1 month 2 weeks ago
அலைபாயுதே மாதவனோ நீங்கள்.
1 month 2 weeks ago
Israeli army says it continues to strike Iran The Israeli army continues to attack targets in Iranian territory, it says in a post on X published a few minutes ago. It also shared footage of an explosion in an unidentified location. Netanyahu says attack was originally planned for late April The Israeli prime minister claims that after the assassination of Hassan Nasrallah, the longtime leader of Hezbollah, Tehran began to develop a nuclear weapon. In a televised address, the PM said he ordered the elimination of Iran’s nuclear program six months ago and set the date for the operation for the end of April. Israel had “no choice” but to strike Iran, even in the absence of any US support, he said, adding that the US was notified in advance and what it decides to do now is up to Washington. Trump says it’s unclear if Iran still has a nuclear program, not concerned about regional war: Report Trump has told Reuters in a phone interview that it was unclear if Iran still has a nuclear program following Israeli strikes on the country. Trump said the US still has nuclear talks planned with Iran on Sunday, but that he is not sure if they will still take place. He said it was not too late for Iran to make a deal. “I tried to save Iran humiliation and death,” Trump said. He said he is not concerned about a regional war breaking out as a result of Israel’s strikes. aljazeera
1 month 2 weeks ago
எய்டனையா தெரிவு செய்தீர்கள். உங்கள் கவலை உங்களுக்கு
1 month 2 weeks ago
5) கேள்விக்கு எனக்கு 10 புள்ளிகள் நிச்சயம்😆
1 month 2 weeks ago
DRINKS Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship Australia 212 & 207 South Africa (39 ov, T:282) 138 & 160/2 Day 3 - Session 3: South Africa need 122 runs. Current RR: 4.10 • Min. Ov. Rem: 25 • Last 10 ov (RR): 50/0 (5.00)
1 month 2 weeks ago
இப்போதும் என் கணிப்பு ஆஸி வெல்லும் என்பதே. ஆனால் எப்போதும் விரும்பியது தெ ஆ வெல்வதையே. நாளைக்கு 14 வது ஓவரில் வெற்றியை எட்டினால் மிகவும் மகிழ்வேன்🤣.
1 month 2 weeks ago
தேனீர் இடைவேளை. அருமையான நிலையில் புரத்தியாஸ். இனி பந்து இலகுவாக வரும் என்று நினைக்கிறேன். அவதானமாக, ஒன்று இரண்டாக ஓட்டங்களைக் குவிக்கலாம். தெம்பா அதில் வின்னன்.
1 month 2 weeks ago
தென்னாபிரிக்கா மிகவும் நேர்மறையான மனோதிடத்துடன் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு அவசரமும் இல்லை. நேரம் அவர்களின் பக்கம். நின்று நிதானித்து ஆடவேண்டியதுதான்.
1 month 2 weeks ago
விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் குஜராத் முதல்வரின் தனிப்பட்ட வாகனங்கள் அனைத்திலும் 1206 என்ற எண்ணே இருந்தது. அதை அவர் தனது அதிர்ஷ்ட எண்ணாக நம்பினார். ஆனால் விதியும் அதே எண்ணைத் தேர்ந்தெடுத்தது. அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி காலமானார். லண்டனில் உள்ள தனது மகனை காண அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் சென்ற குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். இதனிடையே, விஜய் ரூபானி விமான நிலையத்திற்கு செல்லும் கடைசி நிமிடக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, விஜய் ரூபானி மரணத்தில் எதிர்பாரா மற்றுமொரு சோகம் நிகழ்ந்திருக்கிறது. அது அவரின் இறப்புத் தேதி. விஜய் ரூபானி 1206 என்ற எண் தனது அதிர்ஷ்ட எண்ணாகப் பல காலமாக நம்பினார். இதனால் அவரின் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் 1206 என்றே இருந்தன. ஸ்கூட்டர், கார் எனத் தனது தனிப்பட்ட வாகனம் எதுவாக இருந்தாலும் அவரின் பதிவெண் 1206 தான். அவர் வாங்கிய முதல் ஸ்கூட்டரில் இந்த நம்பர் தான் உள்ளது. அதேபோல் காரிலும் இதே நம்பர் தான். ஆனால் விதி விஜய் ரூபானியின் இந்த நம்பிக்கையில் விளையாடியிருக்கிறது. பல தசாப்தங்களாக அவர் நம்பிக் கொண்டிருந்த 1206 எண்ணைக் கொண்ட திகதியிலேயே விஜய் ரூபானியின் உயிர் பிரிந்தது. ஜூன் 12 அதாவது 12.06ம் திகதியில் அகமதாபாத் விமான விபத்தில் சிக்கி விஜய் ரூபானி மரணமடைந்தார். பல வருடங்களாக விஜய் ரூபானி நம்பிய அதே அதிர்ஷ்ட எண்ணை விதியும் தேர்ந்தெடுக்க 12.06 அவருடைய வாழ்க்கைப் பயணத்தின் கடைசித் திகதியாக அமைந்தது. Tamilmirror Online || 1206 அதிர்ஷ்ட எண்: இறப்பு எண்ணானது
1 month 2 weeks ago
கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு கோப்புப் படம் சென்னை: “எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் (பாஜக) முயல்கிறார்கள்” என்று கீழடி விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கீழடி அகழாய்வில் இருந்து உலக அளவிலான ஆய்வகங்களுக்கு அனுப்பி, கரிமப் பகுப்பாய்வில் காலக்கணக்கீடு செய்யப்பட்ட மாதிரிகள், ஏஎம்எஸ் (AMS) அறிக்கைகளை அளித்த பின்னரும் மேலும் சான்றுகள் தேவை என்கிறார்கள் அவர்கள். இதற்கு நேர்மாறாக, மதிப்புமிக்க வரலாற்றாய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையிலும் கற்பனையான சரஸ்வதி நதி நாகரிகத்தை பாஜக ஆதரிக்கிறது. எந்த நம்பத்தகுந்த சான்றும் இல்லாமல் இதனை அவர்கள் முன்னெடுக்கிறார்கள்.ஆனால், நாம் கடுமையான பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறார்கள். கீழடி மற்றும் தமிழ் மரபுசார் உண்மையைப் பொறுத்தவரை பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பல் கதறுவது சான்றுகள் இல்லை என்பதால் அல்ல, கீழடி காட்டும் உண்மை அவர்கள் முன்னெடுக்கும் 'ஸ்க்ரிப்ட்'-க்கு எதிரானதாக இருப்பதால்தான். எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் முயல்கிறார்கள். எல்லாவற்றையும் உலகம் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கிறது. காலமும் கூட” என்று அவர் பதிவிட்டுள்ளார்.திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு: இதனிடையே, அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் பாஜகவை கண்டித்து மதுரையில் வருகிற 18-ம் தேதி திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதாக மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, கீழடி என்கிற பெயரே பாஜக அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. கீழடி ஆய்வை மேற்கொள்ளவே நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது. அகழாய்வை மேற்கொண்ட அதிகாரிகள் பாஜகவின் குரலாக ஒலிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். கடந்த கால அடிமை எடப்பாடி அரசும் பாஜக-வினரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கீழடி அகழாய்வைக் கிடப்பில் போட்டது. தமிழ்நாட்டில் கழகத் தலைவர் தலைமையிலான அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்குப் புத்துயிர் கொடுத்ததோடு துரிதமாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார். அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பாஜக அரசைக் கண்டித்து வருகிற ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக மாணவர் அணி சார்பில், “மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலை”யில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகள் - மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு | Chief Minister Stalin says that BJP is trying to erase Keezhadi history - hindutamil.in
1 month 2 weeks ago
நேற்று ஒரு லட்டு கேட்சை விட்டதன் பலன்தான்!!
1 month 2 weeks ago
முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் : அமைத்ததற்கான காரணத்தை விளக்கிய பெண்! 13 Jun, 2025 | 02:12 PM முள்ளியவளையில் இரு தினங்களுக்கு முன்னர் தனியார் காணி ஒன்றில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தோரணம் புதன்கிழமை (11) இரவு இனந்தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்டிருந்தது. அதன் பின்னர் தாம் அந்த தோரணத்தை அமைத்தமைக்கான காரணத்தை குறித்த நபர் ஊடகங்களுக்கு வெள்ளிக்கிழமை (13) தெரிவித்திருந்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், வித்தியானந்தா கல்லூரிக்கு அருகாமையில் சிங்கள மொழி கற்பிக்கும் நிலையம் ஒன்றினை நான் நடாத்தி வருகிறேன். பொசன் போயா நிகழ்வினை எவ்வாறு கொண்டாடுவது என மாணவர்களுக்கு விளக்கமளிக்கவே பொசன் போயா நிகழ்வை வரைந்து காட்சிப்படுத்தியிருந்தேன். பௌத்த மதம் எவ்வாறு இலங்கைக்கு பரப்பப்பட்டது என்பதையே காட்சிப்படுத்தியிருந்தேன். அதனை சிலர் வந்து உடைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். நான் இது சம்பந்தமாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தேன். நான் மதத்தை பரப்புவதற்கோ அல்லது பௌத்த மத கலாசாரம் இங்கே வரவேண்டும் என்பதற்காகவோ இதைச் செய்யவில்லை. இங்கே கற்கும் பிள்ளைகளுக்கு செயல்முறை வடிவிலே செய்து காண்பித்து, விளக்கமளிக்கவே இதைச் செய்தேன். கற்பிக்கும் விடயத்தை பார்க்கக்கூடியவாறு காட்சிப்படுத்தினால்தான் மாணவர்களால் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். மகிந்த தேரரின் வருகையும் இலங்கையில் பௌத்த மதம் ஸ்தாபித்தலும் என்றால் என்ன என்பதும் தேவநம்பிய தீசன் காலத்தில் மகிந்த தேரர், பிக்குணி சங்கமித்தை வருகைதந்து எவ்வாறு பௌத்த மதத்தை ஸ்தாபித்தனர் என்பது தொடர்பான படங்களுமே பதாதையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன என விளக்கமளித்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் முள்ளியவளையில் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் அமைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு இந்த பதாதைகள் இனந்தெரியாதவர்களால் கிழித்தெறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் : அமைத்ததற்கான காரணத்தை விளக்கிய பெண்! | Virakesari.lk
1 month 2 weeks ago
13 Jun, 2025 | 04:28 PM இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலச்சந்திரன் பிரபாகரன் உட்பட பலர் கொல்லப்பட்டமை குறித்த போர் குற்றச்சாட்டு விசாரணைகளை கோரி தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் சட்டத்தரணி பொலிஸ் மா அதிபருக்கு மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது. சரணடைந்தவர்களை கொன்றது தொடர்பான புகார் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்( இசைப்பிரியா,மற்றும் பாலசந்திரன் பிரபாகரன் உட்பட ) தனுக ரணஞ்சக கஹந்தகமகே ஆகிய நான் இந்த மனுவை மதிப்பிற்குரிய உங்கள் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கின்றேன். இது கடுமையான சர்வதேச மனிதாபிமான சட்டமீறலை குறிக்கின்றது. இந்த சம்பவங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களின் கீழ் அடங்கும் என்பதுடன் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். இசைப்பிரியா மற்றும் பாலசந்திரன் தொடர்பான சம்பவங்கள் போர்நேரத்தில் சரணடைந்தவர்களிற்கான மீறல்களை குறிக்கும் முக்கிய எடுத்துக்காட்டுக்கள். இவர்களின் இறப்புகள் குறித்து விசாரணை செய்யப்படாமல் விடக்கூடாது. இலங்கை காவல்துறை உண்மை, பொறுப்பு நியாயத்திற்கு வழிவகுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். இசைப்பிரியா பாலசந்திரன் கொலை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் -சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே பொலிஸ் மாஅதிபருக்கு மனு | Virakesari.lk
1 month 2 weeks ago
13 Jun, 2025 | 05:05 PM தமிழக அரசால் அமுல்படுத்தப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் வரும் திங்கட்கிழமை (16) அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லப்போவதாக முடிவு செய்துள்ளனர். மேலும், கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீனவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் எனவும், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் சென்று இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்படி மீன் பிடிக்க வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசால் அமுல்படுத்தப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கி ஜூன் 14ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸ்வரம், சோளியாக்குடி, புதுக்கோட்டை மாவட்டம் மல்லிபட்டிணம், ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும் நாள் என்பதால் தடைக்காலம் முடிந்து எப்போது கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது என்பது குறித்து நேற்று (12) மாலை 6 மணியளவில் மல்லிபட்டினத்தில் ஆறு மாவட்ட மீனவர்கள் இணைந்து ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தி திங்கட்கிழமை அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வது என முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், மல்லிப்பட்டினத்தில் நடந்த ஆறு மாவட்ட மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து இன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினர். அந்த கூட்டத்தில் வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை மீன்பிடி மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டும், தடையை மீறி மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் மீன்பிடிக்க சொல்லும் மீன்பிடி படகுகள் மீது மீன்வளத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் படி மீன் பிடிக்க வேண்டாம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடைக்காலம் நிறைவடைந்த பின், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் சென்று மீன் பிடிக்க வேண்டாம் - மல்லிபட்டினத்தில் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு | Virakesari.lk
1 month 2 weeks ago
13 Jun, 2025 | 05:02 PM நல்லூர் பிரதேச சபை தவிசாளராக தெரிவாகியுள்ள ப. மயூரன், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி ஆசிர்வாதம் பெற்றார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வெள்ளிக்கிழமை (13) பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது, மயூரன் தவிசாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, நல்லூர் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்குச் சென்று, தியாக தீபத்தின் திருவுருவப்படத்திற்கு தீபமேற்றி, மலர் தூபி அஞ்சலி செலுத்தியதுடன், ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டார். திலீபனின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் | Virakesari.lk
1 month 2 weeks ago
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இன்று (13) மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மீறி அங்கு சிலர் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்து வந்தனர். இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் செம்பியன்பற்று சென் பிலிப் நேரியார் கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு மதுபோதையில் தடிகளுடன் கரைவலை வாடிகளுக்குச் சென்ற கும்பலொன்று அங்கிருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மீனவர் ஒருவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழ். செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை! | Virakesari.lk
1 month 2 weeks ago
இனப்படுகொலையில் உச்சம் தொட்டு இருக்கும் இஸ்ரேலுக்கு ஒரு போதும் நான் ஆதரவளிக்கப் போவதில்லை. அதே வேளை தன்னை எதிர்க்கும் தன் நாட்டு மக்களை கொன்று குவிக்கும், எதேச்சதிகார முல்லாக்களின் தலமை ஈரானில் இருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டும். ஈரானுக்கு அடிக்கும் அடி புட்டினது புட்டத்திலும் வலியை ஏற்படுத்தும்.
1 month 2 weeks ago
ஆடுகளம், தட்பவெட்ப காரணிகளை போலவே - ஸ்கோர் போர்ட் அளுத்தமும் ஒரு பெரிய காரணி. இது தெ ஆ வுக்கு எதிராக உள்ளது. முதல் மூன்று இனிங்சில் அடிக்காத எண்ணிக்கையை நாலாவது இனிங்சில் அடிப்பது மிக கடினம், அரிதிலும் அரிதாகவே நடக்கும். வழமை போல் இது 5ம்/4ம் நாளில் நடக்கும் நாலாவது இனிங்சில் இல்லை எனிலும்…1ம், 2ம் நாளில் இருந்த தட்பவெப்ப காரணிகள் குறைவு எனிலும், ஆடுகளம் இப்போதும் பந்து வீச்சுக்கு சார்பாகவே உள்ளது. 10ம் விக்கெட்டை வீழ்த்த தெ ஆ திணறியது, ஆஸியின் கூட்டு மனோதிடத்தை, அதுவே தெ ஆ விடம் குறைவு என்பதையே காட்டி நின்றது, ஆடுகள நிலையை விட. இனி இது தனியே மனோதிடம் சம்பந்தபட்ட ஆட்டமாகவே இருக்கப்போகிறது. லஞ்சுக்கு போன போது உடல்மொழியை வைத்து பார்க்கின், ஆஸியிடம் உத்வேகமும், தெ ஆ விடம் சோர்பும் தென்பட்டன.
1 month 2 weeks ago
ஈரானின் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. ஒரு மாற்றம் அங்கு தேவை. ஆனால் நெத்தன்யாஹு தனது அதிகாரத்தை தக்கவைக்கத்தான் காஸா மீதும், லெபனான் மீதும், இப்போது ஈரான் மீதும் போர் தொடுத்துள்ளார். குட்டுவைக்க அரபு நாடுகளால் முடியாது! ஆனால் அவரை அகற்றவேண்டும்
1 month 2 weeks ago
LUNCH Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship AUS (65 ov) 212 & 207 SA 138 Day 3 - Session 1: Australia lead by 281 runs. CRR: 3.18 • Min. Ov. Rem: 65 • Last 10 ov (RR): 24/1 (2.40) இன்று நல்ல வெயில் 🌞☀️ ஸ்ரார்க் அரைச் சதம் அடித்தார். அது மாதிரி தென்னாபிரிக்கா நின்று அடிக்கும்💪
Checked
Sun, 08/03/2025 - 12:01
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed