புதிய பதிவுகள்2

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
இரான் அதிஉயர் தலைவருக்கு நெருக்கமான தளபதியை கொன்ற இஸ்ரேல் – அவரது பின்னணி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல், அமெரிக்கா உள்பட இரானின் எதிரிகளுக்கு எதிராகக் கடுமையான அணுகுமுறையை முன்னெடுத்ததற்காக, ஹொசைன் சலாமி அறியப்பட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என் ஜி பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஹொசைன் சலாமி, வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில், மிக உயர்ந்த பதவியில் இருந்த தலைவராக ஹொசைன் சலாமி கருதப்படுகிறார். 65 வயதான சலாமி, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட இரானின் எதிரி நாடுகள் மீது கடுமையான நிலைப்பாட்டை முன்னெடுத்ததற்காக அறியப்பட்டவர். இந்த இரு நாடுகளில் எந்தவொரு நாடு தாக்குதல் நடத்தினாலும், "இரான் நரகத்தின் கதவுகளைத் திறக்கும்" என்று கடந்த மாதம் அவர் கடுமையாக எச்சரித்திருந்தார். அமெரிக்கா - இரான் இடையே அணு ஆயுதப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தையை பாதிக்கக்கூடிய எந்த நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது எனத் தனது கூட்டாளியான இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து இருந்தபோதிலும், இரானின் அணுசக்தி நிலையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் ராணுவத் தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் பரந்த அளவிலான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபடவில்லை என்று அமெரிக்கா கூறினாலும், இதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் "பெரிய விலையை" கொடுக்க நேரிடும் என்று இரான் எச்சரித்துள்ளது. இதனால் ஏற்கெனவே பதற்றமாக உள்ள மத்திய கிழக்குப் பகுதியில் முழுமையான போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இரான் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான முகமது பாகேரி, துணைத் தளபதி கோலமாலி ரஷீத் மற்றும் பல அணு விஞ்ஞானிகளும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். தாக்குதல்களுக்கு ஒரு நாள் முன்பு, "எந்தவொரு சூழ்நிலைகளுக்கும், நிலைப்பாடுகளுக்கும், நிகழ்வுகளுக்கும் இரான் முழுமையாகt தயாராக உள்ளது" என்று சலாமி கூறியிருந்தார். "இஸ்ரேலின் முற்றுகையின் கீழ் இருக்கும் எதிர்த்து சண்டையிட ஆயுதமோ, உதவியோ இல்லாத பாலத்தீனர்களுடன் போராடுவது போல், இரானையும் எதிர்த்துப் போராட முடியும் என்று எதிரி நினைக்கிறார்," என்று கூறிய அவர், "நாங்கள் போரால் சோதிக்கப்பட்டவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள்"என்று குறிப்பிட்டார். கடந்த 1980ஆம் ஆண்டில், இரான் - இராக் போரின்போது, இரானிய ஆயுதப் படைகளின் சக்தி வாய்ந்த பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையில் இணைந்தவர் சலாமி. 2009ஆம் ஆண்டில் துணைத் தளபதியான அவர், அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து தளபதியாக உயர்ந்தார். இரானின் அணுசக்தி மற்றும் ராணுவத் திட்டங்களில் ஈடுபட்டதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமெரிக்காவால் அவருக்கு 2000ஆம் ஆண்டில் இருந்து தடை விதிக்கப்பட்டது. இரானின் ராணுவ திறன்களைப் பற்றி பெருமையாகப் பேசிய சலாமி, ஒரு கட்டத்தில், இரான் "உலகப் பேரரசாக மாறும் வேளை வந்துவிட்டது" என்று அறிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த கட்டடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடனான ராணுவ மோதல் நடப்பதற்கான வாய்ப்பை சலாமி வரவேற்றார். கடந்த 2019ஆம் ஆண்டில், சிரியாவில் இரானிய இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலாக, சலாமி அரசியல் வரைபடத்தில் இருந்து "யூத ஆட்சியை முற்றிலும் நீக்குவதாக" சபதம் எடுத்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிரியாவில் உள்ள இரானிய தூதரகத்தைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தாக்குதலில், இரண்டு ஜெனரல்கள் உள்பட ஏழு புரட்சிகர காவல் படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, "எங்கள் துணிச்சல் மிக்க வீரர்கள் யூத ஆட்சியைத் தண்டிப்பார்கள்" என்று சலாமி இதேபோல் மற்றொரு எச்சரிக்கை விடுத்திருந்தார். கடந்த 1979இல் இரானில் நடந்த புரட்சிக்கு முன்பு வரை, இரானும் இஸ்ரேலும் நட்பு நாடுகளாக இருந்தன. அந்த புரட்சிக்குப் பின்னர் அமைக்கப்பட்ட ஆட்சி, இஸ்ரேலை எதிர்ப்பதை அதன் கொள்கையின் முக்கிய அங்கமாக எடுத்துக் கொண்டது. இஸ்ரேல் எனும் நாட்டை தற்போதைய இரானிய ஆட்சி ஏற்கவில்லை. இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா காமனெயி, இஸ்ரேலை "புற்றுநோய்க் கட்டி" என வர்ணித்து, அது "சந்தேகத்திற்கு இடமின்றி பிடுங்கி அழிக்கப்படும்" என்று கூறினார். இரான் வெளியிட்ட கருத்துகள் மற்றும் அச்சுறுத்தல்கள், இஸ்ரேலுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதாக இஸ்ரேல் கருதுகிறது. சலாமியும் புரட்சிகர காவல் படையின் பிற மூத்த அதிகாரிகளும் இரானின் அதிஉயர் தலைவருக்கு ஆலோசனை வழங்குவது வழக்கம். இரானின் புரட்சிகர காவல் படை என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா காமனெயி இரானின் மதத் தலைவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை (IRGC) நிறுவினார். நாட்டின் இஸ்லாமிய முறையைப் பாதுகாப்பதும், வழக்கமான ராணுவத்திற்கு எதிராக ஒரு சமநிலையைப் பேணுவதும் அதன் நோக்கமாக உள்ளன. ஏனெனில் அவர்கள் ராணுவப் படைகள் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. 190,000க்கும் அதிகமான வீரர்களுடன், அதன் சொந்த தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படையை புரட்சிகர காவல் படை கொண்டுள்ளது. இரானின் மிகவும் சக்திவாய்ந்த இந்தப் படை, மிகவும் வலிமையான, ராணுவ மற்றும் அரசியல் குழுக்களில் ஒன்றாக உள்ளது. இரானின் ராணுவம், அந்நாட்டைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஆட்சியைப் பாதுகாக்க புரட்சிகர காவல் படை அமைக்கப்பட்டது. இப்படை நேரடியாக அதிஉயர் தலைவரிடம் தனது நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிப்பதால், அதன் அதிகாரம் மற்ற அமைப்புகளால் எளிதில் கட்டுப்படுத்தப்பட்டது. இரானின் முக்கிய ஆயுதங்களைக் கண்காணிக்கும் புரட்சிகர காவல் படை, துணை ராணுவமான பாசிஜ் எதிர்ப்புப் படையைக் கட்டுப்படுத்துகிறது. அந்தப் படை பெரும்பாலும் உள்நாட்டு எதிர்ப்பை அடக்கப் பயன்படுத்தப்படுகிறது. மத்திய கிழக்கின் பிற பகுதிகளில், இந்தக் குழு தங்கள் கூட்டாளிகளாக உள்ள அரசுகளை ஆதரிக்க பணம், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கி, தங்களது செல்வாக்கை நிலைநாட்டுகிறது. புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த சில முக்கிய உறுப்பினர்கள், அதன் ரகசிய வெளிநாட்டுப் பிரிவான 'குட்ஸ் படையை' இயக்குகிறார்கள். இந்தப் பிரிவு ஆப்கானிஸ்தான், இராக், லெபனான், பாலத்தீனிய பிரதேசங்கள் மற்றும் ஏமேன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடையதாக உள்ளது. அரசாங்கம், நாடாளுமன்றம் மற்றும் முக்கிய அரசியல் அமைப்புகளில் அதிகாரம் வாய்ந்த பதவிகளில், முன்னாள் புரட்சிகர காவல் படையைச் சேர்ந்தவர்கள் இன்றும் பதவி வகிக்கின்றனர். இவர்களில் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநெஜாத் மற்றும் முன்னாள் சபாநாயகர் அலி லரிஜானி ஆகியோர் உள்ளனர். கோ ஈவ்,ரஃபி பெர்க் ஆகியோர் கூடுதல் தகவல்கள் வழங்கியுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2rel1803lo

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!

1 month 2 weeks ago
இந்த நபர்களுக்கு இருக்கும் "வியாதி" (உங்கள் வார்த்தை, என்னுடையதல்ல😎) குணமாகி விட்டதா? இல்லையல்லவா? பிறகேன் அதைச் சுட்டிக் காட்டுபவனை "வியாதிக் காரர்" என்கிறீர்கள்? சில நாட்கள் முன்பு நல்லூர் சுற்றாடல் பற்றிய திரியில் கூட வியாதி சாதுவாக வெளிப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் சாக்கினுள் கூட்டி மறைத்து விட்டு, கள்ள மௌனம் காத்த படி "ஒற்றுமைக்காக" உழைக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. அப்படி இல்லாமல் இருக்க எனக்கு உரிமை இருக்கிறது.

நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்

1 month 2 weeks ago
கதையாசிரியர்: குரு அரவிந்தன் கதைத்தொகுப்பு: சமூக நீதி புளோரிடாவில் உள்ள ‘போட் லாடடேல்’ கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு, கரையோர வெண்மணற்பரப்பில் சற்றுத் தூரம் நடந்தேன். குடும்பமாக வந்து நீச்சல் உடையோடு பலவகையான வண்ணக் குடைகளின் கீழ் இருப்பவர்களும், மறுபக்கம் வெய்யில் காய்பவர்களுமாய் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்குமிங்குமாய் நிரம்பியிருக்கச் சிறுவர், சிறுமியர் ஆங்காங்கே மணல்வீடு கட்டி ஆரவாரமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்தபடியே நடந்து கொண்டிருந்த எனது பார்வை அங்கிருந்த அந்தப் பதாகை மேல் பட்டது. கறுப்பு நிற பதாகையில் வெள்ளை நிறத்தால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை வாசிக்க விரும்பியதால் அருகே சென்று வாசித்துப் பார்த்தேன். ‘வேட் இன்ஸ்’ என்று தலைப்பு எழுதப்பட்டிருந்தது. ஆர்வம் காரணமாக வாசித்தேன். சற்றுத்தள்ளி இருந்த படிக்கட்டில் அமர்ந்திருந்த ஒரு முதியவர் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் மெல்ல அவதானித்தேன். ஆபிரிக்கக் கறுப்பு இனத்தவராக இருக்கலாம். ‘என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது புரிந்ததா?’ என்று அங்கிருந்தபடியே ஆங்கிலத்தில் கேட்டார் ‘ஓம்’ என்று நான் தலை அசைத்தேன். ‘அதில் தண்ணீரில் நீந்தப் போய்ப் போலீசாரால் கைதானவர்கள் என்று போட்டிருக்கே, அந்த நால்வரில் நானும் ஒருத்தன்’ என்றார். ‘அப்படியா?’ ஆர்வம் காரணமாக நான் அவருக்கு அருகே சென்று அமர்ந்தேன், சுமார் எண்பது வயதைத் தொட்டிருக்கலாம், ஆனாலும் ஆரோக்கியமானவர் போல இருந்தார். அன்று சரித்திரத்தை மாற்றிப் படைத்த போராளிகளில் ஒருவர் என்பதால் என் மதிப்பில் உயர்ந்து நின்றார். ‘ஐயாம் குரு, உங்க பெயரைச் சொல்லலையே’ என்றேன். ‘ஏப்ரஹாம்’ என்று சொல்லி, இருந்தபடியே படியே கை குலுக்கியவர் தொடர்ந்தார், ‘எங்கள் பெற்றோர்களுக்கு நீந்தத் தெரியாத படியால் தண்ணீரைவிட்டு எட்வே விலத்தி இரு என்று அடிக்கடி எங்களுக்குப் போதிப்பார்கள்.’ என்றார். ‘ஏன் உங்களுக்கு நீந்தத் தெரியாதா?’ ‘தெரியாது, எப்படி நீந்துவது தண்ணீரில் இறங்காமல்…?’ என்றார் ‘ஏன் நீந்தப் பழகவில்லையா, தண்ணீருக்குப் பயமா?’ ‘இங்கே உள்ள நீச்சல் தடாகத்திலேயோ அல்லது கடலிலேயோதான் நீந்தப் பழகலாம், இவர்கள்தான் எங்களைத் தண்ணீரில் இறங்க விடவில்லையே’ ‘என்ன சொல்றீங்க, இவர்கள் என்று யாரைச் சொல்லுறீங்க?’ ‘இங்கே அப்போது இருந்த சில வெள்ளையர்களைத்தான்’ ‘இனவெறியா…?’ ‘அப்படியே எடுத்துக் கொள்ளலாம், எமது முன்னோர்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள், அவர்கள் இவர்களுக்கு அடிமைகளாக இருந்ததால், எங்களையும் அப்படியே நடத்தினார்கள்’ ‘அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?’ ‘எங்களால் என்ன செய்யமுடியும், சட்டம் அவர்கள் பக்கம் இருந்தது. அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன். மாணவப் பருவம் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது.’ ‘அதற்காக என்ன செய்தீர்கள்?’ ‘அப்போதுதான் நாங்கள் அல்வின் அ ய்லி டான்ஸ் தியேட்டரில் ஒரு நாட்டிய நாடகம் பார்த்தோம். நான் நினைக்கின்றேன் 1960 ஆம் ஆண்டாக இருக்கலாம், அந்த நாடகம் எங்களுக்குள் ஒருவித எழுச்சியை ஏற்படுத்தி இருந்தது.’ ‘எப்படியான நாடகம், அதிலே என்ன சொல்லியிருந்தார்கள்?’ ‘உண்மையைச் சொல்லப் போனால், அந்த நாட்டிய நாடகத்திலே வந்த பாடலில் சில வரிகள் எங்கள் உணர்வுகளை எழுப்பிவிட்டன. ‘வேட் இன் த வாட்டர்’ என்ற வரிகள் எங்களை ரொம்பவும் கவர்ந்தது மட்டுமல்ல, எங்களுக்குள் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. எங்களை அறியாமலே நாங்கள் அந்த வரிகளுக்குள் மூழ்கிப் போயிருந்தோம்.’ ‘ஆர்வமாக இருக்கிறது, அது என்னவென்று சொல்ல முடியுமா?’ என்று கேட்டேன். ‘எனக்கு வயசு போயிடிச்சு, அதனாலே சரியாக அந்த வரிகள் இப்போது ஞாபகமில்லை, ஆனால் தண்ணீருக்குள் இறங்கினால் தப்பி ஓடும் அடிமைகளைத் தேடும் வேட்டைநாய்களால் அவர்களை மோப்பம் பிடிக்க முடியாது என்று கறுப்பினத்தவரின் விடுதலை பற்றி மறைமுகமாகச் சொல்லியது அந்தப்பாடல்.’ எனக்கு ஓரளவு புரிந்தது. 1600 களில் தொடங்கிய அடிமை முறை 1865 வரை நடந்தது. கறுப்பினப் பெண்களை வேலைக்காக மட்டுமல்ல, அடிமைகளின் இனப்பெருக்கத்திற்காகவும் அவர்கள் பாவித்தார்கள். ஆறு, ஏழு தலைமுறையினர் அடிமைகளாகவே இருந்தார்கள். ஆபிரிக்க கறுப்பின அடிமைகள் தப்பி ஓடினால் வேட்டை நாய்களை வைத்துத்தான் வெள்ளையின முதலாளிகள் அவர்களைத் தேடிப் பிடித்தார்கள். தண்ணீரில் மோப்ப நாய்களால் மோப்பம் பிடிக்க முடியாது என்பதைத்தான் அந்தப் பாடல் மறைமுகமாகச் சொன்னது. 1865 இல் அமெரிக்க ஜனாதிபதியான ஏப்ரஹாம் லிங்கன் அடிமைத்தனத்தை ஒழிக்க சட்டங்களை இயற்றினாலும், நடைமுறையில் தொடர்ந்தும் அடிமை வாழ்க்கை இருக்கத்தான் செய்தது. ‘ஒருநாள் ஜோன்சன் எங்களைச் சந்தித்தார். கடலிலே இறங்கிக் குளிக்கப் போகிறோம், நீங்களும் வர்றீங்களா?’ என்று கேட்டார். ஜோன்சனை எனக்கு ஏற்கனவே தெரியும், எங்கள் இனவிடுதலைக்காகப் பாடுபட்டவர். அவருடன் நின்ற இன்னுமொருவரை ‘டாக்டர் மிசெல்’ என்று அறிமுகப் படுத்தினார். இந்தப் பகுதியில் உள்ள மருத்துமனைக்குச் சேவையாற்ற முதன் முதலாக வந்த எங்கள் இனத்தைச் சேர்ந்தவர் அவர் என்பதைப் பின்பு தெரிந்து கொண்டேன். ‘கடலில் குளிப்பதற்கு ஏன் நீங்க தயங்குறீங்க?’ என்று கேட்டார். ‘எங்களைத்தான் கடலிலே இறங்க விட மாட்டாங்களே’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘உண்மைதான், ஆனால் எங்க உரிமையை நாங்கதானே வென்று எடுக்க வேண்டும், முடியாது என்று நினைத்தால் எதையுமே சாதிக்கமுடியாமல் போய்விடும். குறிப்பாக மாணவர்கள் போராட்டம் என்றால்தான் உலகமே திரும்பிப் பார்க்கும். அதனால்தான் துணிச்சல் உள்ள உங்களைக் கேட்டேன்’ என்றார் ஜோன்சன். எனக்கு ஒரு அசட்டுத் துணிவு ஏற்பட்டது. சரி என்று அவரிடம் ஒப்புக் கொண்டேன். என்னுடன் சேர்ந்து இன்னும் மூன்று கூட்டாளிகள் இணைந்து கொண்டார்கள். நீந்தத் தெரியாவிட்டாலும் வருவது வரட்டும் என்று துணிந்து கடலில் இறங்கி விட்டோம். கடலிலே சில வெள்ளையர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். எங்களைக் கண்டதும் பாய்ந்து விழுந்து வெளியேறிவிட்டார்கள். ‘ஏன், அவர்களுக்கு என்ன நடந்தது?’ ‘அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை, தண்ணீரில் தீட்டுப் பட்டுவிட்டதாக அவர்கள் நினைத்திருக்கலாம். அப்படித்தான் அவர்களை அவர்களது பெற்றோர்கள் வளர்த்திருந்தார்கள்.’ ‘அப்புறம் என்னாச்சு?’ ‘அவர்கள் போலீசை அழைத்ததும் போலீஸ் வந்து எங்களைக் கைது செய்து கொண்டு போய்ச் சிறையில் அடைத்தார்கள்.’ ‘இது எப்ப நடந்தது, எவ்வளவு காலமிருக்கும்?’ ‘சுமார் 60 ஆண்டுகளுக்குமுன் இந்தக் கடற்கரையில்தான் நடந்தது, அப்போதெல்லாம் இந்த வசதிகள் ஒன்றும் இங்கே கிடைக்கவில்லை, ஏன், இங்கே வருவதற்குச் சரியான வீதிகளே இருக்கவில்லை. நான் நினைக்கிறேன் இது நடந்தது 1961 ஆம் ஆண்டாக இருக்கலாம், இன்னும் நினைவில் நிற்கிறது.’ அவர் பழைய நினைவுகளை மீட்டுப்பார்க்க முனைந்தார். ‘நான் மணவனாக இருக்கும் போது, தண்ணீரைக் கண்டால் விலகிநில் என்று எமது பெற்றோர் அறிவுறுத்துவார்கள். தண்ணீரைக் கண்டால் விலகிப் போகாதே, நீச்சலடிக்கக் கற்றுக் கொள் என்று வெள்ளையினப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவார்கள்.’ என்று தங்கள் பெற்றோரைப் பற்றிக் குறிப்பிட்டார். அவர் சொன்னது உண்மைதான், காலமெல்லாம் அடிமை வாழ்க்கை வாழ்தவர்களின் பரம்பரையில் வந்த சாதாரண பெற்றோர்களால், தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க இதைவிட வேறு என்னதான் செய்ய முடியும்? ‘போராட்டம் வலுவடைந்ததால், தினமும் எம்மவர்கள் கடலில் குளிக்கத் தொடங்கினார்கள். சுமார் 200 மேற்பட்ட எம்மவர்களை இந்தக் கடலில் குளித்ததற்காகத் தொடர்ச்சியாகக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஒருகட்டத்தில் சிறைச்சாலை நிரம்பி வழிந்ததால், இந்த வழக்கை விசாரனைக்கு எடுத்தார்கள்.’ ‘1962 ஆம் ஆண்டு யூலை மாதம் இந்த வழக்கு விசாரனைக்கு வந்தபோது, ரெட் காபோட் என்பவர்தான் பிறோவாட் கவுண்டி நீதிபதியாக இருந்தார். அவரும் வெள்ளை இனத்தவர்தான், என்ன நடக்குமோ என்று நாங்கள் பயந்து போயிருந்தோம். எங்கள் படிப்பும் தடைப்பட்டதால், பெற்றோரும் இதை நினைத்து மனம் கலங்கிப் போயிருந்தார்கள்.’ ‘கறுப்பினத்தவர் கடலில் குளிப்பது குற்றமாகாது, இந்த மண்ணில் அவர்களுக்கு அதற்கான சுதந்திரமிருக்கிறது’ என்று அவர் தீர்ப்பு வழங்கியது சரித்திரத்தில் முக்கியமாக எழுதப்பட வேண்டியது. 1966 ஆம் ஆண்டுவரை அவர் இங்கேதான் நீதிபதியாகக் கடமையாற்றினார். அவருடைய நல்ல மனசால்தான் இன்று நாங்கள் எல்லாம் சுதந்திரமாகக் கடலில் இறங்கிக் குளிக்க முடிகின்றது. அவரைப் பற்றிய ஒரு நூலும் ‘பீட்டாஸ்கிரிப் பப்பிளிஸிங்’ என்ற பதிப்பகத்தால் வெளிவந்தது.’ என்றார். அதாவது 60 வருடங்களுக்கு முன் ஆபிரிக்க அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் அமைதியான வழியில் போராடி வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இந்தத் தீர்ப்பினால்தான் இன்று ‘பிறவுண்’ நிறத்தவர்களான நாங்களும் மியாமிக் கடலில் குளிக்க முடிகின்றது. புலம்பெயர்ந்து வந்த எங்களுக்கு இந்த வரலாறு தெரியாவிட்டாலும், அவர்கள் பெற்றுத் தந்த இந்த சுதந்திரம் மிகவும் முக்கியமானதாகும், இல்லாவிட்டல் நாங்களும் மியாமிக் கடற்கரையில் ஒதுக்கப்பட்டவர்களாகவே இருக்க வேண்டி வந்திருக்கும். ‘எங்கு சென்றாலும் ஒவ்வொரு இடத்திலும் நாம் இப்போது அனுபவிக்கும் சுதந்திரம், எமக்காக யாரோ எப்போதோ போராடிப் பெற்றுக் கொடுத்ததுதான், இது போன்ற சில விடயங்களை வரலாறு பதியத் தவறிவிடுகின்றது’ என்பதையும் அவரோடு உரையாடியபோது, நான் புரிந்து கொண்டு, அவரது துணிச்சலான செயலைப் பாராட்டி அவரிடம் இருந்து விடை பெற்றேன். சுதந்திரம் என்பது இலவசமாகக் கிடைப்பதில்லை, போராடித்தான் பெறவேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன். https://www.sirukathaigal.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி இல்லை. அமெரிக்கா ஜனநாயகத்தை பணத்தாலும், ஊடகப் பலத்தாலும் வளைத்து ட்றம்ப்பை ஜனாதிபதியாக்கியுள்ளது. ஆனால் அவரால் நாலு வருடத்திற்கு மேல் ஆட்சி செய்யமுடியாவிட்டாலும், உலகை நீண்ட காலம் பாதிக்கும் செயல்களைச் செய்யமுடியும். ரஷ்யாவின் புட்டின், சீனாவின் ஷிஜின்பெங், இந்தியாவில் மோடி, வடகொரியவின் கிம் ஜொங் உன் என்று உலகம் முழுவதும் தனிநபர்களிடம் அதிகாரம் குவிந்துள்ளது. கட்டாயம் உலக அழிவுப் பாதையில் கொண்டு செல்லவே இந்த தனிநபர் அதிகாரம் உதவும்

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 2 weeks ago
ஹெட்டின் முதல் பந்து செங்குத்தாக திரும்பியது🤣. இந்த பந்து வீச்சு மாற்றம் அல்லது நாளை காலை முதல் 10 ஓவரில் அவுஸ்ரேலியா நாலு விக்கெட் எடுக்காவிட்டால் தெ ஆ வெல்லும்.

அதிசயக்குதிரை

1 month 2 weeks ago
வாகன எண்கள் போன்றவற்றை ஒருவர் விரும்பியவாறு வாங்கிக் கொள்ள முடியும் . ......... மரணத்தையும் அவ்வாறு பெற முடியுமா . .......... இங்கே இயற்கை கொடுத்திருக்கிறதே ........! 😴

பொருளாதார பொறுப்புக்கூறலில் இருந்து போர்க்கால பொறுப்புக்கூறலுக்கு

1 month 2 weeks ago
11 JUN, 2025 | 08:59 AM கலாநிதி ஜெகான் பெரேரா பாராளுமன்ற தேர்தலில் ஏழு மாதங்களுக்கு முன்னர் மக்கள் வழங்கிய ஆணை முறைமை மாற்றத்துக்கானது. பொருளாதார நிலைவரத்தில் மேம்பாடு வேண்டும் என்பதே தேசிய மக்கள் சக்திக்கு பெருமளவில் வாக்களித்தவர்களின் பிரதான எதிர்பார்ப்பு. நீண்ட உள்நாட்டுப்போர் இடம்பெற்ற வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்களும் நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள சகோதரத்துவ குடிமக்களுடன் சேர்ந்து தங்களது பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் பல தசாப்தங்களாக தாங்கள் அனுபவித்த பாகுபாடுகளில் இருந்து விடுபடுவதற்காகவும் வாக்களித்தார்கள். ஒரு வழியில் அவர்கள் பொருளாதார அபிவிருத்தியில் இருந்து வளங்களை அபகரித்த ஊழலைக் குறைப்பதன் மூலமாக பொருளாதார மேம்பாட்டை அடையலாம் என்று நினைத்தார்கள். ஊழல் மோசடிகள், முறைகேடுகள் இன்றி தூய்மையாக ஆட்சி செய்வது, ஊழல் செய்தவர்களை பொறுப்புக்கூற வைப்பது, கொளளையடிக்கப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் கோடிக்கணக்கான டொலர்களை மீட்டுக் கொண்டுவருவது ஆகியனவே தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகள். ஆனால், அவ்வாறு அந்த பணத்தை மீட்டுக் கொண்டுவருவதற்கு குறிப்பிடத்தக்க எந்த நடவடிக்கையும் இன்னமும் எடுக்கப்படவில்லை அரசாங்கத்தின் மீதான பொதுவான விமர்சனம் அதிகரித்து வருகின்றது. அண்மைய சில வாரங்களாக, முன்னைய அரசாங்கங்களில் உறுப்பினர்களாக இருந்த ஊழல் மோசடிகளால் ஈடுபட்டதாக நம்பப்படும் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக கைதுசெய்ப்பட்டு வருகிறார்கள். அவர்களில் சிலர் செய்ததாக நம்பப்படுகின்றதை விடவும் சிறியளவிலான குற்றச்செயல்களுக்காகவே குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் அத்தியாவசியமான வரிகளைச் செலுத்தாமல் வாகனங்களை கொள்வனவு செய்ததை, பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு வெளியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்க நிதியை பயன்படுத்தியமை போன்ற குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டார்கள். சில வழக்குகளில், அவர்கள் செய்ததாக சந்தேகிக்கப்படும் திட்டமிட்ட வகையிலான பாரிய ஊழலுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியதாகத் தோன்றுகின்ற குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும், எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவும் கடுமையான தண்டனைகளை நீதித்துறை விதித்திருக்கிறது. இது சட்ட மற்றும் அரசியல் சூழ்நிலையில் ஒரு மாற்றத்தைக் குறித்து நிற்கிறது. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்ற கோடிக்கணக்கான டொலர்களை அரசாங்கத்தினால் எவ்வாறு மீட்டுக் கொண்டு வரக்கூடியதாக இருக்கும் என்பதற்கான அறிகுறி எதையும் தற்சமயம் காணமுடியவில்லை. உடைமைகள், ஆடம்பர வாகனங்கள், அடையாளம் காணப்பட்ட அரசியல்வாதிகளினால் அவர்களது உத்தியோகபூர்வ சம்பாத்தியத்தியத்துக்கு விகிதப் பொருத்தமில்லாத வகையில் கொள்வனவு செயாயப்பட்ட நிலங்கள் போன்ற உள்நாட்டுச் சொத்துக்களை கண்டுபிடிப்பதிலேயே இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் விசாசணைகள் கவனத்தைக் குவித்திருக்கின்றன. ஆனால், உண்மையில் இடம்பெற்றதாக நம்பப்பட்ட ஊழலையும் விட சிறியதாக இருந்தாலும் அவற்றைச் செய்தவர்களை கண்டுபிடிப்பதில் சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்கள் சுறுசுறுப்பாக செயற்படுகின்றமை அரசாங்கத்தின் பற்றுறுதியில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. வடக்கு, கிழக்கு நீண்டகால உள்நாட்டுப்போர் இடம்பெற்ற வடக்கு, கிழக்கில் வாழ்கின்றவர்கள் தங்களது பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றம் ஒன்றுக்கு வழிவகுக்கக்கூடிய " முறைமை மாற்றத்திற்காக " நாட்டின் ஏனைய பாகங்களில் வாழ்கின்ற மக்களுடன் சேர்ந்து வாக்களித்தார்கள். இதற்கு மேலதிகமாக, அரசியலில் புதிய முகமான தேசிய மக்கள் சக்தி தங்களுக்கு தங்களது உரிமைகளையும் நீதியையும் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையிலும் வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள் வாக்களித்தார்கள். பிழைத்து வாழ்ந்து முன்னேறுவதற்கு அவர்களுக்கு வளங்கள் எந்தளவுக்கு தேவையோ அதைப் போன்றே போர்காலத்தில் இடம்பெற்ற பயங்கரமான சித்திரவதைகள் மற்றும் கொலைகள் தொடர்பான அனுபவங்களை அவர்களினால் அலட்சியம் செய்ய முடியாது. வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழ்ந்தாலும் சரி, வெளியில் வாழ்ந்தாலும் சரி, போரையும் அதன் விளைவான இழப்புக்களை அனுபவித்தவர்களை பழைய சம்பவங்கள் தொடர்ந்து அச்சமூட்டிக் கொண்டேயிருக்கும். பதினாறு வருடங்களுக்கு முன்னர் போர் முடிவுக்கு வந்திருந்தாலும் கூட, காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்கள் உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டுக்காக இன்னமும் காத்திருக்கின்றார்கள். தங்களது அன்புக்குரியவர்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன நேர்ந்தது எனபதை தெரிந்துகொள்ளாத நிலையில், ஆட்கள் காணாமல்போகச் செய்யப்பட்ட அந்த சம்பவங்கள் முழுச் சமூகங்களையுமே அச்சுறுத்திக் கொண்டிருக்கும். அத்தகைய நிலைவரம் நல்லிணக்கத்துக்கான நாட்டின் முயற்சிகளை மலினப்படுத்தும். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அதற்கு ஒரு உதாரணமாகும். சாட்சியங்களின் பிரகாரம் கிழக்கு பல்கலைக்கழக முகாமில் 1990 செப்டெம்பர் 5 ஆம் திகதி இராணுவத்தினால் 158 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி எதுவும் தெரியாது. அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அக்கறைகளில் இருந்து கவனத்தை திருப்பும் நடவடிக்கைகளிலேயே நாட்டம் காட்டி வந்திருக்கின்றன. கடந்த காலத்தைக் கையாளுவதில் முன்னைய அரசாங்கங்களுக்கு ஆர்வம் இருந்ததில்லை. முன்னைய அரசாங்கங்களின் உயர்மட்ட தலைவர்களில் பலர் தாங்களே போரில் சம்பந்தப்பட்டிருந்தார்கள். ஜனாதிபதிகள் பாதுகாப்பு அமைச்சராகவும் ஆயுதப்படைகளின் பிரதம தளபதியாகவும் இருந்தார்கள். கடந்த காலத்தில் உண்மையில் நடந்தவை பற்றிய வேதனையானதும் சர்ச்சைக்குரியதுமான விவகாரங்களை கையாள்வதில் பெரும்பான்மைச் சமூகத்துக்கு அக்கறை இல்லாமல் இருப்பது இரண்டாவது பிரச்சினை. வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழ்பவர்களைப் பொறுத்தவரை, அமைதியும் வழமைநிலையும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்ற ஒரு எளிமையான நம்பிக்கையுடனேயே அவர்கள் இருக்கிறார்கள். தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுத்தவரை, போர்க்காலத்தில் பாதுகாப்பு படைகளுக்கு பொறுப்பாக இருந்தில்லை என்பதால் அதன் கீழ் கடந்த காலத்தைக் ஒரு கையாளக்கூடிய நிலைபேறான தீர்வொன்றை காண்பது சாத்தியமாகக் கூடியதாகும். ஆனால், அதற்கு கடந்த காலச் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான அரசியல் துணிவாற்றலும் பற்றுறுதியும் அவசியமாகும். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கூட, முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற இடங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்படும் சம்பவங்கள் குறித்து செய்திகள் வருகின்றன. இது பல தசாப்தங்களாக இடம்பெற்றுவந்த குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளின் பாணியை பிரதிபலிப்பவையாக அமைகின்றன. இத்தகைய நிலைவரம் போரின் தர்க்கம் உண்மையில் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என்பதை மாத்திரமல்ல, அதன் வடிவம் மாற்றப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தை வலுப்படுத்துவதாக அமைகிறது. வெளிப்படையான மோதலுக்கு பதிலாக, இப்போது காணிகளை திருப்பிக் கையளித்தலில் உயர் அதிகாரிகள் மற்றும் நிருவாக மட்டங்களில் காணப்படும் தாமதம், சட்டங்களை பாகுபாடான முறையில் நடைமுறைப்படுத்துதல் மற்றும் தீர்மானங்களை எடுப்பதில் மத்தியமய செயன்முறைகள் ஊடாக உள்ளூர்ச் சுயாட்சியை படிப்படாயாக திணறடித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடைசி ஆணைக்குழு பதினாறு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் கூட, இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட முறை தொடர்பிலான சர்வதேச கரிசனை தொடர்ந்தும் உயர்வாகவே இருந்துவருகிறது. இலங்கையின் போர்களத்தில் மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் செய்தவர்கள் அவற்றை எவ்வாறு செய்தார்கள், செய்வதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள் என்பது இலங்கையில் இடம்பெற்றதை விடவும் மோசமான மீறல்கள் இடம்பெற்ற உலகின் வேறு பாகங்களுக்கும் பாடங்களாக அமையக்கூடும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேர்க் இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தை நாட்டின் நற்பெயருக்கு ஒரு அச்சுறுத்தலாக அல்லது ஒரு சுமையாக நோக்குவதற்கு பதிலாக, உலகிற்கு ஒரு வகைமாதிரியாக அமையக்கூடியதாக சரவதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பாக அரசாங்கம் நோக்கலாம். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நாட்டை அவலத்துக்கு உள்ளாக்கிய இன, மதப் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு இதுவே சிறந்த தருணம் என்பதையே " முறைமை மாற்றத்துக்கான " மக்களின் ஆணையும் உணர்த்துகிறது. பொருளாதார குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் பின்பற்றுகின்ற அதே தந்திரோபாயத்தை அரசாங்கம் இது விடயத்திலும் பின்பற்ற முடியும். சுயாதீனமான அரச நிறுவனங்கள் ஊடாக செயற்பட அனுமதிக்கப்பட்டால் நீதியை நிலைநாட்டுவதற்கு வலிமையான கருவிகளாக அமையக்கூடிய வழமையான சட்டங்களையே அரசாங்கம் பயன்படுத்தவும் முடியும். மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்களை பொறுத்தவரை, அவற்றைக் கையாளுவதற்கென்ற அமைக்கப்பட்ட நிறுவனங்கள் கடந்த காலத்தில் அடையாளம் காணப்பட்ட " வகை மாதிரியான" ( Emblematic cases ) வழக்குகளை கையாளமுடியும். இந்த வழக்குகள் பல தசாப்தங்களாக பொதுவெளியில் அறியப்பட்டிருக்கும் மனித உரிமைமீறல்கள் அல்லது போர்க்கால துஷ்பிரயோகங்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவையாகும். உதாரணமாக, திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம்( 2006), மூதூரில் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனம் ஒன்றின் பதினேழு உதவிப்பணியாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் ( 2006), ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் (2010 ) ஆகியவற்றை கூறலாம். போருடன் சம்பந்தப்பட்ட முன்னைய சகல ஆணைக் குழுக்களினதும் அறிக்கைகளை ஆராய்வதற்காக 2021 ஆம் ஆண்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நவாஸ் ஆணைக்குழுவே போர் விவகாரங்களை ஆராய்ந்த கடைசி ஆணைக்குழுவாகும். " வகைமாதிரியான வழக்குகளை " விசாரணை செய்வதை முதற்பணியாகக் கொண்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று நியமக்கப்பட வேண்டும் என்று நவாஸ் ஆணைக்குழு சிபாரிசு செய்தது. அத்தகைய ஒரு நடவடிக்கை போரில் பாதிக்கப்பட்ட மக்கள், பொதுமக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் அரசாங்கத்தின் அக்கறை தொடர்பில் நம்பிக்கையை கட்டியெழுப்பும். பொருளாதார ஊழல்கள் பொறுத்துக் கொள்ளப்படப் போவதில்லை என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் மாற்றியமைக்கப்பட்ட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவைப் போன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் கடந்த காலத்துக்கு ஒரு முடிவைக் கட்டவும் தேசிய அபிவிருத்திக்காக சேர்ந்து பாடுபடுவதற்காக மக்களையும் சமூகங்களையும் ஐக்கியப்படுத்தவும் உதவ முடியும். https://www.virakesari.lk/article/217130

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
Israeli army says it continues to strike Iran The Israeli army continues to attack targets in Iranian territory, it says in a post on X published a few minutes ago. It also shared footage of an explosion in an unidentified location. Netanyahu says attack was originally planned for late April The Israeli prime minister claims that after the assassination of Hassan Nasrallah, the longtime leader of Hezbollah, Tehran began to develop a nuclear weapon. In a televised address, the PM said he ordered the elimination of Iran’s nuclear program six months ago and set the date for the operation for the end of April. Israel had “no choice” but to strike Iran, even in the absence of any US support, he said, adding that the US was notified in advance and what it decides to do now is up to Washington. Trump says it’s unclear if Iran still has a nuclear program, not concerned about regional war: Report Trump has told Reuters in a phone interview that it was unclear if Iran still has a nuclear program following Israeli strikes on the country. Trump said the US still has nuclear talks planned with Iran on Sunday, but that he is not sure if they will still take place. He said it was not too late for Iran to make a deal. “I tried to save Iran humiliation and death,” Trump said. He said he is not concerned about a regional war breaking out as a result of Israel’s strikes. aljazeera

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 2 weeks ago
இப்போதும் என் கணிப்பு ஆஸி வெல்லும் என்பதே. ஆனால் எப்போதும் விரும்பியது தெ ஆ வெல்வதையே. நாளைக்கு 14 வது ஓவரில் வெற்றியை எட்டினால் மிகவும் மகிழ்வேன்🤣.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 2 weeks ago
தேனீர் இடைவேளை. அருமையான நிலையில் புரத்தியாஸ். இனி பந்து இலகுவாக வரும் என்று நினைக்கிறேன். அவதானமாக, ஒன்று இரண்டாக ஓட்டங்களைக் குவிக்கலாம். தெம்பா அதில் வின்னன்.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 2 weeks ago
தென்னாபிரிக்கா மிகவும் நேர்மறையான மனோதிடத்துடன் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு அவசரமும் இல்லை. நேரம் அவர்களின் பக்கம். நின்று நிதானித்து ஆடவேண்டியதுதான்.

1206 அதிர்ஷ்ட எண்: இறப்பு எண்ணானது

1 month 2 weeks ago
விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் குஜராத் முதல்வரின் தனிப்பட்ட வாகனங்கள் அனைத்திலும் 1206 என்ற எண்ணே இருந்தது. அதை அவர் தனது அதிர்ஷ்ட எண்ணாக நம்பினார். ஆனால் விதியும் அதே எண்ணைத் தேர்ந்தெடுத்தது. அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி காலமானார். லண்டனில் உள்ள தனது மகனை காண அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் சென்ற குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். இதனிடையே, விஜய் ரூபானி விமான நிலையத்திற்கு செல்லும் கடைசி நிமிடக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, விஜய் ரூபானி மரணத்தில் எதிர்பாரா மற்றுமொரு சோகம் நிகழ்ந்திருக்கிறது. அது அவரின் இறப்புத் தேதி. விஜய் ரூபானி 1206 என்ற எண் தனது அதிர்ஷ்ட எண்ணாகப் பல காலமாக நம்பினார். இதனால் அவரின் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் 1206 என்றே இருந்தன. ஸ்கூட்டர், கார் எனத் தனது தனிப்பட்ட வாகனம் எதுவாக இருந்தாலும் அவரின் பதிவெண் 1206 தான். அவர் வாங்கிய முதல் ஸ்கூட்டரில் இந்த நம்பர் தான் உள்ளது. அதேபோல் காரிலும் இதே நம்பர் தான். ஆனால் விதி விஜய் ரூபானியின் இந்த நம்பிக்கையில் விளையாடியிருக்கிறது. பல தசாப்தங்களாக அவர் நம்பிக் கொண்டிருந்த 1206 எண்ணைக் கொண்ட திகதியிலேயே விஜய் ரூபானியின் உயிர் பிரிந்தது. ஜூன் 12 அதாவது 12.06ம் திகதியில் அகமதாபாத் விமான விபத்தில் சிக்கி விஜய் ரூபானி மரணமடைந்தார். பல வருடங்களாக விஜய் ரூபானி நம்பிய அதே அதிர்ஷ்ட எண்ணை விதியும் தேர்ந்தெடுக்க 12.06 அவருடைய வாழ்க்கைப் பயணத்தின் கடைசித் திகதியாக அமைந்தது. Tamilmirror Online || 1206 அதிர்ஷ்ட எண்: இறப்பு எண்ணானது

கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 month 2 weeks ago
கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு கோப்புப் படம் சென்னை: “எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் (பாஜக) முயல்கிறார்கள்” என்று கீழடி விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கீழடி அகழாய்வில் இருந்து உலக அளவிலான ஆய்வகங்களுக்கு அனுப்பி, கரிமப் பகுப்பாய்வில் காலக்கணக்கீடு செய்யப்பட்ட மாதிரிகள், ஏஎம்எஸ் (AMS) அறிக்கைகளை அளித்த பின்னரும் மேலும் சான்றுகள் தேவை என்கிறார்கள் அவர்கள். இதற்கு நேர்மாறாக, மதிப்புமிக்க வரலாற்றாய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையிலும் கற்பனையான சரஸ்வதி நதி நாகரிகத்தை பாஜக ஆதரிக்கிறது. எந்த நம்பத்தகுந்த சான்றும் இல்லாமல் இதனை அவர்கள் முன்னெடுக்கிறார்கள்.ஆனால், நாம் கடுமையான பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறார்கள். கீழடி மற்றும் தமிழ் மரபுசார் உண்மையைப் பொறுத்தவரை பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பல் கதறுவது சான்றுகள் இல்லை என்பதால் அல்ல, கீழடி காட்டும் உண்மை அவர்கள் முன்னெடுக்கும் 'ஸ்க்ரிப்ட்'-க்கு எதிரானதாக இருப்பதால்தான். எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் முயல்கிறார்கள். எல்லாவற்றையும் உலகம் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கிறது. காலமும் கூட” என்று அவர் பதிவிட்டுள்ளார்.திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு: இதனிடையே, அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் பாஜகவை கண்டித்து மதுரையில் வருகிற 18-ம் தேதி திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதாக மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, கீழடி என்கிற பெயரே பாஜக அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. கீழடி ஆய்வை மேற்கொள்ளவே நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது. அகழாய்வை மேற்கொண்ட அதிகாரிகள் பாஜகவின் குரலாக ஒலிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். கடந்த கால அடிமை எடப்பாடி அரசும் பாஜக-வினரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கீழடி அகழாய்வைக் கிடப்பில் போட்டது. தமிழ்நாட்டில் கழகத் தலைவர் தலைமையிலான அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்குப் புத்துயிர் கொடுத்ததோடு துரிதமாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார். அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பாஜக அரசைக் கண்டித்து வருகிற ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக மாணவர் அணி சார்பில், “மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலை”யில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகள் - மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு | Chief Minister Stalin says that BJP is trying to erase Keezhadi history - hindutamil.in
Checked
Sat, 08/02/2025 - 23:47
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed