புதிய பதிவுகள்2

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
இன்று ஹூடாவிற்கு பதிலாக அஸ்வினை விளையாடி இருக்கலாம்! SRH இல் முதல் இந்து ஆட்டக்காரர்களில் நான்குபேர் இடதுகை வீரர்கள்! Today My team: 1 Shaik Rasheed, 2 Ayush Mhatre, 3 Rachin Ravindra, 4 Dewald Brevis , 5 Ravindra Jadeja, 6 Shivam Dube, 7 Ravi Ashwin, 8 MS Dhoni (capt & wk), 9 Noor Ahmad, 10 Khaleel Ahmad, 11 Matheesha Pathirana. The Impact Subs are: Ansul Kamboj, Overton

'கனடாவில் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது' - கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?

3 months 1 week ago
அத்தியாவசிய விடயங்களில் செலவை குறைக்காமல், ஏனைய விடயங்களில் செலவை குறைக்க முடியும். உதாரணமாக, தியேட்டர் போய் படம் பார்க்காமல் வீட்டிலேயே படம் பார்ப்பது, உணவு விடுதிக்கு செல்வதை குறைப்பது, விருந்துகளை குறைப்பது, எல்லாவற்றையும் விட முக்கியமாக உணவு விரயத்தை கூடுமான வரை தவிர்ப்பது போன்றவற்றை செய்தாலே போதும். Cutting the corners

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 43வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆயுஷ் மஹாத்ரேயையும் டெவால்ட் ப்ரெவிஸையும் தவிர மற்றைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் சோபிக்காததால் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களையே எடுத்தது. ஹர்ஷல் பட்டேல் 28 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்களும் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இலக்கைத் துரத்துவதில் பின்னுக்கு நின்றாலும் இஷான் கிஷானின் 44 ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸின் 32 ஓட்டங்களும் 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைய உதவியது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் ஆறு புள்ளிகள் வித்தியாசத்தில் முதல்வர் நிலையை இறுக்கமாகத் தக்கவைத்துள்ளார்!

துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!

3 months 1 week ago
புளோட் மோகன் என்பவரும் இந்த தேசிய வீரர் பட்டியலில் உள்ளார் ...இவருக்காக நீதியரசர் ஒருவர் புத்தகமும் வெளியிட்டுள்ளார்... ஒழித்து கட்டுவதால் பிரச்சனைகள் தொடரும் .... 71 /87 ஆம் ஆண்டுகளில் இடதுசாரிகளின் கிளர்ச்சி என்ற போர்வையில் பிராந்திய வல்லரசுகளுடன் சேர்ந்து அரசு ஒழித்துகட்டியது ஜெ.வி.பியினரை 1977/2009 வரை பயங்கரவாதிகள் என ஒர் இனத்தை ஒழித்துகட்டினார்கள் பிராந்திய வல்லர்சுகளுடன் சேர்ந்து.. கோத்தா ஆட்சிக்கு வந்த சிறுது காலத்தில் சிறை உடைப்பை ஏற்படுத்தி போதைப்பொருள் மன்னர்களை ஒழித்து கட்டினார்கள் ... அனுரா அரசின் ஒழித்து கட்டலாக இருந்தால் இதுவும் மீண்டும் துளிர்விடும் ...

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
கனபேர் சென்னை ஆதரவாளர்கள். கேள்விக்குப் பதில் என்னவாகவும் இருக்கட்டும், சென்னை வெல்லவேணும் என்று வேண்டுற ஆக்கள்தான் கூட. சென்னை தோக்கும் போதெல்லாம், ஓரிரண்டு வீரர்கள் கழுவி ஊத்தப்படுவார்கள். திரும்பத் திரும்ப சில வீரர்கள் சாட்டையால் அடிக்கப் படுவார்கள். அவர்களும் என்ன செய்வார்கள். இருக்கிறதை வைத்துத்தானே பிழைப்பை ஓட்ட முடியும். கேள்வி: உங்களுடைய சென்னை அணி எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவல். ஒரு 12 பேர் கொண்ட அணியை அறிவியுங்கோ பார்ப்போம். எப்போதும் தமிழனையும் கேட்டேன். அவர் தனது அணியைத் தயார் பண்ணிக் கொண்டு இருக்கிறார் போல.

சிரிக்கவும் சிந்திக்கவும் .

3 months 1 week ago
கழுதையை வைத்து செய்திருப்பார்கள் சரி. ஆனால் நம்மட ஆட்களை அல்லவா வைத்து செய்திருப்பான். இந்த பாலைவனமெல்லாம் தானே நடந்தா போகப் போறான்.

'கனடாவில் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது' - கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?

3 months 1 week ago
வருமானம் வரும்போது மாதம் 2000 டொலர்கள் செலவு செய்யும் ஒரு குடும்பம் வருமானம் குறைய வரும்போது அதே 2000 டாலர்களையே செலவு செய்ய கடனும் வாங்கி செலவு செய்வார்கள். இது எவராக இருந்தாலும் கூடிய செலவு செய்துவிட்டு குறைந்த செலவுக்கு திரும்புவது கடினமே. கோவிட்டுக்கு பிற்பாடு தனிமனித வாழ்க்கையை மட்டுமல்ல பல நாடுகளையே பிரட்டிப் போட்டுள்ளது. அதிலிருந்து இன்னமும் மீண்டுவர முடியவில்லை.

'கனடாவில் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது' - கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?

3 months 1 week ago
இப்படியான மலிவு விலையில் வாங்கி சாப்பிட்டால் இலவசமாக நோயையும் தந்து அனுப்புவார்கள். தரமான உணவு விற்கும் தமிழ் கடைகளில் 25 இடியப்பங்கள் + சொதி + சம்பல் என்பனவற்றை $5.50 இற்கே விற்கின்றனர். தரமான இடியப்பம் எனில் 2 நாட்களுக்குள் மரத்துப் போய் விட வேண்டும். ஆனால் இங்கு மலிவு விலையில் விற்கப்படும் இடியப்பத்தை நீங்கள் ஒரு கிழமைக்கும் வைத்து இருக்க முடியும். அப்படி மரத்துப் போகாமல் செய்ய இடியப்பத்தில் மலிவு விலை எண்ணெயையும் சேர்த்தே செய்கின்றோம் என இப்படி இடியப்பம் செய்து விற்கும் ஒரு அண்ணை சொன்னார் (இந்த எண்ணெயும் ஏற்கனவே பொரித்து பொரித்து வீணான எண்ணெய்)

'கனடாவில் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது' - கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?

3 months 1 week ago
ஒரு விதத்தில் பார்த்தால், நான் எழுதியது ஒரு இனவாதக் கருத்து. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட நாட்டவரை, அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட இனத்தவரை குற்றம்சாட்டிய கருத்து அது. ஆனால் நடக்கும் விடயங்களை நான் பார்த்து, உய்த்தறிந்து, உணர்ந்து கொண்ட கருத்து அது. ருடோ சகட்டுமேனிக்கு மாணவர் வீசா கொடுக்க தொடங்கியதும், பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மாணவர் வீசா எடுத்து இங்கு வந்தனர். அதில் பலர் பொய்யான சான்றிதழ்களைக் காட்டி வந்துள்ளனர். IELTS போன்ற சர்வதேச சான்றிதழ்களைக் கூட கள்ள வழியில் பல்லாயிரம் பேர் பெற்று வந்துள்ளனர் (இவர்கள் இதே மாதிரி அவுஸிலும் செய்தமையால் இந்தியாவின் 5 அல்லது 6 மானிலங்களில் இருந்து எவரும் மாணவ வீசாவில் வர முடியாது தடை செய்துள்ளனர், அதில் குஜராத் மற்றும் பஞ்சாபும் அடக்கம்) இவ்வாறு வந்தவர்கள் மாணவ வீசா காலத்திலேயே தொழில் அனுமதி பெற்று வேலை செய்யத் தொடங்கி பின் 2 அல்லது 3 வருடங்களில் நிரந்தரவதிவிட உரிமை பெற விண்ணப்பித்துள்ளனர். மாணவர் அல்லாத பல்லாயிரக்கணக்கானவர்கள் கனடாவுக்கு வருவதற்கு பல தடைகளை தாண்ட வேண்டும். காத்திருப்பு காலமும் நீண்டது. அதே போன்று உண்மையான காரணங்களுக்காக வரும் அகதிகளின் காத்திருப்பு காலமும் நீண்டது. ஆனால் இந்த மாணவர் வீசாவில் வருகின்றவர்கள், மிக இலகுவாக வந்து, தொழில் பெற்று நிரந்தரவதிவிட உரிமையும் பெறக் கூடியதாக சில வருடங்கள் இருந்தன. இப்போது இந்த முறையில் பல மாற்றங்களை கொண்டு வந்து, மாணவர் வீசா பெறுவதிலும் பல தடைகளை ஏற்படுத்தி, அவ்வாறு வந்தவர்கள் பெற்ற வேலை அனுமதியை நீடிப்பதையும் தடுக்க பல முறைகளை கொண்டு வந்து ஆப்படித்துள்ளார்கள். இவ்வாறு வந்தவர்கள் பஞ்சாபி இனத்தவர்கள் தான் மிக அதிகம் (அதற்கு ஒரு பின்கதவு காரணமாக பிரதான கட்சியின் தலைவராக பஞ்சாபி ஒருவர் இருக்கின்றார் என்ற கொசிப் ஒன்றும் உள்ளது) இவர்கள் இங்கு செய்யும் கூத்து, நாகரீகமடையாத இனத்தவர்கள் செய்யும் கூத்து. இரவிரவாக சத்தமாக, அண்டை வீட்டாரை தொந்தரவு செய்யும் அளவுக்கு பாட்டுகளை அலற விடுவதில் இருந்து, ரோட்டோரம் காறித் துப்புவது வரை தொடர்கின்றது. இதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். இங்கு 10 மோசமான குற்றங்கள் இடம்பெற்றால், அதில் 4 அல்லது 5 இவர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட குற்றங்களாக உள்ளன (மிகுதி ஏனைய சகல இனத்தவரும்). கைது செய்யப்படுகின்றவர்களின் பெயரின் முடிவில் 'சிங்' கண்டிப்பாக இருக்கும்.

வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்

3 months 1 week ago
2026ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழ்நாடு மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்ற/பாராளுமன்ற/லோக்சபா தேர்தல் என்று மற்றைய நாடளாவிய பொதுத் தேர்தலை குறிப்பிடுகின்றனர். மத்திய அரசுக்கான தேர்தல். ராஜ்யசபா என்று ஒன்றும் அங்கே இருக்கின்றது. ஆனால் அதன் பிரதிநிதிகள் பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிந்து எடுக்கப்படுவதில்லை. மாநிலப் பிரதிநிதித்துவமும், இன்னும் சில வழிமுறைகளிலும் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். இளையராஜா இருக்கின்றார். சச்சின் இருந்தார்.............

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
போன கிளி திரும்பவும் வந்திட்டுது.................. ஆனால் நான் மீண்டும் மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கின்றேன், ஆகவே இந்த சனி, ஞாயிறுகளில் கிளியும் நானும் குளோஸ்.....................🤣.
Checked
Sat, 08/09/2025 - 09:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed