புதிய பதிவுகள்2

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
கமிந்து செய்து காட்டினார். இப்பிடித்தான் அவதானமா நின்று விளையாட வேணும். தான் ஏன் ஒரு சிறந்த டெஸ்ட் வீரன் என்று வடிவாக் காட்டிப் போனார். அந்த பொறுமை!!!

அம்புலன்ஸ் ..( அவசர நோயாளர் காவு வண்டி )

3 months 1 week ago
ஜேர்மனியில்…. நோயாளர் காவு வண்டியின் சேவையும், பணி புரிபவர்களின் வேகமும் மிகுந்த திருப்தியாக உள்ளது. வீதியில்… அவசர ஒலி எழுப்பி செல்லும் போது, மற்றைய வாகன ஒட்டிகள் அதன் முக்கியத்துவம் கருதி உடனேயே இடமும் வலமும் ஒதுங்கி நடு வீதியை அம்புலன்ஸ்சிற்காக ஒதுக்கி விடும் அழகே தனி. வாகன அனுமதிப் பத்திரம் எடுக்கும் போது… அவசர நோயாளர் வண்டி, தீயணைப்பு வண்டியின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுப்பதால்… அனைத்து வாகன ஓட்டிகளும் இதனை நன்கே புரிந்து வைத்துள்ளார்கள்.

வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்

3 months 1 week ago
பந்தயத்திற்கு வந்தமைக்கு நன்றி. Put your money where your mouth is என்பார்கள். சீமானின் தீவிர பக்தர்களுக்கு கூட இல்லாத தைரியம், தன்னம்பிகை, அவர் மீது விமர்சன பார்வை கொண்ட உங்களுக்கு உள்ளது. அதற்கு ஒரு சலூட். சீமானின் நாதக தனித்து நின்று - என்பதுதான் பந்தயத்தின் மிக முக்கியமான சரத்து. அதை ஏற்கிறீர்களா? கூட்டணி வைத்தால் - கணிப்புகள் சகலதுமே பிழைக்கும். வாக்கு வங்கி வளர்சி, தேய்ச்சி எதையும் கணிக்க முடியாது.

'கனடாவில் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது' - கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?

3 months 1 week ago
கனடாவின் சில விடயங்கள் எனக்கு இன்னும் புரியாத புதிர் தான். அவற்றுள் சில: பொருட்களின் விலைகள் அதிகம். இது அரசு போடும் விற்பனை வரி என்று நான் நினைத்திருந்தேன். அண்மையில் ஒரு பிபிசி கட்டுரையில் இன்னொரு முக்கிய காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார்கள். கனடாவில், அமெரிக்காவை விட வர்த்தகப் போட்டி குறைவு எனவே, ஒரு சில வியாபாரிகளே மேலாண்மை (monopoly?) செய்து விலைகளையும் உயர்வாக வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். அமெரிக்காவில் இருப்பது போல, ஒன்ராறியோவில் பல உணவுப் பொருள் விற்கும் கடைகள் (Grocers) இல்லாமல் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அடுத்த அதிசயம், வீட்டுக் கடன் எடுக்கும் போது ARM எடுப்பது எங்கள் கனேடிய உறவுகளிடையே நான் அவதானித்திருக்கிறேன். மாதாந்த செலவு குறைவு என்பதால் கனடாவில் பிரபலம் என்பார்கள். "வட்டி அடுத்த அட்ஜஸ்ட்மென்ரில் கூடாது என்று என்ன நிச்சயம்?" என்று கேட்டால், அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள். வீட்டுக் கடனில் அடுத்த 5 வருடத்தை திட்டமிடாத அதே ஆட்கள், "பெற்றோல் விலை 5 சதம் அதிகரிக்கப் போகிறதாம்" என்று செய்தி வந்ததும், வீதியை மறித்து பெற்றோல் நிரப்பும் நிலையங்களில் வாகன வரிசை கட்டுவதும் இன்னொரு புதிர்😂!

கீரிமலை ஜனாதிபதி மாளிகை - எதிர்கால பயன்பாடு குறித்து கலந்தாய்வு!

3 months 1 week ago
கீரிமலையில் ஜனாதிபதி மாளிகையில் ஆய்வு – எதிர்கால பயன்பாடு குறித்து கலந்தாய்வு! Published By: VISHNU 25 APR, 2025 | 09:02 PM கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை வெள்ளிக்கிழமை (25) பார்வையிடும் விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த கட்டிடத்தின் எதிர்கால பயன்பாடு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையாக விரிவான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இந்த விஜயத்தில், நகர அபிவிருத்தி, கட்டுமான மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு. அனுர கருணாதிலக, கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் உயர் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கட்டிடத்தை சமூக மற்றும் அபிவிருத்தி நோக்கில் மக்களுக்கு பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவது குறித்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு, விரைவில் திட்டமிடல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/212944

அம்புலன்ஸ் ..( அவசர நோயாளர் காவு வண்டி )

3 months 1 week ago
கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருக்கும் மக்கள் வரி மூலம் வழங்கப்படும் மருத்துவ சேவையில் இது ஒரு இயல்பாக இருக்கிறது. கனடாவில், மாகாணங்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் அதிகாரங்களை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன் (இப்படிச் செய்திருக்கா விட்டால் நிலை இன்னும் மோசமாக இருந்திருக்கும்). கனடாவின் வயதானோரின் தொகை (ஏனைய மேற்கு நாடுகளில் நடப்பது போலவே) அதிகரித்து வருவதாலும், மருத்துவ சேவைகளின் செலவு அதிகரித்து வருவதாலும் இப்படியான நிலைமைகள் உருவாகியிருக்கின்றன. உண்மையில், எந்த நாடும் இலவசமான மருத்துவ சேவையை வழங்க முடியாது, யாரோ ஒருவரின் செலவில் தான் அது நடக்க வேண்டும் (இலங்கையில் அரசு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை/கடன் பெற்று இலவச சேவையை வழங்குகிறது). ஆனால், எந்த மருத்துவ சேவையிலும் சில விடயங்களைத் தவிர்க்க முடியாது. உதாரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவிற்கு ஒருவர் சென்றால் அவரது நோய்த்தீவிரத்தைப் பொறுத்துத் தான் முன்னுரிமை கிடைக்கும். எனவே, மூக்கில் இருந்து இரத்தம் வரும் ஒருவரை, நெஞ்சு வலியில் வரும் ஒருவரை விட காக்க வைத்துத் தான் உள்ளே எடுப்பர். இதை Triage என்பார்கள். இப்படி அலைக்கழியாமல் இருக்க ஒரு வழி, உயிர் ஆபத்தான நிலைகள் தவிர்ந்த சந்தர்ப்பங்களில் அம்புலன்சை அழைக்காமல், உடனடி முதலுதவி கிடைக்கக் கூடிய Urgent care சிகிச்சை நிலையங்களை நாட வேண்டும். எது உயிர் ஆபத்தான நிலை, எது சாதாரண உபாதை என்று புரிந்து கொள்ள, எங்கள் உடல் பற்றிய கொஞ்சம் புரிதல் எங்களுக்கு இருக்க வேண்டும். https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC7138369/ 👆2018 இல் வெளிவந்த ஒரு கட்டுரையின் படி, அமெரிக்காவை விட கனடா ஒரு பிரஜைக்கு மருத்துவத்திற்காக செலவிடும் தொகை பாதியாக இருக்கிறது. ஆனால், 1000 பேருக்கு இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை, தாதியரின் எண்ணிக்கை, 10,000 பேருக்கு இருக்கும் மருத்துவமனைக் கட்டில்களின் எண்ணிக்கை என பல அளவீடுகள் - health service metrics கனடாவிலும் அமெரிக்காவிலும் ஒரே எண்ணிக்கையாகத் தான் இருக்கின்றன.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
SRHஉம் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை. உங்களை மாதிரியே விளையாடுவம் என்று வந்திருக்கினமோ. இரண்டாவது பந்திலேயே விக்கட். நீங்கள் இரண்டு அணியும் ஏன் ஒன்பதாவதும் பத்தாவதும் என்பதற்கு தக்க காரணங்கள் இருக்கு. இன்றைய போட்டி நல்ல உதாரணம்.

ஆளுநர் மாநாட்டை புறக்கணித்த மாநில பல்கலை. துணைவேந்தர்கள் - போலீஸ் மிரட்டியதா?

3 months 1 week ago
பட மூலாதாரம்,TNRAJBHAVAN 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பு, திராவிட இயக்கத்தினரின் போராட்டங்களுக்கு மத்தியில் உதகையில் இருநாள் துணைவேந்தர்கள் மாநாடு இன்று (ஏப். 25) ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் தொடங்கியது. மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் செயல்படும் மாநில அரசு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் யாரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. "மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் வீட்டு கதவுகளை நள்ளிரவில் தட்டி போலீஸார் எச்சரித்ததாலேயே" அவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார், மாநாட்டில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார், திமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவன். ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது என்ன? உதகை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இம்மாநாட்டில், மத்திய பல்கலைக்கழகம், மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் என, 34 கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் மொத்தம் 20 மாநில அரசு பல்கலைக்கழகங்கள் இருப்பதாக ஆளுநர் மாளிகை இணையதளம் கூறுகிறது. ஆனால், அந்த பல்கலைக்கழகங்களின் சார்பாக எந்தவொரு துணைவேந்தரோ அல்லது துணைவேந்தர் பொறுப்புக் குழு பிரதிநிதிகளோ பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தற்போது துணைவேந்தர்கள் இல்லை, அதற்கு பதிலாக துணைவேந்தர் பொறுப்புக் குழு செயல்பட்டு வருகிறது. மாநில பல்கலைக்கழகங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்காதது குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார். இந்த மாநாட்டில் பேசிய ஆர்.என். ரவி, "துரதிருஷ்டவசமாக இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்கள் பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என தங்களுக்கு மாநில அரசிடமிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக, அவர்கள் என்னிடம் எழுத்துபூர்வமாக தெரிவித்தனர்." என்றார். துணை வேந்தர்கள் மாநாடு - கோவையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காண்பிக்க முயற்சி 'குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு' - உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நகல் இணையத்தில் வெளியீடு மாநில சுயாட்சி குறித்த மூவர் குழு: என்ன சாதிக்க முடியும்? "நியாயமான உரிமை பறிபோகிறது" - மாநில சுயாட்சி தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன? தற்போது கூட துணைவேந்தர் ஒருவர் காவல் நிலையத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விதிமுறைகளை மீறி தனியார் அமைப்புகள் தொடங்கி, பல்கலைக்கழக நிதியை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் இன்று சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதைத்தான் ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிடுவதாக, கல்வியாளர்கள் கூறுகின்றனர். "இது முன்னெப்போதும் நடந்திராதது. நள்ளிரவில் துணைவேந்தர் வீடுகளின் கதவுகளைத் தட்டி காவல்துறை எச்சரித்துள்ளது. 'நீங்கள் மாநாட்டுக்கு சென்றால், வீட்டுக்குச் செல்ல முடியாது. உங்கள் குடும்பத்தைக் காண முடியாது' என எச்சரித்துள்ளனர். நான் அவர்களிடம், 'உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள், ஆபத்துக்கு ஆளாகாதீர்கள்,' என்று கூறினேன்" என ஆர்.என். ரவி கூறினார். தமிழ்நாட்டில் மாநில பல்கலைக்கழகங்கள், அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்துவிட்டதாக விமர்சித்த அவர், கல்வி தரத்தை மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றும் மாறாக இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் தெரிவித்தார். பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ள சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? இந்தியா விட்டுக்கொடுத்ததா?4 மணி நேரங்களுக்கு முன்னர் பஹல்காம்: மரண ஓலத்தின் மத்தியில் உயிர்காத்த குதிரைக்காரர்கள் – நெகிழ வைக்கும் காணொளி3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNRAJBHAVAN குற்றச்சாட்டை மறுக்கும் திமுக ஆளுநர் ஆர்.என். ரவியின் குற்றச்சாட்டை முற்றிலுமாக புறக்கணித்தது திமுக. திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கற்பனையாக பேசுவதில் ஆளுநருக்கு இணையாக இந்த உலகத்திலேயே யாரும் கிடையாது. இந்த மாநாடு எதற்காக கூட்டப்படுகிறது, இந்த மாநாட்டின் திட்டம், பேசுபொருள் என்ன என்பதையெல்லாம் ஆளுநர் மாளிகை துணைவேந்தர்களுக்கு அனுப்பியிருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும். கல்வி வளர்ச்சிக்கும் ஆளுநர், குடியரசு துணைத் தலைவருக்கும் என்ன தொடர்பு என்பதை விளக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பேசிய குடியரசு துணைத் தலைவரை மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார் ஆளுநர். ஆளுநரும் குடியரசு துணைத் தலைவரும் அரசியலமைப்பு சட்டத்தின்படி நடந்துகொள்ளாதவர்கள். தங்களுக்கு மிகப்பெரிய அதிகாரம் வந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர்." என்றார். தமிழக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசு தலைவருக்கும் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்ததை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சித்திருந்தார். அதையே டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டுப் பேசினார். பஹல்காமில் கொல்லப்பட்டவரின் மனைவி பாஜக அமைச்சரிடம் கொந்தளித்துப் பேசியது என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர் 'கனடாவில் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது' - கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TKS ELANGOVAN / X படக்குறிப்பு,ஆளுநரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் டி.கே.எஸ். இளங்கோவன் "ஆளுநர் கல்வி தொடர்பாக ஒரு கூட்டம் நடத்துகிறார் என்றால், மாநில கல்வி அமைச்சரிடம் முதலில் கேட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக எதற்காக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது என்பதை பேசியிருக்க வேண்டும். குடியரசு துணைத் தலைவருக்கு பதிலாக மத்திய கல்வி அமைச்சரை அழைத்து வந்திருக்க வேண்டும். கல்வித்துறை குறித்து குடியரசு துணைத் தலைவருக்கு என்ன தெரியும்? மாநில முதலமைச்சரிடம் இதுகுறித்து கூறினார்களா?" என டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வியெழுப்பினார். எச்சரிக்கை விடுக்கப்பட்டதா? மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்காதது குறித்து தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றின் பொறுப்பு துணைவேந்தர் ஒருவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பிபிசி தமிழிடம் பேசினார். "வரும் 27ம் தேதி எங்கள் பல்கலைக்கழகத்தில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கும் முக்கியமான கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் இருந்தன. மேலும், இன்று பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அதனால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை" என்றார். மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என காவல் துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என கேட்டபோது, அப்படியெல்லாம் எதுவும் வரவில்லை என்றார். இந்த மாநாட்டில் அரசியல் நோக்கம் இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறுவது குறித்த கேள்விக்கும் அவர் பதில் கூறவில்லை. மாநாட்டில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், "இந்த மாநாட்டில் துணைவேந்தர்கள் சிலர் பங்கேற்கவில்லை என்பது குறித்து ஆளுநர் கவலை கொள்ளத் தேவையில்லை. எந்த சூழ்நிலையால் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வந்தவர்களுக்கு வாழ்த்து கூறுவோம், வராதவர்கள் மாநாட்டின் குறிப்புகளில் இருந்து நடந்தவற்றை கற்றுக் கொள்ளலாம்" என்றார். பஹல்காம் தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிய பிறகு உடைந்து அழுத டிரைவர்7 மணி நேரங்களுக்கு முன்னர் பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒரே காஷ்மீரி - ஆதிலின் குடும்பத்தினர் கூறுவது என்ன?8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNRAJBHAVAN மாநாட்டுக்கு எதிர்ப்பு ஏன்? திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு தடையாகவும் மக்கள் நலனுக்கு எதிராகவும் செயல்படுகிறார் என தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு ஆளுநர் மீது குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாநில பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது "சட்டவிரோதம்" என்று ஏப். 08 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது, மசோதாக்கள் மீது ஆளுநர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு காலக்கெடுவும் விதித்தது. இதையடுத்து, ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவாக வரையறுத்திருப்பதாக தமிழ்நாடு அரசு கூறிவந்த நிலையில், அரசு-ஆளுநர் மோதல் சற்று தணியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விரைவிலேயே ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தும் செய்தி மீண்டும் சர்ச்சையை அதிகப்படுத்தியது. முன்னதாக, ஏப். 16 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தியிருந்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கான அதிகாரம் முதலமைச்சருக்கு வந்துவிட்டதால், அதிகாரமில்லாத வேந்தராக ஆளுநர் தொடர்வதாக முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் பிபிசி தமிழிடம் முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரே தொடர்வதாகக் கருதி, இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தது. பஹல்காமில் சுடுவதற்கு முன்பு ஆயுததாரிகள் கேட்டது என்ன? கொல்லப்பட்டவர்களின் மனைவி, மகன் பேட்டி7 மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்த போப் ஆண்டவர் ஆப்பிரிக்கராக இருப்பாரா? நிறவெறி தடையாக இருக்குமா?25 ஏப்ரல் 2025 இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த 2022ம் ஆண்டிலிருந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த துணைவேந்தர்கள் மாநாடு திட்டமிட்டு நடத்தப்படுவதாக, ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. "இதை தமிழ்நாடு ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான மோதலாக கட்டமைக்க முயற்சி மேற்கொள்வது வருந்தத்தக்கது" என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இந்த மாநாட்டுக்கு எதிராகவும் ஆளுநர், குடியரசு துணைத் தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை கண்டித்து உதகை காபி ஹவுஸ் பகுதியில் கருப்புக் கொடியுடன் திராவிட தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உதகை பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் பங்கேற்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly1xzkqe0eo
Checked
Sat, 08/09/2025 - 09:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed