1 month 1 week ago
அமெரிக்க ஆதரவின்றி பாலத்தீனத்திற்கான அங்கீகாரம் ஏன் சாத்தியமில்லை? - ஐரோப்பிய நாடுகளின் முயற்சிக்கு என்ன பலன்? பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, நியூயார்க்கில் பாலத்தீனப் பிரச்னை குறித்த ஐ.நா. மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோங்கும் தலைமை தாங்கினார் கட்டுரை தகவல் டாம் பேட்மேன் வெளியுறவு துறை செய்தியாளர், நியூ யார்க் 23 செப்டெம்பர் 2025 பாலத்தீனத்தை தனிநாடாக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நாவில் அங்கீகரித்தது, நூறாண்டு பழமையான இஸ்ரேல்-பாலத்தீன மோதலில் ஓர் வரலாற்று தருணமாக அமைந்தது. ஆனால், இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டத்தை இந்த மோதல் அடைந்துள்ளதாக, முக்கிய ஐரோப்பிய நாடுகள் எப்படி நம்புகிறது என்பதை காட்டும் ராஜீய ரீயிலான சூதாட்டமாகவும் இது உள்ளது. காஸாவில் தற்போது நடக்கும் பேரழிவுக்கு எதிர்வினையாகவும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருதரப்புக்கும் கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கூறுகையில், "வலியதை விட நியாயம் வெல்ல வேண்டும்" என தெரிவித்தார். பிரிட்டனுடன் இணைந்து, சௌதியால் ஆதரிக்கப்படும் மக்ரோங்கின் இந்த நடவடிக்கை, இரு நாடு தீர்வை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்ட முறையே (இரு நாடு தீர்வு), இரு சமூகங்களுக்கு நியாயமான மற்றும் பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான ஒரே வழியாக அவர்கள் நம்புகின்றனர். இதற்கு மாற்றாக "ஒரு நாடு" தீர்வை நியூ யார்க்கில் நடைபெற்ற ஐநா மாநாட்டில் அதன் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ் முன்வைத்தார். இஸ்ரேலின் ஆதிக்கத்தையும் பாலத்தீனர்கள் "அடிபணிதலையும்" "ஒரு நாடு" தீர்வு என அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ் பாலத்தீனர்களுக்கு எதிரான கூட்டு தண்டனை, பசி கொடுமை அல்லது எந்த விதமான இன அழிப்பையும் எதனாலும் நியாயப்படுத்த முடியாது என அவர் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த இஸ்ரேல், இதற்கு எதிர்வினையாற்றும் என தெரிவித்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலத்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த நடவடிக்கை மற்றும் ஐநா மாநாடு ஆகியவற்றை அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதல் மற்றும் பணயக்கைதிகளை பிடித்ததற்காக ஹமாஸுக்கு வழங்கிய வெகுமதியாக இஸ்ரேல் பார்க்கிறது. இஸ்ரேல் என்ன நினைக்கிறது? ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பகுதிகளை இணைப்பது தொடர்பான அறிவிப்பு, இதற்கு எதிர்வினையாக இருக்க வேண்டும் என, சில இஸ்ரேலிய அமைச்சர்கள் விரும்புகின்றனர். இதன்மூலம் அப்பிராந்தியத்தில் பாலத்தீன நாட்டுக்கான சாத்தியத்தை நிரந்தரமாக நிராகரிக்க நினைக்கின்றனர். இரு நாடு தீர்வு எட்டப்படாமல் தடுப்பதே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் நோக்கமாக உள்ளது, பாலத்தீனர்களை நீக்கிவிட்டு யூத குடியிருப்புகளை அமைப்பதுதான் அவர்களின் கொள்கையாக உள்ளது. பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தங்களின் நட்பு நாடான இஸ்ரேலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தொடர்ந்து ஆதரித்து வருகிறது, பாலத்தீன அதிகார சபை (Palestinian Authority (PA) தலைவர் மஹ்மூத் அப்பாஸுக்கு கண்டனம் தெரிவிக்கிறது. நியூ யார்க் மாநாட்டில் அவர் கலந்துகொள்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது, எனினும் அவர் காணொளி வாயிலாக அதில் உரையாற்றினார். பாலத்தீன மாநாடு மற்றும் அதுகுறித்த டிரம்ப் நிர்வாகத்தின் எதிர்வினை, அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையே மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலை எப்படி தீர்ப்பது என்பதில் இதுவரையில் இல்லாத அளவில் ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளதை குறிக்கிறது. ஆனால், களச்சூழலை பொறுத்தவரையில் தங்களுக்கு குறுகிய வாய்ப்பே உள்ளதாக, ஐரோப்பியர்கள் நம்புகின்றனர். காஸாவில் நாள்தோறும் பாலத்தீனர்கள் பலர் கொல்லப்படும் நிலையில், காஸா நகரத்தில் இஸ்ரேல் தற்போது மூன்றாவது ராணுவ பிரிவை அனுப்பியுள்ளது; ஹமாஸ் இன்னும் தன்னுடன் சுமார் 50 பணயக்கைதிகளை வைத்துள்ளது, அவர்களுள் பலரும் இறந்துள்ளனர்; இதனிடையே மேற்கு கரை இஸ்ரேலிய குடியேற்ற விரிவாக்கம் மற்றும் அதுதொடர்பான வன்முறையின் பிடியில் உள்ளது. அக்டோபர் 7 தாக்குதல்கள் நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகிவிட்டன, ஆனால் மேலதிக ராணுவ அழுத்தம் இஸ்ரேல் வலியுறுத்துவதைப் போன்று ஹமாஸ் சரணடைவதை நோக்கித் தள்ளும் என்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. மக்ரோங்கின் வியூகம் ராஜீய ரீதியிலான முயற்சிகள் நல்லதொரு மாற்றாக இருக்கும் என்பதை காட்டுவதற்கான வழியாக மக்ரோங்கின் வியூகம் உள்ளது. அதாவது, முதலில் காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான செயல்படுத்தத்தக்க தீர்வு, அடுத்ததாக இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் என்ற இருநாட்டு தீர்வை நீண்ட கால தீர்வாக அடைவது. இஸ்ரேலின் வியூகம் தோல்வியடைந்துவிட்டதாக கூறும் ஐரோப்பிய நாடுகள், அது பொதுமக்களை மேலும் துன்புறுத்துதல் மற்றும் மீதமுள்ள பணயக்கைதிகளை ஆபத்தில் தள்ளுதல் ஆகியவற்றுக்கே இட்டுச் செல்லும் என வாதிடுகின்றன. முக்கியமாக, ஐநா மாநாட்டை சௌதி அரேபியா தலைமை தாங்கி நடத்தியது, மேலும் அரபு லீக்கால் (Arab League) ஆதரிக்கப்பட்டது. இந்த மாநாட்டில், முக்கியமான அரபு நாடுகள் ஹமாஸை ஆயுதங்களை கைவிட்டு, அவற்றை பாலத்தீன அதிகார சபையிடம் ஒப்படைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் தங்கள் ராஜீய ரீதியிலான நடவடிக்கை எத்தகைய செல்வாக்கை அந்த அமைப்பு மீது செலுத்த முடியும் என்பதையும், எதிர்காலத்தில் பாலத்தீனர்களுக்கு ஹமாஸ் தலைமை தாங்குவதை தடுக்க முடியும் என்பதையும் காட்டுவதாக பிரான்ஸ் வாதிடுகிறது. இந்த நடவடிக்கை மூலம், நெதன்யாகு மற்றும் டிரம்புக்கு அதன் நீண்ட கால இலக்கான சௌதி அரேபியாவுடனான உறவுகளை இயல்பாக்கிக்கொள்வதற்கு வழிகோலுவதால், இது இஸ்ரேலுக்கு ஓர் ஊக்கத்தையும் அளிப்பதாக மக்ரோங் நம்புகிறார். பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, ஐநா மாநாட்டுக்கு சௌதி அரேபியாவும் தலைமை வகித்தது. ஆனால், அமெரிக்காவின் விருப்பங்களுக்கு எதிராக பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் முடிவு, ராஜீய ரீதியிலான ஆபத்தாகவே உள்ளது. ஐநா மேடை முன்பு மக்ரோங் நின்றிருப்பதை பார்க்கும்போது, காஸாவின் "ஓர் கெட்ட கனவிலிருந்து" தப்பிக்க வழி தேடும், பகிரப்பட்ட இஸ்ரேலிய-பாலத்தீன எதிர்காலத்தைத் தேடும் ஓர் உலகத் தலைமைப் பொறுப்பை வகிக்க முயற்சிக்கும் ஓர் அதிபரை நீங்கள் காண்கிறீர்கள் என, ஐநா பொதுச் செயலாளர் விவரித்தார். ஆனால் அதிகாரத்தைப் பொறுத்தமட்டில், மக்ரோங் அதற்கானவர் அல்ல. அமெரிக்கா இந்த முயற்சிகளுக்கு தலைமை தாங்காத வரை, அந்நாட்டால் மட்டுமே அனைத்துத் தரப்பிலிருந்தும் உருவாக்கப்படக்கூடிய அழுத்தம் ஏற்படாது. டிரம்பின் நிராகரிப்பு ஐரோப்பாவின் அணுகுமுறையை டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. டிரம்ப் செவ்வாய்கிழமை ஐ.நாவில் உரை நிகழ்த்தினார். இதில் பேசிய அவர் "பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிப்பது, ஹமாஸின் அட்டூழியங்களுக்கு வெகுமதி அளிப்பதாகும்" என்று பேசினார். அதன் பின் அவர் அரபு நாடுகளின் தலைவர்களை டிரம்ப் சந்திக்கிறார். ஆனால், திங்களன்று அத்தலைவர்கள் மேற்கொண்ட பணிக்கு முற்றிலும் மாறானதாக இது உள்ளது. முக்கியமான நாடுகளிடையே போதிய ஒத்துழைப்பு இல்லாதது அது செயலிழந்த உணர்வை அதிகரிக்கிறது, ஏனெனில் இம்மாத தொடக்கத்தில் இஸ்ரேல் ஹமாஸ் தலைவர்களை கத்தாரில் தாக்கியதைத் தொடர்ந்து, இஸ்ரேல்-ஹமாஸுக்கு இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு இன்னும் கத்தார் தயங்குகிறது. கத்தார் இரு தரப்புக்கும் இடையே முன்பு மத்தியஸ்தம் செய்வதில் முக்கிய பங்காற்றியது. ஆனால், மக்ரோங் மற்றும் ஸ்டாமர் இருவரும் தங்கள் நாடுகளின் காலனிய வரலாறு குறித்து மத்தியக் கிழக்கில் பேசியுள்ளனர். 1948 ஆம் ஆண்டு பிரிட்டன் வரலாற்றுச் சிறப்புமிக்க பாலத்தீனத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சர்வதேச சமூகம் இஸ்ரேல் அரசை எவ்வாறு அங்கீகரித்தது என்பதை அவர்கள் நினைவு கூர்ந்தனர். தற்போது இருவரும் பாலத்தீனர்களுக்கு தங்களின் சொந்த நாட்டில் சம உரிமைகளை அங்கீகரிப்பதாக கூறுகின்றனர். ஐரோப்பிய நாடுகளின் அங்கீகாரத்தை வரவேற்கும் பாலத்தீனர்கள், அந்நாடுகள் கடந்த காலத்தில் வல்லரசுகளாக இருந்ததை அறிந்துள்ளனர். அவர்களின் முடிவுகள் ஒரு காலத்தில் இருந்ததுபோன்று தற்போது முக்கியத்துவம் பெறுவதில்லை. மேலும், அதிபர் டிரம்பிடம் வேறு யோசனைகளும் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3w5902yvleo
1 month 1 week ago
24 Sep, 2025 | 04:04 PM கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் சுமார் 5,320 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட பெண் நோயியல் வைத்திய நிலையமானது தொடர்ந்து மூடப்பட்டு காணப்பட்ட நிலையில் குறித்த சிகிச்சை பிரிவினை ஆரம்பித்து வைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை (24) வடமாகாண ஆளுநர் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயன் மற்றும் ஆளுநரின் செயலாளர் வடமாகான சுகாதார அமைச்சின் செயலாளர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய வைத்தியஅதிகாரி கலந்து கொண்டிருந்தனர். குறித்த நிகழ்வில் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் நோயாளர் நலன்புரி சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/225965
1 month 1 week ago
24 Sep, 2025 | 04:04 PM கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் சுமார் 5,320 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட பெண் நோயியல் வைத்திய நிலையமானது தொடர்ந்து மூடப்பட்டு காணப்பட்ட நிலையில் குறித்த சிகிச்சை பிரிவினை ஆரம்பித்து வைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை (24) வடமாகாண ஆளுநர் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயன் மற்றும் ஆளுநரின் செயலாளர் வடமாகான சுகாதார அமைச்சின் செயலாளர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய வைத்தியஅதிகாரி கலந்து கொண்டிருந்தனர். குறித்த நிகழ்வில் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் நோயாளர் நலன்புரி சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/225965
1 month 1 week ago
பட மூலாதாரம், TN Archaeology Department கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2025 திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி தொல்லியல் தளத்தில் கிடைத்த காலக் கணிப்பும் தொல்பொருட்களும், அந்த இடத்திற்கும் சிந்துச் சமவெளி பிரதேசத்திற்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுன்றன. திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழ்நமண்டி தொல்லியல் தளத்தில் கிடைத்த கரிமப் பொருளைக் காலக் கணிப்புக்கு உட்படுத்தியதில் அதனுடைய காலம் கி.மு. 17ஆம் நூற்றாண்டு எனத் தெரியவந்திருக்கிறது. அதே பகுதியில் வடமேற்கிந்தியப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய, வேலைப்பாடுகள் மிகுந்த சூதுபவள மணிகளும் கிடைத்திருக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள், இந்தப் பகுதிக்கும் சிந்து சமவெளிப் பகுதிக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்திருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். தமிழ்நாடு தொல்லியல் துறை சமீபத்தில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வு முடிவுகள், சிந்துச் சமவெளி கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு குறித்த நூல் என நான்கு நூல்கள் சமீபத்தில் மதுரையில் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டன. இந்த நான்கு நூல்களில் Archaeological Excavations in Tamil Nadu: A Preliminary Report சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்களைத் தருகிறது. சென்னனூர், மருங்கூர், கீழ்நமண்டி, கீழடி, கொங்கல்நகரம், பொற்பனைக்கோட்டை, வெம்பக்கோட்டை, திருமால்புரம் ஆகிய 8 இடங்களில் நடந்த தொல்லியல் அகழாய்வுகளில் கிடைத்த முடிவுகளை இந்த அறிக்கை தந்திருக்கிறது. அதில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் கிடைத்த காலக் கணிப்புகள்தான் தற்போது கவனத்தை ஈர்த்திருக்கின்றன. பட மூலாதாரம், TN Archaeology Department திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசியில் இருந்து தென்மேற்கு திசையில் 18 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கீழ்நமண்டி கிராமம். தற்போது கீழ்நமண்டி கிராமம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் மூன்றே கால் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த ஒரு நிலப்பரப்பு பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகக் கண்டறியப்பட்டது. இந்த இடத்தில் சுமார் 55 ஏக்கர் தரிசு நிலப்பரப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈமக் குழிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த இடத்தில் 2022-இல் இருந்து 2024 வரை இரு கட்டங்களாக தொல்லியல் ஆய்வுகள் மாநில தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன. கீழ்நமண்டியில் மொத்தம் 7 இடங்கள் தொல்லியல் ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டன. இதில் முதல் இடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈமக்குழிகள் (இறந்தோரைப் புதைத்த இடங்கள்) இருந்தன. அதில் அகழாய்வுக்காக 18 குழிகள் அடையாளம் காணப்பட்டன. மற்ற ஆறு இடங்களைப் பொறுத்தவரை அவற்றிலிருந்து சில தொல்பொருட்கள் கிடைத்ததோடு, இரும்பு உலை இருந்ததற்கான அடையாளங்களும் இருந்தன. இரண்டு இடங்கள் ஈமக் குழிகளுக்காக கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களாக இருந்தன. கீழ்நமண்டியில் கிடைத்த ஈமக் குழிகள் இரு வகைகளாக இருந்தன. முதலாவது வகையில், நிலத்தைத் தோண்டி நான்கு புறமும் பலகையைப் போன்ற கற்களை இறக்கி ஒரு குழி உருவாக்கப்பட்டு அதில் மண்ணால் ஆன ஈமப்பேழைகள் (sarcophagus) வைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில், வெறுமனே குழியைத் தோண்டி ஈமப் பேழைகள் புதைக்கப்பட்டிருந்தன. பட மூலாதாரம், TN Archaeology Department சில ஈமக் குழிகளில் ஒரே ஒரு சவப்பெட்டி மட்டுமே இருந்தது. சில ஈமக் குழிகளில் இரண்டு மூன்று சவப்பெட்டிகள் இருந்தன. 18 இடங்களில் மொத்தம் 27 ஈமப்பேழைகள் கிடைத்தன. இதில் எட்டு பேழைகள் மட்டுமே உடையாமல் இருந்தன. மற்ற பேழைகள், மேலே இருந்த மண்ணின் அழுத்தத்தால் சிதைந்து நொறுங்கியிருந்தன. ஒரே ஒரு ஈமப்பேழை மட்டுமே இருந்த இடங்களில் அந்தப் பேழையிலேயே மனித எலும்புகளின் எச்சங்களும் ஈமச் சடங்குக்கான பொருட்களும் ஒன்றாக வைக்கப்பட்டிருந்தன. இரண்டு, மூன்று ஈமப்பேழைகள் இருந்த ஈமக் குழிகளில் ஒரு சவப்பெட்டியில் மனித எலும்பின் எச்சங்களும் மற்ற இரண்டு பெட்டிகளில் ஈமச் சடங்குகளுக்கான பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. ஈமப் பொருட்களைப் பொறுத்தவரை, உயர்தரமான கறுப்பு - சிவப்பு பானைகள், மூடியுடன் அல்லது மூடி இல்லாத சிவப்புப் பானைகள், இரும்புப் பொருட்கள், அலங்கார மணிகள் ஆகியவை இருந்தன. இந்த சவப்பெட்டிகளும் அதிலிருந்த பொருட்களும் இங்கே புதைக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் சமூகச் செல்வாக்கை குறிப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதாவது முதல் வகை ஈமக்குழிகளை உருவாக்குவதற்கு 10 - 15 பேர் சில நாட்களாவது பணியாற்றியிருக்க வேணடும். இரண்டாம் வகை மிகச் சிலரால், சில நாட்களில் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, முதல் சவக்குழியில் இருந்த நபர், இரண்டாவது நபரைவிட உயர்ந்த சமூக அந்தஸ்தில் இருந்திருக்க வேண்டும். பட மூலாதாரம், TN Archaeology Department மொத்தமுள்ள 18 குழிகளில் 6 குழிகளில் மட்டுமே மனித எச்சங்கள் கிடைத்தன. இவை எல்லாமே இரண்டாம் நிலை எச்சங்கள்தான். அதாவது, இதுபோன்ற ஈமக்குழிகளை உருவாக்க நாட்கள் ஆகும் என்பதால், ஒருவர் இறந்தவுடன் அந்த நபர் தற்காலிகமாக ஒரு இடத்தில் புதைக்கப்படுவார். இந்த ஈமப்பேழையுடன் கூடிய ஈமக்குழி உருவாக்கப்பட்ட பிறகு, முதலில் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எச்சங்கள் தோண்டியெடுக்கப்பட்டு, இந்த இடத்தில் புதைக்கப்படும். ஆகவே, ஒரு மனிதனின் எல்லா எலும்புகளும் இந்தப் பேழைகளில் இருக்காது. எஞ்சியிருந்த எலும்புகள் மட்டுமே இங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த எலும்புகளோடு இறந்தவர்களுக்குத் தகுந்த ஈமப் பொருட்கள் வைத்து குழிகள் மூடப்பட்டுள்ளன. கீழ்நமண்டியில் கிடைத்துள்ள தொல் பொருட்கள் இந்தப் பகுதியில் ஒரு மிகப் பெரிய இரும்புக்கால குடியிருப்பு இருந்திருக்கலாம் என்பதைக் குறிப்பதாக தொல்லியல் துறையின் அறிக்கை குறிப்பிடுகிறது. இங்கு கிடைத்துள்ள ஈமக் குழிகளை வைத்து, இந்தப் பகுதியில் வசித்தவர்களின் ஈமச் சடங்குகள் குறித்த சில தகவல்களையும் அறிக்கை தருகிறது. இங்கு வைக்கப்பட்டிருந்த ஈமப்பேழைகள் உறுதியாக இல்லாத சார்னோகைட் (charnokite) கற்களால் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாகவே பெரும்பாலான ஈமப்பேழைகளின் மூடிகள் உடைந்திருந்தன. "இம்மாதிரி கற்களை வெட்டி எடுத்து மெல்லிய பலகைகளைப் போலச் செய்ய அவர்களிடம் தரமான இரும்புக் கருவிகள் இருந்திருக்க வேண்டும். கற்கள் வெட்டியெடுக்கப்பட்ட இடத்திலிருந்து மரத்தாலான உருளைகளால் இந்தக் கற்கள் இங்கே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்" என்கிறது இந்த அறிக்கை. "3,700 ஆண்டுகள் பழமையான ஈமப்பேழைகள்" பட மூலாதாரம், TN Archaeology Department இந்த ஈமக் குழியில் இருந்து கிடைத்த கரித் துண்டும் சில இரும்புப் பொருட்களும் ஏஎம்எஸ் (Accelerator Mass Spectrometry) காலக் கணிப்புக்காக பீட்டா அனலிட்டிக் டெஸ்டிங் சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அந்த ஆய்வின்படி, அந்தக் கரிமப் பொருளின் காலம் கி.மு. 1450 (3400 ± 30) எனக் கண்டறியப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட காலக் கணிப்பின்படி (Calibrated AMS) இது கி.மு. 1769ஆம் ஆண்டு முதல் கி.மு. 1615ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என இந்த அறிக்கை கூறுகிறது. ஆகவே, சராசரியாக இந்தக் கரிமப்பொருள் கி.மு. 1692 ஆண்டை ஒட்டியதாக இருக்கலாம் என்கிறது அறிக்கை. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் சிறுதாவூர், பல்லாவரம் ஆகிய இடங்களில் கிடைத்த ஈமப்பேழைகளின் கரிமப் பொருட்கள் காலக் கணிப்புக்கு அனுப்பப்பட்டபோது, அவற்றின் காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவே இருந்தது. அந்த வகையில், தமிழ்நாட்டில் கிடைத்த ஒரு ஈமப்பேழையின் காலம் கி.மு. 1692ஐத் தொடுவது இதுவே முதல் முறை. மேலும் இந்த ஈமக் குழுயில் இருந்து கீறல்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்தன. இவையும் மறைமுகமாக இவற்றின் காலத்தை கி.மு. 17ஆம் நூற்றாண்டு என்றே குறிக்கின்றன என்கிறது அறிக்கை. இந்த ஈமக்குழிகளில் உளி, கோடாரி போன்ற பொருட்களும் கிடைத்தன. மேலும், சில இடங்களில் வேலைப்பாடுகள் மிகுந்த சூதுபவள (carnelian) மணிகளும் கிடைத்தன. இங்கே கிடைத்த பானைகளின் விளிம்பில் சூலாயுதம், U போன்ற குறியீடுகளும் கிடைத்தன. கீழ்நமண்டிக்கு சிந்துச் சமவெளியோடு தொடர்பா? பட மூலாதாரம், TN Archaeology Department கீழ்நமண்டியில் இருந்தவர்கள் சிந்துச் சமவெளி பகுதிகளோடு தொடர்பில் இருந்திருக்கலாம் என்கிறார் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையின் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் கே. ராஜன். "சூதுபவள மணிகளைப் பொறுத்தவரை, அவை தென்னிந்தியப் பகுதிகளில் கிடைப்பதில்லை. இந்த மணிகள் மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளைச் சேர்ந்தவை. இந்தப் பகுதியில் இவை கிடைக்கின்றதென்றால், அவை அங்கிருந்ததுதான் வந்திருக்க வேண்டும். இங்கிருந்தவர்கள், அந்தப் பகுதிகளோடு வர்த்தகத் தொடர்பில் இருந்திருக்கலாம். இங்கு கிடைத்த ஈமப் பேழைகளின் காலம் கி.மு. 17ஆம் நூற்றாண்டு எனத் தெரியவந்திருக்கிறது. இதற்கு இணையாக வடமேற்கு இந்தியப் பகுதியில் பிற்கால ஹரப்பா (Late Harappan 1900-1300 BCE) நாகரிகமே நிலவியது. ஆகவே அதனோடு இதனை இணைத்துப் பார்க்கலாம்" என்கிறார். குறியீடுகளைப் பொறுத்தவரை, இங்கு கிடைத்த சில குறியீடுகள், சிந்துச் சமவெளியில் கிடைத்த சில குறியீடுகளைப் போலே இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த இடத்தில் கிடைத்த கரிமப் பொருளின் காலம் ஏஎம்எஸ் காலக் கணிப்பில் கி.மு. 17ஆம் நூற்றாண்டு எனத் தெரியவந்தாலும், இங்கு கிடைத்த வேறு சில பொருட்களை OSL (Optically Stimulated Luminescence) காலக் கணிப்புக்கு அனுப்ப மாநில தொல்லியல் துறை முடிவுசெய்திருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1l8qqvn0r7o
1 month 1 week ago
இன்றைய சில ஊடகங்களின் செய்திகள் இப்படித்தான் போகின்றது. 😂
1 month 1 week ago
Satoshi Nakamoto என்ற பூனை குட்டி வெளியில் துள்ளி குதித்து வந்து விட்டது 😁
1 month 1 week ago
கோசானின் அந்த புதுக்கதையை நேற்றிரவு வாசித்து எனக்கு நானே கொடுப்புக்குள் ஜாடைமாடையாக சிரித்து விட்டு நிம்மதி பெரு மூச்சுடன் நித்திரைக்கு சென்று விட்டேன்.😃 நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா கூட இதை ஒப்புக்கொண்டுள்ளார். ராஜாத்தி அம்மாள்- கருணாநிதி விடயத்தை காந்தர்வ திருமணம் என இன்றும் சொல்வார்கள்.😎
1 month 1 week ago
ஆஹா மாணவர்களுக்குப் பிடித்தமான மணியான பாடல் ஒன்று .......! 😂
1 month 1 week ago
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா சுல்தானே……சுல்தானே…..சுல்தானே….. சுல்தானே…..ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : இந்த இளம் கிளி போல் சந்தையிலே எனக்கு இதுவரை சிக்கவில்லையே பெண் : ஹா……ஆ…..ஆ…. என் அழகை ருசிக்க என் நெருப்பை அணைக்க இளைஞனும் கிட்டவில்லையே ஆண் : டெல்லி எல்லாம் தேடி தேடி உன்னை கண்டேனே பெண் : பாலில் விழும் சீனி போல எனை தந்தேனே ஆண் : ஆடை மூடும் ஜாதிப்பூவின் அங்கம் பார்த்தேனே பெண் : அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே சுல்தானே……சுல்தானே…..சுல்தானே….. சுல்தானே…..ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : கொஞ்சி கொஞ்சி எடுத்து நெஞ்சில் மெல்ல அணைத்து என் மனதை திருடிக் கொண்டாய் பெண் : ஹா…..ஆஅ……ஆ….. புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா காதலிக்க பழகி கொண்டாய் ஆண் : புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா பெண் : முத்தம் தரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா ஆண் : ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடி பார்ப்போமா பெண் : ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை தேடி தீர்ப்போமா ........! --- தொட்டு தொட்டு பேசும் சுல்தானா ---
1 month 1 week ago
சிம்பிளான சிக்கன் பிரியாணி .........! 😂
1 month 1 week ago
அமெரிக்கா பெரும் கடனில் இருந்து தப்பிக்க கிரிப்டோ, தங்கத்தைப் பயன்படுத்துவதாக புடின் ஆலோசகர் குற்றம் சாட்டினார். லோகன் ஹிட்ச்காக் செப்டம்பர் 9, 2025 2 நிமிடம் படித்தது இந்தக் கட்டுரையில் : ஜிசி=எஃப் -0.15% DX-Y.NYB (டிஎக்ஸ்-ஒய்.என்ஒய்பி) +0.19% ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஆலோசகர் ஒருவர், அமெரிக்கா தனது பெரும் கடனில் இருந்து தப்பிக்க கிரிப்டோ மற்றும் தங்கத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது என்று கூறினார். ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் நடைபெற்ற இறுதி செய்தியாளர் சந்திப்பில் , மன்றத்தின் ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவரும் புடினின் ஆலோசகருமான அன்டன் கோப்யகோவ், அமெரிக்கா "உலகின் செலவில்" தனது கடன் சுமையைக் குறைக்க முயற்சிக்கிறது என்று கூறினார். சிறந்த அடமான விகிதங்களை வாங்கவும் நிமிடங்களில் தனிப்பயனாக்கப்பட்ட கட்டணங்கள் மேலும் அறிக நிதி சுதந்திரத்திற்கான விரைவான பாதை மேலும் அறிக http://s.yimg.com/cv/apiv2/default/share-new-american-funding.png வீட்டு உரிமைக்கான உங்கள் பாதை மேலும் அறிக MoneyMoney – Finance News & Advice Since 1972Money has been helping people enrich their lives for over 50 years. We provide news, educational resources and tools to achieve financial success. ஆல் இயக்கப்படுகிறது - மேலே உள்ள இணைப்புகளிலிருந்து Yahoo கமிஷனைப் பெறலாம். "அமெரிக்கா இப்போது தங்கம் மற்றும் கிரிப்டோகரன்சி சந்தைகளின் விதிகளை மீண்டும் எழுத முயற்சிக்கிறது. அவர்களின் கடனின் அளவு - 35 டிரில்லியன் டாலர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த இரண்டு துறைகளும் (கிரிப்டோ மற்றும் தங்கம்) அடிப்படையில் பாரம்பரிய உலகளாவிய நாணய முறைக்கு மாற்றாகும்," என்று ரஷ்யா டைரக்டின் மொழிபெயர்ப்பின்படி கோப்யகோவ் கூறினார். "இந்தப் பகுதியில் வாஷிங்டனின் நடவடிக்கைகள் அதன் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன: டாலரின் மீதான குறைந்து வரும் நம்பிக்கையை அவசரமாக நிவர்த்தி செய்வது." கோப்யகோவின் கூற்றுப்படி, அமெரிக்கா இறுதியில் அதன் கடனை ஸ்டேபிள்காயின்களில் முதலீடு செய்து பின்னர் அதன் மதிப்பைக் குறைக்கும். "எளிமையாகச் சொன்னால்: அவர்களிடம் $35 டிரில்லியன் நாணயக் கடன் உள்ளது, அவர்கள் அதை கிரிப்டோ மேகத்திற்கு நகர்த்தி, அதன் மதிப்பைக் குறைத்து - புதிதாகத் தொடங்குவார்கள்," என்று அவர் கூறினார். "கிரிப்டோவைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருப்பவர்களுக்கு இதுதான் உண்மை." டிக்ரிப்ட் அமெரிக்க வர்த்தகம் மற்றும் வெளியுறவுத் துறைகளை அணுகியது. வளர்ந்து வரும் அமெரிக்க கடன் நெருக்கடி இறுதியில் சொத்து வகுப்பிற்கு பயனளிக்கக்கூடும் என்று கிரிப்டோ ஆர்வலர்கள் எடுத்துரைத்துள்ளனர், ஜூன் மாதத்தில் Coinbase தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஆம்ஸ்ட்ராங் இது பிட்காயின் உலகளாவிய இருப்பு நாணயமாக மாற வழிவகுக்கும் என்று பரிந்துரைத்தார் . அமெரிக்கா கிரிப்டோவுடன், குறிப்பாக ஸ்டேபிள்காயின்களுடன் அதிகரித்து வரும் பிணைப்பைச் சுற்றியுள்ள சந்தேகம் ஒரு புதிய நிகழ்வு அல்ல. ஆனால் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் பொதுவாக ஃபியட் நாணயங்களின் மதிப்புடன் இணைக்கப்படும் இந்த டிஜிட்டல் சொத்துக்களுடன் மிகவும் வசதியாகிவிட்டனர். ஜூலை மாதம் டிரம்ப் GENIUS சட்டத்தில் கையெழுத்திட்டார், இது அமெரிக்காவில் ஸ்டேபிள்காயின்களை வெளியிடுவதற்கும் வர்த்தகம் செய்வதற்கும் ஒரு தெளிவான கட்டமைப்பை உருவாக்கியது, மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், கிரிப்டோ அமெரிக்க டாலர் மேலாதிக்கத்தை நிலைநாட்ட உதவும் என்று நம்புவதாகவும் , அதைக் குறைக்க அல்ல என்றும் கூறினார். கோபியாகோவின் கருத்துக்கள் இருந்தபோதிலும், ரஷ்யா ஸ்டேபிள்காயின்களுடன் இணைந்து பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது . ஜூலை மாதம், ரஷ்ய அரசு ஊடகங்கள், அரசுக்குச் சொந்தமான ஆயுத உற்பத்தியாளர் ஒருவர் ட்ரானில் தொடங்கப்படும் ரூபிள் ஆதரவு ஸ்டேபிள்காயினில் பணியாற்றி வருவதாக செய்தி வெளியிட்டன. https://finance.yahoo.com/news/putin-advisor-accuses-us-using-214522644.html இவ்வாறு நிகழ்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை என நான் நம்புகிறேன், யாழ்கள உறவுகள் உங்கள் கருத்துகளை கூறவும். சாத்தியமான ஒன்றாக இருந்தாலும் இது ஒரு பைத்தியக்காரத்தனமான குற்றச்சாட்டாக இருப்பதாக எனதளவில் கருதுகிறேன், இந்த விடயத்தில் பெரிதாக புரிதல் குறைவாக உள்ளது அதனால் இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருக்கலாம் என கருதுகிறேன் , தங்கம், கிப்டோ மற்றும் அமெரிக்க பணமுறிகள் சந்தையில் குழப்பம் ஏற்படுத்தவென இவ்வாறான குற்றச்சாட்டினை வெளியிடுகிறார்களா?
1 month 1 week ago
ஏன் சும்மா இதுகளுக்கு சண்டை பிடிப்பான்? கொஞ்சம் பொறுங்கோ. ரஜனி, கமல், விஜய் இந்த வரிசை அடுத்த தேர்தலில் இன்னும் ஒரு நடிகருடன் தொடரும். ஒரு அரசும் அதனை சார்ந்து இயங்குகின்ற உளவுத்துறையும் சும்மாவே! 🤣
1 month 1 week ago
நீங்கள் குற்றம் கண்டு பிடிக்கும் அவசரத்தில் வாக்கு வங்கி என்பதை ஆட்சி என்று வாசிப்பது வழமையே. உங்களின் பார்வைக்கு எதுவும் எழுத முடியாது பிரயோசனமில்லை. யாரும் நித்திரையாக கிடப்பார்களை முயற்சிப்பது தான் நன்று.
1 month 1 week ago
Thava Arumugam · Suivre rpdetsooSnm3m82uh95911ah0ali1m 2u29mahh3017m65itg19901f20c50 · ஊருக்குப் போய் கலியாணம் கட்டின நம்ம பயல் ஒருத்தன் மனைவி வந்ததும் அவள் ஆங்கிலம் படிக்க ஆசைப்படுறாள் என்று ஆங்கில வகுப்பிற்கு அனுப்பி வைத்தான். கொஞ்சநாள் கழிய ஒருநாள் மனுசன் வேலையால களைத்து விழுந்து வர வீட்டம்மா தான் படிச்ச ஆங்கிலத்தை மனுசனுக்கு கதைத்துக்காட்டி பேர்வாங்கனும் என்றிட்டு அவன் வீட்டவர அவள் : Welcome home, Are you tired darling? அவன் : Today I am so tired ... அவள் : Ok...Rest in Peace !!! கிழிஞ்சுது போ😂"
1 month 1 week ago
Isai Sangamam · Nandha Kumar ·odtopenSsr8cs7 2e9tip 42ub0tgu08em27mc0h1r,94ue0ltg2063781:4 · 🌹எம்ஜிஆர்.., ஜெமினி கணேசன்.., சாவித்ரி எடுத்து கொண்ட அழகிய புகைப்படம் 📷" Voir la traduction
1 month 1 week ago
புலிகளுக்குசொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கிக்கு ஒப்படைப்பு செவ்வாய், 23 செப்டம்பர் 2025 07:43 PM குற்றப்புலனாய்வு துறை கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம அவர்களிடம் தெரிவித்தன் படி விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் இலங்கை மத்திய வங்கிக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவச் செயல்பாடுகளின்போது முகாம்கள், விடுதலைப் புலிகளின் வங்கிகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 10,000 தங்கப் பொருட்களில் இவை அடங்குகின்றன. இதற்கு முன்னர், நீதிமன்றம் தேசிய ரத்தின, ஆபரண ஆணையத்துக்கு தங்கத்தை ஆய்வு செய்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்திற்கும் CIDக்கும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. CID அதிகாரிகள் தெரிவித்ததாவது, மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்பட்ட 6,000 பொருட்கள் எடை மற்றும் கலவை விவரங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பான முன்னேற்ற அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், அந்தத் தங்கங்கள் ஆரம்பத்தில் உள்ளூர் மக்கள் தன்னார்வத்துடன் விடுதலைப் புலிகளுக்கு ஒப்படைத்தவை என நீதிமன்றத்தில் முன்பு வெளிப்படுத்தப்பட்டது. இதற்கான விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டது. https://jaffnazone.com/news/50707
1 month 1 week ago
மன்னார் காற்றாலை திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை 24 September 2025 யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு ஆவணம், வட்சப் செயலி ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பிரதிகளைத் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ ஆவணம் கிடைத்த பின்னர் அதன் விபரங்களைத் தாம் பகிரங்கப்படுத்த முடியும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதன்படி, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 36 காற்றாடிகளுக்கு மேலதிகமாக, ஆரம்பிக்கப்பட்ட இரண்டு திட்டங்களுக்கான 14 காற்றாடிகளை அமைக்கும் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதியின் பணிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த காற்றாலை நிறுவல் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டங்களின் பின்னர் நிலைமையை அறிந்து பரிந்துரைக்கும் வகையில் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி அமைத்திருந்தார். அந்த குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதி பணிப்புரையும் வெளியாகியுள்ளது. அதேநேரம், இந்த பணிப்புரைக்கு மேலதிகமாக, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள சுற்றாடல் சம்பந்தமான தடுப்பு நடவடிக்கைகளையும் உரிய முறையில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதியால் அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்ட ஆவணம் தமக்குக் கிடைத்துள்ளதாக காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் போராட்டக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அருட் தந்தை மார்க்கஸ் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். எனினும், ஜனாதிபதியின் பணிப்புரையைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். https://hirunews.lk/tm/421865/president-directs-to-continue-progressing-the-mannar-wind-farm-project
1 month 1 week ago
1 month 1 week ago
பதில்கள் அனைத்தும் பச்சையில் மின்னுது . ......! 👍
1 month 1 week ago
https://www.youtube.com/watch?v=wLcddb8O4M4 எங்கே நான் வாழ்ந்தாழும் என்னுயிரோ படம் கல்லும் கனியாகும்
Checked
Tue, 11/04/2025 - 17:48
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed