நிலையத்தில் பதிவான எஃப்.ஐ.ஆர். சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் இத்தகைய சூழலில், கடன் வசூலிப்பதில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை, கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி தாக்கல் செய்தார். அந்த மசோதாவில், "கடன் வழங்குவோர், அடகு கடைகள் ஆகியவை அதிக வட்டி பெறுவதை ஒழுங்குபடுத்தி, தமிழ்நாடு அடகுக் கடைக்காரர்கள் சட்டம் 1943, தமிழ்நாடு பணக்கடன் வழங்குவோர் சட்டம் 1957, தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம் 2003 ஆகியவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நடைபாதை வியாபாரிகள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், கட்டட பணியாளர்கள் ஆகியோர் கடன் வழங்கும் நிறுவனங்களால் ஈர்க்கப்பட்டு கடன் சுமைக்கு ஆளாகின்றனர். இந்நிறுவனங்களின் வசூல் முறைகளால் மக்கள் பாதிக்கப்படுவதால், அவர்களைப் பாதுகாப்பதற்கு சட்டத்தை இயற்றுவது அவசியமாகக் கருதுகிறது தமிழ்நாடு அரசு," என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய தினமே விவாதங்களுக்குப் பின் இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதிய சட்டத்தில் என்ன உள்ளது? அந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்குப் பின் சட்டமாகியுள்ளது. அதன்படி, கடன் வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுப்பது நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கடன் வழங்கும் நிறுவனத்தின் பதிவு (Registration of money lending Entity) கடன் வழங்கும் நிறுவனத்தை முறைப்படுத்துதல் (Regulations of money lending entity) பதிவு செய்யும் நிறுவனங்களின் அதிகாரம் (Powers of registering authority) குற்றங்களும் அபராதமும் (Offences and penalties) எவையெல்லாம் குற்றம்? ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (NBFC), கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் தவிர அனைத்து பணம் வழங்கும் நிறுவனங்களுக்கும் புதிய சட்டம் பொருந்தும். கடன் பெற்ற நபரிடம் கட்டாய வசூல் செய்யும் நடவடிக்கையில் இறங்குதல். (வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கும் இவை பொருந்தும்) கடன் வாங்கிய நபரின் பெற்றோர், கணவர், மனைவி, குழந்தைகள் ஆகியோரிடம் நிறுவனமோ அதன் பிரதிநிதிகளோ கட்டாய வசூல் நடவடிக்கையில் ஈடுபடுதல் கடன் வாங்கிய நபரின் குடும்பத்தினர் மீது வன்முறையைப் பயன்படுத்துவது, அவர்களை அவமதிப்பது, மிரட்டுவது, பின்தொடர்வது போன்ற செயல்களில் ஈடுபடுதல் கடன் பெற்ற நபருக்கு சொந்தமான அல்லது அவர்கள் பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுதல், அதைப் பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்தல் கடன் பெற்ற நபரின் சொத்துகளை பறிமுதல் செய்தல், வீடு, வேலை பார்க்கும் இடங்களுக்குச் சென்று பேசுதல் போன்றவை குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் செயலிகள் கட்டுக்குள் வருமா? "வங்கி மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (Non-Banking Financial Company) ஆகியவற்றுக்கு அரசின் சட்டம் பொருந்தும். உடனடி கடன் செயலிகளால் மக்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆனால், இவை எதுவும் நிறுவனங்களாக நடத்தப்படுவதில்லை" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இது ஒரு மென்பொருள். உலகில் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கடன் பெறலாம். ஐந்தாயிரம், பத்தாயிரம் உடனடியாக கடன் கொடுத்துவிடுகின்றனர்" எனக் கூறுகிறார். கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இதுபோன்ற கடன் செயலிகள் அதிகம் உள்ளதாகக் கூறும் அவர், "ஃபேஸ்புக், யூட்யூப் ஆகியவற்றில் விளம்பரம் செய்து இந்நிறுவனங்கள் மக்களை ஈர்க்கின்றன. இதனை முறைப்படுத்த வேண்டும்" எனக் கூறுகிறார். "ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது ஆவணங்களை சரிபார்த்து நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்கின்றன. ஆனால், கடன் செயலிகளுக்கு இந்த விதிகள் எதுவும் இல்லை. பணம் கொடுத்து மிரட்டிப் பணம் பெற வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக உள்ளது," எனக் கூறுகிறார் கார்த்திகேயன். ஆன்லைன் ரம்மியை தமிழ்நாடு அரசு முறைப்படுத்தியதுப் போல, கடன் செயலிகளுக்கும் ஓர் ஒழுங்குமுறைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,கடன் செயலிகளுக்கும் ஓர் ஒழுங்குமுறைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கலாம் என்று கூறுகிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன் "கடன் செயலியாக இருந்தாலும் பதிவு செய்வது கட்டாயம்" இதனை மறுக்கும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன், "கடன் செயலிகளை யார் நடத்துகிறார்கள் என்பது தெரிய வாய்ப்பில்லை. ஆனால், புதிய சட்டத்தின்படி தமிழ்நாட்டில் கடன் வழங்கும் தொழில் செய்வோர் அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்வது கட்டாயமாகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படாமல் இயங்கும் கடன் செயலிகளை முடக்கலாம். அதன் சார்பாக, செல்போனில் பேசி கடனை வசூலிக்க முயற்சிப்பவர்கள் மீது சைபர்கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கலாம். கடன் செயலிக்காக நேரில் சென்று பணத்தை வசூலிக்க முயலும் நபர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம்" என்று குறிப்பிட்டார். "அவ்வாறு பதிவு செய்யாமல் கடன் கொடுத்தால் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. கடன் வழங்கும் அனைவரையும் பதிவு செய்ய வைத்து முறைப்படுத்தும் வேலையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள உள்ளது" எனவும் சி.பி.கிருஷ்ணன் தெரிவித்தார். இதற்காக, தமிழ்நாடு அரசின் புதிய சட்டத்தில் ஒழுங்குமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதன்படி, கடன் வழங்கும் நிறுவனத்தை ஒருவர் நடத்த விரும்பினால் அந்தந்த பகுதிகளில் உள்ள பதிவு செய்யும் அமைப்பிடம் மின்னணு படிவம் மூலம் பதிவு செய்ய வேண்டும். கடன் வழங்கும் நிறுவனத்தை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். வட்டி வீதம், இணையதள முகவரி, அலுவலக விவரங்கள் ஆகியவற்றை விளம்பர அறிவிப்புகளில் தெளிவாக கூற வேண்டும். அரசிடம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன் தீர்வு கிடைக்குமா? 2003 ஆம் ஆண்டில் கந்துவட்டி தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்ததை மேற்கோள் காட்டிப் பேசிய சி.பி.கிருஷ்ணன், "அதில், எத்தனை சதவீதத்துக்கு மேல் வட்டி வாங்கக் கூடாது என்ற விவரம் இல்லை. 'மிகவும் அதிகமான', 'மனதை உலுக்கும்' ஆகிய வார்த்தைகள் மட்டும் இடம்பெற்றிருந்தன" எனக் கூறுகிறார். "கடன் செலுத்த முடியாவிட்டால் குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டுவது, பலர் முன்னிலையில் தாக்குவது போன்றவற்றை தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு மிகப் பெரிய தீர்வாக அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனவும் அவர் தெரிவித்தார். இதே கருத்தை வலியுறுத்தும் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, " கடன் வசூலிப்பதில் காட்டப்படும் கெடுபிடியால் தற்கொலைகள் நடக்கின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது மிரட்டல்கள் குறைய வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார். கல்வி, வியாபாரம் ஆகியவற்றுக்கு அதிகளவில் கடன் பெறப்படுவதாகக் கூறுகிறார், நுகர்வோர் நலன் வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் நடராஜன். கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தும்போது சிக்கல் ஏற்படுவதாகக் கூறும் நடராஜன், "ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது அவருக்கு கடனைத் திரும்பச் செலுத்தும் திறன் உள்ளதா என்பதை நிதி நிறுவனங்கள் பார்ப்பதில்லை. அதைக் கவனித்தாலே பிரச்னைகள் குறைந்துவிடும்" என்கிறார். தொடர்பு கொள்க... நீங்களோ அல்லது உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பது தெரிய வந்தால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு மையத்தின் உதவி எண்ணான 044-24640050 -க்கு அழைப்பு விடுக்கவும். மாநில சுகாதாரத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தற்கொலை தடுப்பு மையத்திற்கு அழைப்புவிடுக்க 104 என்ற எண்ணையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy0j08lvzvwo

பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்; காணாமல்போனோரின் உறவுகளின் சங்கம்

1 month 2 weeks ago
கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடக சந்திப்பு 15 JUN, 2025 | 03:49 PM கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடக சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றுள்ளது. கிளிநொச்சியில் அவர்களது அலுவலகத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி யோகராசா கலாறஞ்சினி கலந்து கொண்டு குறித்த ஊடக சந்திப்பபை நடத்தியுள்ளார் இவ் ஊடக சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. இந்த அரசும் அதற்கான நீதியை பெற்று தருவதற்கு இது இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. அம்பாறை தம்பிலுவில் மத்திய சந்தை பகுதியில் இயங்கி வருகின்ற அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தை உடனடியாக அகற்றுமாறு அதன் தலைவிக்கு மக்களின் வாக்குகளை பெற்று தவிசாளராகிய சசிக்குமார் என்பவரால் அலுவலகத்தை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை (16) காலை அம்பாறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடைபெறவுள்ள ஐநா கூட்டத் தொடரிலே தங்களுக்கான நீதிப் பொறிமுறை விடயங்களை வலியுறுத்துவதுடன் இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா பிரதிநிதியிடம் காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்திப்பதோடு செம்மணிப்புதை குழி மற்றும் தொடுவாய் மன்னார் போன்ற புதைகுழிகளையும் பார்வையிட வேண்டும் என்றம் அது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன் வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217528

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தரப்புடன் அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும் - அமைச்சர் சந்திரசேகர்

1 month 2 weeks ago
15 JUN, 2025 | 12:59 PM தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது கிழிந்துவிட்டது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். சாவக்கச்சேரியில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. வடக்கிலும் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. தெற்கில் கடைபிடித்த அணுகுமுறையை இதுவிடயத்தில் நாம் வடகிழக்கில் கடைப்பிடிக்கவில்லை. இங்கு நடுநிலை வகித்தோம். நாம் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தால் இங்குள்ள தமிழ்க் கட்சிகளின் கனவு சிதைக்கப்படும். மனக்கோட்டை, மண்கோட்டையாக மாறிவிடும் என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றோம். இங்கு யார் ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சிக்கு நாம் உதவியாக இருப்போம். ஏனெனில் மக்களுக்கு சேவை செய்வதே எமது முதன்மை நோக்கமாகும். உள்ளூராட்சி சபைகள் ஊடாக மக்களுக்கு கிடைக்கப்பெறும் சேவைகள் சரியாக சென்றடைய வேண்டும். அதற்காக எமது உறுப்பினர்கள் தீவிரமாக செயற்படுவார்கள். அதேபோல ஊழல், மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கும் எமது உறுப்பினர்கள் செயற்படுவார்கள். மக்களை ஏமாற்றும் அரசியலை நாம் முன்னெடுக்கவில்லை. சாக்கடை அரசியல் செய்யவும் தயாரில்லை. அவ்வாறு செய்ய நினைத்திருந்தால் யாழ். மாநகரில் இன்று வேறொரு நபரே மேயராக வந்திருக்கக்கூடும். கடந்த காலங்கள் முழுவதும் தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட ராஜபக்சக்களுடன் நெருங்கி செயற்ப்பட்டவர் எனக் கூறப்பட்ட, மக்களுக்கு எதிராக அராஜாங்களை கட்டவிழ்த்துவிட்டவர் ஊடகவியலாளர்களைக் கொன்றவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேரும் நிலைமை காணப்படுகின்றது. இதனை மக்களும் இன்று புரிந்துகொண்டுள்ளனர். மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக அல்ல, தமது காவாலித்தனமான அரசியலை தக்கவைத்துக்கொள்வதற்காகவே இவர்கள் இவ்வாறு ஆசியமைக்கின்றனர். இப்படியானவர்கள்தான் தேசிய மக்கள் சக்தியை இனவாதகக் கட்சியெனவும், வாக்களிக்க வேண்டாம் எனவும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர்கள் யாரென்பது தற்போது அம்பலமாகியுள்ளது. அதேபோல தெற்கிலும் கூட்டுக்களவாணிகள் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கின்றனர். கடந்த காலங்களில் ஒருவரையொருவர் எப்படி விமர்சித்துக்கொண்டனர். ஆனால் வெட்கம் இல்லாமல் அதிகாரத்துக்காக - கொள்கை துறந்து கூட்டு சேர்கின்றனர் என்றார். https://www.virakesari.lk/article/217500

யாழில் வாள் வெட்டு - நால்வர் படுகாயம்

1 month 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 15 JUN, 2025 | 04:24 PM யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று சனிக்கிழமை (14) இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். இரண்டு குழுக்குளுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், அது மோதலாக மாறி வாள்வெட்டு நடைபெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த நால்வர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/217533

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
இஸ்ரேல் - இரான் மோதலில் அமெரிக்கா தலையிட்டால் என்ன நடக்கும்? 5 மோசமான சாத்தியக்கூறுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை இரவு இஸ்ரேலும் இரானும் சரமாரியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தின கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் லாண்டேல் பதவி, பிபிசி நியூஸ் 15 ஜூன் 2025, 01:50 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஜூன் 13-ஆம் தேதி அதிகாலையில் இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டதாக அறிவித்தது. இந்தத் தாக்குதல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற திட்டத்தின் ஓர் அங்கமாக நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார். இதில் இரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும் இரானின் புரட்சிகர காவல் படை தளபதி ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் கூறியது. இஸ்ரேலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்திருந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலை இலக்காகக் கொண்டு அவை செலுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சில கட்டடங்கள் சேதமடைந்தன. இஸ்ரேலை நோக்கி 2 அலைகளாக 100க்கும் குறைவான ஏவுகணைகளை இரான் ஏவியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே கூறினார். இப்போதைக்கு இஸ்ரேல் - இரான் சண்டை, இந்த இரு நாடுகளுக்கும் இடையிலானது என்றே தெரிகிறது. ஐக்கிய நாடுகள் சபையிலும் மற்ற இடங்களிலும் இரு தரப்பிலும் கட்டுப்பாடு தேவை என்று பரவலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவையனைத்தும் அவர்களது காதில் விழவில்லையெனில் என்ன செய்வது? அப்படி இரு நாடுகள் இடையிலான மோதல் மோசமடைந்தால் நிலைமை எப்படியெல்லாம் மாற வாய்ப்புள்ளது? அமெரிக்கா தலையிட்டால் என்ன நடக்கும்? அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்திருந்தாலும், அமெரிக்க படைகள் இஸ்ரேலின் தாக்குதல்களை ஆதரித்ததாகவும், குறைந்தபட்சம் மறைமுகமாக ஆதரித்ததாகவும் இரான் தெளிவாக நம்புகிறது. இராக்கில் உள்ள சிறப்புப் படை முகாம்கள், வளைகுடாவில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள ராஜ்ஜீய பணிகள் என மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க இலக்குகளை இரான் தாக்கக்கூடும். இரான் ஆதரவு பெற்ற ஹமாஸ், ஹெஸ்பொலா ஆகியவற்றின் பலம் குறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இராக்கில் அதன் ஆதரவுப் போராளிகள் ஆயுதம் ஏந்தியவர்களாக அப்படியே இருக்கின்றனர். அமெரிக்கா இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கும் சாத்தியமுள்ளது என அஞ்சி, சில அதிகாரிகளைத் திரும்பப் பெற்றது. தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், அமெரிக்க இலக்குகள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா இரானை எச்சரித்துள்ளது. ஒருவேளை டெல் அவிவ் அல்லது வேறு ஏதேனும் பகுதியில் ஓர் அமெரிக்க குடிமகன் கொல்லப்பட்டால் என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒருவேளை அமெரிக்கா நேரடியாக இந்தச் சண்டையில் பங்கெடுத்தால், அது கடுமையான, நீண்டகால மோதலுக்கு வழிவகுக்கும் டொனால்ட் டிரம்ப் எதிர்செயலாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இரானை தோற்கடிக்க உதவுவதற்கு அமெரிக்காவையும் இழுக்க முயல்வதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது நீண்ட காலமாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இரான் பூமிக்கடியில் நிர்மாணித்துள்ள ஃபோர்டோ போன்ற அணுசக்தி நிலையங்களை தகர்க்கக் கூடிய வகையில், கீழே ஊடுருவிச் சென்று தாக்கக் கூடிய குண்டுகள் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "மத்திய கிழக்கில் நீண்ட போர்களைத் தொடங்க மாட்டேன்" என்று டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களுக்கு உறுதியளித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் பல குடியரசுக் கட்சியினர் இஸ்ரேலை வலுவாக ஆதரிக்கின்றனர். இரான் அரசை அதிகாரத்தில் இருந்து அகற்ற முயல்வதற்கு இதுவே சரியான நேரம் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் உடன்படுகிறார்கள். ஒருவேளை அமெரிக்கா நேரடியாக இந்தச் சண்டையில் பங்கெடுத்தால், அது கடுமையான, நீண்டகால மோதலுக்கு வழிவகுக்கும். வளைகுடா முழுவதும் பரவுமா? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேலை தாக்குவது கடினமாக இருந்தால், அதற்கு ஆதரவளிக்கும் வளைகுடா நாடுகள் மீது இரான் குறிவைக்கலாம் இஸ்ரேல் ராணுவம் மற்றும் பிற இலக்குகளை இரான் சேதப்படுத்தத் தவறும் பட்சத்தில், அதன் கவனம் வளைகுடாவில் உள்ள பிற எளிய இலக்குகளை நோக்கித் திரும்பக்கூடும். குறிப்பாகப் பல ஆண்டுகளாக அதன் எதிரிகளுக்கு உதவியதாகவும் உடந்தையாக இருந்ததாகவும் இரான் நம்பும் நாடுகளை அதன் ஏவுகணைகள் குறிவைக்கலாம். இந்தப் பிராந்தியத்தில் ஏராளமான எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகள் உள்ளன. கடந்த 2019-இல் சௌதி அரேபியாவின் எண்ணெய் வயல்களைத் தாக்கியதாக இரான் மீது குற்றம் சாட்டப்பட்டது. இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி படைகள் 2022-இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலக்குகளைத் தாக்கியதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. அதன் பிறகு இரானுக்கும் பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளுக்கும் இடையே ஒரு வகையான சமரசம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த நாடுகள் அமெரிக்க விமானப்படைத் தளங்களுக்கு இடம் அளித்துள்ளன. அவற்றில் சில கடந்த ஆண்டு இரானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க உதவின. ஒருவேளை வளைகுடா நாடுகள் தாக்கப்பட்டால், இஸ்ரேலை போலவே அவையும் அமெரிக்க போர் விமானங்களைத் தனது பாதுகாப்புக்கு வருமாறு கோரக்கூடும். இஸ்ரேலின் தாக்குதல் தோல்வியடைந்தால் என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெஹ்ரான் மற்றும் பிற இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளை இஸ்ரேலிய தாக்குதல்கள் சேதப்படுத்தின. ஒருவேளை, இஸ்ரேல் இரானின் அணுசக்தித் திறனை அழிக்கத் தவறினால் என்ன நடக்கும்? இரானின் அணுசக்தி நிலையங்கள் மிகவும் ஆழமாகவும், நன்கு பாதுகாக்கப்பட்டதாகவும் இருந்தால் என்ன செய்வது? இரானின், 60% செறிவூட்டப்பட்ட 400 கிலோ யுரேனியம், முழுமையாக ஆயுதமயமாவதற்கு இன்னும் ஒரு சில படிகள் மட்டுமே உள்ளன. கிட்டத்தட்ட 10 அணுகுண்டுகளை உருவாக்கப் போதுமான அந்த திறன் அழிக்கப்படாவிட்டால் என்ன செய்வது? இது ரகசிய சுரங்கங்களில் ஆழமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இஸ்ரேல் சில அணு விஞ்ஞானிகளைக் கொன்றிருக்கலாம். ஆனால், எந்தக் குண்டுகளாலும் இரானின் அறிவு மற்றும் நிபுணத்துவத்தை அழிக்க முடியாது. ஒருவேளை இஸ்ரேலின் தற்போதைய தாக்குதல், இத்தகைய மேலதிக தாக்குதல்களைத் தடுப்பதற்கான ஒரே வழி தனது அணுசக்தித் திறனை வேகமாக நிறைவடையச் செய்வதுதான் என்று இரான் தலைமையை நினைக்க வைத்தால் என்ன செய்வது? புதிய ராணுவ தலைவர்கள் அதிக தலைக்கனத்துடனும், குறைவான எச்சரிக்கை உணர்வுடனும் இருந்தால் என்ன செய்வது? இந்தச் சூழ்நிலை ஏற்பட்டால், அது இஸ்ரேலை மேலும் தாக்குதல்களை நடத்தக் கட்டாயப்படுத்தக் கூடும். அது பிராந்தியத்தை தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் எதிர்த் தாக்குதல்களுக்கும் பிணைக்கக் கூடும். இஸ்ரேலியர்கள் இத்தகைய செயலை "புற்களை வெட்டுதல்" என்று அழைக்கின்றனர். உலகளாவிய பொருளாதார அதிர்ச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த மோதல் தீவிரமடைவது உலகளாவிய வாழ்க்கைச் செலவுகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் (சித்தரிப்புப் படம்) எண்ணெய் விலை ஏற்கெனவே உயர்ந்து வருகிறது. இரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடி, எண்ணெய் போக்குவரத்தை மேலும் கட்டுப்படுத்த முயன்றால் என்ன செய்வது? அரேபிய தீபகற்பத்தின் மறுபுறத்தில், ஏமனில் உள்ள ஹூத்திகள் செங்கடலில் கப்பல் போக்குவரத்தை தாக்கும் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்கினால் என்ன செய்வது? ஹூத்தி படையைக் கணிப்பது மிகவும் கடினமானது மற்றும் அவர்கள் ஆபத்துகளின் மீது தீராப்பசி கொண்டவர்களாக அறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். டிரம்பின் வரிக்குவரி யுத்தத்தின் விளைவாக ஏற்கெனவே உருவாகியுள்ள சிக்கலுக்கு நடுவே எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை உயர்வால் பயனடையும் ஒரே நபர் ரஷ்ய அதிபர் புதின் மட்டுமே. அதன் பயனாக, யுக்ரேனுக்கு எதிரான அவரது போருக்குத் தேவையான பணம் கிரெம்ளின் கஜானாவில் பில்லியன் கணக்கில் குவியத் தொடங்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. இரான் ஆட்சி வீழ்ந்து, வெற்றிடம் உருவானால்... பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானில் உள்ள தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவது ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தக்கூடும் இரானில் ஆட்சியை வீழ்ச்சியடையச் செய்யும் தனது நீண்டகால நோக்கத்தில் இஸ்ரேல் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்? இரானின் அணுசக்தித் திறனை அழிப்பதே தனது முதன்மை நோக்கம் என்று நெதன்யாகு கூறுகிறார். ஆனால், ஜூன் 13 அன்று வெளியிட்ட அறிக்கையில் அறிக்கையில் தனது பரந்த நோக்கம் ஆட்சி மாற்றத்தையும் உள்ளடக்கியது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். "இரானின் பெருமை மிக்க மக்களிடம்" அவர் தனது தாக்குதல் "தீய மற்றும் அடக்குமுறை ஆட்சி மீதானது" என்று அவர் குறிப்பிட்டதில் இருந்து "அவர்கள் சுதந்திரத்தை அடைவதற்கான பாதை இது," என்பது தெளிவாகிறது. இரான் அரசாங்கத்தை வீழ்த்துவது பிராந்தியத்தில் சிலருக்கு, குறிப்பாக சில இஸ்ரேலியர்களுக்கு ஏற்புடையதாக இருக்கக் கூடும். ஆனால் அது விட்டுச் செல்லப்போகும் வெற்றிடம் என்ன? அதன் எதிர்பாராத விளைவுகள் என்னவாக இருக்கும்? இரானில் உள்நாட்டு மோதல் எப்படி இருக்கும்? வலுவான மையப்படுத்தப்பட்ட அரசாங்கம் அகற்றப்பட்ட போது இராக் மற்றும் லிபியாவில் என்ன நடந்தது என்பது பலருக்கும் நினைவில் இருக்கலாம். எனவே, வரும் நாட்களில் இந்த மோதல் எவ்வாறு பரிணாமம் பெறுகிறது என்பதைப் பொறுத்தே நிலைமை மாறும். இரான் எவ்வாறு, எவ்வளவு கடினமாக பதிலடி கொடுக்கும்? இஸ்ரேல் மீது அமெரிக்காவால் எத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்? இந்த இரண்டு கேள்விகளுக்கான பதிலைப் பொறுத்தே அடுத்து வரக்கூடிய சூழ்நிலைகளும் அமையும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8e60nz2kkxo

பிரித்தானிய போர் விமானம் கேரளாவில் அவசரமாக தரையிறக்கம்

1 month 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 15 JUN, 2025 | 12:49 PM இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (14) இரவு பிரித்தானியாவுக்குச் சொந்தமான F-35 என்ற போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தாங்கி போர்க் கப்பலில் இருந்து புறப்பட்டதாக நம்பப்படும் இந்த ஜெட் விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததால் இரவு 9.30 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. சீராகவும் பாதுகாப்பாகவும் தரையிறங்குவதை உறுதி செய்வதற்காக விமான நிலைய அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்தனர். "விமானத்தில் குறைந்தளவில் எரிபொருள் இருப்பதாக அறிவித்து விமானி தரையிறங்க அனுமதி கேட்டார். தரையிறக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாகவும் முறையாகவும் கையாளப்பட்டது என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விமானம் தற்போது விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றவுடன் எரிபொருள் நிரப்பப்படும் என அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். டைபூன் விமானத்துடன் இணைந்து இயக்கப்படும் F-35B லைட்னிங், குறுகியதூரம் சென்று செங்குத்தாக தரையிறங்கும் திறன்களுக்கு பெயர் பெற்ற ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும். இது துல்லியமான தரைத் தாக்குதல்கள், மின்னணுப் போர், கண்காணிப்பு மற்றும் வான்வழிப் போர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆற்றுகின்றது. https://www.virakesari.lk/article/217509

இஸ்ரேல் – ஈரான் போர்: மூன்று முக்கியமான கேள்விகள்!

1 month 2 weeks ago
இஸ்ரேல் – ஈரான் போர்: மூன்று முக்கியமான கேள்விகள்! 14 Jun 2025, 4:46 PM சாக் பியூசாம்ப் வியாழனன்று இரவு, இஸ்ரேல் ஈரானுடன் போரைத் தொடங்கியது. ஈரானின் மூத்த இராணுவத் தலைமையையும் அணு விஞ்ஞானிகளையும் இலக்காகக் கொண்டு குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு ஒரு தந்திரோபாய வெற்றியாகவே அமைந்தன, ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே ஈரானின் ஒட்டுமொத்த இராணுவமும் அதன் புரட்சிகரப் படைகளின் தலைவர்களும் கொல்லப்பட்டனர். ஈரானிய வான் பாதுகாப்புத் தளங்கள் பெரும் சேதமடைந்தன. இஸ்ரேலுக்கு மிகக் குறைந்த இழப்புகளே ஏற்பட்டன. உடனடியாக ஈரானிடமிருந்து பெரிய பதிலடி எதுவும் வரவில்லை. ஆனால், வெள்ளிக்கிழமை பிற்பகல், ஈரான் இஸ்ரேல் முழுவதும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இது இஸ்ரேலின் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டி நடந்தது. இந்த எதிர்த் தாக்குதலின் முழுமையான தாக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்தப் போரில் மற்ற எந்தப் போரிலும் போலவே—ஆரம்ப நாட்களில் நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதன் முடிவு எப்படி இருக்கும் என்று இப்போதே உறுதியாகக் கணிப்பது கடினம். இஸ்ரேலிய அதிகாரிகள் இந்தத் தாக்குதல்கள் பல நாட்கள் அல்லது சில வாரங்கள் நீடிக்கும் என்று கூறுகிறார்கள். இது எதிர்காலத்தில் ஒரு முடிவில்லாத பிராந்தியப் போருக்கான அறிகுறியாகும். இந்த நிலையில், உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் அமைப்பின் ஈரான் நிபுணர் கரீம் சட்ஜாத்பூர் இவ்வாறு எழுதுகிறார்: “இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதலின் முழுமையான தாக்கம் வெளிப்படப் பல ஆண்டுகள் ஆகும் என்று வரலாறு நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இது ஈரான் அணு குண்டு தயாரிப்பதைத் தடுக்கலாம் அல்லது அணு குண்டை உருவாக்குவதை உறுதி செய்யலாம். இது [ஈரானிய] ஆட்சியைச் சீர்குலைக்கலாம் அல்லது அதை வலுப்படுத்தலாம்.” இந்த மோதலின் விளைவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றும் குறைந்தது மூன்று முக்கிய கேள்விகள் இருக்கின்றன. இஸ்ரேலின் நோக்கம், அவர்கள் கூறியது போல, ஈரானின் அணுசக்தித் திட்டத்தை அழிப்பதோடு மட்டுப்படுத்தப்பட்டதா, அல்லது இது ஆட்சி மாற்ற நடவடிக்கையா? ஈரான் எந்த அளவிற்குப் பதிலடி கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளது? இது அணு குண்டு பெறுவது குறித்த ஈரானின் சிந்தனையை எவ்வாறு பாதிக்கிறது? இந்தக் கேள்விகள் அனைத்தும் இப்போதைக்கு பதிலளிக்க முடியாதவை. ஆனால் நமக்குத் தெரிந்தவற்றை மதிப்பிட முயற்சிப்பது, கடந்த ஒரு நாள் நிகழ்வுகளின் தாக்கங்களைக் கண்டறியும் போது எதைத் தேட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த உதவும். இஸ்ரேலின் உண்மையான நோக்கம் என்ன? பல பதிற்றாண்டுகளாக, இஸ்ரேல் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைத் தன் இருப்புக்கான அச்சுறுத்தலாகவே கருதிவருகிறது. ஈரான் அணு ஆயுதம் பெறுவதில் உறுதியாக இருந்ததா அல்லது அச்சுறுத்தலாக உணர்ந்தால் விரைவாக ஒன்றைப் பெறுவதற்கான திறனை மட்டுமே விரும்பியதா என்பது ஒருபோதும் முழுமையாகத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அணுசக்தி திட்ட நடவடிக்கைகள் —உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யக்கூடிய மையவிலக்குகளை உருவாக்குவது போன்றவை — கடைசி நிமிடம்வரை ஒரே மாதிரியாக இருக்கும். அப்போது தாக்குதலால் அதைத் தடுப்பது சாத்தியமற்றதாகிவிடும். இஸ்ரேலியக் கண்ணோட்டத்தில், இஸ்ரேலியர்களைக் கொல்லும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாதக் குழுக்களை ஆதரிக்கும் மதகுருமார்களின் ஆட்சி அணு ஆயுதங்களை உருவாக்குவதை அனுமதிக்க முடியாது. இந்தக் காரணத்திற்காக, இஸ்ரேல் பல பதிற்றாண்டுகளாக ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்துவதாக அச்சுறுத்தி வருகிறது. நேற்று இரவு, இஸ்ரேல் அந்த அச்சுறுத்தலை நிறைவேற்றியது. ஈரானிய அணுசக்தி வளர்ச்சியின் “உடனடி” அச்சுறுத்தலால் இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் விவரித்துள்ளனர். அணு குண்டுகளை “சில நாட்களுக்குள்” தயாரித்திருக்க முடியும் என்று ஒரு அதிகாரி பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் இப்போதே தாக்குவதா அல்லது எதிர்காலத்தில் அணு ஆயுதம் தாங்கிய ஈரானை எதிர்கொள்வதா என்ற ஒரு தேர்வை எதிர்கொண்டதாக இஸ்ரேலின் நிலைப்பாடு உள்ளது. இந்தக் கூற்றுக்கள் எவ்வளவு உண்மை என்று நமக்கு இன்னும் தெரியவில்லை (ஒருவேளை ஒருபோதும் தெரியாமல் போகலாம்). ஆனால் நமக்குத் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கான நியாயப்படுத்தலுக்கும், அவர்கள் உண்மையில் தாக்கிய இலக்குகளுக்கும் இடையே சில முரண்பாடுகள் உள்ளன. தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள ஈரானின் நதான்ஸ் அணுசக்தி நிலையத்தின் காட்சி ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்கும் எந்த ஒரு முயற்சியும் இரண்டு இலக்குகளில் அதிக கவனம் செலுத்தும்: நதான்ஸிலும் ஃபோர்டோவிலும் உள்ள அணு செறிவூட்டல் வசதிகள். இஸ்ரேல் ஈரானிய அணு விஞ்ஞானிகளை இலக்காகக் கொண்டாலும், இயற்பியல் ஆராய்ச்சிப் பணிகள் சார்ந்த ஏற்பாடுகள் அழிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இஸ்ரேல் நதான்ஸைத் தாக்கியது, ஆனால் ஆரம்பகால நிபுணர் மதிப்பீடுகள் குறைந்த அளவிலான சேதத்தையே சுட்டிக்காட்டுகின்றன. ஃபோர்டோ ஆரம்ப சுற்றில் தாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும், குறைந்தபட்சம் பகிரங்கமாக இல்லை. எனவே, உண்மையான இலக்கு அணுசக்தித் திட்டம் என்றால், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திறன்கள்மீதும் இராணுவத் தலைமைமீதும் இவ்வளவு தாக்குதல் நடத்தி, அணுசக்தி உள்கட்டமைப்பிற்கு ஒப்பீட்டளவில் குறைந்த சேதத்தை இஸ்ரேல் ஏற்படுத்தியது ஏன் ? இந்த கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன. முதலாவது, போர் தொடரும்போது அணுசக்தி வசதிகளை இஸ்ரேல் மேலும் கடுமையாகத் தாக்கக்கூடும். ஈரானின் இராணுவத் தலைமையை – அதன் கிட்டத்தட்ட முழு விமானப் படையின் தலைமையையும் சேர்த்து – கொல்வதன் மூலம், இஸ்ரேல் ஈரானின் வான்பரப்பைப் பாதுகாக்கும் திறனையும் பதிலடி கொடுக்கும் திறனையும் பலவீனப்படுத்தியுள்ளது. இந்த முதல் தாக்குதல்கள், பின்னர் அணுசக்தி அமைப்புகளின் மீது அதிக கவனம் செலுத்தும் தாக்குதல்களுக்கு அடித்தளமாக அமையக்கூடும். அமெரிக்காவிற்கான இஸ்ரேலியத் தூதர் மைக்கேல் லீட்டர், வெள்ளிக்கிழமை ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில், “முழு நடவடிக்கையும் ஃபோர்டோவை அகற்றுவதன் மூலம் நிறைவு செய்யப்பட வேண்டும்” என்று கூறினார். இரண்டாவது விளக்கம் என்னவென்றால், இஸ்ரேலுக்கு இன்னும் பெரிய திட்டங்கள் உள்ளன. இது அணுசக்தி வசதிகளைக் கடுமையாகத் தாக்கும் என்பது உறுதி. ஆனால் ஈரானிய ஆட்சியின் அடித்தளத்தையே பலவீனப்படுத்துவதற்கான முயற்சியிலும் இது ஈடுபடும். முக்கியத் தலைவர்களை அகற்றுவதன் மூலம், இஸ்ரேல் ஈரானிய அரசாங்கத்தின் திறனை பலவீனப்படுத்துகிறது. இஸ்ரேலின் இறுதி நம்பிக்கை என்னவென்றால், இந்தத் தாக்குதல்கள் சிரியாவில் ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேலின் பேரழிவுத் தாக்குதல்களைப் போலவே ஈரானிலும் ஒரு விளைவை ஏற்படுத்தும். அரசாங்கத்தின் திறனைக் கடுமையாகச் சேதப்படுத்துவதன் மூலம், உள்நாட்டு எதிர்ப்பாளர்கள் அதைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்பு உருவாகும். வெளியுறவு உறவுகள் கவுன்சிலின் மத்திய கிழக்கு நிபுணர் ஸ்டீவன் குக், “ஃபாரீன் பாலிசி”யில் இவ்வாறு எழுதுகிறார்: “தாக்கப்பட்ட இலக்குகள், இஸ்ரேலின் நோக்கம் ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு சேதம் விளைவிப்பதைவிடவும் விரிவானது என்பதைத் தெளிவுபடுத்தின. ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு சேதம் விளைவிப்பதில் இஸ்ரேலியர்கள் திருப்தி அடையவில்லை என்பது தெளிவாகிறது, ஆனால் ஆட்சி மாற்றத்தில் ஈடுபட்டிருப்பதுபோல் தெரிகிறது.” சுருக்கமாகச் சொன்னால், வரவிருக்கும் நாட்களில் இஸ்ரேல் அணுசக்தி வசதிகளைக் கடுமையாகத் தாக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அணுசக்தி அழிப்பு, ஆட்சி மாற்றம் என்பதாக இஸ்ரேலின் லட்சியங்கள் விரிவானதாக இருந்தால் நீண்ட, ஆபத்தான மோதல் நிகழ்வதற்கான சாத்தியக்கூறை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும். ஈரானால் பதிலடி கொடுக்க முடியுமா? பல ஆண்டுகளாக, மத்திய கிழக்கு ஆய்வாளர்களிடையே இஸ்ரேல் ஈரானைத் தாக்குவதற்கு மிக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது பொதுவான நம்பிக்கையாக இருந்தது. ஈரான் பெரிய நாடு – ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளைவிட அதிக மக்கள் தொகை கொண்டது. அது இராணுவத்தில் பெரும் முதலீடு செய்துள்ளது. பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தையும், மத்திய கிழக்கைச் சுற்றியுள்ள பினாமி போராளிகளின் விரிவான வலையமைப்பையும் கொண்டுள்ளது, இவை அனைத்தும் இஸ்ரேலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த ஈரானின் ஏவுகணைத் தாக்குதல், அது குறைந்தபட்சம் சில பதிலடி கொடுக்கும் திறனைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆனால் எந்த அளவுக்கு அந்தத் திறன் உள்ளது? 2023, அக்டோபர் 7 தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் ஈரானின் பினாமி வலையமைப்பை முறையாக அழித்துவருகிறது. காசாவில் நடந்த கொடூரமான போர் ஹமாஸைத் தலைமறைவு இயக்கமாகச் செயல்படவைத்துள்ளது, இஸ்ரேலிய நகரங்கள்மீது பெரிய ராக்கெட் தாக்குதல்களை நடத்தக்கூடிய ஒரு மினி-அரசாக அல்லாமல் வெறும் கிளர்ச்சிக் குழுவைப் போல ஹமாஸ் சண்டையிடுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஹிஸ்புல்லாவின் தலைமைமீது நடந்த தொடர்ச்சியான திடீர்த் தாக்குதல்களின் விளைவாக ஹிஸ்புல்லா தற்போதைய சண்டையிலிருந்து விலகி இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் மத்திய கிழக்கைச் சுற்றியுள்ள ஈரானிய இலக்குகளை மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளது. இதில் 2024 அக்டோபரில் ஈரானின் வான் பாதுகாப்புமீதான பெரிய தாக்குதலும் அடங்கும். கடந்த ஆண்டு ஏப்ரலில் டமாஸ்கஸில் உள்ள அதன் தூதரகம்மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலை இலக்காகக் கொண்ட ஈரானிய ஏவுகணை, டிரோன் தாக்குதல் கிட்டத்தட்ட எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிகழ்வுகளுக்கு அடிப்படையில் இரண்டு சாத்தியமான விளக்கங்கள் உள்ளன. முதலாவது, ஈரான் இப்போது ஒரு காகிதப் புலி. அதன் பினாமிகளை அழிப்பதன் மூலமும் அதன் பதிலடி கொடுக்கும் திறன்களைப் பலவீனப்படுத்துவதன் மூலமும் இஸ்ரேல் ஒப்பீட்டளவில் அதிக இழப்பின்றி ஈரானைத் தாக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை நடந்ததுபோல ஈரானியர்கள் நிச்சயமாக பதிலடி கொடுக்க முயற்சிப்பார்கள். ஆனால் அது ஒப்பீட்டளவில் பலவீனமாக இருக்கும். இஸ்ரேலிய இலக்குகளுக்குக் குறைந்த சேதத்தை மட்டுமே ஏற்படுத்தும். இரண்டாவது விளக்கம், ஈரான் தன் பலத்தை வெளிப்படுத்தாமல் வைத்திருந்தது என்பதாகும். ஈரான் இஸ்ரேலை வெறுத்தாலும், அது முழு அளவிலான போரை தனது நலன்களுக்கு உகந்ததாகக் கருதவில்லை. இந்தக் காரணத்திற்காக, அது தனது மிகவும் பேரழிவுகரமான ஆயுதங்களையும் – யேமனில் உள்ள ஹவுதிகள் அல்லது ஈராக் போராளிகள் போன்ற அதன் மீதமுள்ள கூட்டாளிகளின் ஆயுதங்களையும் – பதற்றத்தை அதிகரிக்காமல் இருக்க ஒதுக்கிவைத்திருந்தது. இப்போது பதற்றம் வெளிப்படையாக வந்துவிட்டதால், ஈரான் தன்னை இனி கட்டுப்படுத்திக்கொள்ளாது. மேலும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பேரழிவுகரமான எதிர்வினை வரவிருக்கும் நாட்களில் நடக்கும். அத்தகைய தாக்குதல் இஸ்ரேலிய இராணுவ இலக்குகளை மட்டுமின்றி நாட்டின் நகரங்களையும் தாக்கும். ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை நிறுத்த முயற்சிக்கும். அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்கப் பணியாளர்களைக் கொல்லவும் வாய்ப்புள்ளது. இந்த இரண்டு காட்சிகளில் எது மிகவும் சாத்தியம் என்று நமக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இரண்டுக்கும் இடையில் நிறைய சாத்தியமான இடைவெளிகள் உள்ளன. ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக வலுவாக பதிலடி கொடுக்கிறது. ஆனால் போருக்கு முந்தைய மதிப்பீடுகள் அஞ்சியதைப் போல அமெரிக்கா அல்லது போக்குவரத்துக் கப்பல்களுக்கு எதிராக ஆக்ரோஷமான தாக்குதல் ஏதும் இல்லை. ஆனால் மோதலின் எல்லை, ஈரான் உண்மையில் பலவீனமாக இருக்கிறதா அல்லது அப்படித் தோன்றுகிறதா என்பதைப் பொறுத்தே பெரிய அளவில் தீர்மானிக்கப்படும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இந்த மோதலுக்குப் பிறகு ஈரான் அணு குண்டு பற்றி எப்படிச் சிந்திக்கும்? தொழில்நுட்ப ரீதியாக, ஒற்றைத் தாக்குதலில் ஒரு நாடு அணு குண்டு தயாரிப்பதைத் நிரந்தரமாகத் தடுப்பது சாத்தியமற்றது. இலக்கு வைக்கப்பட்ட அரசாங்கம் ஒரு ஆயுதத்தைப் பெற உண்மையிலேயே உறுதியுடன் இருந்தால், அழிக்கப்பட்ட எதுவும் மீண்டும் கட்டியெழுப்பப்படலாம். இஸ்ரேல், வன்முறையால் மட்டும், குண்டு தயாரிக்கும் ஈரானின் விருப்பத்தை அகற்ற முடியாது. எனவே இஸ்ரேல் நதான்ஸுக்கும் ஃபோர்டோவுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தினாலும், எதிர்காலத்தில் மற்றொரு தாக்குதலைத் தொடங்காமல் ஈரானியர்கள் அதை சரிசெய்வதைத் தடுக்க முடியாது. மேலும், வெற்றிகரமான இஸ்ரேலியத் தாக்குதல் அணுசக்தியைப் பெறுவதில் ஈரானின் ஆர்வத்தை வலுப்படுத்தும். அதாவது குண்டுகள் விழுவது நின்றவுடன் ஈரான் அணுசக்தி மறுசீரமைப்புக்காக பெரும் வளங்களில் முதலீடு செய்யும். இந்தத் தர்க்கத்தின்படி, இஸ்ரேலியத் தாக்குதல் இஸ்ரேலை முடிவற்ற போருக்கு இட்டுச் செல்கிறது. அதாவது ஈரான் தன் அணுசக்தித் திட்டத்தை மீண்டும் கட்டியெழுப்பாமல் இருக்க வேண்டுமானால் இஸ்ரேல் ஈரான்மீது குறிப்பிட்ட இடைவெளியில் குண்டுகளை வீசிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த வாதத்தைச் சற்றே ஆழமாக ஆராய்ந்துபார்க்கலாம். குறைந்தது மூன்று சாத்தியமான விளைவுகளை அலசலாம். முதலாவது, இது சரியானது. இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி வசதிகளுக்கு உண்மையான சேதத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் இந்தச் செயல்பாட்டில், எதிர்கால இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைத் தடுக்க ஒரு குண்டை உருவாக்க வேண்டும் என்று ஈரானை நம்ப வைக்கிறது. 1981 ஆம் ஆண்டில் ஈராக்கின் ஒசிராக் அணுசக்திக் கட்டமைப்பின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இதுவே நடந்தது. இது சதாம் உசேனின் அணுசக்தி வளர்ச்சியை இரட்டிப்பாக்கும் முடிவுக்குக் காரணமானது (இந்தத் திட்டம் 1992 வளைகுடாப் போரால் மட்டுமே உண்மையாகத் தடைபட்டது; அதைத் தொடர்ந்து அணுசக்தி ஆய்வுகள் நடந்தன). இரண்டாவது சாத்தியக்கூறு என்னவென்றால், இஸ்ரேலின் தாக்குதல்கள் அதன் விமர்சகர்கள் நினைப்பதைவிடவும் மிகவும் அதற்குப் பயனளிப்பதாக இருக்கலாம். ஒருவேளை, ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு இஸ்ரேல் ஏற்படுத்தும் சேதம் மிக அதிகமாக இருப்பதால், அவற்றை மீண்டும் கட்டியெழுப்புவது ஆபத்தானது என்றும் செலவு அதிகம் எனவும் ஈரானியர்கள் கருதலாம். அல்லது, ஆட்சி மாற்றத்திற்கான முயற்சி வெற்றிபெற்று, ஈரானில் புதிதாக வரும் அரசு அணுசக்தித் திட்டத்தை மீண்டும் தொடங்காமல், உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேண முடிவு செய்யலாம். மூன்றாவது சாத்தியக்கூறு: போரின்போது ஈரானின் அணுசக்தி வசதிகள் பொதுவாக எதிர்பார்க்கப்படுவதைவிட மிகக் குறைவான சேதத்தையே சந்திக்கின்றன. இஸ்ரேல் தடுப்பதற்குத் தயாராக இருக்கும் முன்பே ஈரான் ஒரு குண்டை உருவாக்க விரைந்து செயல்படுகிறது. இஸ்ரேல் இதுவரை பெற்ற வெற்றிகளைக் கருத்தில் கொண்டால் இது சாத்தியமற்றதாகத் தோன்றலாம். ஆனால் நிபுணர் மதிப்பீடுகள், ஈரான் தனது ஆயுதத் திட்டத்தைப் பாதுகாப்பதில் வெளிப்படையாகத் தோன்றுவதைவிட சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றன. மத்திய கிழக்கு நிறுவனத்தின் கொள்கை துணைத் தலைவர் கென் பொல்லாக், “ஃபாரீன் அஃபேர்ஸ்” இதழில் எழுதுகிறார்: “ஈரானிடம் ஏற்கனவே பல அணு ஆயுதங்களை உருவாக்கப் போதுமான அளவுக்குச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது. இது கொள்கலன்களில் அடைக்கப்பட்டு மூன்று வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் நடந்துகொண்டிருக்கும் இராணுவத் தாக்குதல்களில் இஸ்ரேலால் அவை அனைத்தையும் கைப்பற்ற முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேலிய மற்றும் பிற மேற்கத்திய உளவுத்துறைகள் புதிய, இரகசிய ஈரானிய அணுசக்தி தளங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கலாம். அவை அடையாளம் காணப்பட்டாலும் அந்தத் தளங்களை அழிப்பதிலும் சிக்கல் இருக்கலாம், ஏனெனில் ஈரான் தனது தற்போதைய வசதிகளின் அளவைவிட அவற்றை இன்னும் பலப்படுத்த வாய்ப்புள்ளது.” எவ்வளவு விரைவாக என்பது சேதத்தின் அளவைப் பொறுத்தது. ஆனால் ஐரோப்பிய கொள்கை பகுப்பாய்வு சிந்தனை மையத்தின் ஃபேபியன் ஹாஃப்மேன், “கணிசமானவை தப்பித்தால்” அது “ஒப்பீட்டளவில் விரைவாக ஆயுத-தர செறிவூட்டல் அளவை அடையலாம்” என்று கூறுகிறார். இந்த மூன்று சாத்தியக்கூறுகளில் எது நடக்க வாய்ப்புள்ளது என்று நமக்குத் தெரியவில்லை. இஸ்ரேல் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தியக்கூறுக்கும் ஈரான் மிக விரைவில் அணு குண்டை உருவாக்கும் சாத்தியக்கூறுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. எனவே, தற்போதைய மோதல்களின் தாக்கங்களை இப்போதே உறுதியுடன் கணிப்பது சாத்தியமல்ல என்பதே தெளிவாக இருக்கிறது. நன்றி: வோக்ஸ் இணைய தளம் https://minnambalam.com/israel-iran-war-three-important-questions/

துரோகிகள் Vs தியாகிகள்! — கருணாகரன் —

1 month 2 weeks ago
துரோகிகள் Vs தியாகிகள்! June 15, 2025 — கருணாகரன் — தமிழரசுக் கட்சி ஆரம்பித்து வைத்த தியாகி – துரோகி ஆட்டத்தை, தமிழரசுக் கட்சியே முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியின் ஆதரவோடு உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியதோடு ஈ.பி.டி.பியும் துரோகிப் பட்டியலில் இருந்தும் அரச ஒத்தோடிகள் என்ற பழிப்பெயரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட புனிதமளிப்பு நடைபெற்றுள்ளது. இனி, ஈ.பி.டி.பியை தமிழரசுக் கட்சியினர் துரோகிப் பட்டியலில் சேர்க்க முடியாது. அவர்களும் தமிழ்தேசிய அரசியலில் சங்கமித்துள்ளனர். இதுவரையிலும் ஈ.பி.டி.பியை துரோகி என்று சொன்ன வார்த்தைகள் அனைத்தும் அந்த வார்த்தைகளைச் சொன்னவர்களுடைய முகங்களிலேயே காறி உமிழ்ந்துள்ளன. அல்லது அவ்வாறு ஈ.பி.டி.பியைத் துரோகப்பட்டியலில் இன்னும் உள்ளதாகக் கருதும் தமிழரசுக் கட்சியினர், அதிலிருந்து வெளியேறி, தாங்கள் வலியுறுத்தும் புனிதத் தன்மையை நிரூபிக்க வேண்டும். தமது கண்டனங்களைத் தமிழரசுக் கட்சியின் தலைமையை நோக்கித் தெரிவிக்க வேண்டும். ஆனால், அப்படியெல்லாம் நடக்கக் கூடிய வாய்ப்பு சுத்தமாக இல்லை. யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழரசுக் கட்சி, ஈ.பி.டி.பியின் ஆதரவோடு அதிகார பூர்வமாகப் பதவியேற்று ஒரு முழுநாள் ஆகிவிட்டது. தம்மைச் சுத்தவாளிகள், விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியினர் என்று சொல்லிக் கொள்ளும் – காட்டிக் கொள்ளும் சிவஞானம் சிறிதரன் அணி கூட கனத்த மௌனத்தையே கொண்டுள்ளது. அந்த அணியைத் தவிர, வேறு எவரும் தமிழரசுக் கட்சிக்குள் தங்களைப் புனிதர்களாகக் காட்டிக் கொள்வதில்லை. நடிப்பில் உச்சத்தைத் தொடுவதுமில்லை. ஆகவே அவர்களும் ஈ.பி.டி.பியை புனிதமாக்குவதற்குச் சம்மதமாகியுள்ளனர். அல்லது அவர்களும் தமிழரின் அரசியலில் துரோகியாகியுள்ளனர். இதொன்றும் புதியதோ புதுமையானதோ இல்லை. நடிப்புச் சுதேசிகள் என்று பாரதியார் தன்னுடைய கவிதையில் பாடியதைப்போலவே இவர்கள் தங்களுடைய அரசியல் வாழ்வை முன்னெடுத்து வந்திருக்கின்றனர், வருகின்றனர். அதனுடைய வெளிப்பாட்டுக் காட்சிகளே இவையாகும். துரோகி அரசியலின் தொடக்கமும் வரலாறும்: 1950 களில் இலங்கை அரசியலில் செல்வாக்கோடு இருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த நல்லையா (மாஸ்டர்) அவர்களை வீழ்த்துவதற்காக எஸ். ஜே. வி.செல்வநாயகம் தூக்கியதுதான் இந்தத் துரோகி என்ற ஆயுதம். அதற்குப் பிறகு அமிர்தலிங்கம் அதைத் தூக்கி யாழ்ப்பாணத்தில் துரையப்பாவைத் துரோகியாக்கித் தொலைத்தார். பிறகு அமிர்தலிங்கமே துரோகியாக்கப்பட்டு புலிகளால் கொல்லப்பட்டார். இப்படியே நீண்ட துரோகிப் பட்டியல் ஈழ விடுதலை இயக்கங்களையும் விட்டு வைக்கவில்லை. இடதுசாரிகளையும் பலியெடுத்தது. சுருக்கமாகச் சொன்னால், ஈழ அரசியல் அரங்கிலும் அதற்கு வெளியிலும் பல ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பலி கொண்டது. அதேவேளை முன்னர் துரோகி என்று அடையாளப்படுத்தி, ஒதுக்கு அரசியலை (புறக்கணிப்பு அரசியல் அல்லது விலக்க அரசியல்) மேற்கொண்டவர்களே, பின்னர் தாம் ஒதுக்கிய, புறக்கணித்த தரப்பைப் புனிதத் தண்ணீர் தெளித்து, அரவணைத்த சங்கதிகளும் இந்த வரலாற்றில் உண்டு. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைத் துரோகியாக்கி, தன்னைத் தியாகியாக்கித் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ஆதிக்கத்தைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி, 1970 களின் முற்பகுதியில் காங்கிரசுடன் கூட்டு வைத்தது. அதுவே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். தமிழரசுக் கட்சி, தன்னுடைய அரசியல் இயலாமையை மறைத்துக் கொள்வதற்காகக் காங்கிரசுடன் சமரசமாகிக் கூட்டுச்சேர்ந்தது. அதோடு தன்னுடைய செல்வாக்கையும் தொடர்ந்தது. இப்படித்தான் 1980 களின் நடுப்பகுதியில் சக விடுதலை இயக்கங்களைத் துரோகிகளாக்கி ஒதுக்கிய விடுதலைப் புலிகள், 2000 த்தின் முற்பகுதியில் சமரசமாகி அவற்றைச் சேர்த்துக் கொண்டனர். அதுவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகியது. இதை நாம் திரும்பத்திரும்பச் சொல்லியே தீர வேண்டியுள்ளது. ஏனென்றால் தமிழ் அரசியற் பரப்பில் மூத்தோர் தொடக்கம் இளையோர் வரையில் பெருந்திரளானோர் இந்தத் துரோகி – தியாகி விளையாட்டில் தொடர்ச்சியாகவே ஈடுபட்டு வருகிறார்கள். வரலாறு எத்தனை தடவை மகத்தான உண்மைகளையும் யதார்த்த நிலைகளையும் எடுத்துச் சொன்னாலும், தன்னை நிரூபித்துக் காட்டினாலும் இவர்கள் அதிலிருந்து எதையும் படித்துக் கொள்வதேயில்லை. அதற்குத் தயாராகுவதும் இல்லை. அதனால் இந்த வரலாற்று உண்மைகளை திரும்பத்திரும்ப, திரும்பத்திரும்ப எடுத்துச் சொல்லியே ஆக வேண்டும். புத்திசாலிகளுக்கு ஒரு சொல். மூடர்களுக்கு ஆயிரம் வார்த்தைகள் என்பார்கள் அல்லவா! உலகில் இந்தளவுக்குத் துரோகி என்ற சொல்லோடு மிக நீண்ட காலம் – ஏறக்குறைய 75 ஆண்டுகள் – சீரழிந்த இனமோ சமூகமோ வேறு இருந்திருக்க முடியாது. அரசியலில் மட்டுமல்ல, கலை இலக்கியத்திலும் ஊடகத்துறையிலும் இந்தத் ‘துரோகி‘ முத்திரை குத்தும் போக்கு நீடித்தது. ஆக இந்த முட்டாள்தனம் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளிலும் செழித்துப் பரந்து வளர்ந்துள்ளது. இதற்குக் காரணம்: தங்களையும் விட திறனாளர்களாகவும் ஆற்றல்களாகவும் விவேகத்தோடும் துணிவோடும் காரியமாற்றியவர்களை எதிர்கொள்ள முடியாதபோது “தியாகி” என்ற ஆயுதத்தைத் தூக்கி, எதிர்த் தரப்பினரைத் தாக்கினார்கள். அதை எந்தக் கேள்வியுமின்றி, எத்தகைய விமர்சனமும் இல்லாமல் முழுத் தமிழ்ச்சமூகமும் கொண்டாடியது. விலக்குகள் மிகச் சொற்பமே. மறுவளத்தில் தங்களுடைய தவறுகளையும் பலவீனங்களையும் இயலாமைகளையும் மறைத்துத் தற்காத்துக் கொள்வதற்குத் “தியாகி” என்ற கேடயத்தைப் பயன்படுத்தித் தம்மைத் தற்காத்துக் கொண்டனர். கூடவே ரகசியமாக அரசுடன் கூட்டு வைத்துக் கொள்வது தவறல்ல என்றும். ஆனால் பகிரங்கத் தளத்தில் அப்படிச் செய்வது மாபெரும் குற்றச் செயல் என்றும் மக்களுக்குக் காட்டப்பட்டது. துயரம் என்னவென்றால், இதையிட்டுப் புத்திஜீவிகளும் பெரிய அளவில் மறுத்துப் பேசியதில்லை. பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் கூட இது குறித்துத் துணிச்சலாக எதையும் சொன்னதில்லை. பதிலாக அனைவரும் இதையே ஒப்பித்துக் கொண்டனர். என்பதால்தான் தமிழ்ச்சமூகத்தில் இந்தளவு மிக நீண்ட காலத்தை (முக்கால் நூற்றாண்டை) “துரோகி – தியாகி” விளையாட்டில் சீரழித்துக் கொள்ள வேண்டியிருந்தது. இங்கே நாம் கவனிக்க வேண்டியது துரோகி – தியாகி விளையாட்டில் பலியாகுவது உயிர்களும் ஜனநாயகமும் என்பதை. ஈழத் தமிழ் அரசியலில் இது நிரூபணம். ஈழத் தமிழ் அரசியலின் பின்னடைவுக்கும் தோல்விக்கும் காரணமும் இதுவே. இந்த நோய், பல ஆயிரம் ஆற்றலர்கள் பலரைப் பலியெடுத்த்தோடு, சிறந்த – பொருத்தப்பாடுடைய கருத்துகளுக்கும் இடமளிக்காமல் கொன்று வெட்டை வெளியாக்கியது. வரலாற்றுக் காரணம்: தமிழ்க் கலை, இலக்கிய வரலாறும் அரசியல் வரலாறும் துரோகி – தியாகி விளையாட்டுக்கு (நோய்க்கு) இடமளித்து வந்துள்ளது. பலருக்கும் தெரிந்த உதாரணங்கள். 1. வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றில் (திரைப்படத்திலும்தான்) எட்டப்பன் பாத்திரம். எட்டப்பன் காட்டிக் கொடுத்தபடியால்தான் வெள்ளையரிடம் கட்டபொம்மன் தோற்கடிக்கப்பட்டார் என்ற புனைவு. 2. அதை அடியொற்றி, பண்டாரவன்னியன் கதை. காக்கை வன்னியனால்தான் பண்டாரவன்னியனை வெள்ளையர்கள் இலகுவாகத் தோற்கடிக்க முடிந்தது என்ற வரலாற்றுக் கட்டமைப்பு. தமிழர்களுடைய வீரத்தை உயர்த்திக் காட்டுவதற்கு (அந்நியருடைய போர்த்திறனையும் சாணக்கியத்தையும் தந்திரோபாயத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் மறைத்துக் கொள்வதற்கு) இட்டுக் கட்டப்பட்ட புனைவுகளே இத்தகைய கட்டுக் கதைகளும் மிகுவாக்கமுமாகும். இதை நவீன அரசியல் சமூகமும் தனக்குள் ருசியாக விருப்போடு எடுத்துக் கொண்டது. இதற்காக அது இழந்ததும் பலி கொடுத்ததும் ஏராளம். இன்னும் இந்த நோய் முற்றாகத் தீரவில்லை. தமிழரசுக் கட்சி தன்னுடைய இயலாமைக் கட்டத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, ஏனைய தமிழ்த்தேசியவாதக் கட்சிகளும்தான். தற்போதைய நிலவரம்: கடந்த பாராளுமன்றத் தேர்தல், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் போன்றவற்றில் ஏனைய தமிழ்க்கட்சிகளை விட கூடுதலான இடங்களைத் தமிழரசுக் கட்சி பெற்றாலும் அது பலவீனமான நிலையிலேயே உள்ளது. தமிழ்க்கட்சிகளில் பெரிய கட்சியாக தமிழரசுக் கட்சியைச் சிலர் அடையாளப்படுத்தினாலும் உள்ளே அது கோறை விழுந்தே உள்ளது. மட்டுமல்ல, தமிழரசுக் கட்சி எதிர் ஏனைய தமிழ்க்கட்சிகள் என்ற நிலையே காணப்படுகிறது. கூடவே தனக்குள்ளேயே அது கடுமையான உள்முரண்பாடுகளையும் பலமான இடைவெளிகளையும் கொண்டுள்ளது. நீதிமன்ற வழக்குகளில் தமிழரசுக் கட்சி சிக்குண்டிருப்பதை நினைவிற் கொள்ளலாம். ஆகவே தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் தலைமைச் சக்தியாக வளர்த்துக் கொள்வதற்கும் தமிழரசுக் கட்சி கடுமையாக முயற்சிக்கிறது. அது சந்திக்கும் சவால்களுக்கு ஏற்ற அளவில் அதனுடைய முயற்சிகளும் தீவிரமாக – எல்லை கடந்ததாக உள்ளன. தமிழரசுக் கட்சியின் தலைமைச் சக்தியாக சுமந்திரன் இருப்பதால், காய்கள் துரிதமாக நகர்த்தப்படுகின்றன. தியாகி – துரோகி என்ற அடையாளப்படுத்தலுக்கு சுமந்திரன் அஞ்சிப் பணிகின்றவர் அல்ல. மட்டுமல்ல, சம்மந்தன் இருந்த காலத்திலேயே தமிழரசுக் கட்சிக்கும் – தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் துரோகி அடையாளம் வரத் தொடங்கியிருந்தது. இதனால்தான் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் அணி வெளியேறியது. சம்மந்தனின் இறுதிக் காலம் கூட ஏறக்குறைய துரோகி என்ற அடையாளத்தோடுதான் கழிந்தது. ஒருசாரார் அவரைத் துரோகியாகக் கடுமையாகச் சாடினர். இது அவருடைய மரண நிகழ்விலும் எதிரொலித்தது. பின்னர் மாவை சேனாதிராஜாவின் மரண நிகழ்விலும் தியாகி – துரோகி விளையாட்டுகள் நீடித்தன. அப்போதும் தியாகிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ள முயற்சிக்கும் தமிழரசுக் கட்சியின் சிறிதரனின் அணி கள்ள மௌனமே காத்தது. சம்மந்தனை இறுதிவரையிலும் தலைவராக – தலைமைச் சக்தியாகவே ஏற்றுக் கொண்டது இந்த அணி. இது சுமந்திரனின் காலம். ஆகவே அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகத் தமிழரசுக் கட்சியைக் கொண்டு வந்துள்ளார். மறுபக்கத்தில் தம்மைத் தியாகப் பரப்பு என்று சொல்லிக் கொண்ட கஜேந்திரகுமார் அணியும் (தமிழ்த் தேசியப் பேரவையும்) ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் கூட்டு வைத்துள்ளது. அதில் சமத்துவக் கட்சியின் முருகேசு சந்திரகுமாரும் உள்ளார். ஆக மிஞ்சியிருப்பது, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள்தான். அவையும் ஒருநாள் புனிதப்படுத்தப்படும். இன்னும் பிள்ளையான் அணி மாத்திரந்தான் துரோகி பட்டியலில் தொடருகின்றனர். அதாவது அவர்கள் கிழக்கு என்ற காரணத்தால் இன்னமும் தீண்டத்தகாதவர்களாக வைக்கப்பட்டுள்ளார்களோ?” அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை. சூழ்நிலைகளே எதையும் தீர்மானிக்கின்றன என்று சமாதானம் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான். கண்கெட்ட பின் சூரியோதயம். இதெல்லாவற்றுக்கும் ஒரு காரணம் NPP ஆகும். NPP யின் அரசியல் விளைவு, தமிழ் அரசியற் சூழலில் தியாகி – துரோகி என்ற அடையாளத்துக்கு முடிவைக் கொண்டு வந்துள்ளது. இப்பொழுது அனைவரும் துரோகிகள். அல்லது தியாகிகள். https://arangamnews.com/?p=12089

தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார்

1 month 2 weeks ago
பண்டிதர் பரந்தாமன் எனது அண்ணன் நித்தியகீர்த்தியின் நண்பர். அறுபதுகளில், என் அண்ணன் நடத்திய மக்கள் நாடகக் குழுவில் அவர் முக்கியமான வேடங்களில் நடித் திருந்தார். தமிழகத்தில் "பால பண்டிதர்" என்ற பட்டத்தை பெற்றுக்கொண்டு, அவர் நாடு திரும்பிய பின்னர் எந்த வேலைகளும் கிடைக்காமல் இருந்தபோது பொழுதுபோக்குக்காக நாடக மேடையில் நுழைந்தார். பரந்தாமன் நாடகங்களுக்கு பாடல்களையும் எழுதியுள்ளார். அவருடைய பாடல்களில் ஒரு வரி எனது மனதில் இன்றும் பதிந்துள்ளது: “தொட்டால் சுடுவது நெருப்பல்லவா? தொடாமல் சுடுவது அழகல்லவா?” என்று அந்தப் பாடல் தொடங்கும். புலோலி தமிழறிஞர் கந்தமுருகேசனாரின் மாணவனான வீரகத்தி பரந்தாமன், எனது அண்ணனுடன் கந்தமுருகேசனார் பற்றி உரையாடும்போது, அடுத்த அறையில் இருந்து நான் கேட்ட சில சுவாரஸ்யமான விடயங்கள் எனக்குள் பதிந்து விட்டன. அதில் இரு முக்கியமான விடயங்கள்,“கந்தமுருகேசனார் ஒரு விஷயத்தை வேகமாகச் சொல்லும்போது, வேறு விதமான அர்த்தம் பிறக்குமென்று கூறுவார். ‘அக்காளைக்கு மேல் ஏறும் அந்நஞ்சு உண்ணியை எக்காளமும் காண்பது அரிது’ என்று ஒன்று. மற்றையது, புலவர் சண்முகநாதன் ஒரு விருந்துக்குப் போன போது உணவு பரிமாறுவதற்கு அவருக்கு முன்னால் வாழை இலை வைத்தார்கள். அந்த இலையைப் பார்த்த புலவர் சண்முகநாதன், “புண்ட இலை” என்று சொன்னார். அதன் பின்னர் அண்ட இலை போட அதுவும் புண்ட இலை என்றார்” இந்த இரண்டும் நான் நண்பர்களுடன் அன்று பகிர்ந்து கொண்டவை. 60களில் பண்டிதர் பரந்தாமன், சத்தியசாயிபாபாவுக்கு எதிராக"புட்டர் புரத்துப் புரட்டன்" என்று தொடராக பல கட்டுரைகளை எழுதிவந்தார். பின்னர் அவற்றைத் தனது பணத்திலேயே அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார். அவர் தனது ஆசிரியர் வேலையில் இணைந்து திருமணம் செய்து கொண்ட பிறகு, எனது அண்ணனும் வெளிநாட்டிற்கு புறப்பட்டுப் போக அவருடனான எனது தொடர்புகள் நின்றுவிட்டன. நான் புலம் பெயர்ந்த பிறகு, பண்டிதர் பரந்தாமன் விடுதலைப் புலிகளுக்காக புரட்சிப் பாடல்களை எழுதியிருந்தார் என அறிந்தேன். அதில் குறிப்பிட்ட பாடலாக, “மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்.அவன் போன வழியில் புயலென எழுந்து போரில் வந்தார் புலி வீரர்” என்ற பாடலைச் சொல்வேன்.

தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார்

1 month 2 weeks ago
எனது பெருமதிப்புக்குரிய ஆசானுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். கணீர் என்ற குரலுடன், முகத்தில் புன்னகையும், மகிழ்வும் ததும்பக் கற்பித்த நாத்திகரான பண்டிதர் பரந்தாமன் ஆசிரியரிடம் சைவ சமய பாடம் கற்கும் பாக்கியம் எனக்கும் இருந்தது. சைவ சமயத்தை வெறும் பக்தி மதமாகக் பார்க்காமல் மெய்யியலாகக் கற்பித்து தத்துவம் மேல் விருப்பை ஊட்டியவர். —-—- “பிறமொழிக் கலப்பை அதீத மொழிப்பற்றுக் கொண்டு எதிர்த்த பண்டிதர் வீ.பரந்தாமன்” -வீரகேசரி- 08.12.2024 கொழும்பில் இருந்து வெளிவந்திருக்கும் வீரகேசரி வாரவெளியீட்டில்(ஞாயிற்றுக் கிழமை) பதிவேற்றம் பெற்றிருக்கும் ஆளுமை……. ஈழத்துக் கலை,இலக்கியப் பரப்பில் தமிழ்மொழி வாழ, இன உணர்வு மேலெழ அரும்பாடுபட்டு தற்போது உடலால்,உளத்தால் நலிவுற்றிருக்கும் பேரன்புக்குரிய மிகப் பெரும் ஆளுமை பண்டிதர் வீ.பரந்தாமன் ஐயா அவர்களின் பார்வையோடு இணைவோம்…… அன்போடு நோக்குகிறோம்:- தாயகக் கவிதாயினி பிறேமா எழில் அவர்களை. அன்புமிகு நன்றி திரு.சி.சிறிகஜன் அவர்கள், பிரதம ஆசிரியர், வீரகேசரி, மற்றும் நிர்வாகக் குழுமத்தினர்க்கும். யாழ்.உரும்பையூர் து.திலக்(கிரி) சுவிற்சர்லாந்திலிருந்து எழுதும்… வாரம் ஒரு படைப்பாளி… *********************** (பார்வை - 20) தாயக மண்ணின் முதுபெரும் கலை இலக்கியப் பேராளரும் கல்விசார் ஆசிரியரும் பாலபண்டிதர், பண்டிதர், மொழி ஆய்வாளர், கவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர், தாயக தேசப்பற்றாளர் என இப் பேராளுமைகளைக் கொண்ட பலராலும் நன்கு அறியப்பட்டு விருப்பத்தோடு அணுகக்கூடிய பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள் பற்றிய பார்வையோடு இவ்வாரம் இணைகிறோம்… பழம்பெரும் பாரம்பரியத்தையும், புராதன மொழி, சமயம், கலாச்சார மரபு, பண்பாட்டு விழுமியங்களையும் தனித்துவமாகக் கொண்டு புலவர்கள் வாழ்ந்து நிறைந்த யாழ் வடமராட்சி பிரதேசத்தின் புலோலி தெற்கு எனும் சிற்றூரில் வீரகத்திப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இணையருக்கு 1942ஆம் ஆண்டு பண்டிதர் பரந்தாமன் அவர்கள் பிறந்தார். ஈழ, உலக தமிழ் இலக்கியப் பரப்பு இவரைப் புறந்தள்ளியதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பட்டிதொட்டியெங்கும், உலகத்தின் மூலை முடுக்கெங்கும், தமிழர் வாழ்கின்ற தேசங்களெங்கும் இவரது வரிகளில் அமைந்த பாடல்கள் இவரது தனித்துவத்தை சாட்சியாக இன்று கட்டியங்கூறி நிற்கிறது. இன்றுமட்டுமல்லாது என்றென்றும் இவர் வரிகளும் ஆளுமைகளும் பேசப்படும். இவர் நவீனத்தைக் கிளறி எறிந்து மரபுரிமையோடு பின்னிப் பிணைந்தவையாக இவரது படைப்புகள் அமைவதோடு மக்களை அதற்குள் இலகுவாக உள்ளீர்த்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. சிறுபராயத்திலேயே தன் தாய்மொழிமீது தீராத காதல் கொண்டு தமிழ்ப் பொத்தகங்களை தேடி நாடி வாங்கி தானாகவே கற்று அறிந்துகொண்டு மனப்பாடம் செய்தலையும் தனது விருப்போடு ஒன்றாக்கிக்கொண்டார். பண்டிதர் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை யா/புற்றளை பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யா/கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். தமிழ் அறிஞர் கந்த முருகேசனாரிடம் குருகுல முறையில் மேலதிகமாக தமிழ்க் கல்வியைக் கற்று பாலபண்ணிதர், பண்டிதர் கல்வியை (ஆசிரிய திராவிட பா.ஜா அபிவிருத்திச் சங்கத்தில் நிறைவு செய்தார். குடும்பம் வறுமையில் வாடிய போதும் தன் தாய்மொழி மீது கொண்ட அதீத தேடலையும் விருப்பத்தையும் கைவிடவில்லை. அதன் பயனாக தனது மேற்படிப்புவரை கல்விகற்று ஆசிரியப் பணியையும் ஆரம்பித்தார். கற்பித்தல் காலத்தில் இலகு முறையில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்ததால் இவருக்கு “நல்லாசிரியர்” விருது கிடைக்கப்பெற்றதும் சிறப்பம்சமாகும். இவரது ஆசிரியப் பணி பற்றி நோக்குகையில் * 1970ஆம் ஆண்டு மாணவ ஆசிரியராக * 1973 - 1974 வரை திருகோணமலை இந்துக்கல்லுரியில் பயிற்றப்பட்ட ஆசிரியராக * பதினெரு (11) ஆண்டுகள் யா/புற்றளை மகாவித்துயாலயத்தில் * யா/உடுத்துறை மகா வித்தியாலயம் * யா/மணற்காடு தமிழ்க் கலவன் பாடசாலை * 1983 - 1996 வரை யா/பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி * 1996 - 2002 வரை மு/கோம்பாவில் விக்னேஸ்வரா வித்தியாலயம் * 2005 - 2008 வரை கிளி/தமிழ்ப் பயிற்சிக் கல்லூரி ஆகிய கல்விச் சாலைகளில் தன் கற்பித்தல் திறனை பெரிதும் வெளிக்காட்டிநின்ற பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள் தமிழ்மொழி மீதும், ஈழதேசத்தின் மீதும், தலைமைத்துவம் மீதும், களச் செயற்பாட்டாளர்கள் மீதும் தீராத பற்றுக்கொண்டு தனதுவீடு முதலான தன்பிள்ளைகளுக்குத் தூய தமிழ்ப்பெயர்களைச் சூட்டி மாணவர்களுக்கும், களச் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ்ப்பற்றை ஊட்டிக் கற்பித்தார். தமிழ் இலக்கண இலக்கியத்தை இலகுவாக இனிமையாகக் கற்பிப்பதில் வல்லவர். “தமிழைப் பழித்தால் தாய் தடுத்தாலும் விடேன்" என்று கவிஞர் பாரதிதாசன் கூற, பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள் ஒருபடி மேலே சென்று, "தமிழ்மொழியைப் பழித்துரைத்தால் எம்மையீன்ற தாயெனினும் அன்னாளைக் கொல்ல வேண்டும்" என முழக்கமிட்டார். இவரின் மொழியாற்றலால் கவரப்பட்ட தேசத்தின் தலைமைத்துவம் களச் செயற்பாட்டாளர்களுக்கு தமிழ்மொழி கற்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தார். அன்றைய காலத்தில் போக்குவரத்திற்காக தன் பணி நிமிர்த்தம் தனக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வேணும் என்று தேசத் தலைமைக்கு ஒரு வேண்டுகையைக் கவிதை வடிவில் எழுதினார். அவ்வரிகளாவன, "கொந்துமணி தேர்வேண்டேன் கோமகனே உன்னிடத்தில் கந்துகடா களிறும் யான் வேண்டேன் முன் நீ அழைத்தால் வந்துசெல்ல வளமாக மனமகிழ்ந்தே ஒரு சிறிய உந்துருளி தந்துதவ வல்லையோ உடன்பிறப்பே" என வரிகளைக் கோர்த்தனுப்பினார் பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள். உரியவர் கரம் கிடைத்ததும் உடனே படித்து மெய்சிலிர்த்தார். உள்ளத்தில் இருந்தவற்றை எழுத்துவடிவாய் வேண்டுகை விடுத்த பண்டிதரின் உரிய வகைத் தேவை அறிந்து அவ்வேண்டுகையை சிரமேற்று அவருக்கான உந்துருளியை வழங்கியதோடு, முதன்முதலாக மோட்டார் சைக்கிள்( motor bike) என்ற வாகனத்துக்கான தூய தமிழ்ச்சொல்லான 'உந்துருளி' என்ற சொல் பண்டிதரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இவருடைய புலமைக்குச் சான்று. இவர் தமிழின எழுச்சி, மனங்கள் மாற்றங்காணும் வகையிலான எழுச்சி, மொழியினுடைய வளர்ச்சி நிலை என்ற கட்டமைப்புக்குள் நின்று இலக்கியங்களைப் படைத்தவராவார். இவருடைய தாயகப் பாடல்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனதில் இன உணர்வையும் மொழிப்பற்றையும் தேசப்பற்றையும் பெரிதும் விதைத்தது எனலாம். இவர் எழுதிய பாடல்கள் பல ஒலி நாடாக்களில் பதிவாக்கம் பெற்றுநிற்கிறது அவற்றுள் சில… 01. மானம் ஒன்றே வாழ்வெனக்கூறி.. 02. போடு போடு வீர நடைபோடு... 03. கோணமலை எங்கள் ஏணைமலை... 04. நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள்... 05. தம்பிகளே அன்புத் தங்கைகளே கொஞ்சம் நில்லுங்கள்.. 06.நிலவற்ற வானத்தில் வெள்ளி சிரிக்கும்…. இப் பாடல்கள் எக் காலத்திலும் மனதிற்கு இனிமையையும் தேசத்தின் பெருமையையும் இனமான உணர்வுகளையும் பறைசாற்றி நிற்கும் சான்றுகளாகும். இதனை வரியாக்கிய அவரது கரங்களுக்கும் சிந்தனா சக்திக்கும் ஈழதேசம் சார்பாக நன்றியுணர்வைக் காணிக்கையாக்குவதோடு இவர் இலக்கியப் பெருநிலத்தில் விதையாகத் தூவிய நூல்களாவன… 01. மனிதரும் கடவுளும் - 1968 02. தமிழ் 9 இன் பயிற்சி விடைகள் - 1975,1986 03. தமிழ்மலர் 10 இன் பயிற்சி விடைகள் - 1986 04.புதியதோர் புறம் (ஒலிநாடா) - 1990 05.தமிழ் நடந்த தடங்கள்( கவிதை) - 1995 06. கெரிலாப்போர் விரகுகள் - 1996 07. பண்டைக்குமரியும் பழங்குடித் தமிழரும் - 2001 08. திருக்குறளில் செந்தமிழாட்சி - 2005 09. வேரடிவழித் தமிழ்ச் சொற்பிறப்பியல் சிற்றகரமுதலி -2004 10. தமிழ்ப்பெயர் கையேடு மக்கட்பெயர் 46000 11. அருகிவரும் பழந்தமிழ்ப் பேச்சுவழக்கு சொற்பிறப்பியல் அகராதி 'அ' மட்டும். -2008 12. தமிழர் உறவுமுறைச் சொல்வழக்கு அகராதி -2016 இவ்வாறான அரிய நூல்களை தமிழுக்கும் அதன் நுகர்வோருக்கும் அள்ளியள்ளி படையல் செய்திருக்கும் இப் பண்டிதர் காலத்திருக்கு தந்திருப்பது அளப்பரிய கனதியாகும். அதுமட்டுமன்றி பெண்ணடிமை, பண்பாட்டுச்சிதைவுகள் , குடும்பவன்முறை போன்ற விழிப்புணர்வுசார் நாடகங்களையும் எழுதி ஆரம்பநிலை களச்செயற்பாட்டாளர்களுக்கு பயிற்றுவித்து அரங்கேற்றி பெரு வரவேற்பைப்பெற்ற அரங்காற்றுகைகளாக * அறியாமையின் விடிவு * வாழவிடுங்கள் * ஒற்றைச்சிலம்பு * காடுகாத்த காவலன் * வீழ்ந்த யாழ்ப்பாணம். இவ்வாறான பல்வேறுபட்ட கலை வடிவங்களை மொழி பிறழாது தாய்மொழியின்பால் நின்று படைப்பியக்கம் செய்தது வரலாற்று முக்கியத்துவம்பெற்று நிற்கிறது. பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்களுடைய கவிதைகளை நோக்கினால் சீர்திருத்த கருத்துகள் நிறைந்த சந்தங்கள், இயைபுகள் நிறைந்த வரிகளாகவே அமையும். இவருடைய “தமிழ் நடந்த தடங்கள்” என்ற கவிதையில்… "கடவுள் என்று வணங்குவர் செதுக்கிய கல்லை கனிச்சிலை கொள்வதற்கு ஏன் மனமில்லை மடமைக்கு இதைவிட வேறென்ன எல்லை --கெட்ட ஆடவர்க்கு போடுங்கள் மாடுண்ணும் புல்லை" இவ்வாறாக வாசிக்கும்போதே எல்லையற்ற ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்ற இப் பண்டிதர் சமூகத்துள் புரையோடிப் போயுள்ள சீர்வரிசைக் கொடுமையை கனகட்சிதமாக சாடி நிற்கிறார். இவ்வாறாக பல விடயப் பரப்புளை உள்ளடக்கிய கவிதைகளை தனது படைப்புகளில் ஆழமாகவும் அழகாகவும் வடித்துள்ளார். பண்டிதர் அவர்கள் தனது பன்முக ஆளுமைகளுக்காகப் பல விருதுகளும் சான்றுகளும் பெற்று மாண்பேற்றப்பட்டார். * நல்லாசிரியர்விருது * இலக்கியதுறை கலைப்பரிதி விருது ( வடமராட்சி வடக்கு கலாசாரபேரவை) * இயல்துறை கலைவாரிதி (வடமராட்சி கல்விவலயம்) * தமிழ்மாமணி விருது(அகில இலங்கை இளங்கோ கழகம்) * பேராளுமை விருது(வெண்மேரி அறக்கட்டளை) பன்முகத்தன்மை ஆளுமைக்கான விருது. மேற்குறிப்பிட்ட விருதுகள் மதிப்பளித்து நின்றாலும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் உலக இலக்கியப் பரப்பிலும் பண்டிதர் வீ.பரந்தாமன் என்றாலே தமிழின் மாமேதை என்கின்ற தனித்துவ அடையாளம் என்றும் அவரை அலங்கரித்து நிற்கிறது. இது பெறுதற்கரிய விருதாகும். சமூகப் பரப்பிற்குள், வாழ்வியல் முறைமைகளுக்குள் பார்த்தீனியச் செடியைப்போல் ஆங்காங்கே பற்றிப் படர்ந்திருக்கும் சமூகப் பிறழ்வுமிக்க செயற்பாடுகளை தன் தாய்மொழியை ஆயுதமாகக் கொண்டு சீர்செய்ய நினைத்த பண்டிதர் அவர்கள் தனது முதலாவது காகிதப் பிரசவமாக “கடவுளும் மனிதனும்” என்ற தலைப்புத்தாங்கி வெளிவந்து அவரது கொள்கையைச் சுட்டிக்காட்டி நிற்கிறது. தாய்மொழியையே தெய்வீகமாகக் கொண்டு இன்பத் தமிழில் மட்டுமே இறையின்பம் காண்பவர் பண்டிதர் வீ.பரந்தாமன் ஆவார். பேச்சுவழக்கிலோ எழுத்துமுறையிலோ பிறமொழிக் கலப்பை அதீத மொழிப் பற்றுடன் எதிர்ப்பவர். தமிழ், ஆளுமைமிக்க தலைமை, தாயக நிலம், தமிழர் கலை கலாச்சாரப் பண்பாடு, என தான் வரித்த கொள்கைப் பற்றோடும் உணர்வோடும் வாழ்ந்துவருபவர். இவ்வாறான ஆளுமையும் தாயக தேசத்தில் தீராத பற்றுமுடைய இவர் தமிழ் இனத்திற்குக் கிடைத்த அரும்பெரும் சொத்து எனலாம். வயது மூப்பின் காரணமாக உடல்மெலிந்து குரல் தளர்ந்து சிந்தனாசக்தி குன்றி நின்றாலும் ஓடியோடி தமிழுக்காய் உழைத்த கால் ஓய்ந்தாலும் படைத்த படைப்புகளும் ஆற்றிய சேவைகளும் தமிழுக்காய் அர்ப்பணித்த வாழ்வியல் தடங்களும் ஓயாது நிலைத்திருந்து உங்கள் கதை பேசி நிற்கும். உங்கள் படைப்புகளுக்காய் ஈழதேசம் என்றும் நன்றியுணர்வைப் பற்றி நிற்பதோடு நலம்பெற வேண்டி நிற்கிறோம். து.திலக்(கிரி), 08.12.2024,

தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார்

1 month 2 weeks ago
தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார் ஜூன் 15, 2025 “மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்…” என்ற புகழ்பெற்ற ஈழப் புரட்சிப்பாடலை எழுதிய கவிஞர் தமிழ் அறிஞர் பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்கள் காலமானார். பண்டிதர் பரந்தாமன் வடமராட்சியை புலோலியைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர் ஆவார். இவர் கிளிநொச்சியில் உள்ள பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும், இவர் எழுதிய “தமிழர் உறவுமுறைச் சொல் வழக்கு அகராதி” என்ற நூல் குறிப்பிடத்தக்கது. கெரில்லாப் போர் விரகுகள் என்ற விடுதலைப் போராட்டம் சார்ந்த முக்கிய நூலையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் மனிதரும் கடவுளும் மற்றும் வேர் – அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகரமுதலி முதலிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். —-—- வீரவணக்கம் மொழிக்கான இனத்துக்கான தேசத்துக்கான வீரவணக்கம் இனத்துக்காகவும், தமிழ்மொழிக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடியவர். தமிழ்த் துறை ஆசானும், பண்டிதரும், பருத்தித்துறையைச் சேர்ந்த முன்னாள் ஹாட்லி கல்லூரி தமிழ் ஆசிரியருமான எங்கள் மதிப்பிற்குரிய ஆசான் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா இன்று காலமானார் என்ற துயரான செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்கின்றோம். அவரது பங்களிப்புகள் எங்கள் மனதில் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.வரும் ஓகஸ்ட் மாதத்தில், எங்கள் வகுப்பு தோழர்களுடன் அவரை நேரில் சந்தித்து, ஆசி பெறும் ஆசையுடன் எதிர்நோக்கியிருந்த நாங்கள், இன்று அவரை இழந்த வெறுமையில் நிலைகுலைந்து நிற்கிறோம். இன்று அவரின் தமிழ் உரைகளும், பாடசாலை நாட்களில் அவர் கற்பித்த தமிழின் நயமும், அவரது குரலோடு எங்கள் மனங்களில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அவரது அறிவும், கருணையும், நாட்டுப்பற்று நிரம்பிய வாழ்வும் எங்களுக்குத் தாங்க முடியாத இழப்பாகவே திகழ்கின்றன.அன்னாரின் ஆழ்ந்த பணிகள் எப்போதும் எங்கள் நினைவில் நிலைத்திருக்கும். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். அவரது குடும்பத்தாருக்கும் நெருங்கிய உறவினருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். -நவஜீவன் அனந்தராஜ்- https://www.battinatham.com/2025/06/blog-post_264.html

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - டெல் அவிவ் இராணுவ தலைமையகம் தகர்ப்பு June 15, 2025 1:25 pm 0 comment இஸ்ரேல் ஒரே நாளில் 2 முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் உட்படபல நகரங்கள் மீது ஈரான் நேற்று (14) ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் இராணுவ தலைமையகம் உட்பட பல கட்டடங்கள் தகர்க்கப்பட்டன. ‘ஈரான் 60 சதவீதம் தூய்மையுடன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்துள்ளது. இதை 90 சதவீதம் செறிவூட்டினால் ஈரான் விரைவில் 9 அணுஆயுதங்களை தயாரித்துவிடும்’ என்று ஐக்கிய நாடுகள் சபையில், சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கடந்த மே 31ஆம் திகதி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி 60 நாட்கள் கெடு விதித்திருந்தார். அந்த கெடு முடிவடைந்தது. இதற்கிடையே, அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டியதால், அந்நாட்டின் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் விமானப்படையின் 200 போர் விமானங்கள், ஈரானில் 100 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 9 அணு விஞ்ஞானிகள், 3 இராணுவ தளபதிகள் உட்பட 78 பேர் உயிரிழந்தனர். 320 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 150 இடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இராணுவ மையங்கள், விமானப்படை தளங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல நகரங்களிலும் சைரன் மூலம்மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பீதியடைந்த மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர். எதிரி நாடுகளின் வான் தாக்குதலை சமாளிக்க அயர்ன் டோம் என்ற வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இஸ்ரேல் பயன்படுத்தி வந்தது. இந்த ஏவுகணைகள் நேற்று முன்தினம் இரவு முதல் வானில் சீறிப் பாய்ந்தன. ஆனால், நேற்று ஈரான் நடத்திய தாக்குதலை, இஸ்ரேலின் அயர்ன் டோம் ஏவுகணைகளால் முற்றிலும் தடுக்க முடியவில்லை. இதனால், டெல் அவிவ் நகரில் உள்ள இராணுவ தலைமையகம் மீது குண்டுகள் விழுந்து வெடித்தன. ஜெருசலேம் நகர், ரிசான் லெசியான் ஆகிய பகுதிகள் மீது நேற்று அதிகாலை ஏவுகணைகள் வீசப்பட்டதில் ஏராளமான குடியிருப்புகள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அனைத்து பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. ஈரான் தலைவர் அயதுல்லா அலி கொமேனி கூறும்போது, ‘‘இஸ்ரேலுடன் போரிட ஈரான் ராணுவ படைகள் தயார் நிலையில் உள்ளன. மக்கள் அனைவரும் ராணுவத்துக்கு ஆதரவாக உள்ளனர்’’ என்றார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியபோது, ‘‘இன்னும் சில மாதங்களில் ஈரானால் அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும். இது இஸ்ரேலுக்கு ஆபத்து. அதனால்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் மீதான தாக்குதல் தொடரும்’’ என்றார். இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடாவ் ஷோசானி கூறுகையில், ‘‘ மத்திய கிழக்கில் தற்போதைய பதற்றத்துக்கு காரணம் ஈரான். அணு ஆயுதங்களை தயாரித்து இஸ்ரேலை அழிக்க ஈரான் திட்டமிடுகிறது. அதனால்தான், அணு ஆயுத தளங்களை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தினோம். இஸ்ரேலில் மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது’’ என்றார். இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் நேற்று கூறியபோது, ‘‘ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால், அதற்கான கடும் விளைவுகளை ஈரான் மக்கள் சந்திப்பார்கள். தலைநகர் டெஹ்ரான் பற்றி எரியும்’’ என்று தெரிவித்தார். இரு நாட்டின் தலைவர்களும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா, ரஷ்யா கருத்து: இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியபோது, ‘‘ஈரானுக்கு பல வாய்ப்புகள் அளித்தேன். அப்போதே, என் பேச்சை கேட்டிருக்க வேண்டும். ஈரானில் பேரழிவு ஏற்படுவதற்கு முன்பாக, அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஒப்புக்கொள்ள வேண்டும்’’ என்றார். ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஐ.நா சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கியானுடன் அவர் தனித்தனியாக தொலைபேசியில் பேசினார். இரு நாடுகள் இடையிலான பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் புதின் கூறியுள்ளார். கச்சா எண்ணெய் விலை உயர்வு: இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை நேற்று ஒரே நாளில் பேரலுக்கு 6 டொலர் உயர்ந்து 78 டொலரானது. இதன்மூலம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைக்கு சென்றது. எனினும், இறுதியில் 74 டொலராக நிறைவடைந்தது. இந்த போர் தீவிரமானால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என தெரிகிறது. இதுகுறித்து எஸ் அன்ட் பி குளோபல் தலைவர் ரிச்சர்டு ஜோஸ்விக் கூறியதாவது: இஸ்ரேல் – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளது. ஆனால், ஏற்றுமதி பாதிக்கப்படுமா என்பதுதான் முக்கியம். கடந்த முறை ஈரானும் இஸ்ரேலும் மாறி மாறி தாக்குதல் நடத்தியபோது, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. பின்னர், போர் தீவிரமடையவில்லை என்றும், எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிந்தவுடன் அவற்றின் விலை சரிந்தது. இவ்வாறு அவர் கூறினார். ஈரானிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யவில்லை. ஆனாலும், நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்தே இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்த சூழலில், இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக சரக்கு போக்குவரத்து தடைபட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, உலக அளவிலான கச்சா எண்ணெய் சரக்கு போக்குவரத்தில் 20% ஈரானுக்கு வடக்கே உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுகிறது. இதனால், இராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. https://www.thinakaran.lk/2025/06/15/breaking-news/135271/இஸ்ரேல்-நகரங்கள்-மீது-ஈர/#google_vignette
Checked
Sat, 08/02/2025 - 11:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed