புதிய பதிவுகள்2

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 month 1 week ago
ஈழத்து மருமோன் வீட்டிலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் பரிசோதனையாம். ஒழுங்காய் வரி கட்டேல்லையாம் 😁

கிளிநொச்சியில் பல வருடங்களாக இயங்காதுள்ள மகளிர் சிகிச்சை நிலையத்தை மீள இயக்க நடவடிக்கை - சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

1 month 1 week ago
23 Sep, 2025 | 02:26 PM ( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) பல வருடங்களாக இயங்காமல் இருக்கும் கிளிநொச்சி மகளிர் சிகிச்சை நிலையத்தை மீள இயங்க செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டெம்பர் 23) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி வேளையின் போது ஆளும் கட்சி உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கேள்வியெழுப்புகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் நெதர்லாந்து அரசாங்கத்தால் கட்டப்பட்ட சிறப்பு மகளிர் சிகிச்சை நிலையமானது பல ஆண்டுகளாக இயங்காமல் இருக்கின்றது. இதனை நாங்கள் சென்று பார்த்தோம். அங்கே இலங்கையில் எங்கும் இல்லாத ஸ்கேன் மற்றும் கதிரியக்க இயந்திரங்கள் உள்ள போதும். அவற்றில் சில உபகரணங்கள் காலாவதியாகியுள்ளன. சுகாதார அமைச்சுசார் ஆலோசனை கூட்டத்தில் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது. அதன்போது வடமாகாணத்தில் சுழற்சி முறையில் ஆளணிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டது. சுகாதார அமைச்சர் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் அவதானம் செலுத்தி நீண்ட காலமாக இயங்காமல் இருக்கும் வைத்தியசாலைகளை உடனடியாக இயக்கவும், ஆளணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட பெண்கள் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார். இதற்கு எழுந்து பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த பிரச்சினை உண்மையானதே. அங்கே கட்டிடங்கள், உபகரணங்கள் இருந்தாலும் ஆளணி போதுமானதால் இல்லை. இலங்கைக்கு வரும் விசேட வைத்தியர்களை அங்கு அனுப்பினாலும் அவர்கள் இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருப்பது தொடர்பிலும் பிரச்சினைகள் உள்ளன. எவ்வாறாயினும் நிறைவுகாண் ஊழியர்களை நாங்கள் பயிற்றுவித்து வருகின்றோம். இதனூடாக அங்கு ஆளணியை பூர்த்தி செய்ய முடியுமென்று நினைக்கின்றேன். கிளிநொச்சி பெரிய வைத்தியசாலை தொடர்பிலும் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். அங்குள்ள குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என்றார். கிளிநொச்சியில் பல வருடங்களாக இயங்காதுள்ள மகளிர் சிகிச்சை நிலையத்தை மீள இயக்க நடவடிக்கை - சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ | Virakesari.lk

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

1 month 1 week ago
தங்காலை போதைப்பொருள் விவகாரத்தில் கைதான லொறி உரிமையாளர் பொலிஸ் தடுப்புக் காவலில்! 23 Sep, 2025 | 03:28 PM தங்காலை, சீனிமோதரவில் நேற்று (22) ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட லொறியின் உரிமையாளரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் சந்தேக நபரான லொரியின் உரிமையாளரை விசாரிக்க கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு அனுமதி அளித்து கல்கிசை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்தார். சந்தேக நபர் இரத்மலானையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. தங்காலையில் சீனிமோதரயில் உள்ள வீடொன்றிற்கு அருகில், இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்ட இடத்தில், குறித்த லொறியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதன்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, லொறியின் உரிமையாளர் என கூறப்படும் சந்தேக நபரை 11 கிராம் மற்றும் 140 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், அவர் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (23) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிமன்றம் அவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது. தங்காலை போதைப்பொருள் விவகாரத்தில் கைதான லொறி உரிமையாளர் பொலிஸ் தடுப்புக் காவலில்! | Virakesari.lk

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 50 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

1 month 1 week ago
Published By: Digital Desk 1 23 Sep, 2025 | 04:12 PM கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலிருந்து 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருள் பொதியுடன் “கிரீன் சேனல்” வழியாக வெளியேற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று (23) காலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் வசிக்கும் 29 வயதுடைய பெண்ணொருவரும், இந்தியாவின் சென்னையில் வசிக்கும் 48 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தப் பொதியை தாய்லாந்து - பெங்கொக்கில் வாங்கி, இந்தியாவின் புது டெல்லிக்கு கொண்டுசென்று, அங்கிருந்து இன்று காலை 6.50 மணிக்கு ஏர் இந்தியா விமானம் AI-277 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அவர்களிடமிருந்து 5 பொதிகளில் 5 கிலோகிராம் 92 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் 50 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது | Virakesari.lk

யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் ; நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது

1 month 1 week ago
23 Sep, 2025 | 04:22 PM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இந்த நபர் நீண்ட காலமாக தலைமறைவாகியிருந்த நிலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற வேளையே கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் ; நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது | Virakesari.lk

யாழ் நகரின் கழிவுநீர் முகாமைத்துவ திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியில் ஆரம்பிக்க நடவடிக்கை

1 month 1 week ago
3 Sep, 2025 | 05:20 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாண நகரத்தின் கழிவுநீர் முகாமைத்துவம் திட்டத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வடங்கு மாகாண ஆளுநருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் யாழ். மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத் திட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இத்திட்டத்தின் சில தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்தில் யாழ்ப்பாண நகரத்தின் கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பான திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி வழங்குவதற்கு திட்டமிடுவதாகவும் இது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத் திட்டத்தில் இந்த விடயமும் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அது கைவிடப்பட்டிருந்த நிலையில் மீளவும் செயற்படுத்துவது தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான இரண்டாம் கட்ட குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு உதவுவதற்குத் தயாராக உள்ளதாகவும் இது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத் திட்டத்தின் பிரதிநிதிகள், ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். யாழ் நகரின் கழிவுநீர் முகாமைத்துவ திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியில் ஆரம்பிக்க நடவடிக்கை | Virakesari.lk

பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் கைது!

1 month 1 week ago
23 Sep, 2025 | 06:09 PM பருத்தித்துறை நகரை சென்றடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தியின் முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் இன்று (23) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் "திலீபன் வழியில் வருகிறோம்" என்று ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்படுகிறது. இந்த பவனி இன்று (23) பிற்பகல் 1.30 மணியளவில் பருத்தித்துறை நகர்ப் பகுதியை வந்தடைந்துள்ளது. தியாக தீபம் தீலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக பவனி செல்லும் நிலையில், பருத்தித்துறை நகர் மக்களின் அஞ்சலிக்காக இன்றைய தினம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன்போது பருத்தித்துறை நகர சபை தவிசாளர் வின்சன் டிபோல் டக்ளஸ் போல் மற்றும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது பருத்தித்துறை நகரப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊர்தியின் முன் பகுதியில் பெருந்தொகையான பட்டாசுகளை கொழுத்திய போது பருத்தித்துறை நகர் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் கைது! | Virakesari.lk

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் உயிரிழந்த 3 வயது சிறுவனுக்கான நீதி கோரி அமைதி போராட்டம்

1 month 1 week ago
Published By: Vishnu 23 Sep, 2025 | 07:03 PM கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 3 வயது சிறுவன் எப்.எம். அய்னா ஹம்தி பஸ்லிம், வைத்தியர்களின் அலட்சியத்தால் இரு சிறுநீரகங்களையும் இழந்து உயிரிழந்த சம்பவத்துக்கு எதிராக அமைதி போராட்டம் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், சிறுவனின் உறவினர்கள், சிறுவர் உரிமை அமைப்புகள் மற்றும் பல பொதுமக்கள் இணைந்து கலந்து கொண்டனர். (படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார்) கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் உயிரிழந்த 3 வயது சிறுவனுக்கான நீதி கோரி அமைதி போராட்டம் | Virakesari.lk

"மூன்று கவிதைகள் / 10"

1 month 1 week ago
"மூன்று கவிதைகள் / 10" பண்பாடு வரலாறு காட்டும் உடை பலராலும் உடுத்த வெள்ளை வேட்டி! காலம் மாற கோலம் மாறினாலும் திருவிழாக் காலத்தில் தோன்றும் வேட்டி! படித்தவரும் கட்டினர் பாமரரும் கட்டினர் உடுத்த வேட்டியில் மகிழ்ச்சி கொண்டனர்! மடித்தகரை சால்வையை தோளில் போட்டு எழுந்து நடந்தனர் மனதில் கம்பீரம்பொங்க! ........................................... நீல வானத்தில் நிலவு ஒளிர நீண்ட கடலில் அலைகள் தோன்ற வெள்ளை மணலில் நண்டு ஓட துள்ளிக் குதிக்குது டால்பின் கூட்டம்! காற்று வெளியில் பட்டம் பறக்க காந்த மொழியில் மங்கை பாட சலங்கை ஒலிக்க பெதும்பை ஆட சங்கு பொருக்கி பேதை மகிழ்ந்தாள்! ......................................................... யாழ் நூலகத்தின் படிகளின் இடையில் புத்தரின் சடலம் குருதியில் கிடந்தது அரச காவல் காடையர் கும்பல் நூல்கள் ஏடுகளுடன் தர்மமும் எரித்தனர்! இரவு இருளில் அதிகாரிகள் வந்தனர். எங்கள் பட்டியலில் இவரில்லையே என்றனர் இவரைச் சுடாமல் எரிக்க முடியாதே சத்தியம் மறந்தே மனிதம் எரித்தோம் என்றனர்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "மூன்று கவிதைகள் / 10" https://www.facebook.com/groups/978753388866632/posts/31440053538976550/?

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 month 1 week ago
பெண்டாட்டி தெய்வானை இருக்க யானையை விட்டு துரத்தி துரத்தி வள்ளியை கரெட்க் பண்ணிய முருகன் காலத்தில் இந்த சட்டம் இல்லை. 😂ஆனால் அந்த தமிழ் கடவுளின் முன்மாதிரியை பின்பற்றுபவர்களுக்கு தான் இந்த சட்டம். 😂

சிரிக்க மட்டும் வாங்க

1 month 1 week ago
Touch The Heart · Suivre dpSoeosnrtue06 9à745217l0h07ig71f,4 :f1iH19l2rt1u4i100h10553 · Two elephants once met on a crowded highway, their paths pulling them apart. Yet for a brief moment, their trunks reached across the divide and touched—one last gesture of love before being led away. To some, it might have looked ordinary. But elephants are deeply social, bound by family, loyalty, and memory. They grieve separation, mourn their dead, and carry wisdom through generations. Breaking those ties leaves scars that cannot be seen, but are felt in moments like this. That single touch was not instinct—it was longing, it was remembrance, it was love. A reminder that even in captivity, even in chaos, they still reach for one another. Because elephants, like us, cannot live without connection. And their silent plea asks us a question we cannot ignore. 👉Full story in the comments......!

ஐநாவில் பெரும்பாலான நாடுகள் அங்கீகரித்த பிறகும் பாலத்தீனம் தனி நாடாவதில் என்ன சிக்கல்?

1 month 1 week ago
பட மூலாதாரம், Guy Smallman/Getty Images படக்குறிப்பு, 2024 டிசம்பர் 14 அன்று லண்டனில், பாலத்தீனத்திற்கான தேசிய நடவடிக்கை தினத்தை முன்னிட்டு பார்லிமென்ட் சதுக்கத்தில் ஆர்வலர்கள் கூடினர். 22 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு நாடாக இருப்பது போன்றும், இல்லாதது போன்றும் தோன்றக் கூடிய ஒரு பிரதேசம் தான் பாலத்தீனம். அதற்கு பல நாடுகளின் அங்கீகாரம் உள்ளது. வெளிநாடுகளில் தூதரகங்கள் உள்ளன. ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பாலத்தீன அணிகள் பங்கேற்கின்றன. ஆனால், இஸ்ரேலுடனான நீண்டகால மோதலின் காரணமாக, பாலத்தீனத்துக்கு உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைகளும் இல்லை, தலைநகரமும் இல்லை, ராணுவமும் இல்லை. மேற்குக் கரை இஸ்ரேலின் ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதால், 1990களில் அமைக்கப்பட்ட பாலத்தீன ஆட்சி தன் நிலம், தன் மக்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. காஸா பகுதியும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்து, இப்போது பேரழிவு தரும் போரின் மத்தியில் சிக்கியுள்ளது. பாலத்தீனத்தின் 'அரை-நாடு' (Quasi state) என்ற நிலைமையால், உலக நாடுகள் தரும் அங்கீகாரம் பெரும்பாலும் ஒரு குறியீடாகவே பார்க்கப்படுகிறது. இது தார்மீக மற்றும் அரசியல் ஆதரவை வெளிப்படுத்தலாம். ஆனால் அங்கு வாழும் மக்களின் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்படுத்துவதில்லை. பாலத்தீனத்தின் 'அரை-நாடு' (Quasi state) என்ற நிலைமையால், உலக நாடுகள் தரும் அங்கீகாரம் பெரும்பாலும் ஒரு குறியீடாகவே பார்க்கப்படுகிறது. இது தார்மீக மற்றும் அரசியல் ஆதரவை வெளிப்படுத்தலாம். ஆனால் அங்கு வாழும் மக்களின் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அந்த குறியீட்டு அர்த்தம் (symbolism) மிக வலுவானது. "இரு நாடுகள் தீர்வை ஆதரிக்க பிரிட்டனுக்கு ஒரு சிறப்பு பொறுப்பு உள்ளது"என ஜூலை மாதம் ஐ.நா.வில் உரையாற்றியபோது, முன்னாள் பிரிட்டன் வெளியுறவுச் செயலர் டேவிட் லாம்மி கூறினார். 1917-ஆம் ஆண்டு வெளியான பால்ஃபோர் பிரகடனத்தை அவர் குறிப்பிட்டார். அப்போது வெளியுறவுச் செயலராக இருந்த ஆர்தர் பால்ஃபோர் அதில் கையெழுத்திட்டார். அந்தப் பிரகடனத்தில், "யூத மக்களுக்கு பாலத்தீனில் ஒரு தேசிய இல்லம் அமைப்பதற்கு" பிரிட்டன் ஆதரவு தரும் என முதன்முறையாக அறிவித்திருந்தது. பட மூலாதாரம், Bettmann via Getty Images படக்குறிப்பு, 1948-ல் பாலத்தீனத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர, பிரிட்டிஷ் படைகள் யூனியன் கொடியை கீழிறக்கினர். முதல் உலகப் போருக்குப் பிறகு, 1922 முதல் 1948 வரை, 'லீக் ஆஃப் நேஷன்ஸ்' ஆணையின் கீழ் பாலத்தீனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு பிரிட்டனுக்குக் கொடுக்கப்பட்டது. அந்த ஏற்பாட்டின் படி, போரில் தோற்ற ஜெர்மனி மற்றும் ஒட்டோமான் பேரரசுகளின் நிலங்களை மற்ற நாடுகள் நிர்வகிக்க சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டது. பிரிட்டன் அப்போது ஒரு நுட்பமான சமநிலையை பேண முயன்றது. (இது சாத்தியமற்றது என சிலர் கருதினார்கள்) . ஒருபுறம், யூத மக்களுக்கு பாலத்தீனத்தில் ஒரு "தேசிய இல்லம்" அமைக்க ஆதரவு தரும் என பிரிட்டன் வாக்குறுதி அளித்தது. மறுபுறம், அங்கு வாழும் பெரும்பான்மையான அரேபியர்களின் உரிமைகளை பாதுகாப்பதாகவும் உறுதியளித்தது. இந்த இரு முரண்பட்ட வாக்குறுதிகளும், யூதர் மற்றும் அரபு சமூகங்களுக்கு இடையே அதிகரித்த பதற்றமும் சேர்ந்து, பல ஆண்டுகளாக அமைதியின்மையை ஏற்படுத்தின. 1948-ல் பிரிட்டன் அந்தப் பகுதியை விட்டு வெளியேறியது. அதன் பிறகு, இஸ்ரேல் ஒரு நாடாக அறிவிக்கப்பட்டதும், போர் வெடித்து, பல பாலத்தீனர்கள் தங்கள் நிலத்தை விட்டு இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. பல வரலாற்றாசிரியர்கள், பிரிட்டன் அந்த காலத்தில் எடுத்த நடவடிக்கைகளே இன்றைய இஸ்ரேல்–பாலத்தீன் மோதலுக்கான அடிப்படையாக அமைந்தது என்றும், பாலத்தீன பிரதேசத்தின் தீர்வு இன்னும் முடியாத சர்வதேச பிரச்னையாகவே உள்ளது என்றும் கூறுகிறார்கள். ஆனால் இஸ்ரேலை ஆதரிப்பவர்கள், 1917-ல் வெளியான பால்ஃபோர் பிரகடனத்தில் பாலத்தீனர்களைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை, அவர்களின் தேசிய உரிமைகள் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை என வாதிடுகிறார்கள். லாமி கூறியது போல, இப்போது "இரு நாடுகள் தீர்வு" என்ற வார்த்தையை அரசியல்வாதிகள் அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். 'இரு நாடுகள் தீர்வு' என்பது, 1967 அரபு–இஸ்ரேல் போருக்கு முன்பிருந்த நிலையை அடிப்படையாகக் கொண்டு, மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளைச் சேர்த்து ஒரு பாலத்தீன நாடு உருவாக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இதில், கிழக்கு ஜெருசலேம் தலைநகரமாக இருக்க வேண்டும் என்பதும் அந்தக் கருத்தின் ஒரு பகுதியாகும். ஆனால், பல ஆண்டுகளாக நடந்த சர்வதேச முயற்சிகள் எந்தச் சிறப்பான முடிவையும் தரவில்லை. மேற்குக் கரையில் இஸ்ரேல் அமைத்த குடியேற்றங்கள், சர்வதேச சட்டப்படி சட்டவிரோதமானவையாக இருந்தாலும், 'இரு நாடுகள் தீர்வு' என்ற கருத்தை வெறும் கோஷமாகவே மாற்றி விட்டன. பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பது யார்? ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் சுமார் 75% நாடுகள் தற்போது பாலத்தீனத்தை அங்கீகரித்துள்ளன. ஐ.நா.வில், பாலத்தீனத்திற்கு "நிரந்தர பார்வையாளர் நாடு" என்ற அந்தஸ்து உள்ளது. அதனால் பாலத்தீன் கூட்டங்களில் பங்கேற்கலாம், ஆனால் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் அமெரிக்கா தவிர மற்ற 4 நாடுகளும் பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துவிட்டன. சீனாவும் ரஷ்யாவும் 1988 இல் பாலத்தீனத்தை அங்கீகரித்தன. இதனால், இஸ்ரேலின் மிக வலுவான கூட்டாளியான அமெரிக்கா மட்டும் தனியாக நிற்கும் நிலை உருவாகிறது. அமெரிக்கா 1990களின் நடுப்பகுதியில், மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான (பாலத்தீன அதிகார சபை) அரசை அங்கீகரித்தது. அதன் பிறகு வந்த சில அமெரிக்க அதிபர்கள், பாலத்தீன நாடு உருவாக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர். ஆனால் டொனால்ட் டிரம்ப் அதற்கு எதிராக இருந்தார். அவரது ஆட்சிக் காலங்களில், அமெரிக்காவின் கொள்கை முழுமையாக இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் இருந்தது. பிரிட்டனும் மற்ற நாடுகளும் இப்போது பாலத்தீனத்துக்கு ஆதரவளிப்பது ஏன்? தொடர்ச்சியாக வந்த பிரிட்டிஷ் அரசாங்கங்கள், பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று பேசியுள்ளன. ஆனால், அந்த அங்கீகாரம் சமாதான முயற்சியின் ஒரு பகுதியாகவும், மேற்கத்திய கூட்டாளிகளுடன் இணைந்து, "மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் தருணத்தில்" மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு இருந்தது. அதை வெறுமனே ஒரு குறியீடாகச் செய்வது தவறு என அரசுகள் நம்பின. அது மக்கள் மனதில் நல்லதொரு உணர்வை ஏற்படுத்தலாம், ஆனால் அங்கு உண்மையான மாற்றம் ஏற்படாது. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் பல அரசாங்கங்களை செயலில் இறங்க வலியுறுத்தியுள்ளன. காஸாவில் அதிகரித்து வரும் பட்டினி, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான உலகளாவிய கோபம், மற்றும் மக்களின் கருத்துகளில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள் ஆகியவை இந்த நிலையை உருவாக்க முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, காஸா பகுதியில் "பஞ்சத்தின் மிக மோசமான நிலைமை தற்போது உருவாகி வருகிறது" என்று ஐ.நா. ஆதரவு பெற்ற உலக உணவு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தொடர்ச்சியாக வந்த பிரிட்டிஷ் அரசாங்கங்கள், பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று பேசியுள்ளன. ஆனால், அந்த அங்கீகாரம் சமாதான முயற்சியின் ஒரு பகுதியாகவும், மேற்கத்திய கூட்டாளிகளுடன் இணைந்து, "மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் தருணத்தில்" மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு இருந்தது. அதை வெறுமனே ஒரு குறியீடாகச் செய்வது தவறு என அரசுகள் நம்பின. அது மக்கள் மனதில் நல்லதொரு உணர்வை ஏற்படுத்தலாம், ஆனால் அங்கு உண்மையான மாற்றம் ஏற்படாது. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் பல அரசாங்கங்களை செயலில் இறங்க வலியுறுத்தியுள்ளன. காஸாவில் அதிகரித்து வரும் பட்டினி, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான உலகளாவிய கோபம், மற்றும் மக்களின் கருத்துகளில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள் ஆகியவை இந்த நிலையை உருவாக்க முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் பாலத்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்க சில நாடுகள் முடிவு செய்துள்ளன. உதாரணமாக, பாலத்தீனம், அதிகாரம் சீர்திருத்தம் செய்ய வேண்டும், 2026-இல் தேர்தல் நடத்த வேண்டும், மேலும் உருவாகும் பாலத்தீன நாடு ராணுவமற்றதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் தான் அங்கீகாரம் தரப்படும் என கனடா கூறியுள்ளது. பிரிட்டன் தனது முடிவை அறிவிக்கும் போது, பொறுப்பை இஸ்ரேலின் மீது வைத்தது. காஸாவில் உள்ள துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவர, போர்நிறுத்தத்தை ஏற்படுத்த, மேற்குக் கரையின் பகுதிகளை இணைப்பதை தவிர்க்க, மேலும் இரு நாடுகள் தீர்வை அடைவதற்கான சமாதான முயற்சிக்கு இஸ்ரேல் உறுதியளிக்காவிட்டால், ஐ.நா. பொதுச்சபை அமர்வில் பாலத்தீனம் அங்கீகரிக்கப்படும் என தெரிவித்தது. இந்த முடிவு சில குழப்பங்களை ஏற்படுத்தியது. சில விமர்சகர்கள், குறிப்பாக இஸ்ரேலின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அங்கீகாரம் வழங்கப்படக் கூடாது என்றும், அங்கீகாரம் எந்த நிபந்தனையுடனும் இருக்கக் கூடாது என்றும் வாதிட்டனர். ஆனால் பிரிட்டன் குறிப்பிட்ட நான்கு முக்கிய நடவடிக்கைகளில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவாக இருந்ததால், அங்கீகாரம் வழங்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறியது. பாலத்தீன் அரசை அங்கீகரிக்க முன்வரும் நாடுகள் தங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் அதன் பிறகு எப்படியான அரசியல் செயல்முறை இருக்க வேண்டும் என்பதற்கான சிந்தனையை ஊக்குவித்து, பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றன. சில நாடுகள் பாலத்தீனத்தை ஏன் இன்னும் ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை? பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்காத நாடுகள், பெரும்பாலும் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை மூலம் ஒரு முடிவுக்கு வராததால் அங்கீகாரம் தரவில்லை. "பாலத்தீன அரசை உருவாக்க வேண்டிய அவசியத்தை அமெரிக்கா வாய்மொழியாக ஏற்கிறது. ஆனால், அது இஸ்ரேலும் பாலத்தீனமும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. இதனால், பாலத்தீன மக்கள் தங்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெறுவதில் மறுப்பு சொல்லும் அதிகாரம் இஸ்ரேலுக்கு கிடைக்கிறது" என்று லண்டன் பொருளாதார பள்ளியின் சர்வதேச உறவுகள் மற்றும் மத்திய கிழக்கு அரசியலில் நிபுணர் பேராசிரியர் ஃபவாஸ் கெர்ஜஸ் கூறுகிறார். 1990-களில் தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகள், பின்னர் 'இரு நாடுகள் தீர்வு' என்பதை இலக்காகக் கொண்டன. அதாவது, இஸ்ரேலியரும் பாலத்தீனரும் தனித்தனி நாடுகளில் அருகருகே வாழ வேண்டும் என்பதே அந்தத் தீர்வு. ஆனால் 2000-களின் முற்பகுதியிலிருந்தே, அமைதிக்கான அந்தச் செயல்முறை வீழ்ச்சியடையத் தொடங்கியது. குறிப்பாக 2014-ல் வாஷிங்டனில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தபோது, நிலைமை மேலும் மோசமானது. எதிர்கால பாலத்தீன நாட்டின் எல்லைகள் எப்படி இருக்க வேண்டும்? அந்த நாட்டின் தன்மை என்ன? ஜெருசலேமின் நிலை என்ன? 1948–49 இல் இஸ்ரேல் உருவானபின் நடந்த போரின் காரணமாக இடம்பெயர்ந்த பாலத்தீன அகதிகளின் நிலைமை என்ன? போன்ற கடினமான பிரச்னைகள் அனைத்தும் இன்னும் பதில் கிடைக்காதவையாகவே உள்ளன. மேலும், ஐ.நாவில் உறுப்பினராக சேர பாலத்தீனம் எடுக்கும் முயற்சியை இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கிறது. ஏப்ரல் 2024-ல், இஸ்ரேலின் ஐ.நா தூதர் கிலாட் எர்டன் கூறியதை ஏஎப்ஃபி (AFP) மேற்கோள் காட்டியது. ஐ.நா.வில் பாலத்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் நடப்பது கூட "இனப்படுகொலை பயங்கரவாதத்திற்கு கிடைத்த வெற்றி" என இஸ்ரேலின் தூதர் கிலாட் எர்டன் கூறியிருந்தார். மேலும், அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, அங்கீகாரம் வழங்கப்படுவது பயங்கரவாதத்திற்கு ஒரு வெகுமதியாகும் என்றும் அவர் தெரிவித்தார். இஸ்ரேலுடன் நல்லுறவைப் பேண விரும்பும் நாடுகள், பாலத்தீனத்தை அங்கீகரிப்பது தங்கள் கூட்டாளியான இஸ்ரேலை கோபப்படுத்தும் என்பதை நன்றாகவே அறிந்துள்ளன. இஸ்ரேலின் ஆதரவாளர்கள் சிலர், பாலத்தீனர்கள் தனி நாடு ஆவதற்கான அடிப்படை நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்று வாதிடுகிறார்கள். 1933-ஆம் ஆண்டு மான்டிவீடியோ ஒப்பந்தம் கூறும் அந்த நிபந்தனைகள்: நிரந்தர மக்கள்தொகை தெளிவான எல்லைகள் செயல்படும் அரசு பிற நாடுகளுடன் தூதரக உறவை ஏற்படுத்தும் திறன் ஆனால், சிலர் மிகவும் நெகிழ்வான வரையறையை ஏற்றுக்கொள்கிறார்கள். அதாவது, மற்ற நாடுகள் தரும் அங்கீகாரமே ஒரு நாட்டின் நிலையை நிர்ணயிக்க போதுமானது என்பதே அவர்களின் வாதம். அமெரிக்கா என்ன சொல்கிறது? டிரம்ப் நிர்வாகம், பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கு எதிரான தனது நிலைப்பாட்டை ஒருபோதும் மறைக்கவில்லை. 2025 செப்டம்பர் 18 அன்று, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமருடன் நடந்த செய்தியாளர் சந்திப்பில், "அந்த விஷயத்தில் [பிரிட்டிஷ்] பிரதமருடன் கருத்து வேறுபாடு உள்ளது" என்று அமெரிக்க அதிபர் கூறினார். உண்மையில், அமெரிக்காவின் நிலைப்பாடு தற்போது பாலத்தீன சுதந்திரம் என்ற கருத்துக்கே நேரடியான எதிர்ப்பாக மாறியுள்ளது. "பாலத்தீனத்தை அங்கீகரிக்க உலக நாடுகள் முயற்சிப்பது ஹமாஸுக்கு மேலும் தைரியம் தரும்"என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். அதே நேரத்தில், அங்கீகாரத்தை வலியுறுத்தும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ரூபியோ தெரிவித்துள்ளார். 'அது, மேற்குக் கரையை இஸ்ரேல் இணைத்துக் கொள்ள தூண்டிவிடக்கூடும்' என அவர் கூறினார். பட மூலாதாரம், SHAHZAIB AKBER/EPA-EFE/REX/Shutterstock படக்குறிப்பு, பல நாடுகள் பாலத்தீன அரசை அங்கீகரிக்கின்றன ஐ.நா.வில் பாலத்தீனத்தின் நிலை : பாலத்தீனம் தற்போது, ஹோலி சீயைப் போலவே, ஐ.நா.வில் "உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு" என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. 2011-ல், பாலத்தீனம் முழுமையான ஐ.நா உறுப்பினராக சேர விண்ணப்பித்தது. ஆனால் பாதுகாப்பு கவுன்சிலில் போதுமான ஆதரவு இல்லாததால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. வாக்கெடுப்பிற்கே அது செல்லவில்லை. அதற்குப் பிறகு, 2012-ல், ஐ.நா. பொதுச் சபை பாலத்தீனத்தின் அந்தஸ்தை உயர்த்தி, "உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு" என அறிவித்தது. இதனால், தீர்மானங்களில் வாக்களிக்க முடியாதபோதிலும், பொதுச் சபை விவாதங்களில் பங்கேற்கும் உரிமை பெற்றது. மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் இந்த முடிவு வரவேற்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதனை விமர்சித்தன. இந்த அந்தஸ்து, பாலத்தீனத்திற்கு மற்ற சர்வதேச அமைப்புகளில் சேரும் வாய்ப்பையும் வழங்கியது. 2015-இல், அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) உட்பட பல அமைப்புகளில் இணைந்தனர். மே 2024-ல், ஐ.நா. பொதுச் சபை பாலத்தீனத்தின் உரிமைகளை மேம்படுத்தியது. சூடான விவாதத்துக்குப் பிறகு, பாலத்தீனத்தை உறுப்பினராக ஏற்க வேண்டும் என வலியுறுத்தியது. அந்த தீர்மானத்தின் மூலம், பாலத்தீனம் முழுமையாக விவாதங்களில் பங்கேற்க, செயல்திட்டங்களை முன்மொழிய, மற்றும் குழுக்களில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், வாக்களிக்கும் உரிமை இன்னும் வழங்கப்படவில்லை. ஐ.நா.வில் முழுமையான உறுப்பினர் அந்தஸ்து பெற, பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் அவசியம். அதே ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவராக அமெரிக்கா, பாலத்தீனத்தை ஒரு நாடாக ஏற்கும் முயற்சியை "முன்கூட்டியது" என்று கூறி, அதற்கு மறுப்பு தெரிவித்தது. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றும் தீர்மானங்கள் சட்டப்படி கட்டாயமானவை. ஆனால் பொதுச் சபை நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு அந்த வலிமை இல்லை. "ஐ.நா. முழு உறுப்பினராக மாறுவது, பாலத்தீனர்களுக்கு அதிக ராஜ்ஜீய செல்வாக்கை தரும். அதில் தீர்மானங்களை நேரடியாக முன்மொழிவது, பொது சபையில் வாக்களிப்பது (இப்போது 'உறுப்பினர் அல்லாத' நாடு என்பதால் வாக்களிக்க முடியவில்லை), பின்னர் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற/வாக்களிக்க கூட வாய்ப்பு உண்டு"என்று வாஷிங்டனில் உள்ள மிடில் ஈஸ்ட் இன்ஸ்டிட்யூட் (Middle East Institute) அமைப்பில், பாலத்தீன மற்றும் இஸ்ரேல் தொடர்பான நிகழ்ச்சிகளின் இயக்குனர் கலீத் எல்கிண்டி கூறுகிறார், "ஆனால், இவை எதுவும் 'இரு நாடு தீர்வு'வைக் கொண்டு வராது. அது, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே சாத்தியம்" என்றும் அவர் குறிப்பிட்டார். லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் (SOAS) நிறுவனத்தில் வளர்ச்சிக் கல்வி மற்றும் சர்வதேச உறவுகள் பேராசிரியரான கில்பர்ட் அச்சார், இதைப் பற்றி கூறுகையில், "ஐ.நாவில் முழு உரிமை கிடைத்தாலும், பாலத்தீன அதிகார சபை, அதனால் பெரிதாக ஒன்றும் சாதிக்காது" என்கிறார். "இது வெறும் அடையாள வெற்றியாக இருக்கும். 1967ல் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் ஒரு சிறிய பகுதியிலும், இஸ்ரேலை முழுமையாகச் சார்ந்து இருக்கும், அதிகாரமற்ற 'பாலத்தீன அதிகார சபையின்' உண்மைக்கு எதிராக, கற்பனையான 'பாலத்தீன அரசு' அங்கீகாரம் மட்டுமே"என்று கூறும் அவர், மேலும், இது சுயாட்சி மற்றும் முழு உரிமை கொண்ட பாலத்தீன நாடு என்ற இலக்கிலிருந்து மிகவும் தொலைவில் உள்ளது," என்றும் குறிப்பிட்டார். பிபிசி நியூஸ் மற்றும் பிபிசி குளோபல் ஜர்னலிசத்தின் செய்தி ஆதாரங்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8exxe7kl7ko
Checked
Tue, 11/04/2025 - 14:47
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed